சனி, செப்டம்பர் 18

உறவு ஏன் மறுக்கப்படுகிறது ?! தாம்பத்தியம் பாகம் -18


உறவு ஏன் சில நேரம் மறுக்கப்படுகிறது ?

கணவன் மனைவி உறவு ஆரோக்கியமாக இருப்பதற்கு அவர்களுக்குள் செக்ஸ் உறவு என்பது நன்றாக இருக்கவேண்டும். மிக அவசியமானதும்  கூட. இதை தவிர்ப்பது என்பது இருவருக்குமே பாதிப்பை மன அளவில் ஏற்படுத்தும். பல  விவாகரத்துக்கு  இதுதான் அடிப்படைக்   காரணம் என்பது அதிர்ச்சியுடன் கூடிய உண்மை.

இந்த உறவைப்  பொறுத்தவரை கணவன் விருப்பப்பட்டு அழைக்கும் போது மனைவி மறுப்பதுதான் பெரும்பாலான வீடுகளிலும் நடைமுறையில் இருக்கிறது. அது ஏன் என்பது தெரியாமல் பல கணவர்களும் தவித்துப்  போய் விடுவார்கள். இதனால் மன அழுத்தம் அதிகமாகிப் பாதிக்கப்பட்டவர்கள் பலர். பாதிப்பின் காரணமாக பார்க்கும் வேலையில் கவனச்சிதறல் ஏற்படும் . 

ஆண்களுக்கு மட்டும் ஏன் அந்த எண்ணம் அதிகமாக இருக்கிறது என்ற ஒரு கேள்வி நான் சந்தித்த பல பெண்களிடமும் இருக்கிறது.  "அந்த ஆளுக்கு வேற நினைப்பே கிடையாது, எப்பவும் அந்த நினைப்புதான்....?! பிள்ளைங்க வேற வளர்ந்திட்டாங்க.  இப்பவும் அப்படியே இருக்க முடியுமா..?? என்ன சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டாரு..." இந்த மாதிரியான புலம்பல்கள் தான் பலரிடமும்...!

ஏன் இதை ஒரு வேலையாகவோ, அசிங்கமாகவோ, அருவருப்பானதாகவோ  நினைக்க வேண்டும் ?? தினம் மூன்று வேளை உணவு என்பது உடம்பிற்கு எந்த அளவிற்கு அவசியமோ அந்த மாதிரி 'அளவான உடல் தொடர்பான உறவும் அவசியம் தான்'  என்பதைப்  புரிந்துக்  கொள்ளவேண்டும்.

ஆண்கள் எப்போதும் அந்த எண்ணத்தை  மட்டுமே கொண்டவர்கள்  அல்ல. அதைவிட பல முக்கியப்  பொறுப்புகளையும், கடமைகளையும் கொண்டவர்கள் அவர்கள். இந்த விஷயத்தைப்  பொறுத்தவரை அவர்களின் உடல் அமைப்பு எப்படி என்று பார்த்தோம் என்றால் 90 வயதானாலும் அவர்களால் ஒரு குழந்தைக்கு தந்தையாக முடியும்.  அவர்களின் உடம்பில் அணுக்களின் சுரப்பு என்பது இருந்துக்  கொண்டே இருக்கும். இதன் எண்ணிக்கை வேண்டுமானால் நபருக்கு நபர் வேறுபடலாம். வயதிற்கு ஏற்ப மாதம் குறைந்தது 4 முறையாவது உறவு என்பது அவர்களுக்கு அவசியமாகிறது. 

கணவனின் தேவை என்ன என்பதை ஒவ்வொரு மனைவியும் புரிந்துக்  கொண்டு உறவுக்கானச்  சூழ்நிலைகளை ஏற்படுத்திக்கொண்டு கணவனை கவனிக்கும் போதுதான் அந்த கணவனும் மன நிறைவுடன் புத்துணர்ச்சி அடைவான், நீங்களும் உற்சாகம் அடைவீர்கள். அதைப் போல் மனைவியின் விருப்பம் என்ன , சூழ்நிலை என்ன என்று கணவனும் புரிந்துக்  கொண்டு நடந்து கொண்டால் சம்சாரம் ஒரு சங்கீதம் தான்.

