Saturday, November 20

12:32 PM
94


எனக்கு ஒரு நாலு நாளாக ஒரு பெரிய பிரச்சனை.....அதை யோசிச்சு யோசிச்சு தலைவலி வந்தது தான் மிச்சம்.....! ஆனால் இன்னும் குழப்பம் தான் வருகிறது ஒரு தீர்வும் வரவில்லை. என்ன செய்யலாம் என்று யோசிச்ச போது தான் பதிவுலகம் நினைவு வந்தது.சரி தான் நம்ம பிரச்னையை அபாயரட்சர்களிடம் சொல்லி தீர்வு பெறுவோம் என்று இங்கே சொல்ல வந்திருக்கிறேன் . நல்லா படிச்சிட்டு ஏதோ ஒரு வழி சொல்லுங்க நண்பர்களே.

ஓ.கே நேரடியா விசயத்துக்கு வருகிறேன். இது  எறும்புகள் பத்தின ஒரு சீரியசான ஒரு விசயங்க.  எறும்பை எல்லோருக்கும் நல்லாவே தெரியும் அதனால் நான் புதுசா அவங்களை  அறிமுகபடுத்த வேண்டாம்னு நினைக்கிறேன். எனக்கு இந்த எறும்புகளால் ஒரு சிக்கல்..... அடடா இருங்க ஓடிடாதிங்க....! (எங்க வீட்டுக்கு எறும்பு வந்திச்சி, என்னை மட்டும் கடிச்சிடிச்சி, ஏன்னு தெரியல அப்படின்னு உலகத்தில் நடக்காத ஒன்ன சொல்லி உங்களின் பொறுமையை நான் சோதிக்க  விரும்பவில்லை...!)  இது வேற மாதிரியான ஒரு  மேட்டர்.....!

ஐந்து நாளுக்கு முன்னால காப்பி போட செல்பில இருக்கிற சர்க்கரை டப்பாவை எடுக்கும் போது கை தவறி கீழே போட்டுட்டேன். கொட்டியது போக மிச்சத்தை மறுபடி டப்பால போட்டு வச்சிட்டு, கீழே இருக்கிற சர்க்கரையை ஓரமா ஒதுக்கிட்டு மத்த வேலையை பார்க்க போயிட்டேன். சாயங்காலம் வரைக்கும் இதை அப்படியே மறந்திட்டேன். ( சிஸ்டம் கிட்ட வந்து  உட்காந்தா என்னையே மறந்துடுறேன், சர்க்கரையை  எப்படி  நினைப்பேன் ....?!)

அப்புறம் சாயங்காலம் பசங்க வந்த பிறகு டிபன் பண்ண kitchen போனப்பதான் அடடா சர்க்கரையை காலையில கொட்டினோமே எறும்பு படை திரட்டி வந்து  இருக்குமேன்னு பதட்டமா பார்த்தா, என்ன ஆச்சர்யம்.....சர்க்கரை அப்படியே இருக்கு ஒரு எறும்பு கூட அதன் மேல இல்லை....! (நாம வீட்டை ரொம்ப சுத்தமா வச்சிருக்கோம் அதுதான் எறும்பு இல்லை அப்படின்னு ஒரே பெருமை தான் போங்க....ஆனா இது ரொம்ப நேரம் நீடிக்கல.....அந்த இடத்துக்கு கொஞ்ச தள்ளி  தூரத்தில் இவங்க லைன் கட்டி போயிட்டு இருக்காங்க......! அந்த  நேரம் ஆரம்பிச்சக்  குழப்பம்  தாங்க எனக்கு இப்பவரை தீரல...!!

ஏன் எறும்பு சர்க்கரை கிட்ட வரல...? சரி இன்னும் ஒருநாள் வருதான்னு பார்ப்போம் , அப்புறம் சுத்தம் படுத்திக்கலாம்னு அப்படியே விட்டுட்டேன் சர்க்கரையை....! (எல்லாம் ஒரு ஆராய்ச்சிதான்....?!) மூணு நாள் ஆச்சு...ஆனா ஒரு எறும்பு கூட அந்த திசை பக்கம் எட்டி கூட பார்க்கல....என்னுடைய ஆச்சரியமும், குழப்பமும் ஜாஸ்தியானது தான் மிச்சம்....ஏன் சர்க்கரை கிட்ட வரலன்னு புரியவே இல்லை.

சரி கணவர் கிட்ட சொல்வோம் என்று ஆர்வத்தோடு போய் சொன்னேன்.....அதுக்கு அவர், " சர்க்கரையை அஜாக்கிரதையா கீழே கொட்டினது  முதல தவறு, அதையும் மூணு நாளா கிளீன் பண்ணாம இருந்தது இரண்டாவது தவறுன்னு..........."  லிஸ்ட் போட்டு திட்ட ஆரம்பிச்சிட்டார்......!! அடடா, என்னடா இவர் நம்மளோட ஆராய்ச்சி புத்தியை பத்தி புரிஞ்சிக்காம இருக்காரே என்று ஒரே பீலிங்கா போச்சு.....!?

அதுதான் உங்ககிட்ட இதை கேட்கலாம்னு வந்திருக்கிறேன்....என் சந்தேகங்களை சொல்றேன்......தெளிவுபடுத்துங்கள்.....

சந்தேகம் 1 : மனிதர்களை மாதிரி எறும்புகளுக்கு சர்க்கரை வியாதி வந்திக்குமோ....?

சந்தேகம் 2  : சர்க்கரையில் இனிப்பு தன்மை குறைந்து விட்டதா.....?

சந்தேகம் 3  : எறும்புக்கே  பிடிக்கலேன்னா நமக்கு மட்டும் எப்படி பிடிக்கும்....?

சந்தேகம் 4 : இப்போது எல்லாம் காபி குடித்தால் தான் தலைவலியே வருகிறது. அதற்கு காரணம் இந்த சர்க்கரையா  இருக்குமோ....??

முக்கியமான 
சந்தேகம் 1 :  எறும்புக்கு பிடிக்காத வேதி பொருள் ஏதும் அதில் கலந்திருக்கா...??

சந்தேகம் 2 : அப்படி பட்ட வேதி பொருள் என்னவாக இருக்கும் ...?

சந்தேகம் 3 :  அந்த வேதி பொருள் கலந்த சர்க்கரையை நாம் உபயோகித்தால் நம் உடம்பிற்கு பாதிப்பு ஏதும் வருமா.....?? அப்படினா அது என்ன பாதிப்பு...?

முன்பு எல்லாம் இப்போது வருவது போல் வெள்ளை வெளேர் என்று இருக்காது...கொஞ்சம் நிறம் கம்மியாக பழுப்பு நிறத்தில் தான் இருக்கும். இப்படி வெள்ளையாக இருப்பதற்காக ஏதும் சேர்ப்பார்கள் என்று நினைக்கிறேன்.  

தெரிந்தவர்கள் இதனை பற்றி விளக்கமாக கூற வேண்டும் என்று தான் என் சந்தேகங்களை இங்கே கேட்கிறேன்....என்னை மாதிரி தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.  

