திங்கள், டிசம்பர் 6

11:13 AM
118

    காதலியை, மனைவியை
    தாயாய் உயர்த்தி மகிழும் நல்லவர் 
    வாழும் இங்கே தான் 
    வேறு சில புல்லுருவிகள் !
  
    அன்பு, அக்கறை காட்ட வீட்டில் 
    அவளுக்கும்  ஆட்கள்  உண்டு 
    என்பதை மறந்து வீழ்த்த எண்ணிய 
    உன் அறியாமை என்னே !
  
    பெண் வீழ்ந்தாள்  என்று நினைத்தாயோ
    வார்த்தைகளை கொண்டு ஆடை உரிக்கும்
    உன் வித்தை புரியா
    பேதையவள் அன்றோ !
  
    தாய்க்கும் தாரதிற்க்கும்
    வித்தியாசம் உண்டென்பதை
    உணரா மூடன் நீ அன்றோ !
  
    அடுத்தவன் பெண் தானே
    எடுத்தாள சுலபம் என்று எண்ணியது
    உன் மடமை அன்றோ !
  
    உன் வீட்டு பெண்ணை அடுத்தவன் பார்த்தால்
    மட்டுமே வெகுண்டெழும்  உன் ஆண்மை
    என்ன  வேடிக்கையடா,மானிடா !?
  
    காதலை விட புனிதமான நட்பை 
    காமத்திற்கு என்றே கடைவிரிக்கும் 
    கூட்டத்தின் தலைவன் பதவி உனக்கே !
  
    பாரதியின் ரௌத்ரம் பழகினால் 
    மட்டும் போதாது பெண்ணே....
    செயலிலும் காட்டு,
    அழிந்தொழியட்டும் கயமை ! 
    களை எடுக்க ஏன் தயக்கம்
    தோள் கொடுக்க நல்லவர் பலர் 
    உண்டு இங்கே !
  
    'தேரா  மன்னா' இயம்பிய 
    வழி வந்தவள் அன்றோ நீ !
    உள்ளே கொந்தளிக்கும்
    நெருப்பை  அள்ளி எறி
    எரிந்து சாம்பலாகட்டும்
    அற்ப பதர்கள்... !!

இதை நான் சொல்லியே ஆகணும்...!!

பதிவுலக தோழி ஒருவர் சொல்லி வருத்தப்பட்ட ஒரு நிஜ நிகழ்வு,,,,பதிவுலகம் வந்த புதிதில் ஆண் பதிவர்  ஒருவர் ஒரு பெண் பதிவரிடம் நட்பாக பேசி பழகி இருக்கிறார்....அன்பாகவும், அக்கறையாகவும் வலிய... வழிய...அறிவுரைகளை வாரி வழங்கி இருக்கிறார்.....!?  காலை வணக்கம் சொல்வதில் இருந்து இரவு வணக்கம் சொல்வது வரை அந்த  ஆண் பதிவரின் நட்பு  தொடர்ந்து இருக்கிறது......!

நாள் செல்ல செல்ல இந்த நட்பு அதிகரித்து சாட் பண்ணவில்லை என்றால் ஏன் பண்ணவில்லை...? வேறு புது நண்பர்களுடன் பேச தொடங்கியாச்சா...? அப்படி வேறு யாரிடமும் நீங்க பேச கூடாது என்ற மாதிரியான டார்ச்சர்கள் வர தொடங்கி இருக்கின்றன...! நட்பு கொஞ்சம் பாதை மாறுவதை உணர்ந்து,  நட்பை  முறித்து கொள்ளலாம் என்ற முடிவிற்கு அந்த  பெண் பதிவர் வந்ததை தெரிந்து டார்ச்சர் இன்னும் அதிகரித்து இருக்கிறது...கடைசியில் இந்த விவகாரம் அந்த பெண் பதிவரின் கணவன் காதிற்கு போய்விட்டது....அதன் பின் பிரச்சனை வேறு விதமாக திரும்பி விட்டது...தன் மனைவியை சந்தேகப்பட தொடங்கிவிட்டார்....மூணு மாதம் கழித்து அந்த பதிவரின் கணவன் இப்போது கோர்டில் போய் நிற்கிறார்.....!? பெண் பதிவரோ மன உளைச்சலில் சிக்கி பிளாக் எழுதுவதை தற்சமயம்  நிறுத்திவிட்டார். 

வேறு மாதிரியான பிரச்சனைகளையும் இந்த நபர்கள் ஏற்படுத்துகிறார்கள். ஒருவேளை பெண் பதிவர் நட்பை முறித்துக்கொண்ட பின் அந்த பதிவரை பற்றி மற்றவர்களிடம் இந்த பெண் அப்படி, இப்படி என்று கதை வேறு கட்டி விடுகிறார்கள்...(என்ன செய்து இந்த மாதிரியான ஆட்களுக்கு புரிய வைப்பது என்று புரியாமல் தான் இந்த பதிவை எழுதுகிறேன்.) 

வேலையற்ற சில வீணர்களின் விளையாட்டால் இணையத்தில் பெண்கள் இப்படியும் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் புதிய பெண் பதிவர்கள் ரொம்பவே கவனமாக பேசவேண்டியது அவசியம். அக்கறையாக, அன்பாக பேசுகிறாரே என்று நெருங்கி நட்பு பாராட்டி விடாதீர்கள். மேலும் இந்த மாதிரி முகம் தெரியாத ஆட்களிடம் இருந்து வரும் அளவுக்கு மீறி வரும் பாசம் எதில்  போய் முடியும் என்று நான் சொல்ல வேண்டியது இல்லை...! கண்ணுக்கு முன் நிற்கும் எதிரியை சமாளித்து விடலாம், ஆனால் இதை போன்ற மறைமுகமாக நட்பு என்ற போர்வையில் பழகும் நபர்கள் மிக ஆபத்தானவர்கள்.

மறுத்தல் அவசியம்

உங்க மெயில் id பெரும்பாலும் கொடுக்காமல் இருந்தால் நலம்...மீறி கொடுத்தாலும் சொந்த விசயங்களை பேசாமல் தவிர்ப்பது நல்லது...செல்போன் எண்ணையும் கொடுக்காமல் தவிர்க்கலாம் .எந்த கேள்விக்கும் நாகரீகமாக மறுப்பு சொல்வது பின்னால் பிரச்சனைகள் வருவதை தடுக்கும்.....சிலருக்கு பொழுது போக்கே பெண்களின் மெல்லிய  உணர்வுகளோடு விளையாடுவது தான்.....?!

செல்போனில் ஏதாவது நம்பரை டயல் பண்ண வேண்டியது, எதிர்புறத்தில் பெண் குரல் கேட்டால் "சாரிங்க என் பிரண்ட்  நம்பருக்கு டயல் பண்ணினேன், தப்பா உங்களுக்கு வந்துவிட்டது, சரி விடுங்க....நீங்க என்ன பண்றீங்க.....உங்க குரல் காலேஜ் பொண்ணு வாய்ஸ் மாதிரி இருக்கு...எந்த காலேஜ்  படிக்கிறீங்க....?" இந்த மாதிரி உரையாடல் நீண்டு கொண்டே போகும். உடனே கட் பண்ணினாலும் கண்ட நேரத்தில் மெசேஜ் அனுப்பி டார்ச்சர் தொடரும். இந்த ராங் கால் விஷயத்தால் பெண்களில் சிலர் பாதிக்க படுகிறார்கள். 

இதைப்போலத்தான் இணையத்திலும் பெண் பதிவர்களுக்கு தொல்லைகள் தொடருகின்றன.....இந்த சங்கடங்களை வெளியில் சொல்ல இயலாமல் மனதிற்குள் புழுங்கி மன அழுத்தத்திற்கு ஆளாகிவிடுகிறார்கள்.  இரு பெண் தோழிகளிடம் (பதிவர்கள்) இடையே கூட இந்த மாதிரி ஆட்கள் சிண்டு முடித்து, பிரித்து விடுகிறார்கள். அவர்களை பொறுத்தவரை இது பொழுது போக்கு, ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு....?!! அவர்கள் பாதிப்பு அடைந்தால் அவர்களின் குடும்பமும் பாதிக்கும் என்பதை உணருவார்களா இந்த மாதிரியான ஆட்கள்...??! 

   
" படித்த, நாகரீகமான, பகட்டான மனிதருக்குள்ளும் ஒரு நரி ஒளிந்திருக்கலாம் " 

எச்சரிக்கை !!Tweet

118 கருத்துகள்:

 1. அதிர்ச்சி அளிக்கும் பதிவு

  பதிலளிநீக்கு
 2. நல்ல பதிவு ! தெரியாதவருடன் நட்பைத் வளர்க்கும் நேரம் வேறு பதிவுகளை யோசிக்கலாம். முகமறியாத நபரிடம் குறைந்தபட்சமாக அலைப்பேசி எண்ணைக் கொடுப்பதையாவது தவிர்க்க வேண்டும்

  பதிலளிநீக்கு
 3. தமிழ் வினை said...

  //முகமறியாத நபரிடம் குறைந்தபட்சமாக அலைப்பேசி எண்ணைக் கொடுப்பதையாவது தவிர்க்க வேண்டும்//

  இந்த கருத்தை சொன்னதிற்கு மிகவும் நன்றி. வருகைக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 4. பலருக்கு பாடம் இந்தப் பதிவு. பலர் நல்ல நட்புள்ளம் கொண்டவர்கள். ஆனால் இந்த மாதிரி சின்ன புத்தி உடையவர்களால் நல்லவர்களையும் சந்தேகிக்கும் நிலை வருகிறது. நாம் பாதுகாப்பாக இருந்தால் பிரச்சனை இல்லை. பதிவுகளுக்கு என்று ஒரு ஈமெயில் ஐடியும், மற்ற நண்பர்களுக்கு என்று தனிப்பட்ட ஐடியும் வைத்துக் கொள்ளுவது நலம். பதிவு போடும் பொழுதும் பின்னூட்டம் வெளியிடுவதற்கு மட்டும் அந்த ஐடியை உபயோகித்துக் கொள்ளலாம்.

  இணையம் என்பது வாழ்வின் ஒரு பகுதி அதுவே வாழ்வு அல்ல. அதை உணர வேண்டும் முதலில் அனைவரும்.

  பதிலளிநீக்கு
 5. ஊர் பக்கத்துல ஒரு கதை சொல்வாங்க...

  எங்க வீட்டு பெண்கள் மட்டும் இழுத்து போத்திகிட்டு இருக்கணும்.... ஆனா மத்தவங்க வீட்டு...............(நான் முழுசா முடிக்க விரும்பல...)

  இது போல நடந்தேறியிருப்பது ஆச்சர்யமில்லை என்றாலும்.. இட்ஸ் வெரி க்ரூயல்...! பதின்மத்தில் வரும் கவர்ச்சி என்பது ஓரளவிற்கு அக்சப்ட் செய்யலாம் என்றாலும் இது இருபாலாருக்குமே எச்சரிக்கை.

  ஒரு கணவன் மனைவியை நிர்ப்பந்திப்பதே மனித உரிமை மீறல் இதில் நட்பாய் பழகுபவர்களை உரிமை என்ற பெயரில் ஆக்கிரமிப்பதும் அத்துமீறுவது... ஒருமுறை அல்ல பலமுறை வன்மையாக கண்டிக்கத்தக்கது...அது ஆணோ பெண்ணோ யாராய் வேண்டுமானலும் இருக்கட்டும்....

