Wednesday, October 12

12:46 PM
36


                                            தலை குனியுங்கள் பெண்டிரே(!)
                                            படித்தவளாம்(!) ஆசிரியையாம்(?) 
                                            எதை படித்தாள் ?
                                            எதை பயிற்றுவிக்க ?

                                            வெறி தணிக்க
                                            தேவை ஒரு பிஞ்சு குழந்தை 
                                            பென்சிலை வைத்தும்
                                            பேனாவை கொண்டும் 
                                            ச்சே நினைக்க அருவருப்பான ஒன்றை
                                            நிகழ்த்தி ரசித்த அரக்கிகளே... 

                                            உன் வயிற்றிலும் ஏதும் பிறந்ததா?
                                            நன்றாக இருக்கிறதா ?
                                            இல்லை உன் வெறிக்கு பலியாகி 
                                            மூலையில் கூனி குறுகி கிடக்கிறதா?
                                            உன் வீட்டு ஆண்
                                            உன்னை அடக்க(?)மாட்டாமல் 
                                            அடங்கி கிடக்கிறானா ?

                                            செத்த உடலுடன் 
                                            உறவுகொண்டான் சிங்களவன்... 
                                            அவனுக்கு எந்த விதத்திலும் 
                                            குறைந்தவளில்லையடி  நீ !

                                            வரிந்து கட்டிக்கொண்டு 
                                            பொங்கும் பெண்ணுரிமை வாதிகளே 
                                            எங்கே போனீர்கள்?
                                            இளம் தளிரை சிதைத்த கொடூரம் 
                                            கண்டு கொதிக்கவில்லையா மனம்
                                            கொடி ஏந்தி போராடிக்
                                            கிழித்தெறிய வேண்டாமா
                                            இவர்களின் முகமூடியை...

                                            எங்கே எம் சகோதரர்கள் 
                                            வெட்டி வீசுங்கள் உருண்டோடட்டும் 
                                            நரகறிக்கு அலையும் அரக்கிகள் தலை 
                                            நிமிரட்டும் தாய்மார்களின் குனிந்த தலை!!

                                            மாபாதகம் புரிந்தவர்களுக்கு
                                            பரிந்து கொண்டு வரும்
                                            நாக்குகளை அறுத்தெறிய
                                            வேண்டும் ஒரு கூர்வாள்...

                                            இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377 
                                            இவ்வழக்கில் பொருந்தாதாம்
                                            முன்ஜாமீன் கொடுத்துவிட்டது
                                            நம் சட்டம்...?!

                                            மாற்றவேண்டுமோ
                                            ஒரு சட்டத்தை...
                                            ஸ்கேனில் எந்த குழந்தை
                                            தெரிந்து கொள்ள தடை இல்லை என...!? 

                                            பெண் குழந்தை பிறந்து பிஞ்சில்
                                            பாதகர் கையில் வதைபடுவதா?
                                            கருவில் மாள்வதா ?
                                            எது உத்தமம் !!?

                                                                 (விரிவான விவரங்கள்  இங்கே  )கள்ளக்குறிச்சி ஏ.கே.டி பள்ளி யு.கே.ஜி.மாணவியை(குழந்தையை) பாலியல் வன்கொடுமை செய்த பிரின்சிபல் போஸ்கோ, ஆசிரியை போசியா இருவரின் கொடுமையான செயலை படித்தபின் ஏற்பட்ட எனது கோபத்தின் வெளிப்பாடு  மேலே உள்ள வரிகள். சில ஆண்களால் பெண்மைக்கு பாதுகாப்பின்மை ஒருபக்கம் என்றால் பெண்களாலும் பாலியல் வன்கொடுமை என்பதை ஒரு பெண்ணாக ஜீரணிக்க இயலவில்லை. தாய்மைக்கு ஈடு இணை உலகில் வேறில்லை என்ற எண்ணத்தில் மண் அள்ளி போடுவதை போன்ற இவர்களின் செயல் தாய்மார்களை தலை குனிய வைக்கிறது. இக்கொடும் செயல் புரிந்த சம்பந்தப்பட்ட நான்கு பேருக்கும் என் கண்டனங்கள்.

