Tuesday, January 4

12:28 PM
76


நான் எப்பவும் பதிவுலகம் பத்தி பெருமையாக நினைச்சிட்டு இருப்பேன். கடந்த போஸ்டில் கூட போன வருடத்தில் இனிய நினைவுகள் என்றால் பதிவுலகம்  வந்ததை பற்றிதான் எழுதினேன். இனி வருங்காலத்தில் பதிவுலகம் தான் பலரின் பார்வையில் இருக்கும் என்றே நினைக்க வேண்டியது இருக்கிறது. உதாரணமாக இங்கே வெளியிடப்படும் சினிமா விமர்சனங்கள் தான் ஒரு படத்தின் வெற்றியை நிர்ணயிக்க  கூடிய அளவிற்கு போய்விடலாம். அத்தகைய பதிவுலகத்தின் தற்போதைய ஒரு நிலை வருத்தப்படும் நிலையிலேயே இருக்கிறது.

தரமான பதிவுகள்

பதிவுகளின் அளவு கோள் எப்படி நிர்ணயம் செய்ய படிக்கிறது என்பதில் நம்மிடையே ஒரு தெளிவு இல்லை, குழப்பமே மிஞ்சுகிறது. சிலர் ஹிட்ஸ் அதிகம் வாங்கி இருப்பதை பார்க்கும் மற்றவர் இது எப்படி அவரால் முடிகிறது...நாம இந்த மாதிரி அதிக ஹிட்ஸ் வாங்க என்ன செய்ய வேண்டும்...? ஒரு வேளை நாம  எழுதுற பதிவு நல்லா இல்லையா...
மத்தவங்களுக்கு பிடிக்கலையா என்று என்னை கேட்கும் போது என்னிடம் பதில் இல்லை. இப்படி கேட்டவர்கள் கொஞ்ச நாளில் பதிவு எழுதவே பிடிக்காமல் ஒரு விரக்தியின் உச்சத்தில் போய் விடுவதும் நடக்கிறது இங்கே...?! எங்கேயும் ஒரு சின்ன அங்கீகாரம் இருந்தால் தான் வாழ்க்கை ரசிக்கும்...அது கிடைக்காத போது ஏற்படும் விரக்தி கொஞ்சம் ஆபத்தானது...மன உளைச்சலில் கொண்டு போய் விட்டு விடும்.

இந்த மாதிரியான ஆட்கள் நம்மளை மத்தவங்க கவனிக்கணும் என்பதற்காக மேற்கொள்ளும் ஒரு வழியே ஆபாசமான தலைப்புகளை வைப்பது, பதிவுகளிலும் அதிக பட்ச அநாகரீக வார்த்தைகளை சேர்ப்பது என்பது. தொடக்கத்தில் நல்லா எழுதிக்கொண்டு வரும் சிலர் இந்த ஹிட்ஸ் மோகத்தால் பாதை மாறி விடும் அபாயம் தற்போது அதிகரித்து இருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.  ஒன்று அவர்கள் தங்கள் பாதையை  மாற்றி  கொள்கிறார்கள், இரண்டாவது தங்களது மோசமான பதிவுகளால் பிறரை அந்நிலைக்கு போக மறைமுகமாக தூண்டி விடுகிறார்கள். இது இரண்டுமே சரியல்லவே !!?

என் பிளாக் என் இஷ்டம் !

சிலரின் தவறுகளை நாம் சுட்டி காட்டினால் உடனே அவர்களின் இயலாமை இப்படி தான் வெளிப்படுகிறது , 'இது என்னுடைய தளம்...என் இஷ்டம் நான் எதையும் எழுதுவேன்...உனக்கு பிடிச்சா வா...இல்லைனா வராத...' இப்படி சொல்லி சமாளிக்கிறது  சரிதான். 

'எனக்கு பிடிக்கல நான் வருவது இல்லை, ஆனால் பலரை வரவழைகிறதே உங்களின் கவர்ச்சிகரமான தலைப்புக்கள், பதிவுகள்...?!' வாசகர்கள் எல்லோருமே ஆபாசத்திற்கு அடிமைகள் , இதற்கு மட்டும்  தான் லாயக்கு என்ற உங்களின் கண்ணோட்டத்தை மாற்றுங்களேன்.  உங்கள் ஹிட்ஸ் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக நஞ்சை ஆழமாய் விதைத்து, நீரூற்றி வளர்த்து விடாதீர்கள் தயவு செய்து. (களைச் செடிகள், விஷச் செடிகள் தான் விரைவில் வளர்ந்துவிடும்...? இது இயற்கை !! )

சில விமர்சனங்கள் 

விஷயம் இருக்கிறவங்க எழுதுறாங்க திறமை இல்லாதவங்க ஏன் பொறாமை படுரீங்கனு கூட ஒரு கேள்வி வரும். சரக்கு இருக்கிறவங்க எல்லாம் கொட்டினா பரவாயில்லை, ஆனா...??! தவிரவும் மக்களை திருத்தணும் என்று முடிவு பண்ணிட்டு யாரும் இங்கே எழுத வரல, முதல நாம சரியா இருக்கிறோமா இல்லையா என்றே  தெரியாத போது நாம எப்படி மக்களை திருத்த முடியும்...?!

