Saturday, July 3

3:17 PM
41குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்களை விட சிறந்த வழிகாட்டி யாரும் இருக்க முடியாது என்ற உண்மையை எனக்கு உணர வைத்த ஒரு நிகழ்ச்சி. 

குழந்தைகள் எந்த காலத்திலும் குழந்தைகள் தான். அவர்களின் குழந்தைத்தனத்துடன் கூடிய புத்திசாலித்தனம் கூடிக்கொண்டே போகுமே ஒழிய குறைவது இல்லை.  சில நேரம் அவர்கள் தகப்பன்சாமியாக மாறிவிடுவார்கள்.  அந்த நேரம் நாம் குழந்தையாய்  மாறிவிடுவோம். இந்நிலை பலரது வாழ்விலும் சுவாரசியமாக நடந்து இருக்கும்.  என் வீட்டிலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதில் அனைத்தையும்விட என் மனதை பரவசமாக பெருமை படுத்திய ஒன்று உள்ளது. 

நாங்கள்  வெளியில் எங்கேயும்  பிரயாணம் சென்று கொண்டு இருக்கும் சமயம் ஏதாவது  ஆம்புலன்ஸ் வண்டி எங்களை கடந்து போகும் போது ஒரு கணம் நான் என் கண் மூடி ' இதில் கொண்டு போகபடுபவர்களுக்கு விரைவில் குணமாகி நல்ல சுகம் கிடைக்கவேண்டும் ' என்று கடவுளை வேண்டுவது என் வழக்கம்.  நாங்கள் இருக்கும் பாளைங்கோட்டை பகுதியில்தான் புகழ்பெற்ற கவர்மென்ட் ஹாஸ்பிடல் (Highground Hospital) இருப்பதால் வெளியில் செல்லும் நேரமெல்லாம் ஆம்புலன்ஸ் வண்டியை பார்ப்பது தவிர்க்க முடியாது, நான் வேண்டுவதும் தவறாத ஒன்றுதான்.

ஒருநாள் ஞாயிறு அன்று வீட்டில் இருக்கும் போது மாடியில் விளையாடி கொண்டு இருந்த எனது ஆறு  வயது மகன் வேகமாக மூச்சு வாங்க ஓடி வந்து, " அம்மா  PRAYER  பண்ணினீங்களா " என்றான்.  நான் " ஏன் இல்லையே "  என்றேன்.  " ஐயோ  அம்மா, இப்ப ஆம்புலன்ஸ் வண்டி சத்தம் கேட்டது உங்களுக்கு கேட்கலையா " என்றான்.   நான் பதிலுக்கு " கவனிக்கலையே டா  , உள்ள வேலையா இருந்திட்டேன் " , என்றதற்கு அவன் " ஓ.கே விடுங்க, ஆனா நான் PRAY  பண்ணிட்டேன், அவங்களுக்கு சரியாகி விடும்  " , என்று சட்டென்று சொல்லி விட்டு என் பதிலுக்கு கூட காத்து இருக்காமல்  ஓடி விட்டான். எனக்கு தூக்கி வாரி போட்டு விட்டது.

நான் செய்யும் இந்த சின்ன விஷயம் அவனுக்கு எப்படி தெரிந்தது... ? தானும் அது போல் செய்ய வேண்டும் என்று அவனுக்கு  எப்படி தோன்றியது .....? எல்லாத்தையும் விட மற்றவர்களுக்காக தான் செய்யும் சின்ன பிராத்தனையும் கடவுளை சென்று அடையும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருப்பதை எண்ணி  அவனை பெற்ற தாய்மை உணர்ச்சியில் கண்கலங்கி விட்டேன். 

கிரகித்து கொள்ளும் தன்மை

நமது ஒவ்வொரு செயல்களையும் அவர்கள் கூர்ந்து கவனிக்கிறார்கள்...., விசயங்களை அப்படியே உள்வாங்கி கிரகித்து கொள்கிறார்கள்..... அவர்களும் அப்படியே நடக்கணும் என்று முயலுகிறார்கள்...., அப்படியே நடக்கவும் செய்கிறார்கள்....!!  

நமது செயல்கள் நல்லதாக இருப்பின் அவர்களும் நல்லவர்களாக வளருவார்கள், அதை தவிர்த்து அவர்கள் முன்னால் பொய் சொல்லி பேசி நாம் பழகினால் அவர்களும் அதையே பின்பற்றுவார்கள். ஒருநாள் நம்மிடையே பொய் சொல்ல நேரும்போதுதான் , நமக்கு கோபம் வந்து அவர்களை போட்டு அடி வெளுத்து விடுவோம், இதற்கு காரணகர்த்தா நாம் தான் என்பதை உணராமல்...!!    

கணவன், மனைவி தங்கள் கருத்து வேறுபாடுகளை குழந்தைகள் முன்னால் பேசி அவர்களின் மனதில் முரண்பாடுகளை விதைத்து விடுகிறோம்.  இன்னும் சிலர் நெருங்கிய  உறவினர்களை பற்றி குழந்தைகள் முன்னால் பேசிவிடுவார்கள், பின் எப்படி மற்றவர்களுக்கு நம் குழந்தைகள் மதிப்பு கொடுப்பார்கள்..?  பிறகு இந்த குழந்தைகள்  பெரியவர்கள் ஆன பின் அதே அவமரியாதைதான் நமக்கு பரிசாக கிடைக்கும்..!! 

