Wednesday, November 24

1:16 PM
52'நவம்பர் 19 '  ஒரு முக்கியமான நாள் ஆண்களை பொறுத்தவரை....! பெண்கள் தினம் ஒன்று இருப்பது போல் ஆண்களுக்கும் ஒரு தினம் இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது, ஏன் சில ஆண்களுக்கே கூட தெரியாமல் இருக்கலாம். ஆண்களைக் கௌரவபடுத்தவும்,ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்காகவும் தான் உலகம் முழுவதும் இந்த தினம் கொண்டாடபடுகிறது....இதை படிக்கும் போது ஆண்களுக்கு என்ன ஆனது, நல்லாதானே இருக்கிறார்கள்.....இந்த உரிமை, பாதுகாப்பு என்ற வார்த்தையெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலையா என்று நினைக்கலாம்....! ஆனால் பதிவை தொடர்ந்து படிக்கும் போதுதான்  நான் சொல்வது எந்த அளவிற்கு சரி என்பது புரியும்.


இன்றைய அவசர யுகத்தில் ஆண்கள் குடும்பத்திலும், வெளியிலும் பல பொறுப்புகளை கவனித்து வந்தாலும் அவர்களின் தியாகங்கள் பெரும்பாலும் மறக்கடிக்கபடுகின்றன அல்லது மறைக்கப் படுகின்றன.  அதை நினைவு கூறி 'ஆண்குலத்தின் பெருமையை சமுதாயம் அங்கீகரிக்க இந்த நாளை கொண்டாடுவதில் என்ன தவறு இருக்க முடியும்' என்ற கேள்வியை முன் வைத்து இந்த தினம் கொண்டாடி முடிக்கப்பட்டுவிட்டது.            


எனது தாம்பத்திய தொடரின்  ஒரு பதிவில்  'ஒரு ஆதங்கத்தில் ஆண்களும் எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கூடிய சீக்கிரம் போராட போகிறார்கள்' என்று எழுதி இருந்தேன். ஆனால் அது இவ்வளவு சீக்கிரம்  நடக்கும் என்று நினைக்கவில்லை. இப்போது ஆண்கள் சங்கம் சார்பில் எங்களுக்கும்  பாதுகாப்பு சட்டம்  கொண்டு வர வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாம். இது நாளிதழில் வந்த செய்தி. 

எவ்வளவு காலம் தான் இந்த ஆண்களும் பொறுமையா இருப்பார்கள்....?!!

ஏன் இந்த நிலை..?

முன்பு ஆண்கள், பெண்களை அடிமை படுத்தினார்கள் என்பது உண்மையாக இருக்கலாம் ஆணாதிக்க உலகம் என்றும் பெயரும் வைத்தார்கள். என்னை பொறுத்த வரை இந்த ஆணாதிக்கம், பெண்ணுரிமை என்ற வார்த்தைகளில்  என்றும் முழு உடன்பாடு இருந்தது இல்லை. (தவிரவும் இந்த பதிவிற்கு அதை பற்றிய வாதங்களும் , கருத்துக்களும் தேவை இல்லை என்பதால் ஒரு சில வார்த்தைகளுடன் நிறுத்தி கொள்வது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்) பெண் உடல்ரீதியாக, மன ரீதியாக துன்புறுத்த பட்டாள், பல திறமைகள் அவளிடம் இருந்தும்  வீட்டுக்குள்ளேயே முடக்கி வைக்க பட்டாள். அப்புறம் நம்ம பாரதியார் வந்தார், புதுமை பெண்களாக மாறவேண்டும் என்றார். 'அடிமை விலங்குகளை அறுத்து எறிந்து விட்டு வெளியே வாருங்கள் புதுமைகளை சமையுங்கள்' என்று பெண்களுக்காக குரல் எழுப்பினார், புதுமை கவிஞன் நம் பாரதி.

