Wednesday, September 22

11:03 AM
47


அறிவியல் தொழில் நுட்பங்களால் நன்மைகள் பல. ஆனால் அவற்றை தவறாக பயன்படுத்தும் போது சிக்கல்கள் ஏற்படுகின்றன.  அதில் இப்போது முக்கியமாக இருப்பது செல்போனும், இணையமும். இவற்றால்  உலகம் மிகவும் சுருங்கி விட்டதுதான். அதே நேரம் சிலரின்  கையால் தவறாக பயன்படுத்தபடுவதால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்.  பெண்கள் இதனை உணர்ந்து இருந்தும் சில நேரம் அவர்களையும் அறியாமல் தங்களுக்கு தாங்களே குழிகளை தோண்டி கொள்கிறார்கள்.

ஜெஸ்ஸி

'செக்ஸ்டிங்' என்ற ஒரு புதிய கலாசாரம் இப்போது பரவிக்கொண்டு  வருகிறது. காதலிக்கும்போது தன் காதலன்தானே என்று தன் நிர்வாணப்படங்களை அனுப்பி இருக்கிறார் ஜெஸ்ஸி லோகன் என்ற இளம் பெண். பின்னர் காதல் கசந்து இருவரும் பிரிந்த பிறகு செல்போனில் இருந்த தன் முன்னால் காதலியின் படத்தை அவன் பலருக்கும் அனுப்பி இருக்கிறான். அதை பார்த்தவர்களின் கேலி பார்வையை  காண  முடியாமல் தவித்து தற்கொலை செய்து கொண்டார் ஜெஸ்ஸி...?!! 

பத்திரிகை வரை வந்த விஷயம் இது.  ஆனால் வெளியில் தெரியாமல் மனதிற்குள் புழுங்கி கண்ணீர் விட்டு தவித்து கொண்டு இருப்பவர்கள் எத்தனையோ பெண்கள். பெண்களின் பலகீனத்தை பயன்படுத்தி கொள்கிறார்கள். யாரையும் நம்ப முடியாத இன்றைய காலகட்டத்தில் பெண்கள் சுயமாக தங்களை பாதுக்காத்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. 

நெருங்கிய நண்பனாகவோ , காதலனாகவோ இருந்தாலுமே கவனமுடன் தகவல்களை பரிமாறி கொள்வது  மிக அவசியம். சாதாரண மின்னஞ்சல், செல்போன் தகவல்கள் கூட பிரச்னையை கொண்டு வரலாம். நம்மை  சுற்றிலும் வம்புக்கு வலைவிரிப்பவர்கள் தான் அதிகம்  இருக்கிறார்கள் என்பதை மறக்கக்கூடாது. 

போனில் பேசும்போது உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நீங்கள் இருந்தால் பேசுவதை உடனே நிறுத்தி விடுங்கள் . உங்களுக்கு தெரியாமலேயே உங்களின் பேச்சுக்கள் ஒட்டு கேட்கப்படலாம் அல்லது பதிவு செய்யப்படலாம்.


நட்பு 

நெருங்கி பழகிய நண்பர்கள் ஒரு கட்டத்தில் ஒரு சில காரணங்களால்  பிரிய நேரலாம். ஆனால் முன்பு பழகிய காலத்தில் நடந்த உரையாடல்களை (உதாரணமாக சாட்டிங், மெயில்)  வேறு பலருக்கும்  அதை அனுப்பி, பழைய நண்பரின் மனதை கொல்கிறார்கள் . இது எவ்வளவு பெரிய துரோகம், அநாகரீகம். நம்பிக்கை வைத்து கருத்துக்களை, சொந்த விசயங்களை பரிமாறிவிட்டு பின் பிரிந்த பின் அவரது சொந்த விசயங்களை பிறரிடம் சொல்லி கேலி பொருளாக்குவது மனவலியைக் கொடுக்கும்.  

மனித நேயம் என்பது கொஞ்சங் கொஞ்சமாக நம்மிடையே கரைந்து , மறைந்து வருகிறது. தூய்மையான அன்பு கொள்ளுங்கள். கருத்து விவாதம் செய்யுங்கள். தேவை இல்லாமல் பிறர் மன உணர்வுகளை புண்படுத்தாதீர்கள். 

 " நமக்கு யாரும் துரோகம் செய்தால் எப்படி தவித்து போவோம்? அதை நாம் அடுத்தவருக்கு செய்வது என்ன நியாயம்..??! " 

" நண்பனில் சிறந்தவன் என்று யாரும் இல்லை...நண்பன் என்றாலே சிறந்தவன் தான்....!! "

அத்தகைய நட்புக்கு ஒரு சிலர் ஏற்படுத்தும் கெட்ட பெயரால் நல்ல நண்பர்களுக்கும் அவ பெயர் ஏற்படுகிறது.




