எவ்வளவு ஆபாசமாகவும் படம் எடுக்கலாம், மிக வக்கிரமாக பெண்களை வர்ணிக்கலாம், பெண்ணை இழிவுப் படுத்தி வசனங்களால் வன்புணர்வு செய்யலாம், நடிகைகளின் ஆடைகளை கிழித்து அலங்கோலப்படுத்தி பேஷன் இது என காட்டலாம், பாடல் வரிகளில் நேரடியாக பெண்ணை கேவலமாக வசை பாடி கவிதை என கொக்கரிக்கலாம் ...இது எல்லாமே சாத்தியம் இன்றைய சினிமாக்களில்!? யாரும் இங்கே கேள்வி கேட்க மாட்டார்கள், ஏன் அதில் நடிக்கும் பெண்ணுக்கே அதை பற்றி எந்த கவலையும் இல்லை. பணம் புகழ் மட்டுமே முக்கியம் தன்மானம் சுயகௌரவம் எல்லாம் வெறும் வார்த்தைகளாகிவிட்டன!
இப்படிதான் ஒரு சினிமா எடுக்கப்படவேண்டும் என்ற எந்த சட்ட திட்டமும் திரைத்துறைக்கு கிடையாது, எடுத்து முடித்த பிறகும் தணிக்கை துறை சர்டிபிகேட் கொடுத்து தனது கடமையை முடித்துக்கொள்ளும். வக்கிரம் வன்முறை ஆபாசத்தில் ஊறிய சினிமாக்களால் சீரழியும் இளைய சமுதாயத்தை பற்றி நினைக்கக் கூட இங்கே நமக்கும் நேரமில்லை. அதனால்தான் கொளுத்திவிட்டு கொழுப்பெடுத்துத் திரிகிறார்கள் சிம்பு, அனிருத் போன்ற ஆட்கள்.
சிம்புவுக்கு ஏற்பட்ட காதல்கள் எல்லாம் தோல்வி ஆனதன் பலனை சம்பந்த பட்ட பெண் அனுபவிக்கிறதோ இல்லையோ நாம் நன்றாகவே அனுபவிக்கிறோம், இவனது காதல் தோல்விகளை(?) காரணமாக வைத்து தொடரும் அவனது படங்கள், பாடல்கள் அனைத்திலும் பெண்களை இழிவுப் படுத்தி வக்கிரமாக வசனம் பாடல் என எழுதி ஆபாச நடனம் அமைத்து என்று தனது மன வக்கிரத்தை ஒவ்வொன்றாக மேடை ஏற்றிக் கொண்டிருக்கும் சிம்புவின் சமீபத்திய அழிச்சாட்டியம் அனிருத் இசையில் பாடி யூ டுயூப்பில் வெளிவந்திருக்கும் 'BEEP SONG'
சிம்பு நல்ல திறமையான மனிதரின் மகன்...அப்பாவைப் போன்றே சிம்புவும் திறமைசாலிதான் ஆனால் மன பக்குவமின்மையால் தடம் மாறி வாய்க்கு வந்ததை எல்லாம் பொது வெளியில் படையல் போடும் லெவலுக்கு போய்விட்டது மகா கேவலம். காதலித்ததாக சொன்ன நயன்தாரா சோர்ந்துப் போகாமல் சிம்புவை சிறிதும் லட்சியம் செய்யாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று வரிசையாக படங்களில் நடித்து முன்னேறி சினிமாவில் இன்றைக்கு நம்பர் ஒன் நடிகை, ஆனால் சிம்புவோ இன்னும் ஆரம்பிச்ச இடத்திலேயே நிற்கும் பரிதாபம்...?!!
