உற்சாகம் எதில் இருக்கிறது ?? என்று கேட்பதை விட அப்படினா என்ன என்று கேட்ககூடிய நிலையில் தான் இப்ப நம்ம நிலைமை இருக்குனு சட்னு சொல்லிடலாம்...?! வேலை, விலைவாசி,கல்யாணம், குடும்பம். குழந்தை, படிப்பு.......இப்படி நாம புலம்பறதுக்கு நமக்கு நிறைய விஷயம் இருக்கு. பணம் பின்னாடி ஓடவே நேரம் சரியாக இருக்கிறது இந்த காலத்தில நான் உற்சாகம் அப்படின்னு சொன்னா கிலோ என்ன விலைன்னு தான் கேட்கவேண்டியது இருக்கிறது.
உற்சாகத்தை தேடி வேற எங்கும் போக வேண்டாம்...உங்களுக்குள்ளேயே இருக்கு அப்படின்னு பலரும் சொல்லி இருப்பாங்க நான் புதுசா ஒண்ணும் சொல்ல போறது இல்லை. ஆனா அதையே அடிக்கடி கேட்டா கொஞ்சம் ட்ரை பண்ணித் தான் பார்ப்போமே என்று தோன்றும் அல்லவா...?!
எழுத்தாளர் திரு. தி.ஜானகிராமன் அவர்கள் சொல்லி இருப்பார் "ஒருநாள் பூராவும் உள்ளங்கை ரேகையையே பார்த்து ரசித்து கொண்டிருக்கலாம் என்று...!" நம்மிடமும், நம்மை சுற்றியும் பார்த்து வியப்பதற்கு எவ்வளவோ விசயங்கள் இருக்கின்றன. எங்கேயும், எப்போதும் அபூர்வங்கள் நம்மை சூழ்ந்து இருந்தும் நாமோ பூர்வமானவற்றை பற்றி யோசித்து, முந்தினவற்றையே நினைத்து கவலைக் குழியில் விழுந்துக்கிடக்கிறோம்.
கண்ணுக்கு தெரியாத ஒன்றை பற்றி கவலைபட்டே கண் முன் இருக்கும் அற்புதத்தை அனுபவிக்க தவறிவிடுகிறோம்.
உற்சாகமாக வைத்துகொள்வது அடுத்தவர் கையில் இல்லை, நிச்சயமாக நம்மிடையே தான் இருக்கிறது. ஆனால் இதை சொன்னால் கூட 'ஆமாம் எல்லாம் தனக்கு வந்தால் தான் தெரியும் தலைவலியும், காய்ச்சலும் என்று நீங்க நினைக்கலாம்' உண்மைதான் அவரவர் பிரச்சனை அவரவருக்கு பெரிசு தான். அதே சமயம் வலி தலையை பிளந்தாலும் காபி குடிக்கும் போது அதன் நறுமணத்தை நல்லா ஆழமாக, உள்ளிழுத்து, சுவாசித்து ரசித்து பார்க்கும் போது அந்த தலைவலியை கொஞ்சம் மறக்க முடியுமே.
ரசிக்க கற்று கொள்ளுங்கள்...வாழ்க்கையின் வலி பெரிதாக தெரியாது !!
முதலில் நம்மை நாமே ரசிக்க பழகிக்க வேண்டும். காலை எழுந்ததும், ஏண்டா விடியுதேனு புலம்பிட்டே எழுந்திருக்காம உங்களுக்கு குட் மார்னிங் சொல்ல வெளியில் சூரியன் காத்திட்டு இருக்கிற மாதிரி நினைச்சிட்டு உற்சாகமா எழுந்து வெளியே வந்து ஒளிவீசிட்டு இருக்கிற சூரியனை பார்த்து ஒரு ஹாய்,குட் மார்னிங் சொல்லிப் பாருங்க (பதில் gm , hi வரலைனா சாட் நினைப்புல u there னு எல்லாம் பழக்க தோசத்துல கேட்கபடாது...!! ) மழை காலத்தில சூரியன் வரலைனா என்ன பண்றதுன்னு புத்திசாலித்தனமா, நீங்க கேட்டா 'மழைக்கு welcome சொல்லுங்களேன்' என்று சொல்வேன்.
உற்சாகத்தை பத்தியும் வாழ்க்கையை ரசிக்கணும், கடின படுத்திக்க கூடாதுன்னு நான் ஏன் சொல்றேன்னு தொடர்ந்து படிங்க புரியும்.
