திருமணம் என்ற பந்தம் வேறுபட்ட கலாச்சாரம், சூழ்நிலையில் வளர்ந்த இருவரை இணைத்து வாழ்வின் இறுதிவரை தொடர்ந்து ஒன்றாக பயணிக்க வைக்கிறது. இந்த பயணத்தில் பல மேடு, பள்ளங்கள் இருந்தாலும் அதை வெற்றிகரமாக கடந்து செல்வதற்கு பரஸ்பர அன்பு அவசியப்படுகிறது. அந்த அன்பு சட்ரென்று வரவழைக்கக் கூடிய மந்திர செயல் அல்ல. மெல்ல மெல்ல இதழ் விரித்து மலர்ந்து மணம் பரப்பும் அழகிய ரோஜா மலரை போன்றது. எங்கள் இருவருக்கும் இடையிலும் அன்பு ஒரே நாளில் வந்துவிடவில்லை, பூ மலருவதே தெரியாத மாதிரி மலர்ந்த அந்த அன்பு தான் இன்று வரை மணம் பரப்பி கொண்டிருக்கிறது.
முதல் நாள்
திருமணதிற்கு முன் தினம் எங்களின் நிச்சயதார்த்தம் எங்கள் சொந்த ஊரில் வைத்து நடந்தது.....! மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே சொந்த ஊர் பக்கம் (குற்றால சாரல் கொட்டமடிக்கும் தென்காசி) அதுவும் ஒரு வாரம் மட்டும் எட்டி பார்க்கும் எங்களுக்கு, இந்த சூழ்நிலை எல்லாமே ரொம்ப புதுசு...! எங்கு பார்த்தாலும் உறவினர்கள் சூழ்ந்து அந்த இடமே கலகலப்பாய் இருந்தது....என் அண்ணனின் நண்பர்கள் வேறு அவர்கள் பங்கிற்கு சவுண்ட் கொடுத்திட்டு இருந்தார்கள். அதில் ஆங்கிலோ இந்தியன் நண்பன் ஒருவர் , அவரை வயதான பாட்டிகள் எல்லாம் சூழ்ந்திட்டு அவர் கடிச்சி துப்பின தமிழை ரசிசிட்டு இருந்தது நல்ல காமெடியா இருந்தது.
திருமணதிற்கு முன் தினம் எங்களின் நிச்சயதார்த்தம் எங்கள் சொந்த ஊரில் வைத்து நடந்தது.....! மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே சொந்த ஊர் பக்கம் (குற்றால சாரல் கொட்டமடிக்கும் தென்காசி) அதுவும் ஒரு வாரம் மட்டும் எட்டி பார்க்கும் எங்களுக்கு, இந்த சூழ்நிலை எல்லாமே ரொம்ப புதுசு...! எங்கு பார்த்தாலும் உறவினர்கள் சூழ்ந்து அந்த இடமே கலகலப்பாய் இருந்தது....என் அண்ணனின் நண்பர்கள் வேறு அவர்கள் பங்கிற்கு சவுண்ட் கொடுத்திட்டு இருந்தார்கள். அதில் ஆங்கிலோ இந்தியன் நண்பன் ஒருவர் , அவரை வயதான பாட்டிகள் எல்லாம் சூழ்ந்திட்டு அவர் கடிச்சி துப்பின தமிழை ரசிசிட்டு இருந்தது நல்ல காமெடியா இருந்தது.
ஆனால் நானும் என் சகோதரர்கள் மட்டும் திருதிருனு (ஏன் திருமதி திருமதின்னு போடகூடாது...??!) முழிச்சிட்டு இருந்தோம். அப்ப சினிமாவில் பார்த்த மாதிரியான ஒரு கெட்டப்பில் பின்னால் சிலர் புடை சூழ வெள்ளையும் வேஷ்டியுமாய் நாட்டாமை ஒருவர் வந்தார். அதுவரை ஸ்லோமோஷனில் நடந்து கொண்டிருந்த எல்லோரும் என்னவோ ஏதோ என்று ஓடுவதை பாவம்போல பார்த்திட்டு இருந்தேன்.