  மனச்சிக்குகள் மிகுந்து போய்விட்டது.. சமூக தொடர்பு வலைத்தளங்கள்...மிகவும்...மோசமான முறையில் உபயோகம் செய்யப்படுகின்றன. இது உடனடியாக மட்டறுக்கப்பட வேண்டியவை....

  கெளசல்யா இன்னும் திடுக்கிடும் தகவல்களோடு நானும் ஒரு விழிப்புணர்வு பதிவினை எழுதுகிறேன்..விரைவில்....

  அசாத்தியமாய் கொடுக்கப்பட்டிருக்கும் உங்கள் குரல் கவனிக்கப்பட வேண்டியது உடனடியாக.. பாராட்டுக்கள்...!

  பதிலளிநீக்கு
 6. வருத்தத்துக்குறியது.. துணிவோடு இருக்க சொல்லுங்கள் அ[ப்பெண்ணை..


  இப்படி நிறைய சைக்கோக்கள் உண்டு இங்கே..

  நம் சொந்த பிரச்னைகளைக்கு ஒரு நல்ல நட்பாய் ஆரம்பித்து பின் இப்படி செய்வதுண்டுதான்...


  நீங்கள் சொல்லிய கதை என் விஷயத்தில் நடந்த போது " உங்க மனைவியை இப்படி யாராவது கேட்டால் என்ன செய்வீர்கள் " என்றதும் விலகி ஓடினார்...என் போலவே பல பெண்ணிடமும் இப்படி நடந்துள்ளார்..

  ஓடியது மட்டுமன்றி தப்பாக பரப்பியதும்...


  இதுக்கெல்லாம் கொஞ்சமும் அஞ்சக்கூடாது...

  இணையத்தில் துணிவை கற்கும் முதல்படி இதுவே..

  அதை விடுங்க என்ன்னிடம் பணம் கேட்டவர் எத்தனை பேர்..?:))))

  நான் அட்ரஸ் கேட்டுவிட்டு இதோ அனுப்புகிறேன் சென்னையில் எங்க வீட்டு ஆளை னு சொல்வேன்...அப்புரம் அய்யோ மன்னிச்சுக்கோங்க..என் வேலை போயிடுன்ம் னு அழுவார்கள்..விட்டுடுவேன்..

  பயப்படவேண்டாம்னு சொல்லுங்க தோழியிடம்..

  பதிலளிநீக்கு
 7. பெண்கள் பதிவர் சந்திப்பு நடத்தி இது குறித்து பேசலாம்..விழிப்புணர்வு ஏற்படுத்தலாமே..

  பதிலளிநீக்கு
 8. எச்சரிக்கையாக இருப்பது அவசியமே.. பதிவுக்கு நன்றி சகோ..

  பதிலளிநீக்கு
 9. அதிர்ச்சி அளிக்கும் பதிவு..!
  கண்டனத்திற்குரியது.

  பதிலளிநீக்கு
 10. அந்த பெண் பதிவருக்கு நேர்ந்த நிலைமையை நினைத்து வருத்தமாக இருக்கிறது. கவனமாக இருக்க வேண்டியதின் அவசியத்தை சுட்டி காட்டும் பதிவுங்க.

  பதிலளிநீக்கு
 11. அதிர்ச்சியாத்தான் இருக்கு...

  பதிலளிநீக்கு
 12. இது போன்ற குள்ள நரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தேவையான சந்தேகங்களை கணவரிடமோ.. அல்லது.. நன்கு தெரிந்த நண்பர்களிடமோ கேட்டுக் கொள்ளலாம்.

  திடீர்னு ஒருத்தன் உதவி பண்றேன்னு வந்தா யோசிங்க? பெண்களுக்கு ஓடி ஓடி உதவும் இது போன்ற ஆட்கள் எத்தனை ஆண்களுக்கு உதவியிருக்காங்க....?

  பதிலளிநீக்கு
 13. நல்லா சொல்லியிருக்கீங்க. ஆனா இதுக்கும் ஏதாவது எதிர் பதிவு போட்டு "இது அவமானமில்லை, பெண் சுதந்திரம். கணவன்தான் மனைவியைப் புரிந்து கொள்ள வேண்டும்" என்றெல்லாம் எழுதாமல் இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 14. @கௌசல்யா

  இது என் பொதுவான கருத்து
  ---------------------------

  இந்த பெண்கள் கிட்ட இதான் பிரச்சனை. யாராவது நாலு வார்த்தை அன்பா பேசினா நல்லவன் நம்பிட வேண்டியது. உடனே ஊர்ல இருக்க எல்லா கதை சொல்லிட வேண்டியது. அப்புறம் அழ வேண்டியது. அப்படி புது நண்பர் அறிமுகமான உங்க கணவருக்கு ஆறிமுக படுத்தி வைங்க. நல்லவங்க இல்லைனா பாதி பேரு அதுலே கழட்டிபாங்க...

  சில பேர் கணவர் பேச வேண்டாம் சொன்ன தெரியாம பேச வேண்டியது. அப்புறம் பிரச்சனை வந்த வெளிய சொல்ல முடியாம தவிக்கிறது. இதுல யாரை தப்பு சொல்றது புரியலை.

  பதிலளிநீக்கு
 15. ரொம்ப சரியா சொன்னீங்க அக்கா ., நாமதான் கொஞ்சம் ஜாகரதையா இருந்துக்கனும். இது பெண்களுக்கு மட்டும்னு கிடையாது ., பொதுவா இணையத்தில் உலவும் எல்லோருமே எச்சரிக்கையாக இருந்துகொள்வது நல்லது .! பிரச்சினை வந்ததற்குப் பின்னால் பயப்படுவதை விட அதற்க்கு முன்பே சில விசயங்களைப் பற்றித் தெரிந்து கொண்டு மற்றவர்களிடம் பேசுவது அதாவது முகம் தெரிய நண்பர்களிடம் பேசுவது நல்லது. அதை விடுத்து எல்லோரும் நம்மைப் போலவே என்று எண்ணி இருந்தால் சிரமம் நமக்கே ..!!

  பதிலளிநீக்கு
 16. சினிமாவுல மட்டும்தான் எம்.ஜி.ஆர். மாதிரி பாஞ்சு பாஞ்சு பெண்களை காப்பாத்தி இம்ப்ரஸ் பண்றது.. இப்போ எல்லாம் தேவையில்லை....

  இன்னும் சொல்லப்போனால்.... கூகிள தட்டினா உதவி தன்னால வரப்போகுது....இதுக்கு எதுக்கு இணையவழி நொட்பு..(டெரர் மாப்ஸ் .. இது ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்ல. கடுப்பு)

  பதிலளிநீக்கு
 17. மிக அவசியமான ஒரு விழிப்புணர்வு சகோ!

  பதிலளிநீக்கு
 18. நாம ஜாக்கிரதையாவும்..வரம்பு மீறிய உரிமையை எடுத்துக்காமலும்,அதை விட்டும் கொடுக்காமலும் இருந்தாலே எந்த பிரச்னையும் வராது..அருமையான ஆண்பதிவர்களும் இருக்காங்க..ஒரு சில புல்லுருவிகளிடம் எச்சரிக்கையாக இருக்க நீங்கள் கொடுத்த அலாரத்திற்கு நன்றிகள் கௌஸ் !!....

  பதிலளிநீக்கு
 19. //இணையம் என்பது வாழ்வின் ஒரு பகுதி அதுவே வாழ்வு அல்ல. அதை உணர வேண்டும் முதலில் அனைவரும். //

  LK!! u r right...!!!

  பதிலளிநீக்கு
 20. @தேவா

  //கூகிள தட்டினா உதவி தன்னால வரப்போகுது....இதுக்கு எதுக்கு இணையவழி நொட்பு..(டெரர் மாப்ஸ் .. இது ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்ல. கடுப்பு)//

  அட அவன் சொல்றது எல்லாருக்கும் புரியாது. அதனால உதவி கேக்கராங்க வச்சிகலாம். அதுக்கா உடனே உங்க குடும்ப கதை எல்லாம் பேசரத நிறுத்துங்க...

  (இந்த இடம் நமக்கு சரி வராது... மாப்ஸ் முடிஞ்சா நீ பதிவு போடு.. அங்க வச்சிகலாம் கச்சேரியை)

  பதிலளிநீக்கு
 21. TERROR-PANDIYAN(VAS)

  //அப்படி புது நண்பர் அறிமுகமான உங்க கணவருக்கு ஆறிமுக படுத்தி வைங்க. நல்லவங்க இல்லைனா பாதி பேரு அதுலே கழட்டிபாங்க...//

  இருவரிடமும் இரு வேறு விதமாய் பேசி நடிக்கும் நபர்களும் இருக்கிறார்கள்.

  இந்த மாதிரி நட்பை தொடக்கத்திலேயே கட் பண்ணாமல் விடுவது பெண்களின் தவறுதான்.

  பதிலளிநீக்கு
 22. well said and a very nice post kousalya.
  idhu ellarukkum oru paadam.
  we would get free advice but there might be a expensive hidden cost behind that.every one should be aware of this esp.ladies.

  பதிலளிநீக்கு
 23. @ ராஜகோபால்...

  //கண்டனத்திற்குரியது.//

  உண்மைதான்,உங்களின் குரலுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 24. பார்வையாளன்...

  உங்கள் உணர்விற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 25. தண்டிக்க பட வேண்டியவர்கள்

  பதிலளிநீக்கு
 26. நண்பர் டெரர் சொன்னதே எனது கருத்தும்,, நண்பர் யாராவது அறிமுகமானால் முதல் கணவனுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.. முடிந்த வரையில் யாரிடமும் சொந்த விசயங்களை பரிராமல் இருப்பது நல்லது.. இணையத்தில் நண்பர்கள் கிடைப்பது என்பது பெரிய விசயமல்ல... ஆனால் நமக்கு கிடைத்த நண்பர் எப்படி பட்டவர் என்பது தான் முக்கியம்.. யாராக இருந்தாலும் ஒரு அளவோடு நிறுத்தி கொள்ளலாம்..

  இணையம் பொழுதையும் போக்கும். சில சமயம் பொழப்பையும் கெடுக்கும்..

  பதிலளிநீக்கு
 27. @LK ...

  //பலருக்கும் ஒரு பாடம் இந்த பதிவு//

  நிச்சயமாக...அந்த ஆண் பதிவருக்கும் இது ஒரு பாடமாக அமைய வேண்டும் என்று தான் இந்த பதிவே..

  //மற்ற நண்பர்களுக்கு என்று தனிப்பட்ட ஐடியும் வைத்துக் கொள்ளுவது நலம்.//

  யார் நண்பர்கள் என்பது தான் கேள்வியே...?! இந்த சின்னபுத்தி ஆண்களால் சக ஆண்களே பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதும் உண்டு.

  கருத்திற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 28. @ dheva ...

