வெள்ளி, மே 1

9:56 AM
23
2 1/2 வயது குழந்தை பருவத்தில் Tnpsc குரூப் ஒன் தேர்வுக்கான 1000 வினா விடைகளை ஒப்பித்து தொடங்கிய இவளது சுட்டித்தனம் கணினித் துறையில் 5 உலகச் சாதனைகளை செய்தும் இன்னும் திருப்தி அடையவில்லை... அடுத்து என்ன என்ன  என்று தேடி ஓடிக் கொண்டே இருக்கிறாள்... பல உயரங்களை வெகு சுலபமாக தொட்டு முன்னேறிக் கொண்டே செல்கிறாள். இவள் பெற்ற பரிசுப் பொருட்கள் , கேடயங்கள், கோப்பைகள், சான்றிதல்கள், வாழ்த்துரை இதழ்களால் வீடு நிரம்பிக் கிடக்கிறது. பிரபல தொலைக்காட்சி சேனல்கள், பத்திரிகை, தினசரிகளில் விசாலினியின் பேட்டி எடுத்து மகிழ்ந்தன...நானும் என் பங்கிற்கு 3 வருடத்திற்கு முன்பு ஒரு போஸ்ட் போட்டிருந்தேன். மூன்று வருடங்களாக பல்வேறு கணினி  தேர்வுகளை தொடர்ந்து எழுதி தேர்ச்சிப் பெற்று வரும் இவளது சாதனைகளை என்னால் முழுமையாக எழுதி முடியாது என்பதால் சிறு குறிப்பு மட்டும் இங்கே, தவிரவும் அடுத்த சிகரம் ஒன்றை நாளை(மே 2ஆம் தேதி) தொட இருக்கிறாள் அதற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கவே இந்த பதிவு.

சாதனைகள் சிறப்புகள்

BTech MTech BE மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்ததோடு மட்டுமல்லாமல் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், கணினி துறைத் தலைவர்கள் ஆகியோர்களுக்கும் வகுப்புகள் எடுத்திருக்கிறாள். இதுவரை மொத்தம் 25 இன்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் செமினார்கள், வகுப்புகள், கலந்துரையாடல்கள் என நடத்தி இருக்கிறாள். கணினி நிறுவனங்களுக்கும்  சிறப்பு அழைப்பாளராக சென்றிருக்கிறாள். இதுவரை 127 மேடைகளில் உரையாற்றி இருக்கிறாள்.

சென்னை மவுண்ட்ரோட்டில் இருக்கும் இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின்  தலைமை அலுவலகத்தின் நிர்வாக அதிகாரி திரு.ஆனந்தகுமார் அவர்களின் அழைப்பின் பெயரில் அங்கு பணிபுரியும் ஐடி துறைசார்ந்த(IT professionals) 17 பேருக்கு Cloud Computing and networking என்பதை பற்றி இரண்டு மணி நேரம் வகுப்பு எடுத்திருக்கிறாள். (இதை குறித்த முழு விவரங்கள் அவளது இணையதளத்தில் இருக்கிறது)

மேலும் பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள இந்தியன் ஓவர் சீஸ் வங்கியில் Prestigious customer என்று குறிப்பிட்டு இவளது  புகைப்படத்தை வைத்திருக்கிறார்கள். பொதுமக்கள் யாருக்கும் இல்லாத தனி சிறப்பு இது.

இதுவரை 8 சர்வ தேச கணினி மாநாடுகளில் தலைமை விருந்தினராக கலந்துக் கொண்டு (Keynote Address) உரையாற்றி இருக்கிறாள்.   அடுத்ததாக 9வது முறையாக நாளை அதாவது மே 2ஆம் தேதி சனிக்கிழமை அன்று டெல்லியில் நடைபெற இருக்கும் 'கூகுள் நிறுவனத்தின் சர்வதேச உச்சி மாநாட்டில்' சிறப்புரை ஆற்ற அழைக்கப் பட்டிருக்கிறாள். கணினி துறையில் Cloud Computing in Google Apps for Education என்ற தலைப்பில் காலை 10.30  - 11.30 ஒரு மணி நேரம் உரை ஆற்றுகிறாள். கூகுள் நிறுவனம் இச்சிறுமிக்காக  ஒதுக்கிய ஒருமணிநேர கால அளவு என்பது வெகு சிறப்பு வாய்ந்த ஒன்று.       

மேலும் இந்த உச்சி மாநாட்டில் ஜப்பான் சாகா பல்கலைக்கழக பேராசிரியர் ஆன்ட்ருமியர்காப் (Andrew Meyerhoff) மற்றும் பிட்ஸ்பிலானி (BITS Pilani) பல்கலைக்கழக கணினிதுறைத்தலைவர் Dr. ராகுல்பானர்ஜி ஆகியோரும் உரையாற்ற உள்ளனர்.

கூகுள் நிறுவனத்தின் சர்வதேச உச்சிமாநாட்டில் 14 வயது பள்ளிமாணவி சிறப்புரை ஆற்றுவது என்பது இதுவே முதல்முறை என்பது தமிழர்கள் நமக்கெல்லாம் பெருமை.

