Monday, October 31

9:01 AM
62இந்த கேள்வியை  தங்களுக்குள்ளாக கேட்காத பெண்களின் எண்ணிக்கை மிக குறைவு . வாழ்நாளில் ஒருமுறை கண்டிப்பாக கேட்ககூடிய சூழ்நிலை ஒன்று உண்டு,  அது பிரசவ வேதனையை  அனுபவிக்கும் அந்த நேரம்!   

நானும் அத்தகைய ஒரு நிலையில் கேட்டேன், கேட்டேன் என்று சொல்வதை விட கத்தி கதறினேன் என்று தான் சொல்வேன். ஹாஸ்பிட்டலில் சேர்த்ததில் இருந்து வலியால் துடித்து கொண்டிருந்தேன், வலி வருவதும் போவதுமாக இருந்ததே ஒழிய எந்த முன்னேற்றமும் இல்லை.  நர்ஸ் வந்து செக்  பண்ணி விட்டு இந்த வலி போதாது இன்னும் கொஞ்சம் வலி வர வேண்டும், அப்போதுதான் குழந்தை பிறக்கும் என்று கூலாக சொல்லிவிட்டு சென்று விட்டார்கள்.  எனக்கு எப்படி இருக்கும்?!  இந்த வலியே உயிர்  போகுது, இதை விட அதிக வலி என்றால் எப்படி இருக்கும்,  நினைக்கும்போதே வலியுடன் இப்போது பயமும் சேர்ந்து விட்டது.  

என் உறவினர்கள் வேறு உட்காராதே, அப்படியே மெதுவாக  நட என்று அன்பாக கட்டளை இட்டார்கள்.  என்ன செய்ய அனுபவஸ்தர்கள் சொல்கிறார்களே என்று பெரிய வயிற்றை தூக்கி கொண்டு நடந்தேன்.     

பிரசவ நாள் நெருங்கியும் வலி ஏற்படவில்லை என்பதால் வலியை அதிகரிக்க ஜெல் என்ற ஒன்றை வைத்தார்கள்,   வைக்கும்போது அது வேற  வித்தியாசமான ஒரு வேதனையாக  இருந்தது.  இது போதாது என்று குளுக்கோஸ் ஒரு கையில் ஏறி கொண்டு இருந்தது.  அதிகம் இல்லை ஒரு 5 பாட்டில் தான்.  ஒரு பாட்டில் முடிந்ததும் நர்ஸ் செக் அப்,  பின்னர் வாக்கிங், மறுபடி ட்ரிப்ஸ், மறுபடி செக் அப் இப்படியாக கிட்டத்தட்ட 36  மணி நேரம் கடந்தது.   இதில் தூக்கம் என்ற ஒன்றை மறந்து விட்டேன்.  'எப்ப குழந்தை பிறக்கும்' என்ற என் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. 

டாக்டர் மறுபடி ஜெல் முயற்சி பண்ணுவோம் என்று சொன்னார்கள்,  நல்ல ஹாஸ்பிடல் என்பதால் சிசரியன்  பற்றி யாருமே அங்கே  பேசவில்லை.  (எனக்கு தான் வேற இடம் போய் இருக்கலாம் என்று தோன்றியது !?) மறுபடி ஜெல் என்றவுடன் பயம் அதிகமாகி விட்டது.  

இந்த நரக வேதனையில் தான் என் மனதில் தோன்றியது " ஏண்டா பெண்ணாக  பிறந்தோம்? "  மனதில் தோன்றியதை வாய் விட்டு கதறி சொல்லிவிட்டேன்,  அதற்க்கு என் அத்தை ' என்ன செய்ய நம்ம தலை எழுத்து, அனுபவிக்கத்தான் வேண்டும் '  என்று அவர்களுக்கு தெரிந்த ஆறுதலை கூறினார்கள்.   எனக்கு அந்த கேள்வி மட்டும் அல்ல வேறு ஒன்றும் தோன்றியது, ' எதை எதையோ கண்டுபிடித்தோம் என்று பெருமை பட்டு கொள்கிறோமே,  வலி இல்லாமல் பிள்ளை பெறுவதற்கு ஒரு மாத்திரை மாதிரி எதையாவது கண்டுபிடிக்கலாம் அல்லவா என்பதுதான் அது'.   