ஏதோ இருவர் செய்ததிற்காக பெண்கள் நாம் ஏன் தலை குனிய வேண்டும் என்று மாறுபட்டு தயவு செய்து எண்ணாதீர்கள். இதை மீடியாக்கள் பெரிது பண்ணாமல் விட்டது எண்ணி சிறிது நிம்மதியாகவே இருக்கிறது...!? படிக்கவே அச்சுறுத்த கூடிய இப்பாதகம் நம் குழந்தைகளுக்கு நேர்ந்தால் அவர்களின் மன நிலை, எதிர்காலம் பற்றி யோசிக்கவே நடுக்கமாக இருக்கிறது.  

மனித உரிமைப்பாதுகாப்பு மையம் மேற்கொண்ட தொடர் முயற்சியின் பயனாக இப்பிரச்சனை நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தது. இவ்வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு ஒரு மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டதுள்ளது, இவர்கள் விசாரித்து விசாரணையின் இறுதி அறிக்கையை 4 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.  விரைவில் விசாரணை முடிவு தெரியவரும். இந்த அளவிற்கு சென்றபின்னும் இது போன்ற ஒன்று நடைபெறவில்லை என்ற சமாளிப்புகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

இவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்குவதின் மூலம் மேலும் இச்செயல்கள் நடைபெறுவதை தடுக்கமுடியும் என்று உறுதியாக சொல்ல முடியாது என்றாலும் கடும் தண்டனை வழங்கபட்டே ஆகவேண்டும். பத்திரிகைகள், மகளிர் சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொது மக்கள், பெற்றோர் நல சங்கங்கள் இன்னும் பிறவும் ஓங்கி குரல் கொடுக்க வேண்டும்.

இது போன்றவை எப்போதோ, எங்கோ ஒன்று இரண்டு ஏற்படுவது தானே இதை ஏன் பெரிதுபடுத்தவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள். தெருவிற்கு ஒன்று, ஏன் வீட்டிற்கு ஒன்று கூட இந்த நிமிடம் நடந்துகொண்டிருக்கலாம் எப்படி தெரியும் உங்களுக்கு...குழந்தைகள் தானாக வெளியே சொல்லாதவரை யாருக்கும் தெரியபோவதில்லை...! அவர்கள் சொல்லமாட்டார்கள் என்ற தைரியத்தில் தான் இவை அரங்கேறுகின்றன...?!

இது ஒருநாளில் முடிந்துவிட கூடிய விஷயம் இல்லை, பாதிக்கப்பட்ட குழந்தையின் மனநிலை காலத்துக்கும் சரியாகாது. மற்றொரு செய்தி ஒன்று, பத்து வயது சிறுமி ஒரு கொடூரனால் சிதைக்கப்பட்டு உதிர போக்கு ஏற்பட்டு சிறுமி பிழைக்க வேண்டும் என்றால் அவளது கர்ப்பபை எடுத்தாக வேண்டும் என்று டாக்டர்கள் கூறிவிட, இப்போது எடுக்கப்பட்டுவிட்டது. இனி அவளது எதிர்காலம்...???

