புதன், ஏப்ரல் 6

PM 2:00
40



இன்னும் சில தினங்களில் தேர்தல்
வீதிக்கு வீதி பிரச்சாரங்கள் 
வறட்டு பேச்சுக்கள் 
செல்லரித்துப்போன அறிக்கைகள்
திரைக்கு பின் நடித்தவர்கள் 
இன்று மக்கள் முன்.....!!
வாக்காளன் ஏமாளி அதிலும் தமிழன் 
ஏமாளிகளின் தலைவன் !
அரங்கேறும் நாடகங்கள் ஒரு பக்கம் 
விமர்சிக்கும் பண்பாளர்கள் மற்றொரு பக்கம் !
காரசார விவாதங்கள் நடந்தென்ன லாபம்
முடிவு ஊழலுக்கு சாதகம் தான் !!

அரசியல் என்றாலே ஊழல் என்றாகிவிட்டது...நம்மில் பலருக்கும், நடப்பவை அனைத்தையும்  பார்க்கும்போது வெறுப்பும், எரிச்சலும் வருவது நியாயம் தான். ஆனால் இவனுக்கு வாக்களிக்காதே , அவனுக்கு வாக்களிக்காதே என்றும் எனக்கு வாக்களிக்க மனம் இல்லை என்றும் சொல்வதால் எதையும், யாரையும்  தடுத்து நிறுத்த இயலுமா நம்மால் ? முடியாது..... நடப்பது நடந்தே தீரும், நான் வாக்கு போடவில்லை என்றால் மற்றொருவன்.....! எப்படியும் கிழக்கில் சூரியன் உதித்தே தீரும் , மாற்ற இயலுமா ?? 

இந்த பதிவுலகம் முதல் தெருவோர டீக் கடை பெஞ்சு வரை திரும்பும் திசை எல்லாம் வீண் வாதங்கள், புலம்பல்கள், சாடல்கள், தனிமனித தாக்குதல்கள் !! இந்த ஜன சமுத்திரத்தில் இருந்துகொண்டுத் துப்பினால் அது நம் மீதும் விழும் என்பதை மறந்தே போனோம்.....?! 

இருக்கும் கட்சிகள் அனைத்தையும் குறை சொல்லிக்கொண்டே இருந்தால் என்ன மாற்றம் வந்து விடும்...? பேசி பேசி வீணாய் போவதுதான் தமிழனின் தலை எழுத்தா ? அதை தவிர தமிழன் மூளை வேறு ஒன்றையும் சிந்திக்காதா ?? வெட்டிப் பேச்சினால் எதை சாதிக்கமுடியும் ? ஆனால் நாம் நினைத்தால் முயன்றால் நிச்சயம் மாற்றம் கொண்டு வர முடியும்.....

எவ்வாறு ??

இங்கே தவறுகள் தட்டிக் கொடுக்கப்படுகின்றன, யாரால் மக்களால்...?!
'நமக்கென்ன' என்கிற அலட்சிய மனப்பான்மை கொண்ட நமக்கு  விமர்சிக்க மட்டும் என்ன தகுதி இருக்கிறது ?! 

அரசியல்வாதிகளை வளர்த்துவிட்டது மக்கள்..... 
அவர்களின் ஊழலை கண்டுகொள்ளாதது மக்கள்.....
ஊழல் கண்டதும் வேர் அறுக்காதது யார் தவறு ?

தேர்தலின்  போது மட்டும் குரல் கொடுப்பவனாகவும், தேர்தல் முடிந்ததும் சொந்த வேலை பார்க்க சென்றுவிடும் சராசரியாக இனியும் இருக்கணுமா?? யோசியுங்கள் !!

ஆட்சிக்கு வருவது எந்த கட்சியாகவும் இருந்துவிட்டு போகட்டும்.....! ஆனால் அவர்கள் ஆட்சிக்கு வந்த பின், யார் தவறு செய்தாலும் தவறுகளை தட்டி கேட்கவேண்டும்.உதாரணத்துக்கு சொல்லணும் என்றால்  எழுச்சியாக பேசுபவர்கள்,பத்திரிக்கைகளில், இணையத்தில் எழுதுபவர்கள் எங்கே தவறு என்றாலும் துணிந்து குரல் கொடுங்கள். அரசியல்வாதி, அரசு அதிகாரி யார் நேர்மைக்கு மாறாக செயல்பட்டாலும் எதிர்த்து கேளுங்கள். அரசாங்க அலுவலகத்தில் லஞ்சம் கேட்கபடுகிறதா, கொடுக்காதீர்கள், அதற்கும் மேலிடம் சென்று புகார் அளியுங்கள், ஒருவேளை அங்கேயும் நீங்கள் கண்டுகொள்ளபடவில்லையா ?

