சக பதிவரான திரு. பத்மஹரி அவர்களின் தளத்தை இரண்டு நாளுக்கு முன் படித்தேன்....அதில் முக்கியமான ஒருவரை பற்றி எழுதி இருந்தார்....அவர் பெயர் திரு நாராயணன் கிருஷ்ணன். நம்ம மதுரையை சேர்ந்த இவரை பிரபல CNN நிறுவனம் “உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்கள்” அப்படிங்கிற போட்டியில் இவரையும் ஒரு வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது.....!! தமிழர்களாகிய நமக்கு இது மிக பெரிய பெருமை. இவர் ஏதோ அரசியல் தலைவரோ, சினிமா துறையை சேர்ந்தவரோ, பெரிய தொழில் அதிபரோ இல்லை. 'நல்ல மனித நேயர்' இதை விட வேற சரியான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை. சக மனிதர்களை எல்லோராலும் நேசிக்க கூட முடியாத போது இவர் மன வளர்ச்சி இல்லாத பலரை வாழவைத்து கொண்டிருக்கிறார் ....எந்த விளம்பரமும் இல்லாமல்.......!! இது மிக பெரிய விஷயம்.....!!!
யார் இந்த கிருஷ்ணன்...?!!
சமையல்கலை படிப்பு படித்து தங்க பதக்கம் வாங்கியவர் இவர்....பல விருதுகளையும் பெற்ற இவர் சில காலம் பெங்களூரில் பிரபல ஹோட்டலில் வேலை பார்த்தார், பின்னர் சுவிட்சர்லாந்தில் வேலை கிடைத்து அங்கே செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த சமயம்......தனது வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் விடை பெறுவதற்காக மதுரை செல்கிறார் கிருஷ்ணன்.
அங்கே கோவிலுக்குச் செல்வதற்க்காக சைக்கிளில் சென்றவர், யதேச்சையாக வழியில் ஒரு திடுக்கிடச் செய்யும் காட்சியை காண்கிறார். அது இந்த உலகின்/நாட்டின் சாபக்கேடுகளான பலவற்றுள் ஒன்றான புத்திசுவாதீனமில்லாத ஒரு 80 வயது முதியவர் பல நாள் உணவில்லாமையால், தன் மலத்தை தானே எடுத்துண்ணும் கொடுமையான காட்சி! உடனே நம்மைப்போல, அருவருப்புடன் ஒதுங்கிச்செல்லாமல், கிருஷ்ணன் ஓடிச்சென்று அருகிலுள்ள கடையில் இட்லிப்பொட்டலத்தை வாங்கிக்கொண்டு வந்து, அந்த முதியவரின் கைகளை சுத்தப்படுத்திவிட்டு, தானே அந்த இட்லியை ஊட்டிவிடுகிறார்! அதற்கான சன்மானம், அந்த முதியவரின் பனித்துப்போன கண்களுடன்கூடிய ஒரு பார்வை! இந்தச் சம்பவம் அவரின் சராசரி இளைஞரின் கனவான “ஒரு பெரிய ஓட்டல் முதலாளியாவதை” தூள்தூளாக்கிவிடுகிறது!
நம்மவர்கள் ஹோட்டல் சென்றாலும் அதிக பணம் கொடுத்து வாங்கிய உணவையும் நாகரீகம் என்ற பேரில் பட்டும் படாமல் சிறிது சாப்பிட்டு.... குப்பைக்கும் போகும் அந்த மீத உணவுகள்....?!! கல்யாண விருந்து போடுகிறேன் என்று சிலர் தன் கௌரவத்தை காட்டுவதற்காக இலையில் இடம் போதாமல் உணவு வகைகளை நிரப்புவார்கள்..... சாப்பிட அமர்ந்த கனவான்களோ பணக்கார நோய்களின் நிர்பந்தத்தால் ஏனோ தானோவென்று கொறித்துவிட்டு செல்வார்கள்......இங்கும் அந்த உணவுகள் போகும் குப்பைக்கு.........?!! இப்படிப்பட்ட ஒரு நட்சத்திர ஹோட்டலில் வேலை பார்த்து செழிப்பாய் பணம் சம்பாதிப்பதை விட இந்த மாதிரி மக்களுக்கு நாம ஏன் உணவளிக்ககூடாது....? கண்டிப்பாய் செய்வேன் என்று உறுதி பூணுகிறார்...
