செவ்வாய், ஜூன் 14

9:27 AM
57
'திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' -  சம்பந்தர்
'தண்  பொருநைப் புனல்நாடு'  -  சேக்கிழார்
பொன்திணிந்த  புனல் பெருகும் பொருநைத் திருநதி - கம்பர்

என்று சான்றோர்கள் பாடி பரவசம் அடைந்த பூமி இந்த திருநெல்வேலி !! ஆசியாவின் மிகப் பெரிய சிவன் கோவில், இங்கே உள்ள நெல்லையப்பர் கோவில் என்பது ஒரு சிறப்பு.சிவபெருமானின் ஐம்பெரும் சபைகளில் 'தாமிர சபை' என்று போற்றப்படுவதும் இந்த கோவில் தான்.


திருநெல்வேலி என்றால் இலக்கியம் சுவைத்த டி.கே.சி, விடுதலை உணர்வு தந்த வ.உ.சி, எட்டயபுரத்து பாரதி, உனக்கேன் தரவேண்டும் வட்டி என ஆங்கிலேயரிடம் உறுமிய  கட்டபொம்மன், ஆங்கிலேயரை முதன் முதலில் எதிர்த்த மன்னன் பூலித்தேவன், வாஞ்சிநாதன் இப்படி பலரும் நினைவுக்கு வரலாம்.....! பலருக்கு  பாளையங்கோட்டை ஜெயில் நினைவுக்கு வரலாம்.....! முக்கியமாக எல்லோருக்கும் அல்வா நினைவுக்கு வரும்.....!  

இப்ப எதுக்கு இந்த பில்டப்னா,  இனிமேல் பதிவுலகத்திற்கு திருநெல்வேலி என்றால் 'பதிவர்கள் சந்திப்பு' நினைவுக்கு வரணும், வரும்.....!! (இது கொஞ்சம் ஓவர்தான்...!! )

எங்க ஊர்ல விஷேசமுங்க !

ஆம் மக்களே வரும் வெள்ளிகிழமை அன்று சென்னை, மதுரை, கோவில்பட்டி, ஈரோடு, கோயம்புத்தூர், கோபி,விருதுநகர் இன்னும் ஊர்களில் இருந்தெல்லாம் பதிவர்கள் நெல்லை நோக்கி வராங்க.....! 

பதிவுலகம் மூலமாக முகம் தெரிந்தும் தெரியாமலும் நட்புகள் கொண்டாடி வருகிறோம். பின்னூட்டங்கள் மற்றும் நம்மை தொடருவதின் மூலம் பலர் நம்மை பற்றி அறிந்திருப்பார்கள். அப்படி  அறிந்தவர்கள் தெரிந்தவர்களாக மாற உதவுகிறது  'பதிவர்கள் சந்திப்பு'. 

அது போன்ற ஒரு சந்திப்பு இங்கே திருநெல்வேலியில் நடைபெற இருக்கிறது. 'உணவு உலகம்' திரு சங்கரலிங்கம் அண்ணன் அவர்கள் தலைமையில் வரும்  17.06.2011 வெள்ளி அன்று, பதிவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்துள்ளோம். இது தொடர்பாக அவரது மெயிலுக்கு பத்தாம் தேதிக்குள் வருகையை குறித்து பதிவு செய்ய சொல்லி இருந்தோம்....பத்து பேர் முதல் பதினைந்து பேர் வருவார்கள் என்ற நினைத்தோம். ஆனால்  வருவதாக விருப்பம் தெரிவித்து வந்த மெயில்களை பார்த்து பிரமித்துவிட்டோம். எங்களின் பொறுப்பு  கூடியதாக உணரும் அதே நேரம் மிகவும் சந்தோசமாக அந்நாளை எதிர்பார்க்கிறோம். 