சோர்ந்து போகாதீர்கள், அதே அலுவலக வாசலில் கோஷம் போடுங்கள்.....உங்களை போன்ற நிலையில் பலரும் அங்கே நின்று கொண்டு இருக்கலாம்.....அவர்கள் வருவார்கள் உங்கள் துணைக்கு, ஒரு குரல் இரண்டாகும் , இரண்டு மூன்றாகும் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க நீங்கள் நிச்சயம் மேலிடத்தால் கவனிக்க படுவீர்கள், நீங்கள் சென்ற காரியம் தாமதமானாலும், எல்லோராலும் இந்த சம்பவம் கவனிக்கப்படும், முக்கியமாக மீடியாக்களால்.....! ஒரு இடத்தில் மட்டும் நடைபெற்றால் சாதாரண செய்தி, அதே செயல் பல இடங்களிலும் தொடர்ந்து நடைபெற்றால் யோசித்து பாருங்கள்...இந்த விழிப்புணர்ச்சி எத்தகைய மாற்றத்தை கொண்டுவரும் என்று...?!!

ஒரே நாளில் எதுவும் மாறிவிடாது.....ஆனால் நல்ல மாற்றங்கள் இப்போதைக்கு அவசியத்தேவை. அத்தகைய மாற்றங்கள் அரசியல்வாதிகளால் அல்ல மக்களால் என்னும் போது விரைவில் நடக்கும். நம் முன்னோர்கள் நாட்டை குறை சொல்லிக்கொண்டு வீட்டிற்குள் அமர்ந்திருந்தால் நமக்கு இந்த சுதந்திரம் கிடைத்திருக்குமா ? 

'வெள்ளையனே வெளியேறு' என்றார்கள் வெளியேறினார்கள் வெள்ளையர்கள் ! இன்று கொள்ளையனே வெளியேறு என்று சொல்ல கூடிய தைரியம் நமக்கு வேண்டும் !!    

இது சரியில்லை, அது சரியில்லை, நாடா இது என்று வெட்டிக்கதை பேசுபவர்கள் முதலில் அப்படி பேசுவதை நிறுத்துங்கள், உங்கள் வீரத்தை செயலில் காட்டுங்கள்...இது உன் தேசம் , உன் மக்கள், அரசியல் தலைவிதியை மாற்றி எழுத வை, உன்னால் முடியும்.....இனி மக்களை கண்டு அரசியல்வாதியும், அதிகாரிகளும் அஞ்ச வேண்டும்...நம் வரி பணத்தில் சம்பளம் பெறுபவர்கள் அவர்கள்...நாமே எஜமானர்கள் நினைவில் வைப்போம் இன்றே.....

நாட்டை மாற்று அதற்கு முன் நீ மாறு.................

நாட்டை குறை சொல்வதை விடுத்து
நம்மை சீர்தூக்கி பார்ப்போம் முதலில் !

அயலான் கண்ணில் துரும்பை பார்க்கும் முன்
உன் கண்ணில் இருக்கும் உத்ரம்
நினைவுக்கு வரட்டும் !

எங்கும் ஊழல், விமர்சிக்கும் முன் 
மேசைக்கடியில் நேற்று நீ கை நீட்டியது
நினைவுக்கு வரட்டும் !

யாரோ துப்பிய எச்சிலை அருவருக்கும்முன்
சற்றுமுன் நீ துப்பியது
நினைவுக்கு வரட்டும் !

தனிநபர் ஒவ்வொருவரும் நம்மை முதலில் திருத்திகொள்வோம், மாற்றம் நம் வீட்டில் இருந்து தொடங்கவேண்டும்.....

சொல்லாதீர்கள்...!!

