திங்கள், மார்ச் 28

1:16 PM
17பதிவை படிக்கும் முன் :

தாம்பத்தியம் தொடர்பான 21 பாகங்களில் திருமணம் முதல் கணவன் மனைவி உறவு நிலைகள், பிரச்சனைகள் போன்ற பல விசயங்களை பகிர்ந்திருந்தேன். கடைசி சில பதிவுகள் தாம்பத்தியத்தின் முக்கிய கட்டமான  அந்தரங்கம் எப்படி இருக்கவேண்டும், அங்கே ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்ன, அதை சரி படுத்தி கொள்ள என்ன வழிகள் இருக்கின்றன என்பதை பற்றியவை.....

கடைசி பதிவில் கணவன், மனைவி பாதை மாறுவதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கின்றன என்றும் அதில் அதீத அன்பும் ஒரு காரணம் என்று  எழுதி இருந்தேன், இந்த பதிவு உடலின் மீதான திருப்தியின்மை பற்றியது, சொல்லபோனால் இந்த வார்த்தையே தவறுதான், யாரும் துணையின் உடல் பிடிக்கவில்லை என்று பாதை மாறமாட்டார்கள், அதன் பின்னால் மன ரீதியிலான சலிப்புகள் இருக்கும் என்பது தான் உண்மை. இது என் கருத்து. சலிப்புகள், வெறுப்புகள் ஏற்படாமல் தடுப்பதில் ஒரு வழியினை இங்கே பார்ப்போமே.....      

இருவருக்கும் உடல் அளவில் இருக்கும் வேறுபாடுகள்..

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணதிற்கு வரன் பார்க்கணும் என்று முடிவு செய்ததும் முதலில் கையில் எடுப்பது ஜாதகம். ஜாதகம் பொருந்தி இருந்தால் போதும் கண்ணை மூடி கொண்டு மணம் முடித்து விடுகிறார்கள் (ஒரு சிலர் விதிவிலக்கு)  எனக்கு ஜாதகத்தின் மேல் நம்பிக்கை இல்லை என்று வெளியில் பேசுபவர்கள் கூட கடைசியில் மனதிருப்திக்காக பார்க்காமல் இருப்பது இல்லை.ஆனால் அது மட்டுமே போதாது. திருமணம் முடிக்க போகும் ஆண், பெண் இருவருக்கும் உடல் பொருத்தம் இருக்க வேண்டியது மிக அவசியம். ஒரு பாட்டு கூட உண்டு "ரெட்டை மாட்டு வண்டி வரும்போது நெட்டை குட்டை என்றும் இணையாது.....!"  வண்டி ஓடவே இரண்டு மாட்டின் உடல் பொருத்தம் தேவை படும்போது, இந்த வாழ்க்கை வண்டி ஓட கணவன் மனைவி உடல் பொருத்தம் என்பது மிக அவசியம். (ஒரு சிலர் விதிவிலக்கு)

முன்னாடி எல்லாம் பெண்ணையோ பையனையோ வரன் பிடித்து இருக்கிறதா என்று பெற்றோர்கள் கேட்க மாட்டார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை, இருவரும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்கு என்று சொன்ன பிறகு தான் திருமணமே நடக்கிறது. ஆதலால் தங்கள் மனதிற்கும் தங்கள் உடம்பு அமைப்புக்கும் ஏற்றபடி அமைந்திருக்கிறதா துணை என்று பார்ப்பது மிக அவசியம். பணம், படிப்பு,அழகு,சொத்து, அந்தஸ்து எல்லாம் திருமணத்தின் ஆரம்ப சில வருடங்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சியையும், சமூகத்தில் ஒரு மதிப்பையும் கொடுக்கலாம். ஆனால் வருடம் சில கடந்த பின் ஆணோ பெண்ணோ இருவருக்கும் அது மட்டுமே போதுமானதாக இருப்பது இல்லை. துணைக்கு தன் மீதான கவனம் எந்த அளவில் இருக்கிறது,  தனக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் துணையிடம் இருக்கிறது  என்பதை பொறுத்தே வீட்டிலும் வெளியிலும் அவர்களின் நடவடிக்கைகள் இருக்கும். இச்சூழ் நிலையில் தான் உடல் பற்றிய யோசனைகளும் ஏற்படுகிறது.

