Monday, January 3

1:14 PM
66கடந்த வருடத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை பற்றி ஒரு தொடர் பதிவாக எழுத சொல்லி தோழி ஆசியா உமர் அழைப்பு விடுத்து இருந்தார். அவருக்கு முதலில் எனது நன்றிகள். இந்த மாதிரி தொடர் பதிவுகள் எழுத  சொல்லி அழைப்பு வந்தால் கொஞ்சம் தயக்கம் வரும் சரியா எழுதி விடுவோமா என்று. இப்பவும் அந்த தயக்கத்துடன் தான் எழுதி இருக்கிறேன். படிச்சிட்டு சொல்லுங்க.

2010 இல் நடந்த இனிமையான நிகழ்வுகள் பல அதில் மிக முக்கியமா இங்கே சொல்ல விரும்புவது பதிவுலகத்திற்கு நான் வந்தது தான்.

அறிமுகம்

இந்த மாதிரி ஒரு உலகம் இருக்கிறது என்றே முதலில் எனக்கு தெரியாது...!? தொழில் ரீதியாக ஏற்பட்ட மன அழுத்தத்திற்காக என்னை ஆசுவாச படுத்திக்கொள்ள ஒரு space தேவைப்பட்ட நேரத்தில் என் கணவர் தான் ப்ளாக் எழுத சொல்லி யோசனை சொன்னார். அதற்கு முன் வரை இணையம் என்பது புதிதாக ரீலீஸ் ஆகும் படங்களை நோகாமல் பார்ப்பதற்கு தான் பயன்பட்டுவந்தது...! எனக்கு என்ன தெரியும், என்னால் எழுத முடியுமா என்ற சந்தேகம் தொடக்கத்தில் இருந்தது...! 'என்கிட்டே புலம்புறதை எல்லாம் எழுது அதுவே போதும்', என்று உற்சாகம் கொடுத்தது என் கணவர்தான்...?!!

2010 இல்  நல்ல நிகழ்வுகள்,பிடித்த நல்ல விஷயம் 
   
2009 டிசம்பரில் ப்ளாக் தொடங்கினாலும் சரியாக எழுத ஆரம்பித்தது 2010 மார்ச்சில் இருந்து தான். முதலில் மனம் என்று தான் டைட்டில் வைத்தேன்...அப்புறம் தான் அதில் ஏதோ மிஸ்ஸிங் என்று தோன்றியது அப்புறம் தான் 'மனதோடு மட்டும்' என்றானது, கவிதைகளும் இதில் எழுதி வந்தேன்...கவிதைகள் தனியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் உருவானது தான் 'வாசல்'

'மனதோடு மட்டும்' தளத்தில் எனக்கு மிக பிடித்த ஒரு தொடர் என்றால் தாம்பத்தியம் என்று சொல்வேன். இந்த தொடர் எழுத முக்கிய காரணம் சில பெற்றோர்களின் கருத்து வேறுபாட்டால் தடுமாறும் பிள்ளைகளின் நிலையை பற்றிய வருத்தம் தான். இந்த தொடரில் எழுதப்பட்ட கருத்துக்கள் பெரும்பாலும் நான் படித்த, கேள்விப்பட்ட, பார்த்த சில அனுபவங்கள் தான்.

மறக்க முடியாத சம்பவம் 

அப்புறம் சில விழிப்புணர்வு பதிவுகள் விரும்பி எழுதினேன், இனியும் நிறைய எழுத வேண்டும் என்று இருக்கிறேன். 'கண்டனம்' என்ற தலைப்பில் எழுதிய சில பதிவுகள் விமர்சனதிற்கு உட்பட்டன. அதிலும் முக்கியமாக நான் எழுதிய ஆபத்தான கலாச்சாரம் என்ற பதிவுக்கு எதிர் பதிவு எழுதும் அளவிற்கு சென்றது நான் எதிர்பார்க்காத ஒன்று.  அதற்கு பின் பல காரசாரமான விவாதங்கள், மோதல்கள் என்று மூன்று  வாரத்திற்கு   பதிவுலகம் இதை பற்றியே பேசும் அளவிற்கு போய்விட்டதுதான்  ஆச்சரியம். அதிலும் பல பதிவர்களும் லிவிங் டுகெதர் என்ற தலைப்பில் பல பதிவுகளை எழுதி தங்களின்  கருத்துகளை,ஆதங்கங்களை, கோபங்களை வெளிபடுத்தி இருந்தனர். அதன் மூலம் பல நல்ல கருத்துக்கள் வெளி கொணரப்பட்டன என்பதே உண்மை.