சொந்த அனுபவம்
எனக்கு ரோஜா செடி வளர்கிறது ரொம்ப பிடிக்கும், அதுவும் உலகத்தில் இருக்கிற அத்தனை கலர் ரோஜாக்களும் என் வீட்டில் இருக்கணும் என்கிற சின்ன ஆசை நிறைய உண்டு...!! என் வீட்டில் இருக்கிற ரோஜா பூக்களிடம் நான் தினம் பேசி ஆகணும். (இல்லைனா பூ வாடி விடும்ங்க நம்புங்க...!) மாடி படில வரிசையா நிறைய தொட்டிகள் வச்சிருக்கிறேன், எல்லா செடியும் ஒரு குட்டி மரம் போல இருக்கும். அதில் ரொம்ப அழகா இருக்கேன்னு காம்பௌண்டு சுவர்ல ஒரு நாலு தொட்டிய தூக்கி வச்சிருந்தேன். வைத்த நாளில் இருந்து சில பூக்கள் காணாம போயிட்டு இருந்தது. பூ நிறைய பூக்கிரதால ஒண்ணு இரண்டு தானே பறிச்சிட்டு போகட்டும்னு விட்டுட்டேன்.
எனக்கு ரோஜா செடி வளர்கிறது ரொம்ப பிடிக்கும், அதுவும் உலகத்தில் இருக்கிற அத்தனை கலர் ரோஜாக்களும் என் வீட்டில் இருக்கணும் என்கிற சின்ன ஆசை நிறைய உண்டு...!! என் வீட்டில் இருக்கிற ரோஜா பூக்களிடம் நான் தினம் பேசி ஆகணும். (இல்லைனா பூ வாடி விடும்ங்க நம்புங்க...!) மாடி படில வரிசையா நிறைய தொட்டிகள் வச்சிருக்கிறேன், எல்லா செடியும் ஒரு குட்டி மரம் போல இருக்கும். அதில் ரொம்ப அழகா இருக்கேன்னு காம்பௌண்டு சுவர்ல ஒரு நாலு தொட்டிய தூக்கி வச்சிருந்தேன். வைத்த நாளில் இருந்து சில பூக்கள் காணாம போயிட்டு இருந்தது. பூ நிறைய பூக்கிரதால ஒண்ணு இரண்டு தானே பறிச்சிட்டு போகட்டும்னு விட்டுட்டேன்.
காலையில் எழுந்ததும் எப்பவும் தொட்டிகளின் பக்கம் வந்து பூக்களை ரசித்துவிட்டு (பேசிட்டு...!) அப்புறம் தான் மத்த வேலை பார்பேன். வழக்கமா நேற்றும் எழுந்ததும் நேரா ரோஜாக்களிடம் சென்றேன், அப்படியே மயக்கம் வராத குறைதான் எனக்கு...?! சுவர் மேல இருந்த ஒரு தொட்டியை காணும்...எனக்கு வந்த பதட்டத்தில என்ன செய்றதுனே தெரியல...கீழே விழுந்திருக்கும்னு வெளியில போய் பார்த்தேன்...அதை ஏன் கேட்கிறீங்க...இருந்த டென்ஷன்ல மொட்டை மாடில வேற போய் பார்த்தேன்...(தொட்டி எப்படி நடந்து படி ஏறி மாடிக்கு போய் இருக்கும்னு கூட அப்ப யோசிக்க தோணல...?!!)
பக்கத்து வீட்டல இருக்கிறவங்க கிட்ட சரியா பேசினது கூட இல்லை. எனக்கு இருந்த வேகத்தில அவங்க கிட்டயும் போய் "ரோஜா தொட்டியை யாரோ தூக்கிட்டு போய்ட்டாங்க, நீங்க பார்த்தீங்களா ?" கேட்க, அவங்களும் "அச்சச்சோ, அப்படியா ? நீங்க ஏங்க சுவர் மேல வச்சீங்க, நல்ல பெரிய ரோஜா பூவாச்சே, ரத்த கலர்ல செவாப்பா அழகா இருக்குமே " அப்படின்னு எண்ணைய கொஞ்சம் ஊத்திட்டு போனாங்க.
