திங்கள், ஆகஸ்ட் 16

11:29 AM
31

நம் நாட்டில் இப்ப இருக்கும் முக்கியமான பிரச்னைகளில் ஒன்றுதான் 'மின்தட்டுப்பாடு'.  நம்ம அரசும் என்ன என்னவோ முயற்சி செய்தாலும் (உண்மை தாங்க ) இதை மட்டும் சரி படுத்தவே  முடியவில்லை...??!! தினம் இரண்டு மணி நேரம் இல்லை மூணு மணி நேரம் விருப்பம் போல் கரண்ட் கட் தான். ஆனால் மின் உற்பத்திக்காக பல இடங்களில் மின் காற்றாலைகளை  நிறுவி வந்தாலும் பிரச்சனை தீர்ந்த பாடில்லை. ஆனால் மின் உற்பத்தியை அதிகரிக்க செய்ய சில வழிமுறைகள் இருக்கின்றன. அதை இங்கே பார்க்கலாம். 

அதில் முக்கியமான ஒன்றுதான் 'மரபு சாரா எரிசக்தி'. அதாவது விவசாய கழிவுகள், நெல் உமி, தேங்காய் மட்டை, காடுகளின் கழிவுகள், கோதுமை கழிவு, குப்பை இவைகளில் இருந்தும்  மின் உற்பத்தி பண்ண முடியும், இவை எல்லாம் மரபு சாரா எரிசக்திகள். இவற்றில் இருந்து எல்லாம் மின்சாரம் தயாரிக்க முடியும் என்பதே பலருக்கும் தெரியாத  புது தகவல்  என்று நினைக்கிறேன். (ஒருவேளை உங்களுக்கு தெரிந்து இருந்தால் விவரங்களை சொல்லுங்கள் , உபயோகமாக இருக்கும் )

பல பொறியாளர்கள் பரிந்துரை செய்தும், நம் தமிழ் நாடு அரசு இவற்றில் இருந்து மின் உற்பத்தி செய்ய இதுவரை முயற்சி எடுத்ததாக  தெரியவில்லை ??  காரணம் தெரியவில்லை...?? ஆந்திராவில் நெல் உமியில் இருந்து மின்சாரம் தயாரிக்கக்கூடிய  45 மின் உற்பத்தி நிலையங்கள் 4 வருடங்களாக செயல்பட்டு வருகின்றன...??!!  அங்கே அனுபவமிக்க பொறியாளர்களின் ஆலோசனையினை   பெற்று அதன்படி வெகு ஜோராக மின் உற்பத்தி செயல்படுத்தபட்டு வருகிறது. இன்று 45 நிலையங்களில் ஒவ்வொன்றும் தலா 6  மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. இது கொஞ்சம் மகிழ்ச்சியான செய்திதான். 

மின் உற்பத்தி செய்வது ஒரு பக்கம் இருக்கட்டும்......இருக்கும் மின்சாரத்தை எப்படி எல்லாம் வீணாக்குகிறோம் என்பது தெரிந்தால் நம்முடைய ரத்த அழுத்தம் இன்னும் அதிகமாகும்.....

முறையற்ற மின் விநியோகம்

மின்சாரத்தை கொண்டு போய் விநியோகம் செய்யும் வழிமுறைகளினால் மட்டும் 30௦%  மின்சாரம் வீணாகிறது என்பதே அந்த  அதிர்ச்சியான செய்தி. ஆனால் பெருமையான விஷயம் என்னனா இந்த ஒழுங்கற்ற மின் விநியோகத்தால் மின்சாரத்தை வீணாக்குவதில் உலகத்திலேயே இந்தியாவிற்க்குதான் முதல் இடமாம்..... என்ன கொடுமைங்க இது ??!!

இதிலும் தமிழகத்தின் நிலை இன்னும் மோசம். மத்திய மின்சார ஆய்வு நிறுவனம் தமிழகத்தில் தற்போது செயல்பட்டுக் கொண்டு இருக்கும் ட்ரான்ஸ்பார்மர்களை  மாற்றச் சொல்லி 5 வருடம் ஆகிறதாம்....இதுவரை மாற்றவில்லை. ( இன்னும் பல வருடம் ஆகும்....?! முதல் இடத்தை அவ்வளவு சீக்கிரம் இழக்க மனசு வராதே  ??)