உடல் அளவில் பொருத்தமாக  இருக்கிறவர்கள் தங்கள் அந்தரங்க வாழ்விலும் பொருத்தமாக இருப்பாங்க என்று சொல்ல இயலாது. தவிரவும் படுக்கையறையில் உடல் பொருத்தம் அவசியமும் இல்லை. நிறம்,அழகு, உயரம், குள்ளம் மற்றும் அந்தரங்க உடல் அமைப்புகள் இப்படிதான் இருக்கணும் என்று எந்த அளவுகோலும் இல்லை. தன் துணையை   படுக்கையில் உற்சாகமாக வைத்து கொள்ளாதவர் எவ்வளவு அழகாக இருந்தாலும் அங்கே திருப்தி கிடைக்காது . இதை முதலில் பிரச்சனைக்குரிய தம்பதிகள் புரிந்து கொள்ளவேண்டும். அந்தரங்கம் இனிமையாக நீடித்த காலத்திற்கு இருப்பதற்கு துணையின் உடலை திருப்தி செய்யணும், ஆனால் இங்கே திருப்தி என்று சொல்வதின் அர்த்தம் உடலுறவு இல்லை. பின்ன வேறு என்ன ??  தொடர்ந்து படிங்க......

உடலின் மீதான திருப்தியின்மை எப்போது ஏன் எதனால் ??

சில சரி செய்துகொள்ளகூடிய காரணங்கள் உடல் சுத்தமாக வைத்துகொள்ளாமை, அதிகபடியான வியர்வை, உடல் பருமன்/ஒல்லி, மனதிற்கு பிடிக்காத மணம் போன்றவை இருக்கலாம் ஆனால் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் தன் துணையின் அந்தரங்க நடவடிக்கைகள் பிடித்துவிட்டால் இந்த குறைகள் மிக பிடித்தவையாக மாறிவிடக்கூடும் !!

*  ஒரு சில நாட்களில் கணவன்/மனைவி யின் மனநிலை உறவிற்கு ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம். ஒரு சோர்வு,  ஆர்வம் இல்லாமை போன்றவை இருக்கும் போது துணை உறவிற்கு வற்புறுத்தினால் சலிப்பு வரும் நாளடைவில் இதே போன்ற வற்புறுத்தல்கள் தொடர்ந்தால் நிச்சயம் வெறுப்பு அதிகமாகி விரிசலில் கொண்டு போய் விட்டுவிடும். 

*  வேறு சிலருக்கு வேலை, வீடு, குடும்பம் போன்றவற்றினால் மன அழுத்தம் இருக்கலாம். உடல் சம்பந்தப்பட்ட உபாதைகளையும் சட்டை பண்ணாமல் உறவிற்கு அழைத்து அதன் பின் ஏற்படக்கூடிய உறவில் நிச்சயம் திருப்தி இருக்காது. 

*  பெண்களை பொறுத்தவரை வீட்டிற்கு உறவினர்கள் குறிப்பாக தனது பெற்றோர்கள் வந்திருக்கும் போது உறவை விரும்பமாட்டார்கள். குழந்தைகள் சரியாக தூங்கி விட்டார்களா என்று தெரியாதபோது உறவை மனதாலும் நினைக்கமாட்டார்கள். 

*  முக்கியமாக மருத்துவ ரீதியாக மட்டுமே, அது மருந்துகளின்மூலம் அல்லது கவுன்செல்லிங் மூலமாகவோ குணபடுத்தகூடிய உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஆண்/பெண்ணுக்கு இருந்தால் அங்கே கண்டிப்பாக உடலின் மீதான திருப்தியின்மை ஏற்படக்கூடும். 

கணவன்/மனைவி அழகாக இருந்து மனதிற்கு பிடித்திருந்தும் 'உடலுறவில் ஈடுபட இயலாதவர்கள்' இருக்கிறார்கள் என்ற தகவல் ஆச்சரியமாக இருந்தாலும் அதுதான் உண்மை. வெளி உலகில் வலம் வரவும், திருமணம் ஆன புதிதில் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெருமைபட்டுக்கொள்ள உதவிய இந்த அழகு அடுத்து தொடர்ந்து வரும் வருடங்களில் உடலுறவுக்கு உதவுவது இல்லை. அப்போது அங்கே தேவை படுவது வேறு ஒன்று...! 

