ஒரு தக்காளி செடியில் இருந்து வேறு சில தக்காளி செடிகளை உருவாக்கலாம்...
ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா ? எனக்கு முதலில் இதை கேள்வி பட்டபோது அவ்வாறுதான் இருந்தது. தோட்டக்கலையை பொறுத்தவரை நாம் தினமும் புது புது பாடங்களை கற்றுக் கொண்டே இருக்கலாம். நாம சும்மா இருந்தாலும் இந்த இயற்கை தூண்டிக் கொண்டே இருக்கும் இப்படி முயற்சி செய்யலாமா அப்படி முயற்சி செய்யலாமா என்று... இயற்கையின் தூண்டுதலால் மேலும் மேலும் பல வளர்ப்பு முறைகளை முயற்சித்து பார்த்துக் கொண்டிருப்பேன். அதில் ஒரு முறை தான் தக்காளிக் கிளைகளின் மூலம் புது செடியை உருவாக்குவது... இந்த முறைப்படி பயிரிடுவதால் வருடம் முழுவதும் தக்காளிக்கு தட்டுபாடில்லை.
க்ளோனிங் முறை
தக்காளியின் ஒவ்வொரு கிளைக்கும் தனியாக வேர்களை பரப்ப கூடிய அளவிற்கு போதுமான செல்கள் இருக்கின்றன என்பது ஒரு அதிசயம்.
ஒரு தக்காளி செடியில் இருந்து இரண்டு மடங்கு அறுவடையை எடுத்துவிடலாம். ஒரு தக்காளி விதை முளைத்து பலன் தர ஒரு மாதம் ஆகிறது ஆனால் இந்த முறை என்றால் 15 நாள் போதும்.
கிளைகளை கட் பண்ணும் முறை
வளர்ந்த செடியின் பக்கக் கிளைகளை சிறு கத்தி அல்லது சிசர் வைத்து நறுக்கி எடுத்து மேலே இரண்டு இலைகளை மட்டும் விட்டுவிட்டு இலை பூ மொட்டு போன்ற மற்றவற்றை அகற்றிவிடவேண்டும். கிளைத்தண்டு ஆறு இஞ்ச் நீளம் இருந்தால் நலம்.
நாலு இஞ்ச் உயரம் மட்டுமே உள்ள சிறிய தொட்டியை எடுத்துக்கொண்டு அதில் கோகோபீட் மண்புழு உரம் கலந்த மண்ணை நிரப்பி நடுவே விரல் வைத்து ஒரு துளை ஏற்படுத்தி அதில் தக்காளி தண்டை வைத்து மெதுவாக மண்ணை அழுத்திவிடுங்கள்...இந்த தொட்டியை ஜன்னலின் ஓரத்தில் வெயில் படும் இடத்தில் வைத்து தண்ணீர் தெளிக்க வேண்டும் போதுமான அளவிற்கு வெயில் கிடைத்ததும்(ஒரு வாரம் போதும்) வேறு தொட்டிக்கு இடம் மாற்றிவிடுங்கள். அவ்வளவுதான். இதன் தாய்ச்செடி காய்த்து முடியும் நேரத்தில் இது பலன் கொடுக்கத் தொடங்கி விடும்...
மற்றொரு முறை
![]() |
pic-google |
மேலே இரு இலைகளை விட்டுவிட்டு நறுக்கப்பட்ட கிளையை நீர் நிரம்பிய கண்ணாடி ஜாடி அல்லது டம்ளரில் வைத்து விடுங்கள். இதனை ஜன்னல் ஓரத்தில் வைத்து தினமும் நீரை மட்டும் மாற்றி வாருங்கள், நான்கு நாளில் வேர் விட ஆரம்பித்து விடும் நன்கு வேர் விட்டதும் வேறு தொட்டிக்கு மாற்றிவிடுங்கள். இந்த முறையில் செடி பலன் தர சிறிது காலம் அதிகமாகுமே தவிர உற்பத்தியில் எந்த குறைவும் இருக்காது.
இந்த இரு முறைகளின் படி செய்து வந்தால் வருடம் முழுவதும் நம் வீட்டில் இருந்து தக்காளி பழங்களைப் பறித்துக் கொண்டே இருக்கலாம்.
