வியாழன், செப்டம்பர் 16

5:55 PM
55

இனிய அனுபவம் 

நானும் என் கணவரும் சந்தித்த அந்த நாளையும் அதன்பின் நாங்கள் திருமணம் மூலம் ஒன்று சேர்ந்த அந்த நாளும் இன்று வரை பசுமையாய் நேற்றுதான் நடந்தது போல் இருக்கிறது. ஆனால் ஒன்று நாங்கள் இருவரும் கணவன், மனைவியாய் மாறவே  இல்லை என்பதுதான் ஒரு வருத்தம் வேற எப்படிங்க சொல்றது, காதலர்களாய் இன்னும் காதலித்தே முடியவில்லை. ( காதலில் சலிப்பு வந்தால் அப்புறம் மெதுவாய் தம்பதிகளாய் மாறி கொள்ளலாம்...நான் சொல்றது சரிதானே...?!)

தற்செயலாக நடந்த சம்பவம் ஒன்று, வாழ்நாள் முழுவதும் தொடரும் இனிய அனுபவமாக அமைவது மிகவும் அபூர்வம்.  ஆனால் என் வாழ்வில் அந்த அதிசயம் நடந்தது .  அந்நினைவுகளை இந்த நாளில் உங்களுடன் பகிர்ந்துக்கொள்வது மற்றொரு   சிறந்த நினைவாக  இருக்கும் என்று நினைக்கிறேன்.

சில வருடங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக என் பெற்றோருடன்  சென்னையில் இருந்து எங்கள் சொந்த ஊரான திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசிக்கு வந்திருந்தோம். விசேஷம்  முடிந்து கிளம்பும் நேரம்,  எங்களின் நெருங்கிய உறவினர் ஒருவர் அருகில் ஒரு ஊரில் பெரிய தொழிலதிபர் குடும்பம் இருப்பதாவும் 'மிகவும் வயதான அவர்கள் உங்களை சந்திக்கணும் என்று அடிக்கடி சொல்வார்கள், காரில் தானே வந்து இருக்கிறீர்கள், ஊருக்கு போற வழியில் அப்படியே அவர்களை பார்த்து விட்டு போகலாம்'  என்று பலவாறு  சொல்லி எங்களை வற்புறுத்தி அழைத்தார். என் பெற்றோரும் சரி வயதானவர்கள் தானே சென்று பார்த்து விட்டு போகலாம் என்று முடிவு செய்ததால்  கிளம்பினோம். 

கிராமத்து பசுமையான வயல்களை கடந்து அந்த ஊரை அடைந்தோம். அவர்களும் மிக அன்பாக எங்களை வரவேற்று வீட்டினுள் அழைத்து சென்றனர். (நாங்கள் வருவது  முன்பே எப்படி தெரிந்தது என்ற யோசனையுடன் உள்ளே சென்றோம்) அங்கிருந்த வயதானவர்களை எங்கள் உடன் வந்த உறவினர் இவங்க உனக்கு தாத்தா,  பாட்டி வேணும்  என்று கூறி அறிமுக படுத்தினார். என்  அப்பா வழி சொந்தமாம்...இந்த விவரமே என் அப்பாவிற்கு அங்கு சென்றபின் தான் தெரிந்தது.( வேலை நிமித்தமாக சென்னையில் செட்டில் ஆனதால் சொந்தகாரர்கள் யார் என்றே தெரியாமல் தான் போய் விடுகிறது ) அந்த பாட்டி என் அப்பாவிற்கு அத்தை முறையாம்...! 

நானும் மரியாதையுடன் ஒரு வணக்கம் போட்டு விட்டு ஒரு ஓரமாக சென்று அமர்ந்தேன்... அமர்ந்த பின் தான் கவனித்தேன் என்னை சுற்றி கிட்டத்தட்ட 10  பேர்க்கு மேல் இருந்தனர்...??! எல்லோரின் பார்வையும் என்மேல் தான்..நானும் 'என்னடா இப்படி பர்ர்கிறாங்க' என்று லேசாக எட்டி பார்த்த கோபத்தை கட்டு படுத்தி கொண்டு சும்மா சிரித்து வைத்தேன். திடீரென்று  எல்லோரிடமும் ஒரு சின்ன பரபரப்பு..! வாட்டசாட்டமாக  தாதா மாதிரி ஒருவர் உள்ளே வந்து எனக்கு எதிர் சோபாவில் அமர்ந்தார். என்னை பார்த்து லேசா சிரித்து என் பேரை கேட்டார்...நானும் இவர் யார் என்ற யோசனையுடன் கொஞ்சம் தயக்கத்துடன் (பயத்துடன்...! ) 'கௌசல்யா' என்றேன். அதுவே அதிகம் என்று எண்ணினாரோ என்னவோ எழுந்து சென்று விட்டார். 