  //ஒரு கணவன் மனைவியை நிர்ப்பந்திப்பதே மனித உரிமை மீறல் இதில் நட்பாய் பழகுபவர்களை உரிமை என்ற பெயரில் ஆக்கிரமிப்பதும் அத்துமீறுவது... ஒருமுறை அல்ல பலமுறை வன்மையாக கண்டிக்கத்தக்கது...அது ஆணோ பெண்ணோ யாராய் வேண்டுமானலும் இருக்கட்டும்....//

  தான் ஒரு மறைமுக ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிறோம் என்பதே பெண்ணிற்கு தெரிவது இல்லை..இதில் தான் அந்த ஆணின் சாமார்த்தியம் இருக்கிறது. நட்பின் மேல் உள்ள அன்பினால் உரிமை எடுத்துக்கிறேன் என்ற சமாளிப்புகள்.

  //மனச்சிக்குகள் மிகுந்து போய்விட்டது.. சமூக தொடர்பு வலைத்தளங்கள்...மிகவும்...மோசமான முறையில் உபயோகம் செய்யப்படுகின்றன. இது உடனடியாக மட்டறுக்கப்பட வேண்டியவை....//

  சரிதான்...யாரும் கண்டுகொள்ளாமல் இருந்தால் இவை இன்னும் அதிகரிக்கத்தான் செய்யும்.

  //கெளசல்யா இன்னும் திடுக்கிடும் தகவல்களோடு நானும் ஒரு விழிப்புணர்வு பதிவினை எழுதுகிறேன்..விரைவில்...//

  ரொம்ப அதிர்ச்சி கொடுக்குறீங்க...?! ம்...ஆவலாக எதிர்பார்கிறேன்...

  உங்களின் வெகு புரிதலான கருத்திற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 29. பயணங்களும் எண்ணங்களும்...

  //நீங்கள் சொல்லிய கதை என் விஷயத்தில் நடந்த போது " உங்க மனைவியை இப்படி யாராவது கேட்டால் என்ன செய்வீர்கள் " என்றதும் விலகி ஓடினார்...என் போலவே பல பெண்ணிடமும் இப்படி நடந்துள்ளார்..//

  இந்த கேள்விக்கு ஓடி விட்டார் என்பதே ஒரு ஆச்சரியம் தான்...நல்லது பண்ணி இருக்கிறீர்கள்.

  சம்பந்த பட்ட தோழிக்கு உங்களின் பின்னூட்டம் நிச்சயமாக ஒரு ஆறுதலை கொடுக்கும்.
  உங்களின் கருத்திற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 30. பயணங்களும் எண்ணங்களும்...

  //பெண்கள் பதிவர் சந்திப்பு நடத்தி இது குறித்து பேசலாம்..விழிப்புணர்வு ஏற்படுத்தலாமே..//

  நல்ல ஒரு ஆலோசனை. நன்றி.

  பதிலளிநீக்கு
 31. வினோ...

  புரிதலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 32. Chitra said...

  //அந்த பெண் பதிவருக்கு நேர்ந்த நிலைமையை நினைத்து வருத்தமாக இருக்கிறது. கவனமாக இருக்க வேண்டியதின் அவசியத்தை சுட்டி காட்டும் பதிவுங்க.//

  ஆமாம் சித்ரா மனதிற்கு மிகவும் வருத்தத்தை கொடுத்தது. வீட்டு பெரியவர்கள் பேசி சமாதானம் செய்து வைக்க முயற்சித்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் மன உளைச்சலால் மிகவும் அவதி படுகிறார் என்று நினைக்கிறேன்.

  கவனமாக இருக்க வேண்டியது நாம் தான் சித்ரா.

  பதிலளிநீக்கு
 33. இம்சை அரசன் பாபு...

  நன்றி பாபு.


  Arun Pirasath ...

  நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 34. //யார் நண்பர்கள் என்பது தான் கேள்வியே...?! இந்த சின்னபுத்தி ஆண்களால் சக ஆண்களே பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதும் உண்டு. //

  இணைய நபர்களிடம் அதிகம் பேசுவதை தவிர்க்கத்தான் இப்படி சொன்னேன்
  இணைய நண்பர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்தலை தவிர்க்க வேண்டும். இதற்க்கு இன்னொரு காரணமும் உண்டு. எதிர்முனையில் உரையாடுவபர் எந்த பாலினம் என்று எப்படி தெரியும் ??? பென் பெயரில் வரும் மதிகெட்ட கயவர்கள் உண்டு.

  பதிலளிநீக்கு
 35. சௌந்தர் கூறியது...

  //திடீர்னு ஒருத்தன் உதவி பண்றேன்னு வந்தா யோசிங்க? பெண்களுக்கு ஓடி ஓடி உதவும் இது போன்ற ஆட்கள் எத்தனை ஆண்களுக்கு உதவியிருக்காங்க....?//

  இதை... இதை.. தான் நான் யோசிங்கனு சொல்றேன். சரியான கேள்வி சௌந்தர்.

  கருத்துக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 36. @கௌசல்யா

  //தான் ஒரு மறைமுக ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிறோம் என்பதே பெண்ணிற்கு தெரிவது இல்லை..இதில் தான் அந்த ஆணின் சாமார்த்தியம் இருக்கிறது. நட்பின் மேல் உள்ள அன்பினால் உரிமை எடுத்துக்கிறேன் என்ற சமாளிப்புகள்.//

  இது ஒத்துக்க முடியாது சகோ. மத்த விஷயங்கள்ல எல்லாம் பெண்கள் உள்ளுனர்வு வேலை செய்யுது ஆன இங்க மட்டும் ஏன் தவறி போகுது தெரியலை. நட்பின் மேல் உரிமை எடுக்கறேன் சொன்னா நீ ஆணியே புடுங்க வேண்டாம் சொல்லுங்க... எதுக்கு இது மாதிரி சனியன் எல்லம் இழுத்து உள்ள விட்டு பின்னாடி கஷ்ட்டபடனும். பாதிக்க பட்டவங்களை நினைத்து வருத்தபடறேன். நீங்க பேசாம அவர் பெயர் சொல்லி அவர இங்க தோலுரிச்சி இருக்கலாம். இன்னும் எத்தனை பதிவர் அவர் நல்லவர் நம்பிட்டு இருக்காங்களோ. அட்லிஸ்ட் அவங்க எச்சரிக்கையா இருப்பாங்க... :(

  பதிலளிநீக்கு
 37. பெயர் சொல்ல விருப்பமில்லை...

  //நல்லா சொல்லியிருக்கீங்க. ஆனா இதுக்கும் ஏதாவது எதிர் பதிவு போட்டு "இது அவமானமில்லை, பெண் சுதந்திரம். கணவன்தான் மனைவியைப் புரிந்து கொள்ள வேண்டும்" என்றெல்லாம் எழுதாமல் இருக்க வேண்டும்.//

  ஓஹோ இப்படி வேற எதிர் பதிவு எழுதலாமா...? :)))

  அதையும் வரவேற்ப்போம்...

  பதிவுலகத்தில் அடுத்த ரவுண்டு தொடங்க ஐடியா கொடுக்குறீங்க...
  :))

  வருகைக்கு நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 38. யாரா இருந்தாலும் முன்ன பின்ன தெரியாதவங்க கிட்ட ஜாக்கிரதையா இருந்துகிறது நல்லது, இப்பல்லாம் ரொம்ப தெரிஞ்சவங்களே பிரச்சனை பண்ணும்போது முகம் தெரியாதவங்ககிட்ட பழக்கம் வச்சிக்கறத குறைச்சிக்கலாமே

  பதிலளிநீக்கு
 39. @ செல்வகுமார்...

  //பொதுவா இணையத்தில் உலவும் எல்லோருமே எச்சரிக்கையாக இருந்துகொள்வது நல்லது .! பிரச்சினை வந்ததற்குப் பின்னால் பயப்படுவதை விட அதற்க்கு முன்பே சில விசயங்களைப் பற்றித் தெரிந்து கொண்டு மற்றவர்களிடம் பேசுவது அதாவது முகம் தெரிய நண்பர்களிடம் பேசுவது நல்லது.//

  இந்த பதிவையும், பின்னூட்டங்களையும் பார்த்த பின்னாவது கவனமாக இருக்க எண்ணினால் நல்லது.

  கருத்திற்கு நன்றி செல்வா..

  பதிலளிநீக்கு
 40. Balaji saravana said...

  //மிக அவசியமான ஒரு விழிப்புணர்வு சகோ//

  ரொம்ப சிம்பிளா முடிசிடீங்க... :))

  நன்றி பாலா.

  பதிலளிநீக்கு
 41. டெரர்.. @ மாப்ஸ் கருத்தோட நான் ஒத்துப் போறேன்...

  உண்மைதான்.. முகமூடிகள் பொசுக்கப்பட வேண்டியவைதான்...!

  பதிலளிநீக்கு
 42. டெரர்..@ இதுல வயசு வித்தியாசமே இல்ல மாப்ஸ்.. கல்யாணம் ஆனவங்க ஆகாதவங்க பேரன் பேத்தி எடுத்தவங்க எல்லாரும் அடக்கம்...

  இதை சொல்றதுக்கு என்னையே நான் பாரட்டி ஆகணும் மாப்ஸ்!

  பதிலளிநீக்கு
 43. ஆனந்தி.. said...

  //நாம ஜாக்கிரதையாவும்..வரம்பு மீறிய உரிமையை எடுத்துக்காமலும்,அதை விட்டும் கொடுக்காமலும் இருந்தாலே எந்த பிரச்னையும் வராது..அருமையான ஆண்பதிவர்களும் இருக்காங்க..//

  ஆமாம் ஆனந்தி. லிமிட் எது என்று தெரிந்து நடந்து கொள்ளும் பல நல்ல நண்பர்கள் உள்ளனர்...

  கருத்திற்கு நன்றி தோழி.

  பதிலளிநீக்கு
 44. @கௌசல்யா

  //இந்த பதிவையும், பின்னூட்டங்களையும் பார்த்த பின்னாவது கவனமாக இருக்க எண்ணினால் நல்லது.//

  நீங்க ஆள அடையாளம் காட்டாம பதிவு போட்டு இருக்கிங்க. அவரும் பதிவருனு வேற சொல்றிங்க. இப்பொ அந்த பதிவர் இங்க வந்து உங்களை சப்போர்ட் பண்ணி கமெண்ட் போட்ட மத்த பெண் பதிவர் எல்லாம் இன்னும் அவர் நல்லவருருருரு அப்படினு நம்பி அவர்கிட்ட போய் ”கேட்டிங்கள அநியாயத்த... உங்களை மாதிரி நல்லவங்க இருக்க இடத்துல இது மாதிரி பொறுக்கி பசங்க எல்லாம் இருக்காங்க சொல்லுவாங்க”

  (நான் சொல்றது எல்லாம் அந்த ஆண் பதிவர் தப்பு பண்ணி இருந்தால் மட்டும் தான்.)

  பதிலளிநீக்கு
 45. @ TERROR ...

  //(இந்த இடம் நமக்கு சரி வராது... மாப்ஸ் முடிஞ்சா நீ பதிவு போடு.. அங்க வச்சிகலாம் கச்சேரியை)//

  நல்ல கருத்துக்களை எங்கேயும் சொல்லலாமே...

  பதிலளிநீக்கு
 46. @TERROR...

