Wednesday, August 18

7:16 PM
63


எனது இந்த கண்டனமும் பதிவுலகத்தை நோக்கியே தான்...??!! எங்கே நான் இருக்கிறேனோ அங்கே நிகழும் முறையற்ற செயல்களையே என்னால் சுட்டி காட்ட முடியவில்லை என்றால் வெளி உலகில் நிகழுவதை என்னால் எப்படி சாட முடியும்....

இந்த பதிவுலகில் கடந்த சில தினங்களாக என்ன நடந்துக்கொண்டு இருக்கிறது என்று சிலருக்கு தெரியும் ...பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால் பெண் பதிவர்களை பற்றிய இந்த பிரச்னைக்கு அவர்கள் சார்பில்  எனது இந்த கண்டனத்தை தெரிவிக்கிறேன். சில விசயங்களை ஆற போடுவது சரி இல்லை.

எழுதியவனை நோக்கி 

வலிமை மிகுந்த ஆயுதமான எழுத்து தங்கள் கையில் இருக்கிறது என்பதற்காக எது வேண்டுமானாலும் எழுதலாமா ?? அதுவும் முறையற்ற விதத்தில் பதிவுலக பெண் எழுத்தாளர்களை கேலி சித்திரமாகவும் , கேளிக்கை பொருளாகவும் உருவகபடுத்தி....??!!

பொதுவாக ஒரு பெண் கட்டாயம் விமர்சனத்துக்கு உட்பட்டுதான் ஆக வேண்டுமா....?? 

எழுதியவனிடம்  'ஏன் இப்படி எழுதுகிறாய்'  என்று கேள்வி கேட்டதிற்கு 'தன்  தளத்தை விளம்பரபடுத்த இப்படி எழுதுகிறேன்' என்று கேவலமான மட்டமான பதில் வருகிறது.. உன் விளம்பரத்திற்கு கூட பெண்கள் தான் தேவைபடுகிறதா...? பெண் பதிவர்களாகிய எங்கள் புடவையின் பின்னால் மறைந்து நின்று தான் நீ பிரபலம் ஆகவேண்டுமா..... ??  மதி கெட்ட மூடனே வெட்கமாக இல்லையா  உனக்கு.....?? 

உனக்கு இரண்டு சகோதரிகள் உண்டு என்பதை அறிவேன்...அவர்களை இப்படி கேவலமாக சித்திரம் வரைந்து நாலு பேர் பார்க்கும் இடத்தில் வைக்க வேண்டியது தானே...?? 

அன்பு பெண் பதிவர்களே...

நீங்கள் இந்த விஷயத்தை கண்டுகொள்ளாமல் இருந்தால்.......இன்று,  இவன் நம்மை பற்றி எழுதுவான....நாளை வேறொருவன் எழுதுவான்...இது தொடர்கதையாகும்....சிலருக்கு பெண்மையை இகழ்வது ஒரு மனோவியாதி......அப்படிபட்ட வியாதி உள்ளவர்கள் இங்கே அதிகம் என்பதை ஞாபகம் வைத்து கொள்ளுங்கள்..... 

மேலும் ஒன்றை நினைவு கொள்ளுங்கள்...பெண்மை கேலி பொருள் அல்ல....நம் எழுத்தை விமர்சிக்கலாம்...நம் உருவத்தை விமர்சரிக்க கண்டவனுக்கும் இடம் கொடுக்க கூடாது....இப்போது இவர்களை வம்பிற்கு இழுத்தவன் நாளை உங்களையும் அந்த லிஸ்டில் சேர்க்கலாம்....இதைவிட மோசமாக...விபரீதமாக...!!

என் மரியாதைக்குரிய பதிவுலக தோழர்களுக்கு

சாதி, மத , கடவுள் பற்றி ஏதாவது பதிவுகள் வெளி வந்தால் உடனே முகமற்று வரும் அனானிகளின் கேள்விக்கு பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டு காற்றில் கத்தி சண்டை போட்டு கொண்டு இருக்கிறீர்கள்... அதை தவறு என்று சொல்லவில்லை. ..... 

ஆனால் அதே நேரம் இப்போது முழு விலாசத்துடன் , முகம் காட்டி எழுதிக்கொண்டு இருக்கிறவனை என்ன செய்ய போகிறீர்கள்....???  இவனுக்கு உங்கள் கண்டனத்தை தீவிரமாக தெரிவிக்க வேண்டும்...


விஷ செடியை ஆரம்பத்தில் பிடுங்க வேண்டும்...இதுவரை ஆறு பெண் பதிவர்களை பற்றி எழுதி உள்ளான்...இது தொடரும்...எப்போதும் போல் நம் வீடு பாதுகாப்பாக தானே இருக்கிறது என்று மெத்தனமாக இருக்காமல் அந்த செடியை வேர் அறுத்து போடுங்கள்...