காதலில் தோல்வி கண்டவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க என்று செல்வது நல்ல மனிதர்களின் குணம் ஆனால் தான் ஒரு மன நோயாளி என்பதற்கு தற்போதைய உதாரணம் இந்த பாடல். கேலி செய்யும் ஆண்களை பெண்கள் 'நீயெல்லாம் அக்கா தங்கச்சி கூட பிறக்கல' என்று திட்டுவார்கள், ஆனால் கூட பிறந்த தங்கச்சி, பெத்த அம்மா இருந்தும் பெண்ணை கேவலப் படுத்தும் இந்த பாடல் எந்த எண்ணத்தில் பாடப்பட்டிருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே கூசுகிறது. அவர்கள் இதை கேட்டு இருப்பார்களா கேட்டும் ஒன்றும் சொல்லவில்லையா ? உடன் நடிக்கும் நடிகையை தொட்டுக்கூட நடிக்காத அப்பாவிற்கு (டி.ராஜேந்தர்) இப்படி ஒரு பிள்ளை ... அந்த அப்பாவும் இந்த பாடலை கேட்டும் பெருசா ரியாக்சன் காட்டாம தொலையுது சனியன் என்று இருந்துவிட்டார் போல
எவண்டி உன்ன பெத்தான் அவன் கைல கிடைச்சா செத்தான் என்று பாடியபோது ரசித்த அதே கூட்டம் தான் இந்த பாடலையும் ரசிக்கிறது...ரசிக்கப் போகிறது. ஆகச் சிறந்த பாடலான கொலவெறி பாடலை போல இதையும் ஹிட் ஆக்காமல் ரசிகர்களும் ஓயப் போவதில்லை. பெண்ணைத் திட்டி வசனம் பாடல் வைத்தால் அதை எல்லோரும் விரும்புவார்கள் குறிப்பாக இளைஞர்கள் என்ற எண்ணம் இருக்கவேதான் இது போன்றவை பிரபலமாகின்றன. ஆனால் தாய் மனைவி அக்கா தங்கை என்று பெண்களுடன் இணைந்து நன்றாக வாழ்கிற எந்த ஒரு நல்ல ஆண்மகனும் இந்த பாடலை காரித்துப்புவானே தவிர ரசிக்க மாட்டான்.
எனக்கு என்ன கவலை என்றால் நாளையே இந்த பாடல் சூப்பர் சிங்கரிலும், சன் சிங்கரில் சின்ன சின்ன குழந்தைகளினால் பாடப்படுமே , பாடுவதற்கு முன் பலமுறை மனப் பாடம் செய்வார்களே, நினைச்சுப் பார்க்கவே கலக்கமாக இருக்கிறது.
சினிமாக்களில் வசனம் என்றால் கூட சில நொடிகளில் கேட்டதும் மறந்துவிடலாம், ஆனால் பாடலாக வரும்போது பலமுறை ஒலிக்கும், கேட்டு கேட்டு மக்களுக்கும் பழகிவிடும், நாளை வீட்டில் சாதாரணமாக பேசப்படும் ஒரு வார்த்தையாக இந்த வார்த்தை மாறிவிடும்!!???
இன்னொரு கொடுமை என்னவென்றால் மழை வெள்ளப் பாதிப்பை பற்றிய செய்திகளை பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை இந்த பாட்டு பிடித்துக் கொண்டதுதான்.
இந்த பாட்டுக்கு எதிர்வினை காட்டினால் அதுவே இதற்கு ஒரு விளம்பரம் ஆகிவிடும் என்ற எண்ணத்தை புறம் தள்ளிவிட்டது எனது கோபம். உடல் முறுக்கி நெளியும் சிறு புழுவென எனது எதிர்ப்பை இங்கே காட்டிவிட்டேன். எதிர்ப்புகள் பல ஒன்று சேர்ந்தால் அந்த பாடல் நீக்கப்படவும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. மது வேண்டாம் என்ற பாட்டிற்கு சிறை இந்த பாட்டிற்கு குறைந்தபட்சமாக தடை... ???!!!
#BAN BEEP SONG#
நெஞ்சு பொறுக்குதில்லையே ...
பதிலளிநீக்குமகாகவியின் வரியை பார்த்ததும் வேதனை இன்னும் அதிகரிக்கிறது. இன்று அவரது பிறந்ததினம் வேறு. நமக்கென்ன என்று நாம் எல்லோரும் இருந்தோமே என்றால் இவை போன்ற கேவலங்கள் தொடரத்தான் செய்யும்.
நீக்குசிந்திக்கவேண்டும் !!
வருகைக்கு நன்றி விசுAWESOME
உடனே தடை செய்ய வேண்டும்... இல்லையென்றால் "Super Singer..............?" கொடுமையோ கொடுமை...
பதிலளிநீக்குநிச்சயமாக !! சிறு குழந்தைகளின் வாயில் இப்பாடல் வருவதை நினைக்கும் போதே வருத்தமாக இருக்கிறது
நீக்குவருகைக்கு நன்றி தனபாலன் சார்
சனியன் பிடிச்ச பீடைகள் :-(
பதிலளிநீக்கும்... :-((
நீக்குவருகைக்கு நன்றிகள்மா
டீச்சர்! எவ்வளவு அர்த்தமாக திட்டியிருக்கீங்க!!! I think Simbu is a "messed up" guy! I dont see him getting better until he dies. It is hard to fix him, and so it is best to keep him away. Few more flops will be enough to finish his career! Let us wait for that!
