சனி, நவம்பர் 27

AM 9:52
26


இந்த பதிவு வாழ்க்கைக்கு மிக அவசியமான விஷயத்தை பற்றி விரிவாக சொல்லகூடிய ஒரு நூலை பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.  தமிழில் அந்தரங்க உறவை பற்றி பல நூல்கள் வெளி வந்திருக்கலாம், ஆனால் நான் குறிப்பிட கூடிய இந்த நூல் மற்றவற்றை விட சற்று மாறுபட்டது என்று சொல்வேன். இந்த நூலை பற்றி நான் சொல்வதற்கு ஒரு முக்கியமான காரணம் அவர் சக பதிவர் என்பதுதான். அவரது பதிவுகள் பலவற்றை நான் படித்து இருக்கிறேன். பதிவுகளை நகைச்சுவையுடனும்,  நவீன அறிவியல் ஆய்வுகள் பாலியல் உறவுகள்  பற்றி என்ன சொல்கிறது என்பதையும் விரிவான விளக்கத்துடன் எழுதி இருப்பார். அவரது அந்த பதிவுகள் தான் இன்று அவரை ஒரு எழுத்தாளராகவும் உயர்த்தி  இருக்கிறது.

யார் இவர்.....? 

அவரது பெயர் ஹரிநாராயணன், அவர் பத்மஹரி என்ற பெயரில் பதிவுகள் எழுதி வருகிறார். கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலிருப்பு கிராமம் தான் இவரது சொந்த ஊர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உயிரிதொழில்நுட்பவியலில் முதுகலைப்பட்டம் பயின்று முதலிடத்தையும், தங்கபதக்கத்தையும் வென்றவர். தற்போது ஜப்பானில் புற்றுநோய் ஸ்டெம் செல் குறித்த ஆய்வை (Ph.D) தொடர்ந்து வருகிறார். பெண்களின் மார்பகப்புற்று நோய்க்கான அடிப்படைக் காரணங்களை அறியும் முயற்சியில்  ஈடுபட்டுள்ளார். ஒரு தமிழனாய் இவரது ஆய்வு பயணம் மேலும் தொடர்ந்து சாதனை நிகழ்த்த நாம் இவரை வாழ்த்துவோம்.

நூலை குறித்த எனது விமர்சனம்

 உலகின் பல்வேறு நாடுகளில் நடத்தப்படும் அறிவியல் மற்றும் மருத்துவ துறை சார்ந்த ஆய்வுகளில் இருந்து மிக முக்கியமான தகவல்களைத் தொகுத்து எழுதப்பட்ட தமிழின் முதல் நூல் என்பதில் சந்தேகம் இல்லை. கொஞ்சமும் ஆபாச கலப்பு இல்லாமல்,  மிக எளிமையான எழுத்து நடையில் எழுத பட்டிருக்கிறது. மேலும் செக்ஸ் என்பது உடம்பில் ஏற்படும் ரசாயன மாற்றத்தால் தான் என்பது எல்லோருக்கும் தெரியும். இதை ஒரு ஆராய்ச்சியாளரான இவர்  அறிவியலுடன் சம்பந்த படுத்தி எழுதி இருப்பது செக்ஸ் பற்றிய குழப்பங்களையும், பயத்தையும் கண்டிப்பாக போக்கும் என்பது நூலை படித்த பின் எனக்கு தோன்றிய ஒரு எண்ணம்.

செக்ஸ் பற்றி பேசுவதே பெரிய குற்றம் என்ற மனோபாவம் நம்மிடையே இருப்பதால் தான் பல புரிதல்கள்  இல்லாமல் தாம்பத்தியம் பல வீடுகளில்  தள்ளாடி கொண்டு இருக்கிறது. சில தெளிவுகள் நிச்சயம் தேவை. அதற்கு இந்த நூல் கண்டிப்பாக உதவும்.