இந்த மாதிரி புத்தி சுவாதீனமில்லாதவர்களுக்காக உதவணும் என்று இவர் முடிவு செய்த போது இவரது வயது வெறும் 21
இப்போது 29 வயதாகும் கிருஷ்ணன் அவர்கள் காலை மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேலை உணவையும் கிட்டத்தட்ட 400 புத்திசுவாதீனம் இல்லாதவர்களுக்கு தினம் அளிக்கிறார் .... !! இத்துடன் முடிவது இல்லை இவரது வேலை....அந்த மக்களில் சிலருக்கு முடிவெட்டுவது, நகம் வெட்டுவது தொடங்கி அவர்கள் இறந்து விட்டால் கொள்ளி போடுவது வரை இவரது தொண்டு நீள்கிறது.......!!
வெற்றிகரமாக இன்றும் தன் பணியை தொடரும் கிருஷ்ணன், அக்ஷ்யா என்னும் தொண்டு நிறுவனத்தை தொடங்கி தினமும் 400 பேருக்கு உணவளிக்கும் மக்கள்சேவை/மகேசன் சேவையை செய்துவருகிறார்!
இப்பணிக்காக அவருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்தான், 2010 ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த பத்து ஹீரோக்களுள் ஒருவர் என்னும் உயரிய பட்டத்துக்கான போட்டிக்குத் தேர்வானது!
சி.என்.என். தேர்வு பட்டியலில் இடம்பெற்றதால் இப்போது 25,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இந்த ஆன்லைன் வாக்கெடுப்பில் முதலிடம் பெற்றால், கிருஷ்ணனுக்கு 1,00,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைக்கும். அது, அவரது கனவுத் திட்டத்துக்கு உறுதுணை புரியலாம்.....!
இந்த வாக்கெடுப்பில் அவர் முதலிடம் பெற இணையவாசிகளான நாம் உதவி செய்யலாமே......இந்த உதவியை தான் நான் உங்களிடம் கேட்கிறேன்.....
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் சென்று அவருக்கு வோட் பண்ணுங்கள்....
மற்றும் பிற பதிவர்களும் தங்கள் தளத்தில் இந்த செய்தியை வெளியிட்டால் மகிழ்வேன்...
நாம் நேரடியாக உதவி செய்ய இயலாவிட்டாலும் இந்த மாதிரியான நல்ல மனித நேயருக்கு இந்த சிறு உதவியை செய்வோமே.....
பதிவுலக தோழர்களும், சகோதர சகோதரிகளும் உதவுவீகள் என்று உறுதியாக நம்புகிறேன்.
நான் வோட் பண்ணிட்டேன் நீங்க வோட் பண்ண ரெடியா....?
பின் குறிப்பு
இந்த பதிவை நான் எழுத காரணமான நண்பர் பத்மஹரி அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அவரது பதிவின் லிங்க் சென்றும் வோட் பண்ணலாம்...
மற்றொரு நண்பர் தனது தளத்தில் இந்த செய்தியை வெளியிட்டு உள்ளார்...அவருக்கும் என் நன்றிகள்...
நானும் இவரை பற்றி படித்து இருக்கிறேன்....ஓட்டு போட்டுடேன் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்...
ReplyDeleteஈன்றேடுத்த தாயையும் தந்தையும் வீட்டை விட்டு விரட்டியடிக்கும் இந்த காலத்தில் இப்படியொரு மனிதரா என்பது மிகவும் வியப்பாக உள்ளது... இந்த மாணிக்கத்தை பெற்றெடுத்த தெய்வங்களை வணங்குகிறேன்...