குழந்தைகளை ஈரமண்ணுக்கு  ஒப்பாக கூறுவார்கள். அந்த மண்ணில் படும்  எந்த தடமும் அப்படியே பதிந்து விடும்.  தவிர பச்சை  மரத்தில் சுலபமாக ஆணி இறங்கி விடும் என்பதையும் நாம் மனதில் வைத்து கொள்ள வேண்டும்.  அதனால் பெரியவர்களாகிய நாம் நம் குழந்தைகளுக்கு நல்ல முன் உதாரணமாக இருப்போம்.  

நம் குழந்தைகள் நல்ல மனிதர்களாக வாழவும், எதிர்கால சமுதாயம் சிறப்பாக அமையவும் அவர்கள் மனதில் நல்லதை விதைப்போம்! நல்லதையே நாளை அறுவடை செய்வோம்!!     Tweet

41 comments:

 1. சான்றோன் எனப் பார்த்தத் தாய்..!!?
  உங்கள் பிள்ளையின் இயல்பு மாறாமல் அப்படியே வளரச் செய்யுங்கள். !!
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 2. vanthu padithu marubadium comment podaren

  ReplyDelete
 3. குழந்தைகள் வளர்ப்பை பற்றி அருமையாக சொல்லிருக்கீங்க கௌசல்யா.. உங்க பையனுக்கு என்னுடைய வாழ்த்துக்களை சொல்லிடுங்க.

  ReplyDelete
 4. "தாயை போல் பிள்ளை நூலை போல் சேலை" சகோதரி

  ReplyDelete
 5. "அவன் " ஓ.கே விடுங்க, ஆனா நான் PRAY பண்ணிட்டேன், அவங்களுக்கு சரியாகி விடும் " , என்று சட்டென்று சொல்லி விட்டு என் பதிலுக்கு கூட காத்து இருக்காமல் ஓடி விட்டான்."
  உங்க பய்யன் ரொம்ப ஸ்வீட் ..அம்மாவே போல் தான் குழைந்தக்ளும் இருப்பாங்க என்று சொன்னது மிகவும் சரியா இருக்கு உங்க வீட்டில்

  ReplyDelete
 6. நாம் எவ்வாறு வளர்கிறோமோ அப்படிதான் வளர்வார்கள் . உங்கள் பையருக்கு என் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. கௌஸ், நாங்கள் அவர்கள் கவனிக்கவில்லை என்று நினைத்துச் செய்யும் பல செயல்களை அவர்கள் உள்வாங்கியபடியே இருப்பார்கள். சரியான தருணத்தில் வெளிப்படுத்தி எம்மை ஆச்சரியப்பட வைப்பார்கள்.

  குட்டிப் பயல் மிகவும் அழகாக இருக்கிறார்.

  ReplyDelete
 8. தெம்மாங்கு பாட்டு...

  //உங்கள் பிள்ளையின் இயல்பு மாறாமல் அப்படியே வளரச் செய்யுங்கள். !!
  வாழ்த்துக்கள்!//

  கண்டிப்பாக. வாழ்த்துக்கு நன்றிங்க

  ReplyDelete
 9. Starjan(ஸ்டார்ஜன்)...

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க

  ReplyDelete
 10. mrsvel...

  உங்களின் முதல் வருகைக்கு வாழ்த்துகளும், நன்றியும் சகோதரா.

  ReplyDelete
 11. sandhya..

  ஆமாம் தோழி. பயங்கர வாலு. நன்றிபா!

  ReplyDelete
 12. LK...

  //நாம் எவ்வாறு வளர்கிறோமோ அப்படிதான் வளர்வார்கள் .//

  valththukku :)))

  ReplyDelete
 13. vanathy...

  உண்மைதான் வானதி. எனக்கு வோட் எத்தனை வந்திருக்கு என்று கேட்டுட்டே இருக்கிறான் தோழி. பதில் சொல்லி முடியலப்பா :))))

  நன்றி தோழி.

  ReplyDelete
 14. வாங்க ஹீரோ பதிவு எழுதுவோம் அம்மாவுக்கு போட்டியா.....

  ReplyDelete
 15. சௌந்தர்...

  நலமா friend?
  வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 16. நலமா friend?
  Kousalya said...@@@நான் நல்ல இருக்கேன் உங்க பதிவை லேட்டா பார்த்தேன் அதான் லேட்

  ReplyDelete
 17. சௌந்தர்...

  :))))

  ReplyDelete
 18. நாங்கள் வெளியில் எங்கேயும் பிரயாணம் சென்று கொண்டு இருக்கும் சமயம் ஏதாவது ஆம்புலன்ஸ் வண்டி எங்களை கடந்து போகும் போது ஒரு கணம் நான் என் கண் மூடி ' இதில் கொண்டு போகபடுபவர்களுக்கு விரைவில் குணமாகி நல்ல சுகம் கிடைக்கவேண்டும் ' என்று கடவுளை வேண்டுவது என் வழக்கம்//


  இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்பார்கள்! அது போலத் தான் உங்கள் மகனின் உள்ளத்திலும் இவ் நல்ல விடயங்கள் பதிந்துள்ளன. குழந்தைகளின் மனம் பற்றிய அலசல் அருமை.

