Saturday, March 5

1:05 PM
86நம்மை போல பதிவுகள் எழுதுபவர்களுக்கு நம் நண்பர்கள் வந்து படித்தால் கிடைக்கிற  திருப்தியே தனி தான். ஒரு மாதமாக பதிவுலகம் பக்கம் வராமல் இருந்த நாட்களில் நான் அதிகமாக வோட், கமெண்ட் போடவில்லை.....அதனால் வழக்கம் போல் என் சந்தேக புத்திக்கு ஒரு சந்தேகம் , 'ரொம்ப நாள் கழிச்சு பதிவு போடுறோம், யாருக்கு தெரிய போகிறது ?' 

என் சந்தேக புத்தியை சாட்டையால் அடிக்கிற மாதிரி போன பதிவிற்கு நண்பர்களின் வரவு இருந்தது. இந்த மாதிரி ஒரு தவறான எண்ணத்தை நான் மட்டும் அல்ல பலரும் கொண்டிருக்கிறோம்...நாம் போய் வோட், கமெண்ட் போட்டால் அவர்கள் நமக்கு வருவார்கள் என்பது நமது எழுத்துகள் பிறருக்கு அறிமுகம் ஆகும் வரை மட்டுமே. பதிவு பிடித்து இருந்தால் நண்பர்கள் தொடர்ந்து  படிப்பார்கள்.  இதை புரிந்து கொள்ளாமல் அதிக ஹிட்ஸ் வேண்டி பல பதிவர்கள் நடந்து கொள்ளும் சில அநாகரீக முறைகள், வீண் ஆர்பாட்டங்கள்...இதன் உச்சகட்டமாக சமீப காலமாக  நடந்துகொண்டிருக்கும் விரும்பத் தகாத  சில நிகழ்வுகள்.....! (இப்போது புரிந்து இருக்கும் நான் எதை பற்றி சொல்லபோகிறேன் என்று !?)

சிறு பிள்ளைகள் 'டீச்சர், டீச்சர் இவன் என்னை கிள்ளிட்டான், இவன் என் பென்சிலை எடுத்துவிட்டான்' என்கிற  மாதிரி, மாறி மாறி சண்டை போடுவதை பார்த்தால்  நாம் இன்னும் பள்ளிப்படிப்பை விட்டே தாண்டவில்லையோ ?! இணையத்தை கையாண்டும்  இன்னும் மனமுதிர்ச்சி அடையாமல் இருக்கும் சிலரை எண்ணி நகைப்பும்,  கூடவே வெறுப்பும்  வருகிறது. இதை விட வேறு சிலர் தங்களை அதிக முதிர்ச்சி அடைந்தவர்களாக எண்ணி  நடந்து கொள்ளும் விதம் அசிங்கத்தின் உச்சம். 

இலக்கியம், இலக்கணம் தெரிந்தவர்களா எல்லோரும் ?

இங்கே எழுதுபவர்களில் எல்லோருமே  தமிழ் மொழியில் முழு புலமை பெற்றவர்கள் என்று சொல்ல இயலாது...என்னையும் சேர்த்து, பேசுவதை அப்படியே எழுத்தில் கொண்டு வருகிறவர்களே அதிகம். இதை கூட பள்ளி செல்லும் சிறுவன் மாதிரி எழுதிக்கொண்டு இருக்கிறான் என்று விமர்சிப்பது எத்தகைய கீழ்த்தரமான செயல்...?!   

எங்கே மனிதம் ?

ஒருத்தர் எழுதிய பதிவு பிடிக்கலைனா அதை சுத்தமா கண்டுக்க கூடாது, இல்லைனா அமைதியாக நாகரீகமான முறையில் கருத்துக்களை சொல்ல வேண்டும். அதைவிடுத்து அநாகரீகமான வார்த்தை பிரயோகங்கள், மனித நேயமற்ற விமர்சனங்கள் ! இப்படி செய்து எதை சாதிக்க போகிறாய் , என்ன எதிர் பார்க்கிறாய் ? என்ன வேண்டும் உனக்கு ? மனதினுள் இருக்கும் வக்கிரம் வார்த்தைகளாய் வெளியே வருவதும், அது  சக மனிதனை கீறி கிழிப்பதிலும் என்ன சுகம் கண்டாய் ? பிறரின் மனதை கொல்வது சரி என்று யார் சொன்னார்கள் உங்களுக்கு ?!

நீங்க கேட்கலாம், 'உனக்கேன் அக்கறை' ? சில மாதங்கள் முன் நானே பாதிக்கப்பட்டேன்...!! நானும் அந்த மன உளைச்சலை சந்தித்தேனே ! அப்படி ஒரு சூழ்நிலையை அனுபவித்தவர்களுக்கு தெரியும், அந்த வேதனை எப்படி பட்டது என்று ?! பதிவுலகில் எதாவது சர்ச்சைகுரிய பதிவு எழுதினா உடனே ஆளாளுக்கு எதிர் பதிவு போட்டு அந்த பதிவை விமர்சிப்பதை ஓரளவிற்கு சரி எனலாம் . ஆனால் அதை விடுத்து , பதிவரை மட்டும் தாக்குவது எந்த விதத்தில் சரி...?! இது எழுத சரக்கு இல்லாத ஒரு குறிப்பிட்ட சிலரின் வேலையாக போய்விட்டது, இதன் மூலம் விளம்பரம் தேடுவது என்ன லாஜிக்கோ ? 

தமிழனை இழிவு படுத்தாதே

பதிவுலகம் என்பது உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களால் பார்க்க படுகிறது...படிக்கபடுகிறது...இங்கே எழுதப்படும் செய்திகள் தான் தமிழனையும், தமிழ்நாட்டையும் குறிக்கும் அடையாளங்கள். இந்த எழுத்துக்களின் மூலம் தங்கள் நாட்டின் தற்போதைய நிலையை அறிந்து கொள்கிறார்கள்... இந்நிலையில் தமது சுயநலத்திற்காகவும், பிறர் மீதான வெறுப்பை உமிழுவதற்காகவும், எழுதப்படும் மோசமான பதிவுகள் கடல் கடந்து இருக்கும் தமிழர்களுக்கு எத்தகைய உணர்வை ஏற்படுத்தும் ? தமிழன் இப்படிபட்ட எண்ணம், செயல், பார்வை கொண்டிருப்பான் என்று பிரகடன படுத்துவது போல் ஆகாதா ? தமிழனின் விருப்பம் இது தான் என்று உறுதியாக அறிதியிட்டு வெளியிடப்படும் சில மோசமான பதிவுகள்...கேவலம் !!   