உங்கள் வீட்டு குழந்தைகளை மெதுவாய் விசாரித்து பாருங்கள்...நெருங்கிய உறவினர்கள் தொடங்கி பள்ளியின் ஆசிரியர்கள்(ஆசிரியைகள் !?) பள்ளி வாகன ஓட்டுனர்கள், வாட்ச்மேன்,பக்கத்து வீட்டு நபர்கள் மூலம் தவறான தொடுதல் ஏதும் இதுவரை நடந்திருக்கிறதா என பக்குவமாக கேளுங்கள். பெண் குழந்தை என்று மட்டும் இல்லை ஆண் குழந்தைகளும் மிக அதிகமாக இத்தகைய வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். உங்கள் குழந்தைகளிடம் கண்டிப்பாக அறிவுறுத்துங்கள்,  நல்ல தொடுதல் எது, தவறான தொடுதல் எது என்று...இன்னும் சொல்ல போனால் அடுத்தவர் எதற்கு தொடவேண்டும்...?!! பிறரை தொடாமல் பழகு என்றே சொல்லி பழக்கினால் என்ன என்று தோன்றுகிறது.

இன்றைய காலகட்டத்தில் தான் இவை நடைபெறுகிறது என்று சொல்ல முடியாது...! மனிதமனம் அன்றில் இருந்து இன்று வரை அப்படியேதான் இருக்கிறது, என்னவொன்று இப்போது திரைமறைவில் நடப்பவை (சிறிது தாமதம் என்றாலும்) வெளியே வந்துவிடுகிறது...! முன்பு சிறுகுழந்தைகள் தங்களுக்குள் புதைத்துக் கொண்டார்கள். இன்று சொல்ல தொடங்கி இருக்கிறார்கள்...

ஒரு சிலரின் இன்றைய குடும்ப வாழ்க்கை(தாம்பத்தியம்) புரியாத புதிராக இருப்பதற்கு அவர்களின்  சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் கொடுமைகள் ஒரு முக்கிய காரணம் என்று கருதுகிறேன்!! சொல்லபோனால் அடிக்கடி தேவையின்றி கோபபடுவது, சந்தேகம் கொள்வது, அடிப்பது, வசைமொழிகளை வாரி இறைப்பது, தாம்பத்திய உறவில் நாட்டமின்மை, உடலில் சிறிய பெரிய குறைபாடுகள் இப்படி பல...?!! இவை எல்லாம் ஏற்பட அதிக அளவில் கொடுமை அனுபவித்து இருக்கவேண்டும் என்பதில்லை சிறிய அளவிலான தவறான தொடுதல் கூட மனதில் காயத்தை உண்டுபண்ணி நிரந்தர மன ஊனத்தை குடும்ப வாழ்வில் ஏற்படுத்திவிடுகிறது.

இதுக்கு என்ன தீர்வு என்றால் பெற்றோர்கள் தான் மிக மிக கவனமாக தங்கள் குழந்தைகளை பார்த்து கொள்ளவேண்டும். வேறு வழியில்லை...?!!


பிள்ளைகளை பெற்றெடுப்பதும் , சீராட்டி வளர்ப்பதும் பெரிய காரியம் அல்ல அதைவிட இதுபோன்ற கயவர்களிடம் இருந்து நம் குழந்தைகளை காப்பாற்றுவது தான் இன்று பெற்றோருக்கு முன் இருக்கும் முக்கியமான பொறுப்பு !!

இது குறித்து ஏற்கனவே நான் எழுதிய இரண்டு பதிவுகள் 

குழந்தைகளின் மீதான பாலியல் ஈர்ப்பு ஏன் ?

ஒரு அலசல்...குழந்தைகளின்  மீதான பாலியல் ஈர்ப்பு !

பின் குறிப்பு 

இத்தகைய கொடுமை புரிகிறவர்கள் 'மனபிறழ்வு நோயால் பாதிக்கப்பட்டவர்களா' என்ற ஒரு வாதம் இருக்கிறது. இந்த பாதகத்தின் கொடுமைகள் பற்றி இன்னும் பலருக்கு தெரியவைக்க வேண்டும் என்பதால் இன்னும் இது குறித்த ஆய்வு கட்டுரைகள் , தகவல்கள் சேகரித்து விரிவாக தொடர்ந்து எழுதுகிறேன்.  நன்றி.தகவல் - நன்றி வினவு தளம்                                                                                                                              
படங்கள் - நன்றி கூகுள் 

Tweet

36 comments:

 1. கவிதையில் சாட்டையடி...

