புதன், நவம்பர் 17

10:01 AM
70


"2030 ம் ஆண்டில், உலகில் பாதி பேருக்கு குடிநீர் கிடைக்காது....தண்ணீரை மையமாக வைத்து நாடுகள் ஒன்றை ஒன்று அடித்து கொள்ள கூடும்......! இஸ்ரேல், சூடான், மத்திய ஆசியா என்று உலகம் முழுதும் யுத்தம் பரவ கூடும்"  இதை  நான் சொல்ல வில்லை.....! நம்ம ஐ. நா தான் சொல்கிறது....இதற்கு மாற்று ஏற்பாடு செய்தே  ஆக வேண்டும், அதுவும் உடனே என்று எச்சரிக்கை விடுக்கிறது....!!? அதற்கான ஆலோசனையாக மழை நீர் சேகரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இரண்டையும் சொல்கிறது......!!

2030 வர இன்னும் 20 வருடம் இருக்கே என்று மெத்தனமாக இருக்காமல் அப்போது அவதி பட போகிறவர்கள் நம் பிள்ளைகள் தான் என்று சுயநலமாக எண்ணியாவது முயற்சிகளை இன்றே எடுத்தாகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அரசாங்கம் மட்டுமே முயற்சி செய்தால் போதாது....!? தனிப்பட்ட ஒவ்வொரு நபரும் அக்கறை கொள்ளவேண்டும்......(நம்ம வீட்டை பார்க்கவே நேரம் போதவில்லை. இது வேறையா என்று புலம்புவர்களை தவிர்த்து !)

முதலில் எந்த விதங்களில் எல்லாம் நீர் ஆதாரங்களை அதிகரிக்கலாம் என்று பார்க்கலாம்....! மழைநீர் சேகரிப்பு பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். அடுத்து முக்கியமானது ஆறுகளில் ஓடும் தண்ணீரை பாதுகாத்து கொள்வது.....அதனை பற்றி இங்கே பார்க்கலாம். 

விவசாயிகளின் முக்கிய தேவைகளில் ஒன்று ஆற்று நீர்......

'ஆற்று வளம் ஒரு நாட்டு வளம் ' என்று விவசாயிகள் சொல்வார்கள். ஆற்று வளம் நன்றாக இருந்தால் தான் நாட்டில் விவசாயமும், குடிநீரின் தேவையும் பூர்த்தி ஆகும். இது எல்லோருக்கும் தெரியும் ஆனால் நம்ம ஊரில் இருக்கும் ஆறுகளின் நிலைமையை  நினைத்தால் பரிதாபம் தான் வருகிறது.  எனக்கு தெரிந்த ஒரு ஆற்றை பற்றி சொல்ல வேண்டும் என்றால் நெல்லை மாவட்டத்தில் உற்பத்தியாகி, ஓடி தூத்துக்குடி வழியாக கடலில் கலக்கும் தாமிரபரணி ஆற்றை பற்றி சொல்லலாம். இந்த ஆறு ஒன்று தான் இப்போதைக்கு ஓரளவிற்கு குடிநீர் தேவையை தீர்த்து வைக்கிறது. ஆனால் இந்த ஆற்றின்  நிலைமை இப்போது பெருமையா சொல்லிக்கிற  மாதிரி இல்லை.

மணல் வளம்

ஆற்றுக்கு மிக இன்றியமையாதது அங்கே இருக்கும் மணல் தான் ஆனால் அந்த மணலை கொஞ்ச கொஞ்சமா சுரண்டி கொண்டிருக்கிறார்கள். முக்கியமான விஷயம் என்னனா இங்கே மணல் எடுக்கிறதே தவறு, இந்த மணலும் நமக்கு பயன்படாம பக்கத்து மாநிலமான கேரளாவிற்கு கடத்த படுகிறது. (அவங்க எப்பவுமே ரொம்ப விவரமான புத்திசாலிங்க...!) அவங்க மாநில ஆற்றில் மணல் எடுக்க கூடாதுன்னு தடை விதித்துவிட்டார்கள். (பின்ன எப்படி அவங்க ஊர்ல கட்டிடம் கட்டுவாங்க....?! அதுக்குதான் தமிழ் நாடு பக்கத்தில இருக்கிறதே......?! மணலை கடத்தி கொண்டு வந்திட்டா போச்சு)

ஆனால் நாம, அதுதாங்க தமிழன் தன் வீட்டை பற்றி நினைக்காமல் அள்ளிக்கொண்டு போய் அங்கே கொட்டிட்டு வராங்களே....! எல்லாம் விசயத்திலும் நாம எல்லா பக்கமும் சுரண்ட பட்டு கொண்டே இருக்கிறோம், அதுவும் தன் கையை வைத்தே தன் கண்ணை குத்துவது போல் அதுக்கு துணை செல்பவர்களை என்னவென்று சொல்வது....!?

இப்படி மணல் எடுப்பதால் ஆற்றின் நீரின் அளவும் குறைந்து கொண்டே செல்கிறது. மணல் நிறைய இருந்தால் தான் மழை பெய்யும்போது தண்ணீர் பூமிக்குள் நன்றாக இறங்கும், நீரின் ஓட்டமும் சீராக இருக்கும். ஆற்றின் ஜீவன் போல் இருக்கும் இந்த மணலை திருடுபவர்களை கொலைகாரர்கள் என்று சொல்லகூட  தகுதியானவர்கள் தான்.  மணல்  எடுக்கும் போது எந்திரங்களை வைத்து பெரிய பள்ளம் ஏற்படும் அளவிற்கு தோண்டுகிறார்கள்....இதனால் நீரின் ஓட்டமும் திசை மாறி ஒழுங்கின்றி சென்று வீணாகி போய்விடுகிறது. இன்னும் சொல்ல போனால் இவர்களாகவே நிரந்தரமாக ஆற்றின் நடுவே ரோடு வேற போட்டு விடுகிறார்கள். மீன் வளம் வேறு பாதிக்க படுகிறது....இப்படி கேடுகளை  சொல்லிட்டே போகலாம்....