பொதுவா அதில் பிரச்சனை இருக்கோ இல்லையோ சர்க்கரை சேர்ப்பதை குறைத்து கொண்டால் மிக நல்லது.  அதற்கு பதிலாக வெல்லம், கருப்பட்டி போன்றவற்றை தூள் செய்து வைத்து கொண்டு உபயோகித்து வந்தால் உடலுக்கு நல்லது. (அப்பாடி கடைசில ஒரு மெசேஜ் சொல்லிட்டேன்...!)வாசலில் 'அழகு தேவதை நீ....!'Tweet

94 comments:

 1. முதல் அது சக்கரையா பாருங்க...உப்பா இருக்கும் அந்த எறும்புக்கு கூட தெரிந்து இருக்கு உங்க வீட்டு சக்கரை நல்லா இருக்காது என்று...

  ReplyDelete
 2. NO ENTRY போர்டு ஏதாவது வச்சிருந்தீங்களா...

  ReplyDelete
 3. கரும்பு சாற்றிலிருந்து உருவாக்கப்படும் சர்க்கரை பழுப்பு நிறத்தில்தான் இருக்கும். இதை பிரவுன் சுகர்(போதை மருந்து இல்லீங்க!) என்பார்கள். அதன் நிறத்தை வெள்ளையாக்க ஒரு முக்கியமான பொருளை சேர்த்து சில வேலை செய்து வெள்ளையாக்குவார்கள்.

  அந்த முக்கியமான பொருள் எலும்பு சாம்பல்!!!!

  இப்போதெல்லாம் sulphur dioxide,
  Phosphoric acid, calcium hydroxide போன்ற வேதிப் பொருட்களை நிறமூட்ட பயன்படுத்துவதாக தெரிகிறது.


  இதனால் சில பாதிப்புகள் வரத்தான் செய்கிறது. ஆனால் அவை வெளிப்படையாக தெரியும் அளவிற்கு இல்லை.

  அதனாலேயே சிலர் தேன், வெல்லம் போன்றவற்றை இனிப்பிற்காக பயன்படுத்த சொல்கின்றனர்!

  ReplyDelete
 4. மன்னிக்கவும் சகோதரி நான் கிச்சன் பக்கம் போய் அஞ்சு வருஷம் ஆச்சு... கல்யாணம் ஆனா தான் இனி அந்த பக்கம் போக வேண்டியிருக்கும்,,,(எப்படியும் நான் தான் சமைச்சு போட வேண்டியிருக்கும்)

  ReplyDelete
 5. //இப்போது எல்லாம் காபி குடித்தால் தான் தலைவலியே வருகிறது. அதற்கு காரணம் இந்த சர்க்கரையா இருக்குமோ....??//
  காப்பி குடிக்காதீங்க டீ குடிச்சிபாருங்க ......நான் குழந்தையா இருக்கச்சா ....(ஐயோ ......)

  ReplyDelete
 6. இது ஒரு புனைவா....? (அப்பாடி ஏதோ நம்மால முடிஞ்சது!)

  ReplyDelete
 7. ரெண்டு வகையான சர்க்கரை உண்டுன்னு கேள்விப்பட்டு இருக்கிறேன் .
  1 . கரும்பில் இருந்து தயாரிப்பது .
  2 .ஆப்பிள் இருந்து தயாரிப்பது ....
  எஸ் .கே கூறுவதையும் கேள்வி பட்டு இருக்கிறேன்.நம்ம ஊரில் அரசன் குரூப் இந்த மாதிரி எலும்பு எடுத்து பவுடர் ஆக்கி விற்பனை செய்வதும் தெரியும் சகோ

  ReplyDelete
 8. ஒரு வேளை உங்க வீட்டு எறும்பெல்லாம் “Sugar Free”க்கு மாறிடுச்சோ என்னமோ : ))))

  ReplyDelete
 9. கருத்து சொன்ன பிரச்சினை வர்றதால.. ஹி..ஹி ...

  ReplyDelete
 10. உங்க வீட்ல ஏன் எறும்பு வரலன்னு பீல் பண்றீங்க, எங்க வீட்ல ஏண்டா இதுங்க வருதுன்னு பீல் பண்றோம்.

  ReplyDelete
 11. எனக்கும் அந்த உண்மை தெரிஞ்சாகனுமே!அதுவும் நம்ம ஊரில்(நெல்லை) தான் சர்க்கரை நோயாளி அதிகம் இருக்காங்களாம்.அந்த எறும்பெல்லாம் எங்கேயாவது அல்வா சாப்பிட்டுவிட்டு வந்திருக்கும்,அது தான் சர்க்கரை கூட இனிப்பாக தெரிந்திருக்காது,கொஞ்சம் மிக்ஸர் கொட்டி வச்சீங்க்ன்னா கூட்டம் மொய்த்து இருக்கும்.ஆராய்ச்சி செய்து பாருங்களேன்!

  ReplyDelete
 12. என்ன வேதிப்பொருள் கலந்திருக்கோன்னு பீதியை கிளப்புறீங்க. எனக்கு பேதியே வந்திடும்போல இருக்கு நீங்க கிளப்புகிற பீதியை படிச்சு.

  விஷயம் தெரிஞ்சவங்க சீக்கிரம் பதிலை சொல்லுங்க! அப்பத்தான் எனக்கு பீதியினால உண்டான பேதி நிக்கும் போல இருக்கு...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்...

  ReplyDelete
 13. என்ன எல்லோரும் இவ்வளவு சீரியஸ் அ பதில் சொல்லிகிட்டு இருக்காங்க... நானும் தெரிஞ்சுக்கிறேன்...

  ReplyDelete
 14. வெள்ளைவெளேர்ன்னு இருந்தாத்தான் நல்ல சர்க்கரைன்னு அர்த்தமில்லை.

  எஸ்.கே சொல்றதும் ரொம்ப கரெக்ட்...

  ReplyDelete
 15. வந்துட்டேன் வந்துட்டேன் ., எனக்கு உங்க போஸ்ட் ல இருந்து சில உண்மை தெரிஞ்சாகனும் ..? அதுக்கு அப்புறமா உங்க கேள்விகளுக்கு விளக்கம் சொல்லுறேன் அக்கா ..!!

  // கொட்டியது போக மிச்சத்தை மறுபடி டப்பால போட்டு வச்சிட்டு, //

  அது இடது கையாள நிலத்தக் கொட்டுச்சா , இல்ல வலது கையாள கொட்டுச்சா ..?

  //அடடா சர்க்கரையை காலையில கொட்டினோமே எறும்பு படை திரட்டி வந்து இருக்குமேன்னு பதட்டமா பார்த்தா//

  சரி நீங்க சர்க்கரைய எந்தக் கையாள கொட்டுநீங்க ..? நீங்க கொட்டும் போது அதுக்கு வலிசுச்சா ..?

  //மனிதர்களை மாதிரி எறும்புகளுக்கு சர்க்கரை வியாதி வந்திக்குமோ....?//

  சர்க்கரை வியாதி வந்தா அது எந்த டாக்டர் கிட்ட போய் டெஸ்ட் பண்ணிக்கும் ..?

  சரி சரி ., இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க .. அப்புறம் உங்க கேள்விக்கு நான் பதில் சொல்லலாம்னு நினைச்சேன் அதுக்குள்ள எஸ்.கே சொல்லிட்டார் ..!