சமூதாயத்தை திருத்துவது என் வேலை இல்லை என்று விழிப்புணர்வு பதிவுகளை எழுதுபவர்களை குறை சொல்வதற்கு என்றே  சிலர்  இருக்கிறார்கள். யார் நினைத்தாலும் சமூதாயத்தில் புரையோடி போயிருக்கும் அவலங்களை ஒரே நாளில் சரி படுத்தமுடியாது. ஆனால் படிக்கும் ஒருத்தர் இரண்டு பேர் மாறலாம்  அல்லது யோசிக்க வைக்கலாம், அல்லது குறைந்த  பட்சம் ஒரு விழிப்புணர்வு ஏற்படும். 

வாசகர்கள் இதை தான் விரும்புகிறார்கள் என்று எண்ணி வலிய தவறான கருத்துக்களை திணிக்கும் செயல்கள் தவிர்க்கலாமே . பதிவுலகம் பொறுத்தவரை ஒரு தளத்திற்கு வந்து வோட் செய்து அந்த பதிவை பலரை  சென்றடைய செய்வது சக பதிவர்கள் தான். ஒரு மோசமான தளத்தை படிக்கும் பிற பதிவர்கள் இப்படி எழுதினால், இப்படி ஆபாச படம் போட்டால் தான் நாமும் ஹிட்ஸ் அதிகரிக்க முடியும் என்று எண்ணி செயல் படகூடிய பரிதாப நிலையும் இருக்கிறது...?!    

யோசிக்கலாமே ?!


'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'

எல்லா மதமும் பிற உயிர்களிடத்தில் அன்பை பாராட்டணும் என்று தானே போதிக்கின்றன. அன்பு கொள்ளவில்லை என்றாலும் துவேசம் காட்டாமல் இருக்கலாமே...


சுவாசம் நின்ற மறுநொடி நம்ம எல்லோருக்கும் ஒரே பெயர் தான்...'பிணம்'     

நமது இந்த வாழ்க்கை என்னும் ஓட்டத்தூரம் கொஞ்சம் தான்...இதில்  அடிக்கடி நின்று விட்டால் எப்படி? நம்மை பற்றி குறை பேசுறவங்க பேசிட்டு இருக்கட்டும், நமக்கு தேவையானதை மட்டும் எடுத்துகொண்டு போயிட்டே  இருக்கணும் (எனது இந்த விமர்சன பதிவையும்  சேர்த்தே சொல்கிறேன்...!) நமக்கு பிரயாணம் தான் முக்கியம், நடுவில் வரும் ஸ்பீட் பிரேக்கர் நிதானித்து செல்லத்தானே தவிர, அங்கேயே நின்றுவிட இல்லை.    

பிறர் குறை ,விமர்சனம் சொல்றாங்க என்று பதிலுக்கு நாமும் புழுதி வாரி தூற்றினால் அந்த தூசி நம்மீதும் விழத்தான் செய்யும்.....இன்னும் அதிகமாக !! 

முடிந்தவரை நாளைய தலைமுறையினருக்கு நல்லதை விதைக்காவிட்டாலும் பரவாயில்லை, கெட்டதை விதைத்து விட்டு சென்றுவிடாதீர்கள். 

வாழும் நாட்கள் விரைந்து மறைந்து விடும் பனித்துளிபோல...இருக்கும் குறுகிய நாட்களில் பல நெஞ்சங்களை அன்பால் சேர்த்து கொள்வோம். 'தனிமனித தாக்குதல்' என்ற ஒரு அநாகரீகத்தை இனியாவது கைவிட்டு நேசம் வளர்ப்போம். ஏற்கனவே சாதி, மத, அரசியல், கொள்கைகள் வேறுபாட்டால் பிரிந்து கிடக்கிறார்கள் தமிழர்கள்...இது போன்ற சூழ்நிலையில் வறட்டு  கௌரவம், சுயநலம் போன்றவற்றுக்காக நமக்குள் சண்டை இட்டு நம் மதிப்பை குறைத்துக் கொள்ளாமல், நேச கரம் நீட்டி நட்புறவை உறுதி படுத்தி 'நாம் தமிழனடா' என்று உரக்க சொல்வோம்.....

தமிழனுக்கு ஒரு பிரச்னை என்றால் ஒன்று சேர்ந்து குரல் கொடுப்போம். 

வெல்லட்டும் மானுடம் !  Tweet

86 comments:

 1. க‌ல‌க்க‌ல் ப‌திவு கௌச‌ல்யா,..

  தேவையில்லாம‌ல் ச‌ண்டை போட்டு முக‌ம் தெரியாத‌ ந‌ட்பை இழ‌ப்ப‌தில் அர்த்த‌மில்லை,.. ச‌ண்டை போட்ட‌வ‌ரை எங்காவ‌து பார்க்க‌ நேர்ந்தால் முத‌லில் க‌ண்முன் வ‌ருவ‌து அவ‌ச‌ர‌த்தில்‌ கொட்டிய‌ வார்த்தைக‌ளாக‌த்தான் இருக்கும்,..அது இருவ‌ருக்குமே த‌ர்ம‌ச‌ங்க‌ட‌த்தை ஏற்ப‌டுத்தும்.

  நீங்க‌ள் சொன்ன‌மாதிரி பிடிக்காவில்லை என்றால் அமைதியாக‌ வ‌ந்துவிடுவ‌து சால‌ சிற‌ந்த‌து,..

  ReplyDelete
 2. பதிவுலகத்தில் நல்ல நண்பர்கள் கிடைகிறார்கள் இங்கு ஏன் வீன் சண்டை.....பதிவுலகிற்கு வந்தோமா சந்தோசமா இருந்தோமா என போக வேண்டும் ஒருவன் நம்மை வம்புக்கு இழுக்கிறான் என்றால் நாமும் வரிந்துகட்டி கொண்டு சண்டைக்கு போக கூடாது .......இது தான் என் கருதத்து
  உங்கள் கருத்துகள் மிகவும் நாகரிகமாக இருக்கிறது...!!!

  ReplyDelete
 3. சொல்ல வந்த கருத்துக்களை மிகவும் நாகரீகமான முறையில் தெளிவாக சொல்லியிருக்கீங்க மேடம்...

  சூப்பர்

  ReplyDelete
 4. மிகவும் தேவையான அலசல் . சிலர் ஒரு படத்தை (படைப்பை) விமர்சிப்பதை விட்டுவிட்டு அதை இயக்கியவரை விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது .அதே போல தான் ஒரு நபரை பதிவுலகில் பேசுவதும் ..அவர் பதிவை மட்டும் தான் விமர்சிக்கக் வேண்டும் ..அவரை அல்ல .. :)

  பேஸ்புக் - 3 ஆம் நபர் அப்பளிகேசன்ஸ் -கவனம்!

