கழுகு என்ற ஒரு விழிப்புணர்வு தளம் இருப்பது பலருக்கு தெரியும், சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்...அந்த சிலருக்காக எனது இந்த பதிவு. பொதுவா விழிப்புணர்வு அப்படின்னு அடிக்கடி சொல்றோமே அந்த பொருள் தான் என்ன ? சிலருக்கு இந்த சொல்லே ஒரு சலிப்பை கொடுக்கிறது, இதன் பொருள் புரியாமலேயே !! சிம்பிளா சொல்லணும் என்றால் விழிப்புணர்வு என்பது எச்சரிக்கையாக இருப்பது, எதை பற்றியும் அதிக விவரங்களை தெரிந்து வைத்துகொள்வது, தெரியாதவர்களுக்கு எடுத்துசொல்லி புரியவைப்பது.
உதாரணமாக ரத்ததானம் செய்ய சொல்லும் போது மக்களிடம் ரத்தம் கொடுக்கணும் என்று பொதுவாக சொல்கிறோம் என்றால் 'ஐயையோ ரத்தம் எடுத்தா நான் என்ன ஆவேன்' என்ற அச்சம் வருவது மக்களின் பொது இயல்பு. ஆனால் அவர்களிடம் ரத்தம் எடுத்தா ஒன்றும் ஆகாது, மிக குறைந்த அளவு தான் எடுப்பாங்க, அதுவும் குறிப்பிட்ட நாளில் மீண்டும் ஊறி விடும், என்று கூடுதல் தகவல்களையும் சேர்த்து எடுத்து சொன்னா அதற்கு பெயர் தான் விழிப்புணர்வு.
ஒரே வரியில் சொல்லணும் என்றால் 'உணர்வுகளை விழித்தெழ வைப்பது'
இத்தகைய ஒரு அளப்பரிய செயலை தான் கழுகு செய்து கொண்டிருக்கிறது. கல்வி, மருத்துவம், அரசியல், அறிவியல்,தனி மனித ஒழுக்கம், குழந்தை வளர்ப்பு, இப்படி பலவற்றிலும் விழிப்புணர்வு பதிவுகள் எழுதுகிறார்கள் கழுகு தோழமைகள்.
யார் நடத்துகிறார்கள் ?
துபாயில் இருக்கும் தேவா அவர்கள், சென்னையில் இருக்கும் விஜய் மற்றும் சௌந்தர் இவர்கள் மூவரும் சேர்ந்து தொடங்கினார்கள். இப்போது முப்பதுக்கும் மேற்பட்ட தோழமைகள் கழுகுடன் கைகோர்த்து இருக்கிறார்கள் ...கட்டுரைகள் வடிவமைப்பது , செய்திகளை சேகரித்து தருவது , விவாதங்களை முன்னிறுத்தி நடத்தி செல்வது, பிரபலங்களிடம் பேட்டி எடுப்பது, போன்ற பலவேறு வேலைகளை பலரும் பிரித்து வைத்துகொண்டு செயல் படுத்தி கொண்டு வருகிறார்கள்.இத்தனை வேலைகளையும் அவர்கள் தங்களின் சொந்த அலுவலக பணிகளுக்கு மத்தியில் இந்த சமூகத்திற்காக மேற்கொள்கிறார்கள் என்பது பாராட்ட படவேண்டிய ஒன்று.இவர்கள் அனைவரையும் ஒன்றிணைப்பது என்ற பெரிய பொறுப்பான வேலையை தேவா அவர்கள் திறம்பட செய்துகொண்டு வருகிறார்.
ஏன் தேவை ?
விழிப்புணர்வு நமக்கு தேவையானதா என்று பார்த்தால் அது நிச்சயம் நமக்கு தேவை, ஆனால் சிலர் சொல்லலாம் நான் விழிப்புணர்வுடன் தான் இருக்கிறேன் என்று..... ஆனால் அது நிச்சயம் போதுமானதாக இருக்காது.
நம் சமூகம் பழமை பற்று மிகுந்த ஒன்று, சாதீய எண்ணமும், ஆழமாக பதிந்த தேவையற்ற மூட நம்பிக்கைகளும் வாழ்வை பற்றிய பயம், கவலையும் சேர்ந்து சாகாமலேயே செத்தவர்களாக ஆக்கி வைத்திருக்கிறது என்பது தான் இன்றைய நிதர்சனம்.