  //நீங்க பேசாம அவர் பெயர் சொல்லி அவர இங்க தோலுரிச்சி இருக்கலாம். இன்னும் எத்தனை பதிவர் அவர் நல்லவர் நம்பிட்டு இருக்காங்களோ. அட்லிஸ்ட் அவங்க எச்சரிக்கையா இருப்பாங்க...//

  பெயர் சொல்வதால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட தோழிக்கு இன்னும் மன உளைச்சல் தான்.

  இன்னும் சில குழப்பங்கள் ஏற்படும்..

  பதிலளிநீக்கு
 47. /நீங்க ஆள அடையாளம் காட்டாம பதிவு போட்டு இருக்கிங்க. அவரும் பதிவருனு வேற சொல்றிங்க. இப்பொ அந்த பதிவர் இங்க வந்து உங்களை சப்போர்ட் பண்ணி கமெண்ட் போட்ட மத்த பெண் பதிவர் எல்லாம் இன்னும் அவர் நல்லவருருருரு அப்படினு நம்பி அவர்கிட்ட போய் ”கேட்டிங்கள அநியாயத்த... உங்களை மாதிரி நல்லவங்க இருக்க இடத்துல இது மாதிரி
  பொறுக்கி பசங்க எல்லாம் இருக்காங்க சொல்லுவாங்க”//

  டெரர்@ வக்கிலுக்கா படிச்ச மாப்பு.. பாயிண்ட் பிடிச்சு கேள்வி கேக்குற செம.. செம.. மாப்ஸ்!

  பதிலளிநீக்கு
 48. //நீங்க பேசாம அவர் பெயர் சொல்லி அவர இங்க தோலுரிச்சி இருக்கலாம். இன்னும் எத்தனை பதிவர் அவர் நல்லவர் நம்பிட்டு இருக்காங்களோ. அட்லிஸ்ட் அவங்க எச்சரிக்கையா இருப்பாங்க... :(//

  நானும் இந்த கருத்துக்கு உடன் படுகிறேன் சகோ ...அந்த பதிவரை நேரடிய இங்க சொல்லிரவேண்டியது தானே ........எல்லோரும் கொஞ்சம் விழிபுனர்வோட இருப்பாங்களே ..மற்ற பதிவர்களும்

  பதிலளிநீக்கு
 49. TERROR-PANDIYAN(VAS) said...
  @கௌசல்யா

  //இந்த பதிவையும், பின்னூட்டங்களையும் பார்த்த பின்னாவது கவனமாக இருக்க எண்ணினால் நல்லது.//

  நீங்க ஆள அடையாளம் காட்டாம பதிவு போட்டு இருக்கிங்க. அவரும் பதிவருனு வேற சொல்றிங்க. இப்பொ அந்த பதிவர் இங்க வந்து உங்களை சப்போர்ட் பண்ணி கமெண்ட் போட்ட மத்த பெண் பதிவர் எல்லாம் இன்னும் அவர் நல்லவருருருரு அப்படினு நம்பி அவர்கிட்ட போய் ”கேட்டிங்கள அநியாயத்த... உங்களை மாதிரி நல்லவங்க இருக்க இடத்துல இது மாதிரி பொறுக்கி பசங்க எல்லாம் இருக்காங்க சொல்லுவாங்க”

  (நான் சொல்றது எல்லாம் அந்த ஆண் பதிவர் தப்பு பண்ணி இருந்தால் மட்டும் தான்.)////

  டெரர் பெயரை எப்படி சொல்ல முடியும் எச்சரிக்கை கொடுத்து இருக்காங்க மீண்டும் இதே போல் தொடர்ந்தால் அவர் பெயரை சொல்வதை விட சட்ட நடவடிக்கை எடுக்கலாம்

  பதிலளிநீக்கு
 50. ====இந்த பெண்கள் கிட்ட இதான் பிரச்சனை. யாராவது நாலு வார்த்தை அன்பா பேசினா நல்லவன் நம்பிட வேண்டியது. உடனே ஊர்ல இருக்க எல்லா கதை சொல்லிட வேண்டியது. அப்புறம் அழ வேண்டியது. அப்படி புது நண்பர் அறிமுகமான உங்க கணவருக்கு ஆறிமுக படுத்தி வைங்க. நல்லவங்க இல்லைனா பாதி பேரு அதுலே கழட்டிபாங்க...

  சில பேர் கணவர் பேச வேண்டாம் சொன்ன தெரியாம பேச வேண்டியது. அப்புறம் பிரச்சனை வந்த வெளிய சொல்ல முடியாம தவிக்கிறது. இதுல யாரை தப்பு சொல்றது புரியலை.
  ====== என்ற TERROR-PANDIYAN(VASஉடைய கருத்தே

  என்னுடையது.

  பதிலளிநீக்கு
 51. ====இந்த பெண்கள் கிட்ட இதான் பிரச்சனை. யாராவது நாலு வார்த்தை அன்பா பேசினா நல்லவன் நம்பிட வேண்டியது. உடனே ஊர்ல இருக்க எல்லா கதை சொல்லிட வேண்டியது. அப்புறம் அழ வேண்டியது. அப்படி புது நண்பர் அறிமுகமான உங்க கணவருக்கு ஆறிமுக படுத்தி வைங்க. நல்லவங்க இல்லைனா பாதி பேரு அதுலே கழட்டிபாங்க...

  சில பேர் கணவர் பேச வேண்டாம் சொன்ன தெரியாம பேச வேண்டியது. அப்புறம் பிரச்சனை வந்த வெளிய சொல்ல முடியாம தவிக்கிறது. இதுல யாரை தப்பு சொல்றது புரியலை.
  ====== என்ற TERROR-PANDIYAN(VASஉடைய கருத்தே

  என்னுடையது.

  பதிலளிநீக்கு
 52. நானும் இந்த கருத்துக்கு உடன் படுகிறேன் சகோ ...அந்த பதிவரை நேரடிய இங்க சொல்லிரவேண்டியது தானே ........எல்லோரும் கொஞ்சம் விழிபுனர்வோட இருப்பாங்களே ..மற்ற பதிவர்களும் //


  ஆமா சொன்னாதான் அந்த பதிவரால் மேலும் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என தெரிய வரும்...


  குடும்ப விஷயங்களை கூட நம்பிக்கையானவர்களிடம் சொல்வதில் தப்பில்லை..

  இதுவரை என்னிடம் சாட் செய்தவர்கள் நூற்றுக்கணக்கில்.. எத்தனை எத்தனை குடும்ப பிரச்னைகள்?...

  நானும் பகிர்ந்து ஆறுதல் அடைந்துள்ளேன் மிக மிக நல்ல தோழி , நண்பர்களிடம்..

  ஆக எல்லாருமே மோசம் இல்லை.. பழகும் போது அந்த நபர் அவர்கள் குடும்ப விபரம் தெரிந்து வைப்பதும் , அவர் குடும்பத்தினரிடம் எத்தகைய மரியாதை வைத்துள்ளார் என்பதையும் புரிந்துகொள்ளணும்..

  ஜொள்ளு விட வரும் நட்புகளிடமும் நீங்கள் தேடும் பெண் நான் இல்லை என சொன்னால் நிச்சயம் மரியாதையாக விலகிடுவதுண்டு.. அல்லது மன்னிப்புடன் நல்ல நட்பாக மாறுவதுமுண்டு... சில விஷயங்கள் நம் கையிலும்..


  இதையும் மீறி தப்பு நடந்திருந்தாலும் ஒன்றும் பயப்பட வேண்டாம்..ஒரு அனுபவம் அவருக்கு.. மன உளைச்சலே வேண்டாம் என ஆறுதல் சொல்லுங்கள்.. துணிந்து பதிவுகளை எழுத சொல்லுங்கள்.. அதுவே சிறந்த மருந்தும்... ஓடி ஒளிவதே இத்தகைய கயவருக்கு வெற்றி.. அடுத்து வேறொரு பெண்ணுடன் ஆரம்பிப்பார்...

  பதிலளிநீக்கு
 53. @சௌந்தர்

  //டெரர் பெயரை எப்படி சொல்ல முடியும் எச்சரிக்கை கொடுத்து இருக்காங்க மீண்டும் இதே போல் தொடர்ந்தால் அவர் பெயரை சொல்வதை விட சட்ட நடவடிக்கை எடுக்கலாம் //

  ஏன் சொன்னா என்ன தப்பு? இப்பொ அந்த பெண் கணவர் கோர்ட்டுவரை போய்ட்டாரு சொல்றாங்க. இதுக்கு மேல என்ன இருக்கு?? தவறா நினைக்க வேண்டாம் நீங்க ரொம்ப நாள எழுதறிங்க அதனால கண்டிப்பா உங்களுக்கும் சில பெண் பதிவர் நண்பர்கள் இருப்பாங்க நம்பறேன். இப்பொ நீங்க தான் அந்த பதிவர் வச்சிகலாம். பாதிக்கபட்ட பெண் தவிற வேற யருக்கும் உங்களை பற்றி தெரியாது. அப்பொ மத்தவங்க எல்லாம் உங்க சுய உருவம் தெரியரவரை தெடர்ந்து உங்ககூட பழகுவாங்க. அப்புறம் கஷ்ட்ட படுவாங்க.

  (மக்கா உதாரணம் சொன்னேன் கோச்சிகாதிங்க)

  பதிலளிநீக்கு
 54. //புது நண்பர் அறிமுகமான உங்க கணவருக்கு ஆறிமுக படுத்தி வைங்க. நல்லவங்க இல்லைனா பாதி பேரு அதுலே கழட்டிபாங்க...
  //
  உண்மை தான்.
  யாராவது புதுசா பழகுனா அவங்க கணவருக்கும் அறிமுகப்படுத்தினா எந்த பிரச்சனையும் வர்வே வராது. மறைந்ததால் தானே சந்தேகம் பிறக்குது?

  என்னை பொருத்தவரை அவசரதேவைக்கு கூட மெயில் ஐடி கொடுக்க தேவையே இல்லை. கணவரிடமோ இல்லை அக்கம்பக்கத்தில் உள்ள நண்பர்களிடமோ கேட்க முடியாததையா அந்நியனிடன் கேட்க போறோம். பெண்கள் கவனமாக இருப்பது நல்லது. சமீபத்தில் இது போன்ற நிகழ்வை நானும் கேள்விபட்டேன். அவரவர் பாதுகாப்பு அவரவர் கையில் தான் உள்ளது

  பதிலளிநீக்கு
 55. சரி சீக்கிரம் பேசி முடிவெடுங்க மக்கா.. பஞ்சாயத்துல எம்புட்டு நேரம் ஓரமா ஒக்காந்து வேடிக்கை பாக்குறது....?

  பதிலளிநீக்கு
 56. TERROR-PANDIYAN(VAS) said...
  @சௌந்தர்

  //டெரர் பெயரை எப்படி சொல்ல முடியும் எச்சரிக்கை கொடுத்து இருக்காங்க மீண்டும் இதே போல் தொடர்ந்தால் அவர் பெயரை சொல்வதை விட சட்ட நடவடிக்கை எடுக்கலாம் //

  ஏன் சொன்னா என்ன தப்பு? இப்பொ அந்த பெண் கணவர் கோர்ட்டுவரை போய்ட்டாரு சொல்றாங்க. இதுக்கு மேல என்ன இருக்கு?? தவறா நினைக்க வேண்டாம் நீங்க ரொம்ப நாள எழுதறிங்க அதனால கண்டிப்பா உங்களுக்கும் சில பெண் பதிவர் நண்பர்கள் இருப்பாங்க நம்பறேன். இப்பொ நீங்க தான் அந்த பதிவர் வச்சிகலாம். பாதிக்கபட்ட பெண் தவிற வேற யருக்கும் உங்களை பற்றி தெரியாது. அப்பொ மத்தவங்க எல்லாம் உங்க சுய உருவம் தெரியரவரை தெடர்ந்து உங்ககூட பழகுவாங்க. அப்புறம் கஷ்ட்ட படுவாங்க.