  ReplyDelete
 19. அருமையான கருத்துகள்.

  ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. வாழ்த்துகள்.

  தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.

  ReplyDelete
 20. தேவையான கட்டுரை. வரவேற்கிறேன்.

  ReplyDelete
 21. குழந்தைகள் நாம் என்ன சொல்கிறோம் அதை செய்வதில்லை, நாம் செய்பவையே அவர்களும் செய்கிறார்கள்.

  ReplyDelete
 22. தமிழ் மதுரம்...

  நன்றிங்க.

  ReplyDelete
 23. செ.சரவணக்குமார்...

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க.

  ReplyDelete
 24. திங்கள் சத்யா...

  ரொம்ப நன்றி.

  ReplyDelete
 25. சசிகுமார்...

  //குழந்தைகள் நாம் என்ன சொல்கிறோம் அதை செய்வதில்லை, நாம் செய்பவையே அவர்களும் செய்கிறார்கள்.//

  உண்மைதான் சசி. நன்றி.

  ReplyDelete
 26. அன்புடன் வணக்கம் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தான் roll model ஒரு குழந்தை முதன் முதலில் பார்த்து பழகுவது தனது தாய்தான் நீங்கள் ஒரு நல்ல தாயார் உங்களுக்கு ஒரு நல்ல குழந்தை வாழ்த்துக்கள்

  ReplyDelete
 27. hamaragana...

  உங்களின் வாழ்த்தை நான் ஆசிர்வாதமாக எடுத்து கொள்கிறேன். மிகவும் நன்றி.

  ReplyDelete
 28. Excellent post Kousalya. well said, நம்மள பாத்து தான் பிள்ளைக கத்துகறாங்க... எண்ணம் செயல் வாக்கு மூணுளையும் ரெம்ப கவனமா இருக்கணும் தான்... அருமையான பதிவு

  ReplyDelete
 29. தெய்வசுகந்தி...

  வாங்க. உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

  ReplyDelete
 30. அப்பாவி தங்கமணி...

  ரொம்ப நன்றி தோழி. உங்களின் எழுத்து நகைசுவையாக, படிக்கும் அனைவரும் நன்றாக ரசிக்கும் படியும் இருக்கிறது.

  ReplyDelete
 31. அருமையான பதிவு கெளசல்யா!

  குழந்தைகள் பரிசுத்தமான பனித்துளி மாதிரி! மண்ணில் வந்து விழுந்த பிறகுதான் அதுவும் நம்மால்தான் அதன் பரிசுத்தம் குறைகிறது!
  ‘ எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் விழுகையிலே!
  அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே!’
  என்று பாட்டே இருக்கின்றதே!
  தாய்மைக்கு இதை விடவும் சிறந்த கிரீடம் உண்டா?
  அந்த கிரீடத்தைத்தான் உங்களுக்கு உங்கள் மகன் அணிவித்துள்ளார்!
  அவருக்கு என் வாழ்த்துக்கள்! அவரை அப்படி வளர்த்திருக்கும் உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 32. cute hero. vaazhththukkal. thanks.

  ReplyDelete
 33. K.S.Muthubalakrishnan...

  நெல்லை நண்பரின் முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும் நன்றிகள் பல!!

  தொடர்ந்து வாங்க...

  ReplyDelete
 34. அப்பாவி தங்கமணி, தெய்வசுகந்தி உங்கள் இருவரின் பின்னூட்டங்களையும் வெளியிட்டேன், ஆனால் நேற்று பிளாக்கர் பண்ணிய குளறுபடியால் அதை காணவில்லை. தோழிகள் இருவரும் பொருத்துகொள்க. நட்புடன் கௌசல்யா. .

  ReplyDelete
 35. மனோ சாமி நாதன்...

  //குழந்தைகள் பரிசுத்தமான பனித்துளி மாதிரி! மண்ணில் வந்து விழுந்த பிறகுதான் அதுவும் நம்மால்தான்
  அதன் பரிசுத்தம் குறைகிறது!//

  உண்மைதான்...., மேடம் நல்லா இருக்கீங்களா? ரொம்ப நாள் கழித்து வருகிறீர்கள் சந்தோசமாக இருக்கிறது.

  என்னுடைய 50 வது follower நீங்கள் என்பதில் இரு மடங்கு மகிழ்ச்சி.

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மேடம்.

  ReplyDelete
 36. adhiran...

  நண்பரின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிகவும் மகிழ்கிறேன்.

  நன்றி மகேந்திரன்.

  ReplyDelete
 37. ரொம்ப சரியா, அழகா நச்ன்னு சொல்லிருக்கீங்க கௌசல்யா. பையனுக்கு என் வாழ்த்துகளை சொல்லுங்க.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...