தக்காளிச் செடியில் பூச்சிகள் தாக்கத் தொடங்கியதும் செடியின் அந்த பகுதி 'சிஸ்டமின்' என்ற ஹார்மோனை சுரந்து பூச்சிகள் மேலும் முன்னேறாதபடி தடுத்துவிடுகின்றன. இது தக்காளியின் சிறப்பு குணம்.
பொதுவான டிப்ஸ்
பொதுவான டிப்ஸ்
* விதைகளை கடையில் வாங்குவதை தவிருங்கள். வீட்டில் இருக்கும் நன்கு கனிந்த
தக்காளியை பிசைந்து விதைகளை சேகரித்து கோகோபீட்+மண்+மண்புழு உரம்
நிரப்பிய தொட்டியில் போட்டு நீர் தெளித்து வந்தால் போதும் விதைகள்
முளைத்து விடும். சிறிது வளர்ந்ததும் வேருடன் அப்படியே
எடுத்து தனித்தனியாக வேறு வேறு தொட்டிகளில் நட்டு விடுங்கள்.தக்காளியை
குறுக்கு வாட்டில் வெட்டி மண்ணில் புதைத்து வைத்தாலும்போதும்
விதைகள்முளைத்து வந்துவிடும்.
* குளிர் காலத்தில் வீட்டினுள் இருக்கும் தக்காளி செடிக்கு தண்ணீரும் உரமும் தவறாது கொடுத்து வரவேண்டும். தண்ணீர் ஊற்றும் போது லேசாக செடியை அசைத்து விட்டால் மகரந்த சேர்க்கைக்கு உதவியாக இருக்கும்.
* பக்கக் கிளைகளை எடுத்துவிடுவது தாய்செடிக்கு மிக சிறந்த நன்மையை கொடுக்கிறது , சத்துக்கள் பிற கிளைகளுக்கு பரவுவது தடுக்கப் பட்டு தாய் செடி மிகுந்த செழிப்புடன் வளரும். விரைவில் பூ பூத்து காய் காய்ப்பதுடன் மட்டுமல்லாமல் அகன்று விரிந்தும் உயரமாகவும் வளரும்.
* தக்காளி செடி நடும் போதே அதனுடன் ஒரு குச்சியை சேர்த்து கட்டிவிடுங்கள்... இல்லையென்றால் செடி காற்றில் அசைந்து மண்ணில் வேர் பிடிப்பது பாதிக்கப்படும்.
* முட்டை ஓடுகளை சேகரித்து வைத்துக் கொண்டு மிக்ஸ்யில் போட்டு தூள் செய்துக்கொள்ளுங்கள்.வாரத்திற்கு ஒருமுறை ஒரு ஸ்பூன் ஒரு செடிக்கு என கொடுங்கள் . முட்டை ஓட்டில் கால்சியம் இருப்பதால் தக்காளி செடிக்கு நல்ல ஊட்டத்தை கொடுக்கிறது.
* வாழைப்பழ தோல்களை சிறிது சிறிதாக நறுக்கி காய வைத்து மிக்ஸ்யில் போட்டு தூளாக்கி வைத்துக் கொள்ளுங்கள்...இதையும் ஒரு ஸ்பூன் வீதம்
* சத்துக்களை உறிஞ்சிவிடும் எனச் சொல்லப்படும் suckers என்பவை செடியின் பக்கவாட்டில் வளருவது. அவை சிறிதாக வளரும்போதே அதனை கிள்ளி அகற்றிவிடுங்கள். இது காய் கொடுக்காது என்பதால் இதனை வளரவிடுவது சரியல்ல. இதனை அகற்றியப்பிறகு செடியின் வளர்ச்சி அபரீதமாக இருக்கும், தக்காளியும் நிறைய காய்க்கும்.
![]() |
(pic - google) sucker |
* தக்காளிச் செடியைப் பொறுத்தவரை பூச்சிகளை அழிக்க தக்காளி இலைகளே போதும். இலைகளில் இருக்கும் விஷம் பூச்சிகளை கொன்றுவிடும், பூச்சிகள் தென்பட்டால் இலைகளை அரைத்து சாறு எடுத்து பூச்சிகளின் மீது தெளிக்கவேண்டும்.