                      இடம்: மிதிலா ஹால்,A/C.
                       ஹோட்டல் ஜானகிராம்,
                        மதுரை ரோடு,
                        திருநெல்வேலி சந்திப்பு.
                        நாள்: 17.06.2011 
                        நேரம்: காலை 10.00 மணி


நிகழ்ச்சி நிரல் 


காலை 10௦.00 மணி --- வரவேற்புரை, பதிவர்கள் ஒரு சுய அறிமுகம்

காலை 11 .00 மணி --- செல்வாவின் நகைச்சுவை நேரம்

 அதன்பின்னர் கலந்துரையாடல், அது முடிந்ததும் 1 மணிக்கு மதிய உணவு இத்துடன் சந்திப்பு நிறைவு பெறுகிறது.

இந்த பதிவர்கள் சந்திப்பில் ஒரு சிறந்த ஒன்றாக சிறிய சமூக சேவை ஒன்றினை செய்யலாம் என்று யோசித்து வைத்துள்ளோம்...வரும் நண்பர்களின் ஒத்திசைவுக்கு பின் செயல் படுத்தப்படும்.....!
                                                       
நிகழும் நிகழ்வுகளை பதிவுலக நண்பர்கள் ஆன்லைனில் கண்டுகளிக்க நாற்று நிரூபன் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளார். புகைப்படம் எடுக்க போடோகிராபர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது , அதில் கலந்து கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் தவிர்த்துவிடலாம், கட்டாயம் இல்லை. அப்புறம் முக்கியமாக, பதிவர்கள் சந்திப்பு என்று சொன்னாலும், உண்மையில் இது ஒரு குடும்ப விழா...விரும்பம் உள்ளவர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ளலாம்.    

வலைச்சரம் - சீனா ஐயா 
உணவுஉலகம் -சங்கரலிங்கம் 
சாமியின் மன அலைகள் Dr.P. கந்தசாமி 
வெடிவால் - சகாதேவன் 
சங்கவி - சதீஷ் 
அட்ரா சக்க - செந்தில்குமார்
கோமாளி செல்வா 
தமிழ்வாசி - பிரகாஷ் 
எறும்பு - ராஜகோபால்
ஜயவேல் சண்முக வேலாயுதம் 
அன்புடன் எ.மு.ஞானேந்திரன் 
நெல்லை நண்பன் - ராம்குமார் 
வெறும்பய -ஜெயந்த் 
நான் ரசித்தவை - கல்பனா 
ரசிகன் ஷர்புதீன்
ஜோசபின் பாபா 

இவர்கள் அனைவரும் வருகிறார்கள்...இவர்கள் தவிர மற்றவர்கள் புதன்கிழமை (நாளை) கன்பர்ம் செய்து,  சொல்வதாக இருக்கிறார்கள். மேலும் வர விருப்பம் இருக்கிறவர்கள், உணவுஉலகம் ஐடிக்கு மெயில் பண்ணுங்கள்...முக்கியமாக நெல்லையில் வேறு யாரும் பதிவர்கள் இருக்கிறார்களா என தெரியவில்லை...அப்படி இருந்தால் அவசியம் தொடர்பு கொள்ளவும்.

உணவு உலகம் சங்கரலிங்கம் அண்ணா  அவர்களின் மெயில் ஐடி   unavuulagam@gmail.com  
அவரது செல் எண் 9442201331.

ஒரு வித்தியாசமான அனுபவமாகவும், நம் நட்பை பரிமாறிக்கொள்ள கிடைத்த ஒரு சந்தர்ப்பமாகவும் இந்த பதிவர்கள் சந்திப்பு இருக்கும்.


அப்புறம் ஒண்ணச் சொல்லியே ஆகணும் - குற்றாலம் 


தென்பொதிகைச் சாரலில் அமைந்துள்ளது குற்றால மலை, இதில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் உள்ளன.....இந்த செடிகள் மீது பட்டு விழும்  மழைத்துளிகள் பின்னர் அருவியாக ஓடி வருவதால் அருவி நீரில் அந்த மூலிகை செடிகளின் மருத்துவ குணமும் கலந்து வருகிறது என்பதும் அதில் நீராடுவதால் உடலுக்கு ஆரோக்கியம் என்பது தனிச் சிறப்பு.   