கழிவில் இருந்து மின்சாரம்

இந்த முறையில் ஆஸ்திரேலியா தனது மின் தேவையை பெருமளவு பூர்த்தி செய்கிறது.  கழிவு நீரை வடிகட்டி, அதில் இருக்கும் கழிவுகளை உருண்டைகளாக்கி  , அதில் இருந்து மின்சாரம் தயாரிப்பதுதான் 'கழிவு நீர் மின் உற்பத்தி'. இந்த முறையை நாம் செயல்   படுத்தினால் நமக்கு இரண்டு விதத்தில் ஆதாயம். 'பல கோடி  ரூபாய்' செலவு செய்து கூவத்தை சுத்தபடுத்த போவதற்காக  சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்து இருக்கிறது 'தமிழகம்'.  அதற்கு மாற்றாக  கூவத்தில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடிவெடுத்தால் கூவமும்  சுத்தமாகும், நமக்கு மின்சாரமும் கிடைக்கும். அதற்காக கூவம் கரைகளின் ஓரத்தில்  பெரிய அளவிலான 'நீரேற்று நிலையங்களை' அமைத்து கூவம் நீரை சுத்திகரிக்கவேண்டும். பின்னர்  அந்த சுத்திகரிக்கபட்ட நீரை தொழிற்சாலை தேவைகளுக்கும், சேகரித்த  கழிவு உருண்டைகளை  மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுத்தி கொள்ளலாம்.  (ஒரு கல்லில் இரண்டு மாங்காய் )

சூரிய ஒளி மின்சாரம்சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும்.  இதற்கு கட்டிடங்களின் உச்சியில் சூரிய ஒளி மின்சாரத்துக்கான 'சோலார் பேனல்' களை பொருத்தினால் போதும். ஆரம்ப முதலீடு காஸ்ட்லி என்றாலும் எதிர்காலத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்று தொலைநோக்கு பார்வையோடு பார்க்கும் போது , 'இதுதான் நிரந்தர தீர்வு' என்று அடித்து சொல்லலாம்.

இவை எல்லாம் அரசாங்கம் மட்டும் தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதை நம்பி இருப்பதற்கு பதில் நம்மால் முடிந்தவரை இவற்றை நாமே செய்து கொள்ள முடியும் என்று ஒரு குடும்பம் நிரூபித்து உள்ளது. இங்கே இல்லை பக்கத்தில் பெங்களூருவில் தான் அந்த அற்புதம்.

சிவகுமார் என்பவர் கர்நாடக மாநில அறிவியல் மற்றும் தொழிநுட்பத்துறையில் முதுநிலை விஞ்ஞானி. அவரது மனைவி திருமதி சுமா. இவர்களின் இல்லத்தில் தான் அந்த அதிசயம்.  10 வருடங்கள் முன் வீடு கட்டியதில் இருந்து இன்று வரை 'மின் இணைப்போ', 'குடிநீர் இணைப்போ', 'சமையல் எரிவாயு இணைப்போ' இல்லை...!! மாற்றாக சூரிய ஒளியும், மழை நீரும் தான்....!!??

வீட்டின் ஒவ்வொரு அறையின் கூரையிலும் நேரடியாக சூரிய ஒளி ஊடுருவும் வகையில் அந்த கட்டிடம் வடிவமைக்க பட்டுள்ளது. மின்சார தேவைக்கு 10 வருடங்களுக்கு முன் 7000  ரூபாய்  செலவில் மொட்டை மாடியில் 'சூரிய ஒளி மின் உற்பத்தி சிஸ்டத்தை' அமைத்துள்ளார்.