என் கதறல்  தாங்காமல் கடைசியில் ஆபரேஷன் ரூமிற்கு அழைத்து சென்றார்கள். போவதற்கு முன் இனிமா என்ற வேறொரு இம்சை, அதையும் அனுபவித்தேன்.  ஆபரேஷன் செய்யலாமா இல்லை மறுபடி  ஜெல் வைக்கலாமா என்று அவர்களுக்குள் ஒரு ஆலோசனை நடந்தது,    அரைமணி நேரம் கழித்து சரியாக 40 மணிநேர அவஸ்தைக்கு பின் பெரிய வலி ஏற்பட்டது.

என்னை சுற்றி பலர் இருந்தனர், வலி கூட கூட என் கதறலும் கூடுகிறது, பயத்தில் என் கைகள் உதவிக்காக அலைபாயுகிறது ,  தானாக என் கரங்கள் அருகில் இருக்கும் நர்சின் கையை பற்றி அழுத்தியது.  நெஞ்சின் படபடப்பு  அதிகரிக்கிறது, இதயம் அதிக ஆக்சிசனுக்காக துடிக்க என் திறந்த வாய் வேகமாக காற்றை உள்ளிழுக்கிறது. அருகில் இருக்கும்  நர்ஸ் என் காதருகில் வேகமாக உந்தி தள்ளுமாறு கூறினார்கள்.  

என் முழு உடலும் என் கட்டுபாட்டில் இல்லை,  என் கண்கள் நிலை குத்த, கைகள் பரபரக்க, இதயம் துடிக்க, நெஞ்சில் ஒரு பந்துபோல் ஏதோ வந்து அடைக்க, வேகமாக என் மொத்த சக்தியையும் ஒன்று திரட்டி, மரண விளிப்பில் நிற்கையில் உயிர் பிழைக்க மேற்கொள்ளும் கடைசி முயற்சி இதுவென, உள்ளிழுத்த காற்றுடன் அழுத்தம் கொடுத்து உந்தி தள்ள, இதோ குழந்தை பிறந்து விட்டது. என் கதறல் சத்தம் நின்று குழந்தையின் அழுகுரல் தொடங்கியது.   நான் மெதுவாக மூச்சை இழுத்து விட்டு இயல்பு நிலைக்கு வர தொடங்கினேன். 

நர்ஸ் அருகில் வந்து 'உங்களுக்கு ஆண் குழந்தை' என்று சொன்னார்கள். எந்த குழந்தை என்றாலும் பரவாயில்லை , பிறந்தால் சரி என்றுதானே இருந்தேன். அதனால் மனதில் ஒன்றும் பெரிதாக பூ எல்லாம் பூக்கவில்லை,  நர்சிடம் சும்மா லேசாக சிரித்து வைத்தேன்.
இன்னும் விட்டார்களா இந்த நர்ஸ்கள், என்னவோ இன்னும் சரியாக வெளியேறவில்லை என்று என்னை அடுத்த 30   நிமிடத்திற்கு பாடாய் படுத்தினார்கள், தையல் போட்டார்கள்.  என்ன மாதிரியான  விதவிதமான வேதனைகள், வலியில் இத்தனை விதங்களா?, அனுபவித்தேன் கொடூரமாக.....!

இதற்குள் குழந்தையை சுத்தம் செய்து ஒரு வெள்ளை துணியில் சுற்றி வைத்து என்னிடம் கொண்டு வந்து காட்டினர்.  மெதுவாக திரும்பி முகம் பார்த்தேன்...கடவுளே! இது என் குழந்தையா..?  இதன் தாய் நானா..?  நாந்தான் பெற்றேனா..? வெள்ளை துணியில் சிகப்பு ரோஜா மலராய் கண்மூடி என் அருமை மகன்... ! சின்ன சின்ன மணி விரல்கள், இதழ் பிரியா  மல்லிகை  மொட்டுபோல் உதடுகள்,  தாமரை இதழாய் கன்னம், மூடிய இமைக்குள் அலையும் கருவிழிகள்,  வர்ணிக்க வார்த்தைகள் தோணவில்லை,  ஆனந்தத்தில் எனக்கு போதை ஏறி சிறிது மயக்கம் வருவதுபோல் இருந்தது!

என்னே ஆனந்தம்!


இதுவரை நான் அனுபவித்தது வலிகளா இல்லை, என் கண்மணியை தேடி கண்டுபிடிக்க நான் எடுத்த பிரயாசங்களா ....!? ஒரே வினாடியில் என்னை தாய் என்று உணர வைத்தான்.   பால் அருந்த என் அருகில் படுக்க வைத்தனர்,  என் ரத்தம் என் மகனுக்காக பாலாக மாறி அவனை அருந்த வைத்தது....!  

