Friday, August 6

10:52 AM
74


எனக்கு இந்த தொடர் பதிவு என்றால் கொஞ்சம் யோசனைதான்...நாம என்னத்தை  உருப்படியா தொடர போறோம்  என்று.  ஆனால் நண்பர் LK என்னையும் தொடர அழைத்ததை மதித்து இந்த பதிவை எழுதுகிறேன். இனி கேள்விகளும் அதற்கு  என் பதில்களும்....



1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
   
கௌசல்யா 

2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

என் உண்மையான பெயரும் அதேதான். 

3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி

என் கணவர் சொல்லித்தான் எழுத தொடங்கினேன். ( நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரிடம் எதை பற்றியாவது சொல்லி புலம்பிட்டு இருப்பேன். அவர்தான், ' என்னிடம் சொல்வதை வலைபதிவுலகில் சொல் ..... 'யாம்(ன்)  பெற்ற இன்பம் பெருக வையகம்'  என்றார். அவர் தப்பிச்சிட்டார்.....ஆனா நீங்க எல்லோரும்....??)  

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

அப்படி எல்லாம் ஒன்றும் தெரியாது. ஏதோ எழுதணும் என்று மட்டும்தான் ஆரம்பத்தில் எழுதினேன், பின்னர்தான் பிற தளங்களை பார்த்து தமிளிஷில் இணைந்தேன்....அதில் LK அவர்கள் முதலில்   summit பண்ணி ஆரம்பித்து வைத்தார்....தொடர்ந்து கொண்டு இருக்கிறேன்.....  பிரபலம் பற்றிய வார்த்தையில் எனக்கு உடன்பாடு இல்லை. எதை வைத்து 'பிரபலம்'  என்பது கணிக்க படுகிறது என்பதில் எனக்கு சில விளக்கங்கள் தேவை படுவதால், அதை பற்றி இன்று வரை யோசிக்கவில்லை.  

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

 யார் எழுதினாலும் அதில் சொந்த விசயங்கள் கண்டிப்பாக கலந்தே இருக்கும்....சில அனுபவம் கலப்பதை தவிர்க்க இயலாது. நானும் அப்படி சிலவற்றை பகிர்ந்து இருக்கிறேன்.  விளைவுகள் என்ன என்று அதை படித்தவர்களுக்கு தானே தெரியும். 

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

பொழுது போக்காகத்தான் எழுத தொடங்கினேன். ஆனால் இந்த எழுத்தால் சில நல்லவைகளும் நடந்து கொண்டு இருக்கிறது. தாம்பத்தியம், கள்ளகாதல் போன்ற  பதிவை படித்த சிலர் மெயிலின்  மூலம் என்னிடம்  தொடர்பு கொண்டு ஆலோசனைகளையும், சந்தேகங்களையும் கேட்கிறார்கள். அப்போதுதான் புரிந்தது.... இனி பொழுதுபோக்கு என்று நினைத்து எழுதாமல் பிறருக்கு பயன்படணும் என்று... கொஞ்சம் அதிகமாக கவனம்  எடுத்து எழுதிக்கொண்டு இருக்கிறேன்.    

சம்பாதிக்கிறதா அப்படினா....? 

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

 இரண்டு வலை பதிவுகள் உள்ளன.  சிந்தனைக்கு 'மனதோடு மட்டும்',  மனதை கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ண 'வாசல்' 

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பிறரின் மீது பொறாமை அப்படி என்று எல்லாம் இல்லை, ஆனால் நகைசுவையாக  எழுதுபவர்களின் பதிவை மிகவும் விரும்பி படிப்பேன்.  கோபம் என்று பார்த்தால் சில நேரம் வந்தது உண்டு, எழுத்தின் வலிமையை  புரிந்து  கொள்ளாமல் அதை வைத்து தங்கள் சொந்த விருப்பு வெறுப்புக்காக அரசியல் செய்பவர்களை எண்ணி கோபம் வரும்.    

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..      

தமிளிஷில் இணைவதற்கு முன், முதன்  முதலில் என்னை பாராட்டியவர் ஆதிரன் (  மகேந்திரன் ) அவர்கள் தான்.  இன்றும்  எனக்கு ஒரு நல்ல நண்பர். அந்த பாராட்டு என்னை இன்னும் அதிகமாக சிந்தித்து எழுத தூண்டியது. 





அந்த பாராட்டு...,
//this is very glad to know you write this article with the heading 'kalla kaathal'.
thanks.