ஆச்சரியமான ஒரு தகவல் - காந்தி நியுரான்


சில நேரம் அடுத்தவர்களின் வேதனைகளை, வலிகளை காணும் போதோ அல்லது கேள்வி படும்போதோ நம்மையும் அறியாமல் கண் கலங்கி விடுகிறோம். இதற்கு காரணம் என்னவென்றால் நம்முடைய மூளையில் உள்ள 'எம்பதி நியுரான்கள்' தான். இந்த உணர்வு காந்தியடிகள் அவர்களுக்கு அதிகமாக இருந்ததால் தான் இந்த நியுரான்கள் ' காந்தி நியுரான்கள் ' என்றும் கூட அழைக்கப் படுகின்றனவாம்...!


" கருணையே வடிவானவர்களையே கூட காலம் ஒருநாள் அழைத்து சென்று கணக்கை முடித்து கொள்ளும். துடிக்கின்ற இதயம் ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் நிற்கும்போது குடும்பத்துக்கு வெளியேயும்  கொஞ்ச பேரையாவது  மனதளவில் துடிக்கிற வைக்கிற மாதிரி, நல்லவர்களாக வாழ்ந்து வாழ்வை நிறைவு செய்து விட்டு போவோமே..!! "

"எல்லா உயிருக்கும் முடிந்தவரை நன்மையை மட்டுமே செய்வோம் ..!!"

நட்பை போற்றுவோம்....நட்பை வளர்ப்போம்.....

தொடர்ந்து வரும் அடுத்த பதிவு - கண்டனம்.

Tweet

47 comments:

  1. உண்மைதான். பழகுவதில் கவனம் தேவை இல்லையென்றால் பின் என்றும் வருத்தப் படும் நிலை உண்டாகும். நானே பாதிக்கப் பட்டு இருக்கிறேன்

    ReplyDelete
  2. //சில நேரம் அடுத்தவர்களின் வேதனைகளை, வலிகளை காணும் போதோ அல்லது கேள்வி படும்போதோ நம்மையும் அறியாமல் கண் கலங்கி விடுகிறோம். இதற்கு காரணம் என்னவென்றால் நம்முடைய மூளையில் உள்ள 'எம்பதி நியுரான்கள்' தான். இந்த உணர்வு காந்தியடிகள் அவர்களுக்கு அதிகமாக இருந்ததால் தான் இந்த நியுரான்கள் ' காந்தி நியுரான்கள் ' என்றும் கூட அழைக்கப் படுகின்றனவாம்///

    puthiya thagaval nandri

    ReplyDelete
  3. அக்கா உங்களுடைய ஒவ்வொரு பதிவும் அனைவருக்கும் பயனுள்ளதாகாவே உள்ளது நன்றி அக்கா

    ReplyDelete
  4. என்னது 'காந்தி நியுரான்களா? இது புதிய செய்தியாக இருக்கிறதே! நன்றி தோழி! சுயநல பேய்கள் தான் நிறைந்திருக்கிறார்கள் இன்று நம்மிடையே! சரியான நேரத்தில் சரியான தகவல்களைக் கொடுத்த்ருக்கிறீர்கள் தோழி!

    இந்த எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் உள்ளத்தில் அமைதி இல்லாததாலேயே ஏற்படுகின்றன. இவற்றைப் பற்றித் தான் பதிவு எழுதிக் கொண்டிருக்கின்றேன் இப்போது. நேரம் கிடைக்கும்போது வந்துப் பார்க்க வேண்டுகின்றேன்.

    இது மற்ற நணபர்களுக்கும் கூட என்னுடைய அன்பான அழைப்பு!

    ReplyDelete
  5. சற்றே விரிவாக எழுதியுள்ளீர்கள்... ஆனால் பதின்மத்தில் என்னதான் நாம் எடுத்து சொன்னாலும், நம்மை எதிரியாக பார்க்கும் மனப்பான்மைதான் நிறைய பேரிடம் இருக்கிறது ,,,

    உங்களுக்கு பாராட்டுக்கள் ...

    ReplyDelete
  6. உண்மையான நட்புகள் பெரும்பாலும் எதுவும் எதிர்பார்ப்பது இல்லை அன்பை தவிர... ஆனால் எதார்த்தத்தில் அப்படி அல்ல.. அரிசி கொடுத்து பருப்பு வாங்குவது போலவும், தவிடு கொடுத்து... எண்ணெய் வாங்குவது போலவும்.......