பெண்மை எதுவென இந்த இன்ப வலியை அனுபவிக்கும்போது தான் உணருகிறேன்,  கடவுள் வரம் கொடுத்தால் மீண்டும்  பெண்ணாகவே பிறப்பிக்க வேண்டுவேன் என்பதை... !

பெண்களே இனி ஒரு முறை கூட கூறாதிர்கள் , ' ஏன் பெண்ணாய் பிறந்தேன் என்று '. 

" மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா " 


பின்குறிப்பு அல்ல முக்கிய அறிவிப்பு !!

31.10.2011 இருந்து 06.11.2011 ஞாயிற்றுகிழமை வரை தமிழ்மணத்தில் என்னை நட்சத்திர பதிவராக தேர்ந்தெடுத்துள்ளதாக அறிவித்து அழைப்பு விடுத்திருந்தார்கள். பதிவுலக உறவுகள் உற்சாகம் கொடுப்பார்கள் என்ற தைரியத்தில் நானும் சம்மதித்துவிட்டேன். மாதத்திற்கு நாலு பதிவு எழுதி கொண்டிருக்கும் என்னை தினம் ஒன்றாக ஏழு பதிவு எழுத சொல்லி இருக்கிறார்கள்...!? என்மேல் அவர்கள் கொண்ட நம்பிக்கைக்கு என் நன்றிகளை இங்கே சொல்லிகொள்கிறேன். முதல் பதிவாக எனக்கு பிடித்த பதிவை மீள்பதிவிட்டு இருக்கிறேன். நாளையில் இருந்து புதிய பதிவுகள் வெளிவரும்...ஆதரவு தாருங்கள். நன்றி.

பிரியங்களுடன் 
கௌசல்யா

* மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சு போய்டுமா ?!!  நாளைய பதிவில்..........


   
Tweet

62 comments:

 1. தமிழ்மண நட்சத்திரமாக தேர்ந்தேடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 2. ஏற்கெனவே வாசித்திருக்கிறேன் இந்த பதிவினை.. இருப்பினும் மீண்டும் வாசித்ததில் மகிழ்ச்சி...!

  தமிழ் மணம் நட்சத்திரத்துக்கு எனது வாழ்த்துக்கள்....!

  ReplyDelete
 3. நட்சத்திர வாழ்த்துகள்

  ReplyDelete
 4. உலகத்தை உருவாக்கும் பெண்கள் போற்றுதலுக்குரியவர்கள் .

  ReplyDelete
 5. நட்சத்திர பதிவராக தேர்ந்தெடுக்கப் பட்டமைக்கு வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 6. நட்சத்திர பதிவருக்கு வாழ்த்துக்கள்...

  நட்சத்திர வாரம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 7. நட்சத்திரமானதற்கு வாழ்த்துக்கள்.
  நல்ல பகிர்வு.
  மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திடல் வேண்டும்.

  ReplyDelete
 8. நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
 9. நட்சத்திர வாரத்தின் தொடக்கமே அருமை,மீள் பதிவாயினும்.
  வாழ்த்துகள்.

  ReplyDelete
 10. நட்சத்திர வாழ்த்துக்கள் கெளசல்யா!

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள் தோழி
  மேலும் மேலும் வளர்க..!

  ReplyDelete
 12. வாழ்த்துக்கள் மேடம்...

  ReplyDelete
 13. 40 மணீ நேரமாஅ. தாயே உங்க்கள் காலைக் காட்ட்டுங்கள்.
  இப்படி சொல்லிய்யே நானும் மூணூ பெற்றுக் கொண்டென். :)

  ReplyDelete
 14. நட்சத்திரப்பதிவருக்கு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. பெண்மையைப் போற்றத்தூண்டும் பகிர்வு.

  ReplyDelete
 16. @@ எல் கே...

  வாழ்த்தியமைக்கு நன்றிகள் கார்த்திக்.

  ReplyDelete
 17. புணர்ஜென்மம் எடுத்த நிகழ்வு.

  ReplyDelete
 18. பிரசவ வலியினுடே பென்னும் கையுமாக இருந்த மாதிரி அவ்வளவு தத்ரூபமாக உணர்வுப்பூர்வமாக எழுதியிருக்கிறீர்கள். நட்சத்திர பதிவர் ஆனதற்க்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. @@ dheva said...

