வியாழன், ஜூன் 23

9:58 AM
57



கடந்த இரு வாரங்களாக பதிவர் சந்திப்பிற்கான ஏற்பாடுகளை சிந்திக்கவும், செயல்படுத்தவும் நாங்கள் எடுத்த பிரயாசங்கள் பெரிதல்ல என்று நிரூபித்தது நேச நெஞ்சங்களின் வருகை. எத்தனை போன் கால்ஸ், எத்தனை மெயில்கள், சாட்டிங், நேரில் நடந்த சிறு சந்திப்புகள் அனைத்தையும் ஊதித் தள்ளிவிட்டது நண்பர்களின் உற்சாகமும் அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பும்...!!

எப்போதும் எதையோ தேடி ஓடிகொண்டே இருக்கிற இந்த வாழ்க்கையில் நாம் சற்று இளைப்பாறும் ஒரு சோலைவனம், நல்ல நட்புகளின் இந்த சங்கமம் ...! பதிவர்கள் சந்திப்பு என்றாலும் ஒரு குடும்ப விழா போன்று தாத்தா,அப்பா,அக்கா, அண்ணன், தம்பி, அக்கா,தங்கை, நண்பன்,தோழி என்று பல உறவுகள் ஒன்று சேர்ந்தது எனலாம். அன்று பல உறவுகள் புதிதாய் மலர்ந்தது ஒரு இனிய அனுபவம். 

சிறிதும் முன் அறிமுகம் இல்லாத பதிவர்களை தான் நான் கடந்த வெள்ளிகிழமை அன்று (சங்கரலிங்கம் அண்ணா, சித்ரா, பாபு தவிர்த்து) சந்தித்தேன். இருந்தும் பல காலம் பழகியவர்களை போன்று ஒவ்வொருவரும் நடந்த கொண்ட விதம் மீண்டும் மறு சந்திப்பு என்று வரும் என எண்ண வைத்துவிட்டது.  ஆரம்பம் முதல் முடிவு வரை சிறிதும் இடைவெளி இன்றி சிரிப்பு பட்டாசுகள் வெடித்துக்கொண்டே இருந்தன.....

வந்திருந்து சந்திப்பை பெருமை படுத்திய உறவுகளுக்கு நன்றி சொல்வதில் மகிழ்கிறேன் !


முதலில் சங்கரலிங்கம் அண்ணனுக்கு என் பாராட்டுகள்...ஒரே ஊர்காரர் என்றாலும் அறிமுகமானது பதிவுலகம் மூலமாகத்தான் . சில மாதங்களுக்கு முன் அவரது தளத்தை, என் தளத்தில் அறிமுகம் செய்வதில் தொடங்கியது எங்களின் நேச உறவு. விழிப்புணர்வு வேண்டும், சமூக அக்கறை வேண்டும் என்று இணையத்தின் முன் அமர்ந்து குரல் கொடுப்பதுடன் திருப்தி பட்டுகொள்கிறோம், ஆனால் நடைமுறையில் அதை சாதித்துக் கொண்டிருக்கிறார் இவர். ஆரம்பத்தில் பதிவுகளை எழுதுவதுடன் மட்டும் இருந்த இவர் அதன் பின் பல நட்புகளை வளர்த்து இன்று பதிவர்கள் சந்திப்பை வெற்றிகரமாக நடத்தி முடிக்கும் வரை வந்திருக்கிறார் என்பது பெருமையான ஒன்று. அண்ணா உங்களுக்கு என் நன்றிகள்.

பலரும் சந்திப்பில் நடந்தவற்றை ஏற்கனவே பகிர்ந்துவிட்டதால், என் நினைவில் இருப்பவை சிலவற்றை இங்கே சொல்கிறேன்....

Dr.கந்தசாமி சார் - கோயம்புத்தூரில் இருந்து வந்திருந்தார்.  தனது பதிவுகளை மற்றவர்கள்  காபி பேஸ்ட் செய்து கொள்ள அனுமதி வழங்கி இருப்பதாக சொன்னார். 'பிறருக்கு உபயோகமாக இருக்கத்தானே பதிவுகள் எழுதுகிறேன், அதை அவர்கள் எடுத்து கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியே' என்று சொன்னவுடன் கைதட்டல் அதிர்ந்தது. உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த நன்றிகள்.