ஹார்மோன்களுடன் தொடர்புடைய சில நோய்கள், பாலியல் உறவுகளின் இயல்பு, பாலியல் வக்கிரங்கள், குற்றங்கள் போன்றவற்றையும், திருநங்கைகள், ஓரினச்சேர்கையாளர்கள், பாலியல் குற்றவாளிகள் உருவாக காரணம் என்ன என்பதையும் எழுதியுள்ளார். இவற்றை  பற்றி சமீபத்திய ஆய்வுகள் என்ன சொல்கிறது என்பதையும் சேர்த்து எழுதி இருப்பதன் மூலம்  சொல்லப்பட்டு இருக்கும் விசயத்தின் நம்பகத்தன்மையை புரிந்து கொள்ளமுடிகிறது.


மேலும் சில சுவாரசிய துளிகள்

* கள்ளகாதல் எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் ஒரு காரணமாக மரபணுக்கள் இருக்கின்றன என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது...

40 %  மரபணுக்கள் காரணம்
60 %  வளர்க்கப்பட்ட விதம் மற்றும் சுற்றுபுறசூழல்

மரபணுக்களில் இருந்தால் இதை தவிர்க்க என்ன செய்யலாம் என்பதற்கு தீர்வையும் சொல்லி இருக்கிறார்.

* பெண்கள் வயதாக வயதாக பிறருக்கு உதவுவதையும், சேவை செய்வதையும் விரும்புகிறார்கள் என்பதை ஆய்வு சொல்கிறது.

*  திருமணதிற்கு பின் பலவருடங்களாக தான் குடும்பத்துக்கு உழைக்கும் பெண்கள் முதுமையில் அவர்களுடைய ஆசாபாசங்கள், லட்சியங்கள் போன்றவற்றிற்காக அதிக நேரம் செலவிடவே விரும்புகிறார்கள்...... தீர செயல்களை புரிய துணிகிறார்கள்...!

* பெண்கள் உள்ளுணர்வு மிக்கவர்கள், முகபாவங்கள் சைகைகள் போன்றவற்றில் ஒளிந்திருக்கும் பேசாத வார்த்தைகளின் அர்த்தங்களை கண்டறியும் திறன் பெற்றவர்கள் என்பதை ஆய்வுகள் நிரூபிக்கின்றன...


நூலின் உள்ளே…..
பாலியல் சுவாரசியங்கள்!
முத்தமும் வைரஸும்.
மதுவும் செக்ஸும்…..
அரிதான பாலியல் உடலியக்கங்களும், விளைவுகளும்!
திருநங்கைகள்/அரவாணிகள் பற்றிய முழுவிவரங்கள்; அறிவியல் பின்புலத்திலிருந்து மருத்துவம் வரை…..
ஓரினச்சேர்க்கையாளர்கள்; ஏன் பிறக்கிறார்கள், எப்படி உருவாகிறார்கள் இன்னும் பல தகவல்கள்…..
சமுதாயத்தின் சில பாலியல் பேரவலங்கள்/வக்கிரங்களும், தீர்வுகளும்!
கள்ள உறவுகள்; அதிர வைக்கும் அறிவியல் பின்புலம், உளவியல் காரணங்கள் மற்றும் தீர்வுகள்…..
பீடோஃபீலியா; குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை: காரணங்கள், தீர்வுகள்…..
பாலியல் புதிர்கள்!
உச்சகட்டம்; புதிரா புனிதமா?: உச்சகட்டம் குறித்த பலவகையான விளக்கங்கள் மற்றும் பயன்கள்…..
இதில் முத்தமும் வைரசும் என்பதை படிக்கும் போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது.....முத்தம் கொடுத்தால் பரவுகிற கிருமி ஒண்ணு இருக்கிறதாம்...(இதற்கு மேல் இங்கே விரிவாக சொன்னால் நூலை படிக்கும் போது சுவாரசியம் இருக்காது... ) ஆனால் ஒரே ஆடவனை/கணவனை  கர்ப்பம் தரிப்பதற்கு ஆறு மாதங்களுக்கு  முன் மனைவி முத்தமிட்டால் சைட்டோமேகாலோ வைரசுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை அப்பெண் பெற்று விடுகிறாள் என்கிறது ஆய்வு.  கருவுற்றபின் பிறக்க போகும் குழந்தையையும் ஆபத்தான வைரசிடம் இருந்து காப்பாற்றுகிறதாம்.