ReplyDeleteநம் நாட்டில் ஒவ்வொரு மகனும், ஒவ்வொரு மனிதனும், ஒவ்வொரு சகோதரனும் தங்களாலான உதவியை ஏதாவது ஒருவருக்கு செய்தாலே நாட்டில் பிச்சை காரர்களும் இருக்கமாட்டார்கள்.. புத்தி சுவாதீனமில்லாதவர்களும் தெருவில் அலைய மாட்டார்கள்...
நல்லதே நினைப்போம்... நல்லதையே செய்வோம்...
ஓட்டு போட்டுட்டேன் சகோ!
ReplyDeleteநல்ல பதிவு... ஓட்டு போட்டேன்...
ReplyDeleteஒட்டு போட்டுட்டேன். நண்பர்களுக்கும் தகவலை தெரிவித்து இருக்கிறேன்
ReplyDeleteநானும் ஓட்டு போட்டு ullen. Surely I share with all friends..
ReplyDeleteரெண்டு பேருக்கும் ஓட்டு போட்டாச்சு
ReplyDeleteஅருமை அருமை
ReplyDeleteVote போட்டாச்சு...
ReplyDeleteஎன் தளத்தில் இப்பதிவை வெளியிட உங்கள் அனுமதி வேண்டுகிறேன்.. அற்புதமான பதிவு.. இப்படியொரு மனிதரா நிச்சயம் வியப்புதான்... அவருக்கு என் வாழ்த்துக்கள்....
நிறைய ஓட்டு போட்டாச்சு ,பாராட்டுக்கள்.
ReplyDeleteஓட்டு போட்டாச்சு...
ReplyDeleteதமிழனின் வெற்றிக்கு உதவுவோம் - Please Help
ReplyDeletehttp://vandhemadharam.blogspot.com/2010/10/please-help.html
ஒட்டு போட்டாச்சு,கிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்!!
ReplyDeleteநல்ல முயற்சி , மிக்க நன்றி
ReplyDeleteகண்டிப்பா ஒட்டு உண்டு
2-3 ஓட்டு போட்டுவிட்டேன் மீண்டும் உங்களுக்காக்!
ReplyDeleteஇதற்கு முன்னமே நான் இரண்டு முறை ஒட்டு போட்டுவிட்டேன்..
ReplyDeleteதிருப்தியான செயலாக சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கு விசங்களில் ஈடுபட்டு செப்பனிட்டு கொண்டிருக்கும் சகோதரருக்கு வாழ்த்துக்கள் சொல்லும் அதே நேரத்தில் அதை இன்னும் மிகைப்பட்ட பேரின் செவிகளுகு கொண்டு சேர்க்க முயலும் உங்களுக்கு நன்றிகள்.
ReplyDeleteமனிதன் ஆயிரம் தத்துவங்களை தலையில் ஏற்றி அதை போதிப்பதை காட்டிலும்....சக மனிதர்களுக்கு உதவுதல்....நெகிழ்ச்சியான பின்பற்றப் பட வேண்டிய விசயம்.
சௌந்தர்...
ReplyDeleteவோட் போட்டதற்கு நன்றி சௌந்தர்.
வெறும்பய said...
//ஈன்றேடுத்த தாயையும் தந்தையும் வீட்டை விட்டு விரட்டியடிக்கும் இந்த காலத்தில் இப்படியொரு மனிதரா என்பது மிகவும் வியப்பாக உள்ளது... இந்த மாணிக்கத்தை பெற்றெடுத்த தெய்வங்களை வணங்குகிறேன்...//
உண்மைதான் சகோ.
கருத்திற்கு மிகவும் நன்றி.
he is a great person.. i voted.
ReplyDeleteஓட்டு போட்டுட்டேன். ஒருவரே எத்தனை ஓட்டு வேணும்னாலும் போடலாமா?
ReplyDeleteBalaji saravana...
ReplyDeleteTerror...
Rajasurian...
sri...
சசிகுமார்...
யாதவன்...
சங்கவி...