இப்போது சீசன் களைகட்ட தொடங்கிவிட்டது. தென் மேற்கு பருவக்காற்று குளிர்ச்சியாக வீசி, குற்றாலத்தில் சாரல் மழையை  பெய்வித்து கொண்டிருக்கிறது .....!! அனைத்து  அருவிகளிலும் தண்ணீர் கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது .....


வெள்ளிகிழமை பதிவர் சந்திப்பு என்றால் சனி, ஞாயிறு இரண்டு தினங்களும் மூலிகை கலந்து வரும் அருவிகளில் நீராடி அற்புதமான அனுபவத்தை பெற ஒரு நல்ல சந்தர்ப்பம்.  இது போன்ற சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது அனுபவித்து கொள்ளவேண்டும்...! (அவரவர் சொந்த செலவில்...?!) என்ன நான் சொல்றது...?! சரி தானே.....?!!


நெல்லையும் நாங்களும் உங்கள் அனைவரையும் சந்திக்க ஆவலாக இருக்கிறோம்.  எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து இணையம் என்ற கடலில் வந்து விழுந்த நதிகள் நாம் ! நம்மிடையே இருக்கலாம் பல வேற்றுமைகள், இருந்தும் ஒன்றிணைகின்றோம்  நட்பு என்ற அற்புதத்தால் !! சகோதர பாசத்தையும், தோழமை அன்பையும், மனித மாண்பையும் போற்றுவோம் !!  

கலந்து கொள்ள இயலாத தோழமைகளிடம் இருந்து வாழ்த்துக்களையும், ஆசிர்வாதங்களையும்  எதிர்பார்கின்றோம்...!

தமிழர்களாய், தமிழால் ஒன்றுபடுவோம் !
அன்பால் மனிதர்களை வசப்படுத்துவோம் ! 
நட்பால் உலகை வெல்வோம் !

வெல்க தமிழ் ! வாழ்க தமிழர்கள் ! வளர்க அவர்தம் புகழ் !


படங்கள் - கூகுள் 
Tweet

57 கருத்துகள்:

 1. பதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துகள்.

  தில்லியிலிருந்து

  வெங்கட் நாகராஜ்

  பதிலளிநீக்கு
 2. என்னோட சார்பாகவும் எல்லோருக்கும் என்னோட வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.இது போன்று ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமைக்கு வருந்துகிறேன்.
  சொந்தங்கள் சந்திப்பு இனிதாக நடைபெற இறைவனை வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
 3. ஊரைப் பற்றிய முன்னுரை அருமை:)! திருவிழா கோலாகலமாக நடக்க வாழ்த்துக்கள்!!!

  பதிலளிநீக்கு
 4. @@ வெங்கட் நாகராஜ்...

  முதலில் வந்து வாழ்த்து சொல்லி உற்சாகபடுத்திய உங்களுக்கு என் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 5. @@ S Maharajan...

  நண்பரே நலமா ? ரொம்ப நாளாக உங்களை காணவில்லை :))

  நெல்லையில் இருந்தால் கண்டிப்பாக கலந்துகொள்வீர்கள் என தெரியும்...உங்களின் வேண்டுதலுக்கு மகிழ்கிறேன்.

  நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 6. @@ ராமலக்ஷ்மி...

  உங்களின் வாழ்த்துக்களை மகிழ்வுடன் ஏற்று கொள்கிறேன் தோழி. நன்றிகள்

  பதிலளிநீக்கு
 7. //இம்சைஅரசன் - பாபு
  நாஞ்சில் மனோ //

  எங்க ரெண்டு பேர் பேரையும் கருப்பாக போட்டு ..நாங்க ரெண்டு பேரும் கருப்பாக இருப்போம்ன்னு ..வஞ்ச புகழ்ச்சில போட்டு இருக்கீங்க சகோ ..நான் கோவமாக இருக்கேன் ....

  பதிவர்களை வரவேற்க ஆவலோடு இருக்கிறேன் ....

  பதிலளிநீக்கு
 8. பெயரில்லா10:35 AM, ஜூன் 14, 2011

  வ உ சி, பாரதி, கட்டபொம்மு - முறையே ஓட்டப்பிடாரம், எட்டயபுரம், பாஞ்சாலகுறிச்சியைச் சேர்ந்தவர்கள். இவ்வூர்கள் தூத்துக்குடிக்கு மிக அருகில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஊர்களாகும்.