ஆபாசமாக எழுதுங்கள்

பெண்களை பத்தி கவர்ச்சியா  எழுதியோ, ஆபாச வர்ணிப்பு, ஆபாச படங்களை போட்டு வாசகர்களை நீங்கள் இழுங்கள்...ஆனால் அதற்கு முன் ஒரு காரியம் பண்ணுங்கள், கூகிள்ல adult content warning என்கிற ஒரு வசதி இருக்கிறது அதையும்  போட்டுடீங்கனா ஹிட்ஸ் இன்னும் அதிகமா அள்ளிட்டு போகும். நீங்களும் இந்த ஹிட்ஸ் சாதனை பத்தி பலரிடம் சொல்லி பெருமை பட்டுக்கலாம்...?!! 'பதிவர்கள்' என்கிற போர்வையில் சின்னத்தனமான வேலைகள் செய்வது அநாகரீகம்.    

திரட்டிகள் என்ன செய்யும் ??

திரட்டிகள் என்பது பல பதிவுகளை ஒரே இடத்தில் சேர்த்து தருவது, மற்றும் பதிவர்களை ஊக்கபடுத்துவதற்காக இந்த வார சிறந்த பதிவர்கள் என்பது போல் தேர்ந்து எடுத்து வெளியிடுகிறார்கள். இதில் தவறு என்ன இருக்கிறது ? திரட்டிகள் எதன் அடிப்படையில் இதை முடிவு செய்கிறார்கள் என்பதை விட இது போன்ற திரட்டிகளை சில பதிவர்கள் தங்கள் விருப்பப்படி தங்கள் பக்கமாக திருப்பி கொள்கிறார்கள் என்பதே என் கருத்து. திரட்டிகளையும் அவர்கள் வழிக்கு கொண்டு செல்கிறார்கள்.

ஒரு போஸ்ட் போட்டவுடன் 'போஸ்ட் போட்டு இவ்வளவு நேரம் ஆச்சு, ஏன் வோட் அதிகம் வரல' என்று தங்கள் மனதை போட்டு குழப்பி கொள்ளும் ஒரு சிலரை பார்க்கும் போது எனக்கு பரிதாபமே மிஞ்சுகிறது. அதற்கு மாறாக எழுத்தை ஒரு வேதமாக சுவாசித்து பலவாறு சிந்தித்து எழுதும் பதிவர்கள் இந்த வோட் பற்றி எல்லாம் நினைப்பதே இல்லை...எதிர்பார்ப்பதும்  இல்லை...இந்த மாதிரியான பதிவர்கள் தான் அநேகம் பேர் இருக்கிறார்கள். 

வேண்டுகோள் 

உங்கள் தளம் எதையும் எழுதிட்டு போங்க, ஆனால் ஹிட்ஸ் புராணம் பாடி பிற பதிவர்களின் மனதையும் அவர்களின் எழுத்தையும் நோகடிக்காதீர்கள்.  

எந்தவொரு பதிவுக்கும்  நல்லா இருக்கு, அருமை இந்த மாதிரி டெம்பிளேட் கமெண்ட்  வருவதை விட காரசாரமான கருத்துக்களை பின்னூட்டமாக பார்க்கும் போது தான் பதிவின் வீரியம் எந்த அளவிற்கு சென்றடைந்து இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.  அதனால் ஹிட்ஸ் பத்தி கவலை படுவதை விட்டு விட்டு நல்ல விசயங்களை எப்படி எழுதலாம் என்பதை பற்றி நினைப்பது ஆரோக்கியமான மன நிலைக்கு நல்லது.  

Tweet

76 comments:

 1. //ஹிட்ஸ் பத்தி கவலை படுவதை விட்டு விட்டு நல்ல விசயங்களை எப்படி எழுதலாம் என்பதை பற்றி நினைப்பது ஆரோக்கியமான மன நிலைக்கு நல்லது.//

  வரவேற்கத்தக்க வரிகள்...

  மேலும் பதிவுலகம் இன்று ஒரு புகழ்போதையில் பயணப்படுகிறது என்பது என் கருத்து...

  ReplyDelete
 2. இதை பற்றி எனது கருத்துகள் தனிப் பதிவாக சொல்கிறேன். புகழ் என்னும் போதை தலையில் ஏறிவிட்டால் பாதை மாறும்

  ReplyDelete
 3. முற்றிலும் உடன்படுகிறேன்..

  ஹிட்ஸ் பதிவர்களுக்கு ஊக்கம் தருவதாக இருந்தாலும்,அது காலப்போக்கில் போதையாக மாறுவது கொடுமைதான்..

  நல்ல பதிவுகளும்,பதிவர்களும் அதை சட்டை செய்வதில்லை.அப்படி மனங்கொள்ள ஆசை இருக்கவே செய்கிறது...

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 4. //எழுத்தை ஒரு வேதமாக சுவாசித்து பலவாறு சிந்தித்து எழுதும் பதிவர்கள் இந்த வோட் பற்றி எல்லாம் நினைப்பதே இல்லை...எதிர்பார்ப்பதும் இல்லை...இந்த மாதிரியான பதிவர்கள் தான் அநேகம் பேர் இருக்கிறார்கள்.//

  வரவேற்கத்தக்க வரிகள்...