    விழிப்புணர்வை பரவச்செய்திருக்கும் உங்கள் கட்டுரை.. நிறைய பேர் கற்று தெரிந்து கொள்ளவேண்டிய பாடமாகத்தான் எனக்கு தெரிகிறது. கண்களை மூடினால் வரும் கற்பனைகளை எல்லாம் எதார்த்த உண்மைகள் சுட்டு அழித்து விடும்.

    வழக்கம் போல U MADE ANOTHER SIXER.... kousalya.. ! BRILLIANT POST!

    ReplyDelete
  7. எல்லோருக்கும் தேவையான் ஒரு சிறந்த பதிவு , நன்றி

    ReplyDelete
  8. நல்ல தெளிவாய் இருக்குங்க உங்க எழுத்து.அடுத்து என்னது கண்டனமா?வெயிட்டிங்.

    ReplyDelete
  9. // ஆனால் முன்பு பழகிய காலத்தில் நடந்த உரையாடல்களை (உதாரணமாக சாட்டிங், மெயில்) வேறு பலருக்கும் அதை அனுப்பி, பழைய நண்பரின் மனதை கொல்கிறார்கள் . இது எவ்வளவு பெரிய துரோகம், அநாகரீகம். நம்பிக்கை வைத்து கருத்துக்களை, சொந்த விசயங்களை பரிமாறிவிட்டு பின் பிரிந்த பின் அவரது சொந்த விசயங்களை பிறரிடம் சொல்லி கேலி பொருளாக்குவது மனவலியைக் கொடுக்கும்.
    ///

    இப்படி ஏன்தான் பன்னுறான்களோ...? நட்பு சில காரணங்களால் முறிந்து விட்டாலும் அது உண்மையான நட்பாக இருந்தால் நிச்சயமாக இந்த மாதிரி எண்ணங்கள் வராது .. என்னமோ பழகுறோம் இவனால் அல்லது இவளால் நமக்கு லாபம் கிடைக்கிறது என்று பலகுவோரே பின்னாளில் பெரும்பாலும் இவ்வாறு நடக்கிறது ..!

    ReplyDelete
  10. ///நடந்த உரையாடல்களை (உதாரணமாக சாட்டிங், மெயில்) வேறு பலருக்கும் அதை அனுப்பி, பழைய நண்பரின் மனதை கொல்கிறார்கள் .///

    நல்ல விழிப்புணர்வு அனைவரும் கற்று கொள்ளவேண்டியது


    //தொடர்ந்து வரும் அடுத்த பதிவு - கண்டனம்.///
    அது சரி பின்னூடம் போடுபவர்களுக்கா?

    ReplyDelete
  11. நல்ல விழிப்புணர்வு..
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. //நண்பனில் சிறந்தவன் என்று யாரும் இல்லை...நண்பன் என்றாலே சிறந்தவன் தான்....!!//

    ஒரு சிறந்த பதிவு நன்றி தோழி!

    ReplyDelete
  13. அவசியமான அறிவுரைகள்.

    நல்ல பதிவு.

    நன்றி கௌசல்யா.

    ReplyDelete
  14. நட்பை போற்று வோம் நட்பை வளர்ப்போம்.

    ReplyDelete
  15. " கருணையே வடிவானவர்களையே கூட காலம் ஒருநாள் அழைத்து சென்று கணக்கை முடித்து கொள்ளும். துடிக்கின்ற இதயம் ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் நிற்கும்போது குடும்பத்துக்கு வெளியேயும் கொஞ்ச பேரையாவது மனதளவில் துடிக்கிற வைக்கிற மாதிரி, நல்லவர்களாக வாழ்ந்து வாழ்வை நிறைவு செய்து விட்டு போவோமே..!! "


    ....rightly said. அருமையான பதிவு!

    ReplyDelete
  16. ரொம்ப நல்லாருக்குங்க....உங்க பதிவு...

    ReplyDelete
  17. //துடிக்கின்ற இதயம் ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் நிற்கும்போது குடும்பத்துக்கு வெளியேயும் கொஞ்ச பேரையாவது மனதளவில் துடிக்கிற வைக்கிற மாதிரி, நல்லவர்களாக வாழ்ந்து வாழ்வை நிறைவு செய்து விட்டு போவோமே..!!//

    நல்லாச்சொன்னீங்க.. இருப்பது ஒரு வாழ்க்கை, அதை நிறைவுடன் வாழலாமே..