  திருனெல்வேலியைச் சேர்ந்த சுப்பிரமணிய சிவா, பரளி சு நெல்லையப்பர் போன்ற விடுதலைபோராளிகளை நீங்களே மறந்து விட்டால் எப்படி ?

  ச‌ர் சி.வி ராம‌னும் பாளைய‌ங்கோட்டைதான்.

  நெல்லையப்பர் கோயிலையும் இந்துக்களையும் விட்டால் வேறென்றுமில்லையா ? கிறுத்த‌வ‌ர்க‌ளுக்கும் இசுலாமிய‌ர்க‌ளுக்கும் நெல்லையில்லையா ?

  என்னவோ போங்கள். நெல்லை என்றால் அல்வா என்பது சரியாகத்தான் இருக்கிறது.


  பதிவர் விழாவுக்கு வாழ்த்துக்கள்.

  நெல்லையைச்சாராதவன்.

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துக்கள், சிரத்தை எடுத்து அத்தனை பேருக்கும் லிங் கொடுத்திருக்கீங்க, நன்றி!

  பதிலளிநீக்கு
 10. இந்தப்பதிவில் எனக்குப்பிடிக்காத ஒரு வரி

  >> இது போன்ற சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது அனுபவித்து கொள்ளவேண்டும்...! (அவரவர் சொந்த செலவில்...?!)

  ஹி ஹி ஜ்ஹி

  பதிலளிநீக்கு
 11. ஆகா, அக்காச்சியும் சந்திப்பிற்கு ரெடி ஆகுறா போல இருக்கே;-))

  பதிலளிநீக்கு
 12. >>
  காலை 10௦.00 மணி --- வரவேற்புரை, பதிவர்கள் ஒரு சுய அறிமுகம்

  குறை சொல்வதற்காக சொல்லலை ஜஸ்ட் சுட்டிக்காட்டல் காலை 10 மணி என மாற்றவும் 100 மணி அல்ல

  பதிலளிநீக்கு
 13. இப்ப எதுக்கு இந்த பில்டப்னா, இனிமேல் பதிவுலகத்திற்கு திருநெல்வேலி என்றால் 'பதிவர்கள் சந்திப்பு' நினைவுக்கு வரணும், வரும்.....!! (இது கொஞ்சம் ஓவர்தான்...!! )//

  உண்மையில் ஊர் வர்ணனையோடு நீங்கள் பகிர்ந்திருப்பது மிக்க மகிழ்ச்சி தருகிறது,
  இப் பதிவினைப் படிக்க வரும் என் போன்ற வெளியூர் பதிவர்களுக்கு உங்கள் ஊரின் சிறப்புக்களை அறியக் கூடிய வாய்ப்பாக இப் பதிவில் வரும் குறிப்புக்கள் இருக்கின்றன,

  பதிலளிநீக்கு
 14. பத்து பேர் முதல் பதினைந்து பேர் வருவார்கள் என்ற நினைத்தோம். ஆனால் வருவதாக விருப்பம் தெரிவித்து வந்த மெயில்களை பார்த்து பிரமித்துவிட்டோம். எங்களின் பொறுப்பு கூடியதாக உணரும் அதே நேரம் மிகவும் சந்தோசமாக அந்நாளை எதிர்பார்க்கிறோம்.//

  அப்போ ஒரு பெரிய ஜன சமுத்திரமே வருதா...
  ஹி...வெள்ளிக் கிழமையை காலைப் பொழுதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 15. காலை 11 .00 மணி --- செல்வாவின் நகைச்சுவை நேரம்//

  ஆஹா...இது அதிரடியா இருக்கே. கண்டிப்பாக இவரைப் பார்த்தே ஆகனும்.

  பதிலளிநீக்கு
 16. இது ஒரு குடும்ப விழா...விரும்பம் உள்ளவர்கள் குடும்பத்துடன் கலந்து கொள்ளலாம்//

  ஐயோ, பார்த்துங்க சிபி மாதிரி பசங்க ஆப்பிசிலை உள்ள முழுப் பேரையுமே கூட்டிக் கிட்டு வந்திடப் போறாங்க.