கொஞ்ச நேரம் சென்றதும் என் அம்மா என்னை தனியே அழைத்து அந்த பையனை பார்த்தியா, "அவர்தான் மாப்பிளை...எல்லோருக்கும் உன்னை பிடித்து விட்டது. உன் முடிவை கேட்கிறார்கள்" ,என்று ஒரு குண்டை அசால்டாக தூக்கி போட்டாங்க. " ஐயோ  கடவுளே ! என்னமா இது இந்த மாதிரி எந்த ஊரிலும் நடக்குமா...? தயவு செய்து சரின்னு சொல்லிடாதிங்க. எனக்கு இந்த கூட்டத்தை பார்த்தாலே என்னவோ போல் இருக்கு அதுவும்  அவர பார்த்தா தாதா மாதிரி...நாட்டில வேற ஆளா இல்லை ...!?" அப்படி இப்படின்னு ஒரே கத்து கத்திட்டேன். நல்லவேளை என் புத்தி தெரிஞ்சதால அம்மா எல்லோரையும் விட்டு தள்ளி தனியா போய் கேட்டதால பரவாயில்லை.  'எங்களுக்கும் இங்கு வந்த பிறகு தான்மா  தெரிகிறது' என்று சொல்லி என்னை சமாதானம் செய்த பின்னர் அவர்களிடம், 'ஊரில் போய் எங்கள் பசங்களிடமும் பேசிட்டு சொல்கிறோம் ' என்று ஒரு வழியா சமாளிச்சு சொல்லிட்டு கிளம்பினோம்.  

எங்கள வழி அனுப்புறேன் பேர்வழி என்று நான் இருந்த பக்கம் வந்து கார் கதவை அடைத்தார் பாருங்க (வேற யாரு, தாதா தான் ) அப்படியே ஆடி போயிட்டேன்.  

வண்டியில் ஏறியதும்  முதல் வேலையா எங்களை அழைத்து சென்ற உறவினரை முறைத்தேன் ஆனா  அவர் கொஞ்சமும் அசரவே இல்லை !? எங்களை இங்கு அழைத்து வருவது அவரது ஒரு வார ஏற்பாடாம். ( என்னவொரு வில்லத்தனம்...??! ) 

ஊர் சென்றதும் இந்த விஷயத்தை அப்படியே மறந்து விட்டேன். ஒரு வாரம் கழித்து அம்மா மெதுவாய் பேச்சு எடுத்தார், "என்னமா செய்யபோற, உன் முடிவு என்ன" என்று . நான் 'என்ன சொல்ல கொஞ்ச நாள் போகட்டும்'  என்று சொல்லி சமாளிக்க பார்த்தேன். அம்மா விடவில்லை அந்த பையனின் அப்பா உடல்நிலை மோசமாக இருப்பதால் சீக்கிரம் கடைசி பையனின் கல்யாணத்தை பார்க்க  நினைக்கிறாராம். ( அதுக்கு நான் என்னங்க செய்ய முடியும்...? ) சரி வேற எப்படி தப்பிக்கலாம் என்று ஒரு நாள் முழுதும் யோசித்து கடைசியாக  என் உடன் பிறந்த அண்ணனை போய் பார்த்து விட்டு வர சொல்லுவோம் , கண்டிப்பா அவனுக்கும்  பிடிக்காது. நாம சாதித்து விடலாம் (ரொம்ப புத்திசாலிதனமா திட்டம் போட்டதா பெருமை வேறு பட்டுக்கொண்டேன்)   என்று முடிவு பண்ணி அம்மாவை  அழைத்தேன், " அம்மா அண்ணனை போய் பார்த்து விட்டு வர சொல்லுங்க, அவனுக்கு ஓ.கேனா ? எனக்கும் ஓ.கே தான்  " என்றேன் ரொம்ப தெம்பாக.  அவனும் தன்னுடன் இரண்டு நண்பர்களையும் அழைத்து கொண்டு கிளம்பினான். 