மறுப்பது எதனால் ??

சில நேரம் கணவனோ, மனைவியோ ஒருவருக்கு விருப்பம் இருந்து அதை மற்றொருவர் மறுக்க வேண்டிய நிலை  ஏற்படும்.  பொதுவாகப்  பார்த்தோம் என்றால் இது ஒரு சாதாரண விசயமாகத்  தோன்றலாம்...ஆனால் 'உறவு மறுத்தல்' என்பது உடனே கொல்லும்  விஷம் போன்றது. ( மனதை ) இதனால் ஏற்படும் கோபம் பயங்கர வெப்பமாக இருக்கும், நெருப்பைப்  போல் சுடும்.

ஒருநாள் உறவு மறுத்தலானது கூட கணவன், மனைவி உறவைக்  கெடுத்து விடுகிறது. தன்னைப்  பிடிக்கவில்லையோ என்ற தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது , தங்களை அலட்சியப்படுத்துவதாக எண்ணி உள்ளுக்குள் மருகுகிறார்கள். நாளடைவில் மன அழுத்தம் அதிகமாகி தன்னை மறுத்தவர் மேல் உள்ள கோபத்தை, வெறுப்பை வார்த்தைகளில் கொட்டுவார்கள். அவர்கள் செய்யும் சின்னச்  சின்ன தவறையும் பெரிதாக எண்ணி கூச்சலிடுவார்கள். இதன் தொடர்ச்சியாக அடுத்து வருவது தான் துணையின் மீதான சந்தேகம்...??!  தன்னைத்  தவிர்க்க காரணம் வேறு ஒருவரின் பால் ஏற்பட்ட ஈர்ப்பாக இருக்குமோ என்பதில் வந்து நின்றுவிடுகிறது.

இப்படியாக நீண்டு கொண்டேச்  செல்லும் பிரச்சனை முதலில் வார்த்தையால் நோகடிப்பது, சண்டை, சில நேரம் கை நீட்டல் என்று போய்விடுகிறது.

காரணங்களும் விளக்கங்களும் 

*  உண்மையில் கணவனோ, மனைவியோ ஒருவர் உறவுக்கு அழைக்கும் போது இன்னொருவர் மறுப்பதற்கு 99 சதவீதம் செக்ஸ் காரணமாக இருப்பது இல்லை. அதாவது செக்ஸ் ஐ  மறுத்தாலும் காரணம் செக்ஸ் கிடையாது, இருவருக்கும் இடையில் இருக்கும் உறவுகளில் ஏற்பட்ட புரிந்துக் கொள்ளாமை தான் காரணம் .  தங்களது கோபத்தை இந்த நேரத்தில், இதில் தான் காட்டுவார்கள்.

*   அப்புறம் நேரம், உடல் சோர்வு, தூக்கம், உடல் நலக்   குறைவு இவையும் காரணமாக  இருக்கலாம்.

*    "இரண்டு பிள்ளைகள் ஆயிருச்சு, பிள்ளைகள் வேற வளர்ந்திட்டாங்க.இனிமே என்ன ?"
என்பது மாதிரியான சில மனைவிகளின் சலிப்பான பதில்கள், எண்ணங்கள்..!

விளக்கங்கள் சில

* மனைவி அல்லது கணவன் உறவைத்  தவிர்க்கிறார் என்றால் அவர் செக்சை தவிர்க்கிறாரே தவிர, உங்களையே தவிர்க்கிறார் என்று அர்த்தம் இல்லை !

*   மறுப்பதற்கு என்ன காரணம் என்பதைப்  பேசித்  தெளிவுப் படுத்திக்  கொள்ள வேண்டும். மறுப்பவர் காரணத்தைச்  சொல்லி விட வேண்டும்.

*  மறுப்பது சுலபம் ஆனால் அதனால் ஏற்படும் மனவலியை, மறுப்பவர்  புரிந்துக்  கொள்ள வேண்டும்.

*   ஒருவேளை உறவு கொள்வதில் ஏதும் பிரச்சனை இருந்து, அதன் காரணமாக தான் உறவை தவிர்ப்பதாக இருந்தால் கட்டாயம் மருத்துவரை சந்திப்பது உத்தமம். அலட்சியம் இந்த விசயத்தில் தயவுச்செய்து வேண்டாம்.