பெரியவர்கள் அனைவரும் முன்னாடி உள்ள ஹாலில் போய் அமர தொடங்கினர். நான் இரு அறைகள் தள்ளி இருந்தேன். இருபது பேர் வட்டமாக அமர்ந்து மும்முரமா எதை பற்றியோ விவாதித்து கொண்டு இருந்தார்கள். அங்கே என்ன பேசுகிறார்கள் என்று என் தம்பி அடிக்கடி வந்து நேரடி ஒலிபரப்பு செய்து கொண்டிருந்தான். திடீரென்று சத்தமாக ஒரு குரல் (வேற யாரு நாட்டாமை தான்...! ) "தாய் மாமா எங்கப்பா ?? ", இதோ வந்திட்டேன் என்று என் அம்மாவின் அண்ணன் குரல் கொடுத்து கொண்டே வந்தார். ஊரில் (ஸ்ரீவில்லிபுத்தூர்) இருந்து அப்போது தான் வந்திருக்கிறார் (அது எப்படி சரியான நேரம் உள்ளே என்ட்டர் ஆனார் ஆச்சரியம்....??!! )
சம்பிரதாய பேச்சுகள் எல்லாம் ( ஒரு மணி நேரமாவா....??!!) நடந்து முடிந்து என்னை அழைத்தார்கள். என்னை அழைத்து வந்த அக்கா (பெரியம்மா மகள்) என் காதில் அப்ப அப்ப மெதுவா ரன்னிங் கமெண்டரி சொல்லிட்டே வந்தாங்க. தலையை குனி...... மெதுவா நட.... எல்லோருக்கும் பொதுவா ஒரு வணக்கம் சொல்.....!! சரி என்று வணக்கம் சொன்னதும் ஒரு தட்டை கொடுத்தார்கள். "சீக்கிரமா 5 நிமிசத்தில இந்த புடவையை மாத்தி பொண்ணை கூட்டிட்டு வாங்க (ஒரு மணி நேரம் பேசினப்ப தெரியலையா...நான் டிரஸ் மாத்த மட்டும் வெறும் 5 நிமிஷமா...? நாட்டாமை தனியா மாட்டின நீ தொலைஞ்ச... ) ஒரு வழியா பத்து நிமிசத்தில் மறுபடி அழைத்து வரப்பட்டேன்....
அப்ப நாட்டாமை என்னை பார்த்து ஒரு லுக் விட்டார் பாருங்கள் நடிகர் திலகம் மாதிரி....நானும் ஒண்ணும் புரியாம அன்பா ஒரு சிரிப்பு சிரிச்சேன்....?! "தாயீ எல்லார் கால்லையும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கோ" (இதுக்கு தான் அந்த லுக்கா...?!) நானும் சரி ஆசிர்வாதம் தானே என்று புடவையை நல்லா இடுப்பில் ஒரு சொருகு சொருகிட்டு விழ தயார் ஆனேன்...முதலில் சாஷ்டாங்கமா அம்மா, அப்பா அப்புறம்.... மெதுவா திரும்பி பார்த்தா, ஒரு இருபது பேருக்கு மேல வரிசை கட்டி நிக்கிறாங்க....?! இது என்னடா சோதனை என்று பரிதாபமாக அம்மாவை தேடினா ஆள் எஸ்கேப் (ஏற்கனவே தெரியும் போல ...!!?)
அந்த நேரம் பார்த்து என் சின்ன தம்பி கீழ விழுந்து வணங்கிட்டு இருந்த என்னை மெதுவா தூக்கி விட்டான். அடடா ! அம்மா கைவிட்டாலும் தம்பி இருக்கிறானே (தம்பி உடையாள் இந்த படைக்கு அஞ்சாள் !) அப்படின்ற மகிழ்ச்சியில் வேகமா அடுத்த காலில் விழுந்தேன். விழுந்து எழுந்ததும் என் கையில் பணம் கொடுத்தாங்க 'அட இது வேறயா..?!'என்று சந்தோசமா வாங்கினேன்...'அக்கா என்கிட்டே கொடு நான் பத்திரமா வச்சிக்கிறேனு' என்கிட்டே இருந்து பிடுங்காத குறையா வாங்கிட்டான்..அப்பதான் புரிஞ்சது என் தம்பியோட திடிர் பாசம்....?!! (ரொம்ப அப்பாவியா இருக்கமோ...!?) ம்...தொடக்கத்தில் இருந்த வேகம் மெதுவா குறைஞ்சு ஒரு மாதிரி ஆகிட்டேன்....'வராண்டாவிலும் நிறைய பேர் இருக்காங்க தாயீ இங்க வா' என்று அதே வெண்கல குரல் அடபாவிகளா உங்க கொடுமைக்கு அளவே இல்லையா என்று மனசுக்குள் நொந்து கிட்டே மெதுவா அங்கயும் போய் விழுந்தேன் இல்லை ஆசிர்வாதம் வாங்கினேன்...!!