  ReplyDelete
 16. ஆஸ்திரேலியா எறும்புக்குத்தான் சர்க்கரை புடிக்கும். மத்த ஊரு எறும்பெல்லாம் சர்க்கரை சாப்புடாது (எப்பூடி?)

  ReplyDelete
 17. ”உன் சமையலறையில்,அது உப்பா,சர்க்கரையா?”
  மன்னிக்கவும்,”உங்கள்” என்று மாற்றிக்கொள்ளவும்

  ReplyDelete
 18. // கொட்டியது போக மிச்சத்தை மறுபடி டப்பால போட்டு வச்சிட்டு //

  நல்லாப் பாருங்க.. கொட்டியதுல லைன் கட்டாம மிச்சத்த டப்பாலப் போட்டு வச்சீங்களே...அதில லைன் கட்டிக்கிட்டு இருக்கப்போவுது...

  ReplyDelete
 19. //முன்பு எல்லாம் இப்போது வருவது போல் வெள்ளை வெளேர் என்று இருக்காது...கொஞ்சம் நிறம் கம்மியாக பழுப்பு நிறத்தில் தான் இருக்கும்.//

  யாராவது துவைச்சு இருப்பாங்களோ????

  ReplyDelete
 20. உண்மையிலேயே ....எனக்கு ஆச்சர்யமாக உள்ளது ......சீநியிலும் கலப்படமா...தலை சுற்றுகிறது ...தச்சை ...கண்ணன்

  ReplyDelete
 21. //

  பன்னிக்குட்டி ராம்சாமி said...

  இது ஒரு புனைவா....? (அப்பாடி ஏதோ நம்மால முடிஞ்சது!)///
  ஆமா ஏறும்புன்னு ஒரு பதிவர் இருக்காரே!! நாராயணா நாராயணா

  ReplyDelete
 22. சர்க்கரை பக்கத்துல டாக்டர் விஜய் படம் இருந்ததோ என்னவோ?

  ReplyDelete
 23. சின்னப்புள்ளதனமா உப்பை போ சக்கரைன்னு நினைச்சுக்கிட்டு, நான் இன்னும் என்னோட சந்தேகத்துக்கே பதில் தெரியாம அல்லாடிட்டு இருக்கேன்.

  http://iravuvaanam.blogspot.com/2010/11/blog-post_18.html

  ReplyDelete
 24. இப்பல்லாம் சர்க்கரையில் இனிப்பு என்பது குறைஞ்சு போச்சு...
  பாத்திருக்கும் இனிப்பில்லா இதை தேடிப் போறதைவிட வேற வேலையைப் பாக்கலாம்ன்னு போயிருக்கும்.

  இல்ல... மொத்தமா கொட்டிக்கிடக்கு உள்ள விஷம் எதுவும் வச்சிருகலாமுன்னு..... சரி.... சரி.... கோபப்படாதீங்க... எறும்புக்கு உங்க மேல கோபம் இருக்குமுன்னு நினைக்கிறேன்...

  ReplyDelete
 25. //அந்த முக்கியமான பொருள் எலும்பு சாம்பல்!!!!//

  அப்போ சைவம் சாப்பிடறவங்அ இனிப்புக்கு என்ன பண்றது?

  ReplyDelete
 26. ஹா..ஹா...ஹா.
  சந்தேகம் தீர்ந்ததா?

  ReplyDelete
 27. உங்க வீட்டில் அந்த இடத்திற்கு எறும்பு வராதாதுக்கு காரணம்...அந்த இடத்தின் வாஸ்து சரியில்லாமல் இருக்கலாம்...))))

  ஏன் என்றால் எறும்பு இறைதேடுவதுக்கு என்று ஒரு முறை இருக்கின்றது...முதலில் அதன் வீட்டில்(கூடு) இருந்து உணவு எங்கே இருக்கு என்பதை அறிய முதலில் சில எறும்புகள் வெளியே வரும்..அது தேடி திறிந்து உணவு இருக்கும் இடத்தை கண்டு பிடித்து முடிந்தால் அதில் ஒரு சிறு பகுதியை கடித்து கொண்டு அது வந்த வலி தனது இருப்பிடத்திக்கு திரும்பி சென்று அங்கு இருக்கும் மற்ற எறும்புகளிடம் அங்கு உணவு இருக்கின்றது என்னை பின் தொடருங்கள் என்று சொல்லி ஒரு படையுடன் வரிசையாக செல்லும்..

  இங்குதான் விசயம்...இப்படி ஒரு உணவை குறிவைத்து செல்லும்போது அந்த வழியில் என்ன இருந்தாலும் அவைகள் பொதுவாக கண்டு கொள்ளது..அதன் இலக்கு முதலில் கண்டு பிடித்த அந்த உணவுதான்...அதற்கு உதுவது அதன் நுகரும் அமைப்பு..(antennae)அதன் தலையில் கொம்பு போல இருக்கும்..

  எனவேதான் நீங்கள் சீனியை கொட்டி வைத்து இருந்தாலும் அங்கு வராததுக்கு காரணம்..

  இப்போது போய் கவனியுங்கள் அந்த எறும்புகள் எங்கு செல்லுகின்றது என்பதை அதன் முடிவில் அதுக்கு தேவையான ஒரு உணவு இருக்கும் அதை எறும்புகள் தின்று கொண்டு இருக்கும்...

  மற்றபடி எல்லாவகை எறும்புகளும் இனிப்பு விரும்பும்..ஆஸ்திரிலியா எறும்புகள் கொஞ்சம் அதிகமாக திங்கும் அவ்வளவுதான்...மேலும் இனிப்பில் விஷம் கலந்து இருந்தாலும் அதை தின்றுவிட்டு இறக்குமே தவிர அதில் விஷம் கலந்து இருக்கின்றது என்பது அதுக்கு தெரியாது...

  ஆனால் அது இயற்கையாகவே சிலவற்றை பழக்கி வைத்து இருக்கும் அதாவது அதுக்கு மஞ்சள் பிடிக்காது..அதுக்கு காரணம் அதில் இருக்கும் ஒரு வித ராசாயன பொருள்..

  நீங்கள் அங்கு போய்க்கொண்டு இருக்கும் எறும்புகளின் முன்னால் இனிப்பை வைத்தால் கூட முதலில் அதை கண்டுகொள்ளாமல்..கொஞ்ச நேரம் கழித்துதான் திங்க முயற்சிக்கும்...ஏனென்றால் அவைகள் ஒரு கட்டளையின் பெயரில் போய்கொண்டு இருக்கின்றன..

  இதுதான் காரணம்..உங்களின் இனிப்பை எறும்பு திங்காதததுக்கு...

  ReplyDelete
 28. நீங்களும் எறும்ப வச்சு ஆரம்பிச்சுட்டீங்களே!!!

  ReplyDelete
 29. ha ha ha
  sweeeet article.
  there are two options
  1, they are hyperglycemic
  2, they are health conscious.

  ReplyDelete
 30. எறும்புக்ககு சீனி பிடிக்குதோ இல்லையோ எனக்கு உஙக பதிவும்,திறமையும் பிடிச்சுருக்கு.

  ReplyDelete
 31. கௌசி...என்னமா ஒரு சந்தேகம்.

  அது என்னான்னா நீங்க 5-6 மாடியில குடியிருக்கீங்களோ.எறும்புக்கு வரமுடியாதில்ல !