சீனா ஐயா பல பல பதிவர்களை வலைசரத்தில் அறிமுகம் செய்ய பெரிய காரணமாக இருக்கிறார்...ஆனால் நான் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை என்று தன்னடக்கத்தோடு சொன்னபோது மிக வியந்தோம். வலைச்சரத்தில் உங்களை அறிமுகம் செய்திருக்கிறாங்க என்று எனக்கு மெயில் வந்தபோது அங்கே அறிமுகம் செய்ற அளவிற்கு நாம எழுதுறோமா என்று சிறு மிதப்பு வந்ததென்னவோ உண்மை...! அவர் தலைமை வகித்து சிறப்பித்தமைக்கு என் நன்றிகள் !

பலாபட்டறை சங்கர், மணிஜி - சென்னையில் இருந்து இவ்வளவு தூரம் வந்திருந்து சந்திப்பை பெருமைபடுத்தினார்கள். பதிவுலகத்தின் மீதான தங்களின் பார்வையை/பங்களிப்பை எங்களுடன் பகிர்ந்துகொண்டார்கள். இணையம் என்பது டைரி போன்றது, பல வருடங்கள் கழித்து நாமே இதை எடுத்து படிக்கும் போது கிடைக்கும் நிறைவு மிக பெரிது, மேலும் நமக்கு பின் நம் வாரிசுகள் இதை படித்து தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்றார் சங்கர். சந்திப்பின் இறுதிவரை அப்ப அப்ப தன் கருத்துக்களை தெரிவிக்க தவறவில்லை. கூகுள் பஸ்ஸில் பதிவர்கள் அதிக நேரம் செலவிடுவதால் பதிவுலகத்தில் பதிவுகள் குறைந்து வருகிறது என்பது உண்மைதான், பதிவுகள் எழுதுவதை குறைக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தினார். சங்கர் அவர்களின் கருத்துக்கள் மிக உபயோகமாக இருந்தன, நினைவில் வைத்துக்கொண்டேன்.(முக்கியமாக செந்தில் சாரை நன்றாக உற்சாக படுத்தினார்...!!) என் நன்றிகள் !

செந்தில்குமார் - பலரும் இவரை படாதபாடு படுத்திவைக்க கொஞ்சமும் முகம் சுளிக்காமல் எதிர் கொண்ட பாங்கு இவர் ஒரு தெளிந்த நீரோடை என்பதை காட்டியது. (என்ன செந்தில் சார் ??இது போதுமா? ) அவர் மீது வைக்கும் குற்றசாட்டுகளை எங்கள் முன் பகிர்ந்துகொண்டதுடன் தன்னிலை விளக்கம் கொடுத்தார். உண்மையில் இந்த மாதிரி தன்னை பற்றி மற்றவர் முன் எடுத்துரைக்க எல்லோராலும் இயலாது. ரொம்ப வெளிப்படையாக, இயல்பாக எந்தவித மேல்பூச்சும் இல்லாமல் சொன்ன விதம் அருமை. இந்த சந்திப்பிற்கு பின் வரும் அவரது பதிவுகளில் ஒரு மாற்றம் தெரியும். கண்டுபிடிங்க !!

பதிவு போடாமல் எப்படி இங்கே அதுவும் வெள்ளிகிழமை வந்தார் என்ற என் ஆச்சரியத்தை உடைத்துபோட்டது அடுத்து அவர் சொன்ன வார்த்தை...'இன்னைக்கு போட வேண்டிய பதிவை அப்பவே போட்டு இருப்பாங்க' அட கடவுளே பதிவு போட என்று ஒரு ஆபீஸ் வச்சு நடத்துறார் போல.....!! இவர் ஒருத்தர் இருக்கும் வரை பதிவுலகம் எப்படி சாகும்...வாழும் நன்றாகவே  வாழும்...!! விழாவை நகைசுவையாக கொண்டு சென்றதில் இவரின் பங்கு அதிகம். அதற்காக ஒரு ஸ்பெஷல் நன்றி.


                               செல்வா பக்கத்தில் செந்தில் சார் ! 