பாதை மாறி சென்று விடாமல் தன் துணையை பிடித்துவைத்துக் கொள்ளும் சூட்சமம் ஒன்று இருக்கிறது, அதுதான் தொடுதல் !! 

பரவசம் இதுவே !

ஆண்/பெண் இருவரின் உடலிலும் உணர்ச்சி மிகுந்த சில பகுதிகள் இருக்கின்றன அது நபருக்கு நபர் வேறு படும். ஒருவருக்கு இதழை தொட்டால் பரவசம் ஏற்படும், சிலருக்கு இடுப்பு, கை, கால் பாதம், கழுத்து, காது மடல், நெற்றி இப்படி இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். இதில் தன் துணையின் உணர்ச்சி பகுதிகள் எது என்று தெரிந்து வைத்துக்கொள்வது முழுமையான இல்லறத்திற்கு மிக அவசியம். உறவிற்கு உடல், மனம் ஒத்துழைக்காத போது இந்த மாதிரியான இடங்களை தொடுவதின்/வருடுவதின் மூலம் பரவச நிலையை அடையமுடியும். உடலுறவுக்கு தயாராவதற்கு முன்பும் இது மாதிரியான முன்விளையாட்டுகளில் ஈடுபடும் போது உடலுடன், மனமும் உற்சாகமடைந்து பரவசநிலையை எட்டிவிடும், அதன் பின் நடக்கும் உறவே ஒரு முழுமையான உறவாக இருக்கும்.

சில தம்பதிகள் உடலில் வேறு எந்த பிரச்சனையும் இன்றியும் உறவில் ஈடுபட இயலாதவர்களாக இருப்பார்கள். அவர்கள் இந்த மாதிரியான விளையாட்டில் மட்டும்  சில நாட்கள் (உறவு கொள்ளாமல் )ஈடுபட வேண்டும். இதிலும் ஒரு முழு இன்பத்தை அடைய முடியும். வெறும் தொடுதலின் மூலம் சில நாட்களை கழித்து விட்டு பின் முழுமையாக  உறவில் ஈடுபடும் போது, நிச்சயம் கணவன் மனைவி இருவருக்கும் ஒரு வித்தியாசமான புதுமையான அனுபவமாக இருக்கும். இதை நான் சொல்லலைங்க நம்ம வாத்சயனார் முதல் மேல் நாட்டு மருத்துவர்கள் வரை இது ஒரு சிகிச்சை முறை என்று ஒத்துகொண்ட ஒரு விஷயம். 

சூட்சுமம் எது என்று தெரிந்து, தெளிந்து இல்லறத்தை நல்லறமாக கொண்டு செல்லுங்கள்.....!  
தாம்பத்தியத்தில் தொடரும் அடுத்த பதிவு கணவன்/மனைவி பாதை மாற ஒரு காரணம் மன பொருத்தம் இல்லாமை.......காத்திருங்கள் !!


படங்கள் - நன்றி கூகுள் 
Tweet

17 கருத்துகள்:

 1. எல்லாருக்கும் தேவையான, அவசியமான ஒரு பகிர்வு.

  பதிலளிநீக்கு
 2. தொடர்பதிவில் வாழ்வியல் பேசுவது நிறைய உணர்ந்து கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும்.

  இந்த பதிவு திருமணத்தம்பதிகளுக்கு ஏற்ற பதிவு.

  உடல் பொருத்தம் என்பது எந்த அளவுக்கு, எவ்வளவு காலத்துக்கு என்கிற கேள்வியை எழுப்புகிறது. ஏனென்றால் உடல் பருமன் காலப்போக்கில் மாறக் கூடியதாக இருப்பதுதான் காரணம்.

  இதை எல்லாம் விட மனதில் அன்பு இல்லாத போதுதான் குறைகள் பெரிதெனத் தோன்றும்.

  நேசித்த மனம் வாசித்த உடலை என்றுமே சுவாசிக்கும்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 3. மனோ ரீதியான சிக்கலுக்கு நல்ல தீர்வு சொல்லி இருக்கீங்க..