உங்கள் வீட்டு பெண்ணிற்கு இந்த மாதிரி நடந்தால், " நாம் நடக்கும் பாதையில் கல், முள் இருக்கத்தான் செய்யும். நாம்தான் பார்த்து நடக்கணும் அல்லது எடுத்து போட்டு விட்டு நடக்கணும் "என்று தத்துவம் பேசி கொண்டு இருப்பீர்களா...??  தெளிவு படுத்துங்கள்.  

நண்பர்களே..., நான் சொல்வது சரியென்று பட்டால் உங்கள் கண்டனம் பாயட்டும்..அவனை நோக்கியும் அவனை  போன்றவர்களுக்கு  எதிராகவும் ......

பின் குறிப்பு.

1  அவனது தவறை நான் சுட்டி காட்டியபின் பெண்களின் பெயரை எடுத்துள்ளான். ஆனால் வெறுப்பிற்கு உரிய அந்த சித்திரம் நீக்கப்படவில்லை. 

2  அந்த தளத்தின் முகவரி கொடுக்கவில்லை காரணம்...இந்த  பதிவு சம்பந்தபட்டவனுக்கு போய் சேரணும் என்ற நோக்கில் எழுதப்பட்டது   இப்படி ஒரு கேவலமான பதிவினை வெளியிட்ட தளத்தையும், ஆளையும் குறிப்பிட்டு சொல்லி பிரபலபடுத்தும் அளவிற்கு அவன் பெரிய ஆளில்லை. இந்த பதிவின் சாரம் போய்ச்சேரந்தால் சரிதான்.



Tweet

63 comments:

  1. இந்த பதிவினை வெளியிட்டிருப்பதின் பிண்ணனியில் இருக்கும் வலியை உணருகிறேன் தோழி

    கற்ற கல்வியையும் பெற்ற அறிவையும் வைத்துக்கொண்டு விஞ்ஞானத்தின் வளர்ச்சியை ஈனச் செயலுக்கு பயன்படுத்து வலுவுள்ள, திமிர் கொன்ட வாலிபர் கூட்டம், இள இரத்தம் சூடேற, மூளையிள் சிந்திக்கும் பகுதி திறனழிக்க, தன்னை முன்னிலைப்படுத்தி தான் பிரபலமடைய குறுக்கு வழியில் சிந்தித்து மகாபாரத துச்சாதனன்களாய் உருவெடுத்து வலைப்பூவில் எழுதும் பெண்டிரின் மானம் குலைப்பது போல கவிதையென்றும், நகைச்சுவையென்றும் எள்ளி நகையாடும் மிருகச் செயலகள் பார்த்து சக மானுடர்களின் கைகள் பூப்பபறிக்க போகும் என்று எண்ணியதில் இருக்கிறது அறியாமை.

    பெண்களை கேலி செய்வதும், இட்டுக்கட்டி பேசுவது சட்டபடி குற்றம். வலைப்பூக்களில் தங்களது அறிவை ஏந்திவரும் தாயைப் போன்ற சகோதரிகளை இனியும் கேலி செய்வது ஏற்கலாகாது...

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி....வெறுப்புக்குரிய சித்ரம் பற்றி இணைப்பு ... அல்லத் தளத்தின் பெயரை அல்லது அந்த நாகரிக்மற்றவனின் பெயரை தரவும். .

    ReplyDelete
  3. நானும் அந்த வெப்சைட் பார்த்தேன் பெயரை போட்டு கேலி சித்திரம் போட்டு இருக்கிறான் அவன் பிரபலம் ஆகவேண்டும் என்பதற்காக இப்படி தரம் தாழ்ந்த விசயம் செய்து உள்ளான்..

    அந்த வெப்சைட் உரிமையாளார் அந்த பதிவை உடனே நீங்க வேண்டும்

    ReplyDelete
  4. //அந்த வெப்சைட் உரிமையாளார் அந்த பதிவை உடனே நீங்க வேண்டும்//

    இருவரும் ஒருவரே ...

    ReplyDelete
  5. இதில் வேதனையான விஷயம் என்னவென்றால், சம்பந்தப்பட்ட சிலர் விஷயம் அறிந்தும் மௌனம் சாதிப்பதுதான்.

    இதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்

    ReplyDelete
  6. சகோதரி, எந்த வலைத்தளம் அல்லது வலைப்பதிவு என்று குறிப்பிட்டிருக்கலாம். எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று புரியாததால், கருத்துச் சொல்வது கடினமாய் இருக்கிறது.