சிந்தனையை தெளிவடைய செய்யும் திருக்குறளும், மற்றும் பல இலக்கிய நூல்களும் இருந்தாலும் அது எல்லோரையும் சென்றடைவது இல்லை...ஏன் படித்தவர்களே அதன் வழித்தடம் ஒற்றி நடக்க இயலாத நிலையில் இருக்கிறோம். அவரவருக்கு தனிப்பட்ட கொள்கைகள் , கருத்துக்கள் ! படித்தவர்கள் நிலையே இது என்றால் படிக்காதவர்களை பற்றி என்ன சொல்வது. மக்கள் முன்னேற்றத்துக்கு ஏற்ற கொள்கைகளையும் கருத்துக்களையும் வகுப்பது யார் ? அதை மக்களிடம் கொண்டு செல்வது யார் ?
விழிப்புணர்வு அவசியம்
* நமது அடிப்படை உரிமைகள் எவை என்பதை பற்றி இங்கே எத்தனை பேருக்கு சரியாக தெரியும்.
* சட்டங்கள் பற்றிய முழு தெளிவு இருக்கிறதா ?
* அரசியல் பற்றிய அடிப்படை அறிவு ?
* பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் என்ன, அதற்கு தீர்வு என்ன, அதை பற்றி பெண்ணுரிமை இயக்கங்கள் என்ன சொல்கிறது ? என்ன செய்கிறது ?
இப்படி நிறைய ????
சுதந்திரம் பெற்று ஆண்டுகள் பல ஆகியும் ஒவ்வொரு தேர்தலுக்கும் 'ஒட்டு போடுங்கள்' என்று தெரு தெருவாக அறிவிப்பது வருந்தகூடிய ஒன்று. காரணம் ஒட்டு போடுவதின் அவசியத்தை, விழிப்புணர்வை மக்களிடம் சரியான முறையில் இன்னும் கொண்டு செல்லாதது தான்.
ஊத வேண்டிய சங்கை ஊதினால் போதும் , விடிகிற போது விடியட்டும் அல்லது குறைந்த பட்சம் ஒரு விழிப்பாவது ஏற்படட்டுமே என்ற நோக்கத்தில் ஆரம்பிக்க பட்டது தான் கழுகு என்கிற தளம்.
மேடை போட்டு பிறர் பாராட்ட வேண்டும், பரிசு வழங்க வேண்டும் தம் பெயர் பிரபலம் அடைய வேண்டும் என்பது போன்ற சுயநலம் சிறிதும் இன்றி விழிப்புணர்வு என்ற ஒன்றே லட்சியம் . யார் என்ன சொல்வார்கள், மாற்று கருத்து வந்தால் என்ன செய்வது என்று அஞ்சி ஒடுங்கி முடங்குவதை விட உண்மை எதுவென்று காட்டிட துணிந்து செய்பவர்கள் ஒரு சிலரே. அந்த ஒரு சிலர் சேர்ந்து சீரிய நிலையில் தெளிவான சிந்தனையோடு சிறப்பாக கால் ஊன்றி தன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் கழுகின் சிறகை வலுபடுத்துவது நல் மனம் படைத்த ஒவ்வொருவரின் கடமை. மீளா தூக்கத்தில் ஆழ்ந்து கிடக்கும் அறியாமையில் ஊறிய மக்களை / சமுதாயத்தை எழுப்புவது என்பது எளிய காரியம் அன்று .
தமிழன் நாம் என்பதே மறந்து பிறர் சொல்லும் போதுதான் 'ஓஹோ நாம் தமிழர்' என்று விழித்து எழுகிறான். ஏதோ ஒரு போராட்டம் புரட்சி திடிரென்று வரும் போது தான் 'தன் இனம் இது' என்பது போல உணர்வு கொள்கிறான். தன் இனத்தை நினைவு படுத்தவே இது போன்ற நிகழ்வுகள் தேவை படுகிறது என்னும் போது விழிப்புணர்வு எவ்வளவு அவசியமாகிறது என்பது புரியும்.
