Friday, April 8

9:02 AM
21


சென்ற பதிவில் 'ஊழலற்ற இந்தியா சாத்தியமா' என்று கேள்வி எழுப்பி இருந்தேன்..அதில் மூணு பின்னூட்டத்தை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்... 

* ராஜ நடராஜன் அவர்கள் 

//இந்தியா 50/50 மட்டுமே தற்போதைக்கு.இரும்பை கொஞ்சம் ஓங்கி அடித்தால் விகிதாச்சாரம் மாற சந்தர்ப்பம் இருக்குது// 

* அடுத்ததாக என்னுடைய பல பதிவுகளுக்கும் பின்னூட்டத்தில் விளக்கமாக கருத்துகளை தெரிவிப்பத்தின் மூலம் என்னை உற்சாகபடுத்தி கொண்டிருக்கும் சகோதரர் அப்பாதுரை அவர்கள் ஒரு கருத்தை கூறி இருந்தார்...  

//ஊழல் அலையாக வரும் பொழுது நனையாமல் நகர்வதற்கு முயற்சி, வேகம், தொலைநோக்கு, தன்னம்பிக்கை எல்லாமும் வேண்டும். பொதுமக்களில் 90%க்கு மேல் இந்த நான்கில் மூன்று குறை என்பது என் கணிப்பு.//  

* கோபி 
//மிகப்பெரிய அளவில் ஒரு புரட்சி நடந்தால் ஒழிய இந்த ஊழலற்ற அரசு இந்தியாவில் அமைவதற்கு வாய்ப்பே இல்லை என்று தோன்றுகிறது// 


பலரும் எதிர்பார்த்த ஒரு புரட்சி, ஒரு எழுச்சி தற்போது நம்ம இந்திய நாட்டில் உதயமாகி இருக்கிறது. இதில் நாம் வெற்றி பெற்றுவிட்டோம் என்றால், ஊழலற்ற இந்தியா சாத்தியமே !!

இளைஞனே விழித்திடு இக்கணமே.....!

ஊழலற்ற இந்தியா சாத்தியம் என்ற நம்பிக்கை அதிகமாகிறது அதற்கு ஒரே காரணம் அன்னா ஹசாரே !! 

யார் இவர் என்று இப்போதுதான் உலகம் பார்க்க தொடங்கி  இருக்கிறது...அதிலும் இந்தியாவே இப்போதுதான் இவரை கண்டு சிறிது புருவம் உயர்த்தி  இருக்கிறது...இந்திய ராணுவத்தில் 15 ஆண்டு காலம் பணி  புரிந்தவர் என்று சொல்வதை விட எல்லையில் நின்று போராடியவர் எனலாம். பின் அதில் இருந்து விலகியவர் தனது சொந்த கிராமமான ராலேகாவன் சித்திக்கு வந்து தனது மக்களுக்காக வாழ தொடங்கினார். அப்போது அவரது வயது 39 மட்டுமே ! மக்கள்  அடிப்படை வசதி கூட இல்லாமல் அவதியுறுவதை எண்ணி வருந்திய அவர் அப்போதே மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயலாற்றினார்...! கிராம மக்களின் நிலை மேன்பட முயன்ற அவர் தலைவிரித்தாடும் லஞ்ச லாவண்யங்களை கண்டு மனம் வருந்தி அதற்காக போராட தொடங்கினார். முப்பது வருடங்களாக போராடி வருகிறார். 

கடந்த மூன்று தினங்களாக 'ஊழல் ஒழிப்பு சட்டம்' லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டி இவர் 'சாகும் வரை உண்ணாவிரதம்' இருக்கிறார்.  இந்த 72 வயதிலும் 15 நாட்கள் வரையிலும் கூட எந்த பிரச்சனையும் இன்றி உண்ணாவிரதம் இருக்க இயலும் என்ற உறுதியில் இருக்கும் இந்த இளைஞருக்கு ஆதரவு பெருகி வருகிறது. 400 க்கு மேற்பட்ட இடங்களில் இது போன்ற உண்ணாவிரத போராட்டங்கள் நடைபெற்று வருகிறது என்று அவரின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்....இதில் முக்கியமாக நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் எந்த அரசியல்வாதியையும் அருகில் சேர்க்க வில்லை இவர்...! இந்த தைரியம் நம் இளைஞர்களுக்கு வர வேண்டும். இனிமேல் வரலாம், வரும்.....