மற்றொரு பதிவு 'பெண் பதிவர்கள் என்பவர்கள் கேலி பொருளா ?' ஒரு குழுமத்தில் பெண் பதிவர்களை கேலி செய்து போடபட்டதிற்கு எதிராக எழுதப்பட்ட ஒரு பதிவு. எனது பதிவில் பலரும் தங்களது கண்டனத்தை அந்த தளத்திற்கு எதிராக தெரிவித்திருந்ததின் பலனாக சம்பந்த பட்ட குழுமத்தில் இருந்த அந்த கேலி சித்திரம் நீக்கப்பட்டது. அந்த நேரத்தில் எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த சக பதிவர்களுக்கு இந்த நேரத்தில் மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லி கொள்கிறேன்.

மற்றும் நான் எழுதிய 'மரங்களை வெட்டுங்கள்' என்ற ஒரு பதிவு சூறாவளிபோல் பல இடங்களையும் சுற்றி வந்தது. பல பதிவர்களுக்கும் பலரால்  மெயிலின் மூலம் இந்த பதிவு சென்றதை அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். கருவேலமரம் என்று கூகுளில் தேடினால் பலரும் என் பதிவை அப்படியே அவர்கள் பெயரில் வெளியிட்டு  இருப்பதை பார்த்தேன் . இதில் ஒரு ரசிக்க தகுந்த ஒன்றையும் பார்த்தேன், ஒரு குழுமத்தில் இந்த பதிவு வெளிநாட்டில் வாழும் தமிழர் ஒருவர் தன் தாய் நாட்டின் மீது கொண்ட பற்றின் காரணமாக இந்த பதிவை எழுதி இருக்கிறார் என்று இருந்தது. எப்படியோ ஒரு விழிப்புணர்வு பதிவு பலரையும்  சென்று அடைந்திருப்பதை பார்க்கும் போது  பதிவுலகம் முயன்றால் நல்ல விதைகளை விதைத்தால்  அது நிச்சயம் பலன் தரும் என்பதை எனக்கு உணர்த்தியது.

பெரிய சந்தோசம்

ஒரு புது உலகத்திற்குள் நுழைந்தது போன்ற உணர்வை தருகிறது இந்த பதிவுலகம்...பல நட்புகள் கிடைத்தன. ஆண் பெண் நட்பு கத்தியில் நடப்பதை போன்றது என்பார்கள் ஆனால் இங்கே எனக்கு கிடைத்த நட்புகள் மிக உன்னதமானவை தங்களது எல்லை எது என்பதை உணர்ந்த நாகரிகமானவர்கள். அன்பான தோழிகள், சகோதரர்கள் என்று எனது உறவுகள் எனக்கு உற்சாகத்தையும் வாழ்க்கையின் மேல் இன்னும் அதிக பிடிப்பையும் கொடுத்தன என்று சொன்னால் அது மிகையில்லை.

பிடித்த நல்ல மனிதர்கள் 

நண்பர்களில் முக்கியமானவராக ஒருவரை சொல்லவேண்டும் என்றால் தேவா என்று சொல்வேன். அவரது எழுத்துகளின் ரசிகை, தொடரும் அவர் பதிவுகளின் தீவிர வாசகி, அவரது எழுத்துகள் எனக்கு படிப்பினையை கொடுக்கிறது என்பதே உண்மை. (நல்ல தமிழை கற்றுக்கொள்ள அவரது பதிவை தொடர்ந்து படிக்கலாம்) அப்புறம் கே ஆர் பி செந்தில் , நர்சிம், ஈரோடு கதிர், பா.ராஜாராமன், இராமசாமி,பத்மஹரி,ஆதிரன்(மகேந்திரன்),அப்பாதுரை ,வானம்பாடிகள் பாலா, எஸ்.கே,விஜய், எஸ்.வி ,யோவ் ,ராமலக்ஷ்மி,தேனம்மை,  பத்மா ,முத்துலட்சுமி ,மனோ சாமிநாதன் இவங்க எழுத்துக்கள் மிக பிடிக்கும்.


எனது உடன் பிறக்காத சகோதரர்கள்  சௌந்தர்,கணேஷ். அப்புறம் சித்ரா,  ஹேமா, ஆசியா,வானதி, ஆனந்தி,தெய்வசுகந்தி, அப்பாவி தங்கமணி,ஜலீலா கமால்,இந்திரா,   நிலாமதி, சசிகுமார்,  LK , பாலாஜி, பாபு, செல்வா,ரமேஷ், terror ,அருண் பிரசாத்,சங்கவி, r.கோபி,அன்பரசன் மேலும் பலர் இருக்கிறார்கள் சொல்வதற்கு இங்கே இடம் கொள்ளாத அளவிற்கு...! இத்தகைய உறவுகளை கொடுத்த இந்த ஆண்டிற்கு (2010 ) நான் நன்றி சொல்லி கொள்கிறேன்.