" பல ஆண்களுக்கு அவர்களின் சுய மதிப்பீடு என்பது சம்பாதிக்கும் திறனையும், செக்ஸ் ஆற்றலையும் சார்ந்தே உள்ளது. இதில் எதைக் காயப்படுத்தினாலும் வெறுத்துப்  போய் விடுவார்கள் "

இதை பெண்கள் கொஞ்சம் புரிஞ்சிக்  கொள்ளனும்.

மனோரீதியாக அதிக ஈர்ப்பு கொண்ட தம்பதிகளின் செக்ஸ் வாழ்க்கை மிக இன்பகரமானதாக இருக்கும். அவர்களுக்குள் இருக்கும் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகளை கூட சிறப்பான செக்ஸ் வாழ்க்கை வேகமாகப்  போக்கிவிடும்.

எந்த விதத்தில் எல்லாம்  கணவனும்  , மனைவியும் தங்களது நெருக்கத்தை அதிகரித்துக்  கொள்ளலாம் என்பதைப்  பற்றி அடுத்த பதிவில் பார்போம்.

தாம்பத்தியம் தொடர் தொடரும்.....

தொடர்ந்து பேசுகிறேன்...
உங்களின் 'மனதோடு மட்டும்'
கௌசல்யா 

38 கருத்துகள்:

  1. மிக சிக்கலான விஷயத்தை.. மிக தெளிவாக எழுதி.. மிக எளிமையாக தீர்வு சொல்லியிருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல தகவல்களை சேகரித்து பலபேருக்கு உபயோகமான தகவல்..

    பதிலளிநீக்கு
  3. "ஆண்கள் எப்போதும் அந்த எண்ணத்தை மட்டுமே கொண்டவர்கள் அல்ல. அதைவிட பல முக்கிய பொறுப்புகளையும், கடமைகளையும் கொண்டவர்கள் அவர்கள்."

    சரியா சொன்னிங்க தோழி ..எல்லோரும் படிச்சு பயன் படற நல்ல பதிவு ..பகிர்வுக்கு நன்றி ..அடுத்த பாகத்துக்கு ஆவலோட.

    பதிலளிநீக்கு
  4. ஆண் பெண் என இரு பாலரும் படித்து படிக்க வேண்டிய அவசியமான பதிவு...

    பதிலளிநீக்கு
  5. ஒரு பெண்ணாக இருந்துக் கொண்டு கூச்சம் இல்லாமல் சரியான தகவலக்ளை சொல்றீங்க தோழி! இந்த விழிப்புணர்வு எல்லோருக்கும் வர வேண்டும். நன்றி!

    பதிலளிநீக்கு
  6. LK...

    புரிதலுக்கு மகிழ்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. சசிகுமார் said...

    //நன்றி அக்கா//

    o.k sasi.

    :))

    பதிலளிநீக்கு
  8. raja said...

    //மிக சிக்கலான விஷயத்தை.. மிக தெளிவாக எழுதி.. மிக எளிமையாக தீர்வு சொல்லியிருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.//

    உண்மைதான் மிக சிக்கலான விஷயம் தான்...அதுதான் எழுத அதிக நேரம் எடுக்க வேண்டி இருக்கிறது. உங்களின் புரிதலுக்கு நன்றி

    :)

    பதிலளிநீக்கு
  9. sandhya...

    //சரியா சொன்னிங்க தோழி ..எல்லோரும் படிச்சு பயன் படற நல்ல பதிவு ..பகிர்வுக்கு நன்றி ..அடுத்த பாகத்துக்கு ஆவலோட.//

    நன்றி தோழி. அடுத்த பாகம் உங்களின் ஆதரவோடு விரைவில்.

    பதிலளிநீக்கு
  10. வெறும்பய said...

    //ஆண் பெண் என இரு பாலரும் படித்து படிக்க வேண்டிய அவசியமான பதிவு...//

    உண்மைதான் சகோ.

    பதிலளிநீக்கு
  11. பல நல்ல தகவல்கள்..அதுவும் புரிவதற்கு எளிதாக...