  ReplyDelete
 5. சரியான நேரத்தில் வந்த சரியான இடுகை. பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 6. பதினைந்து நிமிட பிரபலம் என்று சுஜாதா அவர்கள் சொன்னது இப்போது சிலருக்கு மன உளைச்சலில் கொண்டு சேர்த்து விட்டிருக்கிறது.. கொடூரம்..

  ReplyDelete
 7. //உங்கள் தளம் எதையும் எழுதிட்டு போங்க, ஆனால் ஹிட்ஸ் புராணம் பாடி பிற பதிவர்களின் மனதையும் அவர்களின் எழுத்தையும் நோகடிக்காதீர்கள். //

  வெற்றிகரமான இரண்டாவது நாள் போஸ்டர் அடித்தால் தானே படம் ஓட்ட முடியும்.
  :) எல்லாம் வெளம்பரம் தான் நமக்கு நட்டம் இல்லை என்றால் பொறுத்துக் கொள்ளலாமே

  ReplyDelete
 8. //எழுத்தை ஒரு வேதமாக சுவாசித்து பலவாறு சிந்தித்து எழுதும் பதிவர்கள் இந்த வோட் பற்றி எல்லாம் நினைப்பதே இல்லை//

  மற்றதெல்லாம் ஓகே...இது டூ மச்..... அங்காடித் தெருவில் கடை போட்டுவிட்டு மத்தவங்க கூச்சல் போட்டால் எனக்கு கூட்டம் வரமாட்டாங்கன்னு சொன்னா சரியா

  ReplyDelete
 9. சொல்ல வந்த விசயத்தை தெளிவாகவும் ரத்தின சுருக்கமாகவும் சொல்லியிருக்கீங்க....

  ஆனால் என்று தீரும் இந்த ஹிட்ஸ் மோகம் என்று தெரியவில்லை ஒருசில பதிவர்கள் இதற்கு அடிமையாயி கிட்டதட்ட ஒருவித மனநோயாளியாகவே மாறி வருகின்றனர்.

  ReplyDelete
 10. உண்மையான வார்த்தைகள், உண்மையான பதிவு

  ReplyDelete
 11. சரியான நேரத்தில்..சரியான,அழுத்தமான பதிவு...

  ReplyDelete
 12. //எங்கேயும் ஒரு சின்ன அங்கீகாரம் இருந்தால் தான் வாழ்க்கை ரசிக்கும்...அது கிடைக்காத போது ஏற்படும் விரக்தி கொஞ்சம் ஆபத்தானது...மன உளைச்சலில் கொண்டு போய் விட்டு விடும்.//

  உண்மைதான் ஒரு மனிதனுக்கு பாராட்டுகளும் அங்கீகாரமும்தான் தனது படைப்பிற்கு கிடைக்கும் மிகப்பெரிய வெற்றியாக நினைக்கிறான் இதைதான் எனது தளத்திலும் குறிப்பிட்டுள்ளேன்:

  பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

  ReplyDelete
 13. சரியாச் சொன்னீங்க கௌசல்யா அக்கா. குறுகியகாலத்தில் புகழ் பெறணும் என்ற குறிக்கோளில் என்ன செய்கிறோம் என்றே தெரியவில்லை அவர்களுக்கு.

  சரியான சாட்டையடி., நல்ல பகிர்வு.

  ReplyDelete
 14. >>>>எங்கேயும் ஒரு சின்ன அங்கீகாரம் இருந்தால் தான் வாழ்க்கை ரசிக்கும்.

  correct

  ReplyDelete
 15. >>>
  ஒரு போஸ்ட் போட்டவுடன் 'போஸ்ட் போட்டு இவ்வளவு நேரம் ஆச்சு, ஏன் வோட் அதிகம் வரல' என்று தங்கள் மனதை போட்டு குழப்பி கொள்ளும் ஒரு சிலரை பார்க்கும் போது எனக்கு பரிதாபமே மிஞ்சுகிறது.

  u r update the blog world and u r becoming a minad reader of the bloggers. good

  ReplyDelete
 16. இந்த நேரத்தில் இணைய நட்பு பற்றியும் சொல்ல வேண்டும்:

  இனையம் என்பது கண்ணுக்கு தெரியாத உயிர்கொல்லி கவனமாயிருங்கள் நயவஞ்சகர்கள் நாகரீகமாக பேசி உங்கள் தலை எழுத்தை மாற்றிவிடுவார்கள், இனைய வழியிலான நட்பு என்றால் கொஞ்சம் கவணமாக இருங்கள் அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் காரணம் இங்கு இருவருக்குமே முக மூடி உண்டு.

  இது எனது பதிவுலக ஆசான் ஜிஎஸ்ஆர் சொன்னது, நண்பர்களிடமும் பகிர்ந்துகொள்கிறேன்

  நட்பு தேவைதான் அது உண்மையாகவும் நாகரிகமாகவும் இருந்தால்தான் அனைவருக்கும் நல்லது

  ReplyDelete
 17. >>> அதனால் ஹிட்ஸ் பத்தி கவலை படுவதை விட்டு விட்டு நல்ல விசயங்களை எப்படி எழுதலாம் என்பதை பற்றி நினைப்பது ஆரோக்கியமான மன நிலைக்கு நல்லது.  all of us must realize these lines.

  good post u did

  ReplyDelete
 18. சரியா சொல்லிருக்கீங்க கௌசல்யா.. எல்லோரும் ஒரு தடவை சிந்தித்து பார்க்க வேண்டியது.‌

  ReplyDelete
 19. நல்ல பதிவு!