மழைநீர் சேகரிப்பு
தண்ணீர் தேவைக்கு அவர்கள் தேர்ந்தெடுத்த வழி 'மழைநீர் சேகரிப்பு'  தான். 45 ஆயிரம் லிட்டர் மழைநீரை சேகரிக்கும் தொட்டிகள் அமைத்து அதை சுத்திகரிக்க பில்டரை அவரே வடிவமைத்துள்ளார்.  அந்த 'பில்டர்'தான் இப்போது மாநில அரசுகளால் பரிந்துரை செய்யபடுகிறது.  இவர்கள் வீட்டை உதாரணமாக வைத்து மழைநீர் சேகரிப்பு முறையை வீட்டில்  அனைவரும் ஒரு மாதத்தில் அமைக்க வேண்டும் என்று சட்டமே போட்டு விட்டதாம் அரசாங்கம்.

ஆனால் நம்ம ஊர்ல போடப்பட்ட மழை நீர் சேகரிப்பு திட்டம் என்ன ஆச்சுனு... எப்படி சொல்ல....ஆரம்பத்தில் நல்லாத்தான் இருந்தது...மக்களிடம் சரியான விழிப்புணர்வை  ஏற்படுத்தாமல் போய்விட்டதால், ஏதோ கடமைக்கு செய்வது போல் மக்கள் செயல் படுத்தினார்களே  ஒழிய முழு மனதுடன் , முழு ஈடுபாட்டுடன் செய்யவில்லை....

எந்த ஒரு 'நல்லதுமே ஒரு வீட்டில் இருந்துதான்' தொடங்குகிறது என்பார்கள். அரசாங்கத்தின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி குரல் கொடுப்பது அவசியம் தான்.  அதே சமயம் நம்மால் முடிந்தவரை தேவைகளை பூர்த்தி செய்ய முன் வரலாமே....

அடுக்குமாடி குடியிருப்பவர்களில் சேரும் கழிவு நீரை அவர்களே தகுந்த ஆட்களை வைத்து தேவையான மின்சாரம் தயாரித்து, மிச்ச நீரை செடிகளுக்கு உபயோகபடுத்தி கொள்ளலாம். வழிமுறைகளை சொல்லி கொடுக்க பொறியாளர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.  முயற்சியை நாம்தான் எடுக்க வேண்டும் 

சொந்த வீடு வைத்து இருப்பவர்கள் கொஞ்சம் 'இச்செய்தியை செவிமடுத்து, (செல் எடுத்து') சம்பந்த பட்டவர்களிடம் பேசி உங்கள் வீட்டையும்  மற்றவர்களுக்கு முன் உதாரணமாக்கி காட்டுங்களேன் எனதருமை பதிவுலக தோழர்களே....

நன்றி ஜூனியர் விகடன்    
Tweet

31 கருத்துகள்:

 1. படிக்கும் போது காய்கறியில் மின்சாரம் தயாரிக்கலாம் என்று சொல்லி தருவது..ஆனால் அதை நடைமுறை படுத்துவது இல்லை கழிவுகள் முலம் சமயல் எரிவாயு உற்பத்தி செய்யலாம்...மிகவும் பயன் உள்ள பதிவு..

  பதிலளிநீக்கு
 2. நல்ல தகவல்கள்...

  ஆனால் நம் நாட்டில் இதெல்லாம் நடக்குமா... தேர்தல் வேற வரப்போகுது....

  பதிலளிநீக்கு
 3. நல்ல செய்தி அக்கா இதை அனைவரும் கடைபிடித்தால் கண்டிப்பாக நமக்கு குடிநீர் பிரச்சினை வரவே வராது.

  பதிலளிநீக்கு
 4. நல்ல தகவல்கள்...

  நம் நாட்டில் இதெல்லாம் நடக்குமா...?

  பதிலளிநீக்கு
 5. அன்புடன் வணக்கம் சூரிய ஒளிய்ல் மின்சாரம் தயாரிக்க அந்த தகடுகள் விலை மிக அதிகம் தற்போது எல்லாம் இலவசம் என்று கொடுக்கும் அரசு இதை சற்று சிந்தித்து 50% மானியம் என்று கொடுத்தால் போதும் மிகுதியான மின்சாரம் சேமிக்கப்படும் மின் தட்டுபாடு வராது. தொழிர்சளைகளுக்கு மட்டும் மின் இணைப்பு குடி இருப்பு வீடுகளுக்கு முழுக்க முழுக்க சூரிய ஒளி மின்சாரம் என்றால் எப்பிடி இருக்கும் அட குறைந்த பட்சம் சமத்துவபுர வீடுகளுக்கு இது போன்று செய்திருக்கலாமே!! யார் பூனைக்கு மணி கட்டுவது.. ??? அப்படியே இருந்தாலும் இதில் எத்தனை சதவீதம் யார் பைக்கு போகுமோ??? ..