சந்தோசமாக  அவன் வரவை எதிர்பார்த்து காத்திருந்தேன்....சென்றவன் திரும்பினான்...மனதிற்குள் எல்லா கடவுளையும் வேண்டி கொண்டு அவன் பதிலுக்காய் அவனையே பார்த்து கொண்டிருந்தேன். ஒரே வார்த்தைதான் என் அன்பு அண்ணன் சொன்னான், "ரொம்ப நல்லவரா தெரிகிறார், இவரை மிஸ் பண்ணிடாத"   அடபாவி கவுத்துட்டீயே டா.... (மனதிற்குள்தான் )  

அப்புறம் என்ன அவன் சம்மதமே என் சம்மதமாக எடுத்து கொள்ளப்பட்டு (அப்படிதானே அக்ரீமென்ட் ) வேகமாக திருமண வேலைகள் நடக்க ஆரம்பித்தன. பத்திரிக்கையும் அடித்து வந்து சேர்ந்தது....அம்மா 'மாடல் நல்லா இருக்கா ?" என்று என்னிடம் ஒன்றை கொடுத்தார். பார்த்ததும் அப்படியே நொறுங்கி போயிட்டேன்....?! திருமணம் நடக்க கூடிய இடம் என்பதில்  St.Pauls Church  என்று இருக்கிறது. 'முருகா இது என்னப்பா இப்படி ஒரு சோதனை' என்று அம்மாவை பார்க்க இதில் என்னமா இருக்கிறது அவங்க வேதகாரங்க தான், அவங்க முறைபடி தானே  கல்யாணம் நடக்கணும். ( என் அம்மாவிற்கு கிறிஸ்டியன்ஸ் என்றால் கொஞ்சம் பிடிக்கும், ஏன்னா அவங்க படிச்சது கிறிஸ்டியன் கான்வென்ட்) ஆனா நான் அப்படி இல்லையே எப்பவும் மனதிற்குள் 'முருகா, முருகா' என்று தானே சொல்லிட்டே இருப்பேன்.  இனி அப்படி சொல்ல முடியாதே. எனக்கு இந்த மஞ்சள் கயிறு, 'மாங்கல்யம் தந்துனானே' மந்திரம்  இது தான் கல்யாணம் என்ற நினைப்பிலேயே இருந்திட்டேனே அதிலும் மண் விழுந்துவிட்டதே....?!!    

என்னை சுத்தி எதுவோ நடக்கிறது என்று மட்டும் நல்லா தெரியுது.  ஆனா சத்தியத்துக்கு கட்டு பட்ட மாதிரி நானும் எல்லாத்துக்கும் தலையாட்டிட்டே இருந்திருக்கிறேன். இப்படியாங்க சோதனை மேல் சோதனையா  வரும். 

அடுத்து இரண்டு நாளில் மறுபடியும் என் பொறுமையை சோதிக்க ஒரு வேலை வந்தது. "கல்யாணத்திற்கு முன் ஞானஸ்தானம் கொடுக்க வேண்டும் அதனால் பெண்ணை அழைத்து கொண்டு வாருங்கள்" என்று போன் வந்தது. ம்... என் கையில் எதுவும் இல்லை என்று நன்றாக தெரிந்து விட்டது..நடப்பது நடக்கட்டும் என்று என் அம்மா , அண்ணன் தம்பியருடன் சென்னையில் இருந்து கிளம்பினோம். கல்யாணத்திற்கு  இன்னும் இரண்டு நாள் தான் இருப்பதால் அப்பா  மற்ற வேலைகளை முடித்து விட்டு கிளம்ப வேண்டும் என்று எங்களுடன் வரவில்லை. 

நாங்கள் வருவதற்கு  முன்பே  அவர்கள் சர்ச்சில் காத்திருந்தனர். என்னை உள்ளே அழைத்து சென்றனர்...பலி ஆடு மாதிரி நானும் என்ன நடக்க போகிறது என்றே தெரியாமல் தரையை பார்த்து கொண்டே பின் சென்றேன்...!!? 

