புதன், செப்டம்பர் 21

10:25 AM
27


'ரத்தமும் சதையும் கொண்ட உயிரினம் நாம் ' என்பதை இந்த உலகம் அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது...!!காதுகளில் இனி வரும் காலங்களில் துப்பாக்கி சத்தங்கள், மனித ஓலங்கள், கூக்குரல்கள், ஒப்பாரிகள், அபயகுரல்கள் இவை மட்டும் கேட்கக்கூடும்.

தொலைகாட்சி, திரைப்படங்கள், பத்திரிகைகள் எங்கும் கொலை, குண்டுவெடிப்பு, ரத்த சிதறல்கள், ரத்தம் தோய்ந்த உடல் பாகங்கள் !!இன்று இவை எல்லாம் நம் கண்களுக்கு மிக பழகிவிட்டது. இவற்றை  பார்த்து  சாதாரணமாக கடந்து போகக்கூடிய பக்குவத்தை பெற்றுவிட்டோம்...!?  



வரவேற்பரையில்...


குண்டுவெடிப்பில் பல உயிர்கள் கை வேறு கால் வேறாக வெட்டுப்பட்டு, உடம்பு சிதைந்து துடித்து கொண்டிருக்கும் காட்சிகளை வரவேற்பறையில் தொலைகாட்சியில் ஸ்நாக்ஸ் கொறித்துக்கொண்டே பார்க்கிறோம். நிச்சயமாக அந்நேரம் நமது விழிகளில் எவ்வித உணர்ச்சியும் இருக்காது. அதிகபட்சம் அது போன்ற ஒரு காட்சி, நம் வீட்டில் நடந்தால் மட்டுமே துடிக்கிறோம்...!! ஆனால் இனி நம் வீட்டில் நடந்தாலும் வெகு இயல்பாய் தாண்டி சென்றுவிடுவோம் என்றே தோன்றுகிறது.

திரைப்படங்கள் 

சமீபத்தில் ஒரு படம் பார்த்தேன்...?! ஆரம்பம் முதல் இறுதிவரை தொடர்ந்து துப்பாக்கி ஒலித்துகொண்டே இருக்கிறது. ரொம்பவே சாதாரணமாக கதாநாயகன்(?) நாலு பேரை கொலை செய்வது எப்படி என்று கற்பனை செய்து ரசிக்கிறார். படம் பார்ப்போருக்கும் எப்போது அவர்களை சுட்டுகொல்வார் என்ற ஆவலை தூண்டியது இயக்குனரின் திறமை...!? காட்சிகளில் ஒவ்வொருவரும் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்து விழுவதை கூட்டம் ஆர்பரித்து ரசித்து கை தட்டுகிறது. போலீஸ்,ரௌடி,நண்பன்,எதிரி, சகமனிதன் என்று சகட்டுமேனிக்கு துப்பாக்கி வெடித்துக்கொண்டே இருக்கிறது. ஹீரோ கடைசியில் போலீஸ் அதிகாரியை நோக்கி துப்பாக்கியை நீட்டியதுடன் (கிளைமாக்சில் ரத்தம் வேண்டாம் என்று விட்டுவிட்டார் போலும்) சுபம் !!

தியேட்டரை விட்டு வெளியே வந்த கூட்டத்தில் ஒருவர், 'ஹீரோ நல்லவரா கெட்டவரா ?'

* நல்லவர் என்றால் ஏன் கொலை செய்கிறார் ?
* கெட்டவர் என்றால் இவரை ஏன் யாரும் கொல்லவில்லை ?

(நிழல் என்று நன்கு தெரிந்தும் இது போன்ற சந்தேகங்கள் எழுவது ஏனோ ?!)
காட்சிகளை பற்றி சிறிது நேரமாவது பேசுகிறோம்,விவாதிக்கிறோம், அவை நம் மனதில் கொஞ்சமாவது பதியாமல் இருக்காது.

திரைப்படம் பொழுதுபோக்கு தான், இல்லை என்று சொல்லவில்லை. பொழுது போக்காய் கொலை செய்வதை ரசிக்கும் நம் மக்களின் மனநிலை ?!! இது இந்த ஒரு படத்துக்கான விமர்சனம் இல்லை...இதை விட கொடுமையான  படங்களும் இருக்கிறது.