  ReplyDelete
 32. athu uzhachchu thaan saappidumam. uzhaikkaama saapta udambula ottaathaam.(athu enna manusana?)

  erumbu koottathula oru minister 1.76 crore sugar-a oozhal pannitaaram. pathavi vilaka solli unnaaviratham.

  erumbu minister oliga oliga

  ReplyDelete
 33. அவை என்ன வகையான எறும்புகள்... கடி எறும்புகள், கட்டெறும்புகள் என்று சொல்வார்கள்... கட்டெறும்புகள் தான் சர்க்கரையை தின்னும்... கடி எறும்புகள் அசைவ பிரியர்கள்...

  ReplyDelete
 34. சர்கரை என்பது ஒரு வேதிப்பொருள். (sucrose -> glucose + fructose) நீங்க தரையில் விட்டதால அதன் தன்மை மாறவே மாறாது. எதார்த்தமாக எறும்புகளை இதைப்பார்க்கவில்லை. இதே சர்க்கரையை அள்ளி வைங்க. எறும்புகள் இருக்கிற இடத்தில் போடுங்க, அதை எறும்பு திங்கலைனா நான் உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் தறேன்! :)

  ReplyDelete
 35. எறும்புகளுக்கு அறுசுவையையும் பிரித்து பார்க்கும் சக்தி உண்டு... அப்படி பார்க்கும் பொது அதுல இனிபோட சாரம் கம்மியா இருந்திருக்கலாம்......
  அது சரி.... இதுக்கெல்லாம் ரூம் போட்டு யோசிபீன்களோ...உங்க கணவர் திடுனதள தப்பே இல்லீங்க...

  ReplyDelete
 36. இடுகையும் அதன் பின்னூட்டங்களும் படு சுவாரசியமா இருக்கு!


  இங்கே சண்டிகரில் சக்கரையால் எனக்கொரு பிரச்சனை.

  தமிழ்நாட்டில் கிடைப்பதுபோல் ரொம்பப் பொடியா இல்லாம குட்டிக் கல்கண்டு மாதிரி பெரிய க்றிஸ்டல்கள்.

  இது கரையறதுக்குள்ளே காஃபி ஆறியே போயிருது:(

  நெய்யும் சக்கரையும் கலந்துக்கலாமுன்னா (இட்லிக்குத் தொட்டுக்க) நறநறன்னு மண்டைமண்டையா நிக்குது சக்கரை!

  ReplyDelete
 37. இந்த சந்தேகம் எனக்கும் வந்தது.....தீபாவளீயன்று மறந்து போய் வெளியில் வைத்து விட்ட இனிப்புகளின் பக்கம் எறும்புகள் வரவேயில்லை ???!!!

  ReplyDelete
 38. சௌந்தர் said...

  அடடா அது சர்க்கரை தான் சௌந்தர்...

  :))

  ReplyDelete
 39. வெறும்பய...

  வைக்கலையே....?!

  கல்யாணம் ஆகட்டும் அப்ப தெரியும் கஷ்டம்...

  :)))

  ReplyDelete
 40. எஸ்.கே said...

  //இதனால் சில பாதிப்புகள் வரத்தான் செய்கிறது. ஆனால் அவை வெளிப்படையாக தெரியும் அளவிற்கு இல்லை.

  அதனாலேயே சிலர் தேன், வெல்லம் போன்றவற்றை இனிப்பிற்காக பயன்படுத்த சொல்கின்றனர்!//

  என் கேள்விக்கு தெளிவாக பின்னூட்டத்தில் பதில் சொன்னதிற்கு மகிழ்கிறேன். நீங்கள் சொல்வது மாதிரி சர்க்கரை சேர்ப்பதை குறைத்து கொள்வது நல்லது என்றே தெரிகிறது.

  உங்கள் கருத்திற்கு நன்றி சகோ.

  ReplyDelete
 41. இம்சைஅரசன் பாபு.. said...

  //நம்ம ஊரில் அரசன் குரூப் இந்த மாதிரி எலும்பு எடுத்து பவுடர் ஆக்கி விற்பனை செய்வதும் தெரியும் சகோ//

  டீக்கும் இந்த சர்க்கரையை தானே போடணும்...

  எஸ்.கே நீங்களும் எலும்பு பவுடர் சேர்ப்பாங்க என்று சொல்வதை பார்க்கும் போது கொஞ்சம் ஒரு மாதிரி இருக்கு சகோ.

  அந்த எலும்பு எதோட எலும்பா இருக்கும்...? ஆனா இனி சர்க்கரையை சேர்ப்பதை பற்றி நான் ரொம்ப யோசிக்கணும் போல...?!!!
  ஒரே கலக்கமா இருக்குபா...

  :))

  ReplyDelete
 42. பன்னிக்குட்டி ராம்சாமி said

  //இது ஒரு புனைவா....?//

  இதுக்கு என்ன அர்த்தம் என்று தெரியலையே...? நான் ரொம்பவே அப்பாவிங்க...!

  //ஆஸ்திரேலியா எறும்புக்குத்தான் சர்க்கரை புடிக்கும். மத்த ஊரு எறும்பெல்லாம் சர்க்கரை சாப்புடாது (எப்பூடி?)//

  உங்களுக்கு பொது அறிவு ரொம்ப ஜாஸ்திங்க...

  :))

  ReplyDelete
 43. வெங்கட் நாகராஜ் said...

  //ஒரு வேளை உங்க வீட்டு எறும்பெல்லாம் “Sugar Free”க்கு மாறிடுச்சோ என்னமோ//

  இதை தான் நான் கேட்காம விட்டுட்டேனே...!

  :))

  ReplyDelete
 44. சசிகுமார் said...

  //உங்க வீட்ல ஏன் எறும்பு வரலன்னு பீல் பண்றீங்க, எங்க வீட்ல ஏண்டா இதுங்க வருதுன்னு பீல் பண்றோம்.//

  இங்கயும் வருது சசி ஆனா சர்க்கரையை மட்டும் ஏன் கண்டுக்கலை என்பது தான் என் சந்தேகமே...

  :))

  ReplyDelete
 45. கே.ஆர்.பி.செந்தில் said...

  //கருத்து சொன்ன பிரச்சினை வர்றதால.. ஹி..ஹி ...//

  கருத்துன்னு சொல்லாம இப்படி சொன்னதிலேயே ஒரு அர்த்தம் இருக்கே...?!

  ஆனா என்ன அர்த்தம்னு எனக்கு மட்டும் தான் புரியும்....

  (ஏதோ என்னால முடிஞ்சது)

  :)))

  ReplyDelete
 46. asiya omar said...

  //அது தான் சர்க்கரை கூட இனிப்பாக தெரிந்திருக்காது,கொஞ்சம் மிக்ஸர் கொட்டி வச்சீங்க்ன்னா கூட்டம் மொய்த்து இருக்கும்.ஆராய்ச்சி செய்து பாருங்களேன்!//

  என்னை விட பயங்கரமா ஆராய்ச்சி பண்ணி இருக்கீங்களே தோழி...ஒரு வேளை இப்படி இருந்தாலும் இருக்கும்... மிக்சரை கொட்டி பார்த்திட வேண்டியது தான்.