இனி முடியாது சாமிகளா என்று ஒரு சேரில் போய் அப்படியே உட்கார்ந்துட்டேன்...அப்ப திடீரென்று வாசலில் கட்டி இருக்கிற ஸ்பீக்கரில் இருந்து மைகேல் ஜாக்சன் குரல் ( அட பாட்டு தாங்க )அப்படியே என் சோர்வு எல்லாம் என்னை விட்டு பறந்தது போல் ஒரு உணர்வு....! ஆனா இந்த பாட்டு இங்க எப்படி சாத்தியம்...?!எல்லாம் என் அண்ணனின் நண்பர்களின் கைங்கரியம்...என் மூடை மாத்ரான்கலாம். (அட தேவுடா ! பயங்கரமா யோசிச்சி 007 நம்பர் செட் பண்ணி இருந்த என் சூட்கேசை எப்படி தெரந்தாங்க...அதுல நான் வச்சிருந்த காசெட் தான் இது !)இப்ப புதுசா இந்த குழப்பம் வேற...!
" யாருலே அது புரியாத பாட்டை போடுறது ??" நாட்டாமை. இந்த நாட்டாமை எனக்கு தாத்தா முறையாம். சரியா போச்சு...!(இது தெரியாம மனசுக்குள்ள ரொம்ப திட்டிடோமோ...?!)
நாளை கல்யாணம்....ஆனா இன்றே சோர்ந்து போய்விட்டேன்...'எப்படி இருக்கும் அந்த திருமணம்' என்ற புது குழப்பத்துடன் நடு இரவை தாண்டி பின் அப்படியே தூங்கி போனேன்..
விடிந்தது பொழுது.....(அப்படின்னு சொல்லி எழுப்பினாங்க.....?!)
என் கணவர் ஊரில் திருமணம், ஒரு தேவாலயத்தில் நடந்தது. வெகு சிறப்பா நடந்தது என்று தான் சொல்லணும், ஏன்னா அவ்வளவு கூட்டம். அந்த கூட்டத்தை பார்த்து எனக்கு பெருமை பிடிபடல. அப்புறம் தான் தெரிந்தது அன்னைக்கு மட்டும் அந்த சர்ச்சில ஆறு கல்யாணமாம்...?!(ம்...அது தெரியாம பெருமை பட்டுடேனே...!)ஒரு வழியா என் திருமணம் முடிந்து சர்ச் விட்டு வெளியே வந்தோம்.
அப்போது அங்கே பெரிய கூட்டத்தின் நடுவே பேண்டு வாத்தியங்கள், டிரம்ஸ் அடிச்சிட்டு இருந்தாங்க. அப்ப என் கூட நடந்து வந்திட்டு இருந்த என் அண்ணனிடம் "நல்லா அடிக்கிராங்கல்ல... கொஞ்சம் நின்னு கேட்டுட்டு போலாமே" என்றேன். "அட லூஸ், இது உன் கல்யாணத்துக்காக மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஏற்பாடு,எல்லாம் வீடியோவில் இருக்கும், அப்போ பார்த்துக்கோ" என்றான். (என்னவோ என்னை கேட்டுத்தான் புக் பண்ணின மாதிரி இவன் என்னை லூஸ் என்கிறான்...!டேய் அண்ணா,சமயம் கிடைக்கட்டும் அப்ப இருக்கு உனக்கு, ஏற்கனவே பழைய பாக்கி வேற ஓன்னு இருக்கு...!? மாப்பிளை பிடிக்கலை சொல்வான்னு, போய் பார்த்திட்டுவானு இவனை நான் அனுப்பி வச்சா, போய் பார்த்திட்டு வந்து 'இதை விட நல்ல சாய்ஸ் உனக்கு கிடைக்காது'ன்னு பல்டி அடிச்சவன் ஆச்சே இவன்...!)
ஊர்வலம் சும்மா சொல்லகூடாது முன்னாடி நாலு காரு, பின்னாடி வேற வரிசையா நிறைய கார்கள், திரும்பி திரும்பி பார்த்து ரசிச்சிட்டே வந்தேன். மறுபடியும் எனக்கு பெருமை தாங்கல மனசுக்குள் சிரிச்சிட்டே வந்தேன்...! ஆனா அதுவும் ரொம்ப நேரம் நீடிக்கல...?! டிரைவர் கிட்ட என்னவர் 'இந்த ரோட்ல எப்பவும் டிராபிக் தான்' வர வண்டி எல்லாம் நம்மள பாலோ பண்ணற மாதிரியே இருக்குனு கிண்டல் பண்ணி ஒரே சிரிப்பு. (அட ச்சே ஒருத்தி எத்தனை பல்புதான் வாங்குவா...?!)
( நன்றி 'பல்போ பல்பு' இ.அ.பாபு)
( நன்றி 'பல்போ பல்பு' இ.அ.பாபு)
கொஞ்ச தூரம் கடந்ததும் ஒரே டமால் டுமீல்னு பயங்கர சத்தம்...!?
பதிவு பெரிதாகி விட்டதால் மீதி அடுத்த பதிவில் தொடரும்...