இன்றைய நம் பெண்களும் இது தான் பாரதி சொன்ன புதுமை போல என்று புரிந்துக்கொண்டு பலவிதங்களில் தங்களை மாற்றிக்கொண்டு நடை பயிலுகிறார்கள். அவர்களுக்கு தவறாக தெரியாத வரை எதுவும் தவறில்லை தான் . ஆண்களுடன் எல்லா துறைகளிலும் பெண்கள் போட்டி போட்டு கொண்டு முன்னேறி கொண்டே செல்கிறார்கள். சந்தோசமாக இருக்கிறது. 'ஆணிற்கு பெண் இளைப்பில்லைக் காண்'  என்பதை நிரூபித்து கொண்டிருக்கிறார்கள். ஒரு பெண்ணாக பெருமையாக இருக்கிறது. ஆனால் இன்றைய சில பெண்களால் பல ஆண்களும் கடுமையாக அவதி படுகிறார்கள் என்பதை எண்ணி வருந்துகிறேன். 

அரசாங்கமும் பெண்களுக்கு சாதகமான பல சட்டங்களை இயற்றிக்கொண்டே இருக்கிறது. இந்த பதிவிற்கு அவசியமான இரண்டு சட்டங்களை இங்கே குறிபிடுகிறேன்.

1. வரதட்சணை கொடுமை 
2. குடும்ப வன்முறை தடுப்பு சட்டம்.

இரண்டும் பெண்களுக்கு பாதுகாப்பு தரும் மிக முக்கியமான சட்டங்கள் தான். இதே சட்டங்கள் ஆண்களை படுத்தும் பாடு சொல்லி முடியாது. சில பெண்கள் தங்களின் சுயநலத்திற்காக இந்த சட்டங்களை பயன்படுத்துகிறார்கள் என்பது தான் பாதிக்கப்பட்ட ஆண்களின் வேதனைக்கு காரணம். தன்  கணவன் மேல் ஏதும் காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டால் உடனே அந்த பெண் கொஞ்சமும் யோசிக்காமல் போலீஸ்  ஸ்டேஷன் சென்று தன் கணவன் மேல் புகார் கொடுத்து விடுகிறாள்.

அங்கேயும் இந்த ஆணை ஒருதலை பட்சமாகவே தான் விசாரிக்கின்றனர். இன்னும் சொல்ல போனால் சில இடங்களில் விசாரிப்பதே இல்லை. பெண் வந்து புகார் செய்து விட்டால் அந்த ஆண் குற்றவாளி தான் என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்கப் படுகிறான். அவனது சொல், வாதம்  பெரும்பாலும் ஏற்க படுவதில்லை  என்பதே உண்மை. சில நேரம் அந்த ஆணுடன் அவனது அம்மா, அப்பா , உடன் பிறந்தோர் போன்றோரும் சேர்த்தே  குற்றவாளி ஆக்கப்பட்டு தண்டிக்க படுகிறார்கள். (மாமியார், நாத்தனார் போன்ற பெண்களும் இந்த சட்டத்தால் பாதிக்கபடுகிறார்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.....!)

என்னை மிகவும் பாதித்த  ஒரு உண்மை சம்பவம் ஒன்று,

கடந்த  மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்தது. எனது உறவினர் ஒருவரின்  மகனுக்கு அப்போது திருமணம் முடிந்து ஆறு மாதமே முடிந்த சமயத்தில் மகனுக்கும் மருமகளுக்கும் நடந்த ஒரு சண்டையின் முடிவில் அந்த பெண் கொஞ்சமும் யோசிக்காமல் தனக்கு தீவைத்து கொண்டு இறந்து விட்டாள். திருமணம் முடிந்த ஆறு மாதத்திற்குள்  இந்த சம்பவம் நடைபெற்றதால், போலீஸ் விசாரணையின் முடிவில் அந்த பெண்ணின் கணவன், மாமனார், மாமியார், கணவனின் தம்பி உள்பட நாலு பேரையும் குற்றவாளிகள் என்று கைது செய்து விட்டார்கள். இதில் பரிதாபம்  என்னவென்றால் இதில் கொஞ்சமும் சம்பந்த படாதவன்  இந்த கணவனின் தம்பி. அவன்  அப்போது  ஹாஸ்டலில் தங்கி மருத்துவ  கல்லூரியில் படித்து கொண்டிருந்தான்   