  பச்சிளம் குழந்தைக்கு பாலியல் கொடுமை... ஆசிரியைகளா அவர்கள்...

  சை... மனித மிருகங்கள்.

  ReplyDelete
 2. ஏன் பெரிதுபடுத்தவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள். தெருவிற்கு ஒன்று, ஏன் வீட்டிற்கு ஒன்று கூட இந்த நிமிடம் நடந்துகொண்டிருக்கலாம் எப்படி தெரியும் உங்களுக்கு..//

  உண்மை தான் குழந்தைகள் மட்டுமல்ல இன்னும் நிறைய கொடுமைகள் நாட்டில் நடந்துகொண்டுதானிருக்கின்றன... கொடுமையான தண்டனையால் மட்டுமே இதற்கு ஒரு விடிவு பிறக்கும்.

  ReplyDelete
 3. மிகவும் தண்டிக்கப்பட வேண்டிய விசயம் இது, பிஞ்சுகளை வதைக்கும் பிணங்கள் இவர்கள், மரணத்திற்கும் மேலான தண்டனையைத் தான் இவர்களுக்கு வழங்கவேண்டும்.

  ReplyDelete
 4. தாங்கள் கூறியது போல பெற்றோர்களும் குழந்தைகளின் பாதுகாப்பை கண்காணிக்கவேண்டும் ....தவறு செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் ...

  ReplyDelete
 5. கண்டிக்கும் கவிதை மிக அருமை....! இவர்கள் எல்லாம் மனிதர்ளா..? மிருகத்தை விட கேவலமானவர்கள்..!

  ReplyDelete
 6. உன் வயிற்றிலும் ஏதும் பிறந்ததா?
  நன்றாக இருக்கிறதா ?
  இல்லை உன் வெறிக்கு பலியாகி
  மூலையில் கூனி குறுகி கிடக்கிறதா?//


  அவங்க பண்ண தப்புக்கு அவங்க குழந்தை என்ன செய்யும்...??? அவர்களை ஏதும் சொல்லாமல் இருந்திருக்கலாம்..

  ReplyDelete
 7. Felt bad to read the content of this article.Its because those filthy ppl don't come from a good family.If ur family is good then U value discipline and character.

  ReplyDelete
 8. மிகவும் கொடுமையாக உள்ளது. கேட்கவே மனதுக்குக் கஷ்டமாக உள்ளது.

  மிகவும் பயனுள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய பதிவு.

  ReplyDelete
 9. நல்ல கட்டுரை இந்த விஷயத்தில் பெண்களே இப்படி நடந்து கொண்டிருப்பது தான் வேதனையான விஷயம்.. சட்டம் இன்னும் கடுமையாகப் படவேண்டும் ... இவர்களை போல இருப்பவர்களை..தண்டிக்க

  ReplyDelete
 10. நல்ல விழிப்புணர்வூட்டிப் போகும்
  எச்சரிக்கைப் பதிவு
  பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி

  ReplyDelete
 11. @@ சே.குமார் said...

  உணர்விற்கு நன்றிகள் குமார்.

  ReplyDelete
 12. @@ மாய உலகம் said...

  //குழந்தைகள் மட்டுமல்ல இன்னும் நிறைய கொடுமைகள் நாட்டில் நடந்துகொண்டுதானிருக்கின்றன... கொடுமையான தண்டனையால் மட்டுமே இதற்கு ஒரு விடிவு பிறக்கும்.//

  எல்லாவற்றையும் விட சிறு குழந்தைகளுக்கு நேரும் கொடுமை மிக முக்கியம் அல்லவா?

  தண்டனை வெளியே தெரிந்த விசயங்களுக்கு சரி, ஆனால் வெளி வராத கொடுமைகள் இங்கொன்றும் அங்கொன்றுமாக நிகழ்ந்துகொண்டு இருக்கிறதே...அவற்றை என்ன செய்ய??