  பதிலளிநீக்கு
 6. நடக்கும் நடக்காது என்ற கருத்துக்களை புறம் தள்ளி செய்தியில் இருக்கும் வீரியமும், அதன் பயன்பாடுகள் வருங்கால தலைமுறைக்கு எப்படி உதவும் என்று மக்களும் அரசும் சிந்திக்கவேண்டும்.

  இயன்ற அளவு வீடு கட்டும் போதும் மழை நீர் சேகரிப்பு பற்றிய எண்ணமும் மனிதர்களுக்கு இருக்கவேண்டும் என்பதும் அரசால் கட்டாயமாக்கப்படவேண்டும்....!

  மிக முக்கிய தேவைகள் கெளசல்யா நீரும் மின்சாரமும்.....பயனுள்ள செய்தியை வலைத்தளத்தில் பகிரவேண்டும் என்ற உங்களின் எண்ணத்தை பாராட்டும் அதே நேரத்தில் இதன் வலியுறுத்தலகள் மனிதர்களிடம் பரவிச் செல்லவேண்டும் என்பதே என் விருப்பமாக இருக்கிறது....

  வாழ்த்துக்கள் ..................கெளசல்யா!

  பதிலளிநீக்கு
 7. கோயம்பேடு காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கப் போகிறோம் என்றார்கள். அது என்ன ஆனது என்று தெரியவில்லை

  பதிலளிநீக்கு
 8. நல்ல கருத்து ஆனா போய் சேரவேண்டிய காதுகளுக்கு போய் சேர்ந்தாள் நாட்டுக்கு நல்லது..வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. Good one. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. மின்சாரத்தை பற்றிய உங்கள் பார்வை அருமை.. எல்லோரும் தெரிந்து கொள்ளவேண்டிய தகவல்கள்.. வாழ்த்துகள் கௌசல்யா..

  பதிலளிநீக்கு
 11. எதை எதையோ எழுதி பதிவாக பதியும் இந்நாளில் இது போன்ற பல உபயோகமான பதிவுகளையும் உங்களை போல் சிலர் பதிய, நாங்கள் படிப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது...

  //சொந்த வீடு வைத்து இருப்பவர்கள் கொஞ்சம் 'இச்செய்தியை செவிமடுத்து, (செல் எடுத்து') சம்பந்த பட்டவர்களிடம் பேசி உங்கள் வீட்டையும் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக்கி காட்டுங்களேன் எனதருமை பதிவுலக தோழர்களே....//

  நிச்சயம் செய்வோம் தோழி...

  மிக மிக உபயோகமான பதிவு பதிந்தமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் கௌசல்யா...

  பதிலளிநீக்கு
 12. adhiran...

  முதலில் வந்து என்னை அதிர்ச்சிக்குள்ளாகிய நண்பருக்கு நன்றி.

  மகிழ்கிறேன் மகேந்திரன்.

  பதிலளிநீக்கு
 13. சௌந்தர்...

  //கழிவுகள் முலம் சமயல் எரிவாயு உற்பத்தி செய்யலாம்...//

  மாட்டு சாணம் மூலமாகவும் சமையல் எரிவாவு உற்பத்தி செய்து பயன்படுத்தி வருவதை கிராமத்தில் ஒன்று இரண்டு வீடுகளில் பார்த்து இருக்கிறேன். ஆனால் மாடு வளர்க்கும் பலரும் ஏன் இதை முயற்சிப்பது இல்லை என்று தெரியவில்லை.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வெறும் பய....

  நடந்தால் நன்றாக இருக்கும் என்பதே விருப்பம்... நம் வீட்டில் முடிந்தவரை மழைநீர் சேமிப்பையாவது செய்யலாமே...

  நன்றி.

  பதிலளிநீக்கு
 15. சசிகுமார்...