பெசொவி- ஒரு வழியாக தனது உண்மையான பெயரை சொல்லிவிட்டார்...தூத்துக்குடியில்  (மத்திய அரசு) வேலை பார்த்து வருவதாக சொன்னதால் நான் சும்மா இருக்காமல் 'அப்ப நல்லதா போச்சு, ஒரு உதவி தேவை படுது, உங்களை பார்க்க வரணும்' என்றேன்...அதற்கு அவரும் 'செய்யலாமே... நீங்க என்னைக்கு வரீங்கன்னு முன்கூட்டியே சொல்லிடுங்க' என்றார். நானும் ஆர்வமாகி 'கண்டிப்பா சொல்லிடுறேனு' சொல்ல, அதுக்கு அவர் 'அப்பத்தான் அன்னைக்கு நான் ஊர்ல இருக்கமாட்டேன்'  சொன்னதும் ரொம்ப வருத்தமா போச்சு. ம்ம்...இருக்கட்டும் சொல்லாம ஒரு நாள் போகணும்...!! நடுநடுவே நகைச்சுவையை வாரி கொட்டிகொண்டே இருந்ததுக்காக  சிரிச்சிட்டே ஒரு நன்றி !



 மத்தவங்க பேச்சை கிண்டல் பண்ணி சிரிச்சிட்டு இவர் மட்டும் ரொம்ப சீரியஸா பேசுறாராம் - பெசொவி 


சித்ரா - ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக பேசக்கூடிய அன்பான ஒரு தோழி. அமெரிக்காவில் இருந்து போனில் அவங்க பேசினா எனக்கு வாய் வலிக்கும் !  அது எப்படின்னு கேட்ககூடாது...ஒரு அரைமணி நேரம் அவங்க கிட்ட பேசி பாருங்க அப்ப தெரியும். ஒரு சோக கதை என்னனா, நானும் அவங்களும் போன வாரம் அண்ணனின் ஆபீசில் வைத்து சந்திப்பு விசயமா ஆலோசனை பண்ணினோம்.....அதற்கு மறுநாள் அந்த ஆபீசை இடிச்சிட்டு இருக்காங்க, 'என்ன அண்ணா ஆச்சு'ன்னு கேட்டா, 'நேத்து நீங்க போன பின்னாடி சுவர் விரிசல் விட்டு ரொம்ப டேமேஜ் ஆகி விட்டது , அதுதான் பில்டிங் முழுதும் இடிச்சிட்டு புதுசா கட்டபோறாங்க' !!?

                                                     
                       என்ன கொடுமை இது...!?

இப்ப அண்ணனின் ஆபீஸ் வேற இடத்தில் இயங்குகிறது. இந்த சந்திப்பு நடக்க ஒரு முக்கிய காரணம் சித்ராவின் நெல்லை வருகை என்பதால் பெரிய நன்றிகள் தோழி.

பாபு - இவருடன் நான்கு மாதங்களாக தான் பேசிட்டு இருக்கிறேன், என்றாலும் ஒரு சகோதர வாஞ்சையுடன் இவர் பேசுவது பல வருடங்கள் பழகியது போன்ற உணர்வை தரும். இந்த சந்திப்பிற்கு இவரது பங்கு அதிகம், கோவில்பட்டியில் இருந்து குடும்பத்துடன் வந்து சந்திப்புக்கான  ஏற்பாடுகளை பேசிவிட்டு சென்றார். சந்திப்பு நடந்த அன்று அவரது கம்ப்யூட்டர்  சென்டரின் பத்தாமாண்டு நிறைவு விழா, அதைவிட இந்த சந்திப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தார். அந்த அன்பிற்கு நன்றி சொன்னால் நல்லா இருக்காது. உங்களை பாராட்டுகிறேன் சகோ.

வெடிவால் சகாதேவன் - இவர் ஒரு சீனியர் பதிவர் என்பதை விட இவரது குடும்பமே பதிவர்கள் குடும்பம் தான், கோமு மேடம், ராமலக்ஷ்மி... இவரது பங்கெடுப்பு சிறப்பாக இருந்தது. இவருக்கு என் நன்றிகள்.


சகாதேவன் சார் பக்கத்தில ஜெயந்த், அட பாபுவை கவர் பண்றாரா ? 


ஷர்புதீன் - எல்லா பிளாக்குக்கும் மார்க் போட்டு கொண்டு சென்றவர் இவர் தான். வித்தியாசமாக இருக்கட்டுமே என்று அப்படி செய்ததாக கூறினார். அவர் பிளாகிற்கு 55 மதிப்பெண் கொடுத்து கொண்டாராம், (அது எப்படி அவருக்கு நாம தானே மதிப்பெண் போடணும் ?!) இவரிடமும் கலகலப்பிற்கு குறைவில்லை. . .இந்த சந்திப்பிற்கு மார்க் போட்டதாக கூறினார்...எத்தனை மார்க் என்பதை சொல்லவில்லை...! அவர யாரும் பார்த்தா கொஞ்சம் கேட்டு சொல்லுங்க. இவரும் அப்ப அப்ப கலாய்ச்சிட்டு இருந்தார். உங்களுக்கு என் நன்றிகள்.   

ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ரத்னவேல் நடராஜன் இவர் தனது மனைவியுடன் வந்திருந்து விழாவை சிறப்பித்தார். இருவருக்கும் என் நன்றிகள்.

பதிவு ரொம்ப பெரிசா போற மாதிரி இருக்கு...அதனால அடுத்த பாகம் போட வேண்டியது தான் வேற வழியில்லை.......பொறுத்துக்கோங்க.

கலந்துரையாடலின் போது கிடைச்ச கொஞ்ச கேப்ல ஹாலை விட்டு வெளியே வந்தேன். அப்போ ரொம்ப சீரியஸா போட்டோகிராபர் நம்ம ஜெயந்த்கிட்ட பேசிட்டு இருந்தார்... அவங்களை கிராஸ் பண்ணும் போது காதில் விழுந்தது (நம்புங்க ஒட்டு கேட்கல !! )

போட்டோகிராபர் - உள்ளே எல்லோரும் மொக்கை மொக்கைனு அடிக்கடி சொல்றாங்களே அப்படினா என்னங்க ?

முதலில் நொந்துபோன ஜெயந்த் பின்பு மெதுவா ரிலாக்சாகி பொறுமையா மொக்கை எனப்படுவது யாதெனில் .....என்று விளக்க ஆரம்பித்தார்...!

போட்டோகிராபர் படபோற அவஸ்தையை எண்ணி வருத்தபட்டுகொண்டே  உள்ளே வந்துவிட்டேன். 

அடுத்த பாகத்தில், இங்கே விடுபட்ட மற்றவர்கள் பற்றியும்...சிறு சமூக சேவை என்று ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தோம், அதன் முழு விவரத்தையும் பகிர்கிறேன்.                       

                           *************************
Tweet

57 கருத்துகள்:

  1. //ஒரு அரைமணி நேரம் அவங்க கிட்ட பேசி பாருங்க அப்ப தெரியும். //

    //'நேத்து நீங்க போன பின்னாடி சுவர் விரிசல் விட்டு ரொம்ப டேமேஜ் ஆகி விட்டது , அதுதான் பில்டிங் முழுதும் இடிச்சிட்டு புதுசா கட்டபோறாங்க' !!?//

    இப்படிப்பேசிப்பேசி, சிரித்து சிரித்து அந்த அதிர்ச்சியிலேயே சுவரில் விரிசல் விழுந்திருக்குமோ!

    [சித்ராவைப்பற்றி நன்கு அறிந்தவன் என்பதால் ஒரு நகைச்சுவைக்காகச் சொல்லியுள்ளேன். Please don't mistake me]

    நெல்லை சந்திப்பு பற்றிய மற்றவ்ர்களின் பதிவை விட தங்களுடையது, வித்யாசமாக, அழகாகத் தெளிவாக, விஷ்யங்களை நன்கு அறிந்து கொள்ள ஏதுவாக அமைந்துள்ளது என்று எனக்குத்தோன்றுகிறது.

    நன்றி; பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. அப்போ நான் மட்டும் தான் பதிவு எழுதாத ஆளா ..?

    பதிலளிநீக்கு
  3. நீங்களும் தொடரும் போட்டுட்டின்களா.... சரி.... தொடர வேண்டியது தான்..

    பதிலளிநீக்கு
  4. அப்போ ரொம்ப ஜாலியா ஒரு (குடும்ப௦)சந்திப்பு நடந்து இருக்கு.கலந்து கொள்ள முடியவில்லை என்று தான் எனக்கு வருத்தம்,அடுத்த சந்திபாவது எனக்கு கிட்டனும்.

    பதிலளிநீக்கு
  5. சிறப்பாக பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிங்க மேம் :)

    பதிலளிநீக்கு
  6. மிகவும் சுவாரசியமான படைப்பு

    பதிலளிநீக்கு
  7. இம்சைஅரசன் பாபு.. said...

    அப்போ நான் மட்டும் தான் பதிவு எழுதாத ஆளா ..?//

    நீ என்ன பதிவராடா? ராஸ்கல்...