  ReplyDelete
 20. Don't take blogging seriously, unless and until you gonna make money out of it.

  ReplyDelete
 21. நீங்கள் சொல்வது உண்மை தான் சகோ.. தரமான பதிவுகள் என்று நிலைத்திருக்கும்..

  ReplyDelete
 22. // ஹிட்ஸ் பத்தி கவலை படுவதை விட்டு விட்டு நல்ல விசயங்களை எப்படி எழுதலாம் என்பதை பற்றி நினைப்பது ஆரோக்கியமான மன நிலைக்கு நல்லது//

  சரியாக சொன்னீர்கள்.இன்று தரமான பதிவுகளுக்கு வரவேற்பு குறைவாகவே காணப்படுகின்றது.


  காவலன் படத்துக்கு மீண்டும் ஆப்பு

  ReplyDelete
 23. அருமையான பதிவு அக்கா. இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த ஹிட்ஸ் ஆல் ஒரு பயனும் இல்லை.

  ReplyDelete
 24. உண்மைல யாருக்கும் நேரம் என்பது இல்லாம போயிட்டு இருக்கு அதுனால தான் இந்த பின்னூட்டத்துல நாலு வார்த்தைல பதில் போட்டுட்டு போறாங்க.

  நம்ம சொல்றத மத்தவங்க கேட்டுதான் ஆகணும்கறது இல்ல....

  அதே நேரத்துல சொல்ல வந்த விஷயத்த நெத்தியடியா அரைப்பக்க விஷயமா சொன்ன கூட நல்லது - இது தான் என் பாலிசி இத்க்காக ஒட்டு எவ்ளோ வந்து இருக்கு என்று நான் பார்த்தது இல்ல அதே நேரத்துல பின்நூட்டம்கிற பொக்கிஷம் என்ன ஆச்சிங்கரத மறக்க முடியல!

  ReplyDelete
 25. புது பதிவரான எனக்கு உங்கள் பதிவு சிந்திக்க வைக்கிறது. நன்றி.

  ReplyDelete
 26. பதிவுலகில் வருபவர் அனைவருக்குமே ஆரம்பத்தில் இதில் ஆர்வம் இருக்கும். காலம் செல்ல செல்ல புரிந்து கொள்வார்கள்..

  நல்ல பகிர்வு சகோ.

  ReplyDelete
 27. உங்க கருத்து சரியே... ஆனா இதை மற்றவர்கள் சரிசெய்ய இயலாது... அவர்களாக மாறினால்தான் உண்டு.

  ReplyDelete
 28. "எந்தவொரு பதிவுக்கும் நல்லா இருக்கு, அருமை இந்த மாதிரி டெம்பிளேட் கமெண்ட் வருவதை விட காரசாரமான கருத்துக்களை பின்னூட்டமாக பார்க்கும் போது தான் பதிவின் வீரியம் எந்த அளவிற்கு சென்றடைந்து இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது".

  மிகச் சரியான வரிகள். சமூக அக்கறையுள்ளவர்களால் மட்டுமே சிறந்த படைப்புகளையும் எழுத முடியும்; பின்னூட்டங்களையும் போடமுடியும். சமூகத்தின்பால் அக்கறைகொண்டவர்கள் அதிகம் பேர் பதிவுலகை நோக்கி வரும்பட்சத்தில் மொக்கைகள் எல்லாம் கருகிப்போகும்.

  ஊரான்.
  www.hooraan.blogspot.com

  ReplyDelete
 29. ரொம்ப லேட் ஆகி வந்து விட்டேன் ...அவசியமான பதிவு ..நானும் எழுதனும்னு நினைச்சிருக்கேன் ...பாப்போம் ரொம்ப வேலையா இருக்கு ....

  ReplyDelete
 30. சரியாகச் சொன்னீர்கள்...100 நல்ல வாசகர்கள் இருந்தாலே போதும், நாம் உற்சாகமாய் எழுத.

  ReplyDelete
 31. புட்டு புட்டு வச்சுருக்கீங்க!!!!!!

  இனியாவது திருந்துனா சரி!!!

  ReplyDelete
 32. அருமையாக எடுத்து கூறியுள்ளீர்கள்.எனக்கு எப்பொழுதும் ஹிட்ஸ் -சை விட கமென்ட்ஸ் அதிகம் வரும்.ஒரு சிலரின் கமெண்ட்சில் அவங்க கமென்ட்ஸ் தான் அதிகம் இருக்கும்.கமென்ட்ஸ் ,ஹிட்ஸ் இதில் என்ன இருக்கு?நம் மன திருப்திக்காக பொழுது போக்கிற்காக ப்ளாக் எழுதறோம்,அதில் உள்ள பொறாமை,போட்டி இது எனக்கு பிடிப்பது இல்லை.இப்ப இருக்கிற பதிவுலக அரசியலை புரிந்து கொள்ள முடியலை.நேரம் கிடைக்கும் பொழுது கண்ணில் படும் பதிவுகளை படித்து ஒட்டு போடுவதும்,யாராவது வந்தால் அவங்க ப்ளாக் நேரம் கிடைக்கும் பொழுது போய் வருவதும் தான் நான் இப்போதைக்கு செய்து வருகிறேன்.