விழிப்புணர்வு வேற சமூக சேவை வேற !
விழிப்புணர்வு வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா களத்தில் இறங்கி போராட வேண்டும் என்ற ஒரு வாதம் கழுகின் முன் வைக்கப்பட்டது. உண்மைதான் களத்தில் இறங்கி போராடுவதின் மூலம் மக்களை உடனே சென்று அடைய முடியும். ஆனால் தொடர்ந்து விழிப்புடன் வைத்துகொள்வது மிக அவசியம். உதவி செய்ய ஆள் இருக்கிறது என்று சோம்பி திரிய கூடிய மந்த புத்தி படைத்த மனித இனம் தானே நாம், மனிதனின் ஆழ்மனதை தட்டி எழுப்பவேண்டும்.....அதில் நல்லவைகளை ஆழமாக பதிய வைக்கவேண்டும்.....இதை செய்வது தான் விழிப்புணர்வு.
இரண்டும் ஒன்று போல் பாவித்து குழம்பி கொள்பவர்கள் பலர். விழிப்புணர்வை யார் வேண்டும் என்றாலும் எங்கே இருந்தும் ஏற்படுத்த முடியும்...அதற்கு தேவை ஆர்வமும், பல துறைகளை பற்றிய தெளிவும்,புரிதலும் தான். ஆனால் சமூக சேவை என்பது களத்தில் சென்று செயல்படுவது. கண்முன் ஒருத்தர் கஷ்டபடுகிறார் என்றால் என்ன பிரச்சனை பண உதவியா, வேற என்ன தேவை என்று பார்த்து செய்து கொடுப்பது. இது அப்போதைய உடனடி தீர்வாகும். அத்துடன் நின்றுவிடும். ஆனால் விழிப்புணர்வு என்பது சம்பந்த பட்ட மனிதனுடன் நின்றுவிடாமல் காலத்திற்கும் அவனது சந்ததிக்கும் ஆலோசனை சென்று சேரும். புத்தியை தெளிவடைய வைத்துவிட்டால் போதுமே, அவன் வாழ்க்கையை அவன் பார்த்துக்கொள்வான், பிறர் தயவு தேவையில்லை. இதை தான் கழுகு அமைதியாக செய்து கொண்டிருக்கிறது.
"குளிரில் நடுங்கும் பிச்சைகாரனுக்கு வீடு அல்லது குறைந்த பட்சம் ஒரு ஸ்வெட்டர் வாங்கி கொடுப்பது சமூக சேவை என்ற கருத்தினை கொண்டால்.....
பிச்சைக்காரனே உருவாகாமல் இருக்க எல்லா சாத்தியக்கூறுகளையும் மனித மூளைக்குள் விதைப்பதற்கு பெயர் தான் விழிப்புணர்வு.....!"
(நன்றி-தேவா)
மனித மனம் என்றும் நிறைவு அடைவதில்லை பொருளாதார தேவை மற்றும் வேறு சில காரணங்களால். ஆனால் ஓரளவு தன்னிறைவு அடைந்த மனிதன் முடிந்தவரை சில விழிப்புணர்வு விதைகளையாவது தூவி விட்டு செல்லலாம், பின் நீர் ஊற்ற வேறு யாரேனும் வருவார்கள்.....சூழல் சரியாக இருக்கும்பட்சத்தில் தன்னால் முளைத்துவிடகூடும்...!!
விழிப்புணர்வு விதைகளை மனங்களில் தூவும் வேலையை இப்போது செய்துகொண்டிருக்கும் அதே நேரம், தேவைபட்டால் களத்தில் இறங்கி போராடவும் கழுகு தயங்காது.....! அதற்கு வேண்டிய போராட்டகுணம், தைரியம், தோழமைகளின் பலம் அனைத்தும் ஒருங்கே தன்னகத்தே கொண்டிருக்கிறது.....திறக்கப்பட வேண்டிய கதவுகள் தட்டிபார்த்தும் திறக்கவில்லை என்றால் உடைத்து திறக்ககூடிய ஆற்றல் கொண்டவர்கள் தோழமைகள்...