வேற்றுகிரகவாசி போல சந்திரனில் இருந்து அப்போதுதான் இறங்கின மாதிரி படு மட்டமா பிறந்த நாட்டை விமர்சிப்பது எந்த விதத்தில் நியாயம் ? குறைகளை விமர்சியுங்கள் ஆனால் அத்துடன் நின்று விடாதீர்கள் தீர்வு ஒன்றையும் சொல்லுங்கள். தீர்வு சொல்ல இயலவில்லையெனில், குறைகளை சொல்வதையும் விட்டுவிடுங்க.....குறைகளை மட்டுமே தொடர்ந்து ஒருத்தர் சொல்லும்போது அது பலரின் மனதிலும் வலு கட்டாயமாக போய் உட்கார்ந்து கொள்கிறது....முடிவில் பலரின் மனதிலும் நாட்டை பற்றிய தவறான எண்ணமே மிஞ்சுகிறது...இந்நிலை நாளைய தலைமுறையினருக்கு நல்லதில்லையே...ஊழல் அற்ற ஒரு நல்ல நாட்டை நம் வாரிசுகளுக்கு விட்டு செல்வோம்...பிற நாடுகளை உதாரணம் காட்டுவது இனியும் இருக்காது அவர்கள் நம்மை பார்த்து கற்றுக் கொள்ளட்டும்.....!

ஊழல் நிறைந்த தேசத்தில் வாழ்வது தவறில்லை, அதை சகித்துக்கொண்டு போவது மாபெரும் தவறு !!

நாடு வல்லரசு ஆவது ஒரு புறம் இருக்கட்டும் முதலில் நல்லரசாக்க 'மக்கள்' நாம் முயற்சி மேற்கொள்ளுவோம். 

வாழ்க்கை ஒருமுறை, அதை அர்த்தத்துடன் வாழ்ந்து முடிப்போம் !!

வாழ்க பாரதம் ! வாழிய எம்மக்கள் !! 


பின்குறிப்பு :

ஊழலற்ற இந்தியா சாத்தியமா ? என்ற கேள்வி எனக்குள் எழுந்ததால் எழுதப்பட்ட பதிவு இது. முழுதும் களையப்பட இயலாது என்றாலும் முயற்சி செய்யலாமே என்ற ஒரு ஆசை என்போல் எல்லோர் மனதிலும் இருக்கும். இந்த தலைப்பில் விவரம் நன்கு தெரிந்த மற்ற நண்பர்கள் பதிவுகள் எழுதினால் தெரியாத பல விசயங்கள் தெரிய வரும். நாட்டின் மேல் அக்கறையுள்ள/இல்லாத பலருக்கும் ஒரு விழிப்புணர்வாக இருக்கும் . இது என் வேண்டுகோள். இயன்றவர்கள் எழுதுங்களேன்......


இந்த கேள்விக்கு பதில் இதுதான் என்பதுபோல் அன்னா ஹசாரே அவர்களின் உண்ணாவிரத போராட்டம் பற்றி எண்ண தோன்றுகிறது...அவரை பற்றி நண்பர் அருண்பிரசாத் அவர்கள் ஒரு பதிவு போட்டு உள்ளார். அவசியம் அதை படிக்க வேண்டுகிறேன்....




கழுகு - என்ன படிக்கலாம்...? +2 மாணவர்களுக்கான ஒரு வழிகாட்டும் தொடர்     


Tweet

40 கருத்துகள்:

  1. >>ஊழல் நிறைந்த தேசத்தில் வாழ்வது தவறில்லை, அதை சகித்துக்கொண்டு போவது மாபெரும் தவறு !!

    கலக்கல் பஞ்ச்

    பதிலளிநீக்கு
  2. >>
    இந்த பதிவுலகம் முதல் தெருவோர டீக் கடை பெஞ்சு வரை திரும்பும் திசை எல்லாம் வீண் வாதங்கள், புலம்பல்கள், சாடல்கள், தனிமனித தாக்குதல்கள் !! இந்த ஜன சமுத்திரத்தில் இருந்துகொண்டுத் துப்பினால் அது நம் மீதும் விழும் என்பதை மறந்தே போனோம்.....?!

    தமிழனின் தலை எழுத்து..

    பதிலளிநீக்கு
  3. நல்லொதொரு சிந்தனை... சந்திக்க வைத்த பதிவு...நல்லொதொரு முயற்சி...

