புதன், ஜூலை 7

AM 9:02
36எனது பிரியத்துக்கு உரிய தோழனின்(கணேஷ்) கல்யாண நாள் இன்று.  எங்களின் நட்பை நினைகூரும் விதமாய் ஒரு கவி மடல் அந்த நண்பனுக்கு......!!

           இன்று உனது கல்யாண நாள், முழுமையாய்
           என்னால் வாழ்த்த இயலவில்லை..!
           வார்த்தைகள் தடுமாறுகின்றன!!
           என்னவாயிற்று எனக்கு.... ?

           என்னை உன் புன்னகையால்
           கவர்ந்தாய்! உன் அன்பு, அக்கறை 
           கலந்த பேச்சால் என் மென்மையை
           உணர வைத்தாய்...!!  
           ஐந்து வருடமாய் என்னை
           சந்தோசபடுத்தி மட்டுமே பார்த்த நீ
           அழவைத்தும் பார்க்கிறாய் !!

            அன்று.... 
             உன் கல்யாணத்திற்கு வர இயலாது
            என்று மறுத்தும்  , வரவழைப்பேன்
            என்ற உன் வார்த்தையின் தீவிரம் 
            புரிந்து ஓடி வந்தேன்...?! என்னை கண்டதும்
            களங்கமின்றி புன்னகை புரிந்தாய்,
            காலில் விழுந்து, என் அன்பையும்
            ஆசியையும் ஒரு சேர பெற்றாய்!!
            அங்கிருந்த சில நிமிட நேரத்தில்,
            பலமுறை நன்றி சொன்னாய் என்
            வருகைக்கு...!! மிரட்டி வர வைத்துவிட்டு
            நன்றியா ? போடா வெங்காயம் என்று
            ஆசிர்வதித்து விட்டு வந்தேன்??!!

            நீ  எனக்கு தூரத்து உறவாம்,
            நட்பால் நெருங்கியதை நாம் அறிவோம் !!            
            மற்றவர்களுக்கு நாம் தாய், மகன்
            உறவு முறைதான்.... அதைவிட
            புனிதமான உறவு, நாங்கள்
            நண்பர்கள் என்பேன்....!! எனக்கு
            சேவகனாய், தோழனாய், சில நேரம்
            தாயாய் யாதுமாகி  நின்றாய்!!

            எங்கோ இருந்தும் நினைவுகளால்
            தொடர்ந்து கொண்டிருப்பாய் !!  சிறு 
            தலைவலிக்கும்,பதறி ஓடி வந்து 
            பணிவிடை புரிவதை
            பார்க்கும்  என்னவர், என்னை மறக்க
            வைத்துவிடாதே என்று செல்லமாய்
            உன் தோளில் தட்ட, இருவரின் அன்பில்
            என் வலி இருந்த இடம் எங்கே
            என்று நான் தேடவேண்டி இருக்கும் ??!!

            அடுத்த  தெருவில் இருக்கும் கடைக்கு 
            போகிறேன் என்று சொன்னாலும், 
            அவரின்றி தனியாக வேண்டாம் 
            நான் வருகிறேன் என்பாய்.....! 
            சிரித்து கொண்டே சொல்வேன்...  
            நீ இருப்பதோ பல மைல் தூரம் தள்ளி என்று...!!!

             உன் கண் மூடித்தனமான அன்பால் 
             பாதிப்பு இல்லை என்றுதான்
             எண்ணினேன், அடுத்தவரிடம் பேசியதை 
             கூட தாங்க முடியாமல் 
             உன்னை நீ  வதைத்து கொண்ட 
             போதுதான் உணர்ந்தேன்...!! 
             பாதிப்பு உனக்கில்லை 
             எனக்குத்தான் என்று ??!

             இரு குழந்தைகள் உனக்கு இருந்தும் நீ 
             குழந்தை தான் எனக்கு....உன் அன்பில்
             நிதானத்துடன் கூடிய நேசம் வர
             இந்த இடைவெளி வேண்டும்தான்!!
             அன்பு கொள்ள வேண்டுமே தவிர 
             தன்னையே கொல்லக்கூடாது....!

( இந்த மடலை முடிக்கும் முன்னே உன்னை அழைத்து வாழ்த்த எண்ணுகிறதே என் மனம்,  என் பேரன்கள்  மருமகளுடன் இன்று போல் என்றும் இணைந்து நீ வாழ வாழ்த்துகிறேன் )
  
Tweet

36 கருத்துகள்:

 1. அருமையான கவிதை தோழி.. இன்று போல் நீங்கள் உங்கள் நண்பனும் என்றும் நட்புடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் .. இருவர்க்கும் என் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. //அதைவிட
  புனிதமான உறவு, நாங்கள்
  நண்பர்கள் என்பேன்....!//

  அருமை! உண்மையான வரிகள்
  உங்கள் நண்பருக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. கவிதை அருமை....வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 4. Convey our wishes too!