  பதிலளிநீக்கு
 17. இது போன்ற சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது அனுபவித்து கொள்ளவேண்டும்...! (அவரவர் சொந்த செலவில்...?!) என்ன நான் சொல்றது...?! சரி தானே.....?!!//

  அவ்..என்ன ஒரு டெரர் தனம்....
  இல்லேன்னா முழுப் பதிவர்களும் கிளம்பி வந்திடுவாங்க இல்லே...

  பதிலளிநீக்கு
 18. தமிழர்களாய், தமிழால் ஒன்றுபடுவோம் !
  அன்பால் மனிதர்களை வசப்படுத்துவோம் !
  நட்பால் உலகை வெல்வோம் !

  வெல்க தமிழ் ! வாழ்க தமிழர்கள் ! வளர்க அவர்தம் புகழ் !//

  உங்கள் சந்திப்பு இனிதாக அமைய என் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 19. @@ simmakkal...


  வ.உ.சி,பாரதி, கட்டபொம்மு இவர்கள் எல்லோரும் கோலோச்சிய காலத்தில் நெல்லை பிரிக்கப்படவில்லை...இன்றைக்கும் என்னை போன்றோர் நெல்லையை சேர்ந்தவர்கள் என்று தான் பெருமைபட்டுகொண்டிருக்கிறோம்...இடையில் வந்த நில பிரிவினைகள் பற்றிய வாதங்கள் இந்த பதிவிற்கு தேவையில்லையே...

  //சுப்பிரமணிய சிவா, பரளி சு நெல்லையப்பர் போன்ற விடுதலைபோராளிகளை//

  இவர்கள் மட்டும் அல்ல சிறப்பு வாய்ந்த இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்... ஆனால் எனது இந்த பதிவு நெல்லையை பற்றிய சிறப்பு பதிவு இல்லையே...
  பதிவர்கள் சந்திப்பை அறிவிக்கும் ஒரு அழைப்பிதழ் போன்றது. நெல்லை பற்றியே தெரியாதவர்கள் பலர் இருக்கிறார்கள் அவர்களுக்கு ஒரு அடையாளமாக தான் சில விசயங்களை குறிப்பிட்டேன்.

  //நெல்லையப்பர் கோயிலையும் இந்துக்களையும் விட்டால் வேறென்றுமில்லையா//
  இதற்கும் முந்தைய பதில் தான்.....எந்த பதிவிற்கும் சம்பந்தமில்லாமல் மத சாயத்தை பூசும் மனோபாவம் என்று மாறுமோ...?

  //நெல்லை என்றால் அல்வா என்பது சரியாகத்தான் இருக்கிறது//

  மீடியாக்கள் செய்த வினை இது...! ஒரு சுவையான உணவு பொருளுக்கு தவறான பெயர் வைத்தது மகிழ்ச்சிக்குரிய விஷயம் இல்லை. இதை வைத்து ஊரை அப்பொருள்பட அழைப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

  சில பெயர்களை விட்டதற்காக ரொம்ப வருத்தப்பட்ட நீங்கள், இறுதியில் சொன்னதை வைத்து மிகவும் முரண்பட்டு விட்டீர்களே ??!!

  புரிதலுக்கு மிக்க நன்றி சகோதரரே !

  பதிலளிநீக்கு
 20. பதிவர் சந்திப்பு எந்தவித தடங்களும் இன்றி நன்றாக நடைபெற வாழ்த்துக்கள். நானும் வரவேண்டுமென்று மிகவும் ஆவலாக இருந்தேன் வெள்ளிக்கிழமை என்பதால் ஆபிசில் விடுமுறை கிடைக்கவில்லை அதலால் வரமுடியாத சூழ்நிலை. ஞாயிற்று கிழமையில் வைத்திருந்தால் இன்னும் நிறைபேர் வந்திருப்பார்கள் என நினைக்கிறேன். பரவாயில்லை அடுத்த முறை பார்த்து கொள்கிறேன் மிக்க மகிழ்ச்சி. வருகை புரியும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நிரூபனின் உதவியோடு நாங்கள் லைவாக பார்த்து கொள்கிறோம்

  பதிலளிநீக்கு
 21. //(அவரவர் சொந்த செலவில்...?!)//

  ம்....