  ReplyDelete
 33. மிகச்சரியான் இடுகை.

  ReplyDelete
 34. WELL SAID KOUSALYA.
  SARIYANA NERATHIL NETHIYADI PADHIVU.
  .
  THANKS FOR YOUR NEW YEAR WISHES

  ReplyDelete
 35. ரெம்ப அழகா சொன்னீங்க தோழி... இந்த நேரத்தில் அவசியமான இடுகை தான்... தேங்க்ஸ்

  ReplyDelete
 36. // நல்லா இருக்கு, அருமை இந்த மாதிரி டெம்பிளேட் கமெண்ட் வருவதை விட காரசாரமான கருத்துக்களை பின்னூட்டமாக பார்க்கும் போது தான் பதிவின் வீரியம் எந்த அளவிற்கு சென்றடைந்து இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.//


  இது நடைமுறைக்கு ஒத்து வராது., படிக்கும் அனைவரும் விவாதம் செய்வார்கள் என்று எதிர்பார்க்க கூடாது. பெரும்பாலான பதிவுகளில், எதிர் கருத்து என்று சொன்னாலே, கூட்டமாய் வந்து எதிர் கருத்து சொன்னவரை முடிந்தவரை தாக்கும் மனப்பான்மை தான் உள்ளது. அது மாறினால்தான் ஆரோக்யமான விவாதம் வரும்

  ReplyDelete
 37. //ஹிட்ஸ் பத்தி கவலை படுவதை விட்டு விட்டு நல்ல விசயங்களை எப்படி எழுதலாம் என்பதை பற்றி நினைப்பது ஆரோக்கியமான மன நிலைக்கு நல்லது.//

  வரவேற்கத்தக்க வரிகள்...
  ஆரோக்கியமான பதிவுலகம் இப்ப ஹிட்ஸ் போதையில் கொஞ்சம் கொஞ்சமாக அமுங்கிக் கொண்டிருக்கிறது... இதற்கு காரணம் சில திரட்டிகளிம் சித்து வேலைகள்தான்....
  தரமான பதிவுகள் இங்கே தரமிழந்து கொண்டு வருகின்றன.
  நாமாக மாறாவிட்டால் நாளை என்பது கேள்விக்குறிதான்.

  ReplyDelete
 38. @@ சங்கவி...

  சீக்கிரமே இந்த புகழ் போதையில் இருந்து வெளிவந்து விடுவோம் என்றே தோன்றுகிறது.

  நன்றி சகோ.

  ReplyDelete
 39. @@ எல்.கே...

  உங்களின் பதிவை விரைவில் எதிர்பார்கிறேன்...

  நன்றி கார்த்திக். :))

  ReplyDelete
 40. @@ RAZIN ABDUL RAHMAN said...  //ஹிட்ஸ் பதிவர்களுக்கு ஊக்கம் தருவதாக இருந்தாலும்,அது காலப்போக்கில் போதையாக மாறுவது கொடுமைதான்..//

  எதுவும் அளவுடன் இருந்தால் நல்லதே.

  உங்களின் முதல் வருகைக்கு நன்றி ரஜின்.

  ReplyDelete
 41. @@ Harini Nathan ...

  வருகைக்கு நன்றி தோழி.


  @@ வெங்கட் நாகராஜ்...

  கருத்திற்கு நன்றி சகோ.

  ReplyDelete
 42. @@ Balaji Saravana ...

  //பதினைந்து நிமிட பிரபலம் என்று சுஜாதா அவர்கள் சொன்னது இப்போது சிலருக்கு மன உளைச்சலில் கொண்டு சேர்த்து விட்டிருக்கிறது.. //

  உங்களின் இந்த தகவலுக்கும் கருத்திற்கும் நன்றி பாலா.

  ReplyDelete
 43. @@ கோவி.கண்ணன் said...

  //எல்லாம் வெளம்பரம் தான் நமக்கு நட்டம் இல்லை என்றால் பொறுத்துக் கொள்ளலாமே//

  என் வீடு பாதுகாப்பாய் இருக்கிறது என்ற மனநிலைதானே எங்கேயும் நிலவுகிறது.

  //அங்காடித் தெருவில் கடை போட்டுவிட்டு மத்தவங்க கூச்சல் போட்டால் எனக்கு கூட்டம் வரமாட்டாங்கன்னு சொன்னா சரியா//

  நீங்களே அங்காடி தெருன்னு தெளிவா சொல்லிடீங்க.

  கூச்சல் கூட போட வேண்டாம், கடை முன் சின்னதா ஒரு போர்ட் (என் பதிவில் சொல்லி இருப்பேன்)வச்சா கூட போதும் கூட்டம் வந்திடும்.

  அது வியாபாரம் இது நாகரீகமற்ற விளம்பரம்...

  உங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோதரரே.

  ReplyDelete
 44. @@ மாணவன் said...


  //ஆனால் என்று தீரும் இந்த ஹிட்ஸ் மோகம் என்று தெரியவில்லை ஒருசில பதிவர்கள் இதற்கு அடிமையாயி கிட்டதட்ட ஒருவித மனநோயாளியாகவே மாறி வருகின்றனர்.//

  அந்த மனநோயாளிகள் பெருகி விட கூடாது. சுதாரித்து கொள்ள வேண்டும்.