அரசாங்கம் என்ன செய்கிறது ??

தாமிரபரணி ஆற்றை பொறுத்தவரை 'இனி எந்திரங்களை பயன்படுத்தி மணல் எடுக்க கூடாது' என்று அரசாங்கம் கடுமையான உத்தரவு போட்டு இருக்கிறது. குறைந்தது இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்த ஆற்றில் மணல் எடுப்பதை தடை செய்யவேண்டும் என்று ஆய்வு செய்த அதிகாரிகள் அறிக்கையில் சொல்லி இருக்கிறார்கள். இனி இதை    சரியாக கவனித்து கடத்தலை தடுக்க வேண்டியது சம்பந்த பட்ட அதிகாரிகளின் கையில் தான் இருக்கிறது. மேலும் விவசாயிகளின் மூலம் பொது  நல வழக்கு போடப்பட்டதால் தான் தாமிரபரணி ஆறும் அரசாங்கத்தின் பார்வைக்கு சென்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நமக்கு என்ன என்ற போக்கு கொஞ்சம் மறைய தொடங்கிவிட்டது என நினைக்கிறேன் . பொது மக்களும் கொஞ்சம் விழிப்பாக இருப்பது அவசியம் ஆகிறது. இரவில் தான் இந்த கடத்தல் முழு வேகத்தில் நடக்கிறது....அதை தெரிந்து கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் விழிப்பாக இருந்தால் இந்த மணல் திருட்டை தடுக்கலாம்.

குடிநீர் தேவைக்கு முக்கிய ஆதாரமான ஆறுகளின் மணல் வளத்தை குறையாமல் பாதுகாத்து கொள்வது மிக மிக அவசியம். இப்போதே பல இடங்களில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அவதி படுகிறார்கள்....இனியும் நாம் இந்த மணல் கடத்தல் விசயத்தில் விழித்து  கொள்ளவில்லை என்றால் நிலைமை இன்னும் மோசமாக போய்விடும்.  

நாட்டில இருக்கிற எவ்வளவோ பிரச்சனைகளில் இதுவே முக்கியமானதாக தோன்றுகிறது....! உயிர் வாழ ஆதாரமான தண்ணீர் பற்றாக்குறையை முதலில் சரி செய்ய முயலுவோம்.....! இனி வரும் சந்ததிகளுக்கு தண்ணீரை கொஞ்சம் விட்டு செல்வோம்.....! தண்ணீருக்காய் நாடுகள் ஒன்றுக்கொன்று அடித்து கொள்ளும் என்பதை நினைக்கையில் வருத்தமே வருகிறது.....! 


அடுத்து நீரின் பற்றாக்குறைக்கு வேறு ஒரு முக்கிய காரணமாக இருப்பது சுற்றுச்சூழல் இதனை பற்றி இனி தொடரும் பதிவுகளில் பாப்போம்... படம் உதவி : சௌந்தர்


வாசலில் 'துளிகள்....!'

Tweet

70 கருத்துகள்:

 1. விழிப்புணர்வு ஊட்டும் பதிவு அக்கா வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. இதை நான் சொல்ல வில்லை.....! நம்ம ஐ. நா தான் சொல்கிறது..////

  அப்போ இது எழுதியது யாரு ஐ. நா வா அப்படினா என்ன... ஐந்து நபர்(நாபர்) எழுதியது சொல்றிங்களா

  பதிலளிநீக்கு
 3. முதலில் எந்த விதங்களில் எல்லாம் நீர் ஆதாரங்களை அதிகரிக்கலாம் என்று பார்க்கலாம்....!///

  மழைநீர் சேமிப்பு செய்வது போல சீரியல் பார்த்து கண்ணீர் சேமிப்பு திட்டம் தொடங்குவோம்

  பதிலளிநீக்கு
 4. //முதலில் எந்த விதங்களில் எல்லாம் நீர் ஆதாரங்களை அதிகரிக்கலாம் என்று பார்க்கலாம்....! //

  ஒரு ஐடியா தெருவுக்கு தெரு மூன்று டாஸ்மாக் கடை திறக்க வேண்டும் ....இது எப்படி இருக்கு

  பதிலளிநீக்கு
 5. அரசாங்கம் என்ன செய்கிறது ??///

  விஜகாந்த் நடித்த படம் அது தானே...?

  பதிலளிநீக்கு
 6. இதற்க்கு முக்கியமாக நதி நீர் இன்னைப்பு கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் ..... மழையினால் பெரு வெள்ளம் வந்து வீணாக கடலில் கலக்கும் நீரை சேமிக்க ...குளம், குட்டைகள் அதிகமாக்க பட வேண்டும் .....

  வீடு கட்டுவதற்கு மணல் தேவை தான் இருந்தாலும் .......... ஒரு லிமிட் வைத்து அதற்க்கு மேல் எடுக்க கூடாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும் ....(ஆமா உள்ள சட்டத்தை யார் மதிக்கிற என்று என்னை நானே கேட்டு கொள்கிறேன் )

  பதிலளிநீக்கு
 7. 2030 meendum oru ulaga yuthtama... athuvum thanneerukkakavaa... aiyo... mazhai neer sekarippin avasiyaththai solliyum... naamellam kadaney endruthaney seithom...nalla pakirvu... thodarungal.