இன்னும் சாதிக்க வேண்டியவை என்று சொல்லணும் என்றால் இந்த நட்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும், இன்னும் பல நல்ல பதிவுகளை எழுதவேண்டும், இந்த பதிவுலகத்தில் நானும் இருக்கிறேன் என்ற பெருமை கெடாமல் பார்த்து கொள்ள வேண்டும், முக்கியமாக பதிவுலகம் விட்டு செல்லும்  போது மனதில் ஒரு நிறைவுடன் விடை பெறணும் என்பதே !

சொந்த வாழ்வில் சாதிக்க விரும்பும் எண்ணங்கள் என்றால் சில லட்சியங்கள் இருக்கிறது பொதுவாழ்வில் குறிப்பா சமூக சேவையில் ஈடுபடனும் என்ற எண்ணம் நிறைவேற இப்போது முயற்சி எடுத்திட்டு வருகிறேன்.....அது நிறைவேறனும் என்பதே புது வருடத்தின்  எனது முதல் முக்கியமான பிராத்தனை.  

என் டைரியே !

உனக்கு என் மேல் மிகுந்த கோபம் 
உன்  பக்கங்கள் அதிக சுமையாகி விட்டது என்று !
உன் மேனி முழுவதும் பல நினைவுகள் 
எழுத்துக்களாய் இன்பச் சுமைகளாய்  !
என் மனச் சுமையை குறைக்கிறேன் என்று
புரிந்து கொள்ளேன் நீ !! 

இந்த தொடரை தொடர மத்தவங்கள  அழைக்கணும் என்பது விதிமுறையாம்...?!!  எல்லோரையும் அழைத்து யோசிக்க வைக்கணும் என்று ஒரு ஆசைதான். ஆனா பத்து பேரை மட்டும் தான் என்பதால் ரொம்ப கஷ்டப்பட்டு இவங்களை முன் மொழிகிறேன்......

சௌந்தர்
கணேஷ்
பாலாஜி சரவணன் 
இம்சை அரசன் பாபு
செல்வா  
வெறும்பய 
ஆனந்தி (அன்புடன் ஆனந்தி)
ஹேமா 
காயத்ரி (கவிநா)
தெய்வசுகந்தி

மேலும் தொடரை பற்றிய விவரங்கள் தெரிந்து கொள்ள இங்கே கிளிக்கவும் 
  


Tweet

66 comments:

 1. அக்கா வேலை அதிகம்..அதனால் அந்த தொடர்பதிவை 2012 ல் போடுறேன் சரியா?))

  ReplyDelete
 2. கடந்து போன நிகழ்வுகளை பசுமைமாற நினைவுகளாக அழகாக பகிர்ந்துள்ளீர்கள் அருமை

  பகிர்வுக்கு நன்றிங்க
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. இவ்வருடத்தில் இனிய நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் தொடர்ந்து அமையட்டும்!
  இந்த வருடமும் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் சிறப்பாக வாழ எனது வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.

  ReplyDelete
 4. நல்லா தான் திரும்பி பார்க்குறீங்க நீங்க திருப்பி பார்த்ததை நாங்களும் பார்த்துவிட்டோம்...அட நான் வேற திரும்பி பார்க்கணுமா சரி பார்த்துவிட்ட போச்சி.....

  ReplyDelete
 5. கணேஷ் said...
  அக்கா வேலை அதிகம்..அதனால் அந்த தொடர்பதிவை 2012 ல் போடுறேன் சரியா?))////

  அப்போ உலகம் அழிய போறதுக்கு நீ தான் காரணமா

  ReplyDelete
 6. நன்றாக திரும்பிப் பார்த்து இருக்கீங்க! :) நிகழ்ச்சிகளின் கோர்வையாய் அழகாய் வந்து இருக்கிறது உங்களின் இப்பதிவு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. சௌந்தர் said.../
  அதைத்தான் சொல்லாம சொன்னேன்..நீயாவது புரிஞ்சுகிட்டியே)))

  ReplyDelete
 8. நல்ல பகிர்வுகள்

  ReplyDelete
 9. உங்கள் நிகழ்வுகளை நிகழுக்கிழுத்து எங்களுடன் பகிர்ந்து உங்கள் மகிழ்ச்சியை எங்களுக்கும் கடத்தி நிறைவாய் முடித்துள்ளீர்கள் சகோ!