    பதிலளிநீக்கு
  4. விழிப்புணர்ச்சி ஊட்டும் பதிவு அக்கா

    பதிலளிநீக்கு
  5. ஹி ..ஹி ..கமெண்ட்ஸ் வெண்டாம் ன்னு நினைச்சேன் ..இடுந்தாலும் கலைஞர் ஸ்டைல் லில ஒரே ஒரு கமெண்ட்ஸ் ..

    உங்க வீட்டுலையா திருடினான் ...!!!

    பதிலளிநீக்கு
  6. நம்ம ஊர்ப் பெரியவர் நாற்காலியை விடவே மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்...ஸ்பெக்ட்ரம்,கலைஞர் தொலக்காட்சிக்கும் எனக்கும் சம்பந்தமேயில்லைன்னு சத்தியம் கூட செய்கிறார்.

    இன்னுமொரு பெரியவர் அண்ணா ஹசரே உழலுக்கு எதிராக குரல் கொடுக்கவும் செய்கிறார்.

    ஆக இந்தியா 50/50 மட்டுமே தற்போதைக்கு.இரும்பை கொஞ்சம் ஓங்கி அடித்தால் விகிதாச்சாரம் மாற சந்தர்ப்பம் இருக்குது.

    பதிலளிநீக்கு
  7. அநியாயத்தை பணிவா எதிர்த்ததினால எனக்கு காது போச்சுங்கோ

    பதிலளிநீக்கு
  8. அநியாயத்தை பணிவா கேட்டதால் எனக்கு
    காது போச்சுதுங்க

    பதிலளிநீக்கு
  9. ஆக்கப் பார்வை. பாராட்டுகள்.
    'corruption less' என்பது சாத்திய இலக்கு. அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் corruption free நிலை கிடைக்கலாம். சாதாரண பிரஜையின் தினசரி வாழ்வில் ஊழல் பாதிக்காத நிலையே போதும். ஓரிரவிலோ அல்லது ஒரு தேர்தல் நேரப் பிரசாரத்தாலோ வந்து விடாது - தொடர்ந்த பிரசாரம் தேவை.
    திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. என்றாலும், திருட்டுக்கு ஆளாக மாட்டேன் என்று நினைத்தோமானால், நினைத்து நடந்தோமானால், கொஞ்சம் முன்னேற வாய்ப்பு இருக்கிறது. ஊழல் அலையாக வரும் பொழுது நனையாமல் நகர்வதற்கு முயற்சி, வேகம், தொலைநோக்கு, தன்னம்பிக்கை எல்லாமும் வேண்டும். பொதுமக்களில் 90%க்கு மேல் இந்த நான்கில் மூன்று குறை என்பது என் கணிப்பு.

    பதிலளிநீக்கு
  10. உங்கள் ஆதங்கமும் அக்கறையும் கோபமும் நியாயமானதே....

    பதிலளிநீக்கு
  11. தங்கள் நம்பிக்கைகள் நடந்தேற வேண்டும்.ந்ல்ல கருத்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. //எப்படியும் கிழக்கில் சூரியன் உதித்தே தீரும் , மாற்ற இயலுமா ?? //

    அப்ப‌ நீங்க‌ திமுக‌ ஆத‌ர‌வாளாரா?

    பதிலளிநீக்கு
  13. //இணையத்தில் எழுதுபவர்கள் எங்கே தவறு என்றாலும் துணிந்து குரல் கொடுங்கள். //

    த‌மிழ் ம‌ண‌த்தில் ஹிட் வாங்க‌லாமுன்னு ப‌திவு போட்டா நீங்க‌ த‌மிழ‌க‌ அர‌சிட‌ம் ஹிட் வாங்க‌ வைப்பீங்க‌ போல‌ இருக்கு

    //எல்லோராலும் இந்த சம்பவம் கவனிக்கப்படும், முக்கியமாக மீடியாக்களால்.....!//

    த‌மிழ் ம‌க்க‌ள் இல‌ங்கையில் கொன்று குவிக்க‌ப்ப‌ட்ட‌ ‌போது த‌மிழ‌க‌ பெண்க‌ள் அத்த‌னை பேர் எத்த‌னை நாட்க‌ள் தொட‌ர்ந்து உண்ணாவிர‌த‌ம் இருந்தார்க‌ள்? எந்த‌ மீடியாவ‌து க‌ண்டு கொண்ட‌தா? அர‌சிய‌ல் சாக்க‌டை என்றால், ந‌ம் மீடியாக்க‌ள் அதில் வ‌சிக்கும் புழுக்க‌ள்.