  :))

  ReplyDelete
 47. என்னது நானு யாரா? said...

  //என்ன வேதிப்பொருள் கலந்திருக்கோன்னு பீதியை கிளப்புறீங்க.
  விஷயம் தெரிஞ்சவங்க சீக்கிரம் பதிலை சொல்லுங்க!//

  நிறைய விஷயம் பத்தி எழுதுறீங்க இதுவும் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும்னு தப்பா முடிவு பண்ணிட்டேன் போல...

  எஸ்.கே இதை பத்தி பதில் சொல்லி இருக்கிறார்....படிச்சிட்டு அது படி இருந்துக்கோங்க....எல்லாம் சரியாகி விடும் சகோ.

  :))

  ReplyDelete
 48. வினோ said...

  //என்ன எல்லோரும் இவ்வளவு சீரியஸ் அ பதில் சொல்லிகிட்டு இருக்காங்க... நானும் தெரிஞ்சுக்கிறேன்...//

  இப்ப தெரிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்...

  வருகைக்கு நன்றி சகோ.

  ReplyDelete
 49. அமைதிச்சாரல் said...

  //வெள்ளைவெளேர்ன்னு இருந்தாத்தான் நல்ல சர்க்கரைன்னு அர்த்தமில்லை.
  எஸ்.கே சொல்றதும் ரொம்ப கரெக்ட்.//

  ஆமாம் அதில் தான் நமக்கு பயமே வருகிறது...

  நன்றி தோழி.

  ReplyDelete
 50. ப.செல்வக்குமார் said...

  வாங்க செல்வா...எனக்கு கேள்வி கேட்க மட்டும் தான் தெரியும் பதில் சொல்ல தெரியாதே...
  இருந்தாலும் ட்ரை பண்றேன்..

  //சரி நீங்க சர்க்கரைய எந்தக் கையாள கொட்டுநீங்க ..? நீங்க கொட்டும் போது அதுக்கு வலிசுச்சா ..?//

  ஆமா, அம்மானு கத்திச்சி...?!

  //சர்க்கரை வியாதி வந்தா அது எந்த டாக்டர் கிட்ட போய் டெஸ்ட் பண்ணிக்கும் ..?

  மனிதர்களில் போலி டாக்டர்ஸ் நிறைய இருக்காங்களாம் அதனால கை வைத்தியம் தான் பண்ணிக்குமாம்.

  //சரி சரி ., இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க .. அப்புறம் உங்க கேள்விக்கு நான் பதில் சொல்லலாம்னு நினைச்சேன் அதுக்குள்ள எஸ்.கே சொல்லிட்டார்//

  பதில் தெரியாதுன்னு சொன்னாலும் நான் ஒன்னும் நினைச்சுக்க மாட்டேன்... :)))))

  ReplyDelete
 51. சென்னை பித்தன் said...

  //”உன் சமையலறையில்,அது உப்பா,சர்க்கரையா?”//

  என் பிரச்னைக்கு பதில் சொல்லுங்கன்னு கேட்டா பாட்டு பாடுறீங்க....?! கண்ல ஏதாவது கோளாறா ?? சீக்கிரமா செக் பண்ணிடுங்க சகோ.

  உங்களின் முதல் வருகைக்கும் பாட்டுக்கும் மிக்க நன்றி.

  :))

  ReplyDelete
 52. அன்பரசன் said...

  //யாராவது துவைச்சு இருப்பாங்களோ???//

  என்ன ஒரு புத்திசாலித்தனம்...?!! பிரமிச்சு போயிட்டேன் போங்க...

  :))

  ReplyDelete
 53. murugan said...

  //உண்மையிலேயே ....எனக்கு ஆச்சர்யமாக உள்ளது ......சீநியிலும் கலப்படமா...தலை சுற்றுகிறது//

  இந்த மாதிரி சீனியை சாப்பிட்டு எனக்கு தலைவலி வருதுன்னு பார்த்தா அதை பத்தி படிச்சாலே உங்களுக்கு தலை சுத்துதா....?? பார்த்தீங்களா உண்மையிலேயே சீனியில் ஏதோ இருக்கு....??!!

  :)))

  ReplyDelete
 54. Sriakila said...

  //நல்லாப் பாருங்க.. கொட்டியதுல லைன் கட்டாம மிச்சத்த டப்பாலப் போட்டு வச்சீங்களே...அதில லைன் கட்டிக்கிட்டு இருக்கப்போவுது...//

  அப்படி இருந்தாலும் பரவாயில்லையே...கீழே கொட்டியதை சாப்பிடாத சுத்தபத்தமான எறும்புனு நினைச்சி சந்தோசப்பட்டு இருப்பேனே ....

  :)))

  ReplyDelete
 55. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  //ஆமா ஏறும்புன்னு ஒரு பதிவர் இருக்காரே!! நாராயணா நாராயணா//

  அட ராமா இது வேறையா...??

  //சர்க்கரை பக்கத்துல டாக்டர் விஜய் படம் இருந்ததோ என்னவோ?//

  ஹா ஹா ஹா

  ReplyDelete
 56. இரவு வானம் said...

  //சின்னப்புள்ளதனமா உப்பை போ சக்கரைன்னு நினைச்சுக்கிட்டு, நான் இன்னும் என்னோட சந்தேகத்துக்கே பதில் தெரியாம அல்லாடிட்டு இருக்கேன்//

  அவ்ளோ சின்ன பிள்ளை இல்லைங்கோ...! :))

  உங்க போஸ்ட் கொஞ்சம் சென்சிடிவானது அதனால வெளிபடையா பதில் சொல்வது கொஞ்சம் சிரமம் சகோ. அதுதான் பதில் நிறைய வரவில்லை...

  வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 57. சே.குமார் said...

  //இப்பல்லாம் சர்க்கரையில் இனிப்பு என்பது குறைஞ்சு போச்சு...
  பாத்திருக்கும் இனிப்பில்லா இதை தேடிப் போறதைவிட வேற வேலையைப் பாக்கலாம்ன்னு போயிருக்கும்.//

  இப்பவெல்லாம் எறும்பு கூட ரொம்ப விவரமா இருக்கும் போல...! :))

  //இல்ல... மொத்தமா கொட்டிக்கிடக்கு உள்ள விஷம் எதுவும் வச்சிருகலாமுன்னு..... சரி.... சரி.... கோபப்படாதீங்க... எறும்புக்கு உங்க மேல கோபம் இருக்குமுன்னு நினைக்கிறேன்...//

  நான் அதை பத்தி பதிவு எதுவும் எழுதலைன்னு கோபம் இருக்கும் போல... இப்ப எழுதிட்டேனே....இனி வரும் என்று எதிர்பார்கிறேன்

  :)))

  ReplyDelete
 58. விந்தைமனிதன் said...

  //அப்போ சைவம் சாப்பிடறவங்அ இனிப்புக்கு என்ன பண்றது//

  என்னங்க நீங்க, இந்த மாதிரி கேள்வி கேட்டு என்னை வம்புல மாட்டி விடுறீங்க...??!!

  எதிர் பதிவு எழுதிட போறாங்க...

  :)))

  ReplyDelete
 59. அம்பிகா said...