வன்முறையை தூண்டும் விதமாக காட்சிபடுத்தபடும் அல்லது நடைபெறும் எதுவும் சட்டத்தின் பார்வையில் தவறா? இல்லையா ? என்ற சந்தேகம் ஏனோ தேவையில்லாமல் இப்போது வருகிறது.

வன்முறை திரைப்படங்களில் அனுமதி என்கிற அளவுகோலின் அளவு யாருக்காவது தெரியுமா?? சென்சார் என்ற ஒன்று இருக்கிறதா, இல்லை இருந்தும் இல்லையா ??

ரோட்டில் நாலு பேரு ஒருத்தனை வெட்டி வீசினால் அதையும் கண்டு சுலபமாக கடந்து போக கூடிய மனபக்குவம்(?) வந்துவிடுகிறது ?!  காரணம் பலமுறை இத்தகைய காட்சிகளை கண்டு சலித்துவிட்டது அல்லது மனது மரத்துவிட்டது. 

ஐயகோ நம் குழந்தைகள் !!?


ஒருவன் வன்முறையில் ஈடுபடுகிறான் என்றால் அந்த எண்ணம் நேற்றோ இன்றோ தற்செயலாக, அந்த நிமிடத்தில் ஏற்படுவது இல்லை.....சிறுவயதில் அவன் மனதில் எவையெல்லாம் விதைக்கபடுகிறதோ, அவை வளர்ந்து இன்று மரமாக நிற்கிறது.....!?

எல்லா குழந்தைகளும் போட்டி போட்டுக்கொண்டு பிளே ஸ்டேஷன், கம்ப்யூட்டர் கேம்ஸ் என்று விளையாடுகின்றன...கவனமா பாருங்க! அதிகமா அவங்க விளையாடுவது ஷூட்டிங் அல்லது பைட்டிங்  கேம்ஸ் ஆக இருக்கும்.                                      அடுத்தவனை அடிக்கணும் அல்லது கொல்லணும் !!? பைக் ரேஸ் கேம்ல கூட பக்கத்தில் போறவனை காலால் உதைக்கிறமாதிரி ஒரு செட் அப் இருக்கும். பசங்களும் ஒரு வெறியோட உதைசிட்டே சீறி பாய்வாங்க...'நாம ஜெயிக்கணும்னா அடுத்தவனை எட்டி உதைக்கணும்' என்கிற அருமையான தத்துவத்தை பயிலுகிறார்கள் இன்றைய நம் குழந்தைகள் !!?

சுற்றிலும் நடக்கும் இத்தகைய காட்சிகளை பார்த்து வளரும் நம் குழந்தைகளின் மனதில் இக்காட்சிகள் விதைக்கபடுகின்றன. எதிரிகள் பல வடிவங்களில் சுற்றிலும் இருக்கின்றன, இவைகளில் இருந்து நம் குழந்தைகளை எப்படி பாதுகாக்க போகிறோம் ??!

முதியோர் இல்லம் அதிகம், ஏன்?

இந்த காலத்தில் முதியோர் இல்லங்கள் பெருகிவிட்டன என்று வருத்த படுகிறோம். இதில் அதிர்ச்சி, ஆதங்கம் அடைய ஏதும் இல்லை. பெற்றோர்களின் மீது இயல்பாய் இருக்ககூடிய அன்பு பாசம் எல்லாம் எங்கே போனது ?? வன்முறைகளை பார்த்து பார்த்து பழகி போன மனதில் அன்பு, பாசம் போன்ற உணர்ச்சிகள் மரத்துபோனபின் எங்கிருந்து வரும் அக்கறை...?  
இன்றைய குழந்தைகள் இளைஞர்களை மட்டும் குறை சொல்லி நம் தவறுகளை மூடி மறைக்கிறோம்.

நரவேட்டைகளை ரசித்து கைத்தட்ட கூடிய இச்சூழ்நிலையில் வளரும் குழந்தைகள் இப்படிதான் இருப்பார்கள்...!!