(முத்தம் கொடுப்பதிலும் கலந்திருக்கிறது
காதல் வைரஸ். ஒருவனுக்கு ஒருத்தி என்ற
கலாச்சாரம்தான் சரியானது என்பதை 
அறிவியலும் அங்கீகரிக்கும் அதிசயம்.....!)

ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரம் தான் சரி என்பதை அறிவியலும் அங்கீகரிக்கிறதை புரிந்து கொள்ள முடிகிறது....! (இந்த இடத்தில் லிவிங் டுகெதர்  நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பில்லைங்க ......?!)  

ஜேம்ஸ்பாண்டையும் விட்டுவைக்கவில்லை இவர்....! ஒவ்வொரு தலைப்பும் வித்தியாசம் தான், படிக்கவும்  வெகு சுவாரசியமாக இருக்கிறது.

சமீப காலமாக  மருத்துவரிடம்  கவுன்செல்லிங் செல்வது அதிகரித்து வருகிறது , அப்படி செல்பவர்கள் இந்த நூலை படித்தால் தெளிவு பெறுவார்கள் என்பது நிச்சயம்....

ப்ளாக்ஹோல் மீடியா பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டு இருக்கிறது...
நூலின் விலையும் அதிகம் இல்லை 130/- மட்டுமே  

இந்த நூல் கிடைக்குமிடம்:
Blackhole Media  Publication Limited,
No.7/1, 3-rd Avenue, Ashok nagar,
Chennai-600 083. India
மேலும் அனைத்து ஊர்களிலும் இந்த நூல் கிடைக்கிறது.

இந்த நூல் வேண்டுவோர், உடனே தொடர்பு கொள்க.மின்னஞ்சல்:admin@blackholemedia.in  
செல்பேசி:+91 9600086474 ,+91 9600123146



Tweet

26 கருத்துகள்:

  1. பதிவர் எழுதிய நூலா நல்ல விசயம்...நன்றாக அறிமுகம் செய்து உள்ளீர்கள்

    பதிலளிநீக்கு
  2. நல்ல அறிமுகம் கௌசல்யா.

    சென்னை செல்லும்போது வாங்கி விடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. Gopi Ramamoorthy...

    ஆன்லைன் மூலமாவும் இந்த நூலை வாங்கலாம் நண்பரே, வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. தேவையானா நூல் தான் என்று நினைக்கிறன் .....நல்லா அறிமுகம்

    பதிலளிநீக்கு
  5. //இந்த இடத்தில் லிவிங் டுகெதர் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பில்லைங்க ......?/
    /
    இப்படி சொல்லி தப்பிக்க கூடாது .......நாங்க நினைப்போம்லா

    பதிலளிநீக்கு
  6. நூலறிமுகத்திற்கு நன்றிகள்...

    ஹரி நாராயணனோட வலைப்பூ படிச்சு இருக்கேன்....

    இன்ரஸ்டிங்கா இருக்கு...வாங்கிப் படிச்சுடலாம்...!

    பதிலளிநீக்கு
  7. இந்த இடத்தில் லிவிங் டுகெதர் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பில்லைங்க ......?!) //

    அன்பின் கெளசல்யா ,

    லிவிங்-டுகெதரிலும் ஒருவனுக்கு ஒருத்திதான்...

    பலர் தவறா புரிந்துள்ளார்கள்...