அதற்கு பிறகு இரண்டு வருடங்களாக கோர்ட், கேஸ் என்று பல்வேறு அலைகழிப்புக்கு பிறகு இப்போது விடுதலை செய்யப் பட்டுள்ளனர். அந்த பெண்ணின் அவசர புத்தியும், பிடிவாதமும் தான் அவளது தற்கொலைக்கு காரணம் என்றும் அவளது கணவன் மற்றும் வீட்டினர் அப்பாவிகள் என்றும் தீர்ப்பளித்து உள்ளனர். (திருமணத்திற்கு முன்பே அந்த பெண் தனது தாழ்வு மனப்பான்மையால் இரு முறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றபட்டு இருக்கிறாள் என்பது  பின்னர் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது....!?)
(பையனின் வீட்டாரும் பெண் வீட்டார் கொடுத்த அத்தனை சீதனங்களையும் பெண் இறந்த சில நாட்களில் கொடுத்து விட்டனர்..... தன் பெண்ணை பற்றி சரியாக தெரிந்து இருந்தும் பெண் இறந்த வருத்தத்தில் புகார் கொடுத்து இருக்கிறார்கள்)

காரணம் எதுவாகவும் இருந்து விட்டு போகட்டும்...இரண்டு வருடமாக இந்த நால்வரும் பட்ட அவமானங்கள்,சந்தித்த ஏளன பார்வைகள், அனுபவித்த இன்னல்கள், மன உளைச்சல்கள்.......என்னவென்று சொல்வது....?!!மருத்துவம் படித்து வந்த அந்த பையனின் படிப்பு நின்றுவிட்டது....இப்போது வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறான் . அந்த பெண் ஒரே நாளில் தன்  வாழ்க்கையை முடித்து நிம்மதி அடைந்து விட்டாள்...ஆனால் இவர்கள் இன்று வரை நடைபிணங்களாக வாழ்ந்து வருகிறார்கள். பல உதாரணங்கள் இருக்கின்றன இது போல்.


இந்த மாதிரியான சென்சிடிவான விசயங்களில் நிதானமாக ஆராய்ந்து  அனைத்தையும், சம்பந்த பட்ட இரண்டு  பக்கங்களையும் விசாரிக்க வேண்டியது முக்கியம்.  

குடும்ப வன்முறை தடுப்பு சட்டம்

தன் கணவனை கட்டுபடுத்த சில பெண்கள் எடுக்கும் ஒரு ஆயுதம் தான் இந்த குடும்ப வன்முறை தடுப்பு சட்டம். ஆண், பெண் இருவருக்கும் இடையிலான பெரும்பாலான பிரச்னைகள்  எல்லாம் செக்ஸ் குற்றங்களாகவே பார்க்க படுவதால் பல ஆண்களும் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றனர். பிடிக்காத ஆண் மேல் செக்ஸ் புகார் கொடுத்து ஆண்களை சில பெண்கள் பழி வாங்குகின்றனர். 

அப்படி எல்லாம் இல்லை என்று மறுப்பு சொல்ல முடியாத அளவிற்கு சில புள்ளி விவரங்கள் இதை நிரூபிக்கின்றன...

சில புள்ளி விவரங்கள் 

*  கடந்த 12 ஆண்டுகளில் மனைவியால் விளைந்த கொடுமையால் 1,70,000 மணமான ஆண்கள்  தற்கொலை செய்துள்ளனர்.  

*  2001   ஆம் ஆண்டு வரை 13 லட்சம் ஆண்கள் வேலை  இழந்துள்ளனர்......!?

*  திருமணம் ஆன மூணு ஆண்டுகளுக்குள் 98 சதவீத ஆண்கள் பலவிதமான சித்திரவதைக்கு ஆளாகின்றனர்.  

*  ஆண்டுக்கு 80 லட்சம் ஆண்கள் பல்வேறு குற்றசாட்டுகளுக்காக கைதாகின்றனர். இதில் 85 சதவீத கைது தேவை இல்லாதவை என்று தேசிய போலீஸ் கமிசன் கருத்து தெரிவித்துள்ளது....!? கைதான நபர்களில் இருபது சதவீத பேர் மீதான குற்றம் மட்டும்தான் நிரூபிக்கப்பட்டுள்ளது.....! 