அறிவியல் வளர்ந்து விட்டது, இது இன்றைய தலைமுறை என்று பெருமை பட்டுக் கொண்டால் இதன் விளைவை நாம் அனுபவித்துதான் ஆகவேண்டும். 


குழந்தைகளுக்கு நல்ல சூழ்நிலைகளை ஏற்படுத்தி கொடுக்கிறோமா? 

வெளி உலகம் எதையும் கற்றுக்கொடுக்கட்டும் , ஆனால் வீட்டினுள் நல்ல சூழ்நிலைகளை இயன்றவரை ஏற்படுத்தி கொடுக்கலாமே... உயிரின் மதிப்பை உணர செய்யுங்கள். லவ்  பேர்ட்ஸ், நாய், கலர் மீன்கள்,புறா  போன்றவற்றை வாங்கி கொடுங்கள்...அவற்றை பராமரிக்கவும், உணவளிக்கவும் வேண்டும் என பொறுப்புகளை அவர்களிடம் கொடுங்கள்...மிகுந்த ஈடுபாட்டுடன் செய்வார்கள். தினமும் சிறிது நேரம் கண்டிப்பாக அவற்றுடன் இருக்க செய்யுங்கள்...

வளர்க்க வசதி படவில்லை என்றால் மொட்டை மாடியில் ஒரு அகன்ற பாத்திரத்தில் நீர் நிறைத்து வைக்க சொல்லுங்கள். கூடவே சிறிது உணவு பொருளையும் ஒரு தட்டில் வைத்தால் காக்கா, குருவி, மைனா போன்ற பறவை இனங்கள் (பறவைகள் இருந்தால் ?!) வந்து உணவருந்தி விட்டு செல்லும். தினமும் தொடர்ந்து வைத்து வந்தால் அவையும் தவறாது வந்து விடும். பார்க்கவே மிக அற்புத காட்சியாக இருக்கும். குழந்தைகளும் மிக உற்சாகமாகி விடுவார்கள். ஏதாவது பறவைக்கு சிறு அடிபட்டு ரத்தம் வந்தாலும் துடித்து போய் மருந்திட்டு ஆற்றுவார்கள் . அனுபவத்தில் உணர்ந்த அற்புதம் இது !!

'படிக்கவே நேரமில்லை இதுல இது வேறையா' என்று புத்தகத்தை கையில் திணிக்காதீர்கள்...படிப்பை விட மிக மிக முக்கியம் மனித நேயம்! பிற உயிர்களிடத்து அன்பு ! இளம் வயதில் பிற உயிர்களிடம் அன்பை காட்டட்டும்...! நம் குழந்தைகள் வீட்டில் இருக்கும் பல இயந்திரங்களுடன் ஒன்றாக வளர கூடாது...!குழந்தைகள் ஈடு இணையில்லாத மதிப்புள்ள உயிர்கள் !! நாளைய சமுதாயம் அன்பு, பாசம், கருணை, இரக்கம் போன்ற உணர்ச்சிகள் நிறைந்து காணபடட்டும்.

  


Tweet

27 கருத்துகள்:

  1. அழகாய் சொன்னீர்கள் சகோதரி...
    இன்றைய சமுதாயம் பற்றிய விழிப்புணர்வூட்டும் பதிவு.
    குழந்தைகளுக்கு நல்ல சூழ்நிலைகளை உருவாக்கிகொடுப்பதன் மூலம்,
    அவர்களின் மனதில் நல்லவைகளை விதிக்கலாம், அவர்களின் மனநலம்
    குறைபாடின்றி ஆழ வேரூன்றி பின்னாளில் அகலப்படும் என்று எளிமையாய்
    விளக்கியிருக்கிறீர்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. //படிப்பை விட மிக மிக முக்கியம் மனித நேயம்! ..நாளைய சமுதாயம் அன்பு, பாசம், கருணை, இரக்கம் போன்ற உணர்ச்சிகள் நிறைந்து காணபடட்டும்"//

    உங்கள் நல்ல எண்ணம் போலவே நம் குழந்தைகள் வளரட்டும். அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை.
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. * நல்லவர் என்றால் ஏன் கொலை செய்கிறார் ?
    * கெட்டவர் என்றால் இவரை ஏன் யாரும் கொல்லவில்லை ?//


    இது சரியான கேள்வி!!!!