சமூகத்தின் மிக முக்கியமான உளவியல் பிரச்சனை இது. சரியான கோணத்தில் நுழைந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். நன்றி//


April 18, 2010 2:03 PM//
    
 10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்.

சக பதிவர்களுக்கு இங்கே ஒன்றை சொல்லி கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்.  நாம் நட்புக்காக என்று மட்டும் பார்க்காமல் நல்ல பதிவுகள் எங்கே இருந்தாலும் அதை கவனித்து அவர்களையும் உங்கள் வாக்குகளாலும், பின்னூட்டத்தாலும் ஊக்கபடுத்துகள். பின்னூட்டம் எழுத நேரம் இல்லை என்றாலும் வாக்கையாவது அளித்து,  அந்த பதிவு பலரை சென்று அடைய  உதவுங்கள். 


எல்லோருமே ஒரு சிறு அங்கீகாரத்திற்காக தான் காத்து இருக்கிறோம்...அந்த அங்கீகாரத்தை நாம் பிறருக்கும் கொஞ்சம் கொடுப்போமே....! 


பல நல்ல பதிவுகள் சரியாக கவனிக்க படாமலேயே போய்விடுகிறது...ஒரு சில சாதாரண பதிவுக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவு என்னை சில சமயம் அதிர்ச்சி அடைய  செய்கிறது...நட்பை ஆதரிக்க வேண்டியதுதான்...(ஆனால் கண்ணை மூடிக்கொண்டு அல்ல )   


"தேவையான நேரம் கொடுக்க படாத அங்கீகாரம், இருட்டு அறையில்.... மெழுகுவர்த்தி இருந்தும்  ஏற்றி வைக்க படாமல் இருப்பதை போன்றது...."


பதிவுலகம் எனக்கு, பல நல்ல நட்புகளையும், அன்பான உறவுகளையும் கொடுத்து இருக்கிறது... அதற்காக உண்மையில் பெருமை படுகிறேன். 


"உரிமையாக கடிந்து கொள்ளவும், 
 தவறுகளை சுட்டி காட்டவும், 
 பொழுது போக்கிற்காக பேசாமல் 
 கருத்துகளை பரிமாறி கொள்ள பேசுகிற, 
 முகவரியும் முகமும் தேவை இல்லை 
 'அகம் ஒன்றே அகமகிழ்ச்சி' என்று 
 பிடிவாதம் பிடித்து நட்பை வளர்த்து 
 கொண்டு இருக்கிற, உங்கள் அனைவரின் 
 நட்பிற்கு ஈடாக வேறு ஒன்று 
 இந்த உலகில் இருப்பதாக 
 எனக்கு தெரியவில்லை..."


இந்த தொடர் பதிவை பெரும்பாலும் பலரும் எழுதி விட்டார்கள் என்று நினைக்கிறேன்.... நண்பர் LK அழைத்ததில் இன்னும் தொடராமல் இருக்கும் நண்பர் தேவா இனி தொடருமாறு அழைக்கிறேன்....( அப்பாடி... நான் அழைக்க ஒருத்தராவது கிடைச்சாரே) 


 ( தம்பி சௌந்தர் சொன்னதுக்காக பயந்து இந்த பதிவை எழுதவில்லை....அந்த கட்சியில் இருந்து என்னை நீக்கிவிட்டாலும் கவலையில்லை....புது கட்சி தொடங்கிவிடுவேன் என்று இதன் மூலம் சொல்லி கொள்கிறேன்....!!)   


Tweet

74 comments:

  1. அழைப்பை ஏற்று எழுதியதற்கு நன்றி

    ReplyDelete
  2. nalla pathilgal. naan ithy thodarai palarin pakkangalil parththn. yarum pathil sollatha

    //10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்.//

    intha kelvikku ungalin karuththu migavum nanru.

    vazhththukkal.

    ReplyDelete
  3. ..புது கட்சி தொடங்கிவிடுவேன் என்று இதன் மூலம் சொல்லி கொள்கிறேன்//

    ஹி ஹி ஹி முடிந்தால் செயுங்கள் நகசுவைவைஎல்லாம் வருது...

    ReplyDelete
  4. ஒரு சில சாதாரண பதிவுக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவு என்னை சில சமயம் அதிர்ச்சி அடைய செய்கிறது...நட்பை ஆதரிக்க வேண்டியதுதான்...(ஆனால் கண்ணை மூடிக்கொண்டு அல்ல//

    கோமாளி செல்வா உன்னைத்தான் சொல்றாங்க.....