* இந்த புள்ளிவிவரங்களை வைத்து ஆண்கள் மீதான குற்றங்களை விசாரித்து நியாயமான தீர்ப்பு வழங்க ஆண்களுக்கான தேசிய கமிசன் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

ஆண்கள் சங்கம் தங்களது கோரிக்கைகள் என்று சிலவற்றை முன் வைத்துள்ளன அதில் சில......


* பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவிக்கும் அரசுகள், ஆண்கள் விசயத்தில் அக்கறை காட்டுவதில்லை. 

* கள்ள உறவு, அதன் தொடர்பான கொலைகளை தடுத்திட இ.பி.கோ 497 சட்டத்தினை திருத்தி ஆண், பெண் இருவருக்கும் தண்டனை வழங்கிட வேண்டும்.

* குடும்ப வன்முறை சட்டம் 205 ஐ நீக்க வேண்டும்

இவை எல்லாம் சமீபத்தில் ஆண்கள் சங்கம் மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பிய கோரிக்கைகள்....
                                                                                                                               நன்றி - நாளிதழ்கள்   
ஆண்களுக்கு மறுக்கப்படும் சில நல்லவைகள்

* பெண்களின் பலவகை நோய்களையும் கண்டறிய கட்டாய ஸ்க்ரீனிங் (screening) செயல்பாடுகள் இருக்கின்றன. ஆனால் ஆண்களை மட்டுமே தாக்கும் ப்ராஸ்ட்ரேட் புற்றுநோய், இதய அடைப்பு போன்ற நோய்களை ஆரம்பத்தில் கண்டறியக்கூடிய வசதி  இல்லை என்பது ஆண்களின் வருத்தம். இந்த வசதி இல்லாததால் பல மரணங்கள் ஊக்கிவிக்கபடுகின்றன. 

* சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகள் முடிந்தும் ஆண்கள் நலனுக்காக என்று இந்திய அரசு ஒரு ரூபாய் கூட செலவழிக்கவில்லை என்பது நல்ல செய்தி இல்லை....!

*  குடும்ப வன்முறை என்பதே ஆண் தான் செய்வான் பெண்கள் செய்யவே மாட்டார்கள் என்று திட்டவட்டமாக சட்டத்தில் இருக்கிறதாம்...!?

*  விவாகரத்து பெறும் போதும் சட்டரீதியாக குழந்தைகள் தந்தையரிடம் வளர பெரும்பாலும் அனுமதி  மறுக்கபடுகிறது (பெண் குழந்தைகள் விதிவிலக்கு) ஏன் தாய்க்கு இருக்கும் அதே பாசமும் அன்பும், அக்கறையும் அந்த தந்தைக்கு இருக்காதா....?? தந்தையை பிரிந்து  வாழும் அந்த குழந்தைக்கு தந்தை என்ற உறவின் மீதே வெறுப்பு வந்து விடுவதை தவிர்க்க முடியாது. எதிர்காலத்தில் தந்தை என்ற உறவை அறியாத இளம் சமூகம் உருவாகும் அபாயமும் உள்ளது. 

*  பல பணிகளுக்கு  ஆண்கள் மறுக்கபடுகிறார்கள்.

*  பெண்களும் நன்றாக சம்பாதித்து வரும் இன்றைய காலகட்டத்தில் விவாகரத்திற்கு  பின் ஆண் அதிக அளவில் ஜீவனாம்சம் (குழந்தைகளை காரணம் வைத்து) கொடுக்க வேண்டி இருக்கிறது வாழ் நாள் முழுதும்...!  

இதை போல் பல விசயங்கள் இன்னும் இருக்கின்றன...!  

'இந்திய ஆண்கள் முன்னேற்ற இயக்கம்' என்னும் அமைப்பு துவங்கப்பட்டு ஆண்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வருகிறது....! 