  கருத்திற்கு நன்றி

  ReplyDelete
 45. @@ இரவு வானம்...

  கருத்திற்கு நன்றிங்க.  @@ ஆனந்தி.. said...

  //சரியான நேரத்தில்..சரியான,அழுத்தமான பதிவு...//

  புரிதலுக்கு நன்றி தோழி.

  ReplyDelete
 46. @@ மாணவன் said ...


  //தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.//

  நல்ல கருத்துக்கள். தவறுகளை சுட்டி காட்டுவதற்காக எழுதப்பட்ட பதிவு தான் இது. உங்கள் தளத்தில் எழுத பட்டதை இங்கே எடுத்து சொன்னதிற்கு மீண்டும் ஒரு முறை என் நன்றிகள்.

  ReplyDelete
 47. @@ மின்மினி RS said...

  //குறுகியகாலத்தில் புகழ் பெறணும் என்ற குறிக்கோளில் என்ன செய்கிறோம் என்றே தெரியவில்லை அவர்களுக்கு.//

  ஒரு கட்டத்தில் இது அவர்களுக்கே சலித்துவிடும். மாறுவார்கள்...

  கருத்திற்கு நன்றி தோழி.

  ReplyDelete
 48. சரியா சொன்னீக்க. சரியான நேரத்தில் தேவையான பதிவு.

  ReplyDelete
 49. @@ சி.பி.செந்தில் குமார்...

  //this is a hit post about a hit post.//

  அட என்னங்க இது, என்னையும் இந்த லிஸ்ட்ல சேர்த்தாச்சா ??

  //u r update the blog world and u r becoming a minad reader of the bloggers. good//

  வஞ்ச புகழ்ச்சி போல இருக்கு...!? நான் ரொம்ப சாதாரணமானவள் நண்பரே. எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன். mind reader அப்படின்னு எல்லாம் சொல்லி ஓரம் கட்டிடாதிங்க. :)))

  //all of us must realize these lines.//

  exactly !! thank u friend

  ReplyDelete
 50. @@ மாணவன் said...

  //நட்பு தேவைதான் அது உண்மையாகவும் நாகரிகமாகவும் இருந்தால்தான் அனைவருக்கும் நல்லது//

  சரிதான். இணைய நட்பு பத்தி நானும் எழுதி இருக்கிறேன் சகோ. உங்களின் பகிர்வுக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 51. //எழுத்தை ஒரு வேதமாக சுவாசித்து பலவாறு சிந்தித்து எழுதும் பதிவர்கள் இந்த வோட் பற்றி எல்லாம் நினைப்பதே இல்லை...எதிர்பார்ப்பதும் இல்லை...இந்த மாதிரியான பதிவர்கள் தான் அநேகம் பேர் இருக்கிறார்கள்.//

  உண்மை....

  ReplyDelete
 52. @@ Starjan ( ஸ்டார்ஜன் ) said...

  //எல்லோரும் ஒரு தடவை சிந்தித்து பார்க்க வேண்டியது.‌//

  நீங்க சொல்வது சரிதான்.

  நன்றி நண்பரே.

  ReplyDelete
 53. @@ என். உலகநாதன்...

  உங்களின் வருகைக்கு நன்றிங்க.


  @@ Geetha6...

  வருகைக்கு நன்றி.


  @@ வார்த்தை said...

  //Don't take blogging seriously, unless and until you gonna make money out of it.//

  உங்களுக்கு புரியுது...ம்...கருத்திற்கு நன்றி.


  @@ வினோ said...

  //. தரமான பதிவுகள் என்று நிலைத்திருக்கும்..//

  கருத்துக்கு நன்றி வினோ.

  ReplyDelete
 54. @@ டிலீப் said ...

  //இன்று தரமான பதிவுகளுக்கு வரவேற்பு குறைவாகவே காணப்படுகின்றது.//

  நாம எல்லோரும் சேர்ந்து அந்த மாதிரியான பதிவுகளுக்கு சென்று படித்து நம் கருத்துக்களை அங்கே பதிவு செய்வோம். நன்றி

  ReplyDelete
 55. @@ சசிகுமார் said...

  //இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த ஹிட்ஸ் ஆல் ஒரு பயனும் இல்லை.//

  நீங்க இதை முறைப்படி புரிந்தவர் என்பதால் நீங்க சொல்லும் போது புரிதல் மிக அதிகம் சசி.

  நன்றி

  ReplyDelete
 56. @@ விக்கி உலகம் said...

  //உண்மைல யாருக்கும் நேரம் என்பது இல்லாம போயிட்டு இருக்கு அதுனால தான் இந்த பின்னூட்டத்துல நாலு வார்த்தைல பதில் போட்டுட்டு போறாங்க.//

  அது என்னவோ சரிதான். நேரத்தின் பின்னாடி(முன்னாடி) அதை விட வேகமா நாம் ஓடிட்டு இருக்கிறோம்.

  //நம்ம சொல்றத மத்தவங்க கேட்டுதான் ஆகணும்கறது இல்ல..//

  கண்டிப்பா எதையும் யார் மீதும் திணிக்கமுடியாது. அதே நேரத்தில் மத்தவங்களையும் குறை சொல்ல கூடாது என்று நாம கட்டாய படுத்த முடியாதே...