    ReplyDelete
  5. நல்ல பதில்கள் சகோதரி..

    கடைசியாக நீங்கள் கூறியது மிகவும் அருமையாக இருந்தது..

    ReplyDelete
  6. எதார்த்தமான பதில்கள்

    வாழ்த்துக்கள் சகோ :)

    ReplyDelete
  7. //கோமாளி செல்வா உன்னைத்தான் சொல்றாங்க....///

    அக்கா என்னயவா சொல்றீங்க ..??

    ReplyDelete
  8. எல்லா பதில்களும் உங்களின் தனிப்பட்ட பதில்கள் என்றாலும்.....பதிவுலகில் நல்ல பதிவுகள் அடையாளம் காணப்படுவதில்லை என்ற கருத்தை ஆதரிக்கும் அதே நேரத்தில் ....கருத்துரைகளும்...சரியான முறையில் பயன்படுத்தப்படுவதில்லை என்பதும் எனது கருத்து.

    கட்டுரைக்கு கருத்து சொல்பவர்கள் கட்டுரையின் போக்கை உணர்ந்து சொந்த விருப்பு வெறுப்பு தாண்டிய விமர்சனமாக அதை செயல் படுத்தினால். கட்டுரையாளனும், வாசிப்பாளனும் வளர்ச்சி அடைய முடியும்.

    நேர்மையான பதில்களுக்கு வாழ்த்துக்கள்....!

    இந்த தொடரை நானும் எழுதி ஆகவே வேண்டுமோ.......வலியுறுத்தல்கள் திடமாகிக்கொண்டிருக்கிறது....எழுதி விடுகிறேன்.... சீக்கிரமே......!

    ReplyDelete
  9. எதார்த்தமான பதில்கள்

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. //அவர் தப்பிச்சிட்டார்.....ஆனா நீங்க எல்லோரும்....?///

    vera Vazhi.. etthanayo parthachu ithaium pakkarom

    //நட்பை ஆதரிக்க வேண்டியதுதான்...(ஆனால் கண்ணை மூடிக்கொண்டு அல்ல ) ///

    repeatttu

    ReplyDelete
  11. LK...

    ரொம்ப லேட்டா எழுதியதுக்கு நன்றியா...?? :))

    ReplyDelete
  12. சே.குமார்...

    ஒரு ஆதங்கம் தான் வார்த்தையாக வந்து இருக்கிறது... நன்றி

    ReplyDelete
  13. @தேவா

    உங்கள் கருத்து சரிதான். ஆனால் , நாம் எத்தகைய வாசகர்களுக்கு எழுதுகிறோம் என்பது முக்கியம். அனைவரும் எல்லவற்றையும் புரிந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது . அவரவர் புரிதலுக்கு ஏற்ப்பவே அவரவரின் கருத்துக்கள் இருக்கும். வாசகர்கள்தான் முக்கியம். அவர்களின் புரிதலுக்கு ஏற்றவாறே எழுதுவர்களின் எழுத்து இருத்தல் முக்கியம்

    ReplyDelete
  14. சௌந்தர்...

    சவால் எல்லாம் விட கூடாது....தொண்டர்கள் யாரும் கிடைக்கலைனாலும் தனியா நின்னாவது கட்சி தொடங்காம விட மாட்டேன்.....

    ReplyDelete
  15. எப்பவும் போல நல்லாயிருக்கு அக்கா பதிவு, உங்கள் குட்டி செல்லம் எப்படி இருக்கா

    ReplyDelete
  16. சௌந்தர்...

    //கோமாளி செல்வா உன்னைத்தான் சொல்றாங்க.....//

    நான் எங்க சொன்னேன்....?? எதுக்கு இந்த கெட்ட எண்ணம்.... எங்களுக்குள் இருக்கும் பாசமலரை கசக்கிடாதிங்க சௌந்தர் ஆமா சொல்லிட்டேன்....

    be careful....

    ReplyDelete
  17. ///நான் எங்க சொன்னேன்....?? எதுக்கு இந்த கெட்ட எண்ணம்.... எங்களுக்குள் இருக்கும் பாசமலரை கசக்கிடாதிங்க சௌந்தர் ஆமா சொல்லிட்டேன்....////

    @ சௌந்தர்
    ஹா ஹா ஹா .. வச்சோம்ல ஆப்பு .. அக்கா ஆரம்பிக்கப் போற புதிய கட்சிக்கு நான் ஆதரவு தரேன் ..!