கணினி கல்வியில் இவ்வளவு சாதனைகள் புரிந்துக் கொண்டிருக்கும் விசாலினி IIPE லட்சுமி ராமன் மெட்ரிக் பள்ளியில் 9 வது வகுப்பில் படிக்கிறாள் என்பதை விட இருக்கிறாள் என்பது சரியாக  இருக்கும் தானே :-)  

நண்பர்கள் விசாலினிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்பினால்,
மெயில் ஐடி - goldengirlvisalini@gmail.com 
மொபைல் எண் +91 94864 60561, +91 98414 77920

விசாலினியின் இணையத்தளம்
http://www.kvisalini.com
 
தமிழ்நாட்டின் திருநெல்வேலியை சேர்ந்த தமிழ்ப்பெண் விசாலினி மேலும் பல சாதனைகளை படைத்து தமிழர்களுக்கு மென்மேலும் பெருமை சேர்க்க வேண்டுமென வாழ்த்துகிறேன். 

பிரியங்களுடன் 
கௌசல்யா 
Tweet

23 கருத்துகள்:

 1. விசாலினியின் சாதனைகள் தொடர வாழ்த்துவோம்
  நன்றி சகோதரியாரே
  தம 2

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வாழ்த்திற்கு என் அன்பான நன்றிகள் சகோதரரே

   நீக்கு
 2. பெயரில்லா12:01 AM, மே 02, 2015

  This is a over projected news. This article projects that this girl is a born prodigy and an extra ordinary genius. I beg to differ as i have closely watched her for the past one year. I am highly disappointed with the mediocrity of self projection. If at all I would like to suggest something, I prefer to say that she need to focus on some specific domain and contribute constructively. Especially on AI, robotics, network algorithm and related areas. I am sure that my comment will be taken negatively.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முகம் காட்டத் துணிவில்லாத வீணர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து, என் நேரத்தை, நான் ஒருபோதும்
   வீணடிப்பதில்லை.

   இருப்பினும் வந்த சவாலைக் கண்டு ஓட ,நான் கோழையும் இல்லை, முட்டாளும் இல்லை.

   பொய்யுரைத்துப் பிழைப்பு நடத்த வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை .

   இதோ, திருவிளையாடல் வசனமே உங்கள் கேள்விக்கான பதில் .

   என்னைப் பரீட்சித்துப் பாருங்கள் . உங்களுக்குத் திறமை இருந்தால் !!!

   முதலில் முகத்தைக் காட்டுங்கள், பின்னர் முடிவைப் பார்க்கலாம்

   என் முகவரி, என் இணையதளத்தில் ,

   உங்கள் முகவரியோ ?????????????????????????????????????

   - க. விசாலினி


   Test me if you possess the knowledge

   My address is in my Website, Yours ?????????????????????????

   I am waiting, Are u Ready ?

   K.Visalini

   நீக்கு
 3. பெயரில்லா12:05 AM, மே 02, 2015

  So far, she is good in mug up. This is not intelligence. Her parents or her mentors need to guide her to focus on creative ideas. I beg to differ, this is not an achievement. This is yet another first mark candidate in SSLC.

  பதிலளிநீக்கு
 4. விசாலினிக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

  பதிலளிநீக்கு
 5. விசாலினி அவர்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 6. பெயரில்லா1:57 PM, மே 02, 2015

  i expected that my comments wont be published. Long live the "freedom of expression"

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பெயரில்லா சார்/மேடம் அவர்களுக்கு வணக்கம்,

   //Long live the "freedom of expression"//

   நீங்க படபடப்பும் அதிக உணர்ச்சிவசப் படுபவர்னு இந்த வரி எனக்கு உணர்த்துது. உங்க மற்ற கமெண்டும் அவ்வாறு எழுதப் பட்ட ஒன்று என்று நான் சொன்னா ஒத்துப்பிங்க தானே ஏன்னா இது என்னோட freedom of expression :-)

   தவிர

   போஸ்ட் பப்ளிஷ் செய்து இரு தினங்கள் கழித்து கூட பதிவுக்கு வந்த கமெண்டுகளை கவனிக்கும் படியானது எனது சூழல். என்னை அறிந்தவர்களுக்கு இது நன்கு புரியும். மேலும் ஆபாச கமெண்ட்டுகளை தவிர்த்து பிறவற்றை வெளியிடுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. எனது பல பதிவுகளை கவனித்தாலே தெரியும்..

