வியாழன், ஆகஸ்ட் 23

11:00 AM
38


தமிழ் பதிவுலகமே திரண்டு ஒரு விழாவை முன்னெடுக்கிறது. விழா குறித்த விவரங்கள் தொடர்ந்து பலரின் தளங்களில் வெளியிடபட்டு வருகின்றது. ஒவ்வொன்னையும் படிகிறபோது எனக்கு ஒரு வித படப்படப்பே  வந்துவிட்டது. எவ்ளோ பிரமாண்டமாக நடத்த இருக்கிறார்கள் எப்படி, என்னவெல்லாம் நடக்க போகிறதோ என ஒரே சிந்தனை. நெருங்கி வர இருக்கிற மகளின் திருமண நிகழ்வுக்காக பெற்றோர்கள் எத்தகைய மனநிலையில் இருப்பார்களோ அது போன்ற ஒரு நிலை. உண்மையில் இது எனக்கு ஆச்சர்யம். விழா ஏற்பாடுகளுக்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை, கலந்து கொள்ளவும் இயலாது என்கிறபோது என்ற எனக்குள் ஏன் இப்படி...!? ஒரே ஒரு காரணம் பதிவர்களில் நானும் ஒருவள்...!

சுலபமானது அல்ல 

ஒரு நாலு பேர் கலந்து கொள்ளும் நிகழ்வென்றாலும் அதற்காக எத்தனை மெனக்கிட வேண்டும் என்பது தெரியும். தவிர சந்திப்பு நல்ல படியாக நடக்க வேண்டும், நடந்து முடிந்த பின்னும் அதை குறித்த எதிர் விமர்சனங்கள் வந்தால் அதையும் சந்திக்க வேண்டும். இன்னும்,

எத்தனை சங்கடங்கள்...
எத்தனை சிரமங்கள்...
எத்தனை அவஸ்தைகள்...
எத்தனை கேள்விகள்...
எத்தனை பதில்கள்...
எத்தனை சமாளிப்புகள்...
இப்படி பல எத்தனைகள் !! 

அத்தனைகளையும் சரிகட்டி நடத்தி முடிப்பது என்பது லேசான காரியம் இல்லை. 'ஆமாம் என்ன பெரிய சந்திப்பு?' என்று சுலபமாக யாரும் பேசி விடலாம்...இப்படி அங்கலாய்க்க மட்டும் தான் தங்களுக்கு முடியும் என்பது தெரிந்தும்...!!  

நாங்களும் நடத்துவோம்ல மாநாடு

தமிழர்கள் இருவர் சந்தித்தால் ஒருவர் காலை ஒருவர் வாரிவிடுவதிலேயே கவனமாக இருப்பார்கள் என்ற ஒரு நல்ல(?) பெயர் நமக்கு இருக்கிறது...அதை மாற்றிக்காட்டி கொண்டிருப்பவர்கள் தமிழ் பதிவர்கள் என்றே நினைக்கிறேன். ஒரு சிலர் விதிவிலக்கு, ஆனால் ஒரு குடும்பமாக கருத்துக்களை பரிமாறி, நிறைகுறைகளை விவாதித்து பதிவுலகை அடுத்த கட்டத்திற்கு மெல்ல நகர்த்தி கொண்டிருக்கிறார்கள் பதிவர்கள். அதனால் தான் பல வார, மாத  பத்திரிகைகள், தினசரிகள் இணையத்தில் வெளியிடப்படும் துணுக்குகள்,கட்டுரைகள், படங்கள், பதிவர்கள் பேட்டிகள் என வெளியிட்டு தங்கள் சர்க்குலேஷனை தக்கவைத்து கொண்டிருக்கின்றன.

இப்படி பட்ட பதிவுலகத்தினரின் மாநாடு என்றால் சும்மாவா...பதிவுலகத்தினர் தவிர பிறரின் பார்வையும் ஞாயிறன்று நடக்க போகும் மாநாட்டை நோக்கித்தான் இருக்கப்போகிறது. 

நடக்க போவது என்ன...? 