* தவிர 3G (greenchilli, ginger, garlic)என்று சுருக்கமாக சொல்லப்படுகிற பூண்டு +இஞ்சி+பச்சை மிளகாய் மூன்றையும் சம அளவு எடுத்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டிய சாறை தண்ணீர்(1-10) சேர்த்து கலந்து செடியின் மீது தெளித்தால் பூச்சிகள் அழிந்துவிடும்.
* தவிர 3G (greenchilli, ginger, garlic)என்று சுருக்கமாக சொல்லப்படுகிற பூண்டு +இஞ்சி+பச்சை மிளகாய் மூன்றையும் சம அளவு எடுத்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டிய சாறை தண்ணீர்(1-10) சேர்த்து கலந்து செடியின் மீது தெளித்தால் பூச்சிகள் அழிந்துவிடும்.
* பழுத்த ,காய்ந்த இலைகளை உடனுக்குடன் அகற்றிவிடுங்கள். அழுகிய தண்டுகள் கிளைகளையும் எடுத்துவிடுங்கள். செடி எப்பொழுதும் சுத்தமாக பசுமையாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
* தக்காளிக்கு வெயில் மிக பிடிக்கும். 14 - 18 மணி நேர நேரடி சூரிய ஒளி கட்டாயம் தேவை. பசுமைக்குடிலில் செடிகள் இருந்தால் செயற்கையான முறையிலாவது வெளிச்சம் வர செய்யவேண்டும்.
* காய் காய்க்கத் தொடங்கியதும் தண்ணீர் விடுவதை முறைப்படுத்த வேண்டும். ஆழமாக வேர் வரை தண்ணீர் சென்று தொட்டியின் துவாரங்கள் மூலம் வெளியேறுகிறதா என கண்காணிக்க வேண்டும். துளைகள் அடைத்திருந்தால் சிறு குச்சியால் குத்தி சரிப் படுத்த வேண்டும்.
* எப்போது தண்ணீர் ஊற்றினாலும் செடியின் மீது தெளிப்பதை போல ஊற்றவேண்டும்...இலை, தண்டு கிளைகள் தண்ணீரால் நனைவது சிறப்பு.
* தக்காளியை செடியை நடும்போது ஆழமாக நடவேண்டும், அப்போதுதான் நிறைய வேர்கள் உருவாக்கி செடியை பலமுள்ளதாக்கும்.தொட்டியின் ஆழம் கம்மியாக இருந்தால் செடியை சிறிது வளைத்து மண் அணைத்து வைக்கலாம். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது மண்ணுக்குள் இருக்கும் செடியின் பக்கக் கிளைகளை அகற்றிவிடவேண்டும்.
இப்போதைக்கு இவை போதும் என நினைக்கிறேன் ... ஆரம்ப நிலையில் இருக்கும் வீட்டுத் தோட்ட ஆர்வலர்களுக்காக பதிவை எளிமையாக்கி இருக்கிறேன்... வேறு சந்தேகங்கள் ஏதும் இருப்பின் கமென்ட்,மெயிலில் கேளுங்கள். நன்றி.
Happy Gardening !!
கௌசல்யா
* தக்காளிக்கு வெயில் மிக பிடிக்கும். 14 - 18 மணி நேர நேரடி சூரிய ஒளி கட்டாயம் தேவை. பசுமைக்குடிலில் செடிகள் இருந்தால் செயற்கையான முறையிலாவது வெளிச்சம் வர செய்யவேண்டும்.
* எப்போது தண்ணீர் ஊற்றினாலும் செடியின் மீது தெளிப்பதை போல ஊற்றவேண்டும்...இலை, தண்டு கிளைகள் தண்ணீரால் நனைவது சிறப்பு.
