அன்றொரு நாள் மொட்டை மாடியில்
இரவின் அமைதியில் நீயும் நானும்
நம்மை மறந்து பேசிகொண்டிருந்தோம்...
அன்று முழு நிலவு ஆதலால் நிலவுப்பெண்
தன் ஒளி கற்றையை நாளா புறமும் வீசி
இரவை பகலாக்கி கொண்டிருந்தாள்.
பேசிகொண்டிருந்த நீ என்னை பார்ப்பதை விடுத்து
அவளையே கண் வைத்து நோக்க
பெண்மைக்கே உரிய பொறாமைத்தீ
என்னுள் எரிய, கோபத்தில் நான்
அவ்விடத்தை விட்டகன்று செல்ல,
சுதாரித்துக்கொண்ட நீ தள்ளிச்சென்ற
என்னை உன் வலு கரத்தால் பற்றி இழுத்து
அணைத்துக்கொள்ள, சினம் தணியாத
நான் திமிர, தரையில் அமர்ந்த நீ என்னை
உன் மடியில் சாய்த்து, முகத்தை நிமிர்த்தி
'நிலவைப்பார்' என்றாய். வெறுப்பாய் நான்
மேலே நோக்க....., என்னால் இயலவில்லை
அங்கிருந்து என் கண்ணை அகற்ற!
முழு நிலவாய், அழகாய், தென்னங்கீற்றின்
ஊடாய் பளிரென்று சிரித்து கொண்டிருந்தவள்
என்னையும் அல்லவா மயக்கி விட்டாள்!
'இப்படித்தான் மாட்டிக்கொண்டேன் நானும்'
என்றார் என்னவர் விஷமசிரிப்புடன் !!
மெய் உணர்ந்து மடியில் நானும்
கண்மூட, அந்தோ என்னாயிற்று...?
மறைந்துவிட்டாள் நிலாப்பெண்
மேகத்திற்குள்.... என்ன செய்வாள்
அவளும் பெண்தானே ?
வந்துவிட்டது பொறாமை..??!!
******
// மறைந்துவிட்டாள் நிலாப்பெண்
பதிலளிநீக்குமேகத்திற்குள்.... என்ன செய்வாள்
அவளும் பெண்தானே ?
வந்துவிட்டது பொறாமை..??//
பெண்மையின் உணர்வகளை அழகாக சொல்லி இருகிறீர்கள் . கவிதை அருமை
/////'இப்படித்தான் மாட்டிக்கொண்டேன் நானும்'
பதிலளிநீக்குஎன்றார் என்னவர் விஷமசிரிப்புடன் !! /////
...... தொடரட்டும் - இந்த romance மற்றும் கவிதை! :-)
//மெய் உணர்ந்து மடியில் நானும் கண்மூட, அந்தோ என்னாயிற்று...? மறைந்துவிட்டாள் நிலாப்பெண் மேகத்திற்குள்....//
பதிலளிநீக்குஇந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது அக்கா, நல்லாயிருக்கு அக்கா .உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது -Jeevakemeni
பதிலளிநீக்குஉங்களின் மன உணர்வுகளைப் பிரதிபலிபது போல இருந்தது கவிதை.
பதிலளிநீக்குஉங்களவருக்கு நிலவு மீது காதலா? நம்ப முடியவில்லை. இயற்கை ரசிக்கத் தெரிந்த மனிதர்!
உங்களின் மன உணர்வுகளைப் பிரதிபலிபது போல இருந்தது கவிதை.
பதிலளிநீக்குஉங்களவருக்கு நிலவு மீது காதலா? நம்ப முடியவில்லை. இயற்கை ரசிக்கத் தெரிந்த மனிதர்!
'நிலவைப்பார்' என்றாய். வெறுப்பாய் நான்
பதிலளிநீக்குமேலே நோக்க....., என்னால் இயலவில்லை//
கற்பனையினூடே காதலையும் நிஜ வடிவில் தந்துள்ளீர்கள். கவிதை யதார்த்தம் என்று சொன்னால் கோபப்படமாட்டீர்கள் தானே! மொட்டை மாடி... ஆயிரம் காதல் கதைகளை நிலவினூடே சொல்லும் ஒரு வர்ணஜாடி!
LK...
பதிலளிநீக்கு:)))
Chitra...
பதிலளிநீக்குthank u tholi.
சசி குமார்...
பதிலளிநீக்குஉங்கள் வாழ்த்துக்கு நன்றி. நீங்க அக்கா என்று அழைப்பது அதைவிட பிடித்து இருக்கிறது. எனக்கு பிளாக்கர் பற்றி வரும் சந்தேகங்களை உங்களிடம் கேட்கலாமா?
வருகைக்கு நன்றி
jeevakemeni...
பதிலளிநீக்குமுதல் வருகைக்கு நன்றி. உங்க பெயர் வித்தியாசமாக இருக்கிறது
தமிழ் மதுரம்...
பதிலளிநீக்கு//உங்களவருக்கு நிலவு மீது காதலா? நம்ப முடியவில்லை. இயற்கை ரசிக்கத் தெரிந்த மனிதர்!//
உண்மைதான் ! எனது கோபம் நியாயம்தானே !
தமிழ் மதுரம்...
பதிலளிநீக்குஉண்மையில் கவிதை யதார்த்தம் என்று சொல்வது மிகவும் சரியே. கருத்துகளை வெளிபடையாக சொல்வது தான் எனக்கு பிடிக்கும். விமர்சனம் அதைவிட பிடிக்கும்.
அந்த வகையில் நீங்கள் சொன்ன கருத்திற்கு மிகவும் மகிழ்கிறேன்.
நன்றி. தொடர்ந்து எதிர் பார்கிறேன்
நல்லா இருக்குங்க இந்த ரொமான்ஸ் கவிதை.
பதிலளிநீக்குஇயல்பான அருமையான வரிகள்....நன்றாக இருக்கிறது...கவிதைகள் அதிகம் எழுதுங்கள்.....
பதிலளிநீக்குஅடடா.. கலக்கிடீங்க.. தோழி..
பதிலளிநீக்குபெண்ணுக்கு நிலா பெண்ணே.. பொறாமை..
ஹ்ம்ம். ஹ்ம்ம்.. :-))))
சூப்பர் சூப்பர் சூப்பர்..
ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு..
தொடருங்கள்.. :)
Super! Well written.
பதிலளிநீக்குஇராமசாமி கண்ணன்...
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி
ganesh...
பதிலளிநீக்குஉங்களின் ஊக்கம் என்னை இன்னும் அதிகமாக எழுத வைக்கும்.
நன்றி.
Ananthi...
பதிலளிநீக்குஉங்களின் உற்சாகமான வாழ்த்துக்கு நன்றி தோழி
vanathy...
பதிலளிநீக்குநன்றி தோழி.
கவிதைக் கவித......!!!!
பதிலளிநீக்குசூப்பரு....!!!
அழகான வார்த்தை தேர்வு... நல்ல சொல்லாடல்... ரசனையான காதல் பதிவு
பதிலளிநீக்குதெம்மாங்குப்பாட்டு...
பதிலளிநீக்குநன்றிங்க
அப்பாவி தங்கமணி...
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி .
//சினம் தணியாத
பதிலளிநீக்குநான் திமிர,//
great.......................