அனைவருக்கும் வணக்கம்.
நல்லதொரு செயல், சாதனை எங்கே யாரால் நிகழ்த்தப்பட்டாலும் உங்களால் பாராட்டப்படும், போற்றப்படும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் தான் நேற்றைய பதிவு. என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்து கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் !
நல்ல எண்ணம் கொண்ட நெஞ்சங்கள் ஒன்று சேர்ந்தால் இன்னும் நிறைய செய்யலாம், சாதிக்கலாம் என்கிற உத்வேகத்தை உங்களின் ஒத்துழைப்பு நிரூபித்தது. அடுத்து ஒரு நிகழ்வு இதை தொடர்ந்து நடத்தணும் என்று எண்ணி இருந்தோம் ஆனால் அது இவ்வளவு சீக்கிரமாக நிறைவேற போகிறது என்று இன்று காலையில் கூட எண்ணவில்லை...
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக ஒரு இணையதளம் தொடங்க போவதாக ஒரு பதிவில் குறிப்பிட்டு இருந்தேன்...! அதன் தொடக்க விழாவை பதிவர்களின் துணையோடு செய்வதாகவும் மற்றும் இந்தியாவின் விடிவெள்ளி சிறுமி.விசாலினி அவர்களை பதிவர்கள் இணைந்து கௌரவிக்க வேண்டும் எனவும் அத்துடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்க்காக பதிவர்கள் கையால் 'மரம் நடுதல்' என்கிற விழிப்புணர்வு ஒன்று என அனைத்தையும் சேர்த்து ஒரே நிகழ்வாக நிகழ்த்த முடிவு செய்திருந்தோம்.....
ஒரு பத்து நாளுக்கு முன்பே இணையத்தில் இதனை செய்தியாக பகிர்ந்து, பின் அழைப்பிதழ் ஒன்றின் மூலமாக அனைவரையும் அழைக்க வேண்டும் என பெரிய எதிர்ப்பார்ப்புடன் இருந்தோம்.....
ஆனால்
உடனே இந்த நிகழ்வை நாளையே நடத்தக்கூடிய அவசியம் ஏற்பட்டு விட்டது... அதற்கு உங்களின் ஆதரவையும், வாழ்த்தையும் எதிர்ப்பார்கிறேன்...
மூன்று முக்கிய நிகழ்வுகள்
1. பதிவுலக உறவுகள் ஒரு நான்கு பேர் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்க்கு என்று ஒரு இணையதளம் ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறோம்...இதன் மூலம் பல விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள பட இருக்கின்றன...தளத்தின் பெயர் 'பசுமை விடியல்'
பசுமை போராளிகள்
செல்வகுமார்
பிரபு கிருஷ்ணா
சூர்யபிரகாஷ்
(தளத்தை பற்றிய விரிவான விவரங்கள் இனி தொடரும் பதிவுகளில் )
2.இந்தியாவின் விடிவெள்ளி விசாலினியை கௌரவிக்கும் விதமாக பதிவர்களின் சார்பில் நடக்க போகும் இந்த விழாவிற்கு திரு இசக்கி சுப்பையா சட்டமன்ற உறுப்பினர் (அம்பாசமுத்திரம்) அவர்கள் தலைமை ஏற்று நடத்த இருக்கிறார். நம் அரசின் பார்வை இனி பட தொடங்கி விடும் என்றே எண்ணுகிறேன்...நம்மால் இயன்ற மேலும் பல வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்போம். அது நமது கடமை அல்லவா...?
3 . பசுமை விடியலின் முதல் விழிப்புணர்வு பணியாக விழாவிற்கு வர இருக்கின்ற பதிவுலக நண்பர்களின் கையால் மரங்கள் நடப்பட்ட இருக்கிறது.
இவை எல்லாம் நல்ல முறையில் நடைபெற உங்கள் அனைவரின் ஆசிர்வாதங்களையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறோம்.
மிக குறுகிய நேரத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டிருக்கின்றன என்பதால் எல்லோரையும் தனிப்பட்ட முறையில் அழைக்க இயலவில்லை...இவ்விழாவினை குறித்த செய்தியை முகநூலிலும், ட்விட்டரிலும் நண்பர்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அனைவரும் அவசியம் கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்க வேண்டுகின்றோம்.
விழாவிற்கு வருகை தருபவர்கள் வசதிக்காக,
எங்களை தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்
சங்கரலிங்கம் - 9597666800
விழாவிற்கு வருகை தருபவர்கள் வசதிக்காக,
எங்களை தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்
சங்கரலிங்கம் - 9597666800
பிரியங்களுடன்
கௌசல்யா
விழா சிறப்புற நடைபெற என் வாழ்த்துகள்!
ReplyDeleteஅன்பின் கௌசல்யா - விழா வெற்றி பெறவும் - சிறப்புடன் நடைபெறவும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவிழா சிறப்புற நடைபெற என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்லதை நேரத்தே செய்வது சால சிறந்தது, வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் விழா சிறப்பாக நடைபெற....!!!