அப்போது அக்கா ஒருத்தர் என் அருகில் வந்து என் மெதுவாக, ' கௌசல்யா உன் நெற்றியில் இருக்கும் பொட்டை எடுத்துவிடு ' என்றார்....? அதை கேட்டதுமே கண்கள்  நீரை சொரிய தயாராகி  விட்டன.... பின்னர்  ரிஜிஸ்டர் ஒன்றில் என்னை பற்றிய விவரங்களை கேட்டு எழுதிக்கொண்டு என்னை கையெழுத்திட  சொன்னார்கள்...அது முடிந்ததும் பாதிரியார் அருகில் சென்று  அவர் முன்னால் நின்றேன், சில வாசகங்களை வாசித்து என்னையும் தொடர்ந்து சொல்ல சொன்னார், நானும் சொல்லிக்கொண்டே வந்தேன்...அதில் முக்கியமாக  ஒரு வரி வரும், 'இன்று முதல் இயேசுவை உன் இரட்சகராய் (ஆண்டவராய்) ஏற்று கொள்வாயா  என்று ?? அதற்கு நான் 'ஆம்' என்று பதில் சொல்ல வேண்டும். 

மற்ற எல்லா சத்தியங்களுக்கும்  ஆம் என்று உடனே சொல்ல முடிந்த என்னால் இதற்கு சிறிது தயங்கினேன்...பின் மனதை தேற்றி கொண்டு முருகனையும் மனதில் நினைத்து கொண்டு மெதுவாய் 'ஆம்' என்றேன். பின் புனித நீரை என் மேல் தெளித்தார் பாதிரியார்.அந்த நீருடன் மெதுவாய் என் கண்ணீரும் இறங்கியதை யாரும் கவனிக்கவில்லை. 

அங்கு முழங்கால் போட்டு நின்ற என் தலைமேல் கை வைத்து பாதிரியார் ஜெபம்  பண்ணினார்.. முடிந்ததும் என் பக்கமாக ஒரு கை நீண்டது அதில் பணம் இருந்தது, என்னை தன்னுடையவளாக மாற்றி கொண்டிருக்கும் அவரது கரம் தான் அது...! 'இந்த காணிக்கையை பாதிரியாரிடம் கொடு' என்ற மெல்லிய குரல் வந்ததும் முழங்காலில் இருந்த நான் மெதுவாய் மேல் நோக்கி பார்த்து பணத்தை வாங்கினேன்.    வேறு ஒரு ஆடவனிடம் கை நீட்டுகிறோம் என்பதையும்  மறந்து ஒரு உணர்வு 'இவன் தான் உனக்கானவன்' என்று உள்ளே  ஒரு குரல். ஏசுநாதரையும் எனக்கானவரையும் ஒன்றாக மனதால் நான் ஏற்று கொண்ட அந்த ஒரு தருணத்தை இன்று நினைக்கும் போதும் உணர்ச்சி பெருக்கால் கண் கலங்குகிறது. ஆண்டவன் சன்னதியில் வைத்து என் மனதில் குடியேறியவர் நிரந்தரமாக அதிரடியாக  அமரவைக்கவேண்டிய சந்தர்ப்பம்  ஒன்றும் இதன் தொடர்ச்சியாக நடந்தது.     

இந்த இனிய நினைவுகள் இன்னும்  தொடரும்....

சிறு குறிப்பு.

அந்த இனிய கல்யாண நாள் இன்று தான். பதினான்கு வருடங்களை இனிமையாக முடித்து பதினைந்தாவது வருடத்தில் இன்று அடி எடுத்து வைத்து இருக்கிறோம்.

Tweet

55 கருத்துகள்:

  1. திருமண நாள் வாழ்த்துக்களை முதலில் சொல்லிடுறேன்....

    14 வருசம் ஆயிடுச்சாங்க.. ரொம்ப அருமையான அன்பான வாழ்க்கையை கடவுள் உங்களை ஆசிர்வாதம் செஞ்சு கொடுத்திருக்கிறார்.... ! இயேசு நாதரையும் உங்கள் கணவரையும் ஒன்றாக ஏற்றுக் கொண்ட இடம் செம டச்சிங்....!