    பதிலளிநீக்கு
  8. பெயரில்லா2:29 PM, ஜூன் 23, 2011

    அக்கா நீங்களும் தொடரும் போட்டு முடிச்சு இருக்கீங்க ., அடுத்த பதிவு எப்போ

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துகள் வாழ்த்துகள் ,நன்னிமித்தங்கள் வாழ்வை அர்த்தப் படுத்துகின்றன :)

    பதிலளிநீக்கு
  10. நீங்கள் தொகுத்து வழங்கியுள்ள விதம் அருமைங்க :)

    பதிலளிநீக்கு
  11. மாறுபட்ட சுவாரஸ்ஸமான எழுத்து நடை உங்களுக்கு மேடம், நேரில் பார்த்தது போலவே உணர்கிறேன் பதிவர் சந்திப்பை...

    பதிலளிநீக்கு
  12. நல்ல தொகுப்பு. நன்றி கெளசல்யா:)!

    பதிலளிநீக்கு
  13. >>.(முக்கியமாக செந்தில் சாரை நன்றாக உற்சாக படுத்தினார்...!!)

    ஆஹா .. காதுக்கு எவ்வளவு நல்லாருக்கு.. ஹா ஹா என்னை யாரும் சார்னு மரியாதையா கூப்பிட்டதே இல்லை./ அவன் , இவன் என தான் கூப்பிடுவாங்க.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  14. ஆமா.. இம்புட்டு டீட்டெயிலா நீங்க பதிவு போட்டு கலக்கீட்டீங்கன்னா நாங்க என்ன பண்றது? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  15. பதிவர் சந்திப்பு சூப்பருங்கோ.

    பதிலளிநீக்கு
  16. @@ வை.கோபாலகிருஷ்ணன் said...

    //இப்படிப்பேசிப்பேசி, சிரித்து சிரித்து அந்த அதிர்ச்சியிலேயே சுவரில் விரிசல் விழுந்திருக்குமோ! //

    இது தான் உண்மை :))

    நானும் நகைசுவைக்காக தான் எழுதினேன். அப்புறம் ஏன் தவறா எடுத்துக்க போகிறேன்.

    உங்களின் புரிதலுக்கு ரொம்ப நன்றி சார்.

    வாழ்த்திற்கு மகிழ்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. @@ இம்சைஅரசன் பாபு.. said...

    //அப்போ நான் மட்டும் தான் பதிவு எழுதாத ஆளா ..//

    ஆமாம் சீக்கிரம் எழுதுங்க.

    பதிலளிநீக்கு
  18. @@ சங்கவி...

    வரேன்னு சொன்னீங்க அப்புறம் என்னாச்சு சதீஷ் ?

    பதிலளிநீக்கு
  19. @@தமிழ்வாசி - Prakash said...

    //நீங்களும் தொடரும் போட்டுட்டின்களா.... சரி.... தொடர வேண்டியது தான்//

    ஒரு பதிவுல முடிக்கலாம்னு பார்த்தா பெரிசா வந்துவிட்டது அதுதான் தொடரும் போட்டாச்சு.

    நன்றி பிரகாஷ்

    பதிலளிநீக்கு
  20. @@ S Maharajan said...

    //அப்போ ரொம்ப ஜாலியா ஒரு (குடும்ப௦)சந்திப்பு நடந்து இருக்கு.கலந்து கொள்ள முடியவில்லை என்று தான் எனக்கு வருத்தம்,அடுத்த சந்திபாவது எனக்கு கிட்டனும்.//

    அடுத்த சந்திப்பில் நிச்சயம் நீங்க இருப்பீங்க

    நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  21. நல்ல பதிவு.
    எல்லோரும் முடித்த பிறகு நான் எழுதுகிறேன்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  22. @@ மாணவன்...

    நன்றி மாணவன்

    பதிலளிநீக்கு
  23. @@ கவி அழகன்...

    நன்றிங்க

    பதிலளிநீக்கு
  24. @@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    //நீ என்ன பதிவராடா? ராஸ்கல்...//

    நான் சொல்றேன் பாபு பதிவர் தான்.

    :)))

    பதிலளிநீக்கு
  25. @@ Sathishkumar said...

    //oh madam i miss this meet..//

    வாங்க சதீஷ் நலமா ?

    பதிலளிநீக்கு
  26. @@ கல்பனா...