    பதிலளிநீக்கு
  14. க‌விதையின் ஒவ்வொரு வ‌ரியும் சாட்டைய‌டி.

    //குறைகளை விமர்சியுங்கள் ஆனால் அத்துடன் நின்று விடாதீர்கள் தீர்வு ஒன்றையும் சொல்லுங்கள். //

    தீர்வு யோசிக்கிறேன்,..அடுத்த‌ ப‌திவுக்கு ந‌ல்ல‌ த‌லைப்பு கிடைச்சிடுச்சு

    உங்க‌ள் ப‌திவின் ஒவ்வொரு வ‌ரிக்கும் என் வ‌ந்த‌னங்க‌ள்

    பதிலளிநீக்கு
  15. நல்ல விழிப்புணர்ச்சி கட்டுரை...

    பதிலளிநீக்கு
  16. நல்ல விழிப்புணர்ச்சி கட்டுரை...

    பதிலளிநீக்கு
  17. கௌசல்யா மேடம்...

    மிகப்பெரிய அளவில் ஒரு புரட்சி நடந்தால் ஒழிய இந்த ஊழலற்ற அரசு இந்தியாவில் அமைவதற்கு வாய்ப்பே இல்லை என்று தோன்றுகிறது...

    சுயநலமற்ற ஒரு தலைவர் வந்து, பெரும்பான்மையான மக்கள் அவரை ஆதரித்து, பின் ஒரு ஆட்சி அமைந்தால் சாத்தியம்..

    பதிலளிநீக்கு
  18. ஊழல் நிறைந்த தேசத்தில் வாழ்வது தவறில்லை, அதை சகித்துக்கொண்டு போவது மாபெரும் தவறு !!

    உங்கள் ஆதங்கம் நியாயமானதே . இதை மாற்ற முடியாது இல்லை இது மாறாது என்று நாமே தாழ்ந்து போனதும் ஒரு காரணம் இந்நிலைக்கு

    பதிலளிநீக்கு
  19. @@ சி.பி.செந்தில்குமார்...

    //முதல் நம்பிக்கை//

    மகிழ்கிறேன் செந்தில்குமார். இந்த நம்பிக்கைகூட இல்லாம இருக்கிறவங்களை பார்கிறபோ வருத்தமா இருக்கு.

    நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  20. @@ சிநேகிதி...

    புரிதலுக்கு நன்றி தோழி.



    @@ சசிகுமார்...

    நன்றி சசி.

    பதிலளிநீக்கு
  21. @@ இம்சைஅரசன் பாபு...

    ஏன் இப்படி ?? :)

    ஆனா நீங்க கேட்டதும் சரிதான்...நம்ம வீடு நல்லா இருந்தா போதும் என்ற மனப்பான்மை, சுயநலம் தானே பரவி கிடக்கிறது...

    நன்றி பாபு.

    பதிலளிநீக்கு
  22. @@ ராஜ நடராஜன் said...

    //நம்ம ஊர்ப் பெரியவர் நாற்காலியை விடவே மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்...//

    அரசியலில் ஓய்வு பெறும் வயது என்று ஒன்றை நிர்ணயித்தால் என்ன என்று கேள்வி எழுகிறது...

    //ஸ்பெக்ட்ரம்,கலைஞர் தொலக்காட்சிக்கும் எனக்கும் சம்பந்தமேயில்லைன்னு சத்தியம் கூட செய்கிறார்.//

    கேட்கிறவங்க தலையாட்டிகளாக இருந்தால் எதையும் சொல்வாங்க...

    //இன்னுமொரு பெரியவர் அண்ணா ஹசரே உழலுக்கு எதிராக குரல் கொடுக்கவும் செய்கிறார்.//

    வயதான காலத்தில் அவருக்கு இருக்கும் தீரமும், வீரமும் நம் இளைஞர்களுக்கு இன்னும் வரவில்லையே ! அவரை பார்த்தாவது உணர்வு வந்தால் நல்லது.

    //ஆக இந்தியா 50/50 மட்டுமே தற்போதைக்கு.இரும்பை கொஞ்சம் ஓங்கி அடித்தால் விகிதாச்சாரம் மாற சந்தர்ப்பம் இருக்குது.//

    இந்தியா 50/50 இது மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது...நிச்சயம் நல்ல மாற்றம் வரும் நம்புவோம்...