  //ஹா..ஹா...ஹா.
  சந்தேகம் தீர்ந்ததா?//

  தீர்ந்தது....ஆனா பதிலை பார்த்து சர்க்கரையை காபில இனி போடலாமா வேண்டாமான்னு யோசிச்சிட்டு இருக்கிறேன் அம்பிகா...!

  :))

  ReplyDelete
 60. ஹா..ஹா...ஹா.
  சந்தேகம் தீர்ந்ததா?

  7:46 PM, November 20, 2010
  Delete
  ganesh said...

  ///உங்க வீட்டில் அந்த இடத்திற்கு எறும்பு வராதாதுக்கு காரணம்...அந்த இடத்தின் வாஸ்து சரியில்லாமல் இருக்கலாம்...))))//

  ஹா ஹா ஹா

  //இங்குதான் விசயம்...இப்படி ஒரு உணவை குறிவைத்து செல்லும்போது அந்த வழியில் என்ன இருந்தாலும் அவைகள் பொதுவாக கண்டு கொள்ளது..அதன் இலக்கு முதலில் கண்டு பிடித்த அந்த உணவுதான்...அதற்கு உதுவது அதன் நுகரும் அமைப்பு..(antennae)அதன் தலையில் கொம்பு போல இருக்கும்..//

  எறும்பை பேட்டி எடுத்து அதை பின்னூட்டமாக போட்ட கணேஷுக்கு நன்றி.(சும்மா...!)

  எனக்கு அறிவியல ரீதியா பொறுமையா பதில் சொன்ன உங்களுக்கு நன்றி.

  அப்ப சர்க்கரையில் பிரச்சனை இல்லையா??? டப்பாவில் இருந்த சர்க்கரைக்கும எறும்பு வந்ததில்லை...நான் இத்தனை நாளா நல்லா மூடி இருக்கிறேன் என்றே நினைத்து கொள்வேன். ஆனா ரவை இருக்கு டப்பாவிற்கு மட்டும் செல்கிறது, அது ஏன்...??

  இதுக்கு பதில் தெரிந்தா சொல்லுங்க

  ReplyDelete
 61. அன்பரசன் said...

  //நீங்களும் எறும்ப வச்சு ஆரம்பிச்சுட்டீங்களே!!//

  வேற வழி...? இப்போதைக்கு எறும்பு தான் கிடைத்தது...! ஹா ஹா ஹா

  ReplyDelete
 62. angelin said...

  //there are two options
  1, they are hyperglycemic
  2, they are health conscious.//

  ஓஹோ. சரிதான்.

  :))

  ReplyDelete
 63. இனியவன் said...

  //எறும்புக்ககு சீனி பிடிக்குதோ இல்லையோ எனக்கு உஙக பதிவும்,திறமையும் பிடிச்சுருக்கு.//

  அடடா இதை நான் என்னனு சொல்ல...?!

  உங்களின் முதல் வருகைக்கு நன்றி.

  :))

  ReplyDelete
 64. ஹேமா said...

  //கௌசி...என்னமா ஒரு சந்தேகம்.

  அது என்னான்னா நீங்க 5-6 மாடியில குடியிருக்கீங்களோ.எறும்புக்கு வரமுடியாதில்ல//

  இல்லை ஹேமா ground floor தான்பா.

  :))

  ReplyDelete
 65. அலைகள் பாலா said...

  //athu uzhachchu thaan saappidumam. uzhaikkaama saapta udambula ottaathaam.(athu enna manusana?)//

  அதுதானே...?

  //erumbu koottathula oru minister 1.76 crore sugar-a oozhal pannitaaram. pathavi vilaka solli unnaaviratham.//

  ஹா ஹா ஹா

  //erumbu minister oliga ஒழிக//

  நல்ல கற்பனை. உங்களின் முதல் வருகைக்கு நன்றிங்க.

  :))

  ReplyDelete
 66. வழிப்போக்கன் - யோகேஷ் said...

  //erumpukku eppllam sakkarai pudikkalaiyam...//

  அது தெரியலையே... :))

  உங்களின் முதல் வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 67. philosophy prabhakaran said...

  //அவை என்ன வகையான எறும்புகள்... கடி எறும்புகள், கட்டெறும்புகள் என்று சொல்வார்கள்... கட்டெறும்புகள் தான் சர்க்கரையை தின்னும்... கடி எறும்புகள் அசைவ பிரியர்கள்...//

  நல்ல வேளை இது சாதாரண எறும்புகள் தான்...!!

  :))

  ReplyDelete
 68. வருண் said...

  //சர்கரை என்பது ஒரு வேதிப்பொருள். (sucrose -> glucose + fructose) நீங்க தரையில் விட்டதால அதன் தன்மை மாறவே மாறாது. எதார்த்தமாக எறும்புகளை இதைப்பார்க்கவில்லை. இதே சர்க்கரையை அள்ளி வைங்க. எறும்புகள் இருக்கிற இடத்தில் போடுங்க, அதை எறும்பு திங்கலைனா நான் உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் தறேன்! :)//

  என் அக்கௌன்ட் நம்பர் தரேன் முதலில் ஒரு கோடியை அக்கௌண்டில் போடுங்க...

  நீங்க சொன்ன மாதிரி நான் ஏற்கனவே செய்து பார்திட்டேனுங்க...

  சொன்ன பேச்ச மாத்த கூடாது வருண்...

  :)))

  ReplyDelete
 69. "தாரிஸன் " said...

  //அது சரி.... இதுக்கெல்லாம் ரூம் போட்டு யோசிபீன்களோ...உங்க கணவர் திடுனதள தப்பே இல்லீங்க...//

  ம்...நான் வேற என்ன சொல்றது...?!

  முதல் வருகைக்கு நன்றிங்க.
  :))

  ReplyDelete
 70. துளசி கோபால் said...

  //இது கரையறதுக்குள்ளே காஃபி ஆறியே போயிருது:(

  நெய்யும் சக்கரையும் கலந்துக்கலாமுன்னா (இட்லிக்குத் தொட்டுக்க) நறநறன்னு மண்டைமண்டையா நிக்குது சக்கரை!//

  என்னால முடியலைங்க..... உங்க பிரச்னையை நினைச்சி சிரிசிட்டே இருக்கேங்க. ஆனா ரொம்ப பாவம்க நீங்க....

  :))

  வருகைக்கு நன்றி மேடம்...

  ReplyDelete
 71. அன்புடன் அருணா said...

  //இந்த சந்தேகம் எனக்கும் வந்தது.....தீபாவளீயன்று மறந்து போய் வெளியில் வைத்து விட்ட இனிப்புகளின் பக்கம் எறும்புகள் வரவேயில்லை ???!!!//

  அடடா என்னை மாதிரி இன்னொரு அப்பாவியா...?

  இனிப்புனா மிளகாய் தூள் போட்டு செய்வாங்களே அது தானே...

  :)))

  ReplyDelete
 72. வழமைபோல் சுப்பர்

  ReplyDelete
 73. அப்படீன்னா...?

  நீங்க பிளாக் எழுதறது எறும்புக்கும் தெரிஞ்சு போச்சு. அதான் சர்க்கரையே போனாலும் பரவாயில்லைன்னு கம்முன்னு போயிருக்குக.