  //முக்கியமாக பதிவுலகம் விட்டு செல்லும் போது மனதில் ஒரு நிறைவுடன் விடை பெறணும் என்பதே! //
  என்னாது விடை பெர்றதா? நீங்க போறேன்னு சொன்னா விட்டுடுவோமா என்ன?!
  அந்த நெனப்பே கூடாது, இல்ல பிச்சு புடுவேன் பிச்சு ;)

  ReplyDelete
 10. சென்ற வருடம் பல நல்ல விசயங்களை தந்துள்ளது! தங்களைப் போன்ற நல்ல மனிதர்களையும்! காலத்திற்கு நன்றி!

  ReplyDelete
 11. திரும்பி பார்கிறேன் .
  நிச்சயமாக வாழ்கையில் நாம் திரும்பி பார்க்கும் அனுபவும் ரொம்ப தேவைன ஒன்று தான் .சோகமோ துக்கமோ .இது தேவை என்று தோன்றுகிறது
  கண்டிப்பாக நான் திரும்பி பார்கிறேன்

  ReplyDelete
 12. நன்றி தோழி.இப்பிடி ஒரு அன்புக்கட்டளை போட்டபுறம் எப்பிடி...கௌசி.உப்புமடச்சந்தியில் நேரம் எடுத்து எழுதறேன்.ஆனா இவ்ளொ அழகா விபரமா எழுதணுமே !

  ReplyDelete
 13. நல்ல நினைவலைகள். இந்த வருஷமும் இனியவையே நிகழட்டும்.. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. அருமை
  நல்ல பகிர்வுகள்
  அழகாக பகிர்ந்துள்ளீர்கள் :)

  ReplyDelete
 15. நல்ல விஷயங்கள் பாராட்டபட வேண்டும் ..
  நன்றாக எழுதுகிறீர்கள் ..
  தொடருங்கள் ..
  வலை உலகம் பெற்றுள்ள நல்ல எழுத்துலக எழுத்தாளினி நீங்கள்

  ReplyDelete
 16. வருடத்தை திரும்பிப் பார்க்கையில் வரும் நினைவுகளைப் பதிவுலகம் சார்ந்து வெளிப்படுத்தியிருக்கும் விதத்தில் என்னைப் பற்றிய உங்களின் சொந்தகருத்தினுக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

  மீண்டும்.............நன்றிகள்....கெளசல்யா! கண்ணோட்டம் அருமை!

  ReplyDelete
 17. உங்கள் தளத்திற்க்கான வாசகர்களை அதிகமாக்க, உங்கள் பதிவுகளை தமிழ் உலகம் - இல் இணைக்கவும்.

  ReplyDelete
 18. படிக்க சந்தோஷமாக இருந்தது. இந்த ஆண்டு இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. நல்ல பகிர்வு சகோதரி... கடந்தவற்றை திரும்பி பார்க்க கிடைத்த ஒரு நல்ல சந்தர்ப்பம்... நிச்சயமாக எழுதுகிறேன்... அழைத்தமைக்கு நன்றி,...

  ReplyDelete
 20. ஹாய் கௌசல்யா.. உங்கள் நட்பு கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சி. தொடர் பதிவிற்கு அழைச்சிருக்கீங்க... ரொம்ப நன்றிங்க..

  சீக்கிரம் எழுத முயற்சி பண்றேன்.. :-)

  உங்கள் சமூக உணர்வு... மதிக்கத் தக்கது.. மேலும் நீங்க, எழுதி உங்க லட்சியம் அடைய வாழ்த்துக்கள்..!
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. :-)

  ReplyDelete
 21. கௌஸ், நல்லா இருக்குப்பா. 2011 இனிதாக அமைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. அழகான நினைவுகள்! சீக்கிரம் தொடர்கிறேன்!

  ReplyDelete
 23. http://samaiyalattakaasam.blogspot.com/2010/12/blog-post_29.html

  நட்பு வட்ட அவார்டு கொடுத்துள்ளேன் பெற்று கொள்ளுங்கள் தோழி.

  உங்கள் சமூக சேவை முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
  உங்கள் பகிர்வுகள் அனைத்தும் அருமை

  ReplyDelete
 24. இன்னைக்கு காலையில் கூட எனக்கு மெயில் வந்துச்சு... ஏன் பெண்ணாக பிறந்தேன் என்ற தலைப்பில் உங்க ப்ளாக் அட்ரஸோட....;))

  வாழ்த்துக்கள்

  பதிவு அருமை

  ReplyDelete
 25. நீங்க திருப்பி பார்த்த விதம் நல்லாவே இருக்குங்க.
  நல்லவேளை தொடர்பதிவுல என் பேரு வரலை..