அந்த நேரம் ரோட்டில வாக்கிங் போறவங்க நான் புலம்பறதை ஒரு மாதிரி பார்த்திட்டு போனதை கூட சட்டை பண்ணாம இவங்கள்ல யாராவது தூக்கிட்டு போய் இருப்பாங்களான்னு ஒரு டவுட்ல ஒவ்வொருத்தரா முறைச்சி பார்த்திட்டே இருந்தேன்...! (எனக்கு ஒரு பெரிய சந்தேகம் என்னனா, அந்த தொட்டி சிமெண்டால செய்தது. வெறும் தொட்டிய தூக்கவே இரண்டு ஆள் வேணும், செடியோட சேர்த்து அவ்வளவு பெரிய வெயிட்டை, ஆறடி உயர சுவர் மேல இருந்து எப்படி எடுத்திருப்பாங்க...! எத்தனை பேர் வந்திருப்பாங்க ......? எதில வச்சி கொண்டு போய் இருப்பாங்கனு, வேற சம்பந்தம் இல்லாம யோசிச்சிட்டு இருந்தேன்......
என் கூச்சல் கேட்டு மெதுவா...?!!வந்த என்னவர் அவர் பங்குக்கு ஏதோ சமாதானம் செய்தார்...என் மண்டைக்கு எதுவும் ஏறல...புலம்பறதையும் நிறுத்தல...அப்பதான் தூக்கத்தில் இருந்து எழுந்த என் பையன் பக்கத்தில வந்து, "ஏம்மா வருத்த படுறீங்க, உங்களை விட அதிகமா ரோஜா செடியை லவ் பண்றவங்க தான் இந்த மாதிரி எடுத்திட்டு போய் இருப்பாங்க, அதை அவங்க நல்லா பார்த்துப்பாங்க, ப்ரீயா இருங்க...டென்ஷன் படாதிங்க"னு ரொம்ப சாதாரணமா சொல்லிட்டு போய்ட்டான்...! நான் அப்படியே திக் பிரமை பிடிச்சி நின்னுட்டேன்.
என்ன ஒரு தெளிவு ! என்ன அழகான நேர்மையான எண்ணம் ! இது ஏன் எனக்கு இல்லை?? அந்த நிமிஷம் , " எதையும் ரசனையோடு நேர்மையான எண்ணத்துடன் பார்த்தால் கடினமான நிகழ்வை கூட சாதாரணமாக எடுத்துகொள்ள கூடிய மன பக்குவம் வரும்... எந்த விசயமுமே நாம் எதிர் கொள்ற விதத்தில் தான் இருக்கிறது என்று பல தெளிவுகள் பிறந்தன என்னிடம்...?!"
என்ன ஒரு தெளிவு ! என்ன அழகான நேர்மையான எண்ணம் ! இது ஏன் எனக்கு இல்லை?? அந்த நிமிஷம் , " எதையும் ரசனையோடு நேர்மையான எண்ணத்துடன் பார்த்தால் கடினமான நிகழ்வை கூட சாதாரணமாக எடுத்துகொள்ள கூடிய மன பக்குவம் வரும்... எந்த விசயமுமே நாம் எதிர் கொள்ற விதத்தில் தான் இருக்கிறது என்று பல தெளிவுகள் பிறந்தன என்னிடம்...?!"
சக மனிதர்களையும் நேசிக்கணும் என்பதை சொல்லாமல் அறிவுறுத்தி சென்ற என் மகனை நினைத்து எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. அன்றைக்கு என் மகன் எனக்கு தகப்பன்சாமியாக தெரிந்தான்...!!
தேவை இல்லாமல் சின்ன விசயத்தையும் தலைக்கு கொண்டு போய் நாமும் டென்ஷனாகி நம்மை சுத்தி இருப்பவர்களையும் பதட்டப்படுத்தி விடுகிறோம்...இதை தவிர்த்தாலே உற்சாகம் நம்மிடம் ஓடி வந்து விடும். (ம்...அனுபவம் பேசுதுங்க...!!)