  //ஏற்கெனவே வாசித்திருக்கிறேன் இந்த பதிவினை.. இருப்பினும் மீண்டும் வாசித்ததில் மகிழ்ச்சி...//

  அந்த பதிவில் உங்கள் பின்னூட்டம் குறிப்பிடத்தகுந்த ஒன்று. மீண்டும் அதை வாசித்தமைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் தேவா.

  ReplyDelete
 20. @@ தருமி...

  தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள். மகிழ்கிறேன்.

  ReplyDelete
 21. @@ koodal bala...

  நன்றி பாலா.  @@ சௌந்தர்...

  நன்றி சௌந்தர்.  @@ சே.குமார்...

  நன்றி குமார்.  @@ ஜோதிஜி திருப்பூர்...

  நன்றிகள் பல.

  ReplyDelete
 22. தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பதிவர் நீங்கள்.
  தமிழ்மணம் நற்செயல் செய்துள்ளது.
  வாழ்த்துக்கள் சகோதரி.

  ReplyDelete
 23. @@ சென்னை பித்தன்...

  நன்றிகள் பல.
  @@ ராமலக்ஷ்மி...

  நன்றி தோழி.  @@ யோஹன்னா யாழினி...

  வாழ்த்திற்கு நன்றி யாழினி.

  ReplyDelete
 24. @@ மணிஜி......

  வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள் பல.

  ReplyDelete
 25. மானிடற்கு ஏற்படும் வலிகளில்
  மிகவும் கொடியது பிரசவ வலி
  அதையே தாங்கும் பெண்கள்
  எத்துன்பத்தையும் தாங்கும் மனமுடையவர்கள்.

  பெண்ணாய்ப் பிறத்தல் புண்ணியமே.....

  ReplyDelete
 26. @@ வல்லிசிம்ஹன் said...

  //இப்படி சொல்லிய்யே நானும் மூணூ பெற்றுக் கொண்டென். :)//

  ஒவ்வொரு தாயிடமும் இப்படி ஒரு அனுபவம் நிச்சயம் இருக்கும்.

  நாற்பது மணி நேரம் அவஸ்தை பட்டும் இரண்டாவது குழந்தையை மிக விரும்பி பெற்றுக்கொண்டேன். :)

  ReplyDelete
 27. @@ FOOD...

  வாழ்த்துக்கு மிக்க நன்றி அண்ணா.

  ReplyDelete
 28. @@ கே. ஆர்.விஜயன் said...

  //பிரசவ வலியினுடே பென்னும் கையுமாக இருந்த மாதிரி அவ்வளவு தத்ரூபமாக//

  :))

  வாழ்த்துக்கு நன்றி விஜயன்.

  ReplyDelete
 29. @@ மகேந்திரன் said...

  //மானிடற்கு ஏற்படும் வலிகளில்
  மிகவும் கொடியது பிரசவ வலி
  அதையே தாங்கும் பெண்கள்
  எத்துன்பத்தையும் தாங்கும் மனமுடையவர்கள்.//

  பெண்மையின் பெருமை பற்றிய உங்களின் புரிதலுக்கு மகிழ்கிறேன்.

  வாழ்த்தியதுக்கு நன்றி மகேந்திரன்.

  ReplyDelete
 30. முதலில் தங்களுக்கு நட்சத்திர வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்..

  ReplyDelete
 31. வலியில்லாவிட்டால் குழந்தைச் செல்வத்துக்கு மதிப்பில்லாமல் போயிருக்கும் தோழி..

  இவ்வளவு வலியிருக்கும்போதே வாழ வழியில்லாதவர்கள் குழந்தையைக் குப்பைத்தொட்டியில் போட்டுச்செல்லும் அவலம் இன்னும் தானே உள்ளது...

  எனக்குக் கடவுள் நம்பிக்கை எல்லாம் கிடையாது..

  என்னைக் கேட்டால் குழந்தையை ஈன்றெடுக்கும் பெண்தான் கடவுள் என்பேன்..

  இன்னொரு நோக்கும் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்..

  பெண்களுக்கு மட்டும்தான் வலி
  ஆண்களுக்கு எந்த வலியும் இல்லை..

  என்ற எண்ணமும் உள்ளது..

  உடல் வலியைக்கூடத் தாங்கிக்கொள்ளமுடியும்.

  மன வலி அதைவிடக் கொடியது..
  குழந்தை பெற பெண் உடலால் போராடிக் கொண்டிருக்கும்போது..