Mrs.Menagasathia...
asiya omar...
கே.ஆர்.பி.செந்தில்...
மங்குனி அமைசர்...
எஸ்.கே...
அன்பரசன்...
வோட் போட்ட உங்கள் அன்பிற்கு மகிழ்கிறேன்......உங்கள் நல்ல உள்ளத்திற்கு என் நன்றிகள் பல....தங்கத்தமிழனை வாழ்த்திய உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
தங்கள் தளத்தில் இந்த பதிவினை வெளியிட்ட சசிகுமாரையும் சங்கவியையும் எண்ணி பெருமிதம் அடைகிறேன்..
dheva said...
ReplyDelete//மனிதன் ஆயிரம் தத்துவங்களை தலையில் ஏற்றி அதை போதிப்பதை காட்டிலும்....சக மனிதர்களுக்கு உதவுதல்....நெகிழ்ச்சியான பின்பற்றப் பட வேண்டிய விசயம்.//
உண்மைதான்......! நன்றி.
Dhosai...
நன்றி சகோ.
ஜெயந்தி said...
//ஓட்டு போட்டுட்டேன். ஒருவரே எத்தனை ஓட்டு வேணும்னாலும் போடலாமா?//
எத்தனை வோட் வேண்டுமானாலும் போடலாம் தோழி... வோட் போட்டமைக்கு நன்றி.
அருமையான பதிவு,ஓட்டு போடறேன்
ReplyDeleteHearing about him a lot these days... he is doing a great job. Thanks for sharing about him with all
ReplyDeleteஆஹா... நானும் இன்று சி.என்.என் பார்த்து குறிப்பிட்டு பதிவிட்டு இருந்தேன்... நம்ம ஆளு நிச்சயம் ஹீரோ ஆயிடுவாரு.
ReplyDeleteவாழ்கையில் முதல் முறையாக நிஜ ஹீரோவுக்கு ஓட்டு போட்டாச்சு
ReplyDeleteநானும் இவருக்காக Social Marcketing செய்து கொண்டிருக்கிறேன்..
ReplyDeleteநன்றி நண்பர்களே..!!!
நானும் இவரை பற்றி விகடனில் வெளியான கட்டுரையில் படித்து பிரமித்து நின்றேன். இவரது தொண்டு உள்ளம் போல எல்லோருக்கும் இருந்தால் நாட்டில் ஏழை என்றசொல்லே இருக்காது. போற்றத்தக்கவர் கிருஷ்ணன்.
ReplyDeleteசிஎன்என் தளத்துக்கு சென்று ஓட்டும் போட்டு விட்டேன்.
பகிர்வுக்கு நன்றி கௌசல்யா.
சுயநலமில்லா தியாக உள்ளங்கள் வெளி உலகுக்கு தெரியாமல் எத்தனையோ பேர்! அவர்களில் இவரும் ஒருவர்! நானும் பல முறை ஓட்டு போட்டுவிட்டேன் கௌசல்யா.
ReplyDeleteநல்ல விளக்கமாக நீங்கள் எழுதி இருக்கும் குறிப்புகள் வாசித்த பின், அவர் மேல் மேலும் மதிப்பும் மரியாதையும் கூடுகிறது. அவர் அதிக வாக்குகளை பெற என் வாழ்த்துக்கள். நல்ல பகிர்வு தந்த உங்களுக்கு, என் மனமார்ந்த நன்றி.
ReplyDeleteசி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete//ஓட்டு போடறேன்//
நன்றி சகோ.
அப்பாவி தங்கமணி said...
ReplyDelete//Hearing about him a lot these days... he is doing a great job. Thanks for sharing about him with all//
இவரை நம்ம பத்திரிகைகள் இன்னும் சரியாக கவனிக்கவில்லையே என்ற ஆதங்கம் இருக்கிறது தோழி.
உங்களுக்கு என் நன்றி. .
அரசூரான் said...