"பிறரை போல் சந்தோசமாக இல்லையே என்ற கவலை வேண்டாம்,
நீங்கள் நினைப்பது போல் அவர்கள் சந்தோசமாக இல்லை" -- யாரோ
தேவை இல்லாமல் சின்ன விசயத்தையும் தலைக்கு கொண்டு போய் நாமும் டென்ஷனாகி நம்மை சுத்தி இருப்பவர்களையும் பதட்டப்படுத்தி விடுகிறோம்.///
பதிலளிநீக்குஇதை நாம் மனதில் வைத்துகொள்வது நல்லது
இதுல எனக்கு வேற போன் பண்ணி ரோஜா பூ காணோம் சொல்லி ஒரே புலம்பல்
பதிலளிநீக்கு//"ஏம்மா வருத்த படுறீங்க, உங்களை விட அதிகமா ரோஜா செடியை லவ் பண்றவங்க தான் இந்த மாதிரி எடுத்திட்டு போய் இருப்பாங்க, அதை அவங்க நல்லா பார்த்துப்பாங்க, ப்ரீயா இருங்க...டென்ஷன் படாதிங்க"னு ரொம்ப சாதாரணமா சொல்லிட்டு போய்ட்டான்...!//
பதிலளிநீக்குசபாஷ் ...உங்க பையன் ரொம்ப புத்திசாலி(ஹி......ஹி ..அவங்க அப்பா மாதிரின்னு நினைக்கிறன் ) ......நல்ல தானே சொல்லி இருக்கான் இந்த காலத்தில் சிறுவர்களிடம் இருந்து பெற்றோர்கள் நிறைய பாடம் கற்று கொள்ள வேண்டும்
@கௌசல்யா
பதிலளிநீக்கு//அதில் ரொம்ப அழகா இருக்கேன்னு காம்பௌண்டு சுவர்ல ஒரு நாலு தொட்டிய தூக்கி வச்சிருந்தேன்.//
//எனக்கு ஒரு பெரிய சந்தேகம் என்னனா, அந்த தொட்டி சிமெண்டால செய்தது. வெறும் தொட்டிய தூக்கவே இரண்டு ஆள் வேணும், செடியோட சேர்த்து அவ்வளவு பெரிய வெயிட்டை,//
நீங்க நாலு தொட்டிய தூக்கரப்போ அவங்க ஒரு தொட்டிய தூக்க மாட்டாங்களா என்ன? இல்லை நீங்க வெயிட் லிப்டரா? #டவுட்
@கௌசல்யா
பதிலளிநீக்கு//உங்களை விட அதிகமா ரோஜா செடியை லவ் பண்றவங்க தான் இந்த மாதிரி எடுத்திட்டு போய் இருப்பாங்க, அதை அவங்க நல்லா பார்த்துப்பாங்க,//
அடா அடா அடா!! என்னா தத்துவம் என்னா தத்துவம்! உங்க வீட்டுல இருக்க நகை எல்லாம் சுவத்து மேல வையுங்க உங்களை விட அத அதிகமா லவ் பண்றவங்க அதை பத்திரமா பார்த்துபாங்க. இதுக்கும் நாலு பேரு வந்து ஆகா அருமையா சொல்லி இருக்கிங்க சொல்லுவாங்க.. :))
//அடா அடா அடா!! என்னா தத்துவம் என்னா தத்துவம்! உங்க வீட்டுல இருக்க நகை எல்லாம் சுவத்து மேல வையுங்க உங்களை விட அத அதிகமா லவ் பண்றவங்க அதை பத்திரமா பார்த்துபாங்க//
பதிலளிநீக்குஅப்படி வைக்கிறதா இருந்தா ....என்கிட்ட சொல்லிட்டு வைங்க ...என் பொண்ணுக்கு நகைன்னா ரொம்ப இஷ்டம் .
தேவை இல்லாமல் சின்ன விசயத்தையும் தலைக்கு கொண்டு போய் நாமும் டென்ஷனாகி நம்மை சுத்தி இருப்பவர்களையும் பதட்டப்படுத்தி விடுகிறோம்...இதை தவிர்த்தாலே உற்சாகம் நம்மிடம் ஓடி வந்து விடும். //
பதிலளிநீக்குநிதர்சனமான உண்மை!
// "ஒருநாள் பூராவும் உள்ளங்கை ரேகையையே பார்த்து ரசித்து கொண்டிருக்கலாம் என்று...!" //
பதிலளிநீக்குஎங்க ஆபீசுல நான் அப்படி உட்கார்ந்து உள்ளங்கைய பார்த்துட்டு இருந்தா அடிக்க வராங்க ?!
//ஒரு மாதிரி பார்த்திட்டு போனதை கூட சட்டை பண்ணாம இவங்கள்ல யாராவது தூக்கிட்டு போய் இருப்பாங்களான்னு ஒரு டவுட்ல ஒவ்வொருத்தரா முறைச்சி பார்த்திட்டே இருந்தேன்...///
பதிலளிநீக்குபேசுறதுல கூட சட்டை தைக்க முடியுமா அக்கா ?
மிகச் சிறப்பான ஒரு கட்டுரை சகோ!
பதிலளிநீக்கு//கண்ணுக்கு தெரியாத ஒன்றை பற்றி கவலைபட்டே கண் முன் இருக்கும் அற்புதத்தை அனுபவிக்க தவறிவிடுகிறோம்.//
மறுக்கமுடியாத உண்மை!