உயரிய திட்ட வரைமுறைகள்
நோக்கம் இருக்கிறது என்பதற்காக ஒழுங்கற்ற விதத்தில் ஏனோ தானோ வென்று தளம் செயல் படவில்லை. நேர்த்தியாக, சீராக, கட்டுபாடுடன், ஒழுங்குடன், தங்களுக்கு என்ற விதிமுறைகளுடன் செயல் பட்டுகொண்டிருக்கிறது. இந்த தளத்திற்கு குழு என்ற ஒரு அமைப்பும், மீட்டிங் ஹால் என்ற மற்றொரு முக்கிய அமைப்பும் இயங்கி வருகிறது.
கழுகின் முக்கிய உறுப்பினர்கள்
தேவா - தீராத சமூக முன்னேற்ற வேட்கை கொண்டவர். இருப்பது கடல் தாண்டி என்றாலும் நினைவுகளால் தாய்நாட்டை ஒரு கணமும் பிரியாதவர். நாட்டின் மீது கொண்ட அதிக பற்றின் காரணமாகவே இந்த தளத்தை உருவாக்கி நடத்திக்கொண்டு வருகிறார்.
சௌந்தர் - மிக முக்கிய பங்கு இவரது...வெளிநாட்டில் இருந்து தேவா இயக்க இவர் இங்கிருந்து கழுகின் பல பணிகளை ஒருங்கிணைக்கிறார்.
கொக்கரக்கோ - சௌமியன் பல துறை சம்பந்தப்பட்ட விசயங்களை விரல் நுனியில் தெரிந்து வைத்திருப்பவர். கழுகில் இவரது பணி மிக அதிகம்.
சமீர் அஹமத் - கழுகின் செயல்கள் அனைத்திலும் பக்க பலமாக இருக்கிறார்.
மகேஸ்வரி - பல கட்டுரைகள் எழுதி தருவதும், விவாதங்களில் கலந்துகொள்வதும் என்று உற்சாகமாக செயலாற்றி வரும் இவர் கழுகின் இன்றியமையாத தோழமை.
மகேஸ்வரி - பல கட்டுரைகள் எழுதி தருவதும், விவாதங்களில் கலந்துகொள்வதும் என்று உற்சாகமாக செயலாற்றி வரும் இவர் கழுகின் இன்றியமையாத தோழமை.
ஆனந்தி - விவாதங்களை உற்சாகபடுத்துவதில் இவங்க ஸ்டைல் தனி. தினம் திருக்குறள் சொல்லி அன்றைய பொழுதை தொடக்கி வைப்பவர்.
எஸ்.கே - எஸ்.கே குழுவின் திட்டமிடுதலில் பங்கெடுத்துக் கொள்வதோடு, வலுவான விவாதங்களை முன்னெடுத்து வைப்பார். மேலும் பிற வலைத்தளங்களில் வெளி வந்த நல்ல பதிவுகள் மிகைப்பட்ட பேரால் வாசிக்கபடாமல் இருப்பதை குழுவினருக்கு அடையாளம் காட்டும் பணியும் செய்து வருகிறார்.
கல்பனா - இவர் கழுகின் விவாதங்களில் ஆர்வமுடன் கலந்து தனது கருத்துக்களை எடுத்துவைக்க தவறமாட்டார்.
இன்னும் பல இளம்புயல்கள் ஆர்வமாக பங்கேற்று செயலாற்றி கொண்டிருக்கிறார்கள்.முப்பது பேரை பத்தியும் சொன்னா பதிவு தொடர்தான் போட வேண்டி வரும் என்பதால் இத்துடன் முடிக்கிறேன்...!!
இவர்கள் ஒருவருக்கும் ஒருவர், எந்த உறவும் இல்லை என்றாலும் ஒரு குடும்பம் போல் செயல் பட்டுவருவது வரவேற்க்கதக்க ஒன்று.
குழு
குழுவில் இணைய விரும்புவர்களுக்கு சில விதிமுறைகள் இருக்கிறது...