  உண்மையான காதல் கொண்ட எந்த ஆணும் மனதால் போரடிக் கொண்டுதான் இருப்பான் என்பதையும் நாம் உணரவேண்டும்..

  ReplyDelete
 32. வாழ்த்துக்கள்.தொடர்ந்து அசத்துங்க...

  ReplyDelete
 33. வாழ்த்துக்கள் கௌசி.
  தொடர்ந்து வருகிறோம் .

  ReplyDelete
 34. an open statement by a women. I salute you and all womens.

  ReplyDelete
 35. நட்சத்திரப்பதிவர் ஆனதற்கு வாழ்த்துக்கள்.

  பிரஸவம் என்ற பெண்களுக்கான மறுபிறவியைப் பற்றி வெகு அழகாக, தன் மனைவி கண்ணெதிரில் கஷ்டப்படுவதை ஒரு ஆணுக்கு உணர்த்துவது போல எழுதியுள்ளீர்கள்.

  தன் கண்ணெதிரில் தன் குழந்தையின் பிஞ்சு முகத்தைக் காணும்போது, அதை அரவணைக்கும்போது, அதற்குப்பால் பால் புகட்டி மகிழும் போது, அதற்காக தான் பட்ட கஷ்டமெல்லாம் பறந்தோடி விடும்படியாக அல்லவா
  இயற்கை வைத்துள்ளது.

  பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள். vgk

  [வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசங்கள் என்ற கதையின் ஓர் பகுதியில் இதுபோல மிகச்சிறப்பாக ஒரு பெண்ணின் பிரஸவத்தைப்பற்றி எழுதியிருப்பார்.

  கதைப்படி அந்தப்பெண்ணுக்கு அருகில் உதவிக்கு யாருமே கிடையாது. அது ஒரு காட்டுப்பகுதி வேறு.

  ஒரு ஆண் எவ்வாறு இவ்வளவு தத்ரூபமாக அதைப்பற்றி எழுத முடிகிறது என்று வியந்து போனேன். முடிந்தால் படித்துப்பாருங்கள்]

  ReplyDelete
 36. தமிழ்மணத்தில் தங்களுக்கு 10 out of 10 போடும் வாய்ப்பு எனக்கு இன்று கிடைத்ததற்கு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். vgk

  ReplyDelete
 37. நட்சத்திர வாழ்த்துகள்!

  ReplyDelete
 38. அந்த வலி எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்க்க முயற்சித்திருக்கிறேன், என் மனைவியிடம் கேட்பேன்.. இது வரை பதில் கிடைத்ததில்லை, கற்பனையிலும் உதித்ததில்லை

  ReplyDelete
 39. பிரசவ வனலியை அப்படியே படம் பிடித்துக் காட்டிய பதிவின் இறுதியில் "கடவுள் வரம் கொடுத்தால் மீண்டும் பெண்ணாகவே பிறப்பிக்க வேண்டுவேன்" என்று எழுதி அசத்திவிட்டீர்களே! நட்சத்திர அந்தஸ்து பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 40. நேரில் ஒரு பிரசவம் பார்த்த அனுபவம் தங்கள் பதிவை படித்ததிலிருந்து

  நட்சத்திர பதிவிற்கு வாழ்த்துக்கள் சகோதரி

  த.ம 12

  ReplyDelete
 41. தமிழ்மண நட்சத்திரமாக தேர்ந்தேடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 42. அருமையா அனுபவிச்சு எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 43. தமிழ்மண நட்சத்திரமாக தேர்ந்தேடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள்...வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள்....

  ReplyDelete
 44. பெண் என்பவள் ஒரு மகத்தான சக்தி. அவளை போற்றி பாதுகாத்தல் வேண்டும். அருமை உங்கள் கட்டுரை.

  ReplyDelete
 45. @@ முனைவர்.இரா.குணசீலன் said...

  //பெண்களுக்கு மட்டும்தான் வலி
  ஆண்களுக்கு எந்த வலியும் இல்லை..//

  கண்டிப்பாக மனைவி வலி அனுபவிக்கும் அதே நேரம் அக் கணவனும் மனத்தால் வலியை அனுபவிப்பான்/உணருவான்.