  பதிலளிநீக்கு
 8. அரசாங்கம் என்ன செய்கிறது ??//

  spectrum ஊழல்ல வந்த பணத்தை பிரிச்சி கொடுத்துகிட்டு இருக்காங்க ..... மகாபலிபுரம் resotla ஓய்வு எடுத்துகிட்டு இருக்கு .........அடுத்த கூட்டணி கணக்கு பண்ணிட்டு இருக்காங்க ...... .எத்தனை வேலை நடந்துகிட்டு இருக்கு .....நீங்க பாட்டுக்கு கேள்விய கேட்டு விட்டீர்கள் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிட போறாங்க

  பதிலளிநீக்கு
 9. நதிகள் தேசியமயமாக்கப் பட வேண்டும். பிறகு அவை ஒன்றுடன் ஒன்று இணைக்கப் படவேண்டும். அடுத்தது, புதிய வீடோ பழைய வீடோ மழை நீர் சேகரிப்பு திட்டம் சரி பார்க்கப்பட்டு செயல் படுத்தப் படவேண்டும். கடலில் வீணாய் கலக்கும் தண்ணீரை உபயோகப் படுத்த வேண்டும்.

  திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது

  பதிலளிநீக்கு
 10. தொடர்ந்து சமுதாயத்திற்கு ஏற்ற பதிவுகளை எழுதுகிறீர்கள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 11. அவசியமான பதிவு... தொடருங்கள்...

  பதிலளிநீக்கு
 12. //வரப்போகிறது ஒரு யுத்தம்....!////
  என்னவோ யுத்தம் நினைத்து வாய்ல அருவா கவ்விகிட்டு தலை தெறிக்க ஓடி.....இங்க வந்தா ஒன்னும் இல்லை

  பதிலளிநீக்கு
 13. சங்கவி said...

  //Very Good Post...//

  thank u bro.

  பதிலளிநீக்கு
 14. சசிகுமார் said...

  //விழிப்புணர்வு ஊட்டும் பதிவு அக்கா வாழ்த்துக்கள்//

  நன்றி சசி.

  பதிலளிநீக்கு
 15. இம்சைஅரசன் பாபு.. said...
  இதற்க்கு முக்கியமாக நதி நீர் இன்னைப்பு கண்டிப்பாக கொண்டு வர வேண்டும் ..... மழையினால் பெரு வெள்ளம் வந்து வீணாக கடலில் கலக்கும் நீரை சேமிக்க ...குளம், குட்டைகள் அதிகமாக்க பட வேண்டும் .....

  வீடு கட்டுவதற்கு மணல் தேவை தான் இருந்தாலும் .......... ஒரு லிமிட் வைத்து அதற்க்கு மேல் எடுக்க கூடாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும் ....(ஆமா உள்ள சட்டத்தை யார் மதிக்கிற என்று என்னை நானே கேட்டு கொள்கிறேன் ////

  கோவில்பட்டிக்கு ஆட்டோ வருது

  பதிலளிநீக்கு
 16. பெயரில்லா11:23 AM, நவம்பர் 17, 2010

  தண்ணீர் தனியார்மயம் என்பது மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் ஒரு அபாயகரமான போக்கு. தண்ணீர் தட்டுப்பாடிற்கும், தண்ணீர் மேலாண்மை சரி வரச் செய்யப்படாமைக்கும் பின் உள்ளது இதுவே.

  http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3729:-q---&catid=182:2008-09-04-19-43-04&Itemid=109

  பதிலளிநீக்கு
 17. சௌந்தர் said...

  //அப்போ இது எழுதியது யாரு ஐ. நா வா அப்படினா என்ன... ஐந்து நபர்(நாபர்) எழுதியது சொல்றிங்களா//

  உனக்கா தெரியாது .....? :))

  //மழைநீர் சேமிப்பு செய்வது போல சீரியல் பார்த்து கண்ணீர் சேமிப்பு திட்டம் தொடங்குவோம்//

  அட இது நல்லா இருக்கே....!

  பதிலளிநீக்கு
 18. இம்சைஅரசன் பாபு.. said...

  //ஒரு ஐடியா தெருவுக்கு தெரு மூன்று டாஸ்மாக் கடை திறக்க வேண்டும் ....இது எப்படி இருக்கு//

  அடடா நான் எதை பற்றி சொன்னேன்....?! அந்த தண்ணியை மறந்திட்டு நம்ம குடிநீரை பற்றி யோசிங்க சகோ.

  //வீடு கட்டுவதற்கு மணல் தேவை தான் இருந்தாலும் .......... ஒரு லிமிட் வைத்து அதற்க்கு மேல் எடுக்க கூடாது என்று சட்டம் கொண்டு வர வேண்டும் ....(ஆமா உள்ள சட்டத்தை யார் மதிக்கிற என்று என்னை நானே கேட்டு கொள்கிறேன்//

  லிமிட் என்று வைக்கிறதே அதை தாண்டுவதற்கு தானே என்று தப்பாக புரிஞ்சிட்டு நடப்பாங்கனு நினைக்கிறேன்

  பதிலளிநீக்கு
 19. சே.குமார் said...

  //2030 meendum oru ulaga yuthtama... athuvum thanneerukkakavaa... aiyo... mazhai neer sekarippin avasiyaththai solliyum... naamellam kadaney endruthane seithom...nalla pakirvu....//

  மழை நீர் சேகரிப்பு நல்ல திட்டம் தான் ஆனால் நாம தான் சரியாக தொடர்ந்து பின்பற்றவில்லை என்பதும் என் கருத்து. பல இடங்களில் இன்னும் தொடர்ந்து அதன் அருமை புரிந்து செயல் படுத்தி கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் முழு அளவில் இருந்தால் நன்றாக இருக்கும். இதனை பற்றிய விழிப்புணர்வு இன்னும் அதிகம் வர வேண்டும்.