அதை ஏற்றுகொண்டவர்கள் இணைந்து கொள்ளலாம். விவாதத்திலும் கலந்து கொள்ளலாம், கருத்து வெளியிட இயலாதவர்கள் நடக்கும் விவாதங்களை மெயிலின் மூலம் அறிந்துகொள்ளலாம். முதலில் நமக்கே பல விசயங்களில் தெளிவு இல்லாமல் இருக்கும், அதை சரி படுத்திக்கொள்ளவும், ஒரே நேரத்தில் பல துறைகளை பற்றிய செய்திகளை தகவல்களை தெரிந்து கொள்ளவும் முடியும்.
இதனை பற்றி இன்னும் விவரங்கள் தேவை என்றால் கீழே உள்ள சுட்டியை கிளிக்கவும்.
எல்லோருக்கும் சமூகத்திற்காக ஏதாவது செய்யவேண்டும் என்கிற ஆர்வம் உள்ளுக்குள் இருக்கும், ஆனால் வாய்ப்பு இல்லை என்ற ஒரு நிலை இருந்தால் தங்களது வேலை நேரத்தில் ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி இத்தள கட்டுரையை படித்து இவர்களை உற்சாக படுத்துங்கள். கழுகு இன்னும் அதிக முனைப்போடு செயல்பட உதவியாக இருக்கும். இது ஒன்றும் பெரிய காரியம் இல்லையே, உடனே கழுகை தொடருங்கள்...கட்டுரைகளை வாசித்து உங்கள் குறைகளையும் நிறைகளையும் வெளிப்படையாக சொல்லுங்கள். கழுகு உங்களுக்கு பதில் சொல்ல காத்திருக்கிறது...!
பல நல்ல பதிவுகளை படித்து நம்மை இன்னும் அதிகமாக தெளிவு படுத்திகொள்வோம்...கழுகு தளத்தில் இணையுங்கள். கழுகின் சிறகை வலுபடுத்துங்கள்......!!
'உணர்வுகளை விழித்தெழ வைப்பது' //
பதிலளிநீக்குஅருமையான சொல்லாட்சி. ந்றைய விவரப் பகிர்வுகளுக்குப் பாராட்டுகள்.
கழுகுப் பார்வை தீமைகளைக்
களைந்து சமுதாயத்திற்கு பயன்தர வாழ்த்துக்கள்.
கழுகு பற்றி தெரியப்படுத்தியமைக்கு நன்றிகள்
பதிலளிநீக்குஇது குறித்து நிறைய விவாதம் தேவை, பத்துபேரை ஒருங்கிணைப்பது என்பதில் பல்வேறு அரசியல், ஈகோ எல்லாம் வரும் அல்லது வரலாம், நல்ல செயல் செய்வதிலும் நிறைய அரசியல் இக்காலத்தில் உள்ளது என்பதை மட்டும் மனதில் வைத்து அதற்க்கும் வழிகள் கண்டு மேற்கொண்டு செல்ல கழுகை வாழ்த்துகிறேன்.,
பதிலளிநீக்குமிக்க நன்றி...,
பதிலளிநீக்குகௌசல்யா. இதைவிட சொல்வதற்கு என்ன இருக்கின்றது? மிக்க நன்றி!!
மிகச் சரியான நேரத்தில், மிகத் தேவையான பதிவை தந்து கழுகுக்கு உங்கள் பங்களிப்பை மிக அதிகமாகத் தந்திருக்கின்றீர்கள்.
மீண்டும் நன்றி.
சமுதாய சீர்கேடுகளின் ஆழங்களை ஊடுருவிப் பார்த்தால் எல்லா சீர்கேட்டின் பின்புலத்திலும் மனிதர்களே அணிவகுத்து நிற்பதை நாமறிவோம்.
பதிலளிநீக்குஒவ்வொரு மனிதனும் விழிப்புணர்வோடு இயங்கத் தொடகுவானாயின் ஒவ்வொரு மனிதனும் ஒரு தனி இராணுவத்துக்குச் சமம்.
ஏழைகளை உருவாக்கியது மனிதன், சீர்கேடுகளை விதைத்திருப்பது மனிதன், ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தியிருப்பதும் அவனே....
இப்படி இருக்கையில் யார் யாரைத் தண்டிக்க? ஒவ்வொரு தனி மனிதனும் தன்னயும் தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களையும் சரி செய்வானாயின்....