Tweet

52 comments:

 1. ஒரு நிமிஷம் அழுதுவிட்டு வரேன் பாவம் அண்ணன்கள் எல்லாம் படும் கஷ்டத்தை எழுதி இருக்கீங்க மத்தபடி அண்ணன்கள் கமெண்ட் போட்டு உங்கள் கோபத்தை (மனக்குறையை) தீர்த்து கொள்ளுங்கள்

  ReplyDelete
 2. மிக அருமையான பதிவு.
  நல்லா அலசி இருக்கீங்க.

  ReplyDelete
 3. நல்லா அலசி இருக்கீங்க.

  ReplyDelete
 4. some busy. regards kouslya :-)

  ReplyDelete
 5. ஆண்களுக்காக வருத்தபட நீங்க ஒரு ஆளாவது இருக்கீங்களே..சந்தோசம்..

  ReplyDelete
 6. மிகச் சிறப்பாக தகவல்களை தொகுத்திருக்கீங்க சகோ..
  சந்திரபாபு பாட்டுத் தான் நினைவுக்கு வருது.. :)

  //குடும்ப வன்முறை என்பதே ஆண் தான் செய்வான் பெண்கள் செய்யவே மாட்டார்கள் என்று திட்டவட்டமாக சட்டத்தில் இருக்கிறதாம்.//

  என்ன கொடும சார் இது :(

  ReplyDelete
 7. இப்போது எல்லாம் சின்ன பிரச்னை என்றாலே வரதட்சணை கொடுமை சட்டம் தான் பாய்கிறது இப்படியே சென்றால் இந்த சட்டத்தில் சில மாற்றங்கள் வரும் அது உண்மையா இருப்பவர்களுக்கு ஆபத்து ஏதாவது தற்கொலை என்றால் எந்த கேள்வியும் இல்லை குடும்பம் முழுவது தூக்கி உள்ளே வைத்து விடுவார்கள் சட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரவேண்டும்...

  எனக்கு தெரிந்த வீட்டில் இப்படி தான் நீ போலீஸ்ல் வரதட்சணை புகார் கொடு அப்போது தான் உன் கணவர் தனிய வருவர் என்று யாரோ சொல்லி இவரும் புகார் கொடுத்து அவரை போலீஸ் கைது செய்து விட்டது ஆண்களையும் போலீஸ் நம்ம வேண்டும்

  ReplyDelete
 8. மிகச்சிறப்பாகத் தகவல்களைக்கொடுத்திருக்கீங்க.

  ReplyDelete
 9. //யாதவன் said...
  அருமை நண்பரே...//

  அது நண்பரே இல்லீங்க நண்பியே.

  ReplyDelete
 10. மிக நல்ல பதிவு! அருமையா எழுதி உள்ளீர்கள்!

  ReplyDelete
 11. //ஆண்களுக்கே கூட தெரியாமல் இருக்கலாம். ஆண்களைக் கௌரவபடுத்தவும்,ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்காகவும் //

  என்னைக்கு கல்யாணம் முடிஞ்சிதோ அன்னைக்கே விழிப்புணர்வு என்ற வார்த்தையே மறந்து போச்சே

  ReplyDelete
 12. //இன்றைய அவசர யுகத்தில் ஆண்கள் குடும்பத்திலும், வெளியிலும் பல பொறுப்புகளை கவனித்து வந்தாலும் அவர்களின் தியாகங்கள் பெரும்பாலும் மறக்கடிக்கபடுகின்றன அல்லது மறைக்கப் படுகின்றன. //

  நீங்களாவது எங்களை புரிஞ்சிகிடீன்களே ..............

  ReplyDelete
 13. நல்ல பதிவு.அருமையா எழுதியிருக்கீங்க..

  ReplyDelete
 14. Blogger சௌந்தர் said...

  ஒரு நிமிஷம் அழுதுவிட்டு வரேன் பாவம் அண்ணன்கள் எல்லாம் படும் கஷ்டத்தை எழுதி இருக்கீங்க


  ..... Same here. :-(

  ReplyDelete
 15. மிக நீண்ட பதிவு.பாவம் அந்த மருத்துவம் படித்த மாணவன்.நல்ல அலசல்.நிறைய எழுதறீங்க,அருமை.