   நீங்கள் குறிப்பிட்ட விசயத்திற்கு வருகிறேன், இதை அதற்கான பதில் என்பதை விட அதை குறித்த என்னோட கருத்து என்றும் எடுத்துக்கொள்ளலாம். சனி அன்று நடந்த கூகுள் மாநாட்டில் விசாலினியை பெரிதாக பாராட்டி விருது வழங்கி கௌரவித்திருக்கிறார்கள். விசாலினியை பற்றி அவர்களுக்கு நன்கு தெரியவேதான் இது சாத்தியமானது...கூகுள் என்றில்லை விசாலினியை அழைத்து பெருமைப்படுத்திய பெரியோர்கள், பேஸ்புக் ஷேர்ஸ் பார்த்து கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பவர்களை போன்றவர்கள் அல்ல... பல கட்ட விசாரணைகளுக்கு பின்னரே வகுப்புகள் எடுக்க அழைக்கிறார்கள், பாராட்டுகிறார்கள் அங்கீகாரம் கொடுக்கிறார்கள். மனப்பாடம் மட்டும் செய்தவளால் தன்னை நோக்கி வரும் குறுக்கு கேள்விகளை நிச்சயமாக எதிர்கொள்ளவே முடியாது. கேள்வி கேட்டவர்களும் ஒன்றும் தெரியாத அறிவிலிகள் அல்ல.

   மூன்று வருடத்திற்கு மேலாக எனக்கு அவளை தெரியும். அவளுடன் நேரில் கல்லூரிகளுக்கு சென்றிருக்கிறேன், அங்கே நடந்தவைகளை கவனித்து உள்வாங்கி இருக்கிறேன். தைரியமாக தன்னந்தனியாக 127 மேடைகளை கண்ட விசாலினியை இந்த பதிவில் வாழ்த்தி இருக்கிறேனே தவிர அவளுக்கு தகுந்த அங்கீகாரம், பொருளுதவி கொடுங்க பிழைத்துப் போகட்டும் என்று வேண்டுகோள் விடவில்லை, கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு அதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது.

   தங்களின் பெயரை குறிப்பிட்டு இருக்கலாம் , ஒரே ஊராச்சே அதுதான் கேட்டேன். :-) அப்புறம் தமிழ் நண்டு கதை கேள்விப் பட்டு இருக்கிங்களா ? தெரியாது என்றால் யாரிடமாவது கேட்டு உடனே தெரிந்துக் கொள்ளுங்களேன்.

   நன்றி.

   .

   நீக்கு
 7. சாதனைகளின் சிகரமான நம் தமிழ்நாட்டின் திருநெல்வேலியை சேர்ந்த தமிழ்ப்பெண் விசாலினி மேலும் பல சாதனைகளை படைத்து தமிழர்களுக்கு மென்மேலும் பெருமை சேர்க்க வேண்டுமென தங்களுடன் சேர்ந்து நானும் வாழ்த்தி மகிழ்கிறேன்.

  வியப்பளிக்கும் இந்தப் பகிர்வுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வாழ்த்து விசாலினியை பெருமிதப் படுத்தும். எனக்கும் நிறைவை கொடுக்கிறது...மிக்க நன்றிகள் ஐயா.

   நீக்கு
 8. பெயரில்லா4:42 PM, மே 03, 2015

  Hey,

  May be, I am a tamil nandu. However, thank you for your reply and I appreciate it sincerely. I have not tried to tarnish the kid's performance. But what I wonder is the over projections of such "precarious prodigy". In your reply, you have cleverly avoided those points I have suggested for her career development, owing the fact of her current interests.

  I am into this field and for me it looks a mockery to project the skill of "mug up" as a virtuoso meritocracy. I am not against the kid in any of my statements but the mediocrity of the over projections of her mentors.

  Telling the blatant truth will be taken negatively. I have mentioned that in my comment. Because, I know the "attitude" of our people.

  Thank you for your sarcasm. We live in the same world that killed a man who rebelled the society with his truths, who is called Jesus Christ.

  Regards to you and the kid.


  - Yet another Tamil Nandu.
  பதிலளிநீக்கு
 9. விசாலினியின் இடைவிடா முயற்சிக்கும்,திறமைக்கும் பாராட்டுக்கள், நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. அன்பு கௌசல்யா ராஜ். குழந்தை விசாலினிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள். இன்னும் பல சிகரங்களைத் தொடுவாள் .என் ஆசிகள்.

  பதிலளிநீக்கு
 11. அடையாளம் காட்டப் படவேண்டிய ஆளுமைகள் இவர்கள்.
  பகிர்ந்த உங்களின் பணி மகத்தானது.
  வெறும் பாராட்டோ புகழச்சியோ அல்ல இது.
  மனப்பூர்வமாகச் சொல்கிறேன்.
  நன்றி.

  தொடர்கிறேன்.

  த ம கூடுதல் 1

  பதிலளிநீக்கு
 12. அன்புடையீர்! வணக்கம்!
  அன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (29/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
  இணைப்பு: http://gopu1949.blogspot.in/

  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  FRANCE

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மகிழ்வான தகவலை தெரிவித்தமைக்கு என் அன்பும் நன்றியும் ...

   நீக்கு
 13. அன்புள்ள சகோதரி திருமதி. கெளசல்யா அவர்களுக்கு வணக்கம்! நமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.

  தங்களின் வலைத்தளத்தினை இன்று (29.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

  அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:

  நினைவில் நிற்போர் - 29ம் திருநாள்
  http://gopu1949.blogspot.in/2015/06/29.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பு சகோதரருக்கு வணக்கம்

   மகிழ்வான தகவலை தெரிவித்தமைக்கும் வாழ்த்திற்கும் என் அன்பும் நன்றியும் ...

   நீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...