  //அதே நேரத்துல சொல்ல வந்த விஷயத்த நெத்தியடியா அரைப்பக்க விஷயமா சொன்ன கூட நல்லது - இது தான் என் பாலிசி இத்க்காக ஒட்டு எவ்ளோ வந்து இருக்கு என்று நான் பார்த்தது இல்ல அதே நேரத்துல பின்நூட்டம்கிற பொக்கிஷம் என்ன ஆச்சிங்கரத மறக்க முடியல!//

  நிச்சயமா பின்னூட்டம் என்பது ஒரு பொக்கிஷம்தான். உங்களின் இந்த அருமையான கருத்திற்கு என் பாராட்டுகளும் நன்றிகளும்...

  தொடர்ந்து வருகை தாருங்கள்...

  ReplyDelete
 57. @@ பன்-பட்டர்-ஜாம் said...

  //புது பதிவரான எனக்கு உங்கள் பதிவு சிந்திக்க வைக்கிறது. நன்றி.//

  மகிழ்கிறேன் உங்களை மாதிரியான புது பதிவர்கள் ஹிட்ஸ் பின்னே போய்விட கூடாது என்பதற்காகவே தான் இந்த பதிவு.

  உங்களின் முதல் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 58. @@ நிகழ்காலத்தில்... said...

  //பதிவுலகில் வருபவர் அனைவருக்குமே ஆரம்பத்தில் இதில் ஆர்வம் இருக்கும். காலம் செல்ல செல்ல புரிந்து கொள்வார்கள்..//

  இதற்கு முன் சொன்ன பதிலில் உங்களுக்கு புரிந்து இருக்கும் என்று நம்புகிறேன் சகோ.

  புரிதலுக்கு நன்றி

  ReplyDelete
 59. @@ சி. கருணாகரசு said...

  //ஆனா இதை மற்றவர்கள் சரிசெய்ய இயலாது... அவர்களாக மாறினால்தான் உண்டு.//

  ஊதுற சங்கை ஊதியாச்சு....கேட்கிறவர்கள் செவிகள் கேட்கட்டும்...

  நன்றிங்க.

  ReplyDelete
 60. @@ ஊரான் said...

  //சமூக அக்கறையுள்ளவர்களால் மட்டுமே சிறந்த படைப்புகளையும் எழுத முடியும்; பின்னூட்டங்களையும் போடமுடியும்.//

  சமூக அக்கறை கொண்டவர்கள் தான் நிறைய இருக்கிறார்கள்... என்ன ஒன்னு பார்வைகள் தான் வேறு வேறு !!?

  //சமூகத்தின்பால் அக்கறைகொண்டவர்கள் அதிகம் பேர் பதிவுலகை நோக்கி வரும்பட்சத்தில் மொக்கைகள் எல்லாம் கருகிப்போகும்.//

  எனக்கு இந்த மொக்கைகள் என்பதில் கருத்து வேறுபாடு நிறைய உண்டு...எதை அப்படி சொல்கிறோம்...? இது குறித்தும் ஒரு பதிவு எழுத வேண்டும் என்று யோசிக்க வைக்கிறது உங்களின் பின்னூட்டம்...

  முதல் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 61. @@ இம்சைஅரசன் பாபு.. said...

  //நானும் எழுதனும்னு நினைச்சிருக்கேன் ...பாப்போம் ரொம்ப வேலையா இருக்கு //

  அப்படியா...??பேசாம இந்த தலைப்பிலும் ஒரு தொடர் பதிவு போட்டு விடுவோமா பாபு...??!!

  ReplyDelete
 62. @@ செங்கோவி said...

  //100 நல்ல வாசகர்கள் இருந்தாலே போதும், நாம் உற்சாகமாய் எழுத.//

  வாசகர்கள் என்பவர்களில் முதலில் வாசிப்பவர்கள் பதிவர்கள் தான்...வாசகர்களை நாம திசை திருப்பி விடாமல் இருந்தாலே போதும்...

  உங்களின் முதல் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 63. @@ ஆமினா said...

  // புட்டு புட்டு வச்சுருக்கீங்க!!!!!!

  புட்டா எங்கப்பா...?!! :))

  //இனியாவது திருந்துனா சரி!!!//

  திருந்திற அளவுக்கு பெரிய தவறு இல்லபா...கொஞ்சம் மாறினா போதும் அவ்வளவு தான்.

  ReplyDelete
 64. @@ asiya omar said...

  //கமென்ட்ஸ் ,ஹிட்ஸ் இதில் என்ன இருக்கு? நம் மன திருப்திக்காக பொழுது போக்கிற்காக ப்ளாக் எழுதறோம்,அதில் உள்ள பொறாமை,போட்டி இது எனக்கு பிடிப்பது இல்லை.இப்ப இருக்கிற பதிவுலக அரசியலை புரிந்து கொள்ள முடியலை.//

  என்ன தோழி செய்வது ? சில விரும்ப தகாத நிகழ்வுகள் இங்கு நடக்கத்தான் செய்கின்றது...சமாளித்து தான் ஆகவேண்டும்.