    ReplyDelete
  18. உண்மைதான்.
    பழகுவதில் கவனம் தேவை.

    ReplyDelete
  19. LK...

    //நானே பாதிக்கப் பட்டு இருக்கிறேன்//

    அடடா... பெண்கள்தான் அதிகம் பாதிக்க படுவார்கள் என்று நினைத்தால், நீங்களுமா....??

    ReplyDelete
  20. சசிகுமார் said...

    //அக்கா உங்களுடைய ஒவ்வொரு பதிவும் அனைவருக்கும் பயனுள்ளதாகாவே உள்ளது //

    நன்றி சசி.

    ReplyDelete
  21. என்னது நானு யாரா?...

    //இந்த எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம் உள்ளத்தில் அமைதி இல்லாததாலேயே ஏற்படுகின்றன. இவற்றைப் பற்றித் தான் பதிவு எழுதிக் கொண்டிருக்கின்றேன் இப்போது. நேரம் கிடைக்கும்போது வந்துப் பார்க்க வேண்டுகின்றேன்.//

    ஒரு வகையில் இருக்கலாம்....எல்லோரையும் கண்ணை மூடிக்கொண்டு நம்பும் குணமும் ஒரு காரணம் தான்.

    கண்டிப்பாக உங்கள் தளம் வந்து பார்கிறேன். வருகைக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  22. கே.ஆர்.பி.செந்தில் said...

    //சற்றே விரிவாக எழுதியுள்ளீர்கள்... ஆனால் பதின்மத்தில் என்னதான் நாம் எடுத்து சொன்னாலும், நம்மை எதிரியாக பார்க்கும் மனப்பான்மைதான் நிறைய பேரிடம் இருக்கிறது ,,,//

    இன்னும் நிறைய சொல்ல இருக்கிறது தோழரே. எங்குதான் நல்ல விசயங்கள் எடுத்துகொள்ள படுகிறது... எதிரியாக பார்க்கும் மனப்பான்மை மாறும் என்றே நம்புகிறேன். அதனால் சொல்லி தான் பார்ப்போமே என்ற எண்ணத்தில் எழுதப்பட்டது தான் இந்த பதிவு. இவை இன்னும் தொடரும்.....!

    தோழருக்கு வணக்கமும், நன்றியும், நீண்ட நாள் கழித்து வருகை தந்ததிற்காக.....!

    ReplyDelete
  23. dheva...

    //உண்மையான நட்புகள் பெரும்பாலும் எதுவும் எதிர்பார்ப்பது இல்லை அன்பை தவிர... //

    உண்மைதான் ....ஆனால் எது உண்மையான நட்பு என்று கண்டுபிடிப்பது தான் மிக சிரமமாக இருக்கிறது dheva...!?

    :))

    ReplyDelete
  24. மங்குனி அமைசர் said...

    //எல்லோருக்கும் தேவையான் ஒரு சிறந்த பதிவு , நன்றி//

    வாங்க அமைச்சரே...ரொம்ப நாள் கழிச்சு வந்ததுக்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்.....நன்றி நண்பரே.

    ReplyDelete
  25. asiya omar said...

    //நல்ல தெளிவாய் இருக்குங்க உங்க எழுத்து.அடுத்து என்னது கண்டனமா?வெயிட்டிங்.//

    நன்றி தோழி...கண்டனம் கொஞ்சம் காட்டமா இருக்கும் என்று நினைக்கிறேன். ம்...அதையும் படித்து விட்டு சொல்லுங்க...விரைவில் வரும்...

    ReplyDelete
  26. ப.செல்வக்குமார்...

    //என்னமோ பழகுறோம் இவனால் அல்லது இவளால் நமக்கு லாபம் கிடைக்கிறது என்று பலகுவோரே பின்னாளில் பெரும்பாலும் இவ்வாறு நடக்கிறது ..!//

    நீங்கள் சொல்வதின் உண்மையான அர்த்தம் என்னவென்றால், நட்பில் இப்போது எல்லாம் எதிர்பார்ப்பு என்பது அதிகமாக இருக்கிறது . உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், நம் நண்பர் நம்மிடம் மட்டும்தான் பேச வேண்டும் என்பது மாதிரி சொல்லலாம். அந்த எதிர்பார்ப்பு ஒரு கட்டத்தில் பிரிவில் கொண்டு வந்து விட்டுவிடுகிறது. இதன் பின்னர் நடப்பது தான் பதிவில் நான் குறிப்பிட்ட விசயங்கள்.