  நான் உள்ளே கதறிய அதே நேரம் என் கணவர் கிறிஸ்துவராக இருந்தும் நான் இந்து என்பதால் ஹாஸ்பிடல் அருகில் இருக்கும் இந்து கோவிலுக்கு சென்று, "(எனக்கு பிடித்த) திருத்தணி முருகன் கோவிலுக்கு என் மனைவியையும் குழந்தையையும் அழைத்து வருகிறேன் நல்லபடியாக பிரசவம் நடக்க துணை புரியுங்கள் கடவுளே" என்று கண்ணீருடன் வேண்டுதல் செய்து இருக்கிறார். உறவினர் ஒருவர் என்னிடம் , உன் கணவன் இப்படி அழுது நான் பார்த்ததில்லை என்று கூறினார்.

  என் கணவன் எத்தகைய வலியை அனுபவித்தார் என்பதை என்னால் அன்று புரிந்துகொள்ள முடிந்தது. தாய்மையை பற்றி சொல்லும் பதிவு என்பதால் என் கணவரை பற்றி சொல்ல இயலவில்லை.

  அதை சொல்ல ஒரு சந்தர்ப்பம் கொடுத்த உங்களுக்கு என் நன்றிகள்.

  ReplyDelete
 46. @@ passerby...

  //Excellent anti-climax //

  :)) thank u for coming.

  ReplyDelete
 47. @@ asiya omar...


  நன்றி தோழி.  @@ angelin...

  நன்றி தோழி.  @@ Siva...

  நன்றி சிவா.

  ReplyDelete
 48. @@ வை.கோபாலகிருஷ்ணன் said...

  //ஒரு ஆண் எவ்வாறு இவ்வளவு தத்ரூபமாக அதைப்பற்றி எழுத முடிகிறது என்று வியந்து போனேன். முடிந்தால் படித்துப்பாருங்கள்]//

  இதன் சில பகுதிகள் படித்து மிக வியந்திருக்கிறேன். நீங்கள் குறிப்பிட்ட பகுதியை மீண்டும் ஒரு முறை நிச்சயம் படிக்கிறேன்.

  பதிவை பற்றிய மிக ஆழமான கருத்துக்களை, உங்கள் உணர்வுகளை பகிர்ந்தமைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்.

  ReplyDelete
 49. @@ ஷைலஜா...

  நன்றி தோழி.  @@ suryajeeva said...

  //இது வரை பதில் கிடைத்ததில்லை, கற்பனையிலும் உதித்ததில்லை//

  இதை தெரிந்து கொள்ள விரும்பும் உங்கள் உள்ளம் எண்ணி வியக்கிறேன் சூர்யா.  @@ !* வேடந்தாங்கல் - கருன் *!...

  நன்றிகள்.  @@ வியபதி...

  நன்றி.  @@ M.R...

  நன்றி.

  ReplyDelete
 50. @@ "என் ராஜபாட்டை"- ராஜா...

  நன்றிகள்.  @@ rufina rajkumar...

  நன்றிகள் அக்கா  @@ Shiva...

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.  @@ Starjan ( ஸ்டார்ஜன் )...

  வாழ்த்துக்கு நன்றி நன்றி நன்றி. :))

  ReplyDelete
 51. தமிழ் மணம் நட்சத்திரத்துக்கு எனது வாழ்த்துக்கள்.!

  ReplyDelete
 52. I don't comment much but I have to comment this article.
  All men who read this article would feel the labor time pain..
  And a sweet end tells us,
  "No love is better than Motherly love.."
  Thanks

  ReplyDelete
 53. நட்சத்திரமாய் ஜொலிக்க வாழ்த்துகள் கௌசி.கடைசியாகச் சொன்னாலும் மனதாரச் சொல்கிறேன்.ஆரம்பப் பதிவே அருமை!

  ReplyDelete
 54. நட்சத்திர வாழ்த்து(க்)கள் கெளசல்யா!!

  ReplyDelete
 55. தமிழ் மணம் நட்சத்திரத்துக்கு எனது வாழ்த்துக்கள்....!

  ReplyDelete
 56. @@ !♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! ...

  நன்றி தோழி.  @@ Dhans...

  thank u
  @@ ஹேமா ...

  நன்றி ஹேமா
  @@ துளசி கோபால்...

  நன்றிகள்.  @@ nellai ram...

  நன்றி.

  ReplyDelete
 57. நட்சத்திர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 58. "அழுதழுதும் பிள்ளையை அவள் தான் பெறவேண்டும்"....பெண்கள் வேதனையும், பின் ஏற்படும் மகிழ்ச்சியையும்
  அனுபவரீதியாக உணர்த்தியுள்ளீர்கள்.

  ReplyDelete
 59. புரிதலுக்கு மகிழ்ச்சி தோழி..

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...