  (மக்கா உதாரணம் சொன்னேன் கோச்சிகாதிங்க)/////

  மக்கா எதுக்கு கோவம் நீங்க என் பிரென்ட் அதனால் என்னை உதாரணம் சொல்லி இருக்கிங்க ஆனா எனக்கு அந்த பதிவரை தெரியும்...எங்க சொல்ல விடுறாங்க அவர் பெயரை

  பதிலளிநீக்கு
 57. @ ஆமினா..
  //சமீபத்தில் இது போன்ற நிகழ்வை நானும் கேள்விபட்டேன்.//

  என்னங்க சொல்றீங்க.....
  அப்ப ஏகப்பட்ட சம்பவம், இந்த மாதிரி நடக்குதா.......?

  பதிலளிநீக்கு
 58. இதனோடு தொடர்புடைய விழிப்புணர்வு பதிவு போட்டுள்ளேன் கெளசல்யா ..

  உங்க இடுகைக்கும் தொடர்பு கொடுத்து..

  பலரும் படித்து அறியட்டும்..

  http://punnagaithesam.blogspot.com/2010/12/blog-post_06.html


  " இணைய நட்பு முழுதும் தீங்கானதா?.. " என்ற தலைப்பில்..

  பதிலளிநீக்கு
 59. angelin said...

  //we would get free advice but there might be a expensive hidden cost behind that.every one should be aware of this esp.ladies.//

  yes what ur telling is right. thank u for ur nice comment.

  பதிலளிநீக்கு
 60. சசிகுமார் said...

  //தண்டிக்க பட வேண்டியவர்கள்//

  மிக சரிதான் சசி.

  பதிலளிநீக்கு
 61. வெறும்பய said...

  //இணையத்தில் நண்பர்கள் கிடைப்பது என்பது பெரிய விசயமல்ல... ஆனால் நமக்கு கிடைத்த நண்பர் எப்படி பட்டவர் என்பது தான் முக்கியம்.. யாராக இருந்தாலும் ஒரு அளவோடு நிறுத்தி கொள்ளலாம்...//

  தவறுகள் இரு பக்கமும் இருக்கிறதுதான்...ஆனால் கெட்ட நோக்கத்தில் பேச தொடங்கும் ஆண், அதற்கு தகுந்த படி தான் காய்களை நகர்த்துவான், அதுவும் மிகுந்த கவனத்துடன். இதை பெண்கள் உடனே புரிந்து கொள்வது சிறிது சிரமம் தான்...

  //இணையம் பொழுதையும் போக்கும். சில சமயம் பொழப்பையும் கெடுக்கும்..//

  மிக சரிதான்...

  கருத்திற்கு நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 62. @@ LK said...

  //எதிர்முனையில் உரையாடுவபர் எந்த பாலினம் என்று எப்படி தெரியும் ??? பென் பெயரில் வரும் மதிகெட்ட கயவர்கள் உண்டு.//

  இப்படி ஒரு விஷயம் இருக்கா...?? பொதுவாக யாராக இருந்தாலும் என்னனா என்ன அதோட நிறுத்திகிறது நல்லது..

  பதிலளிநீக்கு
 63. இரவு வானம் said...

  //இப்பல்லாம் ரொம்ப தெரிஞ்சவங்களே பிரச்சனை பண்ணும்போது முகம் தெரியாதவங்ககிட்ட பழக்கம் வச்சிக்கறத குறைச்சிக்கலாமே//

  உண்மைதான் சகோ. கருத்திற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 64. dheva said...

  //டெரர்..@ இதுல வயசு வித்தியாசமே இல்ல மாப்ஸ்.. கல்யாணம் ஆனவங்க ஆகாதவங்க பேரன் பேத்தி எடுத்தவங்க எல்லாரும் அடக்கம்...

  இதை சொல்றதுக்கு என்னையே நான் பாரட்டி ஆகணும் மாப்ஸ்!//

  நானும் உங்களை பாராட்டுகிறேன். உண்மையை தானே சொல்றீங்க...

  பதிலளிநீக்கு
 65. @@TERROR ...

  //மத்த பெண் பதிவர் எல்லாம் இன்னும் அவர் நல்லவருருருரு அப்படினு நம்பி அவர்கிட்ட போய் ”கேட்டிங்கள அநியாயத்த... உங்களை மாதிரி நல்லவங்க இருக்க இடத்துல இது மாதிரி
  பொறுக்கி பசங்க எல்லாம் இருக்காங்க சொல்லுவாங்க”//

  கண்டிப்பா சொல்வாங்க...தேவா சொன்ன மாதிரி நல்ல கேள்விதான். பசுதோல் போர்த்திய புலின்னு சீக்கிரம் தெரிந்து விடும். ரொம்ப பேரை ரொம்ப நாள் ஏமாத்த முடியாது...இன்னைக்கு இந்த பதிவு பிள்ளையார் சுழி தான்...

  உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 66. இம்சைஅரசன் பாபு.. said...

  //நானும் இந்த கருத்துக்கு உடன் படுகிறேன் சகோ ...அந்த பதிவரை நேரடிய இங்க சொல்லிரவேண்டியது தானே ........எல்லோரும் கொஞ்சம் விழிபுனர்வோட இருப்பாங்களே ..மற்ற பதிவர்களும்//

  விரைவில் உண்மைகள் தன்னால் வெளிவரும் பாபு...அதுவரை காத்திருப்போம்.

  பதிலளிநீக்கு
 67. சௌந்தர்...

  //டெரர் பெயரை எப்படி சொல்ல முடியும் எச்சரிக்கை கொடுத்து இருக்காங்க மீண்டும் இதே போல் தொடர்ந்தால் அவர் பெயரை சொல்வதை விட சட்ட நடவடிக்கை எடுக்கலாம்//

  இது நல்ல யோசனை தான். நன்றி சௌந்தர்.

  பதிலளிநீக்கு
 68. rkajendran2 ...

  முதல் வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 69. அகலாது அணுகாது தீய்க்காய்வார் போல என்று பள்ளியில் படித்தது நினைவுக்கு வருகிறது.
  நான் எப்போதும் எல்லோரையும் ஒரு எல்லைக்கு அப்பால் நிறுத்தி விடுவேன். குறிப்பாக ஆண்களை.

  பதிலளிநீக்கு
 70. நல்ல விழிப்புணர்வு பதிவு.
  ஆரம்பத்திலேயே கட் பண்ணி இருக்கலாம்.
  வளரவிட்டா இந்தமாதிரிதான் பிரச்சனைகள் வரும்.

  பதிலளிநீக்கு
 71. இப்பொ என்ன சொல்றிங்கன்ன்ன...

  பொண்ணுங்க எல்லாம் நல்லவங்க...
  அப்பவியா ஏமாறறங்க...

  ஆண்கள் சூழ்ச்சிகரஙக...திறமையாக ஏமத்தறாங்க...

  இதெல்லம் பழய பட ஸ்கிரிப்டு...
  நிஜத்துல... கே.டி. கிரிமினல் பொண்ணுக் நிறைய பேர்.

  பிரியா பழகி பொழுது போக்கிடு...
  ரி சர்ஜ் பன்னு, சுடிதார் வாங்குன்னு வசுல் பன்னிடே இருப்ப்ஙக... இது இல்லாம போன் பன்னு, துணைக்கு வா, ஈ.பி பில் கட்டுன்னு வேலை வாங்குவாங்க...

  (என்னோட ஆபிஸ்ல எல்லருக்கும் 1 வாரம் ஆபிசியல் டிரைனிங் நான் தரனும். அப்ப்டி ஒரு பொண்ணுக்கு தரும்பொது.. சாக்லேட் வாங்கி வான்னு சொல்லுறாஙக்.. இது ஸ்டர்டிங் நான் .. நீ வச்சு இருந்தா கொடுன்னுனேன். அவ்வளவு தான். அப்புறம்..பேசுறதே இல்ல்லை..)

  அப்படிய்யெ ரிசார்ஜ் பன்னினாலும் ஆண்களை கூப்பிட மிஸ்டு கால் தான் வரும்.

  24X 7 X 52 எல்லா நாளும் எல்லா நேரமும் கொடுத்துகிட்டே இருக்க முடியுமா ?

  கொடுக்கும்வரை என்ன செஞ்சாலும் ஓகே தான். ரத்திரி 2 மணி வரை போன் பேசுவது சாதரணம்.

  பீரியட்ஸ் டேட் வரை சொல்லி உசுபேத்துவ்ங்க..சன் டே எங்க வேண்ணலும் போலாம் என்ன வேண்ணலும் செய்யலாம்..ஆன ஷாப்பிங் உட்பட எல்லம் ஆண்களின் செலவு. ஊட்டி போய் 3 டே நைட்
  தங்கினவஙள எனக்கு தெரியும்..

  இனி..கொடுக்க மாட்டன்னு தெரிஞா போன் பன்னினா கூட எடுக்க மாட்ங்க...
  என்ன ஏன்னு கேட்ட.. உனக்கும் எனக்கும் கெமிஸ்டிரி சரி இல்லம்பங்க..

  இல்லைன்ன.. நான் உங்ககிட்ட நட்பா தான் / அண்ணன நினைச்சு தான் பழகினேன்..னு சொல்வாஙக..


  ஒரு வேளை இவனை விட வசதியான பார்ட்டி கெடச்ச இடையில்லே கழட்டி விடுவாஙக..

  கேள்வி கேட்ட, பிரச்சனை பண்ணுவான்னு தெரிஞ்சா ஈவ் டிசிங் கேஸ் தருவாங்க..


  நட்பு. காதல் , க்ள்ள காதல் எல்லாதுலையும் இது இருக்கு.

  ஒரே நேரத்துல 2 பேரை லவ் பண்ணின பொண்ணை பார்த்து இருக்கேன்.

  1 வருசத்துல 2 பேரை மாத்திய பொண்ண்னை பர்த்து இருக்கேன்.

  ஒரே ஒரு விஷயம் தான். கொஞ்சம் பார்கிற மாதிரி இருந்தா போதும்.. பொண்ணுக் பண்ணுர வேலை எல்லாம் எழுத கூட முடியாது..

  அதன் காரனமாகவும் அவஙளுக்கும்
  அவங்க கூட இருக்கும் அப்பாவிகளுக்கும் பிரச்சனை வர வாய்ப்பு இருக்கு

  எல்லா பொண்களும் இப்படின்னு நான் சொல்லல... ஆன உஙக பதிவு எல்லா பொண்களும் அப்பாவின்னு இருக்குது.
  அதான் இந்த பதில்..