  ReplyDelete
 26. நல்லப் பகிர்வுகள்..

  மேலும் வளர வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 27. நினைவலைகள் அருமை.
  புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 28. இந்த ஆண்டாவது பதிவுலக சர்ச்சைகள் இன்றி இனிமையாக அமையட்டும்...

  ReplyDelete
 29. @கௌசல்யா

  ஆரம்பமே தொடர்பதிவா?? வெளங்கிடும். பார்த்து பார்த்து கழுத்து சுளுக்கிட போகுது. எல்லாரும் மெதுவா திரும்பி பாருங்க... :)

  ReplyDelete
 30. @கௌசல்யா

  //எனது உடன் பிறக்காத சகோதரர்கள் சௌந்தர்,கணேஷ்..... பாபு, செல்வா,ரமேஷ், terror ,அருண் பிரசாத்,சங்கவி,//

  பாருங்கடா நாலு பதிவுக்கு வந்து நக்கல் பண்ணிட்டு போனதுக்கு நம்மல கூட உடன் பிறவா சகோதரன் லிஸ்ட்ல சேர்த்து இருக்காங்க.. :))

  ReplyDelete
 31. எனக்கு பிடித்த அக்கா

  ReplyDelete
 32. கணேஷ் said...

  //அக்கா வேலை அதிகம்..அதனால் அந்த தொடர்பதிவை 2012 ல் போடுறேன் சரியா//

  எப்படியோ போட்டா சரி தான்...உன்ன தெரியாம கூப்பிடேனோ என்று இப்ப தோணுது :)))

  ReplyDelete
 33. மாணவன் said...

  //இந்த வருடமும் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் சிறப்பாக வாழ எனது வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.//

  உங்கள் வாழ்த்துக்கும் பிராத்தனைக்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 34. நான் கடந்த இரண்டாயிரத்து பத்தை திரும்பிப்பார்க்கும் அளவுக்கு அத்துனை இனிதாக இல்லைதான்.இருந்தாலும் அவை நம்முன் நிற்கும் அடுத்த ஆண்டை கடக்க தேவையான அனுபவ துடுப்பை கையில் தரும்.அதுகொண்டு இவாண்டையும் நம்பிக்கையோடு கடக்கலாம்..அதனால் நானும் திரும்மிப்பார்க்கிறேன்.

  எனது தளத்தில் எனது பார்வை கவியாக./..

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 35. ரொம்ப நீட் ஆ இருந்தது கௌசல்யா இந்த போஸ்ட்...எனக்கு புடிச்சது...

  ReplyDelete
 36. சௌந்தர் said...

  //அட நான் வேற திரும்பி பார்க்கணுமா சரி பார்த்துவிட்ட போச்சி...//

  நான் மட்டும் பார்த்தா எப்படி எல்லோரும் பார்க்கணுமே...அப்படி சொல்லித்தான் தொடர் எழுத சொன்னாங்க... :))

  ReplyDelete
 37. நிச்சயமா எழுதுறேன் அக்கா .. எனக்கும் இந்த ஆண்டு உங்கள் நட்பு கிடைத்ததில் மகிழ்ச்சியே.!

  ReplyDelete
 38. கடந்த போன வருஷத்த இவ்வளவு அழகாக்கூட திரும்பிப் பார்க்க முடியும்னு இப்போதான் தெரிஞ்சிக்கிட்டேன்! நீங்க செய்ய வேண்டிய பதிவுலக கடமைகள் இன்னும் நிறைய இருக்கு தோழி, தொடரட்டும் உங்கள் பதிவுலக பயணம்!

  "இனிய புத்தாண்டு 2011 நல்வாழ்த்துக்கள்"

  அப்புறம் உங்க நட்பு வட்டத்துல எனக்கும் ஒரு இடம் கொடுத்ததற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 39. @@வெங்கட் நாகராஜ்...

  வாழ்த்துக்கு நன்றி.  @@இரவு வானம்...

  நன்றிங்க.

  ReplyDelete
 40. @@Balaji saravana said...