  ReplyDelete
 74. HI

  Please check the following blog
  giving more details

  http://machamuni.blogspot.com/

  ReplyDelete
 75. போன தடவ எறும்புங்க சர்க்கரைய சாப்புடும் போது நீங்க எதாவது "அடுத்தவன் வீட்டு சர்க்கரைய திருடி திங்குறியே நீங்கலாம் படிச்ச எறும்புங்க தானே... வெக்கமா இல்லை?" ன்னு கேட்டுடீங்களோ என்னவோ... அதான் எல்லா எறும்புங்களும் கோவிச்சிகிச்சி போலருக்கு.... :)

  ஆமா இப்புடியெல்லாம் கேக்க சொல்லி உங்கள யாரு சொல்றது..:)

  ReplyDelete
 76. கௌஸ், எனக்கு காரணம் தெரிலைப்பா. நம்ம எல்கே யும் கொஞ்ச நாட்களுக்கு முன்பு புலம்பியது ஞாபகம் இரூக்கு.

  ReplyDelete
 77. ஐமிடாக்லாப்ரிட்.
  சமையலறையில் சர்க்கரை விழுந்த இடத்திலோ அதைச் சுற்றியோ தக்காளி, ஆப்பிள் என்று ஏதாவது விழுந்திருந்ததா? பூச்சிகொல்லி உபயோகித்து வளர்க்கப்பட்ட காய்கறி பழங்களில் ஒரு சில நேரம் பூச்சிகொல்லியின் படிவுகள் இருக்கும். என்ன தான் சுத்தம் செய்தாலும் தங்கிவிடும். (பயப்படாதீர்கள். பொதுவாக கடைத்தெருவுக்கு வருமுன்னால் காய்கறிகள் நன்றாகக் கழுவப்படுகின்றன.)
  அல்லது வீட்டில் யாராவது சிகரெட் புகையிலை பழக்கம் கொண்டவர்களா? (எங்கள் தாத்தா புகையில் துப்பி காய்ந்த இடத்தில் எறும்பு வரவே வராது - நாங்களும் போக மாட்டோம் :)
  அதுவும் இல்லையென்றால் - உங்களைக் கிண்டல் செய்ய உப்பை நிரப்பியிருப்பாரோ உங்கள் துணை?

  ReplyDelete
 78. ஐயோபாவம்,எறும்புகள். அதுகளை விட்டிடுவோமே. பொழைச்சுப்போகட்டும்.அதுகள்.

  ReplyDelete
 79. இட்லிக்கு தொட்டுக்க நெய்யும் சர்க்கரையுமா? நாயாயமா இது துளசி கோபால்??
  - இட்லிக்கே நாயாய் அலைகிறவன்

  ReplyDelete
 80. அக்கா நான் கொஞ்சம் முயற்சி பண்ணன் ஆனா முயற்சி கலவரம் ஆச்சு எங்க வீட்டு எறும்பு எது நடந்தாலும் தாங்குது கொட்டின இடம் போக ஒளிச்சு வச்ச சக்கரை போத்தல் எல்லாம் குடி வந்துடுச்சு ...........:ஒ
  இப்போ என்ன பண்றது

  ReplyDelete
 81. ஹி ஹி ஹி.இப்படி ஒரு பதிவுக்காகவும், அதற்கு வரும் சுவைமிக்க கமெண்ட்டுகளுக்காகவுமே எறும்புகள் சாப்பிடாமல் விட்டிருக்குமோ? ஹி ஹி... நல்ல விவாதம். முடிவு தெரிந்த பின் சொல்லுங்கள். ஒரு மடல் வேண்டுமானல் எழுதிப்பாருங்களேன்...அவர்களுக்கு தெரிந்த ஏதாவது விஷயம் நமக்கு தெரியாமல் போனதோ?? ஆனாலும், எஸ் கேவின் பதில் திகிலேற்படுத்துகிறது!!

  ReplyDelete
 82. யாதவன் said...

  நன்றி சகோ.


  க. சீ. சிவக்குமார் said...

  //நீங்க பிளாக் எழுதறது எறும்புக்கும் தெரிஞ்சு போச்சு. அதான் சர்க்கரையே போனாலும் பரவாயில்லைன்னு கம்முன்னு போயிருக்குக.//

  வாங்க...என்னங்க இப்படி வாருரீங்க....?? முதல் முறையா வந்து இருக்கீங்க நன்றி. :))

  Anonymous said...

  உங்களின் முதல் வருகைக்கும்....தளத்தை எனக்கு அறிமுக படுத்தியதுக்கும் ரொம்ப நன்றிங்க...அதை படித்துவிட்டு அதிர்ச்சியாகி விட்டதுங்க....இந்த போஸ்ட் எழுதியது சர்க்கரை பற்றிய நிஜம் கொஞ்சம் தெரியபோய் தான். இனி மேல் சர்க்கரை சேர்த்து கொள்வதை குறைத்து கொள்வது நல்லது என்றே தோன்றுகிறது.

  ReplyDelete
 83. முத்துசிவா said...

  என்னமா யோசிக்கிறீங்க...?!!

  //ஆமா இப்புடியெல்லாம் கேக்க சொல்லி உங்கள யாரு சொல்றது..//

  எல்லாம் என்னோட ஆறாவது அறிவுதாங்க....?!

  :))

  ReplyDelete
 84. vanathy said...

  //கௌஸ், எனக்கு காரணம் தெரிலைப்பா. நம்ம எல்கே யும் கொஞ்ச நாட்களுக்கு முன்பு புலம்பியது ஞாபகம் இரூக்கு//

  வாணி lk சொன்னது எறும்பை எப்படி ஒழிக்கிறது என்பதை பற்றி...ஆனா நான் சந்தேகபடுவது சர்க்கரையில் கலப்படம் இருக்கிறது அது எறும்பிற்கு பிடிக்காத வேதி பொருள் கலப்படமாக இருக்குமோ என்பதை பற்றியது...

  நம்ம நண்பர்களின் பின்னூட்டங்களை மொத்தமாக வைத்து பார்க்கும் போது சர்க்கரையை குறைக்கலாம் அல்லது தவிர்க்கலாம் என்ற முடிவிற்கு வந்துவிட்டேன் வாணி.

  ReplyDelete
 85. அப்பாதுரை said...

  //ஐமிடாக்லாப்ரிட்.//

  விளக்கம் தேவை....:)

  //வீட்டில் யாராவது சிகரெட் புகையிலை பழக்கம் கொண்டவர்களா?//

  அடடா அந்த பழக்கம் இல்லையே....

  எறும்பு வராம இருக்கணும்னா சிகரட், புகையிலை பழகனுமோ.....??

  //உங்களைக் கிண்டல் செய்ய உப்பை நிரப்பியிருப்பாரோ உங்கள் துணை?//

  என் வீட்டுகாரர் கிட்சன் எந்த பக்கம் இருக்கு என்று கேள்வி கேட்பவர் சகோ...!! ஸோ அது உப்பு இல்லை சர்க்கரைதான்..!! :))

  ReplyDelete
 86. komu said...

  //ஐயோபாவம்,எறும்புகள். அதுகளை விட்டிடுவோமே. பொழைச்சுப்போகட்டும்.அதுகள்.//

  ஓ.கே விட்டாச்சு....சந்தோசமா...?? :))

  ReplyDelete
 87. inthu said...