"பாவம்ங்க உங்க நாட்டாமை அப்ப நீங்க பல்பு வாங்கினிங்க...இப்ப அவரு உங்ககிட்டே தினமும் பல்பு வாங்குறாருன்னு நினைக்கிறேன்))))
பதிலளிநீக்குகௌசல்யா .... நான்தான் மாட்டிடேனா. என்னங்க நீங்க இந்த நிறம் பார்த்து இப்படி ஒரு பதிவு போட்டு.... எங்கள மாதிரி ஒண்டிகட்டையோட நிலைமைய கொஞ்சம் நினைச்சிப் பார்த்தீங்களா...?
பதிலளிநீக்கும் ம் ம் ம் சும்மா இருந்த சங்க ஊத்தி விட்டுடீங்க.. என்ன பண்ணலாம்...? வீட்ல பேச வேண்டியதுதான்.
மிக நல்ல அனுபவம் போல இருக்கு. வாழ்த்துக்கள்.
எங்களுக்காக வேண்டிகோங்க...
பல்பு திலகமே.... இப்படியா ஓவரா கற்பனை பண்ணி எதிர்பார்கறது.... ரொம்ப சினிமா பார்க்கறீங்க
பதிலளிநீக்குஉங்க நினைவலைகளில் நானும் மூழ்கினேன்.. என் நினைவை நினைத்து...
பதிலளிநீக்குஅடுத்த பகுதிக்காக ஆவலுடன் வெயிட்டிங்
பதிலளிநீக்கு//ஏன் திருமதி திருமதின்னு போடகூடாது...??!) //
பதிலளிநீக்குஇது ஒரு நல்ல கேள்வி சகோ!
//ஒரு மணி நேரமாவா....??! //
ரொம்பச் சீக்கிரமா இருக்கு ;)
//அம்மா கைவிட்டாலும் தம்பி இருக்கிறானே//
ஆப்பு பின்னாடி வரும் :)
//அக்கா என்கிட்டே கொடு நான் பத்திரமா வச்சிக்கிறேனு //
வந்திருச்சு :))
//007 நம்பர் //
ஆமா ரொம்ப சீக்ரெட் நம்பர் ;)
//விடிந்தது பொழுது//
யாருக்கு? ;)
//அட ச்சே ஒருத்தி எத்தனை பல்புதான் வாங்குவா //
ஹி ஹி
//அருண் பிரசாத் said...
பதிலளிநீக்குபல்பு திலகமே.... //
அட.. இது சூப்பரு :))
very interesting.தொடர்ந்து எழுதுங்க,எனக்கு முந்திய பதிவு நினைவு இருக்கு,புதுசாக படிப்பவர்களுக்கு வசதியாக இருக்க லின்க் கொடுங்க.
பதிலளிநீக்குஆனால் நானும் என் சகோதரர்கள் மட்டும் திருதிருனு (ஏன் திருமதி திருமதின்னு போடகூடாது...??!) முழிச்சிட்டு இருந்தோம்.
பதிலளிநீக்கு...Correct!!! correct!!!
மறுபடியும் எனக்கு பெருமை தாங்கல மனசுக்குள் சிரிச்சிட்டே வந்தேன்...! ஆனா அதுவும் ரொம்ப நேரம் நீடிக்கல...?! டிரைவர் கிட்ட என்னவர் 'இந்த ரோட்ல எப்பவும் டிராபிக் தான்' வர வண்டி எல்லாம் நம்மள பாலோ பண்ணற மாதிரியே இருக்குனு கிண்டல் பண்ணி ஒரே சிரிப்பு. (அட ச்சே ஒருத்தி எத்தனை பல்புதான் வாங்குவா...?!)
பதிலளிநீக்கு........சும்மா சொல்ல கூடாது..... பதிவில் செம ஒளிமயம்!!!!! ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா......
நான் அப்பாவி தானோ ? பல்புன்னா ஒன்னும் புரியலையே.(நம்ம ஊர்ல டியூப் லைட் ன்னு சொல்வங்களே அதுதானோ !.
பதிலளிநீக்குஎனக்கு போட்டியா நீங்க வேற பல்பு வாங்குறீங்களா ?.......(அப்படா இப்ப தான் கம்பெனிக்கு ஆள் கிடைச்சிருக்கு )
பதிலளிநீக்குஉங்கள் பதிவை படிக்கும் பொழுது மெல்ல என்னோட கல்யாண நாள் நினைவுகளையும் அப்படியே மெல்ல அசை போடுகிறேன் சகோ .........
//"நல்லா அடிக்கிராங்கல்ல... கொஞ்சம் நின்னு கேட்டுட்டு போலாமே" என்றேன். "அட லூஸ், இது உன் கல்யாணத்துக்காக மாப்பிள்ளை வீட்டுக்காரங்க ஏற்பாடு,எல்லாம் வீடியோவில் இருக்கும், அப்போ பார்த்துக்கோ"//
பதிலளிநீக்குஏன் உங்க அண்ணன் பப்ளிக்ல உண்மைய சொன்னாரு ........