    ஒருவனுக்கு பல பெண்ணோ , ஒருத்திக்கு பல ஆணோ அல்ல .. லிவிங்-டுகெதர் என்பது..

    அதை எந்த நாட்டு சட்டமும் அங்கீகரிப்பதில்லையே...சில மதம் தவிர்த்து..

    ----

    பத்மஹரிக்கு வாழ்த்தும் பாராட்டும்..

    பதிலளிநீக்கு
  8. பகிர்வுக்கு நன்றி, கௌசல்யா

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா12:26 PM, நவம்பர் 27, 2010

    நல்ல அறிமுகம் சகோ..
    நானும் வாங்கி விடுகிறேன்

    பதிலளிநீக்கு
  10. வாசிக்க வாசிக்க நல்லா இருக்கு

    பதிலளிநீக்கு
  11. அவரின் வலைதளத்தின் வாசகன் என்பதால் அவரின் எழுத்துக்களின் மதிப்பை புரிந்துகொள்ள முடிகிறது!

    பதிலளிநீக்கு
  12. //ஒரு தமிழனாய் இவரது ஆய்வு பயணம் மேலும் தொடர்ந்து சாதனை நிகழ்த்த நாம் இவரை வாழ்த்துவோம்.\


    நிச்சியமாக வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  13. நல்லா அறிமுகம் செய்திருக்கீங்க கௌசல்யா. ஹரியை பற்றி தெரிந்து கொண்டோம். நன்றி பகிர்வுக்கு. அவரது புத்தகம் படிக்க ஆவலாக உள்ளேன்.

    ஹரிக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. நன்றாக அறிமுகம் செய்து உள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  15. ஆயிரமாயிரம் நன்றிகள் தோழி. இந்த நூலை அறிமுகம் செய்யுமளவுக்கு அது தகுதியானதுதானா என்னும் ஐயம் எனக்கிருந்தது. ஆனால், அந்தத் தகுதிச்சந்தேகத்தையும் தாண்டி, எனக்கொரு அறிமுகம் தந்து, அங்கீகரித்தமைக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். நண்பர்களின் வாழ்த்துக்கள், ஊக்கங்களுக்கு என் பணிவான வணக்கங்களும், மனமார்ந்த நன்றிகளும். மருத்துவம் சார்ந்த நூல்களை எழுத வேண்டும் என்ற என் லட்சியத்துக்கு இந்த முதலனுபவம் மிகுந்த ஊக்கமும், நம்பிக்கையும் அளிக்கிறது. தோழி கௌசல்யாவுக்கும், வாழ்த்திய அனைத்து நட்புள்ளங்களுக்கும் மீண்டும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

    பதிலளிநீக்கு
  16. நூல் எப்படி இருக்கும்னு தெரியல. ஆனா உங்க விமர்சனம் சூப்பர். புத்தகத்தை படிக்கத் தூண்டும்விதமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  17. //.முத்தம் கொடுத்தால் பரவுகிற கிருமி ஒண்ணு இருக்கிறதாம்...//

    ஆச்சர்யமாக இருக்கு அக்கா .!! நல்ல விமர்சனம் பண்ணிருக்கீங்க . நிச்சயம் வாங்கிப் படிக்கிறேன் ..!!

    பதிலளிநீக்கு
  18. நல்ல நூல் அறிமுகம் ,உங்களுக்கும், எழுத்தருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்,


    தயவு செய்து எனக்கு போன் செய்யாதீங்க...!

    http://erodethangadurai.blogspot.com/

    பதிலளிநீக்கு
  19. விறுவிறுப்பான அறிமுகம்.

    (முத்தம் கொடுத்தால் வைரஸ் வரும் என்பதெல்லாம் - குளிர்காய்ச்சல் இருக்கும் நேரம் தவிர - புரளி என்று நம்புகிறேன்.)

    பதிலளிநீக்கு
  20. அடுத்த அறிமுகம் எப்போது ?

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...