  //அக்கா நான் கொஞ்சம் முயற்சி பண்ணன் ஆனா முயற்சி கலவரம் ஆச்சு எங்க வீட்டு எறும்பு எது நடந்தாலும் தாங்குது கொட்டின இடம் போக ஒளிச்சு வச்ச சக்கரை போத்தல் எல்லாம் குடி வந்துடுச்சு ...........:ஒ
  இப்போ என்ன பண்றது//

  ஹா ஹா ஹா

  அடுத்தவங்களுக்கு ஒரு கஷ்டம்னா மனசுக்கு சந்தோசமா இருக்குப்பா...

  ஒரு ஐடியா சொல்லட்டுமா...?? வீட்டை அதுங்க பேருக்கு எழுதி கொடுத்திட்டு நீங்க வீட்டை காலி பண்ணிடுங்க....problem solved....எப்பூடி.....??!!

  ReplyDelete
 88. அன்னு said...

  //அவர்களுக்கு தெரிந்த ஏதாவது விஷயம் நமக்கு தெரியாமல் போனதோ?? ஆனாலும், எஸ் கேவின் பதில் திகிலேற்படுத்துகிறது!!//

  எறும்புகள் பிளான் என்னனு தெரியல... :)))

  ஆனா சர்க்கரையை பற்றி எனக்கு வந்த லிங்குகளில் இருக்கும் தகவல்கள் கொஞ்சம் அதிகமாகவே பயமுறுத்துகிறது.....! எதுக்கும் யோசிச்சுக்கோங்க...!

  ReplyDelete
 89. ஐமிடாக்லாப்ரிட் பூச்சிமருந்து. பல பெயர்களில் கிடைக்கிறது - பேயர் நிறுவனம். ஃப்லிட் என்று அந்த நாளில் கிடைத்த கொசு கொல்லியிலும் கொஞ்சம் கலந்திருந்தது - இன்றைக்கு எந்த வித மணமுமில்லாமல் கிடைக்கிறது. இன்றைக்கு தாவர பூச்சிகொல்லிகளுக்கு அதிகம் பயன்படுத்தப் படுகிறது (பலத்த எதிர்ப்புகளுக்கு இடையிலும்).

  ஐ.. எறும்புகளுக்கு எதிரி. என் நண்பர் தன் வீட்டில் பெரிய காய்கறி/பழத்தோட்டம் வைத்திருக்கிறார். பூச்சிமருந்து அடித்துவிட்டு, சோப் போட்டு கை கழுவி அதைத் துடைக்கப் பயன்படுத்திய பேப்பர் துண்டை ஜன்னலோரமாக வைப்பார் - எறும்பு தலைதெறிக்க வேறுபக்கம் ஓடும்! 'சோப் போட்டு கைகழுவித் துடைத்த பேப்பர் டவலில் இத்தனை படிந்திருந்தால் காய்கறிகளில் எத்தனை படிந்திருக்கும்?' என்று கேட்பேன். 'என்னை எறும்பு மொய்க்காத காரணம் இப்போது புரிந்திருக்குமே?' என்பார் நண்பர்.

  புகையிலை நெடிக்கு எறும்பு வராது என்று சொல்வார்கள். (எறும்புத் தொல்லை போவற்துக்குத் தான் சிகரெட் பிடிக்கிறேன்னு தியாகச் செம்மல்கள் தொடங்கிடப் போறாங்க?!)

  ReplyDelete
 90. அட அட நல்ல எண்ணம் அக்க உங்களுக்கு இனி அவங்களுக்கு நான் வீடு தேடனும் அது வரை விடை பெறுகிறேன்

  ReplyDelete
 91. ***Kousalya said...

  வருண் said...

  //சர்கரை என்பது ஒரு வேதிப்பொருள். (sucrose -> glucose + fructose) நீங்க தரையில் விட்டதால அதன் தன்மை மாறவே மாறாது. எதார்த்தமாக எறும்புகளை இதைப்பார்க்கவில்லை. இதே சர்க்கரையை அள்ளி வைங்க. எறும்புகள் இருக்கிற இடத்தில் போடுங்க, அதை எறும்பு திங்கலைனா நான் உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் தறேன்! :)//

  என் அக்கௌன்ட் நம்பர் தரேன் முதலில் ஒரு கோடியை அக்கௌண்டில் போடுங்க...

  நீங்க சொன்ன மாதிரி நான் ஏற்கனவே செய்து பார்திட்டேனுங்க...

  சொன்ன பேச்ச மாத்த கூடாது வருண்...

  :)))***

  உங்க பதிலை வாசிச்சேங்க! ஒரு கோடி எப்போ தர்றேன் னு சொல்லியிருக்கேனா? :)))) ஆனால் கட்டாயம் தருவேன். :)

  இந்த எறும்புகளோட சைக்காலஜி தெரியலைங்க. ஆனால் சர்க்கரை, சர்க்கரையாத்தான் இருக்கும் என்பதென்னவோ உண்மைதான்.

  வெல்லம் எல்லாம் கொஞ்சம் கலராயிருக்கும் இல்லையா? அதுக்கு காரணம் என்னனா அதில் சர்க்கரை தவிர வேறு இம்ப்யுரிட்டி கலந்து இருக்குங்க. அதை சுத்தப்படுத்தி, க்ரிஸ்டலைஸ் செய்யும்போது சுத்தமான சர்க்கரை வெள்ளைக்கலரில் வருதுங்க!

  சரி நான் ஒரு கோடி சம்பாரிச்சுட்டு வர்றேன் :)

  ReplyDelete
 92. sabaash!!!!!!!
  super investigation madam.

  ReplyDelete
 93. நல்லா பண்ணுறாங்கப்பா ஆராய்ச்சி. நானே chemistry ல ஆராய்ச்சி பண்றதால ஒரு விடை குடுக்கறேன்.
  முதல்ல அரிசிக்கு பதில் வெல்லமோ பச்சரிசியோ போட்டு பாருங்க, நம்ம எறும்புகள் வந்து கூடி கொண்டாடி கும்மியடிச்சு கோலாட்டம் போடும்! (வீட்டுகாரர் கிட்ட இன்னும் டோஸ் கிடைச்சா நான் பொறுப்பில்லை).
  அந்த நாட்களில் (இன்றும் கூட, சில இடங்களில் வாடிக்கையாளர்கள் கோரிக்கை நிமித்தம்) சர்க்கரையை bleach பண்ண மாட்டார்கள். அதனால் இயல்பான நாட்டு சர்க்கரை பழுப்பு நிறம் உண்டு. கல்கண்டு bleach பண்ணப்பட்டதால் ஸ்படிகம் மாதிரி இருந்தது. அதில் அப்போதெல்லாம் மாட்டு எலும்புகளின் தூளை தான் bleach பண்ண பயன் படுத்தினார்கள். இப்போது bleaching agent பயன் படுத்துகிறார்கள். எறும்புகளுக்கு வாசனை சக்தி அதிகம். அது போன trail வாசனை பிடித்து திரும்ப வழி கண்டு பிடிக்கும் புற்றுக்கு. அதனால் ஒரு வேலை பிடிக்காமல் போயிருக்கலாம். வேண்டுமானால் வெல்லம் போட்டு பரிசோதனை செய்யவும்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...