கௌசி...எத்தனை பேரின் நினைவலைகளைக் கிளறி இன்று கல்யாண நாளாக்கி வைத்திருக்கிறீர்களோ !
பதிலளிநீக்குஹஹஹஹா நல்லா இருக்கு
பதிலளிநீக்குkousalya ,
பதிலளிநீக்குippadiya sudden break poduvathu.
continue sooon
etthanai bulb endru count seyyanum.
really very nice and interesting(ungalaal naanum 13 yrs pinnale poi vitteen)
இனிமையான நினைவலைகள்...
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி
//பதிவு பெரிதாகி விட்டதால் மீதி அடுத்த பதிவில் தொடரும்...//
எதிர்பார்ப்புடன்........
100W, 200W, 500W & 1000W
பதிலளிநீக்குநான் பல்ப சொன்னேங்க..
// ஏன் திருமதி திருமதின்னு போடகூடாது...??! //
பதிலளிநீக்குநல்ல கேள்வி...
நீங்கள் அடைப்புக்குறிகளுக்குள் போட்டிருக்கும் கமெண்ட்ஸ் அனைத்துமே ரசிக்க வைத்தது...
பதிலளிநீக்குநீங்கள் பல்பு திலகம்ன்னு ஒத்துக்கிறீங்க... நல்லா இருக்கு, கௌஸ்.
பதிலளிநீக்குசுவாரசியமாக இருக்கிறது படிப்பதற்கு. தென்காசியா நீங்கள்? அருமையான ஊர்.
பதிலளிநீக்குநினைவலைகளை ரசிக்கும்படியா எழுதியிருக்கீங்க.
பதிலளிநீக்கு//ஆனால் நானும் என் சகோதரர்கள் மட்டும் திருதிருனு (ஏன் திருமதி திருமதின்னு போடகூடாது...??!)///
பதிலளிநீக்குஅட சரியான கேள்வி அக்கா .. இதுல ஆணாதிக்கம் இருக்குமோ ..?
ஹி ஹி ஹி ..!!
//(தம்பி உடையாள் இந்த படைக்கு அஞ்சாள் !) //
பதிலளிநீக்குஅட அட . செம செம ..!! ஹி ஹி ஹி
இனிமையான நினைவலைகள்...
பதிலளிநீக்கு/.அப்பதான் புரிஞ்சது என் தம்பியோட திடிர் பாசம்....?!! //
பதிலளிநீக்குஹா...ஹா....ஹா.....
தம்பிக்கு நல்லா கலெக்ஷன் ஆகியிருக்கும்ல!!!
நகைச்சுவை கலந்த நினைவலைகள்..
படிக்கபடிக்க சுவாரசியமாக இருந்தது
படிக்க படிக்க ஏன் இவ்வள்வு சீக்கிரம் முடிந்தது என்று இருந்த்து,
பதிலளிநீக்குகூட்டத்த பார்த்து பெரும தாங்கல.
சர்ச்சில் ஆறு கல்யாணம்.
ஹிஹி
பேண்டு நல்ல அடிக்கிறாஙக்ள் கொஞ்ச நேரம் பார்த்துட்டு வரேன் செம்ம சிரிப்பு அதானே கேசட்டுல தான் வருமே. ஹா ஹா
பதிலளிநீக்குகல்யாண நினைவலைகள் ரொம்ப அருமை,
பதிலளிநீக்குஹாப்பி கிருஸ்மஸ்
//அப்பதான் புரிஞ்சது என் தம்பியோட திடிர் பாசம்....?!! //
பதிலளிநீக்குஹா ஹா ...
//ச்சே ஒருத்தி எத்தனை பல்புதான் வாங்குவா...?!)//
நம்மள போல அப்பாவிகள் வாழ்க்கைல இதெல்லாம் சகஜம் தோழி... ஹி ஹி...
//கொஞ்ச தூரம் கடந்ததும் ஒரே டமால் டுமீல்னு பயங்கர சத்தம்...!?//
எனக்கென்னமோ அறுபதாம் கல்யாணம் வரை இந்த தொடர் வரும்னு தோணுது... நீங்க என்ன நினைக்கறீங்க?
உங்க நினைவலைகளில் மூழ்கினேன்..