    ReplyDelete
  7. @சேட்டை
    அந்த நபர் வேண்டுவது விளம்பரம்தான். அதனால் இப்பொழுது அந்த முகவரியை கொடுத்தல் அவனது நோக்கம் நிறைவேறிவிடும். அவன் எழுதி இருப்பது ஆபாசத்தின் எல்லையை தொடுகிறது என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்

    ReplyDelete
  8. கௌசல்யா நானும் கண்டனம் தெரிவிக்கிறேன் ...அவன் பெயரும் அந்த வலைபதிவு பத்தியும் சொல்லல முடியுமா ...

    ReplyDelete
  9. விஷயம் தீவிரம்னு மட்டும் புரியுது. ஆனால் யாரு என்னனு புரியலை. என்றாலும் உங்கள் கருத்துக்களோடு ஒத்துப் போகிறேன்.

    ReplyDelete
  10. பெண்களை இழிவுபடுத்துத் தான் பதிவை பிரபல படுத்த வேண்டுமா??
    எந்த வெப்சைட் என்ன விஷயம் என்று புரிய வில்லை ஆனால் நீங்கள் சொல்லும் அந்த இழிவான நபரை கடுமையாக கண்டிக்க வேன்டும்.

    ReplyDelete
  11. உங்கள் ஆதங்கத்தைப் பக்குவமாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். நீங்கள் குறிப்பிடும் பதிவை நான் படிக்கவில்லை. எனவே, முழுமையான கருத்தை வெளியிட வாய்ப்பில்லை. நிச்சயமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள். இனிமேலாவது இதுபோன்று நடக்காது என்று நம்புவோம்.

    ஸ்ரீ....

    ReplyDelete
  12. மாதர் தமை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் ...(பாரதி )
    பாரதி பிறந்த மண்ணில் இப்படியும் சில ஜந்துக்கள் இருக்கத்தான் செய்கிறது ,இப்படி ஒரு தரம் தாழ்ந்த ஒரு விளம்பரம் தேவையா ? மூடனே சிந்தித்துப்பார் ..உனது தாயும்,சகோதரியும் பெண்கள்தான் என்பதை மறந்து விடாதே..

    ReplyDelete
  13. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பதிவைப்பற்றி எனக்கும் தெரியவில்லை. இருந்தாலும் உங்கள் கருத்துத்தான் எனதும்..

    ReplyDelete
  14. இந்த பதிவினை வெளியிட்டிருப்பதின் பிண்ணனியில் இருக்கும் வலியை உணருகிறேன் தோழி.

    பெண்களை இழிவுபடுத்துத் தான் பதிவை பிரபல படுத்த வேண்டுமா??
    எந்த வெப்சைட் என்ன விஷயம் என்று புரிய வில்லை ஆனால் நீங்கள் சொல்லும் அந்த இழிவான நபரை கடுமையாக கண்டிக்க வேன்டும்.

    ReplyDelete
  15. விஷயம் எங்கு என்று தெரியவில்லை. எங்கு என்றாலும் கடும் கண்டணத்திற்கு உரியது

    ReplyDelete
  16. you got results. good to know. you always lead. keep it up. thanks, that fellow is trapped now, i think.. best of luck.

    ReplyDelete
  17. ஒரு பெண்ணைப் பற்றி கேலி செய்து எழுதுவது... முற்றிலும் கண்டனத்திற்குரியது.. அனைத்து வேலைகளுக்கு மத்தியிலும்.. தனக்கு தெரிந்த நல்ல விசயங்களை மற்றவரோடு பகிர்ந்து கொள்ள நினைத்து எழுதிக் கொண்டிருக்கும் பெண் பதிவர்களை போற்றாவிட்டாலும் பரவாயில்லை. இப்படி கேலிப்பொருளாக்கி எழுதுவது மிக மிக தவறு....!

    ReplyDelete
  18. பெண் பதிவர்களுக்கு ஒரு இழுக்கு என்றதும், அதை கண்டித்து உங்கள் குரல் எழுப்பி பதிவு இட்ட உங்கள் செய்கை மதிப்பிற்கு உரியது..

    ReplyDelete
  19. கடுமையான கண்டனங்கள்..!

    தயவு செய்து அந்த யூ ஆர் எல் கொடுக்கவும் அந்த நபர் யாரென்று தெரிந்து டார் டாராக கிழிக்க வசதியாக இருக்கும்...!

    ReplyDelete
  20. எனக்கும் என்னன்னு தெரியல! ஆனாலும் கண்டனத்துக்குரியதுதான்!

    ReplyDelete
  21. கௌஸ், என்ன விடயம் என்று தெரியாவிட்டாலும் இது மிகவும் கவலைக்குரியதே. அந்த நபரின் வலைப்பூ முகவரி போட வேண்டாம். அது அந்த நபருக்கு இலவச விளம்பரமாகி விடும். ஏதோ ஒரு அல்ப சுகம் போலும் இப்படி செய்வதனால்.