    காதலிலேயே வாழ்வது ஒரு வரப்பிரசாதம் ... அதை உங்களுக்கு கடவுள் எப்போதும் அருளவேண்டி... இது போல் 100க்கும் மேல திருமண நாட்களை கொண்டடுங்கள்.....

    வாழ்த்துகள் உங்களுக்கும்... உங்கள் அன்புக் கணவருக்கும்...!

    Its really nicely writen...and still waiting for next part.............!

    பதிலளிநீக்கு
  2. ஆகா இன்று தானா வாழ்த்துக்கள் சகோதரி. அருமையான் பகிர்வு.கடந்த காலத்தை அசைபோட்டு பார்ப்பதே சுவியான் அனுபவம். ப்திவாக் போட்டு இருக்கிறீர்கள். புரிந்து கொண்டவர்களுக்குவாழ்வு இனிமைதான். பல் செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ் வாழ்த்துகிறேன். நட்புடன் நிலாமதி அக்கா

    பதிலளிநீக்கு
  3. திருமணம் ஆனா விஷயத்தை இப்படி கூட சொல்லலாமா திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. //அதுவே அதிகம் என்று எண்ணினாரோ என்னவோ எழுந்து சென்று விட்டார். /

    பயந்து போய் போய்ட்டாரோ ???

    // என் புத்தி தெரிஞ்சதால அம்மா எல்லோரையும் விட்டு தள்ளி தனியா போய் கேட்டதால பரவாயில்லை. ///

    அம்மாவுக்கு தெரியாதா தன் பொண்ணு ஒரு ரௌடின்னு

    பதிலளிநீக்கு
  5. நேரில் இருந்து சொல்வது போல, எழுதி இருக்கிறீர்கள்....
    HAPPY ANNIVERSARY!

    பதிலளிநீக்கு
  6. பசுமையான பகிர்வு.
    இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. திருமண நாள் வாழ்த்துக்கள்...

    அருமையாக எழுதி இருக்கறீங்க

    பதிலளிநீக்கு
  8. இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்...அக்கா...

    பதிலளிநீக்கு
  9. அட்டகாசமான எழுத்து நடை. திருமண நாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. திருமண நாள் நல்வாழ்த்துக்கள்...அக்கா...

    பதிலளிநீக்கு
  11. திருமண நாள் வாழ்த்துக்கள் தோழி ..

    "(வேற யாரு, தாதா தான் ) அப்படியே ஆடி போயிட்டேன். "

    இது தாதா க்கு தெரியுமா....

    பதிலளிநீக்கு
  12. திருமணநாள் வாழ்த்துக்கள் கௌசல்யா.

    பதிலளிநீக்கு
  13. இன்னும் மனதில் இருக்கும் பசுமையான நினைவுகளை எங்களோடு பகிர்கிறீர்கள் கௌசி.
    அன்பு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  14. திருமண நாள் வாழ்த்துக்கள்!

    அருமையான காதல் ஜோடிகள்! சந்தோஷமாக வாழுங்கள் தோழி!

    எழுதிய விதம் அருமை! அருகில் இருந்து சொன்னது போலவே இருந்தது!

    வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  15. வாழ்த்துகள் உங்களுக்கும்... உங்கள் அன்புக் கணவருக்கும்...!

    பதிலளிநீக்கு
  16. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.ஒரு படமாக எடுத்தால் சூப்பராக இருக்கும் போல.சும்மா ஜாலிப்பா !

    பதிலளிநீக்கு
  17. திருமண நாள் வாழ்த்துக்கள். நல்லா இருக்கு. அடுத்த பாகம் எப்போ??

    பதிலளிநீக்கு
  18. திருமண நாள் வாழ்த்துக்கள்!
    Excellent flow :)

    பதிலளிநீக்கு
  19. dheva said...

    உங்களின் அன்பான வாழ்த்திற்கு மகிழ்கிறேன் தேவா.

    //வாழ்த்துகள் உங்களுக்கும்... உங்கள் அன்புக் கணவருக்கும்...!//

    அவரும் உங்கள் வாழ்த்தை பெற்றுகொண்டார்.

    //Its really nicely writen...and still waiting for next part.............!//

    வெகு விரைவில்...