    உங்களின் கருத்திற்கு மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  23. @@ வலிபோக்கன்...

    //அநியாயத்தை பணிவா கேட்டதால் எனக்கு
    காது போச்சுதுங்க//

    'பணிவா எதிர்த்து கேட்டதால்' என்று எடுத்துகொள்ளட்டுமா ?? காது மட்டும் தானே என்று சாதாரணமா சொல்லிவிடலாம் ஆனால் உங்க வலி உணரமுடிகிறது...நல்லது நடக்கணும் என்றால் சில இழப்புகள் என்பது விதி போல !

    முதல் வருகைக்கு நன்றிங்க

    பதிலளிநீக்கு
  24. @@ அப்பாதுரை said...

    //'corruption less' என்பது சாத்திய இலக்கு. அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் corruption free நிலை கிடைக்கலாம். சாதாரண பிரஜையின் தினசரி வாழ்வில் ஊழல் பாதிக்காத நிலையே போதும்.//

    ம்...புரிகிறது

    //ஓரிரவிலோ அல்லது ஒரு தேர்தல் நேரப் பிரசாரத்தாலோ வந்து விடாது - தொடர்ந்த பிரசாரம் தேவை.//

    ஆமாம் சரிதான்.

    //திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. என்றாலும், திருட்டுக்கு ஆளாக மாட்டேன் என்று நினைத்தோமானால், நினைத்து நடந்தோமானால், கொஞ்சம் முன்னேற வாய்ப்பு இருக்கிறது.//

    லஞ்சம் கொடுக்காமலும், வாங்காமலும் அது போன்ற சந்தர்பங்களை தவிர்ப்பதும் அவசியம். சுயகட்டுப்பாடு வேண்டும்.

    //ஊழல் அலையாக வரும் பொழுது நனையாமல் நகர்வதற்கு முயற்சி, வேகம், தொலைநோக்கு, தன்னம்பிக்கை எல்லாமும் வேண்டும். பொதுமக்களில் 90%க்கு மேல் இந்த நான்கில் மூன்று குறை என்பது என் கணிப்பு.//

    கொஞ்சம் முயன்றால் குறைகளை நிறையாக முடியும்...மக்கள் முயலனுமே

    எப்போதும் போல் உங்களின் கருத்துக்களின் இருந்து பாடம் கற்று கொள்கிறேன் சகோ. நன்றிகள்

    பதிலளிநீக்கு
  25. @@ யாதவன் said...

    //காமெடி//

    எதை காமெடி சொல்றீங்க ? பதிவையா என் கேள்வியையா ? :))

    கேள்வி என்று எடுத்துக்கிறேன்...தன்னம்பிக்கை இல்லாதவர்கள் சொல்லும் வார்த்தை இது யாதவன். ஏன் சாத்தியம் இல்லை ? அதற்க்கு பல வருந்ததகுந்த காரணங்கள் இருக்கலாம், ஒரு நாள் அவை அனைத்தும் களையப்படும்...ஊழலற்ற இந்தியா சாத்தியம் ஆகலாம்...

    சுதந்திரம் வெறும் கனவு என்று அன்றைய மக்கள் எண்ணி இருந்தார்கள் என்றால் விடுதலை சாத்தியம் இல்லை...வெளிநாட்டு காரர்களிடம் இருந்து நம் நாட்டை காப்பாற்ற முடிந்தது என்றால் இங்கே இருக்கும் ஊழல்வாதிகளிடம் இருந்து காப்பாற்ற முடியாதா ? முடியும். காலம் ஆகும் அதுவரை பொறுப்போம்.

    இனியும் இந்த கிண்டலும் கேலியும் நமக்கு தேவை தானா யாதவன்??

    பதிலளிநீக்கு
  26. @@ Chitra...

    நன்றி சித்ரா. உங்களின் இன்றைய அரசியல் போஸ்ட் சூப்பர் தோழி.

    பதிலளிநீக்கு
  27. @@ FOOD said...