  ReplyDelete
 5. கௌஸ்...நீங்க சொன்னதை மனமார ஒத்து கொள்கிறேன்...ஆனால் ஒரு விஷயத்தை நீங்க கவனிக்கணும்...நீ அநாகரிகமா சொல்றப்பானு அநாகரிகமா சொல்ற எந்த பதிவர் கிட்டே சொன்னாலும் ,அவங்க அந்த தவறையும் உணர்ந்துட்டு சகஜமா எடுத்துட்டு போகும் மனநிலையும் வேணும்...ஒரு விஷயம் சொன்னால்...சொன்னவர் குடும்பம் வரை இழுக்கும் அநாகரிக போக்கும் சில பதிவாளர்களிடம் மட்டுமே இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை கௌஸ்...இது ஒரு ஜாலியான டைம் பாஸ்...நல்ல நட்பு வட்டாரம் அப்படிங்கிறதை மட்டும் எடுத்துட்டு சகஜமாய் போவது தான் ஆரோக்கியமான நிலை...சரிதானே கௌஸ்...????

  ReplyDelete
 6. நல்ல பதிவு. என்றாலும் எல்லா மனிதனும் ஒரே இயல்பை பெற்றவரில்லை. அதையோட்டி தான் அவனுடைய ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. இது இருக்கத்தான் செய்யும் இதுவும் கடந்து போகும்.

  ReplyDelete
 7. அவசியமான தருணத்தில், நேர்மையான சுட்டிக்காட்டல் பதிவு. இதை ஒத்த கருத்துடையவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள் நம் தமிழ் இணைய உலகில். ஆனால் "நல்லவர்கள் நமக்கேன் வம்பு" என்று ஒதுங்கிப் போய்விடுவதால், எஞ்சியிருப்பவை மட்டுமே ஒட்டுமொத்த நம் தமிழ் சமூகத்தின் பிம்பமாக மற்றவர்களால் உணரப்பட்டுவிடும் அபாயத்தை தெளிவாக விளக்கியிருக்கின்றீர்கள். மிக்க நன்றி. இந்த விஷயத்தில் என் பங்குக்கும் கண்டிப்பாக ஏதாவது ஒன்றை செய்து விடுகிறேன்.

  ReplyDelete
 8. >>>>பதிவுலகம் என்பது உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்களால் பார்க்க படுகிறது...படிக்கபடுகிறது...இங்கே எழுதப்படும் செய்திகள் தான் தமிழனையும், தமிழ்நாட்டையும் குறிக்கும் அடையாளங்கள். இந்த எழுத்துக்களின் மூலம் தங்கள் நாட்டின் தற்போதைய நிலையை அறிந்து கொள்கிறார்கள்..

  நூற்றில் ஒரு வார்த்தை

  ReplyDelete
 9. >>
  வாழும் நாட்கள் விரைந்து மறைந்து விடும் பனித்துளிபோல...இருக்கும் குறுகிய நாட்களில் பல நெஞ்சங்களை அன்பால் சேர்த்து கொள்வோம். 'தனிமனித தாக்குதல்' என்ற ஒரு அநாகரீகத்தை இனியாவது கைவிட்டு நேசம் வளர்ப்போம்.

  வாவ்.. என்ன ஒரு சிந்தனை?

  ReplyDelete
 10. நாளைய தலைமுறையினருக்கு நல்லதை விதைக்காவிட்டாலும் பரவாயில்லை, கெட்டதை விதைத்து விட்டு சென்றுவிடாதீர்கள். ////
  அருமையான வரிகள் வாழ்த்துக்கள்.

  எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு விஜயகாந்த் vs ஜெயலலிதா =மக்களின் மறதி

  ReplyDelete
 11. மனதை புண்படுத்தும் வகையில் அநாகாரிகமாக எழுதுவது தவறு. எழுதும் முன் நாம் அந்நிலையில் இருந்தால் மனம் என்ன நினைக்கும் என்று ஒரு முறை யோசித்து எழுதினால் போதும்!

  ReplyDelete
 12. மனதை புண்படுத்தும் வகையில் அநாகாரிகமாக எழுதுவது தவறு. எழுதும் முன் நாம் அந்நிலையில் இருந்தால் மனம் என்ன நினைக்கும் என்று ஒரு முறை யோசித்து எழுதினால் போதும்!

  ReplyDelete
 13. பிடிக்காத எந்த விஷயத்தையும் நான் செய்வதில்லை.. அதே போல் பிடிக்காதவர்கள் பக்கமும் நான் போவதுமில்லை...அவர்கள் அமிர்தமே வழங்கினாலும்...ஆனால் சில நேரத்தில் சில பதில்கள் சொல்லவேண்டிதான் இருக்கின்றது...காரணம் நாம் எல்லாத்தையும் அனுமதிப்பது போல் அகிவிடும்...

  ReplyDelete
 14. நல்லா சொன்னீங்க..

  வலிய வம்பு சண்டையும் மிரட்டலும்...

  நல்ல கருத்து சொல்பவர்கள் அரிதாகிக்கொண்டே போகின்றனர்.. இப்படியே...

  நானும் இப்பத்தான் பதிவு போட்டேன்

  http://punnagaithesam.blogspot.com/2011/03/blog-post_05.html

  (ஈரோடு கதிர்மேல் காறி துப்பணுமாம். தண்டோராவுக்கு செருப்படி வேணுமாம்.)

  ReplyDelete
 15. அக்கா ரொம்ப அவசியமான பதிவு. இப்போ நிறைய தனிமனித தாக்குதல்களைக் கண்கூடாகவே பார்க்கிறோம். அதே மாதிரி ஒரு பதிவு பிடிக்கலைனா அத விட்டுட்டு வெளிய போய்டலாம் , அப்படி பண்ணாம அவன் அப்படி எழுதுறான் , ஒண்ணுமே தெரியாது போல என்பது போன்று தனிப்பதிவில் எழுதுவது மன வருத்தத்தை தரும். படிப்பவருக்குப் பிடிக்கலைனா அங்கே பின்நூட்டத்துலையே சொல்லலாமே?

  என்னைப் பொறுத்த மட்டில் பதிவுலக பிரபலம் என்பதெல்லாம் வெறும் மாயை.. பதிவுலகம் என்பது உலகம் முழுவதிலும் நண்பர்களைப் பெற உதவும் என்பது தான் எனக்குத் தெரிந்தது.