  பதிலளிநீக்கு
 72. ரொம்ப முன்னெச்சரியக்கை இருக்கவேண்டியதது தாங்க.பலவீனம் எங்கன்னு பாத்து அலையற மனித விலங்குகள் அதிகம் உள்ள இணைய உலகு இது.

  பதிலளிநீக்கு
 73. உங்க பதிவை இப்போத்தான் பார்த்தேன். நன்றி, திருமதி சாந்தி (அவர் பதிவிலிருந்து).

  இணையம் எனப்து கொஞ்சம் டேஞெரஸான இடம்தான். பல சைக்கோக்களும் சில நல்லவர்களும் வருவதுண்டு.

  காலம் கெட்டுக்குட்டிச்சுவராகப் போயிருக்கும் இந்தக் காலத்தில் தன்னுடைய கணவரோ மனைவியோ பதிவிடும் பதிவரை நன்றாக புரிந்துகொள்ளவில்லையென்றால் மிகப்பெரிய வம்புதான்.

  இதெல்லாம் பதிவுலகம் வருமுன்னரே தெரிந்து இருக்கவேண்டும். I feel really sorry for your friend! :(

  பதிலளிநீக்கு
 74. @@ ஆமினா...

  //பெண்கள் கவனமாக இருப்பது நல்லது. சமீபத்தில் இது போன்ற நிகழ்வை நானும் கேள்விபட்டேன். அவரவர் பாதுகாப்பு அவரவர் கையில் தான் உள்ளது//

  இதை போன்ற ஒரு நிகழ்வா...? வருத்த படுகிறேன்.

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி தோழி.

  பதிலளிநீக்கு
 75. கண்டனத்திற்குரியது. தொலைபேசி என்னைத் தரக்கூடாது.

  பதிலளிநீக்கு
 76. கௌசல்யா.... மிக மிக அவசியமான பதிவுங்க..

  சாதாரணமா ஒரு ஹாய் சொன்னாலே... சில பேருக்கு அவங்க ரொம்ப க்ளோஸ் ஆயட்டங்கன்னு நினப்பு வந்திரும் போல..

  ரொம்ப அக்கறையா வந்து வந்து, அறிவுரை சொன்னாலே இனி உஷாரா இருக்கணும் போலிருக்கு...

  இந்த மாதிரி ஆளுங்கள எல்லாம், ஆரம்பத்திலேயே களைச்செடி, எடுக்கிற மாதிரி,
  முளையிலேயே கிள்ளி எடுக்கணும்... இல்ல இல்ல.. கிள்ளி எறியணும்....

  பெண்கள் தம் கட்டுக்கள் மீறி தாம் கற்ற விஷயத்தை பிறருடன் பகிர வந்தால்....
  இந்த மாதிரி ஆட்கள், தங்கள் சின்ன புத்தி கேளிக்கைக்கு அதை நுழைவு சீட்டாய்....
  உபயோகப் படுத்துறாங்க.... இதெல்லாம் சைக்கோ தான்......
  நார்மல் ஹ்யூமன் பீஇங்......இந்த மாதிரி செய்ய மாட்டாங்க....

  இப்படி சில பேரால.. நல்ல மனிதர்களிடமும் இருந்து விலகி இருக்கிற சூழ்நிலை உருவாகுது...

  உங்கள் பதிவிற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 77. ஷாக்,...அலார்ட்டா இருக்கணும்...

  பதிலளிநீக்கு
 78. ம்ம்....நிறையக் கவனமாய் இருக்கவேணும்.உண்மையில் விழிப்புணர்வான பகிர்வு.
  நன்றி கௌசி !

  பதிலளிநீக்கு
 79. //....அன்பாகவும், அக்கறையாகவும் வலிய... வழிய...அறிவுரைகளை வாரி வழங்கி இருக்கிறார்.....!? காலை வணக்கம் சொல்வதில் இருந்து இரவு வணக்கம் சொல்வது வரை அந்த ஆண் பதிவரின் நட்பு தொடர்ந்து இருக்கிறது......!


  நாள் செல்ல செல்ல இந்த நட்பு அதிகரித்து சாட் பண்ணவில்லை என்றால் ஏன் பண்ணவில்லை...? வேறு புது நண்பர்களுடன் பேச தொடங்கியாச்சா...? அப்படி வேறு யாரிடமும் நீங்க பேச கூடாது என்ற மாதிரியான டார்ச்சர்கள் வர தொடங்கி இருக்கின்றன...!//


  விழிப்புணர்வும் எச்சரிக்கையும் தேவை. முகம் தெரியா நட்பு என்றைக்குமே ஆபத்தானதுதான்..சில ஆண்கள் தங்களது வக்கிரத்தை முகம் மறைத்துத்தான் வெளிப்படுத்துகின்றனர்..எச்சரிக்கை உணர்வுடன் நட்பை கையாளுவது மட்டுமே சரியான வழியாக இருக்கும் என்பது என் கருத்து.

  இது வருந்தத் தக்கது.

  பதிலளிநீக்கு
 80. கௌசல்யா தேவையான பகிர்வு.என்ன உஷாரான வெளிப்படுத்தல்,நன்றி கௌசல்யா.

  பதிலளிநீக்கு
 81. //கண்ணுக்கு முன் நிற்கும் எதிரியை சமாளித்து விடலாம், ஆனால் இதை போன்ற மறைமுகமாக நட்பு என்ற போர்வையில் பழகும் நபர்கள் மிக ஆபத்தானவர்கள்.//


  மிகவும் விழிப்புணர்வுடன் சிந்திக்கக்கூடிய தகவல்களை சிறப்பாக பதிவு செய்துள்ளீர்கள் அருமை

  கண்டிப்பாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

  தொடரட்டும் உங்கள் பணி

  பதிலளிநீக்கு
 82. //" படித்த, நாகரீகமான, பகட்டான மனிதருக்குள்ளும் ஒரு நரி ஒளிந்திருக்கலாம் "
  எச்சரிக்கை !!//

  முற்றிலும் உண்மையான கருத்து

  பதிலளிநீக்கு
 83. //நான் எப்போதும் எல்லோரையும் ஒரு எல்லைக்கு அப்பால் நிறுத்தி விடுவேன். குறிப்பாக ஆண்களை.//

  வானதி சொல்லியிருக்கிற இந்த கருத்து ஒத்துக்க முடியாது.....! ஒரு பிளைட் ஆக்ஸிடண்ட் ஆகுதுன்னா பிளைட்டே வேணாம்னு ஒதுக்கித் தள்ற மாதிரி இருக்கு...! திஸ் இஸ் நாட் ஃபேர்....

  ஆண்களில் கண்ணியமும்...இன்னும் சொல்லப்போனால் பெண்களை மதிக்கும் பக்குவம் கொண்டவர்கள் மிகுதியாக இருக்கிறார்கள்...

  ஒரு பானை சோத்துக்கு வேணா ஒரு சோறு பதமா இருக்கலாம்.. அதை வாழ்கைல அப்ளை பண்ண முடியாது.. டிசைடிங் கப்பாஸிட்டி ஆணுக்கும் பெண்ணுக்கும் சரியாண கோணத்துல இருக்கணும்....

  இந்த பதிவில் ஒரு ஆணைப் பற்றிய கருத்து பாதிக்கப்பட்டவரால் சொல்லப்பட்டு இருக்கிறது...

  இதோ போல ஒரு ஆண் கூட பெண்ணால் பாதிக்கப்பட்டும் இருக்கலாம், இருக்கிறார்கள்...

  கருத்துக்களை பொதுவில் பார்க்க வேண்டும்.. ஏக தேச முடிவெடுத்து ஒட்டு மொத்த ஆண்களே அப்படித்தான் என்று சொல்வது...தவறு.....!

  பதிலளிநீக்கு
 84. அக்கா..வணக்கங்கா..
  இப்பதான் லைட்ட பிரச்சனை புரிஞ்சது..


  சொந்த விசயங்களை மற்றவருடன் பேசும்முன். எதிர்வரும் பிரச்சனைகளை சமாளிக்க தெரிந்தால்..
  பிரச்சனை ஒன்றும் இல்லை..

  கமென்ஸ் எல்லாம் படித்தேன்.. பதிவுலகமே உங்கள் பின்னால் இருப்பதுபோல உள்ளது.. அப்புறம் என்ன கவலை.. செருப்புல சாணி பூசி. அந்தாளு மேல அடிச்சுட்டு..

  எப்பவும்போல எழுதுங்க்...

  பதிலளிநீக்கு
 85. சகோதரி
  என் கண்டனத்தை இங்கு பதிவு செய்கிறேன். கூடவே பாதிக்கப்பட்ட சகோதரிக்கு வருத்தங்களையும்.
  இந்த மாதிரி நடக்குதுன்னு கேள்வி பட்டிருக்கிறேன். இப்படிப் பட்டவர்களை பொதுவில் வைத்து அவமானப் படுத்துவதே சரியாக இருக்கும்.
  சும்மா கிடைக்காது சுதந்திரம். பாதிக்கப் பட்ட பெண்கள் தைரியமாக வெளியில் வந்து புல்லுருவிகளை அடையாளம் காட்ட வேண்டும். குறைந்த பட்சம் ஓரிரு
  பதிவர்களிடமாவது சொல்லி மேலும் பலர் பாதிக்கபடுவதிலிருந்து காக்கணும். செய்யுங்க, தோள் கொடுக்க நாங்கள் இருக்கிறோம்.

  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 86. அப்புறம் சகோதரி, பெண் பதிவர்கள் ஒரு குழு அமைத்து ஏன் ஒரு உருவாக்கக் கூடாது? ஒரு உதாரணத்துக்கு சொல்றேன். பொற்கொடி, அப்பாவி தங்கமணி, ஷைலஜா, அனன்யா, கெக்கு பிக்கேணி போன்ற பெண் பதிவர்கள் என்னுடன் பின்னூட்டம் தாண்டி இல் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்கள் என்னைப் பத்தி
  ஒரு அபிப்ராயம் வைத்திருப்பார்கள். இதுபோன்று ஒவ்வொரு பெண் பதிவருக்கும் சில பல பேர் மீது அபிப்ராயங்கள் இருக்கும். இதை ஒன்று திரட்டி database
  உருவாக்கலாம் அல்லது பெண்பதிவர்கள் சந்திப்பு நடத்தி பகிர்ந்து கொள்ளலாம். பூனைக்கு மணி கட்ட யார் தயார்?
  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  பதிலளிநீக்கு
 87. vanathy said...

  //நான் எப்போதும் எல்லோரையும் ஒரு எல்லைக்கு அப்பால் நிறுத்தி விடுவேன். குறிப்பாக ஆண்களை.//

  எல்லைகளை வகுத்து கொண்டு அதன்படி பேசி பழகி கொள்வது நீங்கள் சொல்வது மாதிரி நல்லது வாணி.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 88. அன்பரசன் said...

  //நல்ல விழிப்புணர்வு பதிவு.
  ஆரம்பத்திலேயே கட் பண்ணி இருக்கலாம்.
  வளரவிட்டா இந்தமாதிரிதான் பிரச்சனைகள் வரும்.//

  இதில் தான் பெண்கள் தவறு செய்கிறார்கள். வளரவிட்டு விட்டு பின் வருந்துவது சரி இல்லையே

  நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 89. Vinoth said ...