ஏற்கனவே இப்படி ஒரு மாநாட்டை நடத்தவேண்டும் என்ற பல முறை சிந்தித்து, பேசி இப்போது சாத்தியமாக்கி இருக்கிறார்கள். ஒவ்வொன்றும் கலந்தாலோசித்து சரியாக திட்டமிடப்பட்டு  செயல்படுத்தபடுகிறது என்பதை அது குறித்த பதிவுகளை படிக்கும் போது  தெரிகிறது. வெளியூர்களில் இருந்து வர இருக்கிறவர்களின் தங்கும் வசதிக்கான  ஏற்பாடுகள்  செய்து இருக்கிறார்கள்.விழாவில் என்னவெல்லாம் நடக்க இருக்கிறது என பார்ப்போம்.....

* கவியரங்கம் இருக்கிறது, இணையத்தில் கவிப்பாடி மயக்கியவர்கள் நேரில்...!! கண்டு ரசிக்க போகிறவர்கள் பாக்கியசாலிகள். 

 * மூத்த பதிவர்களுக்கு பாராட்டும், மரியாதை செய்வித்தலும் நடக்க இருக்கிறது.

*  இணையத்தில் நேரடி ஒளிபரப்புக்கு ஏற்பாடுகள் செய்யபட்டிருக்கிறது.

 * அன்றைய தினம் ஸ்பெஷலாக டிஸ்கவரி புத்தக நிலையம் புத்தக கண்காட்சி நடத்த இருக்கிறது, பிரபலங்கள் எழுதிய புத்தகங்களை அரங்கிலேயே பெற்று கொள்ள வசதிகள் செய்யப்பட இருக்கிறதாம். வாங்கும் ஒவ்வொரு புத்தகத்துக்கு 10 சதவீதம் தள்ளுபடியும் உண்டாம்.

* சிறந்த பதிவர் ஒருவருக்கு லட்ச ரூபாய் வரை பரிசு கொடுக்க இருப்பதாகவும் தெரிகிறது.

இவையெல்லாம் முக்கிய துளிகள். ஏற்பாடுகளை பார்க்கும் போது மாநாடு வெகு பிரமாண்டமாய் இருக்க போவதென்னவோ உண்மை. கண் எல்லாம் படாது அதுதான் திருஷ்டி ஏற்கனவே கழிஞ்சி போச்சே !! (சரியாதான் சொல்றேனா ?!) :)

(மாநாடுனா ஏதாவது தீர்மானம் போடுவாங்க, இங்க அப்படி ஏதும் உண்டா...?!) :)

களைக் கட்ட போகிறது !!

விழா வரும் ஞாயிறு(26/8/12) அன்று காலை 9.30 மணிக்கு தொடங்க இருக்கிறது. வெளியூர்களில் இருந்து செல்ல இயலவில்லை என்றாலும் சென்னையில் இருக்கும் 'இதுவரை சம்மதம் தெரிவிக்காதவர்கள்' இருந்தால் அவசியம் சென்று கலந்துக் கொள்ளுங்கள்...பல கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் அதை எல்லாம் இந்த நேரத்தில் புறந்தள்ளிவிட்டு தமிழர்கள் இணையும் ஒரு நிகழ்வில் கலந்து கொள்வது நமது கடமை என எண்ணி செல்ல முயற்சி செய்யுங்கள். நான் பெரியவன் நீ சிறியவன் என்ற பேதங்கள் ஒருவேளை இருந்தாலும் இந்த ஒருநாளில் அதை எல்லாம் சற்று மறந்து ஒரே மனத்தினராய் பங்குபெறும்போது நம் மனதிற்கு அது உற்சாகத்தை  கொடுக்கும். நம்மை புதுபித்துகொள்ள ஒரு நாளாக நிச்சயம் அமையும் !!  அமையட்டும் !!                                                                                                                                   
கலந்துகொள்ள போகும் பதிவர்கள் பெயர் விபரங்கள் :
இறுதி பட்டியல் 

16. கதிரவன்(மழைச்சாரல்)சேலம் 
17. ரேகா ராகவன்,சென்னை  
18. கேபிள் சங்கர்,சென்னை
19. உண்மைத்தமிழன் ,சென்னை
20. சசிகுமார்(வந்தேமாதரம்)சென்னை
36. ஸ்ரவாணி(தமிழ் கவிதைகள் தங்கச்சுரங்கம்)சென்னை
37. தமிழ்ராஜா,(தமிழ்தொட்டில்)சென்னை
38. அகரன்(பெரியார் தளம்) சென்னை
72. ராஜி(காணாமல் போன கனவுகள்)ஆரணி
73. தூயா(தேவதையின் கனவுகள்)ஆரணி
86. சுந்தர்ராஜ் தயாளன்,பெங்களூரு
87. கோலிவுட் ராஜ்(சினிமா சினிமா)ஹைதராபாத்
88. லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை
89. தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன்
90. சைதை அஜீஸ்,துபாய்
91. மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய்
92. சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர் 