  அதே மாதிரி சில சமுதாய சிந்தனைப் பதிவுகளை விமர்சிப்பதும் தவறே .. நமக்கு எழுத்துப் பிடிக்கலைனா விட்டுட வேண்டியதுதானே .. அத விட்டுட்டு அப்படி எழுதுரவங்களா எதுக்கு தப்பு சொல்லணும் .. ஏன் நான் கூட ஏதும் சமூக சிந்தனைப் பதிவுகள் எழுதுறது இல்லை. அதுக்காக அப்படி எழுதுரவங்களா குறை சொல்லுறதுல என்ன இருக்கு ?

  உங்க பதிவு ரொம்ப தெளிவா இருக்கு அக்கா . கூடவே இந்த டெம்ப்ளட் நல்லா இருக்கு .. பழைய டெம்ப்ளேட் கருப்பா இருக்கும் .. பார்த்த பயந்து ஓடிரனும் போல இருக்கும் .. ஹி ஹி .

  ReplyDelete
 16. என்னுடைய மனதில இருந்தவைகளையும் போட்டு உடைத்து விட்டீர்கள் மேடம், பதிவுலகம் என்றும் நட்புணர்வுடன் ஆக்கபூர்வமாய் திகல வேண்டும் என்பதுதான் எனது ஆசையும்...

  ReplyDelete
 17. உடன்பாடான கருத்துக்கள். நான் பல முறை பின்னூட்டமிட்டு இருக்கிறேன். இங்கு நடக்கும் சண்டை சச்சரவுகள் அனைத்தும் நிழல் சண்டைகளே இதனை மேலும் கூட்டி வளர்க்காமல் நட்பை வளர்க்கவேண்டும் என்று. ஆனால் இவைகள் எப்படியே ஆரம்பமாகி விடுகின்றன. தன்னை மதிப்பவர்கள் அடுத்தவரையும் மதிப்பாகவே நடத்துவார்கள். தன்னையே மதிக்க தெரியாத நபர்களுக்கு எந்த விதி முறையும் இல்ல. நண்பர் கே.ஆர் விஜயன் சொல்வது போல இதுவும் கடந்து போகும்.வேறு ஒன்றும் வரும்.

  ReplyDelete
 18. கௌசி....மனம் தளரவேணாம்.
  எங்கள் இனத்துக்குண்டான சாபம் சில அடிப்படைக்குணங்களை மாற்றவே முடியாது.உங்கள் எண்ணங்களை சொல்லிகொண்டேயிருங்கள்.உங்கள் கருத்துக்களைக் கேட்கவென்றே நடுநிலை மனம் கொண்டவர்கள் நிறையப்பேர் !

  ReplyDelete
 19. நீங்கள் சொல்வது மிகவும் சரி
  பதிவுகளைப் படித்து முடித்ததும்
  தரமான பதிவு எனில்
  மனம் திறந்து பாராட்டுவோம்
  கொஞ்சம் புதிதாக எழுதுபவர்கள் எனில்
  ஊக்கப்படுத்தும்படியாக எழுதுவோம்
  காலப் போக்கில் அவர்களும் தரமான
  பதிவுகளைத் தர தயாராகிவிடுவார்கள்
  அதுதான் சராசரிகளைவிட மேம்பட்டவர்கள் என
  எண்ணி பதிவுலகிற்கு வந்தவர்களுக்கு அழகு
  மற்றவர்களை கண்டுகொள்ளவேண்டாம்
  அலட்சியப் படுத்துவதிலேயே மிக உயர்ந்தது அதுதான்
  மிக நல்ல பதிவு.தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 20. மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 21. பதிவெழுதுவதே மன சந்தோசத்திற்காக. அதற்குள் ஏன் சண்டை சச்சரவுகள். ‘எல்லோரும் இன்புற்றிருத்தல் அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே’
  தாயுமானவர் வசனம் இது. ஆகவே எல்லோரும் நல்லவர்களாக, நண்பர்களாக மனிதனை மனிதனாக மதிக்கப் பழகினால் இப்படியான கேவலமான செயல்கள் உருவாகாது என நினைக்கிறேன்.

  உங்கள் பதிவு பதிவுலகம் பற்றிய பல விசையங்களை அலசியுள்ளது. நான் பதிவுலகிற்கு புதியவன் ஒரு சில விடயங்களைப் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது.

  ReplyDelete
 22. நட்பு உள்ளங்களுக்கு வணக்கம்,

  இந்த பதிவை பற்றிய கருத்துக்களை மட்டும் இங்கே தெரிவியுங்கள். தயவு செய்து தனிப்பட்ட முறையில் யார் பெயரையும் குறிப்பிட்டு அவர்களை குறைசொல்லி கருத்துக்களை இங்கே தெரிவிக்க வேண்டாம்.

  அது இன்னும் பல புதிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்...

  நன்றி.

  கௌசல்யா.

  ReplyDelete
 23. ஹையோ ..இப்படி எல்லாம் பதிவுலத்துல நடக்குத சகோ ..எனக்கு ஒண்ணுமே தெரிய மாட்டுது ..சண்டை ,தனி மனித தாக்குதல் அப்படின என்ன ?ஹி ..ஹி ..இதுக்கு தான் என் நண்பர்கள் வட்டம் ஒன்னு இருக்கு அதை தாண்டி மேலே செல்வது இல்லை ..

  அப்படி கூடாது இன்னும் நிறைய பேர் நல்ல பதிவு எழுதுகிறார்கள் நீ போய் படி அப்படின்னு சொல்ல கூடாது ..

  வேண்டாம் சகோ ..நாயை அடிப்பானேன் ...(வேண்டாம் என் வாயை கிளராதீங்க சகோ )

  ReplyDelete
 24. நல்ல விஷயம் கௌசல்யா.. உண்மை தான், விரும்பியதை எழுதுவதும், விரும்பியதை படிக்கவும்.. முழு சுதந்திரம் இருப்பதால்.. அதை துஷ்ப்ரயோகம் செய்யாமல் இருத்தல் எல்லாருக்கும் நல்லது.

  தேங்க்ஸ் :)

  ReplyDelete
 25. //நமக்கு பிரயாணம் தான் முக்கியம், நடுவில் வரும் ஸ்பீட் பிரேக்கர் நிதானித்து செல்லத்தானே தவிர, அங்கேயே நின்றுவிட இல்லை. //

  இது ஒண்ணே போதும்..