    வேற வழி ? அவ்வளவு மேட்டர் இருக்கே :))

    நன்றி கல்பனா

    பதிலளிநீக்கு
  27. @@ நேசமித்ரன் said...

    //வாழ்த்துகள் வாழ்த்துகள் ,நன்னிமித்தங்கள் வாழ்வை அர்த்தப் படுத்துகின்றன :)//

    சத்தியம்.

    உங்கள் வருகையும், வாழ்த்தும் மகிழ்வை கொடுக்கிறது.

    நன்றிகள்

    பதிலளிநீக்கு
  28. @@ sakthi...

    நன்றி தோழி.



    @@ இரவு வானம்...

    மிக்க நன்றிகள்



    @@ ராமலக்ஷ்மி...

    நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  29. @@ சி.பி.செந்தில்குமார் said...

    //ஆமா.. இம்புட்டு டீட்டெயிலா நீங்க பதிவு போட்டு கலக்கீட்டீங்கன்னா //

    ஆமாம் முழுசா படிச்சீங்களா ? சும்மா ஒரு டவுட்டு#

    :))

    பதிலளிநீக்கு
  30. @@ கே. ஆர்.விஜயன்...

    நன்றிங்க

    பதிலளிநீக்கு
  31. .//அவர் பிளாகிற்கு 55 மதிப்பெண் கொடுத்து கொண்டாராம், (அது எப்படி அவருக்கு நாம தானே மதிப்பெண் போடணும் ?!)//

    என்னோட டெஸ்டுல எனக்கே 55 மதிப்பெண்தான் என்ற அளவுகோலில் மற்றவர்களுக்கு மார்க்கு போட்டேன்.,

    நடந்த பதிவு சந்திப்பிற்கான மார்குகள்
    பதிவர்களின் நடவடிக்கைகளுக்கு - 75
    உணவுக்கு - 80
    நடத்தியர்வர்களுக்கு - 80

    போதுமா

    பதிலளிநீக்கு
  32. @ FOOD
    //பதிவுன்னா இப்படித்தான் இருக்கணும் என்பதற்கு உதாரணம் உங்கள் பகிர்வு. நன்றி, கௌசல்யா.//

    அப்ப நாங்க எழுதினதெல்லாம் என்னே....

    நாஞ்சில் அண்ணே, சிபி அண்ணே, ஷங்கர் அண்ணே இங்கே வந்து பாருங்க., லிங்கம் அண்ணாச்சி நம்மளை எல்லாம் கவுக்குராறு

    பதிலளிநீக்கு
  33. நல்லா வந்திருக்கு பதிவு கௌசல்யா.

    பதிலளிநீக்கு
  34. அழகான தெளிவான விளக்கங்கள்

    பதிலளிநீக்கு
  35. @@ Rathnavel...

    கண்டிப்பா எழுதுங்க...உங்கள் உணர்வையும் படிக்க ஆவலாக இருக்கிறோம்.

    வருகைக்கு நன்றிகள் சார்.

    பதிலளிநீக்கு
  36. @@ ஷர்புதீன் said...

    //நடந்த பதிவு சந்திப்பிற்கான மார்குகள்
    பதிவர்களின் நடவடிக்கைகளுக்கு - 75
    உணவுக்கு - 80
    நடத்தியர்வர்களுக்கு - 80

    போதுமா//

    ம்...ஒ.கே பரவாயில்லை. ஆனா ஏதோ கோபத்தில போதுமா கேட்கிற மாதிரி இருக்கு. :)

    பதிலளிநீக்கு
  37. @@ FOOD said...

    //பதிவுன்னா இப்படித்தான் இருக்கணும் என்பதற்கு உதாரணம் உங்கள் பகிர்வு.//

    ஏன் அண்ணா இப்படி ? தங்கை என்பதாலா ? சரி சரி...மத்தவங்க சண்டைக்கு வர போறாங்க. பார்த்து சமாளிச்சுகோங்க. :))

    பதிலளிநீக்கு
  38. @@ ஷர்புதீன் said...

    //அப்ப நாங்க எழுதினதெல்லாம் என்னே....

    நாஞ்சில் அண்ணே, சிபி அண்ணே, ஷங்கர் அண்ணே இங்கே வந்து பாருங்க., லிங்கம் அண்ணாச்சி நம்மளை எல்லாம் கவுக்குராறு//

    அடடா ஏன் ஏன் ? எல்லோரையும் கூபிடுரீங்க ? நாங்க பாசமலர்கள் அதுதான் அப்படி சொல்லிட்டார்...கண்டுகாதிங்க ஒ.கே
    :))

    பதிலளிநீக்கு
  39. @@ நாய்க்குட்டி மனசு...