ReplyDelete//ஆஹா... நானும் இன்று சி.என்.என் பார்த்து குறிப்பிட்டு பதிவிட்டு இருந்தேன்... நம்ம ஆளு நிச்சயம் ஹீரோ ஆயிடுவாரு.//
நன்றி சகோ....இன்று தான் உங்கள் தளம் பார்த்தேன்...மகிழ்கிறேன்.
கிருஷ்ணன் அவர்கள் இனிதான் ஹீரோ ஆகணும் என்று இல்லை....ஏற்கனவே நம்ம மனதில் ஹீரோவா உயர்ந்திட்டார் என்றே எண்ணுகிறேன்...!
ராஜன் said...
ReplyDelete//வாழ்கையில் முதல் முறையாக நிஜ ஹீரோவுக்கு ஓட்டு போட்டாச்சு//
எனக்கும் அப்படித்தான் தோன்றியது....!!
வருகைக்கும் வோட் போட்டமைக்கும் நன்றி சகோ.
Cool Boy கிருத்திகன். said...
ReplyDelete//நானும் இவருக்காக Social Marcketing செய்து கொண்டிருக்கிறேன்..
நன்றி நண்பர்களே..!!//
அப்படியா... மகிழ்கிறேன் உங்களின் வருகைக்கு மிக்க நன்றி
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ReplyDelete//நானும் இவரை பற்றி விகடனில் வெளியான கட்டுரையில் படித்து பிரமித்து நின்றேன். இவரது தொண்டு உள்ளம் போல எல்லோருக்கும் இருந்தால் நாட்டில் ஏழை என்றசொல்லே இருக்காது. போற்றத்தக்கவர் கிருஷ்ணன்.
சிஎன்என் தளத்துக்கு சென்று ஓட்டும் போட்டு விட்டேன்.//
ஆமாம் சகோ....மிகவும் வியப்பாகவும், அதே நேரம் பெருமையாகவும் இருக்கிறது...இவர் இருப்பதால் அந்த மதுரை நகருக்கே சிறப்பு என்றுதான் சொல்லணும்....
நீண்ட நாள் கழித்த உங்களின் வருகைக்கு நன்றி சகோ.
அஸ்மா said...
ReplyDelete//சுயநலமில்லா தியாக உள்ளங்கள் வெளி உலகுக்கு தெரியாமல் எத்தனையோ பேர்! அவர்களில் இவரும் ஒருவர்! நானும் பல முறை ஓட்டு போட்டுவிட்டேன்//
பல கிருஷ்ணர்கள் இவரை போல...இவரே இன்னும் வெளி உலகிற்கு சரியாக தெரியாமல் தானே இருந்திருக்கிறார்...அந்த தியாக உள்ளங்கள் வழி பட கூடியவர்கள்....
உங்களுக்கு என் நன்றிகள்....
Chitra said...
ReplyDelete//நல்ல விளக்கமாக நீங்கள் எழுதி இருக்கும் குறிப்புகள் வாசித்த பின், அவர் மேல் மேலும் மதிப்பும் மரியாதையும் கூடுகிறது. அவர் அதிக வாக்குகளை பெற என் வாழ்த்துக்கள். நல்ல பகிர்வு தந்த உங்களுக்கு, என் மனமார்ந்த நன்றி//
அவரை பற்றி படிக்கிற எல்லோருக்கும் அவர் மேல் மதிப்பு வருவது உண்மைதான் சித்ரா...!
நன்றி தோழி.
இது உதவியில்லை சமுதாயத்திற்கு நம்மாள் முடிந்த ஒரு பங்களிப்பும் பொறுப்புமாகும்
ReplyDeleteஎன்னை பொருத்தவரை இந்த விஷயத்தில் வெற்றி தோல்வி என்கிற பதமே தவறு ஒரு வேளை திரு. நாரயணன் கிருஷ்னன் வெற்றி பெறாவிட்டால் அவர் செய்வது சேவை, தொண்டு இவையெல்லாம் பொய் என்று ஆகி விடுமா?