  //கண்டிப்பாக நமக்கு குடிநீர் பிரச்சினை வரவே வராது.//

  உண்மைதான்.

  பதிலளிநீக்கு
 16. சே.குமார்...

  //நம் நாட்டில் இதெல்லாம் நடக்குமா.//

  நாம் மனது வைத்தால் நம் வீட்டில் நடக்கும்....

  நன்றி.

  பதிலளிநீக்கு
 17. hamaragana...

  //தொழிர்சளைகளுக்கு மட்டும் மின் இணைப்பு குடி இருப்பு வீடுகளுக்கு முழுக்க முழுக்க சூரிய ஒளி மின்சாரம் என்றால் எப்பிடி இருக்கும் //

  நல்ல யோசனைதான், நடைமுறையில் வந்தால்....ஆனால் நம்ம ஊரில் சாத்தியம் தானா??

  நன்றி

  பதிலளிநீக்கு
 18. dheva...

  //இயன்ற அளவு வீடு கட்டும் போதும் மழை நீர் சேகரிப்பு பற்றிய எண்ணமும் மனிதர்களுக்கு இருக்கவேண்டும் என்பதும் அரசால் கட்டாயமாக்கப்படவேண்டும்....!//

  ஏற்கனவே அரசால் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது....வீட்டு பிளான் அப்ரூவல் மற்றும் தொழிற்சாலை பிளான் அப்ரூவல் ஆகியவை மழை நீர் சேகரிப்பு இருந்தால் தான் கொடுக்கப்பட வேண்டும் என்பது தான் சட்டம். ஆனால் நாம்தான் விருப்பத்தின் படி சட்டத்தை கொஞ்சம் வளைத்து நம் வசதி படி நடந்து கொள்கிறோம்..அதை சரிவர செயல் படுத்துவது இல்லை.

  மக்களாய் பார்த்து மழை நீரின் அவசியத்தை உணர்ந்தால் தான் உண்டு.

  கருத்திற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 19. LK...

  //கோயம்பேடு காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கப் போகிறோம் என்றார்கள். அது என்ன ஆனது என்று தெரியவில்லை//

  சொன்னவரைக்கும் போதும் என்று விட்டு இருப்பார்கள்....!!

  :))

  பதிலளிநீக்கு
 20. Gayathri...

  //போய் சேரவேண்டிய காதுகளுக்கு போய் சேர்ந்தாள் நாட்டுக்கு நல்லது.//

  உண்மைதான் தோழி.

  :))

  பதிலளிநீக்கு
 21. அப்பாவி தங்கமணி...

  புரிதலுக்கு நன்றி தோழி.

  பதிலளிநீக்கு
 22. மின்மினி...

  வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 23. R.Gopi...

  //நிச்சயம் செய்வோம் தோழி...//

  நீங்கள் சொன்னதே நிறைவாக இருக்கிறது...

  எங்கள் வீட்டில் 2002இல் மழைநீர் சேகரிப்பை நல்ல முறையில் செய்தோம்...இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது... ஏன் சொல்கிறேன் என்றால் முதலில் நாம் சரியாக இருந்தபின் தான் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லமுடியும். சரி தானே நண்பரே...?

  வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 24. இப்போது இருக்கும் பிரச்சினைகளில் மின்சார பற்றாக்குறையும் ஒன்று...அரசாங்கத்தை நம்புவதை விட தனிமனிதன் ஒவ்வொருவரும் நம்மால் முடிந்ததை இந்த விசயத்தில் செய்தால் ஓரளவுக்கு முன்னேறலாம்..

  நல்ல பயனுள்ள தகவல்...

  பதிலளிநீக்கு
 25. K.KALIRAJAN Mob:94437036931:46 PM, ஏப்ரல் 06, 2012

  Iam in Trichy. In my house I have built a 12000Lr underground tank for Rain water harvesting in 2005. This 12000 lr is quit enough for my familis drinking, cooking and washing cloths. For ever We can use this pure water and get good health, saving money etc etc...

  பதிலளிநீக்கு
 26. Good Information. i am changing my life style to you all this ..can i have karnataka , sivakumar contact details to know the details better

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...