//ரசிக்க கற்று கொள்ளுங்கள்...வாழ்க்கையின் வலி பெரிதாக தெரியாது ! //
கடந்து செல்லும் நிமிடங்களை சிறைப்படுத்திக் கொள்ள முடியாது ஆனாலும் ரசிப்பின் நினைவுகளின் வழி உயிர்ப்பித்திருக்க முடியும்.. :)
//உங்களை விட அதிகமா ரோஜா செடியை லவ் பண்றவங்க தான் இந்த மாதிரி எடுத்திட்டு போய் இருப்பாங்க //
என்ன அழகான சிந்தனை.. :)
அருமையானப் பதிவு.
பதிலளிநீக்குஎதையுமே பாஸிட்டிவ்வாகப் பார்க்கும் எண்ணம் யாரிடமும் இல்லை.
//ரசிக்க கற்று கொள்ளுங்கள்...வாழ்க்கையின் வலி பெரிதாக தெரியாது !!//
உண்மை! அனைத்தையும் ரசிக்கக் கற்றுக்கொண்டால் பிரச்சினையே இல்லை.
ஏங்க எதுக்கும் செளந்தரக் கேட்டுப்பாருங்க.. இந்த வேலைய அவன் கூட செஞ்சிருக்கலாம்.
ஷ்ஷ்...டென்ஷனாகக் கூடாது. கூலா இருக்கணும். ஓகே!
mind blowing fantastic post kousalya.
பதிலளிநீக்குyour son is really great.indha chinna vayadhil evvalavu pakkuvam.
we should learn to enjoy our life instead of grumbling about it.
//தேவை இல்லாமல் சின்ன விசயத்தையும் தலைக்கு கொண்டு போய் நாமும் டென்ஷனாகி நம்மை சுத்தி இருப்பவர்களையும் பதட்டப்படுத்தி விடுகிறோம்...இதை தவிர்த்தாலே உற்சாகம் நம்மிடம் ஓடி வந்து விடும். (ம்...அனுபவம் பேசுதுங்க...!!)//
பதிலளிநீக்குமிகச்சரியாக சொல்லியிருக்கீங்க...
சிறப்பாக பதிவுசெய்தமைக்கு மிக்க நன்றிங்க
தேவை இல்லாமல் சின்ன விசயத்தையும் தலைக்கு கொண்டு போய் நாமும் டென்ஷனாகி நம்மை சுத்தி இருப்பவர்களையும் பதட்டப்படுத்தி விடுகிறோம்...இதை தவிர்த்தாலே உற்சாகம் நம்மிடம் ஓடி வந்து விடும்
பதிலளிநீக்கு//
இது நான் கற்றுக்கொள்ள வேண்டிய ஓன்று...
Sriakila said...
பதிலளிநீக்குஅருமையானப் பதிவு.
எதையுமே பாஸிட்டிவ்வாகப் பார்க்கும் எண்ணம் யாரிடமும் இல்லை.
//ரசிக்க கற்று கொள்ளுங்கள்...வாழ்க்கையின் வலி பெரிதாக தெரியாது !!//
உண்மை! அனைத்தையும் ரசிக்கக் கற்றுக்கொண்டால் பிரச்சினையே இல்லை.
ஏங்க எதுக்கும் செளந்தரக் கேட்டுப்பாருங்க.. இந்த வேலைய அவன் கூட செஞ்சிருக்கலாம்.
ஷ்ஷ்...டென்ஷனாகக் கூடாது. கூலா இருக்கணும். ஓகே!////
ஹேலோ அகில நான் எடுத்து உங்க கிட்ட தானே கொடுத்தேன் பாத்தீங்களா இப்படி மாட்டி விடுறீங்க
நல்ல தெளிவுதான் என்றாலும் நாம் வளர்த்த செடியே தொட்டியோடு காணலைன்னால் கொஞ்சம் என்ன எனக்கும் நிறைய அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.ர்லாக்ஸ் ப்ளீஸ்.
பதிலளிநீக்குvery nice... very good concept brought out thro ur simple, thought-provoking writing... i like u akka... geethababu
பதிலளிநீக்கு//"பிறரை போல் சந்தோசமாக இல்லையே என்ற கவலை வேண்டாம்,
பதிலளிநீக்குநீங்கள் நினைப்பது போல் அவர்கள் சந்தோசமாக இல்லை" //
இதை நாம் மனதில் வைத்துகொள்வது நல்லது.
வாழ்வியலுக்குள் போய் தெரிந்தெடுத்த பதிவு.
பதிலளிநீக்குஅருமை கௌசி !