  ReplyDelete
 26. பதிவுகள் விவாதிக்கப்பட வேண்டும். ஆனால் அதில் நாகரீகமும், முதிர்ச்சியும் வெளிப்பட வேண்டும். சொல்ல வந்ததை ரத்தின சுருக்கமாக சொல்லி, பிறரையும் விமர்சித்தால் இப்படித்தான் விமர்சிக்க வேண்டும் என்று வழிகாட்டுவதுபோல் இருக்கிறது இந்த பதிவு. தற்போதைய வலையுலகத்துக்கு மிக அவசியமான ஒரு பதிவு. நன்றிகள் தோழி....

  ReplyDelete
 27. எங்கள் ( Hema இந்தஇடத்தில் வர வேண்டிய வார்த்தை தமிழன்?) இனத்துக்குண்டான சாபம் சில அடிப்படைக்குணங்களை மாற்றவே முடியாது

  ReplyDelete
 28. எங்கே செல்கிறது பதிவுலகம்,எல்லாரும் பதிலை தேடிகிட்டு தான் இருக்காங்க.கௌசல்யா.எப்படியும் நம் பதிவ்ர்கள் ஆரோக்கியமாக கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கை எப்பவும் உண்டு.

  ReplyDelete
 29. ஆனந்தி.. said...

  கௌஸ்...நீங்க சொன்னதை மனமார ஒத்து கொள்கிறேன்...ஆனால் ஒரு விஷயத்தை நீங்க கவனிக்கணும்...நீ அநாகரிகமா சொல்றப்பானு அநாகரிகமா சொல்ற எந்த பதிவர் கிட்டே சொன்னாலும் ,அவங்க அந்த தவறையும் உணர்ந்துட்டு சகஜமா எடுத்துட்டு போகும் மனநிலையும் வேணும்...ஒரு விஷயம் சொன்னால்...சொன்னவர் குடும்பம் வரை இழுக்கும் அநாகரிக போக்கும் சில பதிவாளர்களிடம் மட்டுமே இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை கௌஸ்...இது ஒரு ஜாலியான டைம் பாஸ்...நல்ல நட்பு வட்டாரம் அப்படிங்கிறதை மட்டும் எடுத்துட்டு சகஜமாய் போவது தான் ஆரோக்கியமான நிலை...சரிதானே கௌஸ்...????


  :-))

  ReplyDelete
 30. ஆரோக்கியமான ஒரு சூழல் மாறிப் போய் இருப்பது எல்லோரும் அறிந்த ஒன்று. தரமான பதிவுகளும் வார்த்தை பிரயோகங்களும் உபோயகம் செய்யப்படுவதோடு இது ஒரு பொதுவெளி என்பதை அனைவரும் உணரவேண்டும்.

  இதை நன்கு உணர்ந்த்து கட்டுரையாக்கிய விதம் நன்று.........வாழ்த்துக்கள் கெளசல்யா!

  ReplyDelete
 31. பதிவுலக விகற்பங்கள் விலக உங்கள் பதிவு வழிகாட்டும், சகோதரி. நன்று.

  ReplyDelete
 32. காலத்திற்கு தேவையான பதிவு.உங்கள் நேர்மையான கருத்திற்கு நன்றி.

  ReplyDelete
 33. //எங்கே செல்கிறது.. பதிவுலகம் ?"//
  தலைப்பே like போட வச்சிருச்சு....

  ReplyDelete
 34. அற்புதமான பதிவு .
  "அன்பு கொள்ளவில்லை என்றாலும் துவேசம் காட்டாமல் இருக்கலாமே...

  சுவாசம் நின்ற மறுநொடி நம்ம எல்லோருக்கும் ஒரே பெயர் தான்...'பிணம்' "
  " நமக்கு தேவையானதை மட்டும் எடுத்துகொண்டு போயிட்டே இருக்கணும்"
  நானும் அப்படிதான் .எனக்கு பிடிக்காட்டி பேசாமல் வந்து விடுவேன் .speech is silver silence is Gold.

  ReplyDelete
 35. உங்கள் பதிவின் உட்பொருள் புரியவில்லை - என்றாலும் குரல் கொடுத்திருப்பது பொது மேன்மைக்கே. என்னுடைய குரலையும் சேர்க்கிறேன்.

  ReplyDelete
 36. பகிர்வுக்கு நன்றி சகோ

  ReplyDelete
 37. மிக மிக அவசியமான விசயத்தை மிக மிக அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
  மிக்க நல்லது!

  ReplyDelete
 38. டபுள் பாராட்டுகள்...பிடியுங்கள் பூங்கொத்தை...
  கூடவே பதிவுலக சமாதானப் புறா என்ற பட்டத்தையும்

  ReplyDelete
 39. ///நீங்கள் சொல்வது மிகவும் சரி
  பதிவுகளைப் படித்து முடித்ததும்
  தரமான பதிவு எனில்
  மனம் திறந்து பாராட்டுவோம்
  கொஞ்சம் புதிதாக எழுதுபவர்கள் எனில்
  ஊக்கப்படுத்தும்படியாக எழுதுவோம்
  காலப் போக்கில் அவர்களும் தரமான
  பதிவுகளைத் தர தயாராகிவிடுவார்கள்
  அதுதான் சராசரிகளைவிட மேம்பட்டவர்கள் என
  எண்ணி பதிவுலகிற்கு வந்தவர்களுக்கு அழகு
  மற்றவர்களை கண்டுகொள்ளவேண்டாம்
  அலட்சியப் படுத்துவதிலேயே மிக உயர்ந்தது அதுதான்
  மிக நல்ல பதிவு.தொடர வாழ்த்துக்கள் //

  what ever MR.Ramani sir said 100% right. I agree with him

  ReplyDelete
 40. உங்க நாகரிக அனுகுமுறை உங்க உயர்தரத்தைக் காட்டுதுனு நான் எடுத்துக்கிறேன்.

  ஆனால், துஷ்டனைக்கண்டால் தூர விலகு, பிடிக்கலைனா ஒதுங்கிப் போ என்கிறதெல்லாம் என்னைப்போல் ஒரு சிலருக்கு ஒத்துவருவதில்லை.

  ஒருசில நேரம் ஒரு சில பதிவுகளை, பதிவரை விமர்சிக்க வேண்டியது அவசியம் என நம்புறேன்.

  ரெளடி, கெட்டவன், தரமில்லாதவன், நமக்கு ஒத்துவரலை, னு அவன்/அவள் என்னவேணா எழுதட்டும் செய்யட்டும்னு ஒதுங்கிப் போவது சமுதாயத்துக்கும் நம் மனசாட்சிக்கும் நாம் செய்யும் துரோகம் என நம்புகிறேன்!