எப்படி வரும் பிரச்சினைகள்? யார்தான் தேவை போராட....?
" நீங்கள் யாரய் வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள் ஆனால் சக மனிதரை சந்திக்க வரும் போது உங்களில் மனிதம் சுமந்து வாருங்கள், கண்களில் அன்பைச் சுமந்து வாருங்கள்...! தனி மனித மாற்றமே....சமுதாய மாற்றம் "
இதுவே கழுகின் கர்ஜனை...!!!!
சிறகுகளின்றி கழுகு ஏது....???? இந்த சிறகடிப்பும் நம்மை இன்னும் உயரப் பறக்க வைத்து உன்னத பார்வைகளுக்குச் சொந்தமாக்கித் தான் தீரும்...!!!!
நன்றிகள் கெளசல்யா!
@@ ஷர்புதீன் said...
பதிலளிநீக்கு//இது குறித்து நிறைய விவாதம் தேவை, பத்துபேரை ஒருங்கிணைப்பது என்பதில் பல்வேறு அரசியல், ஈகோ எல்லாம் வரும் அல்லது வரலாம், நல்ல செயல் செய்வதிலும் நிறைய அரசியல் இக்காலத்தில் உள்ளது//
இத்தகைய அரசியல் இல்லாத இடம் எதுவும் இல்லை, ஆனால் பொதுநலம் என்று 'விரும்பி இணைந்தவர்கள்' சில முரண்கள் ஏற்பட்டாலும் சகித்துக்கொண்டு விட்டுகொடுத்து போய் விடுவார்கள்/போகணும்...
எனக்கு தெரிந்து கழுகின் தோழமைகள் இந்த மனப்பான்மையில் தான் உலா வருகிறார்கள்...
இலக்கு மட்டுமே நம் மனதில் இருந்தால் நடுவில் ஏற்படும் தேவை அற்றவை காணாமல் போய்விடும்...
வெளிப்படையான கருத்துக்கு நன்றி ஷர்புதின்.
நான் எதிர்பார்த்த ஒன்று, மிக்க நன்றி தோழி.
பதிலளிநீக்குஇதைப்படித்ததும் கழுகு பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும். நன்றி.
பதிலளிநீக்கு//நீங்கள் யாரய் வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள் ஆனால் சக மனிதரை சந்திக்க வரும் போது உங்களில் மனிதம் சுமந்து வாருங்கள், கண்களில் அன்பைச் சுமந்து வாருங்கள்...!//
பதிலளிநீக்குWELL SAID.
அருமையான கட்டுரை கௌசல்யா .
நானே இதுபற்றி கேட்க நினைத்திருந்தேன். சில பதிவுகளில் கழுகு படம் பார்த்து 'இது ஏதோ நிழல் இயக்கம் போலிருக்குதே' என்று நினைத்தேன். பதிவு என்றே தோன்றவில்லை - தற்செயலாக ஒருமுறை க்ளிக்கிப் பார்த்தால் வித்தியாசமான வலைப்பூ! விளக்கமாக எழுதியதற்கு நன்றி.
பதிலளிநீக்குஅன்பின் கௌசல்யா - அருமையான கட்டுரை. கழுகு பற்றிய விளக்கம் - அருமை. கேட்பவர்கள் கேட்டுக்கொண்டு தான் இருப்பார்கள் - அத்தனை பேருக்கும் பதில் சொல்ல இயலாது. நாம் நம் செயல்களைச் செய்து கொண்டே இருப்போம். இவர்களைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம். ஆனால் இது மாதிரி ஒரு விழுப்புணர்வுக் கட்டுரை வெளி வந்தால் இன்னும் பல இளைஞர்கள் சேரவும் வாய்ப்புண்டு. நல்வாழ்த்துகள் கௌசல்யா - நட்புடன் சீனா
பதிலளிநீக்குபூங்கொத்து!
பதிலளிநீக்கு@@ இராஜராஜேஸ்வரி said...
பதிலளிநீக்கு//கழுகுப் பார்வை தீமைகளைக்
களைந்து சமுதாயத்திற்கு பயன்தர வாழ்த்துக்கள்.//
உங்களின் வாழ்த்துகளுக்கு நன்றிகள் தோழி.