    கருத்திற்கு நன்றி சகோ.

    ReplyDelete
  27. சௌந்தர்...

    //நல்ல விழிப்புணர்வு அனைவரும் கற்று கொள்ளவேண்டியது//

    nanri soundar.

    //தொடர்ந்து வரும் அடுத்த பதிவு - கண்டனம்.///
    //அது சரி பின்னூடம் போடுபவர்களுக்கா?//

    பின்னூட்டம் போடுபவர்கள் என்ன செய்தார்கள்...?! என்னை வம்பில் மாட்டிவிடலாம் என்று பிளான் பண்றீயா சௌந்தர் ....??


    :))

    ReplyDelete
  28. அன்பரசன் said...

    //நல்ல விழிப்புணர்வு..//


    புரிதலுக்கு ரொம்ப நன்றி.

    ReplyDelete
  29. S Maharajan...

    நண்பருக்கு மிகவும் நன்றி .

    ReplyDelete
  30. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி அன்புடன் மட்டுமே பழகுவது அருமையான விஷயம்.

    நல்லப் பதிவு!

    ReplyDelete
  31. ரொம்ப அழகா, சரியா, நச்ன்னு சொல்லியிருக்கீங்க கௌசல்யா. அவசியமான பதிவும் கூட.

    ReplyDelete
  32. சுந்தரா...

    வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

    ReplyDelete
  33. Jaleela Kamal said...

    //நட்பை போற்று வோம் நட்பை வளர்ப்போம்.//

    சரிங்க....வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  34. Chitra...

    ரொம்ப நன்றி சித்ரா.

    ReplyDelete
  35. கண்ணகி...

    வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி தோழி

    ReplyDelete
  36. அமைதிச்சாரல் said...

    //இருப்பது ஒரு வாழ்க்கை, அதை நிறைவுடன் வாழலாமே..//

    மிக சரியான உண்மை இதை எல்லோரும் புரிஞ்சிகிட்டா வாழ்கையே இன்பம் தான் .

    நன்றி. :))

    ReplyDelete
  37. சே.குமார் said...

    //உண்மைதான்.
    பழகுவதில் கவனம் தேவை.//

    unmai

    நன்றி.

    :))

    ReplyDelete
  38. Sriakila said...

    //எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி அன்புடன் மட்டுமே பழகுவது அருமையான விஷயம்.//

    வருகைக்கும், புரிதலுக்கும் நன்றி

    ReplyDelete
  39. intha maathiri natpugalil pengal gavanaama irukkanum. paathippu namakuthan athigam. nandi kousalya

    - sowmya

    ReplyDelete
  40. http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_25.html

    ReplyDelete
  41. உண்மையான நட்பு, அன்பன்றி வேறெதையும் எதிர்பார்க்காது...

    மிக மிக விரிவாகவும், அழகாகவும், கருத்து செரிவுடனும் எழுதி இருக்கிறீர்கள்..

    வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  42. விக்னேஷ்வரி said...

    //ரொம்ப அழகா, சரியா, நச்ன்னு சொல்லியிருக்கீங்க கௌசல்யா. அவசியமான பதிவும் கூட.//

    உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி.....

    ReplyDelete
  43. vanathy said...

    //super post.//

    thank u vani...

    திவ்யாம்மா...

    thanks sowmiya.

    ஜெய்லானி...

    என்னை வலைசரத்தில் அறிமுக படுத்தியதுக்கு மிகவும் நன்றி சகோ.

    ReplyDelete
  44. R.Gopi said...

    //உண்மையான நட்பு, அன்பன்றி வேறெதையும் எதிர்பார்க்காது...//

    உண்மைதான். ஆனால் இருப்பதில் எது உண்மையான நட்பு என்று தான் தெரிந்து கொள்ளமுடியவில்லை. போலியாக ஒரு முகமூடி அணிந்த நட்பு தான் அதிகம் நம்மை சுற்றி இருக்கிறது. அதனால் நட்பை தேர்ந்து எடுப்பதில் மிகுந்த கவனம் தேவைபடுகிறது.

    thank u.

    ReplyDelete
  45. adhiran said...

    //where is poet link?//

    நட்பை பற்றி சொல்லிட்டு இருக்கிற சமயத்தில் 'where is the friend' என்று கேட்காமல் விட்டீங்க ....??!

    உங்களுக்காக லிங்க் இப்ப பதிவுடன் சேர்த்தே போட்டு விட்டேன் மகேந்திரன்.

    :))

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...