நம்மால் முட்டிந்தவரை ஒரு தமிழரின் வெற்றிக்கு துனையாய் நிற்போம்....
என் தளத்திலும் பதிவிட்டுள்ளேன்
இப்படி ஒரு பதிவை வெளியிட வாய்ப்பு வழங்கிய முதலில் உங்களுக்குதான் நான் பெரிய நன்றி சொல்ல வேண்டும்
என் மனமார்ந்த நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்
http://urssimbu.blogspot.com/2010/10/please-help.html
மிக்க நன்றிங்க தோழி. உங்க பதிவுக்கான எதிர்வினைகளைப் பார்க்கும்போது, எண்ணியது நிறைவேறியது என்னும் ஒரு மனநிறைவு கிடைக்கிறது!வாழ்த்துக்கள்!
ReplyDeleteஓட்டு போட்டு விட்டேன்.
ReplyDeleteஒரு தமிழரை - உலக நாயகன் ஆக்குங்கள் - Please vote ...!
http://erodethangadurai.blogspot.com/2010/10/please-vote.html
/// நான் வோட் பண்ணிட்டேன் நீங்க வோட் பண்ண ரெடியா....?
ReplyDelete//
நான் ஏற்கெனவே வோட் பண்ணிட்டேன் அக்கா ..!!
I have already voted for this gentle man. Thanks for sharing.
ReplyDeleteஅன்புள்ள கெளசல்யா!
ReplyDeleteஇவரைப்பற்றி ‘சகோதரி அன்னுவின் வலைத்தளத்தில்’ நான்கு நாட்களுக்கு முன் படித்து மனம் நெகிழ்ந்து போனேன். உடனேயே ஓட்டும் அங்கேயே போட்டு விட்டேன். விரைவில் அவரது தொண்டு நிறுவனத்திற்கு ஓரளவு பணம் அனுப்ப முடிவும் எடுத்துள்ளோம். முடிந்தால் இங்குள்ள சில நிறுவனங்களையும் சேவை செய்யும் மனப்பான்மை இருப்பவர்களையும் அணுகி முடிந்த அளவு அவரது இல்லத்திற்கு பணம் சேமித்து அனுப்பும் யோசனையும் உள்ளது.
நீங்களும் இதைப்பற்றி எழுதியிருந்ததைப்பற்றி படித்ததும் மகிழ்வாயிருந்தது.
இப்படித்தான் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைக்கும் சிறு செடிகள் பலன் தரும் பெரிய விருட்சங்களாகின்றன! நீங்கள், திரு. பத்மஹரி, அன்னு, மற்றும் பலர் மூலம் இவரைப்பற்றிய விபரங்கள் வலைத்தளங்களில் வெளியாகி அவருக்கு நிறைய உதவிகள் போய்ச்சேர வேண்டும்!!
சகோதரி அன்னுவின் வலைத்தளம்:
http://mydeartamilnadu.blogspot.com/2010/10/blog-post_22.html
எங்க அலுவலகத்தில் உள்ள அனைத்து இந்தியர்களையும் வாக்களிக்க வைத்துவிட்டேன்
ReplyDeleteநல்ல பதிவு. ஓட்டு போட்டுட்டேன்.
ReplyDeleteமாணவன் said...
ReplyDelete//இந்த விஷயத்தில் வெற்றி தோல்வி என்கிற பதமே தவறு ஒரு வேளை திரு. நாரயணன் கிருஷ்னன் வெற்றி பெறாவிட்டால் அவர் செய்வது சேவை, தொண்டு இவையெல்லாம் பொய் என்று ஆகி விடுமா?//
நீங்க சொன்ன விதமும் சரிதான் சகோ.....ஆனால் வெற்றி பெறவேண்டும் என்பது ஒரு விருப்பம்....அவர் சேவை செய்ய அந்த பணமும்...அந்த வெற்றியின் மூலம் அவரும், அவரது தொண்டும் இன்னும் பலரால் ஊன்றி கவனிக்க படலாம்.....இன்னும் அதிகமாக அவருக்கு ஒத்துழைப்பு கிடைக்கலாம்....!