    ReplyDelete
  22. pengalai ilivupaduthuvorai olippom
    - saraswathi

    ReplyDelete
  23. //சேட்டைக்காரன் said...
    சகோதரி, எந்த வலைத்தளம் அல்லது வலைப்பதிவு என்று குறிப்பிட்டிருக்கலாம். எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று புரியாததால், கருத்துச் சொல்வது கடினமாய் இருக்கிறது.//

    இதேதான் எங்கள் நிலையும். இருப்பினும் (அந்தப்பன்னாடைக்கு) கண்டனங்கள். பதிவுலகில் பிரபலமாக ஆயிரம் விஷயங்கள் உண்டே. அதைச்செய்து விட்டுப்போகலாமே...
    // vanathy said...
    கௌஸ், என்ன விடயம் என்று தெரியாவிட்டாலும் இது மிகவும் கவலைக்குரியதே. அந்த நபரின் வலைப்பூ முகவரி போட வேண்டாம். அது அந்த நபருக்கு இலவச விளம்பரமாகி விடும். ஏதோ ஒரு அல்ப சுகம் போலும் இப்படி செய்வதனால்.//

    ஆமோதிக்கிறேன்...

    ReplyDelete
  24. தான் பிரபளம் ஆவதற்காக கீழ்தரமான செயல் செய்கிறானா? என்ன ஒரு நாயினும் இழிந்த நிலை. யார் அந்த நாயினும் இழிந்தவன் என்று மற்றவர்களுக்கு தெரியவேண்டாமா? அப்போது தானே, அவனை புறக்கணிக்க முடியும். அவனை Follow செய்து கொண்டு இருப்பவர்களும், அவன் வலை பக்கத்தில் இருந்து வெளியேற முடியும்.

    கண்டிப்பாக சொல்லுங்கள் கௌசல்யா! யாரந்த அயோக்கியன். இது போன்ற கீழ்தரமானவர்களை பதிவுலகை விட்டே வெளியேற்றுவோம்.

    ReplyDelete
  25. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இடுகை எனக்கு எதுவெனத் தெரியவில்லை. எப்படி இருந்தாலும் இது போன்ற இழிபிறவிகளின் செயல் கண்டிக்கப்பட வேண்டும்.

    இவன்(மன்னிக்கவும் மரியாதை கொடுக்க மனம் வரவில்லை) படித்தாலும் பக்குவமும் பண்பும் இல்லாத ஈனப்பிறவி.

    ReplyDelete
  26. நான் இப்ப தானே பார்க்கிறேன்.என்ன செய்தி எந்த தளம்,யார் ஒன்றும் புரியலை.கௌசல்யா எப்படி அறிந்து கொள்வது?என்றாலும் ஏதோ தவறு என்று தெரிகிறது.நானும் வருத்தம் தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
  27. நீயெல்லாம் ஒரு ஆண்மகன் அப்டின்னு சொல்றதக்கு வெட்கப்படு இனிமேல்..உன்னைவிட அதிகம் சாதித்தவர்கள் இவர்கள் , இவர்கள் பெயரை உச்சரிக்க அருகதை இல்லாத நீ, இவர்களை பற்றி எழுதி இருப்பது தான் உனக்கே அசிங்கம்.

    எத்தனை நிகழ்வுகளும், பொருட்களும் இருக்கின்றன, உன் கேவலமான திறன்களை அதன் மேல் காட்டி இருக்கலாம், அதைவிட்டுவிட்டு இவர்கள் மேல் காட்டியிருப்பது உனது பொறிக்கிதனத்தையும்,நீ சரியாக வளர்க்க படவில்லை என்பதையும் காட்டி இருக்கிறது.

    பெண்களை கேலி செய்தால் தான் நீ பிரபலாமாவாய் என்றால் உன் வீட்டிலே குறைந்தது பெண்களாவது இருப்பார்களே,

    நீ எழுதுவதையும், ரசித்து, இன்னும் எழுது, இனிமையாய் இருக்கிறது என்று உற்சாகபடுத்துவதாய் மாமா வேலையை பார்க்கிறார்களே அவர்களை முதல்ல செருப்பால அடிக்கணும்.

    இனியும் இது தொடர்ந்தால் பின் விளைவுகள் மோசமானதாய் இருக்கும் என என் அக்காகளின் சார்பாய் சொல்லிக்கொள்கிறான் இவர்களின் தம்பி..