நீக்குநல்லவேளையா இதெல்லாம் கேட்கிறதே இல்லை. இதைக் குறித்து அதிகம் தெரியவும் தெரியாது! :)
பதிலளிநீக்குஎன்ன செய்வது என்னை தேடி பார்த்து இன்பாக்ஸ்ல லிங்க் அனுப்பி கேக்கச் சொல்லிட்டாங்களே :-)
நீக்குஅதுதான் நானும் அந்த கருமத்தை கேட்டு தொலைச்சுட்டேன் :-(
ஆனா நமக்கு இப்போது தெரியாமல் போனாலும் என்றாவது சிறுபிள்ளைகள் பாடி கேட்க வேண்டிய சூழல் வந்துவிடும் என்பது தான் யதார்த்தம்
வருகைக்கு நன்றிகள்மா
ஓ மை காட் இப்படியும் பாடலா....கேட்கும் பழக்கம் இல்லாததால் (அதாவது செலக்டிவாக மட்டுமே கேட்பதுண்டு) தெரியவில்லை. ஹும் நம் இளைஞர்கள் இளைஞிகள்(?) எந்த திசை நோக்கிச் செல்கின்றனர்?! தடைசெய்யப்பட வேண்டும் நிச்சயமாக...ஐயகோ சூப்பர் சிங்கரிலுமா வேண்டாம்...
பதிலளிநீக்குநாம தேடித் போய் கேட்க வேண்டாம் அதுவா பார்வையில பட்டு தொலைக்கும்... தடைசெய்யப் பட்டால் தான் இனிமேல் இது போன்ற பாடலை எழுத பாட சற்று யோசிப்பார்கள்...
நீக்குவருகைக்கு மிக்க நன்றிகள்
.ரெண்டு தறுதலைகள் :( ..சூப்பர் சிங்கர் மானாட மயிலாடவில் ..இதை ஒரு புது தீம் கான்செப்டாக்கி ஆட வச்சாலும் வியப்பில்லை ..ஆரம்பத்திலேயே தடை செய்வது நல்லது ..
பதிலளிநீக்குஓ மானாட மயிலாட வேற இருக்குல... :-(
நீக்குஆனா இந்த பாடலை சப்போர்ட் பண்றவங்களும் இங்கே இருக்காங்களே ஏஞ்சல், ஒரு நெகடிவ் வோட் வேற வந்திருக்கே :-)
இதுபோன்ற பாடல்களையும் பாடகர்களையும் நாம் புறக்கணித்தே ஆக வேண்டும்
பதிலளிநீக்குநிச்சயமாக !! மாற்றம் வரவேண்டும் ...வரும் நம்புவோம்
நீக்குவருகைக்கு நன்றிகள்
என்ன பாடல்? நேற்றிலிருந்து இந்தப் பாடல் பற்றி நிறைய எழுதி இருப்பதைப் பார்த்த பிறகு தான் இப்படி பாடல் வந்ததே தெரிந்தது. இணையத்தில் கேட்டேன்.... மஹா கேவலமாக இருக்கிறது! தேவையா இது.....
பதிலளிநீக்குநிச்சயம் புறக்கணிக்க வேண்டிய பாடல்.
உண்மை... நல்லது நடக்கும்
நீக்குவருகைக்கு நன்றிகள் வெங்கட் நாகராஜ்
அவர்கள் வீட்டு வாசலுக்கே போய் காறித்துப்பும் போராட்டத்தை நடத்த பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் திரண்டு போக வேண்டும். இதுபற்றி என் தளத்திலும் பகிர்ந்திருக்கிறேன். நன்றி
பதிலளிநீக்குநீங்களும் எழுதி இருக்கிறீர்களா ...நல்லது. வாசிக்கிறேன்
நீக்குவருகைக்கு நன்றிகள் முத்து நிலவன்
ரொம்பவும் அருமையாக, ' நாம் யார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்' என்கிற மாதிரி மனசின் ஆதங்கத்தைக் கொட்டி எழுதியிருக்கிறீர்கள்! மனமார்ந்த பாராட்டுக்கள்!!எங்காவது இந்த தீப்பொறி நுழைந்து, எரித்து, ஒரு விடியல் கிடைத்தால் சந்தோஷம் தான்!
பதிலளிநீக்குஅம்மா நலமா ரொம்ப நாள் ஆச்சு உங்களை இங்க பார்த்து...
நீக்குபலரும் எழுதி எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்...திரைத்துறையினர் தங்களின் ஆபாச எல்லை மீறுதல்களை இனியாவது நிறுத்தவேண்டும்.
நம்புவோம்.
வருகைக்கு நன்றிகள்மா
தானும் கெட்டு ..நாட்டையும் கெடுக்கும் ...அற்பர்கள்
பதிலளிநீக்குஉண்மை. யாரை பற்றியும் அக்கறை இல்லாத இவர்களை போன்றவர்கள் நம் சமூகத்தின் சாபக்கேடு.
நீக்குவருகைக்கு நன்றி அனுராதா பிரேம்