    //தங்கள் நம்பிக்கைகள் நடந்தேற வேண்டும்.//

    நடக்கும் அண்ணா. அரசாங்க அலுவலகம் என்றாலே ஊழல் மலிந்தது என்பதை மாற்றி நடைமுறையில் அதிரடியாக செயல் படுத்திகொண்டிருக்கும் உங்களை போன்ற நேர்மையான அதிகாரிகள் இருக்கும் போது என் நம்பிக்கை நிச்சயம் நிறைவேறும் அண்ணா.

    பதிலளிநீக்கு
  28. @@ jothi said...

    //அப்ப‌ நீங்க‌ திமுக‌ ஆத‌ர‌வாளாரா?//

    அடடா சகோ...என்னாது இது ? நான் சொன்னதுக்கு இப்படி ஒரு அர்த்தம் வருகிறதா...? நான் நிஜ சூரியனை சொன்னேன் :))

    //த‌மிழ் ம‌ண‌த்தில் ஹிட் வாங்க‌லாமுன்னு ப‌திவு போட்டா நீங்க‌ த‌மிழ‌க‌ அர‌சிட‌ம் ஹிட் வாங்க‌ வைப்பீங்க‌ போல‌ இருக்கு//

    மறுபடியும் ஹிட்டா ? சரியா போச்சு...ஆட்டோ அனுப்புற ஐடியாவுல இருக்கிறதா இப்ப தகவல் வந்திருக்கு ! :))

    //எந்த‌ மீடியாவ‌து க‌ண்டு கொண்ட‌தா? அர‌சிய‌ல் சாக்க‌டை என்றால், ந‌ம் மீடியாக்க‌ள் அதில் வ‌சிக்கும் புழுக்க‌ள்.//

    இப்ப இருக்கிற மீடியாக்கள் பலவும் அரசியல்வாதிகளின் சொந்தமாக இருக்கிறது...அதனால் சொல்றீங்க...ஆனாலும் அதில் ஒன்று கூடவா மக்களுக்கு உதவாது...? இணையம் என்கிற மகாசக்தி இருக்கிறதே...இது ஒன்றே போதுமே...

    கருத்திற்கும், புரிதலுக்கும் நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  29. @@ R.Gopi said...

    //மிகப்பெரிய அளவில் ஒரு புரட்சி நடந்தால் ஒழிய இந்த ஊழலற்ற அரசு இந்தியாவில் அமைவதற்கு வாய்ப்பே இல்லை என்று தோன்றுகிறது...//

    விரைவில் வரும் என்றே தோன்றுகிறது...அண்ணா ஹசாரே அவர்கள் அமைதி வழியில் தொடங்கி இருக்கிறார்...இனி இது போன்று தொடரலாம்...

    //சுயநலமற்ற ஒரு தலைவர் வந்து, பெரும்பான்மையான மக்கள் அவரை ஆதரித்து, பின் ஒரு ஆட்சி அமைந்தால் சாத்தியம்..//

    அத்துடன் மக்கள் நினைத்தால் அவர்களின் ஒத்துழைப்பு இதுவும் இருக்கவேண்டும்.

    கருத்திற்கு நன்றி கோபி.

    பதிலளிநீக்கு
  30. @@ பூங்குழலி said...

    //உங்கள் ஆதங்கம் நியாயமானதே . இதை மாற்ற முடியாது இல்லை இது மாறாது என்று நாமே தாழ்ந்து போனதும் ஒரு காரணம் இந்நிலைக்கு//

    உண்மை. 'முடியாது'தன்னம்பிக்கை இல்லாதவர்கள் சொல்லும் வார்த்தை இது. நம்மிடம் இருக்கும் சக்தி தெரியாமல் தாழ்த்தி கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். முயன்றால் நிச்சயம் முடியும்...சாத்தியப்படும். தேவை நம்பிக்கை.

    உங்களின் முதல் வருகை என்று நினைக்கிறேன், மிக்க நன்றி தோழி.

    பதிலளிநீக்கு
  31. @@ thirukkannapurathaan...