    ReplyDelete
  28. இந்தப் பதிவினைப் படிக்கும் போதே மனதிற்கு வேதனையளிக்கிறது.
    இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்..? நான் அந்த வலைத்தளதினைக் கண்டதில்லை.
    இருப்பினும் ஒருவரின் மனதினை இவ்வளவு வேதனை அளிக்கச்செய்துதான் பிரபலம் ஆகவேண்டும் எனில் அப்படிப் பிரபலம் ஆகி என்ன பயன்..? வலைப்பதிவுகள் இலவசம் என்பதால் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்ற எண்ணமுடையோரை என்ன செய்வது..? பதிவுலகில் இது போன்ற தீங்குகள் நடக்காமல் இருக்க வேண்டும். இங்கே ஆண்களும் எழுதுகிறார்கள் பெண்களும் எழுதுகிறார்கள். அனைவருமே சகோதர சகோதரிகளாய்ப் பழகுகிறோம். இங்கேயும் இது போன்றவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்..

    ReplyDelete
  29. நீங்கள் சொல்லும் வலைத்தளம் எது என்று தெரியவில்லை...எனினும்..வேதனையும், கோபமும்தான் வருகிறது...இத்தகைய நபர்களை எண்ணி...தயவு செய்து அத்தகைய ஆட்களை இனி யாரும் பதிவர் என்று குறிப்பிடாதீர்கள்...நிச்சயம் இது கணடனத்துக்குரிய செயலே...இங்கு நமக்கு கிடைத்திருக்கும் கருத்துச் சுதந்திரத்தை..நாம் இத்தகைய இழி செயல்களுக்குப் பயன்படுத்தக்கூடாது என்பதை அத்தகைய நபர்கள்..உங்களின் சூடான பதிவைப் படித்த பிறகாவது புரிந்து கொண்டால் சரி..இதற்கு நாங்கள் கண்டனம் மட்டும் அல்ல நாங்களும் ஆண்களாக இருப்பதால்...தங்களிடம் மன்னிப்பையும் கேட்டுக்கொள்கிறோம்..சகோதரி...

    ReplyDelete
  30. good post too..

    ReplyDelete
  31. பெண்களை கேலி செய்வதும், இட்டுக்கட்டி பேசுவது சட்டபடி குற்றம். வலைப்பூக்களில் தங்களது அறிவை ஏந்திவரும் தாயைப் போன்ற சகோதரிகளை இனியும் கேலி செய்வது ஏற்கலாகாது...

    ReplyDelete
  32. அன்புடன் சகோதரிக்கு வணக்கம் எதோ ஒரு பதிவர் பெண்களை இழிவாக எழுதி இருக்கிறான் என்று ஏகப்பட்ட பதிவர்கள் தமது கண்டனத்தை தெரிவித்து உள்ளனர்!!! அதிகம் பெண்மை போற்றும் பதிவர்கள் உள்ளனர் ""சூரியனை பார்த்து நாய் குலைக்கும் போது சூரியன் திரும்ப குலைபதில்லை!!! விடுங்கள் சகோதரி...

    ReplyDelete
  33. அன்புச் சகோதரி...
    உங்கள் கோவம் புரிகிறது. அந்தப் பதிவர் யார் என்பது அறியாமல் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
    பிரபலம் ஆக இப்படி ஒரு வழியை தேர்ந்தெடுத்திருக்கும் இவன் ஒரு நற்தாய்க்கு மகனாகத்தானே பிறந்திருப்பான். சகோதரிகள் உண்டு என்றும் சொல்லியிருக்கிறீர்கள். சகோதரிகளுடன் பிறந்தவனா இப்படி.?
    தான் படித்த படிப்பை நல்ல செயலுக்கு பயன்படுத்தலாமே என்றுதான் பலர் வலைப்பூவின் உலகிற்குள் வருகிறார்கள். இவனுக்கு இப்படி ஒரு வியாதி?
    விடுங்கள் தோழி... அவனுக்கு காலம் பதில் சொல்லும்.

    ReplyDelete
  34. இரண்டுவார விடுமுறையின் பின் இன்றுதான் பதிவுகளோடு சந்திக்கிறேன்.ஒன்றும் புரியவில்லை கௌசி.என்னவென்று தேடுகிறேன்.

    ReplyDelete
  35. வருந்துகிறேன் இப்படியுமா மனிதர்கள்....

    ReplyDelete
  36. 'பெண்மைக்கு ஒரு இடத்தில் இழுக்கு நடந்து இருக்கிறது, அதற்கு உங்கள் கண்டனத்தை தெரிவியுங்கள்'என்று வேண்டுகோள் விடுத்ததை மதித்து கொஞ்சமும் தயங்காமல் உடனே உங்கள் குரலை ஆவேசமாகவும், கோபமாகவும் வெளிபடுத்திய உங்கள் அனைவரின் முன் நான் நன்றியுடன் தலை வணங்குகிறேன்.

    எதற்கும் கலங்காதீர்கள்' என்று தோள் கொடுத்த உங்கள் அன்பையும், நட்பையும், சகோதர மாண்பையும் எண்ணி பெருமைபடுகிறேன்.