  //உங்கள் நிகழ்வுகளை நிகழுக்கிழுத்து எங்களுடன் பகிர்ந்து//

  நல்ல follow !! :))

  //என்னாது விடை பெர்றதா? நீங்க போறேன்னு சொன்னா விட்டுடுவோமா என்ன?!//

  சொல்லிட்டு போனாத்தான...சொல்லாம போனா ?? :))

  //அந்த நெனப்பே கூடாது, இல்ல பிச்சு புடுவேன் பிச்சு ;)//

  என்னாது இது ?!! இப்படி எல்லாம் மிரட்டிட்டு... நான் பயந்திட்டேன் பாலா :))

  ReplyDelete
 41. @@எஸ்.கே said...

  //சென்ற வருடம் பல நல்ல விசயங்களை தந்துள்ளது! தங்களைப் போன்ற நல்ல மனிதர்களையும்! காலத்திற்கு நன்றி!//

  உங்களை போன்ற சிறந்தவரை பற்றி தெரிய வச்ச இந்த பதிவுலகத்திற்கு நான் தான் நன்றி சொல்லணும் சுரேஷ்.

  ReplyDelete
 42. @@இம்சைஅரசன் பாபு.. said...

  //திரும்பி பார்கிறேன்.சோகமோ துக்கமோ .இது தேவை என்று தோன்றுகிறது//

  மலரும் நினைவுகள் நிச்சயம் வேண்டும் பாபு...

  //கண்டிப்பாக நான் திரும்பி பார்கிறேன்//

  நன்றி. பார்த்து மெதுவா திரும்பி பாருங்க கழுத்து வலிக்க போகுது....
  :))

  ReplyDelete
 43. @@ஹேமா said...

  //இப்பிடி ஒரு அன்புக்கட்டளை போட்டபுறம் எப்பிடி...கௌசி.உப்புமடச்சந்தியில் நேரம் எடுத்து எழுதறேன்.ஆனா இவ்ளொ அழகா விபரமா எழுதணுமே !//

  எழுதுங்க ஹேமா படிக்க ஆவலாக இருக்கிறேன்...இவ்ளோ அழகா நானா? கிண்டலா ஹேமா ? உங்க எழுத்தை, கவிதையை படிச்சி உங்க மேல எனக்கு ஒரு பொறாமை இருக்குபா.

  இதை இத்தனை நாளா சொல்லாம இருந்தேன் இப்ப தன்னால வந்துடுச்சு...ம். உண்மை என்னைக்குனாலும் வெளியில் வரும்றது இதுதான் போல. :)))

  ReplyDelete
 44. அமைதிச்சாரல் said...

  //நல்ல நினைவலைகள். இந்த வருஷமும் இனியவையே நிகழட்டும்.. புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

  உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோதரி.

  ReplyDelete
 45. @@Harini Nathan ...

  ரசனைக்கு நன்றி தோழி.


  curesure4u said...

  உங்களின் முதல் வருகைக்கு நன்றிங்க...உங்களின் தளம் சென்று பார்த்தேன். மிக அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்

  ReplyDelete
 46. @@dheva said...

  உங்களை மாதிரியான நல்ல நண்பர்களை கொடுத்த பதிவுலகத்திற்கு என் நன்றிகள் பல.

  ReplyDelete
 47. @@பார்வையாளன் said...

  //படிக்க சந்தோஷமாக இருந்தது. இந்த ஆண்டு இன்னும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்//

  உங்கள் வாழ்த்திற்கும் தொடர்ந்த வருகைக்கும் மகிழ்கிறேன்...

  ReplyDelete
 48. வெறும்பய said...

  //கடந்தவற்றை திரும்பி பார்க்க கிடைத்த ஒரு நல்ல சந்தர்ப்பம்... நிச்சயமாக எழுதுகிறேன்...//

  ஆமாம். கண்டிப்பா இது ஒரு நல்ல சந்தர்ப்பம்.

  எழுதுங்கள் படிக்க ஆவலாக இருக்கிறேன்.

  ReplyDelete
 49. Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

  //உங்கள் நட்பு கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சி//

  அடபாவமே இன்னைக்கு தான் என் நட்பு கிடைச்சதா...?!! :(
  நாம ரொம்ப நாள் தோழிகள் அப்படிணுல நினைச்சிட்டு இருக்கிறேன் :))))

  //சீக்கிரம் எழுத முயற்சி பண்றேன்.. :-)//

  ரொம்ப நன்றி ஆனந்தி

  ReplyDelete
 50. @@பத்மா...

  உங்கள் வருகைக்கு நான்தான் நன்றி சொல்லணும்... :))

  ReplyDelete
 51. @@vanathy said...

  //கௌஸ், நல்லா இருக்குப்பா. 2011 இனிதாக அமைய வாழ்த்துக்கள்.//

  வாழ்த்துக்கு நன்றி வாணி


  @@தெய்வசுகந்தி said...