    பதிலளிநீக்கு
  4. நமக்கு சர்வ சகஜமாக தெரிகிறது ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்குதான் அது பெரிய சோகமாக இருக்கிறது, மும்பை தீவிரவாத தாக்குதலில் அந்த ஹோட்டலில் வேலை செய்த என் நண்பனின் நண்பன் குடும்பத்தை பார்க்கும் போது, அந்த வேதனையை நான் அனுபவித்தேன்.

    பதிலளிநீக்கு
  5. சூப்பரான அறிவுரைகள் பகிர்வுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  6. மிகவும் அருமையான பதிவு.
    இன்று எல்லோருமே சிந்திக்க வேண்டிய பதிவு. அவரவர்களுக்கு வந்தாலே அதன் வலியும், கஷ்டமும், துக்கமும், துயரமும் ஓரளவாவது உணர முடிகிறது என்பதே உண்மை.

    பதிலளிநீக்கு
  7. அருமையான பதிவு கௌசல்யா .மனிதநேயம் பிள்ளைகளிடம் வளர வேண்டும் .நாம் தான் அதற்க்கு உதவ வேண்டும்
    எல்லாம் சொன்னீங்க குப்பை தொல்லைகாட்சி தொடர்களை விட்டுவிட்டீர்களே .இரண்டு வார அனுபவம் எனக்கு சென்னையில் ஏற்பட்டது .இதற்கு சென்சார் ஏதும் கிடையாதா .

    பதிலளிநீக்கு
  8. @@ வியபதி...

    உங்களின் முதல் வருகை என நினைக்கிறேன். வருகைக்கு மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  9. @@ MANO நாஞ்சில் மனோ said...


    // மும்பை தீவிரவாத தாக்குதலில் அந்த ஹோட்டலில் வேலை செய்த என் நண்பனின் நண்பன் குடும்பத்தை பார்க்கும் போது, அந்த வேதனையை நான் அனுபவித்தேன்.//

    உங்களின் உணர்வுகள் புரிந்துகொள்ள முடிகிறது மனோ. வருந்துகிறேன்.

    இந்த தலைமுறை நாம்...பிறர் துன்பம் பார்த்து வருந்துகிறோம், ஆனால் இனி வருங்காலம் இந்த அளவு இருக்குமா ? சந்தேகம் தான்.

    இவர்கள்(குழந்தைகள்) எதையும் சுலபமாக எடுத்து கொள்கிறார்கள் அதுபோல பிற உயிர்கள் மீதான கவனிப்பையும் சாதாரணமா எடுத்துகொள்ளகூடாதே ?!! ஒரு ஆதங்கம்.

    கருத்துரைக்கு நன்றி மனோ.

    பதிலளிநீக்கு
  10. @@ மகேந்திரன்...


    நல்ல சூழ்நிலைகள் எல்லோருக்கும் அமைவது இயலாது. ஆனால் பெற்றோர்கள் முடிந்தவரை அமைத்துகொடுக்கலாம். பொருளாதாரத்தின் பின் ஓடும் நேரத்தில் கொஞ்ச நேரம் இதற்கு செலவிடலாம்.

    கருத்திட்டமைக்கு நன்றி மகேந்திரன்

    பதிலளிநீக்கு
  11. @@ நண்டு @நொரண்டு -ஈரோடு...

    நன்றிகள்

    பதிலளிநீக்கு
  12. @@ வை.கோபாலகிருஷ்ணன் said...

    //அவரவர்களுக்கு வந்தாலே அதன் வலியும், கஷ்டமும், துக்கமும், துயரமும் ஓரளவாவது உணர முடிகிறது என்பதே உண்மை.//

    சரிதான். பிறர் துன்பம் கண்டு வருந்தும், உதவும் மனோபாவம் அதிகம் வேண்டும் நம் குழந்தைகளுக்கு.

