எதிர் பாலினம்:
இவர்களுக்கு நட்பு மட்டும் போதும் என்ற அளவில் இருந்தாலும் எதிர்பாலின் தேவை உடலை தேடுவதாக இருந்து விட்டால் அப்போதுதான் உறவு தவறாக போய்விடுகிறது. இதற்கு மறுத்தால் தன்னுடன் பேசுவதை எங்கே நிறுத்தி விடுவானோ என்ற ஐயத்தால் மண் தின்கிற உடம்பு தானே அவன் தின்றால் என்ன என்று தனக்குள் சமாதானம் செய்து கொள்கிறார்கள். பின்னர் ஒரு கட்டத்தில் சமூகத்திற்கும், கணவனுக்கும் பயந்து விட்டுவிட நினைத்தாலும் வெளிவர முடியாமல் தவித்து பெரும் மன நெருக்கடிக்கு ஆளாகிவிடுவார்கள். இந்த கட்டத்தில் தான் விஷயம் வெளிவர தொடங்கும், முடிவு அவமானம், அசிங்கம், கொலை, தற்கொலை என்று முடிகிறது.
ஒரு பெண்ணால் தான் நினைப்பது எதையும் சாதிக்கமுடியும். அவளுக்கு வேண்டியது எல்லாம் சின்ன அங்கீகாரம், கொஞ்சம் அன்பு, கணவனின் ஆதரவு மட்டும்தான். ஆனால் இந்த ஆண் சமுதாயம் இதை பற்றி எல்லாம் எங்கே யோசிக்கிறது. அதற்க்கு வேண்டியது 5 நிமிட சந்தோசம் கொடுக்க மனைவி போதும், ஆனால் அவளது விருப்பம் அத்துடன் முடியாது என்பதை ஆண்கள் உணருவதே இல்லை. அதனால் தான் ஒரு வடிகால் தேவைபடுகிறது, தவறுகிறாள்.
இலைமறை காய்மறையாக:
இந்த தவறான உறவு பல குடும்பங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. வெளியில் தெரிவது இல்லை. கிராமங்களில்
யார் யாருடன் பேசுகிறார்கள் என்று தெளிவாக சொல்லிவிடலாம்
என்பதால் அங்கே நடப்பது குருகிய காலத்திற்குள் தெரிந்துவிடும். ஆனால் நகரத்தில் பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் யார் என்று கூட தெரியாமல் வாழ்ந்து வருகிறோம்.
இப்ப கூட்டுக்குடும்ப முறைகள் இல்லாததால் பெரியவர்கள் வழி நடத்துதல் இல்லாமல் தவறுகள் சுலபமாக நடக்கின்றன.
இனி வருங்காலத்தில் இது அதிகரிக்குமே தவிர குறையாது.
எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் அன்பாக இருப்பது ஊருக்கே தெரியும், ஆனால் அந்த வீட்டிலும் ஒரு ரகசிய உறவு இருக்கத்தான் செய்கிறது. இது உண்மையில் சத்தியமானதும் அதிர்ச்சியான விஷயம்தான். இருவருக்கும் இடையில் எந்த நிமிடம் 3 வது ஆள் வந்தான், ஏன், எப்படி என்று எனக்கு இன்று வரை விடை தெரியவில்லை...!
தொடரும்...
0 கருத்துகள்:
கருத்துரையிடுக