93. இரா.தெ.முத்து(திசைச்சொல்) ,சென்னை 
94. ரமேஷ் (சிரிப்பு போலீஸ் ) சென்னை
95. அகிலா(கோயம்புத்தூர்) 

மூத்த பதிவர்கள்

 லட்சுமி(குறையொன்றும் இல்லை)மும்பை 
ரஞ்சனி நாராயணன்,பெங்களூர்  
ரேகாராகவன்,சென்னை  
வல்லிசிம்ஹன்(நாச்சியார்)சென்னை
கோவை சரளா(பெண் எனும் புதுமை) கோயம்புத்தூர்
ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை

மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய்
சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர்
தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன்


நண்பர்களே உங்களின் பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது வர விருப்பம் இருந்து பெயர் கொடுக்காமல் இருந்தாலோ உடனடியாக  கீழ் கண்ட பதிவர்களை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது அலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளவும்.

மதுமதி - 9894124021
பாலகணேஷ் - 7305836166
சிவக்குமார் - 9841611301

மோகன் குமார் snehamohankumar@yahoo.co.in
மெட்ராஸ்பவன் சிவகுமார்: madrasminnal@gmail.com
kavimadhumathi@gmail.com
pattikattaan@gmail.com

பெயர் பட்டியல் நன்றி - திரு சென்னைபித்தன்  அவர்கள்.

                                                         * * * * * * * * * * * * * * * *

சாதி, மத, இன,கொள்கை வேறுபாடுகள் இன்றி பதிவர்கள் என்ற ஒரே ஒரு  அடையாளத்தோடு மட்டும் நடக்க போகும் இதில் கலந்துகொண்டு தமிழ் பதிவுலகை பெருமைப்  படுத்துங்கள். அனைத்தும் குறைவின்றி நடைபெற்று முடிய எல்லாம் வல்ல தேவனிடம் என் பிரார்த்தனைகள் ! விழாவினை மாநாடு போல் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் நேச உறவுகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்...! விழா வெற்றி பெற  என் வாழ்த்துக்கள்...! 

                                                           வெல்க தமிழ் !
                                                              


பிரியங்களுடன் 
கௌசல்யா   
Tweet

38 கருத்துகள்:

 1. மிக மகிழ்ச்சி நன்றி நீங்கள் வருகிறீர்களா மேடம்? வந்தால் மிக மகிழ்வோம்

  பதிலளிநீக்கு
 2. ஒரு விழாவினை சிறப்பாகச் செயல்படுத்துவதன் பின்னணியில் எத்தனை பேரின் உழைபபு இருக்கிறது என்பது பற்றிய உங்களின் புரிந்துணர்தல் மகிழ்ச்சி தருகிறது. பட்டியலை வெளியிட்டு மனம் நிறைய மகிழ்வோடு நீங்கள் வாழ்த்தியதில் மிகமிக மகிழ்ச்சி எங்களுக்கு. யாவற்றுக்கும் என் இதயம் நிறை நன்றி.

  பதிலளிநீக்கு
 3. விழா வெற்றி பெற இனிய வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 4. தோழி உன் உணர்வுகளை எங்களை உச்சியில் அமர வைக்கிறது .......

  உனக்குள் இருக்கும் அந்த துடிப்பு எங்களுக்குள்ளும் துடிக்கிறது ......

  அறிவிப்போடு உன் அன்பையும் பரிமாறி இருகிறாய் நன்றி

  பதிலளிநீக்கு
 5. தினம் தினம் நிகழ்வுக்காக சிரம்ம் பாராமல் அலையும் நண்பர்களின் நிலையை உணர்ந்த வரிகள் அருமை நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 6. பதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள் (TM 2)

  பதிலளிநீக்கு
 7. வெற்றிக்கு என வாழ்த்துக்கள்.எவ்வளவு பெரிய விடயம் அகடகா இது!!எத்தனை முயற்சிகள் .வாழ்த்துக்கள் பதிவர்களே!பதிவிற்காய் நன்றி அக்கா!