  பதிலளிநீக்கு
 22. //காலை 11 .00 மணி --- செல்வாவின் நகைச்சுவை நேரம்/

  இத நினைச்சாதான் அக்கா பயமா இருக்கு :-) எனக்கில்ல ஹி ஹி

  பதிலளிநீக்கு
 23. கோமாளி செல்வா said...

  //காலை 11 .00 மணி --- செல்வாவின் நகைச்சுவை நேரம்/

  இத நினைச்சாதான் அக்கா பயமா இருக்கு :-) எனக்கில்ல ஹி ஹி//

  நாங்கதான்டா பயப்படனும். நீ ஏன் பயப்படுற?

  பதிலளிநீக்கு
 24. @@ இம்சைஅரசன் பாபு...

  கருப்பு கலர் நானா போடல...தானா வந்திருக்கு... :))

  பதிலளிநீக்கு
 25. @@ பன்னிக்குட்டி ராம்சாமி...

  வாழ்த்திற்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 26. @@ சி.பி.செந்தில்குமார் said...

  //இந்தப்பதிவில் எனக்குப்பிடிக்காத ஒரு வரி//

  ஒரு வரிதான பிடிக்கல அப்பாடி தப்பிச்சேன்... :))

  சொல்லபோனால் அந்த வரியே உங்களுக்காக மட்டும் போட்டதுதான் :))
  (போட சொன்னது அண்ணன் )

  பதிலளிநீக்கு
 27. @@ சி.பி.செந்தில்குமார்...

  //காலை 10 மணி என மாற்றவும் 100 மணி அல்ல//

  நடுவில் ஒரு புள்ளி இருக்கே நீங்க பார்க்கலையா ? கண்ணாடியை கழட்டிட்டு பார்க்கவும்.

  பதிலளிநீக்கு
 28. @@ நிரூபன் said...

  //உண்மையில் ஊர் வர்ணனையோடு நீங்கள் பகிர்ந்திருப்பது மிக்க மகிழ்ச்சி தருகிறது,
  இப் பதிவினைப் படிக்க வரும் என் போன்ற வெளியூர் பதிவர்களுக்கு உங்கள் ஊரின் சிறப்புக்களை அறியக் கூடிய வாய்ப்பாக இப் பதிவில் வரும் குறிப்புக்கள் இருக்கின்றன,//

  ஆமாம் நிரூபன் உங்களை போன்றோருக்காகதான் அதை எல்லாம் எழுதினேன்...ஆனால் எங்க ஊர் பெருமையை பற்றி தனியா ஒரு பதிவு போடலாமா என்று யோசிக்கிறேன்.

  //அப்போ ஒரு பெரிய ஜன சமுத்திரமே வருதா...///

  கண் வச்சிடாதிங்க சகோ.

  உங்களின் அழகான பின்னூட்டங்களுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி நிரூபன்.

  பதிலளிநீக்கு
 29. >>காலை 10௦.00 மணி --- வரவேற்புரை, பதிவர்கள் ஒரு சுய அறிமுகம்

  haa haa ஹா ஹா நீங்க தான் நல்லா பார்க்கனும்

  பதிலளிநீக்கு
 30. பதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 31. @@ சசிகுமார் said...

  கலந்துகொள்ளவேண்டும் என்கிற உங்கள் ஆவலை மதிக்கிறேன்...பலரும் குறிப்பிட்டு சொன்ன ஒன்றுதான் ஞாயிற்றுகிழமை வைக்கவேண்டும் என்று...நீங்கள் சொல்வது போல் அடுத்த முறை அதே நாளில் வைத்துவிடுவோம்...

  :))

  நன்றிகள் சசி.

  பதிலளிநீக்கு
 32. @@ சங்கவி said...