* தக்காளியை செடியை நடும்போது ஆழமாக நடவேண்டும், அப்போதுதான் நிறைய வேர்கள் உருவாக்கி செடியை பலமுள்ளதாக்கும்.தொட்டியின் ஆழம் கம்மியாக இருந்தால் செடியை சிறிது வளைத்து மண் அணைத்து வைக்கலாம். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது மண்ணுக்குள் இருக்கும் செடியின் பக்கக் கிளைகளை அகற்றிவிடவேண்டும்.
இப்போதைக்கு இவை போதும் என நினைக்கிறேன் ... ஆரம்ப நிலையில் இருக்கும் வீட்டுத் தோட்ட ஆர்வலர்களுக்காக பதிவை எளிமையாக்கி இருக்கிறேன்... வேறு சந்தேகங்கள் ஏதும் இருப்பின் கமென்ட்,மெயிலில் கேளுங்கள். நன்றி.
Happy Gardening !!
கௌசல்யா
இன்று இல்லதரசிகளுக்கு செய்ய இயலாது! டி.வீ பார்க்கவே நேரம் பத்தாதே!
பதிலளிநீக்குநன்று சகோதரி!
இல்லைங்க ஐயா நிறைய பேர் தோட்டம் பற்றி சந்தேகம் கேட்டு மெயில் பண்றாங்க, முன்பை விட தற்போது ஆர்வம் அதிகரித்திருகிறது. அவர்களின் கேள்விகளை சேர்த்து வைத்து ஒரு பதிவாக எழுதுகிறேன். தேவைபடுபவர்கள் பயன் பெறுவார்கள் ஐயா.
நீக்குவருகைக்கு எனது அன்பும் நன்றியும்
Super tips
நீக்குதகவலுக்கு நன்றி
பதிலளிநீக்குமுயற்ச்சி செய்து பார்கிறேன்
வருகைக்கு மகிழ்வும் நன்றியும்
நீக்குமகிழ்ச்சி... வாழ்த்துகள்...
பதிலளிநீக்குமகிழ்ச்சி... வாழ்த்துகள்...
பதிலளிநீக்குமிக்க அன்பும் நன்றிகளும் தனபாலன்.
நீக்குநல்ல தகவல்
பதிலளிநீக்குவருகைக்கு மகிழ்வுடன் அன்பும் நன்றியும் தோழி
நீக்குஅருமை
பதிலளிநீக்குநல்ல பகிர்வு. தகவல்கள் பலருக்கும் உதவும்.
பதிலளிநீக்குஆர்வம் இருப்பவர்கள் பயன்பெறுவார்கள்...
நீக்குவருகைக்கு அன்பும் நன்றியும் வெங்கட்
நல்ல பயனுள்ள தகவல்கள். ஏற்கனவே கொஞ்சம் தெரியும் என்றாலும் கூடுதல் தகவல்கள் கிடைத்தது. குறிப்பாகப் பூச்சிக்கு இலையே மருந்து என்பது. மிக்க நன்றி...
பதிலளிநீக்குகீதா
பூச்சிக்கு இலையே மருந்து/// ஆம் அனுபவத்தில் அறிந்த உண்மை. வருகைக்கு நன்றியும் அன்பும் தோழி
நீக்குமிக பயனுள்ள பதிவு. என்னிடம் தக்காளி பூத்து,காய்க்கத்தொடங்கியிருக்கு. உங்க டிப்ஸில் சிலது பாலோ செய்திருக்கேன். நன்றி கெளசி.
பதிலளிநீக்குதக்காளிக்கு விலை ஏறிடுச்சாம், நமக்கெல்லாம் அந்த கவலையே இல்லை :-)
நீக்கு//என்னிடம் தக்காளி பூத்து,காய்க்கத்தொடங்கியிருக்கு// மிக்க மகிழ்ச்சி. உங்களை போன்ற ஆர்வமுள்ளவர்களுக்காக த்தான் இந்த பதிவே
மிக்க அன்பும் வாழ்த்துக்களும் தோழி.
நானும் தக்காளியைத் தண்டிலிருந்து வளர்த்திருக்கிறேன். நீங்கள் மேலதிகமாக நிறையத் தகவல்கள் கொடுத்திருக்கிறீர்கள். அருமை.
பதிலளிநீக்கு