  அருமையான வாழ்த்து கவிதை.

  பதிலளிநீக்கு
 5. பெயரில்லா11:42 AM, ஜூலை 07, 2010

  கௌசல்யா கவிதை நெஞ்சே தொட்டு சென்றது ..உங்க நட்பு என்றும் இதே போல் நீடிக்க நான் வாழ்த்துகிறேன் ..உங்க தோழன் ரொம்ப லக்கி இவ்ளோ பிரியமான தோழி கிடைச்சிருக்கே ...இப்போதெல்லாம் நண்பர்கள் அமையறது ரொம்ப அபூர்வம் அதான் அப்பிடி சொன்னேன் தோழி ...உங்க நண்பனுக்கு என் அன்பானா திருமண வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. கவிதை அருமை, சூப்பர், கலக்கிடீங்க

  பதிலளிநீக்கு
 7. என்னை மறக்க
  வைத்துவிடாதே என்று செல்லமாய்
  உன் தோளில் தட்ட, இருவரின் அன்பில்
  என் வலி இருந்த இடம் எங்கே
  என்று நான் தேடவேண்டி இருக்கும் ??!!//


  என் இலக்கியி வியூகத்தில் கவிதையின் திருப்புமுனையினையும், கவிதாயியினியின் கவி அற்புதத்தையும் இங்கு தான் உணர்கிறேன்.

  வாழ்த்துக் கவி! இது உங்கள் மனதினால் உங்கள் நட்பிற்கு நீங்கள் வழங்குவது.
  கவி மடல்.. வார்த்தைகள் கலந்து வர்ணமாய்ப் பிரகாசமளித்துப் பயணிக்கிறது. சேர்பவரிடம் சென்று சேர்ந்தால் சரி!
  வாழ்த்துக் கவி என்பதால் மேலதிக விமர்சனங்களை நிறுத்துகிறேன் சகோதரி!

  தொடருங்கோ!

  பதிலளிநீக்கு
 8. இன்று உனது கல்யாண நாள், முழுமையாய்
  என்னால் வாழ்த்த இயலவில்லை..!
  வார்த்தைகள் தடுமாறுகின்றன!!
  என்னவாயிற்று எனக்கு.... ?

  உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்

  பதிலளிநீக்கு
 9. S.Maharajan...

  நலமா ? இடையில் உங்களை காணவில்லை நண்பரே...?

  வருகைக்கும் உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 10. rk guru...

  உங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.....

  பதிலளிநீக்கு
 11. Chitra...

  வாழ்த்துக்கு நன்றி தோழி...

  பதிலளிநீக்கு
 12. sandhya...

  நான் தான் மிகவும் கொடுத்து வைத்தவள் தோழி. இதுவரை நான் சொன்ன எதையும் தட்டியதே இல்லைபா.

  உங்க வாழ்த்துக்கு நன்றி தோழி.

  பதிலளிநீக்கு
 13. சசிகுமார்...

  வாழ்த்துக்கு நன்றி சசி.

  பதிலளிநீக்கு
 14. தமிழ் மதுரம்...

  வித்தியாசத்துடன் கூடிய ஆழமான உங்களின் ரசிப்புத்தன்மை எனக்கு பிடித்து இருக்கிறது. கவிதை எழுதுவதில் நான் பெரிய ஆள் இல்லை. ஏதோ எழுதுகிறேன்...!!?


  //வாழ்த்துக் கவி என்பதால் மேலதிக விமர்சனங்களை நிறுத்துகிறேன் சகோதரி!//

  பரவாயில்லை. விமர்சனங்கள் இங்கே வரவேற்க படுகின்றன...!! அப்பதான் என் எழுத்தை மேன்மை படுத்த முடியும். எதிர்பார்கிறேன்....

  வாழ்த்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 15. சௌந்தர்...

  //இன்று உனது கல்யாண நாள், முழுமையாய்
  என்னால் வாழ்த்த இயலவில்லை..!
  வார்த்தைகள் தடுமாறுகின்றன!!
  என்னவாயிற்று எனக்கு.... ?//

  //உங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்//

  எனக்கு புரியவில்லை??!

  ஏன் தாமதம்...? வாழ்த்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 16. தெய்வசுகந்தி...

  நன்றி தோழி.

  உங்கள் சமையல் எல்லாம் அசத்தலாக இருக்கிறது!! .

  பதிலளிநீக்கு
 17. உங்கள் மகனுக்கு (தோழனுக்கு) இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்... :-))

  அருமையாய் உங்கள் மனதை.. வெளிப்படுத்தி இருக்கீங்க..