    :))

    பதிலளிநீக்கு
  20. திருமண நாள் வாழ்த்துக்கள்

    நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
  21. நிலாமதி said...

    //புரிந்து கொண்டவர்களுக்குவாழ்வு இனிமைதான். பல செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ் வாழ்த்துகிறேன்.//

    இந்த தங்கைக்கு ஆசிர்வாதத்தையும் , வாழ்த்தையும் கொடுத்த உங்களை அன்பிற்கு ரொம்ப நன்றி அக்கா

    :))

    பதிலளிநீக்கு
  22. சௌந்தர் said...

    இப்படியும் சொல்லலாமே. வாழ்த்திற்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  23. LK...

    //பயந்து போய் போய்ட்டாரோ ???//

    யாரு அவரா, நல்லா கேட்டீங்க போங்க...?!

    உங்களின் அன்பான வாழ்த்தை ஏற்று கொண்டேன்.

    :))

    பதிலளிநீக்கு
  24. Chitra said...

    //நேரில் இருந்து சொல்வது போல, எழுதி இருக்கிறீர்கள்....
    HAPPY ANNIVERSARY!//

    ம்..ஆமாம் தோழி அப்படி சொல்வதாய் நினைத்து தான் எழுதினேன். வாழ்த்திற்கு நன்றி.

    :)

    பதிலளிநீக்கு
  25. அன்பரசன் said...

    //பசுமையான பகிர்வு.
    இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.//

    வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  26. அருண் பிரசாத் said...

    //திருமண நாள் வாழ்த்துக்கள்...

    அருமையாக எழுதி இருக்கறீங்க//

    வாழ்த்திற்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  27. Mrs.Menagasathia said...

    //very interesting..happy anniversary!!//

    வாழ்த்திற்கு ரொம்ப நன்றி தோழி

    :))

    பதிலளிநீக்கு
  28. ganesh said...

    //இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்...அக்கா...//

    thank u ganesh.

    :))

    பதிலளிநீக்கு
  29. //அந்த இனிய கல்யாண நாள் இன்று தான். பதினான்கு வருடங்களை இனிமையாக முடித்து பதினைந்தாவது வருடத்தில் இன்று அடி எடுத்து வைத்து இருக்கிறோம்.//

    கடைசியில தான் ட்விஸ்ட்டே. இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  30. jothi said...

    //அட்டகாசமான எழுத்து நடை. திருமண நாள் வாழ்த்துக்கள்//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  31. Sureshkumar C...

    உங்களின் முதல் வருகைக்கு நன்றி. வாழ்த்தை ஏற்று கொண்டேன். :)

    sandhya...

    //"(வேற யாரு, தாதா தான் ) அப்படியே ஆடி போயிட்டேன். "

    இது தாதா க்கு தெரியுமா....//

    ம்...தெரியும்ப்பா . வாழ்த்துக்கு நன்றி தோழி.

    Yes We (எஸ் வி) said...

    //Thirumana naal vaalthukkal thozhi...//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ.

    தெய்வசுகந்தி said...

    //வாழ்த்துக்கள் கெளசல்யா!!!//

    உங்களின் வாழ்த்திற்கு மிகவும் மகிழ்கிறேன் தோழி. நன்றி.
    :)

    அஹமது இர்ஷாத் said...

    //திருமணநாள் வாழ்த்துக்கள் கௌசல்யா.//

    ரொம்ப நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  32. ஹேமா said...

    //இன்னும் மனதில் இருக்கும் பசுமையான நினைவுகளை எங்களோடு பகிர்கிறீர்கள் கௌசி//

    ஹேமா நீங்க கௌசி என்று அழைக்கும் ஒவ்வொரு முறையும் என் அம்மா நினைவு வருகிறது தோழி.

    கண்டிப்பாக பசுமையான நினைவுகள் தொடரும் உங்களை மாதிரியானவர்களின்
    வாழ்த்துக்களுடன். நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  33. என்னது நானு யாரா? said...

    //திருமண நாள் வாழ்த்துக்கள்!

    அருமையான காதல் ஜோடிகள்! சந்தோஷமாக வாழுங்கள் தோழி!