    பதிலளிநீக்கு
  12. என்னது நானு யாரா? said...

    //ஒரு பெண்ணாக இருந்துக் கொண்டு கூச்சம் இல்லாமல் சரியான தகவலக்ளை சொல்றீங்க தோழி! இந்த விழிப்புணர்வு எல்லோருக்கும் வர வேண்டும். நன்றி!//

    இப்படி எதையும் நாம வெளிபடையாக பேசாமல் இருப்பதால் தான் நம்மிடையே சரியான விழிப்புணர்வு இல்லாமல் போய்விட்டது. இந்த விஷயம் பேச ஆண் , பெண் என்ற பேதம் எதுக்கு. ?? பெண்ணை சார்ந்தது தானே இந்த விசயமே....?!

    வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. புன்னகை தேசம். said...


    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  14. சிக்கலான பல விஷயங்களை வாழ்வில் எப்படி அணுகுவது என்று, இந்த தொடரை படித்தாலே, கண்டிப்பாக தெளியலாம்...

    ரொம்ப விரிவா, அழகான எழுத்து நடையில் எழுதறது ரொம்ப நல்லா இருக்கு...

    தொடருங்கள்....

    என் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  15. அலைகள் பாலா said...

    //அவசியமான பதிவு//

    ஆமாம் உண்மைதான். வருகைக்கு நன்றிங்க

    பதிலளிநீக்கு
  16. அன்பரசன் said...

    //அருமையான அலசல்.//

    உங்களின் வருகைக்கு நன்றிங்க.

    :))

    பதிலளிநீக்கு
  17. R.Gopi said...

    ///சிக்கலான பல விஷயங்களை வாழ்வில் எப்படி அணுகுவது என்று, இந்த தொடரை படித்தாலே, கண்டிப்பாக தெளியலாம்...

    ரொம்ப விரிவா, அழகான எழுத்து நடையில் எழுதறது ரொம்ப நல்லா இருக்கு..///


    உங்களின் சரியான புரிதலுக்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  18. மிக சிக்கலான விஷயத்தை.. மிக தெளிவாக எழுதிருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. தாம்பத்திய உறவை அற்புதமாக எழுதி கொண்டு வருகிறர்கள்
    தற்போதிய வாழ்கைக்கு அவசியமான பதிவு
    தொடர்ந்து எழுதுங்கள்
    வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
  20. good post..

    http://riyasdreams.blogspot.com/2010/09/blog-post_18.html

    பதிலளிநீக்கு
  21. கௌஸ், நல்லா இருக்கு. தொடருங்க..

    பதிலளிநீக்கு
  22. சே.குமார் said...

    கொஞ்சம் சிக்கலான விஷயம் தான் புரிந்து கொள்ளவில்லை என்றால்....

    புரிந்து, தெரிந்து, தெளிந்து கொண்டவர்களுக்கு சந்தோஷமான விஷயம் தான்.

    நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  23. S Maharajan said...

    நன்றி நண்பரே. எப்ப ஊர் பக்கம் வரீங்க ??

    பதிலளிநீக்கு
  24. பிரியமுடன் பிரபு said...

    வருகைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. சில விஷயங்களை புரிந்து கொண்டேன், நன்றி.

    பதிலளிநீக்கு
  26. இரவு வானம் said...

    //சில விஷயங்களை புரிந்து கொண்டேன், நன்றி.//

    உங்களின் புரிதலுக்கும் , வருகைக்கும் நன்றிங்க

    பதிலளிநீக்கு
  27. திருமண உறவில் ஏற்படும் பிரச்சி​னைக​ளை உளவியல் ரீதியில் அனுகும்மு​றை சிறப்பாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  28. i am a diabitic. i got after marriage means last 10 years. When i was in healthy, i called so many times for sex. my wife refused to come. now i am totally unfit. she shows interest

    பதிலளிநீக்கு

போலி உறவுகளின் ஈர்ப்பு...!? தாம்பத்தியம் - பாகம் 33

"இந்த ஆம்பளைங்க  ஏன்  இப்படி இருக்காங்க...????"  ரிங் ஆன செல்போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த செகண்ட் இந்த கேள்வி காதை அறைந்தது? ஆ...