  //நேரம் கிடைக்கும் பொழுது கண்ணில் படும் பதிவுகளை படித்து ஒட்டு போடுவதும்,யாராவது வந்தால் அவங்க ப்ளாக் நேரம் கிடைக்கும் பொழுது போய் வருவதும் தான் நான் இப்போதைக்கு செய்து வருகிறேன்.//

  நானும் அந்த மாதிரிதான் செய்தது கொண்டு வருகிறேன். முடிந்தவரை தெரிந்தவர்களின் தளம் பக்கம் சென்று விடுவேன்.

  உங்கள் எண்ணங்களை இங்கே பகிர்ந்ததுக்கு நன்றி தோழி.

  ReplyDelete
 65. @@ Jaleela Kamal ...

  புரிதலுக்கு நன்றி தோழி.

  ReplyDelete
 66. @@ angelin ...


  புரிதலுக்கு மகிழ்கிறேன் தோழி.


  @@ அப்பாவி தங்கமணி...

  மிக்க நன்றி தோழி.


  @@ vanathy ...

  நன்றி வாணி.  .

  ReplyDelete
 67. @@ Anonymous said...


  //இது நடைமுறைக்கு ஒத்து வராது., படிக்கும் அனைவரும் விவாதம் செய்வார்கள் என்று எதிர்பார்க்க கூடாது.//

  நான் குறிப்பிட்டது முக்கியமான நல்ல, விழிப்புணர்வு போன்ற பதிவுகளில் கருத்துக்களை முன் வைத்து விவாதம் செய்வது நன்று என்பதே...

  கவிதைகளில் காரசாரமான விவாதம் எப்படி செய்ய முடியும்...? அதை ரசிக்கத்தான் முடியும்...


  //பெரும்பாலான பதிவுகளில், எதிர் கருத்து என்று சொன்னாலே, கூட்டமாய் வந்து எதிர் கருத்து சொன்னவரை முடிந்தவரை தாக்கும் மனப்பான்மை தான் உள்ளது. அது மாறினால்தான் ஆரோக்யமான விவாதம் வரும்//

  அந்த எதிர் கருத்து மற்றவருக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருந்திருக்கலாம்...அதனால் விவாதம் பெரிதாக சென்று இருக்கலாம்...

  தவிரவும் நீங்கள் சொல்வது போல் தாகும் மனப்பான்மை இல்லாமல் தங்கள் கருத்துக்களை மென்மையான முறையில் சொல்வது நல்ல அணுகு முறையாக இருக்கும்.

  வருகைக்கும் நல்ல கருத்துக்கும் நன்றிகள் பல...

  ReplyDelete
 68. @@ சே.குமார் said...
  //ஆரோக்கியமான பதிவுலகம் இப்ப ஹிட்ஸ் போதையில் கொஞ்சம் கொஞ்சமாக அமுங்கிக் கொண்டிருக்கிறது... இதற்கு காரணம் சில திரட்டிகளிம் சித்து வேலைகள்தான்....//

  சீக்கிரமே மாறி விடும் என்று நம்புவோம்...திரட்டிகளும் ஒரு காரணம் அவ்வளவே...முழு காரணம் என்று சொல்ல முடியாது.


  //தரமான பதிவுகள் இங்கே தரமிழந்து கொண்டு வருகின்றன.//

  நிச்சயமாக...உண்மையை உரத்து சொன்னதுக்கு நன்றி குமார்.

  // நாமாக மாறாவிட்டால் நாளை என்பது கேள்விக்குறிதான்.//

  மாற்றம் வரும்...

  கருத்திற்கு நன்றி குமார்.

  ReplyDelete
 69. @@ Lakshmi said...

  //சரியா சொன்னீக்க. சரியான நேரத்தில் தேவையான பதிவு//

  உங்களின் முதல் வரவு எனக்கு மகிழ்வை கொடுக்கிறது...

  புரிதலுக்கு நன்றி.

  @@ தோழி பிரஷா...

  நன்றி பிரஷா

  ReplyDelete
 70. கௌசல்யா...

  படபடன்னு பொரிஞ்சு தள்ளி இருக்கீங்க..

  வாழ்வில் இது போன்று நிறைய நிகழ்வுகள் இருக்கிறது...

  உங்களின் இந்த பதிவோடு நான் முழுமையாக உடன்படுகிறேன்...

  ReplyDelete
 71. //எங்கேயும் ஒரு சின்ன அங்கீகாரம் இருந்தால் தான் வாழ்க்கை ரசிக்கும்...அது கிடைக்காத போது ஏற்படும் விரக்தி கொஞ்சம் ஆபத்தானது...மன உளைச்சலில் கொண்டு போய் விட்டு விடும்//

  ரொம்ப சரியான வரிகள்....

  ஹிட்ஸ் போதைங்கறது ரொம்ப மோசமானதுங்கற கருத்தை நெத்தியடியா சொல்லியிருக்கீங்க.

  தொடரட்டும் அக்கா, உங்கள் சமூக அக்கறை.....

  ReplyDelete
 72. நறுக்குன்னு குட்டிருக்கிங்க.பல பேரு திருந்துவதற்கு நல்ல வாய்ப்பு.

  ReplyDelete
 73. நறுக்குன்னு குட்டிருக்கிங்க.பல பேரு திருந்துவதற்கு நல்ல வாய்ப்பு.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...