  பதிலளிநீக்கு
 4. விடாமல் எழுதுகிறீர்கள்.. மதிப்பு கூடுகிறது.

  பதிலளிநீக்கு
 5. பதிவை படித்ததும் கவுன்சிலிங் போயிட்டு வந்ததுபோல ஒரு உணர்வு... கண்டிப்பாக அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் ரொம்பவும் சுவாரசியமாகவும் விரிவாகவும் எழுதுறீங்க மேம், வாழ்த்துக்கள் தொடருங்கள்........

  பதிலளிநீக்கு
 6. நல்லா எழுதி இருக்கீங்க.

  பதிலளிநீக்கு
 7. இல்லறத்திற்கு நல்ல சூட்சுமவழிகள் !

  பதிலளிநீக்கு
 8. தங்களை tamilrockzs official வலைப்பூ குழுமத்தில் பெருமையுடன் அறிமுக படுத்தி இருக்கிறோம் .
  நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள் . தங்கள் வரவை எதிர் பார்க்கும் நல்ல உள்ளங்கள் .
  பதிவுலகில் பெண்கள் ...... ( http://tamilrockzs.blogspot.com/2011/03/blog-post_28.html )

  நன்றி ,
  அன்புடன் ,
  Admin

  www.tamilrockzs.com

  www.tamilrockzs.blogspot.com

  பதிலளிநீக்கு
 9. நல்ல விரிவான அலசல் கௌசி. உங்களது தாம்பத்யம் பற்றிய கட்டுரையை முதல் முறையாக வாசிக்கிறேன். ஒரு தேர்ந்த மருத்துவர் போல் எழுதியிருக்கீங்க. தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 10. மிக மிக சிக்கலான ஒரு விஷயத்தை, மிக தெளிவாக, எளிமையாக,சுருக்கமாக, ஆபாசமின்றி, சுவாரசியமாக சொல்வதில் வெற்றி கண்டுள்ள தோழி கவுசல்யாவுக்கு வாழ்த்துகளும், நன்றிகளும்!

  இதுபோன்ற மேலும் பல பதிவுகளை நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும். வலையுலகில் இதனை ஆழமாக சொல்லும் ஒரே பதிவர் நீங்கதான்னு நம்புறேன். தொடர்க உங்கள் சமூகப்பணி.....நல்ல சமுதாயத்தை உருவாக்கும் பாதையில்!
  பத்மஹரி,
  http://padmahari.wordpress.com

  பதிலளிநீக்கு
 11. தாம்பத்தியம் தொடரில் இதையும் சொல்லி தானே ஆகனும்,தொடர்ந்து எழுதுங்க.

  பதிலளிநீக்கு
 12. பெயரில்லா1:39 PM, ஏப்ரல் 15, 2011

  நேற்றுதான் உங்கள் பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது, மிகவும் அருமை... உங்களுடன் மேற்கொண்டு கருத்துகள் பகிர்ந்துகொள்ள உங்கள் EMail Id தேவை

  கு.இராமநாதன்
  mangairams@gmail.com

  பதிலளிநீக்கு
 13. அவசிய பதிவு அற்புதங்க... நன்றியுடன் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 14. the couples those meets issues must read this. also all should read this before marriage.

  Good Work. You might become full time writer.

  பதிலளிநீக்கு
 15. பத்மஹரி said:
  மிக மிக சிக்கலான ஒரு விஷயத்தை, மிக தெளிவாக, எளிமையாக,சுருக்கமாக, ஆபாசமின்றி, சுவாரசியமாக சொல்வதில் வெற்றி கண்டுள்ள தோழி கவுசல்யாவுக்கு வாழ்த்துகளும், நன்றிகளும்!

  ஹரியின் கருத்துக்களே என் கருத்தும் ......நெல்லையில் இருந்தும் நாம் சந்திக்க முடியவில்லையே.....உங்கள் எல்டுத்துக்களை மதிக்கிறேன் ......உங்களை .....மதிக்கும் ..உங்கள் கணவருக்கும் ....இதே மரியாதை உண்டு...ஏனெனில் ..அவர்கள் ஆசிறவாதம் இல்லாமல் இப்படி எழுத ...கண்டிப்பாக ..சாத்தியமில்லை .......

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...