  //(அவரவர் சொந்த செலவில்...?!)//

  //ம்....//

  ஆமாம் ம்...!!? :))

  பதிலளிநீக்கு
 33. @@ கோமாளி செல்வா said...

  //இத நினைச்சாதான் அக்கா பயமா இருக்கு :-) எனக்கில்ல ஹி ஹி//

  எங்களுக்கும் பயம் இல்லை...ஒ.கேவா ? :))

  உனக்கு அன்று ஒரு முக்கிய நாளாக அமையபோகிறது...மறக்க முடியாத நாளாகவும்...!!

  அதுக்கு இப்பவே உனக்கு வாழ்த்துக்கள் !!

  பதிலளிநீக்கு
 34. @@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)...

  வாழ்த்திற்கு நன்றி...
  நீங்களும் வர முயற்சி பண்ணுங்கள் ரமேஷ் :)

  பதிலளிநீக்கு
 35. பதிவர் சந்திப்பு விழா வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  இந்தத்தங்கள் பதிவு திருநெல்வேலி அல்வா போல அருமையாக உள்ளது.

  பதிலளிநீக்கு
 36. @@ சி.பி.செந்தில்குமார் said...

  //haa haa ஹா ஹா நீங்க தான் நல்லா பார்க்கனும்//

  மறுபடியும் நீங்களா...?! :))

  வேற யாராவது நல்லா கண்ணு தெரிஞ்சவங்க எங்க இரண்டு பேர் பிரச்னையை தீர்த்து வையுங்களேன் ப்ளீஸ்ஸ்ஸ் :))

  பதிலளிநீக்கு
 37. @@ சே.குமார்...

  வாங்க குமார். நன்றி.

  பதிலளிநீக்கு
 38. @@ வை.கோபாலகிருஷ்ணன்...

  நன்றிகள் சார்...

  பதிலளிநீக்கு
 39. அன்புடன் வணக்கம் . பதிவர் சந்திப்பு மிக்க மகிழ்ச்சி தருகிறது கலந்து கொள்ள வேண்டும் என ஆவல்..சூழ் நிலை அன்று வேறு ஊர் செல்ல அவசியம். ((மத சாயம் பூசும் ஆட்களைகண்டிப்பாக தவிர்த்து விடுங்கள் சகோதரி. ). திருவிழா நன்கு நடக்க வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 40. @@ hamaragana said...

  //பதிவர் சந்திப்பு மிக்க மகிழ்ச்சி தருகிறது கலந்து கொள்ள வேண்டும் என ஆவல்..சூழ் நிலை அன்று வேறு ஊர் செல்ல அவசியம்.//

  ரொம்ப நாள் ஆச்சு எப்படி இருக்கீங்க ? இங்கே பக்கத்தில் நடக்கும் சந்திப்பிற்கு நீங்களும் வந்தால் நன்றாக இருக்கும்...பரவாயில்லை இன்னொரு சந்தர்பத்தில் பார்த்துக்கொள்ளலாம்...சொந்த வேலையை நல்ல விதமாக முடித்துவாருங்கள்.


  //((மத சாயம் பூசும் ஆட்களைகண்டிப்பாக தவிர்த்து விடுங்கள் சகோதரி. )//

  கண்டிப்பாக !

  உங்களின் வருகைக்கும் இந்த வாழ்த்திற்கும் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 41. @@ அப்பாதுரை said...

  //பொறாமையாக இல்லை. :)//

  சரி அப்ப வேறு என்ன ? சந்தோசம் என்று எடுத்துக்கிறேன். :)

  அப்படியே ஒரு வாழ்த்து சொல்லி இருக்கலாமே :)))

  பதிலளிநீக்கு
 42. அன்புடன் வணக்கம் சகோதரி..

  ***ரொம்ப நாள் ஆச்சு எப்படி இருக்கீங்க ? இங்கே பக்கத்தில் நடக்கும் சந்திப்பிற்கு***
  சகோதர வாஞ்சை என்பது இதுதானோ ???ஒரு சகோதரி தனது சகோதரனை நீண்ட நாள் காணாது கண்டபின்பு எழும் பாசாமிகு வார்த்தைகள் (என்னுடன்பிறந்தது.5.சகோதரிகள்]
  நன்றி ...