    மீண்டும் நன்றிகள் பல.

    ReplyDelete
  37. என்னைப் பொறுத்த வரைக்கும்....இதை எழுதிய மனிதனை தேடிப்போய் கண்டங்களைச் சொல்லி அந்த மனிதனையும் நாம் காயப்படுத்துவதை விட.....


    இது போன்ற பதிவுகளில் இருக்கும் வலியினை உணர்ந்து சம்பந்தப்பட்ட தோழர்...இடுகைகளை அகற்றவேண்டும் என்ற எண்ணம் வந்தால் அதுவே பதிவின் நோக்கம்...

    ReplyDelete
  38. தைரியம் இருந்தால் கருத்தோடு மோத வேண்டியது தானே.. பெண்ணின் உருவத்தையும் அவர்களின் உணர்வுகளையும் கேவலப்படுத்த யாருக்கும் இங்கு அதிகாரம் இல்லை.. எழுதியவரின் நோக்கம் என்னவென்று புரிகிறது.. கடும் கண்டனங்கள்..அவர் வலைத்தளத்திற்குச் சென்று எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்போல் உள்ளது..ஆனாலும் அவரது வலைத்தளம் தெரியாததால் என்னால் முடியவில்லை..

    எங்கே போனாலும் புல்லுருவிகளின் தொல்லை தாங்க முடியவில்லை.. இவர்களை கூண்டோடு அழிக்க வேண்டும்..

    அந்தக் குறிப்பிட்ட நபருக்கு இந்த எதிர்ப்பு போய்ச சேரட்டும்..

    நன்றி..

    ReplyDelete
  39. அன்புத் தோழி, உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். பெண்களை இழிவுபடுத்துவோருக்கு எதிரான உங்கள் குறை ஆதரிக்கிறேன்.


    உங்கள் முயற்சிக்கு என்னால் முடிந்த சிறு உதவியாக எனது பதிவு ஒன்றை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். தயவு செய்து எனது வலைப்பூவில் (dragondeep.blogspot.com) அதனை படித்துப் பார்க்கவும்.


    தொடரட்டும் உங்கள் போராட்டம்.


    வாழ்த்துகள்.

    ReplyDelete
  40. என்ன, ஏது, யார் என்று புரியவில்லை.

    ஆனால் பெண்களை இழிவுபடுத்துவது என்பது ஒரு கொடிய மனநோய்.

    நானும் என் கண்டனங்களை இங்கே பதிவு செய்கிறேன்.

    ஆதரவு தெரிவித்த பதிவர்கள் அனைவருக்கும் என் நன்றி.

    ReplyDelete
  41. என் கண்டனங்கள்..

    இப்ப கொஞ்ச நாளா அதிகமாகிட்டே வருது பெண்கள் எழுத ஆரம்பித்ததுமே..

    என்னை வைத்து 3 பேர் புனைவு எழுதியுள்ளனர்..

    இருப்பினும் நான் எளிதாக எடுத்துக்கொண்டேன்..

    அதில் முதலாமவர் கேட்டே எழுதினார்..

    மற்ற இருவர் மிக அதிகப்படியாக .

    இருப்பினும் முதல்முறை என்பதால் தனியாக கண்டித்துள்ளேன்.

    இது வளர விடக்கூடாது...

    ReplyDelete
  42. துளசி கோபால் said...

    என்ன, ஏது, யார் என்று புரியவில்லை.

    ஆனால் பெண்களை இழிவுபடுத்துவது என்பது ஒரு கொடிய மனநோய்.

    நானும் என் கண்டனங்களை இங்கே பதிவு செய்கிறேன்.

    ஆதரவு தெரிவித்த பதிவர்கள் அனைவருக்கும் என் நன்றி.//

    என் நன்றியும் ..

    ReplyDelete
  43. யார்..? என்ன..? எந்தப் பதிவு என்று சொல்லியிருந்தால் முழு விபரங்கள் தெரிந்து கொள்ள முடிந்திருக்கும்.

    இப்போது உங்களது இந்தப் பதிவினையொட்டியே நாங்களும் கண்டனம் எழுப்ப வேண்டியதாக உள்ளது..

    நபர் யாரென மற்றவர்களுக்கும் தெரிந்தால்தான் அவர்களும் உஷாராக இருப்பார்கள்..!

    ReplyDelete
  44. கௌசல்யா! இப்படியெல்லாம் எழுதுகிற அளவுக்குக் கொழுப்பெடுத்துத் திரிகிற ஆண் யாரென்று பார்த்து, அவனது முகத்தில் காறித்துப்புகிற மாதிரி, நறுக்கென்று நாலு கேள்விகளைக் கேட்பதற்காகவாவது அந்தத் தளத்தின் முகவரியை வெளியிடுங்கள்!