@@ கவி அழகன்...
பதிலளிநீக்குகழுகு பற்றி எழுத ஒரு சந்தர்பம் கிடைத்தமைக்கு மகிழ்கிறேன் யாதவன்.
நன்றிகள்
@@ கொக்கரகோ... said...
பதிலளிநீக்கு//கௌசல்யா. இதைவிட சொல்வதற்கு என்ன இருக்கின்றது?//
இனி வருங்காலத்தில் நிறைய இருக்கும் சௌமியன். :))
//மிகச் சரியான நேரத்தில், மிகத் தேவையான பதிவை தந்து கழுகுக்கு உங்கள் பங்களிப்பை மிக அதிகமாகத் தந்திருக்கின்றீர்கள்.//
இது என் கடமையும் அல்லவா ?
நன்றிகள்
@@ dheva said...
பதிலளிநீக்கு//ஒவ்வொரு மனிதனும் விழிப்புணர்வோடு இயங்கத் தொடகுவானாயின் ஒவ்வொரு மனிதனும் ஒரு தனி இராணுவத்துக்குச் சமம்.//
மனிதனின் ஆற்றல் பல சமயங்களில் அவனுக்கே தெரியாது. என்னத்தை பேசி என்னத்தை செய்ய என்ற ஒரு வறட்டு எண்ணம் அதிகம் இருக்கிறது.
ஆனால் இவை இனி வரும் காலங்களில் நிச்சயம் மாறும்.
உங்களின் அத்தனை ஆர்வத்திற்கும் கைகொடுக்க தோழமைகள் இருக்கிறார்கள்.
கழுகு இன்னும் சிறப்பாக செயல்படும்.
வாழ்த்துகிறேன்.
நன்றி
@@ பலே பிரபு...
பதிலளிநீக்குநன்றிகள் பிரபு
@@ வை.கோபாலகிருஷ்ணன் said...
பதிலளிநீக்கு//இதைப்படித்ததும் கழுகு பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும்//
அப்படியே என்றால் மகிழ்கிறேன் சார்.
நன்றிகள்
@@ FOOD said...
பதிலளிநீக்கு// தெரிந்ததும், சில தெரியாதவையும் அறிந்து கொண்டேன்.//
நன்றிகள் அண்ணா
@@ angelin said...
பதிலளிநீக்குபுரிதலுக்கு நன்றிகள் ஏஞ்சல் :))
@@ அப்பாதுரை said...
பதிலளிநீக்கு//நானே இதுபற்றி கேட்க நினைத்திருந்தேன். சில பதிவுகளில் கழுகு படம் பார்த்து 'இது ஏதோ நிழல் இயக்கம் போலிருக்குதே' என்று நினைத்தேன்.//
நிழல் இயக்கமா ? :)) கழுகை பற்றி நினைத்து இருப்பதை என்னை மகிழ்கிறேன்.
//பதிவு என்றே தோன்றவில்லை - தற்செயலாக ஒருமுறை க்ளிக்கிப் பார்த்தால் வித்தியாசமான வலைப்பூ!//
உண்மையில் வித்தியாசமான தளம் தான் சகோ. நேரம் கிடைக்கும் போது படித்து உங்கள் கருத்துக்களை அங்கேயும் சொல்லுங்கள்.
நன்றி
@@ cheena (சீனா) said...
பதிலளிநீக்கு// கேட்பவர்கள் கேட்டுக்கொண்டு தான் இருப்பார்கள் - அத்தனை பேருக்கும் பதில் சொல்ல இயலாது. நாம் நம் செயல்களைச் செய்து கொண்டே இருப்போம். இவர்களைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம்.//
கவலை என்று இல்லை, நம் தெளிவையும் எடுத்து கூற வேண்டுமே என்றுதான் எழுதினேன். இந்த வித்தியாசம் கூட தெரியாமல் நாம இருக்ககூடாது இல்லையா ? :))
உங்களின் அக்கறையான ஆலோசனையையும் கேட்டுக்கொள்கிறேன்
உங்களின் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் ஐயா
@@ அன்புடன் அருணா...
பதிலளிநீக்குவாங்கி கொண்டேன் அருணா
நன்றிகள்