  நன்றி சகோ

  பதிலளிநீக்கு
 20. சமுதாய விழிப்புணர்வு ஊட்டும் பதிவு. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 21. அம்மாவின் ஆட்சியில் போட்ட ஒரே நல்ல திட்டம் மழை நீர் சேமிப்பு திட்டம் தான் ...கட்டாயபடுத்தினால் ஒழிய நம் மக்கள் அதை கடை பிடிக்க மாட்டார்கள் ...நமது காலம் ஓடி விடும் என நினைக்கிறேன் ....சட்டம் ஒழுங்கு ....நீர் ....என எத்தனையோ பிரட்சினைகளில் பிள்ளைகளின் காலம் எப்படி தான் போகப் போகிறதோ என்று நினைத்தால்....சற்று கவலையாகத்தான் உள்ளது .....இப்பொழுது சுயநலம் தான் முக்கியமாக போய் விட்டது ...இப்பொழுதே இல்லாதவன் இருக்கிறவனிடம் கொள்ளை அடிக்க ஆரம்பித்து விட்டான் ....100 அடியில் தண்ணீர் கிடைத்தது போய் இப்பொழுதே 200 அடி 250 அடி என பூமியை ரணகள படித்துகிறோம் ....இதை படிக்கும் நாமே முன் வந்து ....படித்த நாமே இதை செயல் படுத்துவோம் என உறுதி கொள்வோம் ....எழுதியதோடு அல்லாமல் என் வீட்டிலும் இதை கடை பிடித்துள்ளேன் என்பதையும் தெரியபடுத்தி கொள்கிறேன் ....தச்சை கண்ணன் .....

  பதிலளிநீக்கு
 22. நல்ல பதிவு..வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 23. உங்களின் பக்கம் என் முதல் வருகை. முதல் பதிவு ( எனக்கு )என்னை நன்றாக பாதிக்கிறது. இந்த மொத்த மனித குலமும் தனக்கு தானே கொள்ளி வைத்து கொண்டு வெகுநாளாகிறது. கிட்டத் தட்ட பாதி அழிந்து எரிந்து கொண்டிருக்கும் சிதைக்கு "காப்பாற்ற நீர்" கேட்கிறீர்கள். உங்கள் எண்ணம் பாராட்டுக்குறியது. ஆனால் பலன்... நிச்சயமாய் இந்த சமூகத்தில் கிடைக்காது. இது "அறிவை" -"சுயநலம்" என்ற பொருளில் தவறாக பயன்படுத்தி விட்டது. அதன் விளைவு... இது போல் இன்னும் ஆயிரம் பிரச்சனைகள் "மனிதகூட்டத்தின்" முன் வைக்க காலம் காத்திருக்கிறது. எந்த ஒன்று தன்னை பெரிய கொம்பு என நினைக்கிறதோ அது கண்டிப்பாய் அழிந்தே தீரும். டைனோசர் கூட்டம் போல். பிரபஞ்சத்தின் முன் தூசானக் கூட்டம், வெறும் கேவலங்கள் வளர்க்கும் கூட்டம், சுயம் தெரியா கூட்டம்... முடிவை நெருங்கி விட்டது.
  உங்கள் பதிவுக்கு என் நன்றி. வருக இந்த பக்கம். ( ithayasaaral.blogspot.com )

  பதிலளிநீக்கு
 24. தண்ணீர்பிரச்சினை இப்பொழுது பெரும் பிரச்சினையாக வந்துகொண்டிருக்கிறது .. நம்ம ஊரப் பொருத்தவரைக்கும் தேசிய நதிகளை இணைத்தல் இந்தப் பிரச்சினையை நம்ம ஊர்ல தடுக்கலாம் .. ஆனா எங்க வர்ற காசெல்லாம் 2g மாதிரி முழுன்கிடரான்களே ..

  பதிலளிநீக்கு
 25. பெயரில்லா4:09 PM, நவம்பர் 17, 2010

  நல்ல பதிவு சகோ..
  மழை நீர் சேமிப்பு முழுவீச்சுடன் செய்யாமல், ஆறுகளில் மணல் அள்ளுவதைத் தடுக்காமல் விட்டால் இன்னும் 40௦ ஆண்டுகளில் தமிழ்நாடு பாலைவனமாகி விடுமென எதிலோ படித்த நினைவு..

  பதிலளிநீக்கு
 26. நீங்கள் ​சொல்வது சரி​யே.. ஆனால் மணல் எடுப்பதால் மட்டு​மே ஆறுகள் வற்றிவிடவில்​லை. ​தென்னிந்திய நதிகள் ம​ழை​யை நம்பி​யே உள்ளன. ம​ழையின் அளவு கு​​றையும் ​போது நதியில் நீ​ரோட்டமும் கு​றையும்.

  பதிலளிநீக்கு
 27. அட! எவங்க காது கொடுத்து கேக்கப்போறன்? லூஸுல விடுங்க. இயற்கை அதுக்கு தேவையானதை எடுத்துக்கும். கவலைபடாதீங்க.