  ReplyDelete
 16. *** அந்த பெண் ஒரே நாளில் தன் வாழ்க்கையை முடித்து நிம்மதி அடைந்து விட்டாள்...ஆனால் இவர்கள் இன்று வரை நடைபிணங்களாக வாழ்ந்து வருகிறார்கள். பல உதாரணங்கள் இருக்கின்றன இது போல்.***

  சந்தர்ப்ப சூழ்நிலையில் நிரபராதிகள் தண்டிக்கப் படுவது ரொம்பப் பரிதாபமான விசயம்ங்க. :(

  தண்டனை காலம் முடிந்தவுடன் ஊருவிட்டு, ஊரு போயி அல்லது நாடுவிட்டு நாடு போய் வாழ்வது நல்லதுங்க.

  ReplyDelete
 17. இது போல அவசர புத்தி பெண்களால் நிறையப் பேர் வாழ்க்கை மண்ணாகிப் போகின்றது.
  எனக்குத் தெரிந்த ஒரு பெண்ணும் தற்கொலை செய்து கொண்டார். ஆனால், போலீஸ் கணவனை கைது செய்யவில்லை. பெண் பலகீனமான மனம் உடையவர் என்று நிறைய சாட்சிகள் இருந்தபடியால் போலீஸால் எதுவுமே செய்ய முடியவில்லை. இது நடந்தது அமெரிக்காவில்.

  ReplyDelete
 18. எனது உறவுக்கார பெண் தனது கணவர் சம்பாதித்து அனுப்பிய பணத்தை கண்டபடி செலவழித்து தானும கண்டபடிகெட்டதுடன் பிள்ளைகளையும் கெடுத்ததுடன்,இன்று அவர் நிலைமையும் நன்றாக இல்லை.எல்லா பணத்தையும் இங்கே அனுப்பி விட்டு வந்ததால் ஒரு பைசாவுக்கும் கையேந்தி நிற்கும் நிலைமை.வெளிநாட்டில் வேலை பார்க்கும ஆண்களே விழித்து கொள்ளுங்கள்.நீங்கள் கஷ்டப்பட்டு வளர்ப்பது தென்னைகளையா,இல்லை முள்மரங்களையா என

  ReplyDelete
 19. புள்ளி விவரங்கள் சூப்பர்.

  ReplyDelete
 20. ஆண்களுக்கு வக்காலத்து - ரொம்போ தேங்க்ஸ்.

  இருந்தாலும் சில கருத்துக்களை ஏற்க முடியவில்லை... தீக்குளித்து இறப்பது யோசிக்காமல் செய்வதல்ல. அவசர புத்தியும் அல்ல. மனக்கோளாறு இருந்தாலும் கூட. இந்தச் சம்பவத்தின் பின்னணி முழுமையாகத் தெரியாது - என்றாலும் அந்தப் பெண்ணின் இறப்பை எண்ணி வருத்தப்பட முடிகிறதே தவிர அவசரபுத்தி என்று ஒதுக்க முடியவில்லை.

  ReplyDelete
 21. இவர்கள் போடும் வரதட்சணை கொடுமை புகாரினால் அந்த குடும்பமே அல்லல் படுவதை நினைத்து நானும் பல நாள்கள் வருந்தி உள்ளேன் ....இது சட்டத்தை மதிக்கும் எல்லோருக்கும் தெரியும் ...இருந்தும் ஒன்றும் செய்ய முடிவதில்லை .....இதிலும் ஏழைகள் படும் பாடு இருக்கிறதே சொல்ல வேண்டாம் ....மனசாட்சி இல்லாத பெண்கள் தான் .....அதனால் தான் மணெண்ணை ஸ்டவ்கள் வெடிக்கிறதோ தெரியவில்லை ..

  ReplyDelete
 22. சௌந்தர்...

  ஆண்களிடம் தன முழு தவறும் இருக்கும் என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல் நடுநிலையில் எல்லா வழக்குகளையும் பார்த்தால் தேவை இல்லாமல் யாரும் பாதிக்க படமாட்டார்கள்.