  ஒரு தேநீரும் அவன் நினைவுகளும்.!!!!! !

  பதிலளிநீக்கு
 8. பதிவர் சந்திப்பு சிறக்கட்டும்

  பதிலளிநீக்கு
 9. பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

  விழா சிறக்க வாழ்த்துக்கள்... (TM 3)

  பதிலளிநீக்கு
 10. @@ மோகன் குமார் said...

  //மிக மகிழ்ச்சி நன்றி நீங்கள் வருகிறீர்களா மேடம்? வந்தால் மிக மகிழ்வோம் //

  அழைப்புக்கு மிக்க நன்றிகள். வரக்கூடிய வாய்ப்பு இல்லாமல் போனது குறித்து மிக வருந்துகிறேன்.

  நேரடி ஒளிபரப்பில் விழாவினை காணப்போகும் மகிழ்ச்சியில் இருக்கிறேன்.

  வாழ்த்துகள்.  பதிலளிநீக்கு
 11. @@ பால கணேஷ் said...

  //ஒரு விழாவினை சிறப்பாகச் செயல்படுத்துவதன் பின்னணியில் எத்தனை பேரின் உழைபபு இருக்கிறது என்பது பற்றிய உங்களின் புரிந்துணர்தல் மகிழ்ச்சி தருகிறது//

  சின்ன விசயம் அல்ல என்பது மட்டும் நல்லா தெரியும் கணேஷ். ஏற்பாடுகளை பங்கெடுத்து நடத்த போகும் உங்கள் அனைவரின் உழைப்பு போற்றத்தக்கது.

  எல்லோரும் ஒற்றுமையாக செயல்படுவதை எண்ணி பெருமைபடுகிறேன்.

  வாழ்த்துக்கள் + நன்றிகள் கணேஷ்.

  பதிலளிநீக்கு
 12. @@ இராஜராஜேஸ்வரி said...

  //விழா வெற்றி பெற இனிய வாழ்த்துகள்..//

  நன்றிகள் தோழி.

  பதிலளிநீக்கு
 13. @@ கோவை மு சரளா said...

  //அறிவிப்போடு உன் அன்பையும் பரிமாறி இருகிறாய் நன்றி//

  புரிதலுக்கு மிக்க நன்றிகள் தோழி.

  பதிலளிநீக்கு
 14. @@ Sasi Kala said...

  //தினம் தினம் நிகழ்வுக்காக சிரம்ம் பாராமல் அலையும் நண்பர்களின் நிலையை உணர்ந்த வரிகள்//

  உண்மை. கவனித்து கொண்டு தானே இருக்கிறேன்...செவி வழி செய்திகளும் வருகின்றனவே...!!

  நன்றிகள் சசிகலா.

  பதிலளிநீக்கு
 15. @@ வரலாற்று சுவடுகள்...

  நன்றிகள்

  பதிலளிநீக்கு
 16. @@ Athisaya said...

  //வெற்றிக்கு என வாழ்த்துக்கள்.எவ்வளவு பெரிய விடயம் அகடகா இது!!எத்தனை முயற்சிகள் .//

  பெரிய விஷயம் தான். வாழ்த்துவோம் எல்லோரையும்...

  நன்றிகள் அதிசயா.

  பதிலளிநீக்கு
 17. @@ Prem Kumar.s...

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்

  பதிலளிநீக்கு
 18. @@ திண்டுக்கல் தனபாலன்...

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 19. பதிவர் சந்திப்பு வெற்றி பெற வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 20. விழா வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 21. விழா சிறப்புற வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 22. பதிவர் மாநாடு வெற்றிபெற வாழ்த்துகள். என்னைப் போன்று வெளிநாட்டுப் பதிவர்கள் கலந்துகொள்ள இயலாதது வருத்தம் தருகிறது.

  பதிலளிநீக்கு
 23. மகிழ்ச்சி..பகிர்வுக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 24. பெயரில்லா7:13 AM, ஆகஸ்ட் 24, 2012


  @ கும்மாச்சி

  உங்களைப்பொருத்தவரை நாங்கள் வெளிநாட்டு பதிவர்கள் :))

  சந்தர்ப்பம் அமைகையில் சந்திப்போம். விழா முடிந்ததும் நூற்றுக்கணக்கான பதிவுகளை, போட்டோக்களை பார்த்தே தீர வேண்டிய நிலைக்கு ஆளாக்க படுவீர்கள்!!