    வலையுலகில் பெண்களை சகோதரிகளாக, உயிர்த்தோழிகளாக கண்ணியமாக நடத்துகிற ஆண்களும் நிறையவே உள்ளனர். இது போன்ற கடைந்தெடுத்த பொறுக்கிகளும் உள்ளனர். பொறுக்கிகளைக் களைபிடுங்க, அவர்களைக் கண்டறிவது மிக அவசியம்.

    ReplyDelete
  45. பெண் பதிவர் என்பவர் கேலி பொருளே சிலருக்கு .பலர் நல்ல மரியாதை கொண்டுள்ளனர்...

    புனைவு எழுதுபவருக்கு என்ன நடவடிக்கை னு தெரிஞ்சுக்கணும்.. பொதுவாக...

    நீங்கள் எடுத்த நடவடிக்கை பற்றி விரிவாக சொன்னால் அடுத்த பெண்ணுக்கு மிக உபயோகமாக இருக்கும்...

    ReplyDelete
  46. வணக்கம் சகோதரி
    அவ் அகங்காரனின் கரம் கொய்திட்டு அவன் முகத்தில் கரியுமிழ்ந்திட எண்ணுகிறேன்
    தாங்கள் விருப்பபட்டால் அவனை பற்றி சிறு துப்பு கொடுங்கள்

    http://marumlogam.blogspot.com

    ReplyDelete
  47. லிங்க் கொடுத்தால் அந்தப்பதிவும்,பதிவரும் பிரபலம் ஆவார்கள்,லிங்க் கொடுக்காவிட்டால் எங்களுக்கு கண்ணைக்கட்டி காட்டில் விட்டாற்போல் இருக்கும்.என்ன செய்யப்போகீறீர்கள் என்பது சவாலான விஷ்யம்தான்

    ReplyDelete
  48. கடுமையான கண்டனங்கள்..!
    இலங்கையில் இருந்து யாதவன் . . . .

    ReplyDelete
  49. எவர் செய்து இருப்பினும் கடும் கண்டனங்கள்.

    ReplyDelete
  50. எனக்கும் அது யார் என்று தெரியவில்லை. தெரியப்படுத்தினால் அந்த கயவனை பற்றி அறிந்து கொள்ளலாம். யாரா இருந்தாலும் இப்படி பெண்களை அசிங்கப்படுத்துவது கொடுமையான விசயம்.

    கௌசல்யா உங்களின் கோபம் நியாயமானது. இந்த செயலை செய்தவரை வன்மையாக கண்டிக்கிறேன்..

    நான் ஏற்கனவே சொன்னதுதான்...

    நம்முடைய வலைப்பூவில் இடுகைகள் கொச்சையாகவும் மோசமாக தாக்கியும் இருக்கக்கூடாது. பதிவு எழுதும்போது எழுத்தில் கவனமும் கண்ணியமும் இருக்கவேண்டும். அப்படி கீழ்த்தரமாக எழுதுபவர்களின் பதிவுகளை நாம் எட்டிக்கூட பார்க்ககூடாது.

    உங்கள் எழுத்துக்கள் பிறரால் போற்றப்படவேண்டும். எழுத்திற்கு ஒரு கண்ணியம்கொடுங்கள். பிறர் மனம் வருந்தும் அளவுக்கு உங்கள் எழுத்துக்கள் ஆகிடக்கூடாது.

    என்னுடைய வருத்தங்களும் கண்டனங்களும்....

    ReplyDelete
  51. யார் என்ன என்று தெரியாமல் கண்ணைக்கட்டி விட்ட மாதிரி இருக்கிறது.
    தவறாக எழுதியிருப்பின் நிச்சயம் கண்டிக்கவேண்டும்.
    நானும் என் கண்டனங்களை இங்கே பதிவு செய்கிறேன்.

    ReplyDelete
  52. கவுசல்யா, என்ன நடக்குது யார் அப்படி எழுதியது ஒன்றும் புரியலப்பா.

    என்ன இருந்தாலும் ஏன் இப்படி எழுதிதான் பிரபலமாகனுமா என்ன?

    ReplyDelete
  53. en kandandangaliyum therivithu kolkirean.... kandippaaga ethaavathu seyyavendum...

    mikka nandri

    ReplyDelete
  54. மிக மிக கடுமையான கண்டனத்திற்குரிய செயல்....

    பதிவை எழுதிய உங்களுடனும், பின்னூட்டமிட்ட அனைத்து தோழமைகளுடன் சேர்ந்து நானும் என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்...

    வீணாக பிரபலப்படுத்த வேண்டாம் என்று நீங்கள் நினைத்து அந்த “அற்ப” மனிதனின் (!!) வலையை குறிப்பிடாதது எங்களுக்கு முழுமையாக அவரை அடையாளம் காட்டவில்லை...

    மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோமென்ற பாரதியின் எழுத்தை படித்திருந்தால், அந்த அற்ப பிறவி பெண்களை பற்றி அது போல் எழுதி இருக்காதென்பது திண்ணம்....

    ReplyDelete
  55. ஏதோ பிரச்சனைன்னு மட்டும் புரியுது. ஆனால் யாரு என்னனு புரியலை. இருந்தாலும் அப்படி கேலி செய்து எழுதியது தவறு. ஆரோக்யமான தோழமையான கேலிகள் கிண்டல்கள் தவறாக எடுத்து கொள்ள படுவதில்லை. ஆனால் பெண்களை இழிவு செய்வது போன்றவை கண்டிக்கதக்கது தான். யாருன்னு தான் புரியல?

    ReplyDelete
  56. இப்படியுமா இருக்கிறார்கள் :((.
    மிக மிக கண்டிக்கத்தக்க செயல். என்னுடைய கண்டனங்களையும் பதிவு செய்கிறேன்.

    ReplyDelete
  57. வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டிய செயல்.. எனது கண்டனங்களையும் எதிர்ப்புகளையும் பதிவு செய்கிறேன்.

    மற்றபடி அந்த நாதாறியை காவல்துறையில் பிடித்துக்கொடுப்பதே சிறந்த வழியெனத் தோன்றுகிறது.

    ReplyDelete
  58. தற்போதுதான் படிக்கிறேன். என்ன விஷயம் என்று தெரியவில்லை கேலி செய்வது மிகப் பெரிய தப்பு

    ReplyDelete
  59. விஷ செடியை ஆரம்பத்தில் பிடுங்க வேண்டும்...இதுவரை ஆறு பெண் பதிவர்களை பற்றி எழுதி உள்ளான்...இது தொடரும்...எப்போதும் போல் நம் வீடு பாதுகாப்பாக தானே இருக்கிறது என்று மெத்தனமாக இருக்காமல் அந்த செடியை வேர் அறுத்து போடுங்கள்...////

    என்னக இது இப்படி சொலிட்டா , யாருன்னு கண்டுபிடிக்கிறது , கொஞ்சம் லிங்க் குடுங்க
    mail id
    yasinshaji@gmail.com

    ReplyDelete
  60. ஆணோ பெண்ணோ..... அவர் ஒரு உயிர்........
    ஆண் என்பதும் பெண் என்பதும் அடையாங்கள்...... அந்த அடையாளங்களை எப்போதும் தூக்கி அலைய வேண்டியதில்லை....... தேவையான பொழுது அணியலாம்....... மற்றபடி ஒரு உயிர்ச்சுடராக வலம் வரலாமே.......
    அது என்ன வலைத்தளமோ தெரியாது....... சூடான இந்த பதிவை பார்த்தால் ஏதோ வில்லங்கம் உள்ளது போல மட்டும் புரிகிறது..... அந்த பதிவர் யார், ஏன் இப்படி தன் தரத்தை தானே குழி தோண்டி புதைத்தார் என தெரியாமல் ஒன்றும் சொல்ல இயலவில்லை........ அந்த பெண்களுக்கும் இவருக்கும் ஏதாவது கருது வேறுபாடு இருந்ததா, அதனால் இப்படி ஒரு கேவலமா? எதாக இருந்தாலும் அவர் செய்தது குற்றம். நீதிமன்றம் வரை போனால் அடி பலமாக விழும். செச்ஷன் லாம் சொல்ல வேண்டியதில்லை இப்போது. ஆனால் அவர் வலைத்தளம் மூடப்பட்டு, கம்பிக்கதவுகளின் பின்னால் ஒரு உல்லாச விடுமுறை கிட்டும்!

    ReplyDelete
  61. உளவியல் ரீதியாக பார்த்தோமானால் நிச்சயம் அந்த மனிதர் உள நோய் கொண்டவராக தான் இருப்பார் .........அவரின் விலாசம் அறிந்து மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள வலியுறுத்துங்கள் ...........வெள்ளை சட்டைகளுக்கு உள்ளே கருப்பு இதயம் கொண்ட புழு நெளியும் நாற்றம் கொண்ட ஆண்களும் இருக்கிறார்கள் ..........என்ன செய்ய வார்த்தைகள் மட்டுமே அவரை குணபடுத்தும் என்று சொல்லிவிட முடியாது..........ஆகையால் அவருக்கு தகுந்த சிகிச்சையை ( தண்டனையை ) தரவேண்டும்

    ReplyDelete
  62. முதன் முறை தங்கள் தளம் வருகிறேன். வந்ததும் இங்கு ஏதோ விளங்கவில்லை?
    ஆனாலும் அந்த நபர் கண்டிக்கத்தகுகுந்தவர்..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...