  பதிலளிநீக்கு
 18. கௌஸ், சூப்பர் கவிதை. எனக்கு கவிதை எழுதவே வராது. வாசிக்க மிகவும் பிடிக்கும். நன்றாக இருக்கு. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 19. Ananthi...

  உங்கள் வாழ்த்திற்கு நன்றி தோழி

  பதிலளிநீக்கு
 20. vanathy...

  வாழ்த்திற்கு நன்றி தோழி. கவிதை எழுத முயற்சி பண்ணுங்கள், கண்டிப்பா என்னைவிட நல்லா எழுதுவீங்க. நானும் தெரியாது என்றுதான் ரொம்ப நாள் இருந்தேன். எழுத எழுத வந்து விடும். உங்கள் கவிதையை விரைவில் எதிர் பார்கிறேன் தோழி.

  பதிலளிநீக்கு
 21. அருமையான வாழ்த்துக்கவிதை.

  பதிலளிநீக்கு
 22. Kousalya said...எனக்கு புரியவில்லை??

  எதிர் காலத்தில் உங்கள் நண்பனுக்கு கல்யாணம் ஆகும் இல்லையா அதான் இப்போது வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 23. அருமை நட்பு நிறைந்த வரிகள், வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 24. நட்பின் வலிமை அதன் ஆழமான அன்பு அத்தனை வரிகளிலும்.சில இடங்களில் ஏக்கம்.எனக்கும்தான் கௌசல்யா...இப்படி ஒரு தோழமை.கொடுத்து வைத்தவர் நீங்கள்.

  பதிலளிநீக்கு
 25. அம்பிகா...

  வாங்க அம்பிகா.... உங்க வருகைக்கு மகிழ்கிறேன் தோழி, தொடர்ந்து வாருங்கள்...நன்றி

  பதிலளிநீக்கு
 26. சௌந்தர்...


  //எதிர் காலத்தில் உங்கள் நண்பனுக்கு கல்யாணம் ஆகும் இல்லையா அதான் இப்போது வாழ்த்துகள்.//

  அந்த 'உங்கள் நண்பன்' யாரை குறிக்கிறது...?? பின்னூட்டத்தில் புதிர் வைக்கும் தோழரே.....புரியவில்லை, விளக்குங்கள்....

  பதிலளிநீக்கு
 27. யாதவன்...

  வாழ்த்துக்கு நன்றி நண்பரே...!

  பதிலளிநீக்கு
 28. ஹேமா...

  முதல் வருகைக்கு நன்றி தோழி...

  எல்லா வரிகளையும் உணர்ந்து படித்து உள்வாங்கி இருக்கிறீர்கள்...!! நட்பு எங்கும் எந்த நொடியும் மலர்ந்துவிடும்பா...?!

  இந்த நொடியில் இருந்து நீங்களும் என் அன்பு தோழிதான்... என் நட்பை ஏற்று கொள்ளுங்கள்...?! சரியா??
  :)))

  பதிலளிநீக்கு
 29. அருமை..கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பைப்பற்றி படிச்சுருகேன்..இப்போ பாக்ரேன்..ம்ம் வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 30. //எதிர் காலத்தில் உங்கள் நண்பனுக்கு கல்யாணம் ஆகும் இல்லையா அதான் இப்போது வாழ்த்துகள்.//

  அந்த 'உங்கள் நண்பன்' யாரை குறிக்கிறது...?? பின்னூட்டத்தில் புதிர் வைக்கும் தோழரே.....புரியவில்லை, விளக்குங்கள்...//

  அது உங்கள் மகன்...

  பதிலளிநீக்கு
 31. அங்கிருந்த சில நிமிட நேரத்தில்,
  பலமுறை நன்றி சொன்னாய் என்
  வருகைக்கு...!! மிரட்டி வர வைத்துவிட்டு
  நன்றியா ? போடா வெங்காயம் என்று
  ஆசிர்வதித்து விட்டு வந்தேன்??!!

  யதார்த்தமான் அழகு....

  பதிலளிநீக்கு
 32. //கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பைப்பற்றி படிச்சுருகேன்..//

  எவ்வளோ பெரிய அளவுக்கு எங்களை உயர்த்தி விட்டீர்கள்.....!! நன்றி காயத்ரி வாழ்த்துக்கு

  பதிலளிநீக்கு
 33. //அது உங்கள் மகன்...//

  நான் சொன்ன மகனுக்குத்தான் கல்யாணம் ஆகிவிட்டதே....!! கவிதையை மறுபடி நன்றாக படிக்கவும் நண்பரே. அதில் வந்த வார்த்தைகள் ஏதும் கற்பனை இல்லை நடந்த நிஜம்தான். இப்ப புரிந்து விட்டதா சௌந்தர். nanri friend.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...