  கடுமையாக விமர்சிக்கும்போதுதான் அந்தப் பதிவருக்கே தான் தடம் புரண்டது/தரமிழந்தது விளங்கும்னு நெனைக்கிறேன்!

  Sorry for disagreeing with your views! :)

  ReplyDelete
 41. ஒருத்தர் எழுதிய பதிவு பிடிக்கலைனா அதை சுத்தமா கண்டுக்க கூடாது, இல்லைனா அமைதியாக நாகரீகமான முறையில் கருத்துக்களை சொல்ல வேண்டும். அதைவிடுத்து அநாகரீகமான வார்த்தை பிரயோகங்கள், மனித நேயமற்ற விமர்சனங்கள் ! இப்படி செய்து எதை சாதிக்க போகிறாய் , என்ன எதிர் பார்க்கிறாய் ? என்ன வேண்டும் உனக்கு ? மனதினுள் இருக்கும் வக்கிரம் வார்த்தைகளாய் வெளியே வருவதும், அது சக மனிதனை கீறி கிழிப்பதிலும் என்ன சுகம் கண்டாய் ? பிறரின் மனதை கொல்வது சரி என்று யார் சொன்னார்கள் உங்களுக்கு ?!
  very good

  ReplyDelete
 42. கௌசல்யா...

  அருமையான கருத்துக்களை பதிந்திருக்கிறீர்கள்...

  நீங்கள் சொல்லும் அனைத்து கருத்துக்களோடும் உடன்படுகிறேன்...

  தூற்றலே இன்று பதிவுலகில் மிக மிக அதிகம்...

  இதை விடுத்து தோழமை மனப்பான்மையுடன் அனைவரும் நடந்து கொண்டால், பதிவுலகம் நன்றாக இருக்கும்...

  ReplyDelete
 43. இந்த பதிவு, சனி ஞாயிறு - நான் பதிவுலகம் பக்கம் வராத போது மிஸ் பண்ணிவிட்டேன் போல... இப்பொழுதுதான் பார்த்தேன்.... நல்ல தெளிவான பார்வையில் பதிவு உள்ளது!

  ReplyDelete
 44. அக்கா...
  உண்மையில் பதிவுலகுக்கு தேவையான பதிவு...
  தமிழர்கள் நாம் என்று உணர்ந்து பதிவுகளையும், பின்னூட்டங்களையும் அரசியலாக்காமல் ஆக்கப்பூர்வமாக படைப்போம்.

  ReplyDelete
 45. @@ jothi...

  உங்களின் கருத்து நிறைவாக இருக்கிறது நன்றி.


  @@ சௌந்தர்...

  புரிதலுக்கு நன்றி சௌந்தர்.  @@ மாணவன்...

  நன்றி சகோ.

  ReplyDelete
 46. @@ S.Sudharshan said...

  //சிலர் ஒரு படத்தை (படைப்பை) விமர்சிப்பதை விட்டுவிட்டு அதை இயக்கியவரை விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது .//

  நீங்க பதிவுலகத்தை நன்றாக கவனித்து கொண்டு வரீங்க என்று புரிகிறது :))

  முதல் வருகை என்று நினைக்கிறேன். மிக்க நன்றி

  ReplyDelete
 47. @@ ஆனந்தி.. said...

  //இது ஒரு ஜாலியான டைம் பாஸ்...நல்ல நட்பு வட்டாரம் அப்படிங்கிறதை மட்டும் எடுத்துட்டு சகஜமாய் போவது தான் ஆரோக்கியமான நிலை...சரிதானே கௌஸ்..//

  எதிர்மறையான கருத்துக்கள் சொன்னாலும் ஏற்று கொள்ளகூடிய மனபக்குவம் வேண்டும். அதை விடுத்து பதிவரின் சொந்த குடும்பம் வரை இழுத்து பேசுவது மிக அநாகரீகம் உங்கள் கருத்து மிக சரியே தோழி.

  டைம் பாஸ் என்பது சிலருக்கு இருக்கலாம் பலருக்கு அப்படி இல்லை தோழி, ஏதாவது உருப்படியா செய்யணும் என்ற ஆர்வத்தில் எழுதுபவர்கள் பலர்...அதே நேரம் நட்பையும் பாராட்டும் எண்ணம வேண்டும்.

  (உங்களின் சில பதிவுகள் வெறும் டைம் பாஸ் என்று சொல்ல இயலாது தோழி )

  கருத்துக்கு நன்றி ஆனந்தி.

  ReplyDelete
 48. @@ கே. ஆர்.விஜயன் said...

  //என்றாலும் எல்லா மனிதனும் ஒரே இயல்பை பெற்றவரில்லை. அதையோட்டி தான் அவனுடைய ஏற்றத்தாழ்வுகள்//

  அது என்னவோ சரிதான், ஆனால் குறைந்த பட்ச அன்பும் மனித நேயமும் எல்லா மனிதனுக்கும் அவசியம் என்று கருதுகிறேன் விஜயன்.

  கருத்திற்கு நன்றி.

  ReplyDelete
 49. @@ கொக்கரகோ... said...

  ஒத்த கருத்துடையவர்கள் கூட சில நேரம் தங்களை முன்னிறுத்த வேண்டி முரண்பட்டு விடுகிறார்கள் சௌமியன்.

  //"நல்லவர்கள் நமக்கேன் வம்பு" என்று ஒதுங்கிப் போய்விடுவதால், எஞ்சியிருப்பவை மட்டுமே ஒட்டுமொத்த நம் தமிழ் சமூகத்தின் பிம்பமாக மற்றவர்களால் உணரப்பட்டுவிடும்//

  இது தான் மொத்த பதிவின் பொருளடக்கம்

  புரிதலுக்கு நன்றி

  ReplyDelete
 50. Indian No 1 Free Classified website www.classiindia.com
  No Need Registration . Just Post Your Articles Get Life time Income.

  Start to post Here ------ > www.classiindia.com

  ReplyDelete
 51. @@ சி.பி.செந்தில்குமார்...

  புரிதலுக்கு நன்றிங்க.  @@ ரஹீம் கஸாலி...

  நன்றி சகோ.
  @@ எஸ்.கே said...

  //எழுதும் முன் நாம் அந்நிலையில் இருந்தால் மனம் என்ன நினைக்கும் என்று ஒரு முறை யோசித்து எழுதினால் போதும்!//

  மிக சரியான உண்மை எஸ்.கே நன்றி.

  ReplyDelete
 52. @@ T.V.ராதாகிருஷ்ணன்...

  நன்றிங்க.

  ReplyDelete
 53. @@ ஜாக்கி சேகர் said...