முதல் முறையாக ஓங்கி ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது ஊழலுக்கு எதிராக குரல்கள் ! பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் பெரும்பாலும் அரசியல்வாதிகளின் சொந்தமாகிவிட்டதால் அவை நிச்சயம் இவரை கண்டுகொள்ளாது...இன்றைய தினசரியில் கூட பிரச்சார செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து இந்த செய்தி கடைசி பக்கத்தில் அதுவும் ஒரு ஓரத்தில் சிறியதாக வெளி இடபட்டிருந்தது.....சினிமா செய்திகளுக்கு முழு பக்கம்...! கேவலம் மாற்ற முடியாது இவர்களை.....போகட்டும் விட்டு தள்ளுவோம்.

ஆனால் இணையம் அப்படி அல்ல...தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக பெரும் முயற்சி எடுத்து குரல் கொடுத்த பதிவுலகம் இதற்கும் தங்களின் முழு ஆதரவை தெரிவிக்க வேண்டும்.....!! இயன்றவரை என்று சொல்வதை விட அவசியம் பதிவுகளை வெளியிட்டும், பஸ்சிலும், முகநூலிலும், ட்விட்டரிலும் நம் ஆதரவை தெரிவிப்போம்.....

விளையாட்டுகளில் மட்டும் நம் தேசபற்று வெளிவரும் என்ற சிலரின் எண்ணங்களை உடைத்து போடுவோம்.....ஒன்றாக கை கோர்ப்போம் !



காந்தீயவழியில் இவர் மேற்கொண்டிருக்கும் இந்த போராட்டத்திற்கு நாம் வாழ்த்துக்களை சொல்லிக்கொண்டு அவருக்கு ஆதரவு தோள் கொடுப்போம். 

வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் ! வெல்லட்டும் இந்த அறப்போராட்டம் !

வாழ்க பாரதம் ! 

இந்த போராட்டத்தை பற்றி இன்னும் விவரங்கள் தெரியவேண்டும் என்றால் இந்த சுட்டிகளை பார்க்கவும்

இவருக்கு ஆதரவாக  Click here to sign the petition !     


இங்கே சென்று சைன் பண்ணலாம்.




கழுகின் அக்னி பார்வை !
சா'தீயே' நீ ஒழிந்து போ.......ஒரு தொலை நோக்கு பார்வை!

Tweet

21 comments:

  1. பாராட்டிப் பின்பற்ற வேண்டிய செயல். (உண்ணாவிரதம் இக்காலத்தில் ஏற்ற முறையா என்பது சந்தேகம்..இருந்தாலும்)

    ReplyDelete
  2. தமிழ்மணம் ஓட்டு விழலை.. அட்மினிஸ்ட்ரேஷன் தமிழ்மனத்துக்கு ஒரு மெஇல் அனுப்பி புகார் செய்யுங்க..சரி பண்ணுவாங்க

    ReplyDelete
  3. எதை எதையோ காட்டும் தமிழக சேனல்கள் அன்னா ஹசாரே பற்றி மூச்சு கூட விடவில்லை... தமிழனை ஏமாற்ற தமிழ் சேனல்களே போதும்... வாருங்கள் நண்பர்களே ஊழல் இல்லாத பாரதத்தை படைப்போம்.. அன்னா ஹசாரே-வுக்கு தோள் கொடுப்போம்.....

    ReplyDelete
  4. சரியான நேரத்தில் சரியான பதிவு.... இப்பொழுது நாம் செயல்படவில்லை எனில் எப்போதும் ஊழலில் இருந்து மீள முடியாது

    பாராட்டுகள் சகோ...

    ReplyDelete
  5. அவரது போராட்டம் பேராதரவு பெற்று வெற்றி பெற வேண்டும்.

    ReplyDelete
  6. கௌசல்யா,நல்ல பகிர்வு.ஏற்கனவே ஆதரவாய் போன் கால் செய்தாச்சு,இதோ பெட்டிஷனிலும் கையொப்பமிடுகிறேன்.