  //அழகான நினைவுகள்! சீக்கிரம் தொடர்கிறேன்!//

  நன்றி தோழி. விரைவில் எதிர்பார்கிறேன்.

  @@Jaleela Kamal said...


  //நட்பு வட்ட அவார்டு கொடுத்துள்ளேன் பெற்று கொள்ளுங்கள் தோழி.//

  விருதுக்கு நன்றி தோழி.

  உங்கள் வாழ்த்திற்கு மகிழ்கிறேன்.


  @@ஆமினா said...

  //இன்னைக்கு காலையில் கூட எனக்கு மெயில் வந்துச்சு... ஏன் பெண்ணாக பிறந்தேன் என்ற தலைப்பில் உங்க ப்ளாக் அட்ரஸோட....;))//

  அட அப்படியா...?? மகிழ்கிறேன் தோழி.

  விரைவில் எனக்கு கூட மெயில் வரும் என்று நினைகிறேன்பா :)))

  வாழ்த்துக்கும் இந்த தகவல் சொன்னதுக்கும் நன்றி ஆமினா.

  ReplyDelete
 52. @@அன்பரசன் said...

  //நல்லவேளை தொடர்பதிவுல என் பேரு வரலை..//

  பத்து பேர்தான் என்பதால் வரல...இன்னொரு தொடர் பதிவு வராமலா போய்டும் அப்ப முதல் பேர் உங்க பேர்தான். :)))

  ReplyDelete
 53. @@ Sriakila...

  வாழ்த்துக்கு நன்றி அகிலா.


  @@ அம்பிகா...

  நன்றி புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி.  @@ வழிப்போக்கன் - யோகேஷ்...

  வருகைக்கு நன்றிங்க.  @@ Philosophy Prabhakaran said...

  //இந்த ஆண்டாவது பதிவுலக சர்ச்சைகள் இன்றி இனிமையாக அமையட்டும்...//

  நல்ல எண்ணம்தான்...ஆனா சர்ச்சைகள் இல்லாமல் இருப்பது கொஞ்சம் சிரமம் தான். :))

  எங்கும் அமைதி நிலவட்டும் என்று விரும்புவோம்.

  ReplyDelete
 54. TERROR-PANDIYAN(VAS) said...


  //ஆரம்பமே தொடர்பதிவா?? வெளங்கிடும்.//

  புது வருசத்தில நல்ல வாழ்த்து சொன்னதுக்கு நன்றி. :)))

  //பார்த்து பார்த்து கழுத்து சுளுக்கிட போகுது. எல்லாரும் மெதுவா திரும்பி பாருங்க... ://

  அதைத்தான் பாபுட்ட நானும் சொல்லி இருக்கிறேன், முடிஞ்சா நீங்களும் அவர்கிட்ட இதை சொல்லிடுங்க. :))

  //பாருங்கடா நாலு பதிவுக்கு வந்து நக்கல் பண்ணிட்டு போனதுக்கு நம்மல கூட உடன் பிறவா சகோதரன் லிஸ்ட்ல சேர்த்து இருக்காங்க.. ://

  சகோதரங்க எல்லாம் இப்படித்தான் இருப்பாங்க. நக்கல் பண்ணபோய் தான் சகோதரன் லிஸ்ட்...!! :))

  ReplyDelete
 55. @@ சசிகுமார் said...

  //எனக்கு பிடித்த அக்கா//

  மகிழ்கிறேன் சரி. நன்றி
  @@ RAZIN ABDUL RAHMAN said...

  //நான் கடந்த இரண்டாயிரத்து பத்தை திரும்பிப்பார்க்கும் அளவுக்கு அத்துனை இனிதாக இல்லைதான்.//

  அதற்க்கு என்ன சகோ விடுங்கள் .நல்லதை மட்டுமே அடிக்கடி நினைக்க வேண்டும்.

  //இருந்தாலும் அவை நம்முன் நிற்கும் அடுத்த ஆண்டை கடக்க தேவையான அனுபவ துடுப்பை கையில் தரும்.//

  கண்டிப்பா...

  உங்கள் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 56. @@ ஆனந்தி.. said...

  //..ரொம்ப நீட் ஆ இருந்தது கௌசல்யா இந்த போஸ்ட்...எனக்கு புடிச்சது//

  மத்த போஸ்ட் எல்லாம் அழுக்கா இருந்துச்சா...?!!! டவுட்டு##

  :))

  ReplyDelete
 57. @@ கோமாளி செல்வா said...