பதிலளிநீக்கு"அந்த அன்பு சட்ரென்று வரவழைக்கக் கூடிய மந்திர செயல் அல்ல. மெல்ல மெல்ல இதழ் விரித்து மலர்ந்து மணம் பரப்பும் அழகிய ரோஜா மலரை போன்றது. எங்கள் இருவருக்கும் இடையிலும் அன்பு ஒரே நாளில் வந்துவிடவில்லை, பூ மலருவதே தெரியாத மாதிரி மலர்ந்த அந்த அன்பு தான் இன்று வரை மணம் பரப்பி கொண்டிருக்கிறது. "
பதிலளிநீக்குஅருமையான கவிதை வரிகள்! உண்மைதான்! இப்படிப்பட்ட அன்புதான் வாழ்வின் இறுதிவரை, அத்தனை ஏற்ர இறக்கங்களிலும் விடாது மணம் வீசிக்கொன்டே இருக்கும்!!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயங்கனிந்த கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் கெளசல்யா!!
ஹா..ஹா..ஹா.. அருமையா இருக்கு நினைவலைகள். இந்த கால்ல விழுறதெல்லாம் இப்போ குறைஞ்சுடுச்சு. பொண்ணும் பையனும் ஜம்முன்னு சேர்போட்டு ஒக்காந்துக்கிறாங்க. வர்றவங்கதான் குனிஞ்சு விபூதிவெச்சு ஆசீர்வாதம் பண்றாங்க. ஆக அவங்களுக்கு நல்ல உடற்பயிற்சி :-)))
பதிலளிநீக்கு@@ganesh ...
பதிலளிநீக்குஅட ஆமாம் சரியா சொல்லிட்டியே கணேஷ்...
:))
தமிழ்க் காதலன். said...
பதிலளிநீக்கு//கௌசல்யா .... நான்தான் மாட்டிடேனா.//
பதிவு போட்டதும் நீங்க வந்து படிச்சதுக்கு நான் என்ன பண்ணுவேங்க...?! :)
//என்ன பண்ணலாம்...? வீட்ல பேச வேண்டியதுதான்.//
அந்த இனிமையான நினைவுகள் வேண்டும் என்றால் சீக்கிரம் ஒரு பொண்ண பார்க்க சொல்லுங்க...அப்புறம் உங்க மனைவிக்கு ஒரு பிளாக் ஓபன் பண்ணி கொடுங்க...அப்புறம் பாருங்க ஒரே நினைவலைகள் தான்.
//எங்களுக்காக வேண்டிகோங்க...//
ம்ம்...கண்டிப்பா...!!
அடுத்த பதிவையும் படிங்க
:)))
@@அருண் பிரசாத் said...
பதிலளிநீக்கு//பல்பு திலகமே.... இப்படியா ஓவரா கற்பனை பண்ணி எதிர்பார்கறது.... ரொம்ப சினிமா பார்க்கறீங்க//
பட்டமே கொடுத்துடீங்களே ரொம்ப நன்றிங்க... :))
நீங்க சொல்றது கொஞ்சம் உண்மை தான் கற்பனை ஓவராத்தான் பண்ணிட்டேன்.
:))
@@சங்கவி said...
பதிலளிநீக்கு//உங்க நினைவலைகளில் நானும் மூழ்கினேன்.. என் நினைவை நினைத்து...//
அட பரவாயில்லையே உங்களையும் நனைக்க ச்சே நினைக்க வச்சிட்டேனா...?!
:))
பார்வையாளன் said...
பதிலளிநீக்கு//அடுத்த பகுதிக்காக ஆவலுடன் வெயிட்டிங்//
கண்டிப்பா சீக்கிரமாக...!
:))
@@Balaji saravana said...
பதிலளிநீக்குவரி வரியா பிரிச்சி பொறுமையா ரசிச்சி படிசிருக்கீங்கனு உங்க கமெண்டை பார்த்தாலே தெரிகிறது.
மத்தவங்க பல்பு வாங்கிறதை நல்லாவே ரசிபீங்கனு புரிகிறது பாலா !!
asiya omar said...
பதிலளிநீக்கு//very interesting.தொடர்ந்து எழுதுங்க,எனக்கு முந்திய பதிவு நினைவு இருக்கு,புதுசாக படிப்பவர்களுக்கு வசதியாக இருக்க லின்க் கொடுங்க//
நினைவு இருக்கா?? :)) லிங்க் கொடுத்திருக்கேனே...
Chitra said...
பதிலளிநீக்கு//சும்மா சொல்ல கூடாது..... பதிவில் செம ஒளிமயம்!!!!! ஹா,ஹா,ஹா,ஹா,//
நல்லா சிரிச்சிருக்கீங்க
@@இனியவன் said...
பதிலளிநீக்கு//நான் அப்பாவி தானோ ? பல்புன்னா ஒன்னும் புரியலையே.(நம்ம ஊர்ல டியூப் லைட் ன்னு சொல்வங்களே அதுதானோ !//
நானும் உங்களை மாதிரிதாங்க, இந்த இம்சை அரசன் பாபு மூலமாத்தான் பல்புக்கு அர்த்தமே எனக்கு தெரியும்...
:))
@@இம்சைஅரசன் பாபு.. said...