  கருதிட்டமைக்கு நன்றி.

  ReplyDelete
 13. மிக அவசியமான விழிப்புணர்வு பதிவு,பகிர்வுக்கு நன்றி!!

  ReplyDelete
 14. @@ பிரணவன் said...

  //பிஞ்சுகளை வதைக்கும் பிணங்கள் இவர்கள், மரணத்திற்கும் மேலான தண்டனையைத் தான் இவர்களுக்கு வழங்கவேண்டும்.//

  அவர்களுக்கு மரணம் ஒரு நிமிடத்தில் முடிந்துவிடலாம், ஆனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், அவர்களின் எதிர்காலம் சூன்யமாகிவிடுமே...?!!

  உங்களின் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 15. @@ koodal bala said...

  //பெற்றோர்களும் குழந்தைகளின் பாதுகாப்பை கண்காணிக்கவேண்டும் ....தவறு செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் ...//

  மிக முக்கியம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிக்கவேண்டும். அவர்களுடன் பேசும், பழகும் நபர்கள் யாராக இருந்தாலும் கவனிக்க இருக்கவேண்டும்...என்னவொன்று இது போன்றவற்றால் நல்லவர்களையும் சந்தேகபடவேண்டிய நிலை ! :(

  கருத்திற்கு நன்றி பாலா.

  ReplyDelete
 16. @@ Nirosh said...

  //இவர்கள் எல்லாம் மனிதர்ளா..? மிருகத்தை விட கேவலமானவர்கள்..!//

  இவர்களை பற்றி நினைக்கும்போது மிருகங்கள் தேவலாம் என தோணுகிறது.

  உணர்விற்கு நன்றி Nirosh

  ReplyDelete
 17. @@ சௌந்தர் said...

  //அவங்க பண்ண தப்புக்கு அவங்க குழந்தை என்ன செய்யும்...??? அவர்களை ஏதும் சொல்லாமல் இருந்திருக்கலாம்..//

  அந்த குழந்தைகளை பற்றி தவறாக சொல்லவில்லையே...அடுத்தவர் குழந்தையையும் தன் குழந்தையாக பாவிக்கக்கூடிய மனம் கொண்டவள் பெண். அதை மறந்த அப்பெண்களை பற்றிய கோபத்துடன் கூடிய ஆதங்க வரி அது.

  உணர்விற்கு நன்றி சௌந்தர்.

  ReplyDelete
 18. @@ MyKitchen Flavors-BonAppetit!...

  //Its because those filthy ppl don't come from a good family//

  இவர்களின் இத்தகைய செயலுக்கு அவர்களின் குடும்பம் என்ன தோழி செய்யும்...?!

  thank u for inviting me to visit ur blog, so many interesting recipes there, really i love to follow u too. :))

  உங்க சொந்த ஊரும் நெல்லை என்பதால் மகிழ்ச்சியுடன் வருகைக்கு நன்றிகள் !!

  ReplyDelete
 19. @@ வை.கோபாலகிருஷ்ணன்...

  நம் பெற்றோரிடம் முழுமையான விழிப்புணர்வு இன்னும் வரவில்லை என்பதே என் ஆதங்கம்.

  கருத்திற்கு நன்றிகள்.

  ReplyDelete
 20. சே..! என்ன மனிதர்கள் இவர்கள்?.. ஒண்ணும் சொல்றதுக்கில்லை. :(( . திருந்துவார்களா?..

  ReplyDelete
 21. @@ நண்டு @நொரண்டு -ஈரோடு...

  நன்றிங்க.  @@ Ramani...

  நன்றிங்க.  @@ S.Menaga...

  நன்றி தோழி.

  ReplyDelete
 22. @@ Starjan ( ஸ்டார்ஜன் ) said...