  பதிலளிநீக்கு
 43. திருநெல்வேலி முன்குறிப்பு அருமை. பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறோம். பல கருத்து பரிமானங்களை பகிர்ந்துகொள்வோம். நன்றி கௌசல்யா.

  பதிலளிநீக்கு
 44. இந்த இனிமையான தருணத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 45. பெயரில்லா11:39 PM, ஜூன் 15, 2011

  பதிவர்கள் பதிவர்கள் நு சொல்றிங்களே . வாசகர்களும் வரலாம் என்று அழைப்பே விடுக்கவிலையே ? எனக்கு திருநெல்வேலி ஆனால் அழைப்பு விடுக்காத காரணத்தால் ????????

  பதிலளிநீக்கு
 46. @@ hamaragana said...

  உங்களுக்கு ஐந்து சகோதரிகளா ? பெரிய சந்தோசமான குடும்பம்...! :))

  நலம் விசாரித்தது என் உண்மையான இயல்பு...இது உங்களுக்கு இவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்தது என்பதை அறிந்து நானும் மகிழ்கிறேன்.

  வாழ்க சகோதரமாண்பு.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 47. @@ FOOD said...

  கடும் வேலைக்கு நடுவிலும் இங்கே வந்து பின்னூட்டம் போட்டதுக்கு நன்றிகள் அண்ணா

  //சிபி மேட்டரில் என்னை வேற இழுத்து விட்டிருக்கீங்க.//

  உண்மையை சொன்னேன் :))

  பதிலளிநீக்கு
 48. @@ Starjan ( ஸ்டார்ஜன் ) said...

  //பதிவர் சந்திப்பு இனிதே நடைபெற வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.//

  நன்றிகள்

  // பல கருத்து பரிமானங்களை பகிர்ந்துகொள்வோம்.//

  கண்டிப்பாக பகிர்ந்துகொள்வோம்

  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 49. @@ Anonymous said...

  //பதிவர்கள் பதிவர்கள் நு சொல்றிங்களே . வாசகர்களும் வரலாம் என்று அழைப்பே விடுக்கவிலையே ? எனக்கு திருநெல்வேலி ஆனால் அழைப்பு விடுக்காத காரணத்தால் ????????//

  வாசகர்களுக்கு அழைப்பு விடுக்கலாம் தான்...ஆனால் மேலிடம் அனுமதி கொடுக்கலையே.

  உங்களின் ஆர்வத்திற்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 50. பெயரில்லா12:30 AM, ஜூன் 17, 2011

  நன்றி .. ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் தோழியே . வாசகர்கள் இல்லாவிட்டால் நீங்க உங்க ப்ளாக் ல ஈ தான் ஓட்ட முடியும் . so எங்களுக்கும் உரிமை வேண்டும் .அடுத்த சந்திப்பில் ஏற்பாடு செய்யுங்கள்

  பதிலளிநீக்கு
 51. ஒன்று கூடல் மகிழ்ச்சியாகவும் பயனுள்ளதாகவும் நடைபெற வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 52. விழா நடந்த விவரம் பத்தி எழுதுங்க.. கூடவே அற்ப கமென்ட் போடும் அனானிக்கு ஒரு செண்டு கொடுத்துறுங்க.. சீப்.

  பதிலளிநீக்கு
 53. @@ Dr.எம்.கே.முருகானந்தன்...

  உங்களை போன்ற நல்ல உள்ளங்களின் வாழ்த்துக்களால் விழா இனிதே நடந்து முடிந்தது.

  உங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 54. @@ அப்பாதுரை...

  நிச்சயம் எழுதுகிறேன்.

  அனானியின் கமெண்டை வெளியிட்ட போதே செண்டு கொடுத்துவிட்டேனே சகோ. :)))

  பதிலளிநீக்கு
 55. எனது ஊரில் நடைபெறும் நிகழ்வு இருந்தும் நான் வர இயலவில்லை... அதனால் வருந்துகிறேன்... உங்கள் சந்திப்பு வெல்ல வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...