பதிலளிநீக்கு//(அப்படா இப்ப தான் கம்பெனிக்கு ஆள் கிடைச்சிருக்கு )//
அப்ப வாங்க பாபு நாம இரண்டு பேரும் சேர்ந்து பல்பு கம்பெனி வைப்போம். :))
//உங்கள் பதிவை படிக்கும் பொழுது மெல்ல என்னோட கல்யாண நாள் நினைவுகளையும் அப்படியே மெல்ல அசை போடுகிறேன் சகோ ..//
அசை போடுறீங்களா அப்படினா நீங்க பாபு இல்லையா...?? :))
//ஏன் உங்க அண்ணன் பப்ளிக்ல உண்மைய சொன்னாரு//
அவன் அப்போ சொன்னது கூட பெரிசு இல்லை அதை அப்படியே இங்கே வந்து சொன்னேன் பாருங்க உண்மையில் நான் அப்படித்தானோ ...?!
:))
@@ஹேமா said...
பதிலளிநீக்கு//கௌசி...எத்தனை பேரின் நினைவலைகளைக் கிளறி இன்று கல்யாண நாளாக்கி வைத்திருக்கிறீர்களோ//
அது என்னவோ சரிதான். ஹேமா எத்தனை முறை அந்நாளை நினைத்தாலும் அலுக்காதுபா.
:))
@@Gayathri said...
பதிலளிநீக்கு//ஹஹஹஹா நல்லா இருக்கு//
வாங்க காயத்ரி, ரொம்ப நாள் ஆச்சு... இந்த மாதிரி சிரிக்கிற மாதிரி இருந்த தான் இந்த பக்கம் வருவீங்களா...?! ஆனா இனி அடிக்கடி வருவீங்கன்னு நினைக்கிறேன். :))
@@angelin said...
பதிலளிநீக்கு//ippadiya sudden break poduvathu.
continue sooon
etthanai bulb endru count seyyanum.//
எத்தனை பல்பு வாங்குறேன் என்று எண்ணுவதற்கு ஒருத்தரா...? ஏங்க இப்படி...?! :))
//really very nice and interesting(ungalaal naanum 13 yrs pinnale poi vitteen //
இது தான் எனக்கு வேணும் இப்படி எல்லோரையும் அவங்க கல்யாண நாளை நினைக்க வைக்கணும் என்று ஒரு முடிவில்தான் இந்த போஸ்டே...
:))
@@ மாணவன் said...
பதிலளிநீக்கு//எதிர்பார்ப்புடன்......//
அடுத்த பதிவு அதுதான் சகோ. :))
நன்றி.
அன்பரசன் said...
பதிலளிநீக்கு//100W, 200W, 500W & 1000W
நான் பல்ப சொன்னேங்க.//
பாத்தீங்களா இந்த கிண்டல் தானே வேண்டாங்கிறேன்... :))
@@philosophy prabhakaran said...
பதிலளிநீக்கு//நீங்கள் அடைப்புக்குறிகளுக்குள் போட்டிருக்கும் கமெண்ட்ஸ் அனைத்துமே ரசிக்க வைத்தது...//
எல்லாம் சுய புலம்பல்கள் தாங்க...
:))
vanathy said...
பதிலளிநீக்கு//நீங்கள் பல்பு திலகம்ன்னு ஒத்துக்கிறீங்க... நல்லா இருக்கு, கௌஸ்//
வேற வழி...?!! :)))
நன்றி வாணி.
@@அப்பாதுரை said...
பதிலளிநீக்கு//சுவாரசியமாக இருக்கிறது படிப்பதற்கு. தென்காசியா நீங்கள்? அருமையான ஊர்//
ஆமாம் சகோ, அந்த ஊர் தான், ஊரில் இருக்கத்தான் கொடுத்து வைக்கவில்லை...வளர்ந்தது எல்லாம் சிங்கார சென்னையில...!!
:))
@@ "உழவன்" "Uzhavan" said...
பதிலளிநீக்கு//நினைவலைகளை ரசிக்கும்படியா எழுதியிருக்கீங்க.//
இது உங்களின் முதல் வருகை என்று நினைக்கிறேன். நன்றிங்க.
கோமாளி செல்வா said...
பதிலளிநீக்கு//அட சரியான கேள்வி அக்கா .. இதுல ஆணாதிக்கம் இருக்குமோ ..?
ஹி ஹி ஹி ..!!//
இருக்குமோ என்ன இருக்கு...!! இதை பத்தி அடுத்து கண்டனம் எழுத வேண்டியதுதான்...!!? :))
@@ பிரஷா said...
பதிலளிநீக்கு//இனிமையான நினைவலைகள்.//
நன்றி தோழி.
@@ஆமினா said...