  //எல்லா பொண்களும் இப்படின்னு நான் சொல்லல... ஆன உஙக பதிவு எல்லா பொண்களும் அப்பாவின்னு இருக்குது.
  அதான் இந்த பதில்..//

  இங்கே நீங்கள் சொன்ன மொத்த கருத்தும் இந்த பதிவிற்கு உடன் பாடு இல்லையே...நீங்கள் குறிப்பிட்டு இருப்பது எல்லாம் வெளியிடங்களில் இருக்கும் ஒரு சில பெண்களை பற்றிய கண்ணோட்டம்...

  இந்த பதிவில் நான் குறிப்பிட்டு இருக்கும் பிரச்சனை இணையத்தில் முகம் தெரியாத ஆண், பெண் இருவருக்கும் நடுவில் இருக்கும் நட்பால் நேர்ந்த அவலத்தை பற்றியது.

  அந்த நட்பு அதன் இயல்பை தாண்டி தன் சுயநல பொழுது போக்கிற்காக அந்த பெண்ணை பயன்படுத்தி கொள்ளும் ஒரு சில ஆண்களால் தவறாக போய் விடுகிறது. இதில் பாதிப்பு பெண்ணிற்கு அதிகம் என்பதை சம்பந்த பட்ட ஆண் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் இந்த பதிவு.

  மேலும் ஆண் மட்டுமே இதில் குற்றவாளியும் இல்லை, இந்த அளவிற்கு நட்பை வளரவிட்ட பெண்ணும் தான் காரணம்.

  வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 90. தவறு said...

  //ரொம்ப முன்னெச்சரியக்கை இருக்கவேண்டியதது தாங்க.பலவீனம் எங்கன்னு பாத்து அலையற மனித விலங்குகள் அதிகம் உள்ள இணைய உலகு இது.//

  அந்த பலவீனம் தன் நிம்மதியை குலைப்பது போல் இருப்பது தான் வேதனை. புரிதலுக்கும், முதல் வருகைக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 91. வருண் said ...

  //இணையம் எனப்து கொஞ்சம் டேஞெரஸான இடம்தான். பல சைக்கோக்களும் சில நல்லவர்களும் வருவதுண்டு.//

  வாங்க வருண்... சில சைக்கோக்கள் தான் இருக்கிறது என்று நினைக்கிறேன், எனக்கு தெரிந்து பல நல்லவர்களும் இருக்கிறார்கள். இனம் கண்டு கொள்வது தான் சிரமம்.

  //காலம் கெட்டுக்குட்டிச்சுவராகப் போயிருக்கும் இந்தக் காலத்தில் தன்னுடைய கணவரோ மனைவியோ பதிவிடும் பதிவரை நன்றாக புரிந்துகொள்ளவில்லையென்றால் மிகப்பெரிய வம்புதான்.//

  இதுதான் மிக முக்கியம். கணவன், மனைவி புரிதல் இல்லாமல் பொது இடத்தில் பழகுவது சிரமம். வெளிபடையாக எல்லா விசயங்களையும் தன் கணவன், மனைவியிடம் பதிவர்கள் பகிர்ந்து கொள்ளவேண்டும், மறைக்கும் போதுதான் தவறுகளும் தாராளமயமாகி விடுகின்றன...!

  கருத்திற்கு நன்றி வருண். சாந்தி அவர்களின் தளத்தில் vinoth அவர்களின் பின்னூட்டதிற்கு நீங்க அளித்த பதிலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 92. பயணமும் எண்ணங்களும்...

  //இதனோடு தொடர்புடைய விழிப்புணர்வு பதிவு போட்டுள்ளேன் கெளசல்யா ..//

  தொடர் பதிவா...?! நன்றி சாந்தி.

  பதிலளிநீக்கு
 93. Ananthi said...

  //சாதாரணமா ஒரு ஹாய் சொன்னாலே... சில பேருக்கு அவங்க ரொம்ப க்ளோஸ் ஆயட்டங்கன்னு நினப்பு வந்திரும் போல..//

  உண்மைதான்...அட்வான்டேஜ் எடுத்துகிறாங்க...

  //ரொம்ப அக்கறையா வந்து வந்து, அறிவுரை சொன்னாலே இனி உஷாரா இருக்கணும் போலிருக்கு...//

  அறிவுரை ஆலோசனைகளை பின்னூட்டத்தில் மட்டுமே வைத்து கொண்டால் பயம் தேவை இல்லையே.

  //இந்த மாதிரி ஆளுங்கள எல்லாம், ஆரம்பத்திலேயே களைச்செடி, எடுக்கிற மாதிரி,
  முளையிலேயே கிள்ளி எடுக்கணும்... இல்ல இல்ல.. கிள்ளி எறியணும்....//

  இந்த கோபம், ஆவேசம் தான் எனக்கும் பதிவு எழுதும் போது வந்தது.

  //பெண்கள் தம் கட்டுக்கள் மீறி தாம் கற்ற விஷயத்தை பிறருடன் பகிர வந்தால்//

  இந்த மாதிரி ஆட்களால் எழுத வந்த சில பெண்களும் காணாமல் போகிறார்கள், இந்த பெண் பதிவர் எழுதுவதை நிறுத்தியதை போல...

  //இப்படி சில பேரால.. நல்ல மனிதர்களிடமும் இருந்து விலகி இருக்கிற சூழ்நிலை உருவாகுது...//

  அப்படி இல்ல ஆனந்தி பழகின கொஞ்ச நாளிலேயே மத்தவங்களின் எண்ணத்தை ஓரளவு புரிந்து கொள்ள பெண்களால் முடியும்... எச்சரிக்கை உணர்வு இருந்தால் போதும்.

  விரிவான கருத்திற்கு நன்றி தோழி.

  பதிலளிநீக்கு
 94. ஹரிஸ் said...

  //ஷாக்,...அலார்ட்டா இருக்கணும்...//

  ம்...சில நேரம் ஆண்களும் தான். நன்றி ஹரிஸ்  ஹேமா said...

  //ம்ம்....நிறையக் கவனமாய் இருக்கவேணும்.உண்மையில் விழிப்புணர்வான பகிர்வு.
  நன்றி கௌசி !//

  உண்மைதான் ஹேமா...பெண்கள் எல்லோரும் இனியாவது விழித்து கொள்ளனும்.

  பதிலளிநீக்கு
 95. வெட்டிப்பேச்சு said...

  //சில ஆண்கள் தங்களது வக்கிரத்தை முகம் மறைத்துத்தான் வெளிப்படுத்துகின்றனர்..எச்சரிக்கை உணர்வுடன் நட்பை கையாளுவது மட்டுமே சரியான வழியாக இருக்கும் என்பது என் கருத்து.

  இது வருந்தத் தக்கது.//

  உங்களத்து கருத்து வரவேற்க்கப்பட தக்கது...

  புரிதலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 96. asiya omar said...

  //என்ன உஷாரான வெளிப்படுத்தல்//

  ஆமாம் தோழி உஷார்ர்ர்ர்...

  நன்றி.


  மாணவன் said...


  //கண்டிப்பாக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்//

  அனைவருக்கும் இந்த எச்சரிக்கை உணர்வு இருப்பது அவசியம் சகோ.

  நன்றி

  பதிலளிநீக்கு
 97. Gopi Ramamoorthy said...

  //கண்டனத்திற்குரியது. தொலைபேசி என்னைத் தரக்கூடாது.//

  ம்...ஆலோசனைக்கு நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 98. பட்டாபட்டி.... said...


  //சொந்த விசயங்களை மற்றவருடன் பேசும்முன். எதிர்வரும் பிரச்சனைகளை சமாளிக்க தெரிந்தால்..
  பிரச்சனை ஒன்றும் இல்லை..//

  அந்த பெண் பதிவருக்கு சமாளிக்க தெரியாததால் தான் பிரச்சனை ஆகிவிட்டது...

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 99. //மேலும் ஆண் மட்டுமே இதில் குற்றவாளியும் இல்லை, இந்த அளவிற்கு நட்பை வளரவிட்ட பெண்ணும் தான் காரணம்.//

  இது தான் சரி சகோதரி..பெண்களுக்கு கொஞ்சம் எச்சரிக்கை உணர்வு கம்மியாகிட்டே போற மாதிரி இருக்குது. இடம் கொடுக்க வேண்டியது.அப்புறம் அய்யோ என்று கத்துவது. என்னத்த சொல்றது.

  பதிலளிநீக்கு
 100. என் கோபம் நீதிமன்றத்திற்கு போன அந்த கணவனின் மேல். உண்மையில் அந்த பெண் அவள் கணவனிடம்தான் ஏமாந்திருக்கிறாள். (கௌசல்யா கலக்குறீங்க!!)

  பதிலளிநீக்கு
 101. sriram...

  // குறைந்த பட்சம் ஓரிரு
  பதிவர்களிடமாவது சொல்லி மேலும் பலர் பாதிக்கபடுவதிலிருந்து காக்கணும். செய்யுங்க, தோள் கொடுக்க நாங்கள் இருக்கிறோம்.//

  நீங்கள் சொன்னமாதிரி சில பதிவர்களிடம் மெயில் மூலம் தெரிய படுத்தி இருக்கிறேன்....மேலும் அவருடன் நட்பு வைத்து இருக்கும் பெண் பதிவர்களுக்கும் (அவரின் சுய ரூபம் தெரியாமல்) சொல்ல வேண்டும் என்றும் இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 102. sriram...

  //ஒன்று திரட்டி database
  உருவாக்கலாம் அல்லது பெண்பதிவர்கள் சந்திப்பு நடத்தி பகிர்ந்து கொள்ளலாம். பூனைக்கு மணி கட்ட யார் தயார்? //

  தோள் கொடுக்க நாங்கள் இருக்கிறோம் என்ற உங்களின் வார்த்தைக்கு வணங்குகிறேன் சகோ.

  நீங்கள் சொல்வது போல் சந்திப்பு ஒன்று நடத்தலாம்...நல்ல யோசனை...

  எனக்குள்ளும் அதே கேள்விதான் பூனைக்கு யார் மணி கட்டுவது...?

  ஆனால் விரைவில் என்னுடன் நட்பு வைத்திருக்கும் தோழியரிடம் இது பற்றி பேசி பார்க்கிறேன்...நல்லது நடக்கும் என்றே நம்புவோம்....

  உங்களின் வரவுக்கும், எடுத்து வைத்த கருத்துக்களுக்கும் நன்றிகள் பல.

  பதிலளிநீக்கு
 103. மிக மிக அவசியமான, தைரியமாக புல்லுறுவிகளைப் பற்றிய எச்சரிக்கைகளை, பெண்பதிவர்களை பாதுகாக்கும் எண்ணத்தோடு பகிரப்பட்ட நெருப்புப் பதிவு என்றே சொல்லலாம் இதை! முக்கியமாக கடைசி வரி, தற்போதைய காலகட்டத்துக்கு அவசியமான ஒன்று! பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள சில உண்மை நிகழ்வுகள் மிகவும் வேதனைப்படுத்துகின்றன! உங்களின் சாட்டையடிகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு சென்றடைந்திருக்கும் என்று நம்பிகிறேன்! பதிவுலகம் எப்படியெல்லாம் பாழாய்ப்போகிறது பாருங்கள். தொடரட்டும் உங்கள் மகத்தான சேவை. நன்றி

  பதிலளிநீக்கு
 104. மிக அவசியமான பதிவு...பாராட்டுக்கள் கௌசல்யா!