அருமையான சிந்தனை.அனைவருக்கும் கண்டிப்பாக பயன் தரும்.பகிவுக்கு நன்றி.
பதிலளிநீக்குகௌஸ், நானும் தேவையில்லாம டென்ஷன் ஆவதை குறைச்சுட்டேன். அதோடு வேறு ஒரு கொள்கை மற்றவர்களுன் பெர்சனல் life இல் தலையிடுவது, கிசு கிசு பேசுவது அறவே நிப்பாட்டி விட்டேன்.
பதிலளிநீக்குதேவையில்லாமல் டென்ஷன் ஆவது நல்லது இல்லை. சரியாக சொல்லி இருக்கீங்க. மிக்க நன்றி சகோ.
பதிலளிநீக்குஏன் உங்க வலைப்பூவின் பெயர் ஆங்கிலத்தில் உள்ளது ??
பதிலளிநீக்குகண்டிப்பாக பயன் தரும்
பதிலளிநீக்கு//(பதில் gm , hi வரலைனா சாட் நினைப்புல u there னு எல்லாம் பழக்க தோசத்துல கேட்கபடாது...!! //
பதிலளிநீக்குஇயல்பான நகைச்சுவை..சிரித்தேன்.
//(இல்லைனா பூ வாடி விடும்ங்க நம்புங்க...!//
நம்பீட்ட்டேன்......
//உங்களை விட அதிகமா ரோஜா செடியை லவ் பண்றவங்க தான் இந்த மாதிரி எடுத்திட்டு போய் இருப்பாங்க//
சகோ இத ரோஜா செடிக்கு மட்டும் எடுத்துக்கோங்க..நாளைக்கு கார் எதாச்சும் மிஸ் ஆகும்போது...ஓக்கே நம்மல விட அதிகமா நம்ம கார அவங்க நேசிச்சதாலதான எடுத்துட்டு போயிருக்காங்கன்னு நெனச்சிடாதீங்க.(just kidding)
/நேர்மையான எண்ணம்/
அது உணமையிலேயே தெளிவான நேர்மையான எண்ணமே...
//"பிறரை போல் சந்தோசமாக இல்லையே என்ற கவலை வேண்டாம்,
நீங்கள் நினைப்பது போல் அவர்கள் சந்தோசமாக இல்லை"//
எனக்கு அவசியத்திலும் அவசியமான வரிகள்..எனக்கெ சொன்னது போல் இருக்கிறது..
நன்றிகள் பல...
அன்புடன்
ரஜின்
@@ சௌந்தர் said...
பதிலளிநீக்கு//இதை நாம் மனதில் வைத்துகொள்வது நல்லது//
கண்டிப்பா...இப்போதைய சூளிநிலைக்கு எல்லோரும் மனதில் வைத்து கொள்ள வேண்டிய ஒன்று தான்.
//இதுல எனக்கு வேற போன் பண்ணி ரோஜா பூ காணோம் சொல்லி ஒரே புலம்பல்//
துக்கத்தை மத்தவங்ககிட்ட சொன்னா குறைஞ்சிடும்னு சொன்னேன்... :))
@@ இம்சைஅரசன் பாபு.. said...
பதிலளிநீக்குஉங்க பையன் ரொம்ப புத்திசாலி(ஹி......ஹி ..அவங்க அப்பா மாதிரின்னு நினைக்கிறன்//
உண்மைதான் :))) ஒத்துக்கணும் தான்
இல்லைனா இந்த மாதிரி ஒரு கமெண்டுக்கு நான் மெனக்கிட்டு பதில் சொல்லிட்டு இருப்பேனா ?!! :)))
//இந்த காலத்தில் சிறுவர்களிடம் இருந்து பெற்றோர்கள் நிறைய பாடம் கற்று கொள்ள வேண்டும்//
உங்களுக்கும் நிறைய அனுபவம் இருக்குமே பாபு.
பாடம் கத்துகிட்டீங்களா ?? :)))
@@ TERROR-PANDIYAN(VAS) said...