  நன்றி சௌந்தர்.

  ReplyDelete
 23. அன்பரசன் said...

  //மிக அருமையான பதிவு.
  நல்லா அலசி இருக்கீங்க.//

  உங்கள் கருத்துகள் இருந்தால் சொல்லி இருக்கலாமே சகோ.

  நன்றி.

  ReplyDelete
 24. சே.குமார்...

  நன்றி

  ReplyDelete
 25. adhiran ...

  பிஸியா இருந்தும் வந்து பதிவை படித்ததுக்கு நன்றி மகேந்திரன்.

  ReplyDelete
 26. ஹரிஸ்...

  என்னோட ஆதங்கம் இது ஹரிஸ்.

  நன்றி.

  ReplyDelete
 27. Balaji saravana said...

  //மிகச் சிறப்பாக தகவல்களை தொகுத்திருக்கீங்க சகோ..
  சந்திரபாபு பாட்டுத் தான் நினைவுக்கு வருது.. :)//

  அந்த பாட்டையும் இங்கே பாடி இருக்கலாமே சகோ...

  புரிதலுக்கு நன்றி.

  ReplyDelete
 28. komu said...

  //மிகச்சிறப்பாகத் தகவல்களைக்கொடுத்திருக்கீங்க//

  புரிதலுக்கு நன்றி

  ReplyDelete
 29. யாதவன்...

  நன்றி

  எஸ்.கே said...

  நன்றி சகோ.

  ReplyDelete
 30. இம்சைஅரசன் பாபு.. said...

  //என்னைக்கு கல்யாணம் முடிஞ்சிதோ அன்னைக்கே விழிப்புணர்வு என்ற வார்த்தையே மறந்து போச்சே//

  இந்த விழிப்புணர்வு உங்க வீட்டிற்கு தேவை இல்லை அதுதான் மறந்து போச்சு... :)) தங்கை உங்களை புரிஞ்சு கொண்டவங்க, அதுதான் இப்படி உங்களால கமெண்ட் போட முடியுது...


  //நீங்களாவது எங்களை புரிஞ்சிகிடீன்களே//

  எல்லா பெண்களும் புரிந்துகொண்டவர்கள் தான், ஆனா வெளியே சொல்ல மாட்டங்க...

  புரிதலுக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 31. வெறும்பய...

  நன்றி

  ReplyDelete
 32. Chitra said...

  சித்ரா உங்களுக்கு இரக்க குணம் ஜாஸ்திபா..... சௌந்தருக்கு துணையா அழ போறீங்களா???

  :))

  ReplyDelete
 33. asiya omar said...

  //மிக நீண்ட பதிவு.//

  ஆமாம் தோழி பதிவு கொஞ்சம் நீளமாகி விட்டது...

  அந்த மாணவன் இன்றும் வீட்டில் தான் அடைந்து இருக்கிறான்.

  ReplyDelete
 34. மகாதேவன்-V.K

  புரிதலுக்கு நன்றி.

  ReplyDelete
 35. Harini Nathan ...

  வருகைக்கு ரொம்ப நன்றி தோழி.

  ReplyDelete
 36. வருண் said...

  //தண்டனை காலம் முடிந்தவுடன் ஊருவிட்டு, ஊரு போயி அல்லது நாடுவிட்டு நாடு போய் வாழ்வது நல்லதுங்க.//

  இது எல்லோருக்கும் சாத்தியமா என்று தெரியவில்லையே...! சொந்த வீடு, வேலை என்று இருப்பவர்கள் என்ன செய்வார்கள்...

  ஆனால் மன நிம்மதி வேண்டும் என்றால் நீங்கள் சொல்வது போல் ஊரை மாற்றுவது தான் சரி.

  நன்றி வருண்

  ReplyDelete
 37. vanathy said...

  //இது போல அவசர புத்தி பெண்களால் நிறையப் பேர் வாழ்க்கை மண்ணாகிப் போகின்றது.
  இது நடந்தது அமெரிக்காவில்.//

  உண்மைதான் வாணி.

  ஒரே மாதிரியான சம்பவங்கள் தான் ஆனால் இடம் தான் வேற...