  வரைமுறையின்றிப் பழகிவிட்டு வருத்தப்படுவதைவிட, பழகுமுன் எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது.

  பதிலளிநீக்கு
 105. வரூண், கௌசல்யாவின் பதிவில் சொல்லியுள்ளது போல்,ஆண் பதிவர்கள் திருமணமான சில பெண்கள் வாழ்க்கையில் குறுக்கிடுகின்றனர் என்றால், அதை நான் மறுக்கவில்லை,கௌசல்யவின் பதிவை படித்து பாருங்கள், அதில் அப்பாவியாக சும்மா இருக்கும் பெண்களை ஆண்கள் மட்டும் திட்டமிட்டு ஏமாற்றுவதுபோல் இருக்கும்.

  அதற்குதான் நான் பதில் சொன்னேன்.
  இன்னுமொறு விஷயம்,

  திருமணமான பெண்கள், தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவர்களின் கடமை ஆகும். இதை வேறு யாரும், அவர்க்ளின் கணவன் உள்ளிட்ட யாரும் செய்ய முடியாது.

  ஒன்று வேண்டுமானால் செய்யலாம்.
  இது போன்ற பாலியல் தொல்லைகள்,
  பொருளாதார குற்றங்கள், என பல பிரச்ச்னைகளில் இருந்து பாதுகாப்பு பெறுவது எப்படி என யாராவது ஒரு பதிவர் அல்லது பதிவர் குழு தொடர் பதிவு இடலாம் மற்றவர், அப்பதிவுக்கும் தமது தளத்தில் இருந்து லிங்க் தரலாம். பாதிக்கபட்டவர்களின் அனுபவததைய்ம் தந்தால் மேலும் பயன் உள்ளதாக இருக்கும்.


  அப்போது பாதுகாப்ப்பு குறிப்புகள் அனைவரையும் சென்று சேரும்.

  பதிலளிநீக்கு
 106. கவிதை என்று தொடர்ந்தால் எங்கேயோ போகிறதே பதிவு?!
  'common sense' இல்லாமல் நடந்து கொண்டால் ஆணாக இருந்தால் என்ன, பெண்ணாக இருந்தால் என்ன? பச்சைப்பிள்ளைகளா பதிவெழுதுகிறார்கள்? புலம்பி என்ன பயன்? பெண்கள் கவனமாக இருக்கவேண்டும் என்பதற்குப் பதிலாக, நேயத்தைப் பொதுவில் வைத்திருக்கலாமோ?

  பதிலளிநீக்கு
 107. அமுதா கிருஷ்ணா said...


  //இது தான் சரி சகோதரி..பெண்களுக்கு கொஞ்சம் எச்சரிக்கை உணர்வு கம்மியாகிட்டே போற மாதிரி இருக்குது. இடம் கொடுக்க வேண்டியது.அப்புறம் அய்யோ என்று கத்துவது. என்னத்த சொல்றது.//

  எச்சரிக்கை மனதில் மணி அடித்தாலும், முகம் தெரியாத நட்பு தானே என்னவாகிவிட போகிறது என்ற அலட்சியம் தான் முக்கிய காரணம் என்று நினைக்கிறேன்.

  அமுதா உங்களின் முதல் வருகைக்கும் , உணர்விற்கும் நன்றி
  தோழி.

  பதிலளிநீக்கு
 108. adhiran said...

  //என் கோபம் நீதிமன்றத்திற்கு போன அந்த கணவனின் மேல். உண்மையில் அந்த பெண் அவள் கணவனிடம்தான் ஏமாந்திருக்கிறாள்.//

  அப்படி இல்லை மகேந்திரன், எந்த அளவிற்கு மன சங்கடம் வந்திருந்தால் அந்த கணவன் தன் மனைவியிடம் பேசி தீர்க்க இயலாமல் நீதி மன்றத்தை நாடி இருப்பார்...

  இந்த பெண்ணும் தன் நிலையை தெளிவாக விளக்கி இருக்க வேண்டும், அப்படி விளக்க முடியாத அளவிற்கு என்ன சூழ்நிலை...??

  பதில் இல்லை...

  இப்போது வீட்டு பெரியவர்கள் பேசி சமரசம் செய்து கொண்டிருக்கிறார்கள்...விரைவில் நல்லது நடக்கும்...நம்புவோம்

  :))

  பதிலளிநீக்கு
 109. பத்மஹரி said...

  //உங்களின் சாட்டையடிகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு சென்றடைந்திருக்கும் என்று நம்பிகிறேன்!//

  நிச்சயமாக...பெண் பதிவர்கள் இப்போது எங்களுக்குள் சொல்லி பரிமாறி கொண்டிருக்கிறோம் அப்படி பட்ட ஆள் யார் என்று. பெண்கள் ஒற்றுமையாகி விட்டால் இந்த பிரச்னையை சமாளித்து விடலாம். நம்புகிறேன் பாப்போம்.


  //பதிவுலகம் எப்படியெல்லாம் பாழாய்ப்போகிறது பாருங்கள்.//

  பதிவுலகம் மிக நன்றாகத்தான் இருக்கிறது ஹரி...ஒரு சில புல்லுறிவிகள் இருக்கிறார்கள் அவ்வளவே...அவர்களை அடையாளம் காட்டிவிட்டால் அத்துடன் தொலைந்தார்கள்...

  நன்றி ஹரி.

  பதிலளிநீக்கு
 110. சுந்தரா said...


  //வரைமுறையின்றிப் பழகிவிட்டு வருத்தப்படுவதைவிட, பழகுமுன் எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது.//

  பழகும் முன் தெரியாதுபா...எதிரில் இருந்து வரும் பேச்சுகள் திசை மாறுவதை போல் தெரிந்தால் புத்திசாலிதனமாய் கழண்டு கொள்வது நலம்.

  கருத்திற்கு நன்றி தோழி.

  பதிலளிநீக்கு
 111. Vinoth ...

  உங்களின் தொடர்ந்த கருத்திற்கு நன்றி சகோ.

  //திருமணமான பெண்கள், தங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அவர்களின் கடமை ஆகும். இதை வேறு யாரும், அவர்க்ளின் கணவன் உள்ளிட்ட யாரும் செய்ய முடியாது.//

  இது மிக சரிதான். அவர்களை அவர்களே தான் பார்த்து கொள்ள வேண்டும்.

  //யாராவது ஒரு பதிவர் அல்லது பதிவர் குழு தொடர் பதிவு இடலாம் மற்றவர், அப்பதிவுக்கும் தமது தளத்தில் இருந்து லிங்க் தரலாம். பாதிக்கபட்டவர்களின் அனுபவததைய்ம் தந்தால் மேலும் பயன் உள்ளதாக இருக்கும்.//

  நல்ல ஆலோசனை தருகிறீர்கள்...பெண்களை பற்றிய ஆதங்கம் முந்தைய பின்னூட்டத்தில் தெரிந்தது...இதில், பெண்களின் மேல் உங்களுக்கு உள்ள அக்கறையும் தெரிகிறது... நன்றி

  தவிரவும் நான் இந்த போஸ்ட் எழுதிய பின் வந்த ஒரு மெயில் பெண்களால் பாதிக்க பட்ட ஆண்களும் உண்டு அதை பற்றியும் எழுதலாமே என்று சில விவரங்கள் சொல்லி இருந்தார்கள்...!!அதிர்ச்சி எனக்கு...!

  இன்றைய காலகட்டத்தில் நாம் எதுக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டிருக்கிறோம் என்பதை நினைக்கும் போது மிக வருத்தமாக இருக்கிறது... :(

  நீங்கள் சொன்னது போல் தொடர் பதிவு பற்றி தோழிகள் நாங்கள் யோசிக்கிறோம். நன்றி.

  பதிலளிநீக்கு
 112. அப்பாதுரை said...

  //பெண்கள் கவனமாக இருக்கவேண்டும் என்பதற்குப் பதிலாக, நேயத்தைப் பொதுவில் வைத்திருக்கலாமோ?//

  கவிதைன்னு நினைச்சு படிசீங்களா...மனதோடு மட்டும்ல கவிதை வந்தாலும் மெச்செஜ் ஐ கூட கூட்டிட்டு கொண்டுவந்திடும் சகோ. :)

  அது என்ன வைத்திருக்கலாமோ...?! இது தான் சரி சகோ. இந்த வார்த்தை எனக்கு அப்ப நினைவுக்கு வரலையே..!

  ஆண், பெண் இருவருமே கவனமாக பழகி கொள்வது இருவருக்குமே நன்மை பயக்கும்.

  பதிலளிநீக்கு
 113. Unmai pathivu sethatharukku nanri..

  Edam kudukkum pengalukkum..

  Edam eduthu kollum angalukkum..

  பதிலளிநீக்கு
 114. "நண்பர் யாராவது அறிமுகமானால் முதல் கணவனுக்கும் அறிமுகப்படுத்துங்கள்.."உண்மை..
  அக்கா மிகவும் முக்கியமான பதிவு...
  பாராட்டுக்கள்.... அப்பெண் பதிவர் பெயர் குறிப்பிடாமல் கூறியது நன்று..ஏனெனில் பாதிப் பாதி பிழை இருபாலரிடமும் உள்ளது...
  "முகம் தெரியா பெண்ணிடம் அதிகம் போசுவதும் பிழை. முகம் தெரியா ஆணிடம் அதிகம் பேசுவதும் பிழை"
  பெயர் குறிப்பிடாமல் தகவலை கூறியதால் தப்பான வழியில் இருப்பவர்கள் திருந்த சந்தர்ப்பம் நிறையவே...
  (பெண்கள் பாதிப்பு பற்றி பதிவு எழுத எனக்கு நிறையவே ஆர்வம் உண்டு.. ஆனால் இதனால் ஏற்படும் பாதிப்பை யோசித்து தவிர்க்கிறேன் .. உங்கள் பதிவு பார்த்த பின் எழுத முடிவெடுத்துள்ளேன் விரைவில் எழுதுகின்றேன்)

  பதிலளிநீக்கு
 115. இது உண்மை. இதில் அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால் சில ஆண் பதிவர்களும் பெண்களால் பாதிக்கப்பட்டிருப்பது தான்.
  தேவை இல்லாமல், உங்கள் கவிதை பார்த்தேன், கட்டுரை பார்த்தேன் என்று வர வேண்டியது. அப்புறம் கதை வேறு மாதிரி போகும். ஆனால் இவை அநேகமாக சின்னப் பெண்களாக இருக்கும். புத்தி சொல்லி அனுப்பி இருக்கிறோம்.
  ஆனால் இந்த மாதிரி நடப்பதில் பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவது. குள்ள நரிகள் (அது என்ன குள்ள நரி? அப்போ நெட்டையான நரிகளும் உண்டோ?) ஆண்கள் மத்தியில் அதிகம். அபூர்வமாக சில பெண்களும் உண்டு என்பதையே அனுபவப்பட்ட ஆண் பதிவர்கள் சார்பில் கூற விழைகிறேன்.
  இது gender சார்ந்த விஷயம் என்ன்பதை விட attitude சார்ந்த விஷயம்.
  Statistically, there are more men that misbehave than there are women.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...