பதிலளிநீக்கு//தம்பிக்கு நல்லா கலெக்ஷன் ஆகியிருக்கும்ல!!!//
அமௌன்ட் கூட என்கிட்டே சொல்லலைங்க... வீட்டுக்கு ஒரு தம்பி இப்படிதான் இருப்பாங்க போல... :))
//நகைச்சுவை கலந்த நினைவலைகள்..//
ரசனைக்கு நன்றி தோழி.
@@ Jaleela Kamal said...
பதிலளிநீக்கு//படிக்க படிக்க ஏன் இவ்வள்வு சீக்கிரம் முடிந்தது என்று இருந்த்து,//
நான் போர் அடிக்குமோ என்று நினைத்தேன். தேங்க்ஸ் தோழி.
//கூட்டத்த பார்த்து பெரும தாங்கல.
சர்ச்சில் ஆறு கல்யாணம்.
ஹிஹி//
அன்னைக்கு ஆவணி 31 ...அடுத்து புரட்டாசி என்பதால் இப்படி ஒரே நாளில் ஆறு கல்யாணம் நடந்தது.
//கேசட்டுல தான் வருமே.//
அடுத்தவங்க கல்யாணத்திற்காக நடக்கிற நிகழ்ச்சி என்று நினைத்துவிட்டேன். :))))
கிறிஸ்துமஸ் வாழ்த்திற்கு ரொம்ப நன்றி தோழி.
@@ அப்பாவி தங்கமணி said...
பதிலளிநீக்கு//நம்மள போல அப்பாவிகள் வாழ்க்கைல இதெல்லாம் சகஜம் தோழி... ஹி ஹி...//
அட ஆமாம்ங்க தோழி. :))
//எனக்கென்னமோ அறுபதாம் கல்யாணம் வரை இந்த தொடர் வரும்னு தோணுது... நீங்க என்ன நினைக்கறீங்க?//
அய்யோ என்னங்க இப்படி சொல்றீங்க...? உங்களை அப்பாவின்னு நினைச்சா இப்படி வாருரீங்க...
ஆமா யார் அறுபதாம் கல்யாணம் வரை என்று நீங்க சொல்லலையே...??! இது எப்படி இருக்கு??? :)))
@@ சே.குமார் said...
பதிலளிநீக்கு//உங்க நினைவலைகளில் மூழ்கினேன்.//
மூழ்கினது சரி...இப்ப எழுந்துடீங்களா இல்லையா....??
:)))
@@மனோ சாமிநாதன்...
பதிலளிநீக்கு//இப்படிப்பட்ட அன்புதான் வாழ்வின் இறுதிவரை, அத்தனை ஏற்ர இறக்கங்களிலும் விடாது மணம் வீசிக்கொன்டே இருக்கும்!!//
உண்மையை அப்படியே சொல்லிடீங்க அக்கா. ரொம்ப மகிழ்வாக இருக்கிறது.
உங்கள் வாழ்த்திற்கும் என் நன்றிகள் பல.
அமைதிச்சாரல் said...
பதிலளிநீக்கு//இந்த கால்ல விழுறதெல்லாம் இப்போ குறைஞ்சுடுச்சு. பொண்ணும் பையனும் ஜம்முன்னு சேர்போட்டு ஒக்காந்துக்கிறாங்க.//
ம்ம்...இப்ப இருக்கிறவங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க... :))
//வர்றவங்கதான் குனிஞ்சு விபூதிவெச்சு ஆசீர்வாதம் பண்றாங்க. ஆக அவங்களுக்கு நல்ல உடற்பயிற்சி :-)))//
அடடா இது சூப்பர்.
உண்மையில் இந்த மாதிரி பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது ஒரு நல்ல பண்பு.
நம்ம பிள்ளைகளின் பிறந்த நாளின் போதாவது வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்க சொல்லி பழக்குவது நல்ல மரியாதையை வளர்க்கும் என்று நான் கருதுகிறேன்.
சரிதானே...?!
உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி!!
பதிலளிநீக்குhttp://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html
http://asiyaomar.blogspot.com/2010/12/blog-post_29.html
பதிலளிநீக்குஉங்களை தொடர் பதிவிற்கு அழைத்து இருக்கிறேன்.
எம் அப்துல் காதர் said...
பதிலளிநீக்குஎனக்கு விருது கொடுத்ததுக்கு நன்றி சகோ. பெற்று கொண்டேன்
asiya omar said...
பதிலளிநீக்கு//http://asiyaomar.blogspot.com/2010/12/blog-post_29.html
உங்களை தொடர் பதிவிற்கு அழைத்து இருக்கிறேன்.//
நன்றி தோழி !!
கௌஸ், நல்லா இருக்குப்பா. கடைசி வரிகள் தான் மனசை மிகவும் தொட்ட வரிகள்.
பதிலளிநீக்கு