  இதைப்பத்தி என் கத்தல்...

  http://jeeno.blogspot.com/2004/04/blog-post.html

  பதிலளிநீக்கு
 28. ஏறக்குறைய இந்தப்பிரச்சினையைத்தொட்டு எழுதப்பட்ட இடுகை இங்கயிருக்கு.

  http://amaithicchaaral.blogspot.com/2010/03/blog-post_17.html

  பதிலளிநீக்கு
 29. முப்பது வருடங்களில் தண்ணீர் தீர்ந்துவிடும் என்பதெல்லாம் ஐநா விடும் புருடா! பொறுப்புள்ள நிறுவனங்கள் இது போல் ஆதாரமில்லாமல் பேசும் பொழுது எரிச்சல் வருகிறது. அழிந்து போகும் ஆபத்து இப்போதைக்கு இல்லை என்றாலும், தண்ணீர் உலக அளவில் ஒரு சிக்கல் தான். தொலைநோக்குத் தீர்வுகள் தேட வேண்டிய பிரச்சினை தான்.
  சில மேற்கத்திய நாடுகள் போல மானிலங்கள் கடந்து ஓடும் நதிகளையும், வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய நதிகளையும் மத்திய அரசாங்க இலாகா பராமரிப்பில் விட்டால் நதியிணைப்புத் திட்டங்கள் நிறைவேறும். தண்ணீர்ச் சிக்கலை இந்தத் திட்டங்கள் முழுமையாகத் தீர்க்காவிட்டாலும் வெள்ள நீருக்கு வடிகாலாகவோ சேமிப்பாகவோ அமையக்கூடும். மழை நீர் சேமிப்பு திட்டத்தில் செலவு அதிகம். பயன் குறைவு. உலகத்தில் இயற்கை மழை குறைந்து கொண்டே வருவதும் கவனிக்க வேண்டிய நிலவரம். இந்தியாவின் மூன்று பக்கமும் கடல் - அதிலும் ஒன்று பெருங்கடல்! இந்திய விஞ்ஞானிகள் உலகத்துக்கே வழிகாட்ட முடியும் - கடல் நீரை குடி நீராக்கி பரவலாகக் கிடைக்கும் படி செய்தால். துணி துவைக்கவும் குளிக்கவும் சோப்பு மற்றும் நீரை உபயோகிக்க வேண்டிய அவசியமில்லாமல் கிருமிநாசினி முறைகளை வணிகப்படுத்தினால். இவையெல்லாம் நடைமுறையில் செயல்படுத்தக்கூடியவை - சயன்ஸ் பிக்சன் சமாசாரமில்லை. எத்தனையோ செலவழிக்கும் அரசாங்கங்கள் இது போன்ற திட்டங்களுக்கு - பல்கலைக்கழங்கள் கூட்டுறவில், பரவலாக அமலுக்கு வர பத்து இருபது முப்பது வருடங்கள் ஆகலாம் - அது வரை தொடர்ந்து நிறைய பணமும் உதவியும் ஒதுக்க வேண்டும். நடக்குமா?

  பதிலளிநீக்கு
 30. நல்ல விழிப்புணர்வு ஊட்டும் பதிவு சகோ..

  பதிலளிநீக்கு
 31. உண்மையிலேயே நல்ல விசயம் சொல்லியிருக்கீங்க.
  பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 32. அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றினை சொல்லியிருக்கிறீர்கள்... ஆனால் நீங்கள் சொன்ன ஆலோசனைகளை எல்லாம் இங்கே எவனும் கேட்கமாட்டான்...

  பதிலளிநீக்கு
 33. முக்கியமான ஒரு விஷயத்தை எடுத்திருக்கிறீர்கள் கௌசி !

  பதிலளிநீக்கு
 34. இது போன்ற விழிப்புணர்வுப் பதிவுகள் நிறைய வர வேண்டும்.

  பதிலளிநீக்கு
 35. இம்சைஅரசன் பாபு.. said...

  //எத்தனை வேலை நடந்துகிட்டு இருக்கு .....நீங்க பாட்டுக்கு கேள்விய கேட்டு விட்டீர்கள் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிட போறாங்க//

  இவ்வளவு விளக்கமா சொன்ன உங்க வீட்டுக்கு ஆட்டோ தான் வர போகுது...பார்த்து இருந்துகோங்க....

  //என்னவோ யுத்தம் நினைத்து வாய்ல அருவா கவ்விகிட்டு தலை தெறிக்க ஓடி.....இங்க வந்தா ஒன்னும் இல்லை//

  அடடா எப்பவும் அருவா வச்சிட்டு இருக்கிறது இருக்கு தானா....?

  இருக்கிற வேலையை பார்க்கவே எனக்கு நேரம் போதல...இதில யுத்தம் வேறயா....? அருவாளா தூக்கி போட்டுட்டு பொழப்ப பாருங்க சகோ.

  பதிலளிநீக்கு
 36. LK said...

  //கடலில் வீணாய் கலக்கும் தண்ணீரை உபயோகப் படுத்த வேண்டும்.//

  இதுக்கு முயற்சி செய்தாலே, பெய்கிற கொஞ்ச மழையையும் நல்ல முறையில் பாதுகாக்க முடியும்.

  //திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது//

  திருடர்கள் இன்னும் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறார்கள். :)))

  பதிலளிநீக்கு
 37. அருண் பிரசாத் said...

  //அவசியமான பதிவு... தொடருங்கள்..//

  தொடருகிறேன்...நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 38. Anonymous said...

  //தண்ணீர் தனியார்மயம் என்பது மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் ஒரு அபாயகரமான போக்கு. தண்ணீர் தட்டுப்பாடிற்கும், தண்ணீர் மேலாண்மை சரி வரச் செய்யப்படாமைக்கும் பின் உள்ளது இதுவே.//

  நீங்கள் கொடுத்த லிங்க் சென்று படித்தேன்....மிக அருமையான பல தகவல்கள் இருக்கின்றன...பலரும் சென்று படித்தார்களா என்று தெரியவில்லை....!? மற்றவர்களை படிக்க சொல்லி இருக்கிறேன். அந்த தளத்தை அறிமுக படுத்தியதிற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 39. வெங்கட் நாகராஜ் said...

  //சமுதாய விழிப்புணர்வு ஊட்டும் பதிவு. //

  புரிதலுக்கு நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 40. S Maharajan said...