    உங்களின் முதல் வருகைக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  32. காந்தியுடை(ய) நாண யத்தை
    காற்றிலே விட்ட கட்சி(கள்)
    காந்தியையும் நாண யத்தில்
    கச்சித மாக அச்சில்
    காந்திமகான் சொல்லிச் செய்துக்
    காட்டிய சத்யப் போரில்
    காந்தியவா(தி) அன்னா பாரீர்
    களத்திலே உதவ வாரீர்
    கண்ணாகப் போற்றும் நாட்டில்
    களவுகள் விரட்ட வேண்டி
    புண்ணாக வளரும் ஊழல்
    புறப்படு மிடத்தில் தோண்டி
    மண்ணோடுப் புதைக்கச் சொன்னா(ரே)
    மக்களைத் திரட்டி அன்னா(ஹஸாரே)
    உண்ணாத அறப்போர் சாட்சி
    உடன்பட வைத்த காட்சி
    ஒற்றுமையாய் உழைத்தால் வெற்றி
    ஒழுங்குடன் வாழ்தல் பெற்றி
    ஒற்றுமையால் கோப்பை வென்றோம்
    ஊழலும் போகு மென்போம்
    கற்றுணர்ந்த பாட மாகும்
    களத்திலே நமது வேகம்
    பற்றுடனேச் செய்வாய் நீயே
    பற்றிடும் பரவும் தீயாய்
    (யாப்பிலக்கணம்: அறுசீர் விருத்தம்:
    காய்ச்சீரும் மாச்சீர் தேமா (அரையடிக்கு)
    விளமுடன் மாச்சீர் தேமா (அரையடிக்கு)

    பதிலளிநீக்கு
  33. காந்தியுடை(ய) நாண யத்தை

    காற்றிலே விட்ட கட்சி(கள்)

    காந்தியையும் நாண யத்தில்

    கச்சித மாக அச்சில்

    காந்திமகான் சொல்லிச் செய்துக்

    காட்டிய சத்யப் போரில்

    காந்தியவா(தி) அன்னா பாரீர்

    களத்திலே உதவ வாரீர்



    கண்ணாகப் போற்றும் நாட்டில்

    களவுகள் விரட்ட வேண்டி

    புண்ணாக வளரும் ஊழல்

    புறப்படு மிடத்தில் தோண்டி

    மண்ணோடுப் புதைக்கச் சொன்னா(ரே)

    மக்களைத் திரட்டி அன்னா(ஹஸாரே)

    உண்ணாத அறப்போர் சாட்சி

    உடன்பட வைத்த காட்சி



    ஒற்றுமையாய் உழைத்தால் வெற்றி

    ஒழுங்குடன் வாழ்தல் பெற்றி

    ஒற்றுமையால் கோப்பை வென்றோம்

    ஊழலும் போகு மென்போம்

    கற்றுணர்ந்த பாட மாகும்

    களத்திலே நமது வேகம்

    பற்றுடனேச் செய்வாய் நீயே

    பற்றிடும் பரவும் தீயாய்



    (யாப்பிலக்கணம்: அறுசீர் விருத்தம்:

    காய்ச்சீரும் மாச்சீர் தேமா (அரையடிக்கு)

    விளமுடன் மாச்சீர் தேமா (அரையடிக்கு)

    பதிலளிநீக்கு
  34. பெயரில்லா8:54 AM, ஜூன் 10, 2011

    வணக்கம் இணையத்தள பொறுப்பாளருக்கு.
    நலமாய் இருப்பீர்கள் என்று எண்ணுகின்றோம்!
    நான் தமிழ்தாய் இணைய ஆசிரியர் மாறன் .

    நாம் உங்களிடம் கேட்கும் விடயம் நாம் எமது தளத்தில் உலக தமிழ் செய்திகளை உடனுக்குடன் தெரிவித்து வருகிறோம்
    எனவே எமது இணையத்தை மக்களுக்கு தெரிய படுத்த உங்களின் தளத்தில் எமது தமிழ்த்தாய்.காம் link ஐ கொடுத்து உதவுமாறு கேட்டு கொள்கிறான்

    நன்றி
    மாறன் .
    http://www.tamilthai.com/

    பதிலளிநீக்கு
  35. அற்புதமான விழிப்புணர்ச்சியூட்டும் பதிவு. உங்கள் எழுத்துப் பணியும்
    மற்ற பணிகளும் பாராட்டப் பட வேண்டியவை. இந்த வலைப்பதிவை
    வலைச்சரத்தில் இணைத்துள்ளேன். நன்றி. :)

    உங்கள் பதிவினை இணைத்த எனது இடுகை:

    http://blogintamil.blogspot.com/2011/12/blog-post_21.html

    பதிலளிநீக்கு
  36. ஊழலற்ற இந்தியாவை காண வேண்டும்.

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...