    ReplyDelete
  7. வாழ்க திருவாளர் அன்ன ஹசாரே அவர்கள் !
    சட்டம் ஒழுங்கின் பெயரில் கைகள் கட்டப்பட்டுள்ளோம். உண்ணா விரதம் இருக்க அனுமதியில்லை.சென்னை வேங்கட நாராயண சாலையில் உள்ள தக்கர் பாபா பள்ளி வளாகத்தில் (நந்தனம் சிக்னல் அருகில்)தினமும் ஒன்று கூடுகிறோம். முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்கிறார்கள். காலையிலிருந்து மாலை வரை நடக்கிறது. தயவு செய்து கலந்து கொள்ளுங்கள்.

    இன்று மாலை 5 மணி அளவில் கோவையில் வா.வு.சி பூங்காவில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்த உள்ளார்கள். உங்கள் கோவை நண்பர்களிடம் தயவு கூர்ந்து தெரிய படுத்துங்கள்.
    சுப்புரத்னம் பிச்சை -முன்னாள் ராணுவ வீரன்

    ReplyDelete
  8. கட்டாயம் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

    ReplyDelete
  9. சென்னையில் இருப்பவர்கள் தி.நகர் தக்கர் பாபா பள்ளியில் நடக்கும் அமைதி கூட்டத்தில் பங்குபெறலாம். இன்றும் நாளையும் தொடர்ந்து நடக்கின்றது. இன்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமும் நடக்கின்றது

    ReplyDelete
  10. அடித்து சொளுகிறேன் ஊழல் இல்லா இந்தியாவை உங்கள் அடுதபரம்பறி குஉட அனுபவிக்க முடியாது

    ReplyDelete
  11. இந்த உண்ணாவிரதம் தேவையா? தேவை இல்லையா? என்ற கருத்துக்குள் செல்லாமல் ஒரு புரட்சிக்கு விதை விழுந்திருக்கிறது அதற்கு அனைவரும் உறுதுணையாக இருப்போம்!

    ReplyDelete
  12. காங்கிரஸ் தலைவி அன்னை சோனியாவும் ஊழல் எதிர்ப்புப் போருக்கு ஆதரவு தெரிவித்து விட்டடார்....அடுத்து திகார் சிறையிலிருந்து ராசாவை விடுவித்துவிட்டால் அவரும் அன்ன ஹசாருடன் உண்ணாவிரதமிருப்பார்...... :))

    ReplyDelete
  13. "இதில் முக்கியமாக நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் எந்த அரசியல்வாதியையும் அருகில் சேர்க்க வில்லை இவர்...!"
    இந்த ஒன்றுக்காகவே நான் பெடிஷனில் கையொப்பமிட்டு விட்டேன் .

    ReplyDelete
  14. இவரை போன்ற நல்ல மனிதர்கள் இருப்பதே இப்பொழுது தான் அனைவருக்கும் தெரிகிறது.

    ReplyDelete
  15. ஒரு 65 வருடபோராட்டங்களுக்கு பிறகு இந்தவெற்றி சத்தியாகிரக வழியில் நாமக்கு கிடைத்து இருக்கிறது.இதை கட்டிகாத்து வழி நடத்த வேண்டியதுநாமது பொறுப்பு.காந்தியாகவே இருந்து பெற்று தந்த அன்ன ஹசாரே அவர்களுக்கு பாதுகாப்பாகவும் உறுதுணையாகவும் இருக்க வேண்டியது நமது கடமை அரசியவாதிகளின் பேச்சை கேட்காமல் அன்னாரின்வழி பின்பற்ற வேண்டும்.2g ஒலிகற்றையில் பல மதங்கள் போராடி பலஇலப்புகள் இழந்து அதில் வெற்றி பெரமுட்டிந்தது அனால் முன்றே நாளில் இந்த வெற்றி கிட்டியது இந்தவிளைமதிக்க முடியாத வெற்றியை பதுகக்கவேண்டியது நமது கடமை.வாழ்வோம் வெற்றி பெறுவோம்.வாழ்க வளமுடன் இந்த பதிவு ரெம்ப நன்று subburajpiramu@gmail.com

    ReplyDelete
  16. அருமையான பதிவு

    வாங்க தோழி ஒரு சின்ன அவார்டு நேரம் கிடைக்கும் போது வந்து பெற்று கொள்ளுஙக்ள்

    ReplyDelete
  17. உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 50/100 மார்க். நன்றி

    ReplyDelete
  18. please inform your email id to send a document about 'marangalai vettungal'

    ReplyDelete
  19. please inform your email id to send an article

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...