  // ஒண்ணும் சொல்றதுக்கில்லை. :(( . திருந்துவார்களா?..//

  நாங்க தப்பே பண்ணல என்று பேட்டி கொடுத்திட்டு இருக்காங்க இவங்க எங்க திருந்த ?? இவர்கள் திருந்துவது ஒருபக்கம்...ஆனால் பாதிக்கப்பட்ட அந்த குழந்தையின் மனநிலை...?! :(

  உணர்விற்கு நன்றி சகோ.

  ReplyDelete
 23. உங்கள் கருத்துக்களை நானும் ஆமோதிக்கிறேன்.

  நச்சென்ற பதிவு!

  ReplyDelete
 24. ஸலாம் சகோ.கெளசல்யா,
  ///இவர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்குவதின் மூலம் மேலும் இச்செயல்கள் நடைபெறுவதை தடுக்கமுடியும் என்று உறுதியாக சொல்ல முடியாது என்றாலும் கடும் தண்டனை வழங்கபட்டே ஆகவேண்டும்.///....அப்படி கடும் தண்டனை வழங்கப்பட்டால்... நாளடைவில் இந்த குற்றங்கள் குறைந்து குறைந்து மிக மிக அரிதாகிவிடும் என்று உறுதியாக சொல்ல முடியும் சகோ. இவர்களுக்கு வழங்கும் தண்டனைகள்... செத்துக்கொண்டு இருக்கும் சமூக ஒழுக்கத்துக்கு கொடுக்கப்படும் புத்துணர்வு ஆக்சிஜன்.

  பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ.

  ReplyDelete
 25. தண்டனை கடுமையாக்குதல் அவசியம். அதே சமயம் நம் சமூக விழிப்புணர்வும் எச்சரிக்கையும், கவுன்சிலிங்கும் மிக அவசியம்.

  ReplyDelete
 26. மனித மிருகங்கள். வேறென்ன சொல்ல?

  ReplyDelete
 27. மனசு பகீர்ன்னு இருக்கு.இவங்கெல்லாம் நிச்சயம் தண்டிக்கபட வேண்டும்.என்ன சொல்லன்னு தெரியலை.

  ReplyDelete
 28. @@ middleclassmadhavi...

  நன்றிகள்  @@ ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~...

  உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 29. @@ கலாநேசன் said...

  //தண்டனை கடுமையாக்குதல் அவசியம். அதே சமயம் நம் சமூக விழிப்புணர்வும் எச்சரிக்கையும், கவுன்சிலிங்கும் மிக அவசியம்.//

  சரியாக சொன்னீர்கள்.

  நன்றி கலாநேசன்

  ReplyDelete
 30. @@ FOOD...

  உணர்விற்கு நன்றி அண்ணா  @@ asiya omar...

  நன்றி தோழி.

  ReplyDelete
 31. படிக்கவே கஷ்ட்டமா இருக்கு......

  பெண்குழந்தையின் வாழ்க்கை வீணாகிவிட கூடாது என மூடி மறைத்து விடுவதால் இத்தகைய கொடுமைகள் வெளிப்படுவதில்லை. சட்டங்கள் கடுமையாக்கப்பட்டால் மட்டுமே நாளடைவில் இது குறையும்

  ReplyDelete
 32. குரல் கொடுப்பதற்கு நன்றி.

  ReplyDelete
 33. செத்த உடலுடன்
  உறவுகொண்டான் சிங்களவன்...
  அவனுக்கு எந்த விதத்திலும்
  குறைந்தவளில்லையடி நீ !

  Nalla kavithai, raththam kothikirathu.

  ReplyDelete
 34. இதுபோன்றவர்களுக்கு இனி சமுதாயத்தில் தலைநிமிர்ந்து நடக்காத படிக்கு ஏதாவது செய்தாக வேண்டும் அதை பார்த்து இனி எவரும் இது மாதிரி செய்ய துணியக்கூடாது.

  ReplyDelete
 35. இவர்களை சாகும் வரை தூக்கிலிட வேண்டும்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...