பதிலளிநீக்கு//நீங்க நாலு தொட்டிய தூக்கரப்போ அவங்க ஒரு தொட்டிய தூக்க மாட்டாங்களா என்ன? இல்லை நீங்க வெயிட் லிப்டரா? #டவுட்//
ஆளுங்க தான் தூக்கி வச்சாங்க...நீங்க இப்படி பதிவை வரிக்கு வரி படிச்சி ஆராய்ச்சி செய்வீங்கன்னு தெரிஞ்சா அதை முதலில் சொல்லி இருப்பேன்... :)))
//உங்க வீட்டுல இருக்க நகை எல்லாம் சுவத்து மேல வையுங்க உங்களை விட அத அதிகமா லவ் பண்றவங்க அதை பத்திரமா பார்த்துபாங்க. //
அட என்ன இப்படி...நான் அந்த அளவு விவரம் இல்லாதவனு முடிவு பண்ணிடீங்களா ? :))
terror கமெண்ட் போட்டு இருக்கிறார் என்றாலே ரொம்ப யோசிக்க வேண்டி இருக்கு பதில் போட... :))))
@@ எஸ்.கே said...
பதிலளிநீக்குநன்றி எஸ்.கே.
@@ கோமாளி செல்வா said...
//எங்க ஆபீசுல நான் அப்படி உட்கார்ந்து உள்ளங்கைய பார்த்துட்டு இருந்தா அடிக்க வராங்க //
ஆபீஸ்ல வேலையை ரசிங்க...சரியா செல்வா ? :))
//பேசுறதுல கூட சட்டை தைக்க முடியுமா அக்கா //
அக்கா ரொம்ப பாவம் செல்வா... இப்படி எல்லாம் கேள்வி கேட்ட நான் ஓடிடுவேன்..
@@ Balaji saravana said...
பதிலளிநீக்கு//கடந்து செல்லும் நிமிடங்களை சிறைப்படுத்திக் கொள்ள முடியாது ஆனாலும் ரசிப்பின் நினைவுகளின் வழி உயிர்ப்பித்திருக்க முடியும்.. :)//
கண்டிப்பா...உங்க கருத்து அழகாய் இருக்கிறது பாலா. நன்றி.
@@ Sriakila said...
பதிலளிநீக்கு//ஏங்க எதுக்கும் செளந்தரக் கேட்டுப்பாருங்க.. இந்த வேலைய அவன் கூட செஞ்சிருக்கலாம்.//
அவனா ? அவன் பச்சபுள்ள அகிலா...!! :)))
புரிதலுக்கும் கருத்திற்கும் நன்றி தோழி.
@@ angelin said...
பதிலளிநீக்கு//your son is really great.indha chinna vayadhil evvalavu pakkuvam.
we should learn to enjoy our life instead of grumbling about it.//
ரொம்ப தேங்க்ஸ் ஏஞ்சல். என் பையன் சொன்னது அன்று என்னை மிகவும் யோசிக்க வைத்தது தோழி.
@@ மாணவன் said...
பதிலளிநீக்குபுரிதலுக்கு நன்றிங்க.
@@ வெறும்பய said...
//இது நான் கற்றுக்கொள்ள வேண்டிய ஓன்று..//
நானே அன்று தான் கற்று கொண்டேன் ஜெயந்த்...
@@ asiya omar said...
பதிலளிநீக்கு//நல்ல தெளிவுதான் என்றாலும் நாம் வளர்த்த செடியே தொட்டியோடு காணலைன்னால் கொஞ்சம் என்ன எனக்கும் நிறைய அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.ர்லாக்ஸ் ப்ளீஸ்//
ஆமாம் தோழி, ஒவ்வொரு புது இலை வெளி வரும் போதும், ரசிச்சி பூ பூக்கும் போது மகிழ்ந்து கடைசியில இப்படி மொத்தமா போச்சுனா எப்படி இருக்கும்...?!
ஆனா என் பையன் சொன்னதும் மனசை தேத்திக்கிட்டேன் தோழி. (வேற வழி...?!) :))
Anonymous said...
பதிலளிநீக்கு//very nice... very good concept brought out thro ur simple, thought-provoking writing... i like u akka... geethababu//
thank u geetha...i am so happy for ur first visit and comment.
:))
@@ சே.குமார்...
பதிலளிநீக்குநன்றி குமார்.
@@ ஹேமா said...
//வாழ்வியலுக்குள் போய் தெரிந்தெடுத்த பதிவு//
ம் வாழ்க்கை நமக்கு தினம் ஒரு பாடத்தை நடத்துகிறதே ஹேமா??!
@@ ஸாதிகா said...
பதிலளிநீக்குபுரிதலுக்கு நன்றி தோழி.
@@ vanathy said...
//கௌஸ், நானும் தேவையில்லாம டென்ஷன் ஆவதை குறைச்சுட்டேன்.//
அப்ப முன்னாடி நீங்களும் என்னை மாதிரி தானா?