  //ஆனால் சில நேரத்தில் சில பதில்கள் சொல்லவேண்டிதான் இருக்கின்றது...காரணம் நாம் எல்லாத்தையும் அனுமதிப்பது போல் அகிவிடும்...//

  சரிதான். ஆனால் தேவை இன்றி எதிர்வாதம் செய்பவர்களை, கண்டுகொள்ளாமல் தவிர்ப்பது நல்லது. அதற்க்கு நாம் பதில் சொன்னால் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் ஆகிவிடும் எனது என் கருத்து.

  உங்களின் இந்த முதல் வருகை எனக்கு மகிழ்வை கொடுக்கிறது. நன்றி.

  ReplyDelete
 54. @@ பயணமும் எண்ணங்களும் said...

  உண்மைதான் தோழி. நல்ல கருத்துக்கள் சொல்கிறவர்கள் அரிதாகி போகிறார்கள் என்பதைவிட அதை ஏற்று கொள்கிறவர்கள் குறைவு என்று கூட சொல்லலாம்.

  நன்றி.

  ReplyDelete
 55. @@ கோமாளி செல்வா said...

  // படிப்பவருக்குப் பிடிக்கலைனா அங்கே பின்நூட்டத்துலையே சொல்லலாமே?//

  ஒத்துகொள்ளக்கூடிய ஒரு நல்ல கருத்து செல்வா.

  //என்னைப் பொறுத்த மட்டில் பதிவுலக பிரபலம் என்பதெல்லாம் வெறும் மாயை.. பதிவுலகம் என்பது உலகம் முழுவதிலும் நண்பர்களைப் பெற உதவும் என்பது தான் எனக்குத் தெரிந்தது.//

  நல்ல நண்பர்களை பெற்ற நீங்க கொடுத்துவைத்தவர்.

  //பார்த்த பயந்து ஓடிரனும் போல இருக்கும் .. ஹி ஹி .//

  இதை முன்னாலேயே சொல்லி இருக்கலாமே செல்வா, மாத்தி இருப்பேனே. :))

  தெளிவான கருத்திற்கு நன்றி செல்வா.

  ReplyDelete
 56. @@ இரவு வானம் said...

  //என்னுடைய மனதில இருந்தவைகளையும் போட்டு உடைத்து விட்டீர்கள் மேடம், பதிவுலகம் என்றும் நட்புணர்வுடன் ஆக்கபூர்வமாய் திகழ வேண்டும் ///

  பலரின் மனதிலும் இருப்பவை தான். பதிவுலகம் நட்புணர்வுடன் திகழவேண்டும் என்ற உங்களின் விருப்பம் பிடித்திருக்கிறது நண்பரே.

  நன்றி.

  ReplyDelete
 57. @@ கக்கு - மாணிக்கம் said...

  // நான் பல முறை பின்னூட்டமிட்டு இருக்கிறேன். இங்கு நடக்கும் சண்டை சச்சரவுகள் அனைத்தும் நிழல் சண்டைகளே இதனை மேலும் கூட்டி வளர்க்காமல் நட்பை வளர்க்கவேண்டும் என்று. //

  நிழல் சண்டைகள் சில நேரம் குடும்ப உறவுகள் வரை இழுத்து சண்டை போடுவதில் போய் முடிந்து விடுகிறது. அதுதான் பிரச்சனையே.உங்களை போல் புரிந்து கொண்டால் தேவலை.

  மகிழ்கிறேன் உங்களின் கருத்திற்கு.

  நன்றி.

  ReplyDelete
 58. @@ ஹேமா said...

  //உங்கள் எண்ணங்களை சொல்லிகொண்டேயிருங்கள்.உங்கள் கருத்துக்களைக் கேட்கவென்றே நடுநிலை மனம் கொண்டவர்கள் நிறையப்பேர் !//

  உங்களின் இந்த உற்சாக வார்த்தைக்கு ரொம்ப சந்தோசபடுகிறேன் ஹேமா.

  நன்றி தோழி.

  ReplyDelete
 59. @@ Ramani said...

  //சராசரிகளைவிட மேம்பட்டவர்கள் என எண்ணி பதிவுலகிற்கு வந்தவர்களுக்கு அழகு
  மற்றவர்களை கண்டுகொள்ளவேண்டாம்
  அலட்சியப் படுத்துவதிலேயே மிக உயர்ந்தது//

  மிக தெளிவாக விளக்கமாக உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்தமைக்கு மகிழ்கிறேன் சார். உங்களின் கருத்துக்களோடு அப்படியே உடன் படுகிறேன்.

  மிக்க நன்றி.

  ReplyDelete
 60. @@ middleclassmadhavi...

  நன்றி தோழி.

  ReplyDelete
 61. @@ நிரூபன் said...


  // நான் பதிவுலகிற்கு புதியவன் ஒரு சில விடயங்களைப் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது.//

  உங்கள் கருத்துக்கள் பிடித்திருக்கிறது. உங்கள் பதிவுகளை படித்திருக்கிறேன்.நன்றாக உள்ளது.

  பதிவுலகம் உண்மையில் மிக அற்புதமானது. ஒரு சில நிகழ்வுகள் அங்கே இங்கே நடப்பது தவிர. போக போக புரிந்து கொள்வீர்கள்.

  வருகைக்கு நன்றி நண்பரே.

  ReplyDelete
 62. @@ சேட்டைக்காரன்...

  மிக அரிதாக உங்கள் வருகை இருந்தாலும் அதை மிக மதிக்கிறேன். நன்றி. மகிழ்கிறேன்.

  ReplyDelete
 63. @@ இம்சைஅரசன் பாபு.. said...

  // இன்னும் நிறைய பேர் நல்ல பதிவு எழுதுகிறார்கள் நீ போய் படி அப்படின்னு சொல்ல கூடாது ..//

  உங்களை யார் அப்படி தொந்தரவு பண்ணினா ? ரொம்ப பயந்த சுபாவம் நீங்க என்பது எனக்கு தெரியுமே... :))

  ReplyDelete
 64. @@ Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

  //விரும்பியதை எழுதுவதும், விரும்பியதை படிக்கவும்.. முழு சுதந்திரம் இருப்பதால்.. அதை துஷ்ப்ரயோகம் செய்யாமல் இருத்தல் எல்லாருக்கும் நல்லது.//

  மிக சரி ஆனந்தி. அனைவரும் இதை புரிந்து கொண்டால் போதும்பா நன்றி

  ReplyDelete
 65. @@ அன்பரசன்...

  நன்றி சகோ.

  ReplyDelete
 66. @@ பத்மஹரி said...