  //அவசியமான பதிவு//

  நன்றி நண்பரே.

  பதிலளிநீக்கு
 41. murugan said...

  //அம்மாவின் ஆட்சியில் போட்ட ஒரே நல்ல திட்டம் மழை நீர் சேமிப்பு திட்டம் தான் ...கட்டாயபடுத்தினால் ஒழிய நம் மக்கள் அதை கடை பிடிக்க மாட்டார்கள்//
  //இதை படிக்கும் நாமே முன் வந்து ....படித்த நாமே இதை செயல் படுத்துவோம் என உறுதி கொள்வோம்//

  ஆனா அந்த திட்டம் போடும் இரண்டு வருடங்கள் முன்பாகவே நாங்கள் கட்டிய வீட்டில் மழை நீராய் சேமிக்க வடிவமைத்து விட்டோம்.

  பக்கத்து வீடுகளில் 400 அடி வரை போர் போட்டும் தண்ணீர் வருவது இல்லை...ஆனால் எங்கள் வீட்டில் அந்த பிரச்சனையே இல்லை....சுற்றி இருக்கும் பெரிய தோட்டத்திற்கும் சேர்த்து மூணு மணி நேரம் மோட்டார் ஓடினாலும் தண்ணீர் வந்து கொண்டுதான் இருக்கிறது. இதற்க்கு காரணம் நாங்கள் அப்போது மேற்கொண்ட மழைநீர் சேமிப்புதான்.

  மண்ணில் விழும் ஒரு துளி நீர் கூட காம்பௌண்டை விட்டு வெளியே செல்லாது.

  அனுபவத்தில் சொல்கிறேன்....அனைவரும் கட்டாயம் பின் பற்றகூடிய ஒன்று தான் இந்த சேமிப்பு.

  பதிலளிநீக்கு
 42. @@ஹரிஸ் said...

  //நல்ல பதிவு..வாழ்த்துக்கள்..//

  நன்றி ஹரிஸ்.

  @@தெம்மாங்குப் பாட்டு....!! said...

  //Coming To Blog After long Time sister. Your Posts all very Good......

  Continue.//

  வாங்க இப்பதான் அக்கா நினைவு வந்ததா....? மெயில் பண்றதும் இல்லை. இப்ப வந்ததுக்கு நன்றி சொல்லிகிறேன்.

  பதிலளிநீக்கு
 43. நண்பர்களே என்னுடைய இந்த பதிவிற்கு வந்து உங்களின் கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
  http://vandhemadharam.blogspot.com/2010/11/blog-post_18.html

  உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து
  சசிகுமார் (வந்தேமாதரம்)

  பதிலளிநீக்கு
 44. தமிழ்க் காதலன். said...

  //பிரபஞ்சத்தின் முன் தூசானக் கூட்டம், வெறும் கேவலங்கள் வளர்க்கும் கூட்டம், சுயம் தெரியா கூட்டம்... முடிவை நெருங்கி விட்டது.//


  உங்களின் ஆதங்கம் உண்மையானது....வார்த்தைகளின் என்ன ஒரு ஆவேசம், அனல் தெறிக்கிறது. இதை எல்லாம் பற்றி பதிவாக எழுதலாமே.

  நடக்கும் அனைத்தையும் வேடிக்கை பார்க்கும் பார்வையாளனாக மட்டுமே இருக்கிறோம்...வெறும் கையுடன்....!

  முதல் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 45. ப.செல்வக்குமார் said...

  //தண்ணீர்பிரச்சினை இப்பொழுது பெரும் பிரச்சினையாக வந்துகொண்டிருக்கிறது .. நம்ம ஊரப் பொருத்தவரைக்கும் தேசிய நதிகளை இணைத்தல் இந்தப் பிரச்சினையை நம்ம ஊர்ல தடுக்கலாம் .. ஆனா எங்க வர்ற காசெல்லாம் 2g மாதிரி முழுன்கிடரான்களே ..//


  எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தை நம்பி இருக்காமல்...நம்மால் இயன்றவரை எதை செய்ய முடியுமோ அதை செய்யலாமே செல்வா....மழை நீர் சேகரிப்பு ஒரு உதாரணம்.

  பதிலளிநீக்கு
 46. Balaji saravana said...

  //மழை நீர் சேமிப்பு முழுவீச்சுடன் செய்யாமல், ஆறுகளில் மணல் அள்ளுவதைத் தடுக்காமல் விட்டால் இன்னும் 40௦ ஆண்டுகளில் தமிழ்நாடு பாலைவனமாகி விடுமென எதிலோ படித்த நினைவு.//

  அப்ப இருக்கும் நம்ம பிள்ளைகளை நினைத்தால் தான் கவலையாக இருக்கிறது....நம்ம குழந்தைகளுக்கு சொத்து சேர்த்து வைக்கிறதை விட தண்ணீர் சேர்த்து வைக்கணும் முதலில்...! கருத்திற்கு நன்றி பாலா.

  பதிலளிநீக்கு
 47. அழகி said...

  //ஆனால் மணல் எடுப்பதால் மட்டு​மே ஆறுகள் வற்றிவிடவில்​லை. ​தென்னிந்திய நதிகள் ம​ழை​யை நம்பி​யே உள்ளன. ம​ழையின் அளவு கு​​றையும் ​போது நதியில் நீ​ரோட்டமும் கு​றையும்.//

  மழை பொழியும் போது அதை முறையாக சேமித்து வைத்தாலே போதும்.....அவை பெரும் அளவில் கடலில் சென்று தான் கலக்கிறது.

  உங்களின் முதல் வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 48. சீனு said...

  //அட! எவங்க காது கொடுத்து கேக்கப்போறன்? லூஸுல விடுங்க. இயற்கை அதுக்கு தேவையானதை எடுத்துக்கும். கவலைபடாதீங்க.