    எழுதிய விதம் அருமை! அருகில் இருந்து சொன்னது போலவே இருந்தது!//

    உங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்னை சந்தோசம் கொள்ள வைக்கிறது. எழுத்தை பற்றிய உங்களின் புரிதலுக்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  34. சே.குமார்...

    வாழ்த்திற்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  35. asiya omar said...

    //இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.ஒரு படமாக எடுத்தால் சூப்பராக இருக்கும் போல.சும்மா ஜாலிப்பா !//

    தோழி என்ன அழகான புரிதல் உங்களது...! உண்மையில் அந்த நாளை கண் முன் கொண்டு வந்து பார்க்கும் போது எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது....ஹா ஹா.

    நன்றி தோழி உங்கள் வாழ்த்திற்கு.

    பதிலளிநீக்கு
  36. ஜெஸ்வந்தி...

    உங்களின் வருகைக்கும், அன்பான வாழ்த்திற்கும் நன்றி..

    பதிலளிநீக்கு
  37. vanathy said...

    //திருமண நாள் வாழ்த்துக்கள். நல்லா இருக்கு. அடுத்த பாகம் எப்போ??//

    பெரிய எழுத்தாளர் நீங்க, நான் எழுதியதை நல்லா இருக்கு என்று சொன்னதே எனக்கு போதும் தோழி.. அடுத்த பாகம் வெகு விரைவில். நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  38. Balaji saravana said...

    //திருமண நாள் வாழ்த்துக்கள்!
    Excellent flow :)//

    ரொம்ப நன்றி Balaji.

    :))

    பதிலளிநீக்கு
  39. VELU.G said...

    வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  40. சசி குமார்...

    ///கடைசியில தான் ட்விஸ்ட்டே. ///

    முதலிலேயே சொல்லிட்டா டுவிஸ்ட் இருக்காதே அதுதான் கடைசியில்...

    thank u sasi.

    :))

    பதிலளிநீக்கு
  41. இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள கணவருக்கும்.

    என் முதல் வருகை நல்லாவே இருக்கு என்று நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

    நல்லா எழுதியிருக்கிங்க.

    www.vijisvegkitchen.blogspot.com

    பதிலளிநீக்கு
  42. அன்புத் தோழிக்கும், உங்கள் கணவருக்கும்...
    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்...!
    எல்லா வளமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்..

    பதிலளிநீக்கு
  43. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்ங்க கௌசல்யா... இன்று போல் என்றும் வாழ என் பிரார்த்தனைகள்

    பதிலளிநீக்கு
  44. லேட்டா வந்துட்டேனே!!.. சரி,மறுவீடு வாழ்த்துக்கள். :-))))

    பதிலளிநீக்கு
  45. Vijiskitchen said...

    //இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள கணவருக்கும்.

    என் முதல் வருகை நல்லாவே இருக்கு என்று நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.//

    ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு தோழி. ஆனால் நான் உங்களை ஏற்கனவே தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறேன். உங்கள் வரவு உண்மையில் நல்வரவுதான். நன்றி.

    பதிலளிநீக்கு
  46. Ananthi said...

    //அன்புத் தோழிக்கும், உங்கள் கணவருக்கும்...
    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்...!
    எல்லா வளமும் பெற்று வாழ இறைவனை வேண்டுகிறேன்..//

    உங்களின் வாழ்த்திற்கும், பிராத்தனைக்கும் நன்றி ஆனந்தி.

    பதிலளிநீக்கு
  47. அப்பாவி தங்கமணி said...

    //இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்ங்க கௌசல்யா... இன்று போல் என்றும் வாழ என் பிரார்த்தனைகள்//

    உங்களின் வாழ்த்திற்கும், பிராத்தனைக்கும் நன்றி தோழி. உங்களின் வருகைக்கு மகிழ்கிறேன்.

    பதிலளிநீக்கு
  48. அமைதிச்சாரல் said...

    //லேட்டா வந்துட்டேனே!!.. சரி,மறுவீடு வாழ்த்துக்கள். :-))))//

    அடடா.... இப்பவரை ஒருத்தரும் எனக்கு மறு வீடு வாழ்த்து சொல்லலையேனு ரொம்ப கவலையா இருந்தேன்....! அந்த கவலையை தீர்த்த உங்களை நான் எப்படி பாராட்ட....?!

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி.....

    :)))

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...