//அதோடு வேறு ஒரு கொள்கை மற்றவர்களுன் பெர்சனல் life இல் தலையிடுவது, கிசு கிசு பேசுவது அறவே நிப்பாட்டி விட்டேன்//
பொதுவாவே இது ரொம்ப நல்ல குணம் வாணி...பலரும் இதை பின்பற்றினால் எந்த பிரச்சனையும் வராது.
@@ வெங்கட் நாகராஜ் said...
பதிலளிநீக்கு//தேவையில்லாமல் டென்ஷன் ஆவது நல்லது இல்லை. சரியாக சொல்லி இருக்கீங்க. //
அனுபவம் பேசுதுங்க...
:))
@@ Anonymous said...
பதிலளிநீக்கு//ஏன் உங்க வலைப்பூவின் பெயர் ஆங்கிலத்தில் உள்ளது ??//
ஆங்கிலத்தில் இருக்கணும் என்று எந்த தனிப்பட்ட காரணமும் இல்லங்க...ஆரம்பத்தில் அப்படி எழுதினேன்...அப்படியே விட்டுட்டேன் . டெம்பிளேட் விரைவில் மாற்ற போறேன் அப்ப மாத்திடுவேன்.
ஆமாம் இதை கேட்க ஏன் பெயரில்லாம வரணும்...? டவுட்டு ##
:)))
@@ சசிகுமார்...
பதிலளிநீக்குthank u sasi.
@@@ RAZIN ABDUL RAHMAN said...
பதிலளிநீக்கு//(பதில் gm , hi வரலைனா சாட் நினைப்புல u there னு எல்லாம் பழக்க தோசத்துல கேட்கபடாது...!! //
//இயல்பான நகைச்சுவை..சிரித்தேன்.//
ரசித்தேன்...மகிழ்ந்தேன் !!
//(இல்லைனா பூ வாடி விடும்ங்க நம்புங்க...!//
//நம்பீட்ட்டேன்......//
ரொம்ப நல்ல குணம்ங்க உங்களுக்கு என்னை மாதிரியே !!
//சகோ இத ரோஜா செடிக்கு மட்டும் எடுத்துக்கோங்க..நாளைக்கு கார் எதாச்சும் மிஸ் ஆகும்போது...ஓக்கே நம்மல விட அதிகமா நம்ம கார அவங்க நேசிச்சதாலதான எடுத்துட்டு போயிருக்காங்கன்னு நெனச்சிடாதீங்க.(just kidding)//
அடடா பார்த்தீங்களா...பதிவு போடுற அவசரத்தில காருக்கு பூட்டு போடாம அட ச்சே லாக் பண்ணாம வந்திட்டேங்க. நல்ல வேளை நினைவு படுத்துனீங்க தேங்க்ஸ்பா :)))
//எனக்கு அவசியத்திலும் அவசியமான வரிகள்..எனக்கெ சொன்னது போல் இருக்கிறது..
நன்றிகள் பல...//
எதுக்கு இப்படி ?? ரிலாக்ஸ் பிளிஸ் !!
ரசனையான பின்னூட்டதிற்கு நன்றி ரஜின்
சூப்பரோ சூப்பர்! வேற ஒன்னும் சொல்றதிக்கில்ல! ஆங்....உங்க பையன், உங்க பதிவைவிட சூப்பர்!! என்ன ஒரு அணுகுமுறை, அப்படியே புல்லரிச்சுப் போச்சு படிக்கிறப்போ! இப்பெல்லாம் உங்க பதிவ படிக்கப் படிக்க ரொம்பப் பொறாமையா இருக்கு....ம்ம்....கலக்குங்க!
பதிலளிநீக்கு@@ பத்மஹரி said...
பதிலளிநீக்கு// ஆங்....உங்க பையன், உங்க பதிவைவிட சூப்பர்!! என்ன ஒரு அணுகுமுறை, அப்படியே புல்லரிச்சுப் போச்சு படிக்கிறப்போ!//
அவன் கொஞ்சம் என்னை மாதிரி...ஹா ஹா :)))
//இப்பெல்லாம் உங்க பதிவ படிக்கப் படிக்க ரொம்பப் பொறாமையா இருக்கு...//
இது வேறையா...?? ஜப்பான்ல ரொம்ப குளிரா இருக்கா என்ன ??
:)))
//ஆமாம் இதை கேட்க ஏன் பெயரில்லாம வரணும்...? டவுட்டு ##
பதிலளிநீக்கு//
எப்படி வந்தா என்னங்க ?? நான் படிக்க மட்டுமே விரும்புவன். விஷயத்தை மட்டும் பாருங்க
:)
பதிலளிநீக்கு