    நன்றி அக்கா

    பதிலளிநீக்கு
  40. @@ middleclassmadhavi...

    வாங்க தோழி. நன்றி.

    பதிலளிநீக்கு
  41. பதிவை படிக்கும்போதே சந்தோஷமா இருக்கு .அப்ப அங்கே இருந்து participate
    செஞ்சவங்களுக்கு சொல்லவே வேணாம் .மொத்தத்தில் fantabulous post.

    பதிலளிநீக்கு
  42. வாழ்த்துக்கள் தோழி,படிக்கும் போதே ரொமப் சந்தோஷமா இருக்கு.பகிர்வுக்கு நன்றி!!

    பதிலளிநீக்கு
  43. பெயரில்லா11:52 PM, ஜூன் 23, 2011

    மேடம் கௌசல்யா

    தேங்க்ஸ் ..., இந்த போஸ்டுக்கு ..,பெ.சொ.வி .,சார் புகை படம் போட்டதற்கு ..,

    ///// அப்ப நல்லதா போச்சு, ஒரு உதவி தேவை படுது, //////

    இது மட்டும் நடக்காது ..புரியும்னு நினைகிறேன்


    @ பெ.சொ.வி

    தல ,,உங்கள நான் பார்த்திருக்கேன் ..,பெரியார் நகர் காய் கறி அங்காடிக்கு வருவீங்கன்னு நினைகிறேன்

    பதிலளிநீக்கு
  44. பெயரில்லா11:57 PM, ஜூன் 23, 2011

    பெ .சொ .வி க்காக

    இரண்டு ஒட்டு ..,இந்த பதிவுக்கு

    பதிலளிநீக்கு
  45. பெயரில்லா12:01 AM, ஜூன் 24, 2011

    '''ஹா ஹா ஹா''' சித்ரா மேடம் வந்திருந்தாங்களா ?

    பதிலளிநீக்கு
  46. பதிவர் சந்திப்பினைச் சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறீங்க.

    சந்திப்பில் கலந்து கொள்ள முடியலையே என்று மனதிற்குள் சின்ன வருத்தம் இருக்கிறது.

    அடுத்த வருடம் கண்டிப்பாகப் பதிவர் சந்திப்பிற்கு வருவேன் என்பதில் ஆவலாக உள்ளேன்.

    பதிலளிநீக்கு
  47. @@ angelin...

    ஆமாம் தோழி, மிக உற்சாகமான ஒரு நிகழ்வு !!

    நன்றி ஏஞ்சல்.

    பதிலளிநீக்கு
  48. @@ S.Menaga...

    உங்களின் ரசனைக்கு நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  49. @@ பனங்காட்டு நரி said...

    //இது மட்டும் நடக்காது ..புரியும்னு நினைகிறேன் //

    புரிகிறது. நடக்காதுனும் தெரியும்.சும்மா ஒரு கிண்டலுக்காக கேட்டேன். :)))

    //''ஹா ஹா ஹா''' சித்ரா மேடம் வந்திருந்தாங்களா ?//

    ஆமாம். சந்திப்பு களைகட்ட அவங்க ஒரு காரணம்.

    இரண்டு ஓட்டா ? அது எப்படி ? :)

    உங்களின் வருகைக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  50. @@ அமைதிச்சாரல்...

    ரொம்ப நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  51. @@ நிரூபன் said...

    //அடுத்த வருடம் கண்டிப்பாகப் பதிவர் சந்திப்பிற்கு வருவேன் என்பதில் ஆவலாக உள்ளேன்.//

    அன்று உங்களின் விருப்பம் நிறைவேற முடியாமல் போனது எங்களுக்கு மிக வருத்தம்.

    அடுத்த வருடமா ? சொல்லமுடியாது அண்ணன் அதுக்கு நடுவில நடத்தினாலும் நடத்திடுவார். :))

    நன்றிகள் நிரூபன்.

    பதிலளிநீக்கு
  52. அக்கா என்னை விட்டுட்டிங்க,பார்த்து செய்யுங்க.

    பதிலளிநீக்கு
  53. நேரில் பார்த்த நிறைவைத் தந்த பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...