  இதைப்பத்தி என் கத்தல்...//

  ம்...நீங்க கத்துவதையும் sorry sorry சொல்றதையும் கேட்கிறேன்...! :))

  உங்களின் முதல் வருகைக்கும், சமாதானத்திற்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 49. அமைதிச்சாரல் said...

  //ஏறக்குறைய இந்தப்பிரச்சினையைத்தொட்டு எழுதப்பட்ட இடுகை இங்கயிருக்கு.//

  அவசியம் படிக்கிறேன்...வருகைக்கு நன்றிங்க தோழி.

  பதிலளிநீக்கு
 50. அப்பாதுரை said...

  //முப்பது வருடங்களில் தண்ணீர் தீர்ந்துவிடும் என்பதெல்லாம் ஐநா விடும் புருடா//

  அடடா எல்லாம் சும்மாவா...?!

  //கடல் நீரை குடி நீராக்கி பரவலாகக் கிடைக்கும் படி செய்தால். துணி துவைக்கவும் குளிக்கவும் சோப்பு மற்றும் நீரை உபயோகிக்க வேண்டிய அவசியமில்லாமல் கிருமிநாசினி முறைகளை வணிகப்படுத்தினால். இவையெல்லாம் நடைமுறையில் செயல்படுத்தக்கூடியவை //

  பலவற்றையும் தெளிவாக இங்கே கருத்துக்களாக சொல்லி இருக்கிறீர்கள்....கடல் நீராய் குடிநீராக மாற்ற நடவடிக்கை எடுக்க படும் என்று குரல் மட்டும் ஒலித்து கொண்டே இருக்கிறது. செயல் நடக்கிற மாதிரி எனக்கு தெரியவில்லை. கிருமி நாசினி என்பதை பற்றி இன்னும் விவரங்கள் எங்கே இருக்கிறது இன்று தெரிவித்தால் நலமாய் இருக்கும் எனக்கு.

  //இந்தியாவின் மூன்று பக்கமும் கடல் - அதிலும் ஒன்று பெருங்கடல்! இந்திய விஞ்ஞானிகள் உலகத்துக்கே வழிகாட்ட முடியும் -//

  இதை பற்றியெல்லாம் அவங்க புரிஞ்சிகிட்டா நன்றாக இருக்கும்.

  உங்களின் விரிவான , விளக்கமான கருத்துகளுக்கு மிகவும் நன்றியும், சிரத்தை எடுத்து பதிவிற்கு கொடுக்கும் விளக்கத்திற்காகவும் மகிழ்கிறேன். தொடர்ந்த உங்களின் வருகைக்கு வணங்குகிறேன்

  பதிலளிநீக்கு
 51. வெறும்பய said...

  //நல்ல விழிப்புணர்வு ஊட்டும் பதிவு சகோ.//

  நன்றி சகோ.


  VELU.G said...

  //அருமையான பதிவு//

  நன்றிங்க.


  அன்பரசன் said...

  //உண்மையிலேயே நல்ல விசயம் சொல்லியிருக்கீங்க.
  பாராட்டுக்கள்.//


  நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 52. philosophy prabhakaran said...

  //அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றினை சொல்லியிருக்கிறீர்கள்... ஆனால் நீங்கள் சொன்ன ஆலோசனைகளை எல்லாம் இங்கே எவனும் கேட்கமாட்டான்...//

  ஏன் இந்த கோபம்...? நன்மை என்ற போது கட்டாயம் கேட்பார்கள் பிரபாகரன்....இப்ப நீங்க கேட்கலையா அது மாதிரி தான்....! :))))

  பதிலளிநீக்கு
 53. ஹேமா said...

  //முக்கியமான ஒரு விஷயத்தை எடுத்திருக்கிறீர்கள்//

  ஆமாம் ஹேமா....கையில் எடுத்து இப்ப உங்க காதிலும் சொல்லிட்டேன்....!
  சரியா?? :)

  பதிலளிநீக்கு
 54. Sriakila said...

  //இது போன்ற விழிப்புணர்வுப் பதிவுகள் நிறைய வர வேண்டும்.//

  நிச்சயம் வரும். நன்றி தோழி.

  பதிலளிநீக்கு
 55. அன்பு கௌசல்யா... வணக்கம். இந்த இயற்கையின் தேவை மற்றும் ஆற்றல் பற்றி நான் முன்பே பதிவிட்டிருக்கிறேன். நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும். தலைப்பு " அளவுக்கு மிஞ்சினால் - பாகம் 1 முதல் 5 வரை" படியுங்கள். பதில் தாருங்கள்.

  பதிலளிநீக்கு
 56. மிக நல்ல அவசியமான பயனுள்ள அருமையான பதிவு!

  பதிலளிநீக்கு
 57. (விவசாயத் தொழில் குன்றினாலும், உற்பத்தி செய்தவை வீணாக விட்டாலும்) உணவுப் பொருள் உற்பத்தியில் இந்தியா முன்னேறியது போல தண்ணீர்ப் பிரச்சினையிலும் பிரமிக்க வைக்கும் சாதனைகளைச் செய்யும் என்று நம்புகிறேன். (மேஸ்லவின் 'தேவைகள் கூற்று').

  பல நேரங்களில் ஐநா போன்ற அமைப்புகள் இப்படி ஏதாவது சென்சேசனலாகச் சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்ளும். 'பேரழிவு ஆயுதங்கள்' இராக்கில் இருப்பதாக புருடா விட்டு ஒரு போருக்கே காரணமாக இருந்தது தானே ஐநா? அதை சுயநலத்துக்காக ஒரு அரசியல்வாதிக் கூட்டம் பயன்படுத்தி எத்தனை சேதம் எத்தனை சிக்கல்களைக் கொண்டு வந்திருக்கிறது?! ஒருவேளை ஐநாக்காரர் சொன்னதும் வேறாக இருக்கலாம்.