  நன்றி.

  ReplyDelete
 38. Anonymous said...

  //நீங்கள் கஷ்டப்பட்டு வளர்ப்பது தென்னைகளையா,இல்லை முள்மரங்களையா என//

  நீங்கள் குறிபிட்டுள்ளது மிகவும் வருத்தபடகூடியது தான். இருவருக்கும் இடையில் புரிதல், அன்பு அதிகம் இருந்தால் இந்த மாதிரி நேர வாய்ப்பில்லை..

  வருகைக்கு நன்றிங்க..

  ReplyDelete
 39. சசிகுமார்...

  புரிதலுக்கு நன்றி.

  ReplyDelete
 40. அப்பாதுரை said...

  //இந்தச் சம்பவத்தின் பின்னணி முழுமையாகத் தெரியாது - என்றாலும் அந்தப் பெண்ணின் இறப்பை எண்ணி வருத்தப்பட முடிகிறதே தவிர அவசரபுத்தி என்று ஒதுக்க முடியவில்லை.//

  பிற சம்பவங்களில் பின்னணி முழுமையாக தெரியாது. ஆனால் நான் குறிப்பிட்டுள்ள இந்த சம்பவம் எனக்கு மிக நன்றாக தெரிந்த ஓன்று தான்...

  கருத்திற்கு நன்றி சகோ.

  ReplyDelete
 41. murugan said...

  ..//மனசாட்சி இல்லாத பெண்கள் தான் .....அதனால் தான் மணெண்ணை ஸ்டவ்கள் வெடிக்கிறதோ தெரியவில்லை ..//

  ஸ்டவ் வெடிப்பதற்கு சில பெண்களும் காரணமாக இருக்கலாம்...

  நன்றி சகோ.

  ReplyDelete
 42. //'இந்திய ஆண்கள் முன்னேற்ற இயக்கம்' என்னும் அமைப்பு துவங்கப்பட்டு ஆண்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வருகிறது....!//

  அடிசக்க, முதல்ல எங்க வீட்டு தங்கமணிக்கு இந்த விழிப்புணர்வ கொடுக்குறேன்

  ReplyDelete
  Replies
  1. சார் அப்படி ஒன்று இருந்தால் எனக்கு மொபைல் நம்பர் தயவுசெய்து கொடுங்களேன் என் மீது என் மனைவி வன்முறை தடுப்புச் சட்டம் வழக்கு தொடுத்துள்ளார் நான் ஏற்கனவே குடும்ப நல வழக்கில் வழக்குத் தொடுத்து உள்ளேன் அவர்களால் அதில் நிரூபிக்க முடியாத காரணத்தினால் இச்சட்டத்தில் என்னை உட்படுத்தியுள்ளார்

   Delete
 43. உங்க வலைப்பக்க முத்துக்களுள் மற்றுமோர் விலையுயர்ந்த முத்து இந்தப் பதிவு. இது ஆணாதிக்கம், பெண்ணாதிக்கம் சார்ந்த பார்வையில் சொல்லப்படுவதல்ல. ஆதாரங்களுடன், யாரும் எழுத முன்வராத, ஒரு சென்சிடிவ்வான விஷயத்தை எடுத்து, நடுநிலைமையோட அழகா பதிவு செஞ்சுருக்கீங்க. பிரமாதம்! மனமார்ந்த வாழ்த்துக்கள். ஆண்-பெண் தோழமையை அடிப்படையாகக் கொள்ளாத எந்த ஒரு ஆண்-பெண் உறவும் நீங்கள் குறிப்பிட்டுள்ள இன்னல்களுக்கு ஆளாவதைத் தடுக்க முடியாது. இம்மாதிரியான சமுதாய அவலங்களை இன்னும் நிறைய எழுதுங்க. விழிப்புணர்வு ஏற்படுவது உறுதி. நன்றி

  ReplyDelete
 44. இது போன்று தான் என் மனைவி என் மீது குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தில் வழக்கு தொடுத்துள்ளார் இதைக் கண்ட வழக்கறிஞர்கள் யாரும் இருந்தால் எனக்கு உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...