  பதிலளிநீக்கு
 25. நானும் யோசித்துக் கொண்டே இருக்கின்றேன் . எவ்வளவு வேலை இருக்கும். எப்படி சமாளிக்கிறார்களோ. வெறுமனே ஒரு ஆயுஷ் ஹோமம்,உபநயனம் இந்த மாதிரி விழாக்களுக்கே தாவு தீந்துவிடும். அருமையாகத் திட்டமிட்டு செயல்படும் அனைவருக்கும் என் உளமார்ந்த ஆசிகள். ஆதர்சத்தோடு பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 26. சரியாச் சொன்னீங்க.. சென்னைல இருந்துட்டு விழாவுக்குப் போகாம இருந்தா நல்லா இருக்காது. முடிஞ்ச வரைக்கும் அண்மைல இருக்கிற எல்லாத் தமிழ்ப் பதிவர்களுமே போவாங்கனு எதிர்பார்ப்போம்.

  பதிலளிநீக்கு
 27. சரியாச் சொன்னீங்க.. சென்னைல இருந்துட்டு விழாவுக்குப் போகாம இருந்தா நல்லா இருக்காது. முடிஞ்ச வரைக்கும் அண்மைல இருக்கிற எல்லாத் தமிழ்ப் பதிவர்களுமே போவாங்கனு எதிர்பார்ப்போம்.

  பதிலளிநீக்கு
 28. பெயரில்லா9:17 AM, ஆகஸ்ட் 24, 2012

  What happened to Jackie, Luckylook, Athisha, Dondu Sir, Charu etc..?
  For Erode sandhippu, Jackie used to ,but niot for Cennaih?

  பதிலளிநீக்கு
 29. நானும் வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்கிறேன்....

  பதிலளிநீக்கு
 30. @@ r.v.saravanan...

  வாழ்த்துக்கும்,

  வருகை தந்து தொடருவதற்க்கும் நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 31. @@ சுவனப் பிரியன்...

  மிக்க நன்றிகள்

  பதிலளிநீக்கு
 32. @@ மாதேவி...

  நன்றி தோழி.  @@ கும்மாச்சி...

  நன்றிகள்.  @@ மதுமதி...

  நன்றிகள்  @@ ! சிவகுமார் !...

  நன்றி

  பதிலளிநீக்கு
 33. @@ வல்லிசிம்ஹன் said...

  //நானும் யோசித்துக் கொண்டே இருக்கின்றேன் . எவ்வளவு வேலை இருக்கும். எப்படி சமாளிக்கிறார்களோ. வெறுமனே ஒரு ஆயுஷ் ஹோமம்,உபநயனம் இந்த மாதிரி விழாக்களுக்கே தாவு தீந்துவிடும்//

  உண்மைதான். இத்தகைய எனது ஆச்சர்யம் தான் பதிவாக வெளிவந்திருக்கிறது. :)

  நன்றி + வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 34. @@ அப்பாதுரை said...

  //சென்னைல இருந்துட்டு விழாவுக்குப் போகாம இருந்தா நல்லா இருக்காது. முடிஞ்ச வரைக்கும் அண்மைல இருக்கிற எல்லாத் தமிழ்ப் பதிவர்களுமே போவாங்கனு எதிர்பார்ப்போம்.//

  அன்று விடுமுறை தினம் வேற, அதனால் காரணம் எதுவும் சொல்லாமல் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன். :))

  நன்றிகள்.

  பதிலளிநீக்கு

 35. @@ Anonymous...

  தெரியவில்லை.
  வருகைக்கு நன்றிகள்.


  @@ NKS.ஹாஜா மைதீன்...

  நன்றிகள்

  பதிலளிநீக்கு
 36. விழா வெற்றி பெறும். வெளிநாட்டிலிருப்பதால் கலந்து கொள்ளமுடியவில்லை.
  இப் பெயர்ப்பட்டியலில் நான் வாசிக்கும் பல பதிவர்கள் பெயர் இல்லை. ஆச்சரியமாக உள்ளது.

  பதிலளிநீக்கு
 37. நேரடி ஒளிபரப்பை கண்டு மகிழுங்கள் ................

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...