  //பதிவுகள் விவாதிக்கப்பட வேண்டும். ஆனால் அதில் நாகரீகமும், முதிர்ச்சியும் வெளிப்பட வேண்டும். //

  தெளிவான கருத்துக்கு நன்றி ஹரி.

  ReplyDelete
 67. @@ ஜோதிஜி said...

  //எங்கள் ( Hema இந்தஇடத்தில் வர வேண்டிய வார்த்தை தமிழன்?) //

  தோழி கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன். சுட்டி காட்டியமைக்கு நன்றி.

  ReplyDelete
 68. @@ asiya omar said...

  //எப்படியும் நம் பதிவ்ர்கள் ஆரோக்கியமாக கொண்டு செல்வார்கள் என்ற நம்பிக்கை எப்பவும் உண்டு.//

  ஒரு சிலருக்காக நம்பிக்கை இழக்க முடியுமா ? நிச்சயம் பதிவுலகம் ஆரோக்கிய பாதையில் தான்.....

  நன்றி தோழி.

  ReplyDelete
 69. @@ ஜெய்லானி...

  ஆனந்தியின் கருத்துகள் நிதர்சனம்.

  அழகான ஒரு புன்னகைக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 70. @@ dheva said...

  // இது ஒரு பொதுவெளி என்பதை அனைவரும் உணரவேண்டும்.//

  இது ஒன்றை புரிந்து கொண்டாலே போதுமே, எழுத்துக்களில் தெளிவு வந்துவிடும்.

  நன்றி தேவா.

  ReplyDelete
 71. @@ FOOD said...

  //பதிவுலக விகற்பங்கள் விலக உங்கள் பதிவு வழிகாட்டும், //

  நன்றி அண்ணா

  ReplyDelete
 72. @@ malgudi...

  உங்களின் வருகைக்கும், புரிதலுக்கும் நன்றி.

  ReplyDelete
 73. @@ ஆகாயமனிதன்.. said...

  //தலைப்பே like போட வச்சிருச்சு....//

  அட, அப்ப பதிவை படிக்கலையா ? :))

  வருகைக்கு நன்றிங்க.

  ReplyDelete
 74. @@ angelin said...

  //speech is silver silence is Gold.//

  சத்தியம்.

  அப்புறம் உங்களை ரொம்ப நாளா மிஸ் பண்ணியது போல் இருக்கிறது தோழி.

  ReplyDelete
 75. @@ அப்பாதுரை said...

  //உங்கள் பதிவின் உட்பொருள் புரியவில்லை - என்றாலும் குரல் கொடுத்திருப்பது பொது மேன்மைக்கே. என்னுடைய குரலையும் சேர்க்கிறேன்//

  மொத்த பதிவின் உட்பொருள் என்று சொல்வதை விட கடைசி வேண்டுகோள் என்று ஒன்றை சொல்லலாம்

  "பிறர் உன்னிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று நினைக்கிறாயோ அப்படியே நீ முதலில் நட"

  இது சரியா சகோ ??

  நீங்கள் வந்தால் தான் என் பதிவு நிறைவு பெறுகிறது என்பது உண்மை. நன்றி.

  ReplyDelete
 76. @@ விக்கி உலகம்...

  வருகைக்கு நன்றி.  @@ டக்கால்டி said...

  நன்றிங்க.

  ReplyDelete
 77. @@ Avargal Unmaigal...

  புரிதலுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 78. @@ வருண் said...

  //ஆனால், துஷ்டனைக்கண்டால் தூர விலகு, பிடிக்கலைனா ஒதுங்கிப் போ என்கிறதெல்லாம் என்னைப்போல் ஒரு சிலருக்கு ஒத்துவருவதில்லை.//

  தூர விலகுவதும் ஒரு அளவு தான், அளவு அதிகமானால் தட்டி கேட்பதில் தவறில்லை, நாகரீகமான முறையில்.

  //ஒருசில நேரம் ஒரு சில பதிவுகளை, பதிவரை விமர்சிக்க வேண்டியது அவசியம் என நம்புறேன்.//

  இதை நானும் செய்கிறேனே...

  //ரெளடி, கெட்டவன், தரமில்லாதவன், நமக்கு ஒத்துவரலை, னு அவன்/அவள் என்னவேணா எழுதட்டும் செய்யட்டும்னு ஒதுங்கிப் போவது சமுதாயத்துக்கும் நம் மனசாட்சிக்கும் நாம் செய்யும் துரோகம் என நம்புகிறேன்!//

  மிக நேர்மையான கருத்துக்கள் வருண். ஒத்துக்கொள்கிறேன்.

  //கடுமையாக விமர்சிக்கும்போதுதான் அந்தப் பதிவருக்கே தான் தடம் புரண்டது/தரமிழந்தது விளங்கும்னு நெனைக்கிறேன்!//

  உண்மைதான், ஆனால் இப்படி கடுமையான விமர்சனம் வரும் என்று எண்ணியே பதிவிடுபவர்களை என்ன செய்வது...?!

  //Sorry for disagreeing with your views! :)//

  சர்ரி எதற்கு வருண், உங்க கருத்துக்களை நீங்க சொல்றீங்க. இது கருத்துக்களை சொல்லும் இடம் தானே...? :))

  ஒளிவு மறைவின்றி கருத்துக்களை வெளிபடுத்திய உங்களுக்கு என் நன்றிகள்.

  ReplyDelete
 79. @@ சிட்டி பாபு...

  வருகைக்கும் புரிதலுக்கும் நன்றி.

  ReplyDelete
 80. @@ R.Gopi said...

  //இதை விடுத்து தோழமை மனப்பான்மையுடன் அனைவரும் நடந்து கொண்டால், பதிவுலகம் நன்றாக இருக்கும்..//

  புரிதலுக்கு நன்றி கோபி. :))

  ReplyDelete
 81. @@ Chitra said...

  தாமதமாக வந்தாலும் எனக்கு மிக சந்தோசமே சித்ரா .

  நன்றி

  ReplyDelete
 82. @@ சே.குமார் said...

  //தமிழர்கள் நாம் என்று உணர்ந்து பதிவுகளையும், பின்னூட்டங்களையும் அரசியலாக்காமல் ஆக்கப்பூர்வமாக படைப்போம்//

  கண்டிப்பாக குமார். உங்களின் புரிதலுக்கு நன்றி.

  ReplyDelete
 83. சாட்டையடி கௌசி. ஆனா உறைக்கும்னு நினைக்கிறீங்க.. ம்ஹூம்.

  ReplyDelete
 84. இப்படியெல்லாம்கூட நடக்குதா இங்க... பாத்து சூதானமா நடந்துக்கணும் போலருக்கே... நன்றி அக்கா...

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...