  //நிச்சயமா எழுதுறேன் அக்கா .. எனக்கும் இந்த ஆண்டு உங்கள் நட்பு கிடைத்ததில் மகிழ்ச்சியே.//

  நன்றி செல்வா. மகிழ்கிறேன்

  ReplyDelete
 58. @@ பத்மஹரி said...

  //கடந்த போன வருஷத்த இவ்வளவு அழகாக்கூட திரும்பிப் பார்க்க முடியும்னு இப்போதான் தெரிஞ்சிக்கிட்டேன்!//

  அழகாவா ?!! என்ன இப்படி எல்லாம் ??

  //நீங்க செய்ய வேண்டிய பதிவுலக கடமைகள் இன்னும் நிறைய இருக்கு தோழி, தொடரட்டும் உங்கள் பதிவுலக பயணம்!//

  இது ரொம்ப ஓவர் ஹரி. :))

  //அப்புறம் உங்க நட்பு வட்டத்துல எனக்கும் ஒரு இடம் கொடுத்ததற்கு மிக்க நன்றி//

  உங்கள் நட்பு கிடைத்ததிற்கு நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்.

  வாழ்த்துக்கும் நன்றி ஹரி.

  ReplyDelete
 59. @Kousalya

  ////உங்கள் நட்பு கிடைத்ததில் எனக்கும் மகிழ்ச்சி//

  அடபாவமே இன்னைக்கு தான் என் நட்பு கிடைச்சதா...?!! :(
  நாம ரொம்ப நாள் தோழிகள் அப்படிணுல நினைச்சிட்டு இருக்கிறேன் :))))//

  ஹா ஹா... இல்லங்க.. Be Happy..

  உங்களுடைய ரொம்ப நாள் நட்பிற்கு நன்றி.. :-)))

  ReplyDelete
 60. @Ananthi...


  //ஹா ஹா... இல்லங்க.. Be Happy..

  உங்களுடைய ரொம்ப நாள் நட்பிற்கு நன்றி.. :-)//

  mm...o.k o.k :)))))

  ReplyDelete
 61. நன்றி. உங்கள் எழுத்தையும் கருத்துக்களின் செறிவையும் நானும் மிகவும் ரசிக்கிறேன். I am your fan as well.

  ReplyDelete
 62. @@ அப்பாதுரை said...

  // உங்கள் எழுத்தையும் கருத்துக்களின் செறிவையும் நானும் மிகவும் ரசிக்கிறேன்.//

  உங்களை ஏன் ரொம்ப நாளாக காணவில்லை. இன்னும் ஒரு வாரம் வரவில்லை என்றால்
  காணவில்லை விளம்பரம் கொடுக்கலாம் என்று இருந்தேன். நல்ல வேளை
  விளம்பர செலவை மிச்ச படுத்திடீங்க.

  தாமதமாக வந்தாலும் நினைவாய் வந்திருப்பதில் மகிழ்கிறேன்

  நலம் தானே...?!!

  //I am your fan as well.//

  என் பாக்கியம். நன்றிங்க.

  ReplyDelete
 63. கௌசல்யா ,இப்ப தான் இந்த தொடரை பார்க்கிறேன்,அருமை.எதிலும் ஒரு வித்தியாசத்தை கடைப்பிடிப்பது தான் உங்க சிறப்பு.பார்க்க ரொம்ப லேடாகிவிட்டது.தீடீரென்று தான் உங்களை நம் பக்கம் காணவேயில்லையே என்று வந்தால் இந்த பதிவு போட்டு இருக்கீங்க,ஏன் எப்படி உங்க பக்கம் வர மறந்தேன்னு தெரியலை தோழி,என் பார்வையில் இருந்து உங்க பதிவுகள் தப்பி விட்டது என்றே நினைக்கிறேன்.ரீடரில் அப்ப செக் செய்வது வழக்கம்.என்றாலும் தொடரை எழுதியமைக்கு மிக்க நன்றி.மகிழ்ச்சி.

  ReplyDelete
 64. @@ asiya omar said...

  //கௌசல்யா ,இப்ப தான் இந்த தொடரை பார்க்கிறேன்//

  நீங்க தான் தோழி என்னை மன்னிக்கணும், தொடரை எழுதியதும் உங்கள் தளத்தில் பின்னூட்டத்தில் சொல்லி இருக்கணும்...மறந்திட்டேன்பா. நான் எனக்கு தெரிந்த மாதிரி எழுதி இருக்கிறேன் தோழி, நான் அழைத்தவர்களும் பெரும்பாலோர் எழுதி விட்டார்கள் என்று எண்ணுகிறேன்.

  நன்றி தோழி.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...