மற்றபடி இந்த வெற்றியை வைத்து தான் அவரது தொண்டு, சேவை அளவிடபடுகிறது என்ற அர்த்தம் இல்லை....!
உங்கள் பதிவையும் பார்வை இட்டேன்...உங்களுக்கு என் நன்றிகள்..
பத்மஹரி said...
ReplyDelete//மிக்க நன்றிங்க தோழி. உங்க பதிவுக்கான எதிர்வினைகளைப் பார்க்கும்போது, எண்ணியது நிறைவேறியது என்னும் ஒரு மனநிறைவு கிடைக்கிறது!வாழ்த்துக்கள்!//
எல்லாம் உங்களின் பதிவை படித்ததால் தான்....உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் நண்பரே...
ஈரோடு தங்கதுரை said...
ReplyDelete//ஓட்டு போட்டு விட்டேன்.
நன்றி சகோ...உங்கள் தளம் இன்று தான் பார்த்தேன்....மகிழ்கிறேன்.
ப.செல்வக்குமார் said...
ReplyDelete//நான் ஏற்கெனவே வோட் பண்ணிட்டேன் அக்கா ..!!//
நன்றி செல்வா...இன்னும் பண்ணலாமே..!
vanathy said...
ReplyDelete//I have already voted for this gentle man. Thanks for sharing.//
நன்றி தோழி.
மனோ சாமிநாதன் said...
ReplyDelete//விரைவில் அவரது தொண்டு நிறுவனத்திற்கு ஓரளவு பணம் அனுப்ப முடிவும் எடுத்துள்ளோம். முடிந்தால் இங்குள்ள சில நிறுவனங்களையும் சேவை செய்யும் மனப்பான்மை இருப்பவர்களையும் அணுகி முடிந்த அளவு அவரது இல்லத்திற்கு பணம் சேமித்து அனுப்பும் யோசனையும் உள்ளது.//
ரொம்ப நிறைவா இருக்கு அக்கா உங்களின் இந்த எண்ணம்......உங்களின் இந்த நல்ல எண்ணம் ஈடேற வாழ்த்துகிறேன் அக்கா....
அன்னுவின் தளம் சென்று பார்த்தேன்....
உங்களின் கருத்திற்கு ரொம்ப நன்றி அக்கா...
குடுகுடுப்பை said...
ReplyDelete//எங்க அலுவலகத்தில் உள்ள அனைத்து இந்தியர்களையும் வாக்களிக்க வைத்துவிட்டேன்//
நீங்கள் மட்டும் அல்லாமல் மற்றவர்களை வாக்களிக்க வைத்ததுக்கு மிக்க மகிழ்கிறேன் சகோ. நன்றி.
Sriakila said...
ReplyDelete//நல்ல பதிவு. ஓட்டு போட்டுட்டேன்.//
நன்றி தோழி..
இதை உங்கள் பதிவில் வெளியிட்டதற்கு நன்றி. நானும் ஓட்டு போட்டு விட்டேன்.
ReplyDeleteநாராயணன் கிருஷ்ணனைப்பற்றி நானும் ஒரு பதிவு எழுதியிருக்கிறேன் . எனது வாசகர்கள் நிறைய ஓட்டுகள் போட்டார்கள் .
ReplyDeletehttp://kpsukumaran.blogspot.com/2010/10/blog-post_29.html
K.P.Sukumaran,
malayalam Bloger
ஜெயந்தி,
ReplyDelete'சகோ.அன்னு' அவர்கள் எழுதியதை படித்து விட்டு நானும் ஒட்டு போட்டு விட்டேன். தாங்கள் எழுதியது பின்னும் நிறைய நண்பர்களிடமும் சொல்லி நிறைய ஒட்டுகள் போட்டிருக்கிறோம். பதிந்தமைக்கு வாழ்த்துகள்.சகோ!!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் எங்களின் மனம் கனிந்த 'தீபாவளி' நல் வாழ்த்துகள்.