    கருத்துரைக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  13. @@ angelin said...

    //குப்பை தொல்லைகாட்சி தொடர்களை விட்டுவிட்டீர்களே .இரண்டு வார அனுபவம் எனக்கு சென்னையில் ஏற்பட்டது .இதற்கு சென்சார் ஏதும் கிடையாதா//

    எனக்கும் நீண்ட நாட்களாக எழுதவேண்டும் என்ற எண்ணம்தான். ஆனால் அதற்க்கு முதலில் சீரியல்களை நான் பார்க்க வேண்டும் அந்த பாதிப்பை நான் அனுபவித்த பின்னர் எழுதினால் பதிவு உண்மைத்தன்மை பெற்றதாக இருக்கும்.

    நீங்க சொல்லிடீங்க ஒரு மூணு நாள் தொடர்ந்து பார்த்து(?) வைக்கிறேன் :))

    பதிலளிநீக்கு
  14. //ஆனால் இனி நம் வீட்டில் நடந்தாலும் வெகு இயல்பாய் தாண்டி சென்றுவிடுவோம் என்றே தோன்றுகிறது.//

    நிதர்சனம்

    பதிலளிநீக்கு
  15. அழகாயெடுத்து சொல்லிருகிறீர்கள். நல்ல விழிப்புனர்வுள்ள பதிவு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  16. நல்ல விழிப்புணர்வு பதிவு.... குழந்தைகளூக்கு விழிப்புணர்வு அமைத்து கொடுப்பதன் மூலம் வருங்கால ஜெனரேசனை பாதுகாக்கலாம் பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  17. டிவி திரைப்படம் பார்ப்பதைக் குறைத்துக் கொள்ளும் விழிப்புணர்ச்சி மிகவும் அரிது. புத்தகம் படிக்கும் வழக்கம் ஏற்படுத்திக் கொள்வது இன்னும் அரிது. ஆனால் இதையும் மீறி சமுதாயம் முன்னேறிக் கொண்டு தான் இருக்கிறது. அல்லது இந்த முன்னேற்றம் அசல் அல்ல என்பது இப்போது தெரியாதா? சிந்திக்கத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  18. அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை

    பதிலளிநீக்கு
  19. அன்புநிறை சகோதரி,
    தங்களை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்த
    வாய்ப்பு கிடைத்தமைக்கு மனம் மகிழ்கிறேன்.

    இணைப்பு..

    http://blogintamil.blogspot.com/2011/09/blog-post_22.html

    பதிலளிநீக்கு
  20. @@ நிலாமதி...

    நலமா ? ரொம்ப நாள் கழிச்சு உங்களை இங்கே சந்திக்கிறேன்.

    மகிழ்கிறேன், நன்றிகள்

    பதிலளிநீக்கு
  21. @@ மாய உலகம்...

    புரிதலுக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு
  22. @@ அப்பாதுரை said...

    //ஆனால் இதையும் மீறி சமுதாயம் முன்னேறிக் கொண்டு தான் இருக்கிறது. அல்லது இந்த முன்னேற்றம் அசல் அல்ல என்பது இப்போது தெரியாதா?//

    வினாவும் நானே விடையும் நானே என்பது போல் கருத்துரை சொல்லியாச்சு...நான் புதுசா வேற என்ன சொல்ல ?! :)

    சிந்திக்க வைக்கும் கருத்துரை நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  23. @@ சே.குமார்...

    நன்றி குமார்.

    பதிலளிநீக்கு
  24. @@ மகேந்திரன்...

    வலைசரத்தில் அறிமுகபடுத்தியதுக்கு மிக்க நன்றிகள் மகேந்திரன். இன்னும் கவனமாக எழுதணும் என்கிற மாதிரியான பொறுப்பை உங்கள் அறிமுகம் கொடுக்கிறது நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  25. இன்னைக்கி இருக்கற மீடியா பாத்தா ரெம்பவே பயமாத்தாங்க இருக்கு. Looks like Parenting has become much more challenging task than it for previous generations...

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...