  எப்படி இருந்தாலும் முப்பது வருடங்களில் தண்ணீர் தீரும் தீவிரச் சிக்கல் வந்தால் உலகறிவு மொத்தமும் இந்தப் பிரச்சினையில் இறங்கித் தீர்வு காணும். உதாரணம் சொல்கிறேன்: இன்னும் லட்சக்கணக்கான ஆண்டுகளில் சூரியன் வெடுத்து பூமி அழியும் சாத்தியம் இருப்பதால், பூமியைப் பாதுகாக்க என்ன செய்யலாம் என்று உலக அளவில் அறிவுக்குழு ஒன்று இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கூடி ஆலோசிக்கிறது. வருங்கால ஞானிகளுக்கு உதவட்டுமே என்று தனக்குத் தோன்றும் திட்டங்களை பட்டியலிடுகிறது. அதில் ஒரு திட்டம்: பூமியின் சுழற்சியையும் காந்தச் சக்தியையும் பயன்படுத்தி பூமியை அப்படியே நகர்த்தி வியாழனுக்கு அப்பால் சென்றுவிடுவது. இந்தக் குழுவில் இந்திய விஞ்ஞானிகளும் இருக்கிறார்கள்.

  பூமியையே விண்கலம் போல் நகர்த்திச் செல்லத் திட்டம் போடும் நாம் தண்ணீர்ச் சிக்கலையா தீர்க்க மாட்டோம்? லட்சக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின் ஏற்படக்கூடிய ஆபத்திலிருந்து பிழைக்க இப்போதே ஒன்று சேரும் மனித இனம், முப்பது வருடங்களில் தண்ணீர் தீருவதாக இருந்தால் இன்னேரம் பிரச்சினையைத் தீர்த்திருக்கும்.

  மனிதநேயத்திலும் சக்தியிலும் நம்பிக்கை எனக்கு அபார நம்பிக்கை உண்டு. என்ன.. இப்போதைக்கு சண்டை போட்டு ஒருவர் மண்டையை இன்னொருவர் உடைத்துக் கொண்டிருக்கிறோம். இது மாறும்.

  உங்கள் இடுகைகள் சிந்திக்க வைக்கின்றன. நீங்கள் சிந்தனையைத் தொடங்கி வைக்கிறீர்கள் - அந்த வகையில் உங்களுக்குத் தான் பின்னூட்டமிடும் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். தொடர்ந்து எழுதுங்கள்.

  பதிலளிநீக்கு
 58. பரந்த அளவில் வணிகப்படுத்தவில்லையே தவிர, கிருமிநாசினி முறைகள் இப்போதே அமலில் இருக்கின்றன. தண்ணீர் இல்லாமல் துணிகளைச் சுத்தப்படுத்தும் இயந்திரங்கள் சோதனை முறையில் கிடைக்கின்றன. ஜப்பானிலும் தென்கொரியாவிலும் பொது உபயோகத்துக்கே கிடைப்பதாகக் கேள்வி. இவ்வகைத் தொழில் நுட்பங்களை இந்தியாவில் பரவலாகக் கிடைக்கும்படிச் செய்யலாம்.

  பதிலளிநீக்கு
 59. கௌசல்யா,

  அருமையான, தேவையான பதிவு. ஆனால்... உண்மையில் அரசாங்கம் இதை கவனிக்காது என்பதே உண்மை. இந்தியா மட்டுமல்ல எங்கேயும்..!! தனித்தனி மனிதர்கள் முயற்சிகளாலும், பொது மக்களின் ஆதரவாலும் மட்டுமே நாம் வாழும் நிலத்தை காப்பாற்றும் முயற்சிக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதே உண்மை. அனைவரும் இதை உணர்ந்து நடந்தாலே நல்லது. :)

  பதிலளிநீக்கு
 60. சிறந்த விழிப்புணர்வு ஊட்டும் பதிவு

  வாழ்த்துக்கள் சகோதரி

  பதிலளிநீக்கு
 61. உங்கள் வேலையெல்லாம் மறந்து மெனக்கெட்டு எனக்கு போன் செய்து உற்சாக படுத்திய தங்களுக்கு நான் என்றென்றும் நன்றி உடையவன். தங்களுடைய வார்த்தைகள் என்னை மிகவும் தெளிவு படுத்தியது. மிக்க நன்றி அக்கா

  பதிலளிநீக்கு
 62. மிக முக்கியமான,தெளிவாக கருத்துக்களை முன்வைத்த ஒரு அழகான பதிவுங்க தோழி. வாழ்த்துக்கள். நீங்கள் எடுத்துச்சொல்லியிருப்பதை மக்கள் பின்பற்றுகிறார்களா என்பது இரண்டாம் பட்சமே. விழிப்புணர்வுக்கு வித்திடுவதே முதன்மையானது. அதை செய்தமைக்கு நீங்கள் பாராட்டப்படவேண்டியவர். மேலும் இதுபோன்ற பல பதிவுகளை எழுதுங்கள். நன்றி

  பதிலளிநீக்கு
 63. இதனோடு தொடர்புடைய விழிப்புணர்வு பதிவு போட்டுள்ளேன் கெளசல்யா ..

  உங்க இடுகைக்கும் தொடர்பு கொடுத்து..

  பலரும் படித்து அறியட்டும்..

  http://punnagaithesam.blogspot.com/2010/12/blog-post_06.html


  " இணைய நட்பு முழுதும் தீங்கானதா?.. " என்ற தலைப்பில்..

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...