ReplyDeleteநல்ல எண்ணம் கொண்ட நெஞ்சங்கள் ஒன்று சேர்ந்தால் இன்னும் நிறைய செய்யலாம், சாதிக்கலாம்
ReplyDeleteT M-1
ReplyDeleteவிழா சிறப்புற நடைபெற என் மனமார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteவிழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்!
ReplyDeleteவிழாவுக்கு வரலாமா? வேண்டாமா? திடீர்னு ரயில்ல இடம் கிடைக்குமா?என யோசிச்சிட்டு இருந்தேன், உணவு உலகம் ஆஃபீசர் நாளை மதுரையில் தான் இருப்பேன் 10 மணீக்கு வரவும் என்றார், ஓக்கே டன், விழாவில் சந்திப்போம்
ReplyDeleteஇந்தியாவின் விடிவெள்ளி சிறுமி.விசாலினி அவர்களை பதிவர்கள் இணைந்து கௌரவிக்க வேண்டும் எனவும் அத்துடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்க்காக பதிவர்கள் கையால் 'மரம் நடுதல்' என்கிற விழிப்புணர்வு ஒன்று என அனைத்தையும் சேர்த்து ஒரே நிகழ்வாக நிகழ்த்த முடிவு செய்திருந்தோம்...../
ReplyDeleteஅருமையான விழிப்புணர்வுடன் சிறப்பான பணி. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
வாழ்த்துகள்.
ReplyDeleteமிகவும் அருமையான ஒரு விஷயம் .வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் கௌசி AND ALL.
ReplyDeletevaalthukkal kousalya...
ReplyDeleteநல்லதோர் முயற்சி....
ReplyDeleteவெற்றிபெற வாழ்த்துகள்.....
வாழ்த்துகள்
ReplyDeleteவிழா சிறக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteதகுந்த நேரத்தில் செய்யப்படுகிற அவசியமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விழா . சிறப்பான முறையில் விழா வெற்றியடைய வாழ்த்துக்கள்
ReplyDeleteதகுந்த நேரத்தில் செய்யப்படுகிற அவசியமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விழா . சிறப்பான முறையில் விழா வெற்றியடைய வாழ்த்துக்கள்
ReplyDeleteவிழா சிறக்க வாழ்த்துக்கள்.உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைய வாழ்த்துக்கள் கௌசல்யா.
ReplyDeleteவாழ்த்துக்கள் !
ReplyDeleteநல்வாழ்த்துகள் விசாலினி. விழா இனிதாக நடைபெற எனது வாழ்த்துக்கள்
ReplyDeleteபசுமை விடியலுக்கும், விசாலினிக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்...
ReplyDeleteவிழா சிறப்பாக அமைய இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteVaalthukkal Madam!
ReplyDeleteவிழா சிறப்பாக நடந்திருக்கும் என நம்புகிறேன்.
ReplyDeleteஉங்களது பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்தும் உங்கள் சகோதரி.
-மோனா
விழா சிறப்புற வாழ்த்துகள்
ReplyDeleteவிழா இனிதே நடைபெற வாழ்த்துக்கள்.
ReplyDelete"பசுமை விடியல்"
ReplyDeleteபசுமைப் புரட்சி செய்திட என் அன்பிற்கினிய வாழ்த்துக்கள் சகோதரி.
நான் இன்றுதான் அபுதாபியிலிருந்து வந்து சேர்ந்திருக்கிறேன். என்னால்
வரமுடியாத சூழ்நிலைக்கு வருந்துகிறேன். வெளிநாடுகளில் பணிபுரியும் என்னைப்போல நண்பர்கள்
படும் இன்னல்கள் இது.
விழா சிறப்புற நடக்கவும் அது மேலோங்கி பல விதைகளை இந்த சமுதாயத்தில்
ஊன்றிடவும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி.
உங்கள் அனைவரின் வாழ்த்துக்கள் மற்றும் ஆசிர்வாதங்களின் படி நேற்றைய நிகழ்ச்சிகள் அனைத்தும் இனிதே நடந்து முடிந்தது...
ReplyDeleteஉங்கள் அனைவரின் அன்புக்கும் மிக்க நன்றிகள்.
விழாவினை பற்றிய பதிவு நாளை...!
congratulation
ReplyDeleteஅருமையான விஷயம் .வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்..... நல்வாழ்த்துகள் விசாலினி
ReplyDeleteMaths Ramanujam also initially face this type of problem but later stage he get better position ( Nobel). Pls don't lose the efforts. best of luck. S.Karthikeyan
ReplyDeleteHi best of luck
ReplyDeletehai visalini super pa.Very Very telent person
ReplyDeleteBy
Selvaesakki
திரு முருகன் அருள் கொண்டு உங்களை விசாலமான இந்த உலகமே உனது பெயரை ஆச்சரியத்தோடு விசாரிக்கட்டும் குழந்தாய்!! என் தாய் நாட்டின் நல்ல இளம் சிற்பியே... உனக்கு என் அன்பு நிறைந்த வாழ்த்துக்கள்!!!K.Navaratnarasa
ReplyDelete