    ReplyDelete
  18. வெறும்பய...

    //கடைசியாக நீங்கள் கூறியது மிகவும் அருமையாக இருந்தது..//

    நன்றி....

    ReplyDelete
  19. ஜில்தண்ணி-யோகேஷ்...

    //வாழ்த்துக்கள் சகோ//

    வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  20. ப.செல்வகுமார்...

    //அக்கா என்னயவா சொல்றீங்க ..??//

    என்னை சந்தேகபடலாமா செல்வா...? சௌந்தர் அதுக்கு என்னை 'ஆமாம்' என்று சொல்ல சொல்லி ஒரே டார்ச்சர்.... !!

    ReplyDelete
  21. LK @ நான் சொல்லியிறுக்கும் கருத்துக்கான பதிலா இல்லை என் பதிவுகள் பற்றிய கண்ணோட்டமா? ஹா...ஹா..ஹா...

    ஏன்னா நான் கெளசல்யாவுக்கு சொன்ன கமெண்டுக்கும் உங்க பதில் மேட்ச் ஆகலையே அதான் கேட்டேன்.....பாஸ்!

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

    ReplyDelete
  22. dheva...


    ஆமாம் எனக்கும் அந்த ஆதங்கம் உண்டு...ஏதோ கருத்து சொல்லணும் என்று சொல்வதை என்னவென்று சொல்வது... ? இதைவிட கொடுமை என்னவென்றால், ஏற்கனவே இருக்கும் கருத்தை அப்படியே copy, paste செய்வதும் வேற நடக்கிறது....!!


    சீக்கிரம் உங்கள் பதிவை எதிர் பார்கிறேன்....நன்றி

    ReplyDelete
  23. கோவை குமரன்...

    வாழ்த்துக்கு நன்றி சதீஷ்........ :))

    ReplyDelete
  24. LK...

    //vera Vazhi.. etthanayo parthachu ithaium pakkarom //

    ம்...அவ்வளவு கொடுமையாகவா எழுதுகிறேன்....?! :))

    ReplyDelete
  25. சசிகுமார்...

    நன்றி சசி. ரொம்ப நல்லா இருக்கிறார்..

    ReplyDelete
  26. LK@ ஓ...புரிஞ்சுடுச்சும் பாஸ்....! கட்டுரை படிகிறவங்க அவுங்க புரிதலுக்கு ஏற்றவாறுதான் கமெண்ட் போடுவாங்கன்னு சொல்லியிருக்கிங்க...


    I got ur point........! yes....that too correct.....! I aceept it.!

    ReplyDelete
  27. தோழி எல்லா பதிலும் மிகவும் அருமை .

    ( தம்பி சௌந்தர் சொன்னதுக்காக பயந்து இந்த பதிவை எழுதவில்லை....அந்த கட்சியில் இருந்து என்னை நீக்கிவிட்டாலும் கவலையில்லை....புது கட்சி தொடங்கிவிடுவேன் என்று இதன் மூலம் சொல்லி கொள்கிறேன்....!!)" இது சூப்பர்

    ReplyDelete
  28. ப.செல்வகுமார்...

    //அக்கா ஆரம்பிக்கப் போற புதிய கட்சிக்கு நான் ஆதரவு தரேன் ..!//

    சௌந்தர் இப்ப புரிஞ்சு இருக்குமே... நான் தனி ஆள் இல்ல....ம்...!!

    செல்வா நன்றிபா

    ReplyDelete
  29. //ஆமாம் எனக்கும் அந்த ஆதங்கம் உண்டு...ஏதோ கருத்து சொல்லணும் என்று சொல்வதை என்னவென்று சொல்வது... ? இதைவிட கொடுமை என்னவென்றால், ஏற்கனவே இருக்கும் கருத்தை அப்படியே copy, paste செய்வதும் வேற நடக்கிறது....!!//

    அவங்க சொல்ல வந்ததை முன்பே யாராவது சொல்லி இருக்கலாம்..:))
    அதனாலே இருக்கலாம்னு நினைக்கிறேன்..
    :)))

    ReplyDelete
  30. ஹா ஹா ஹா .. வச்சோம்ல ஆப்பு .. அக்கா ஆரம்பிக்கப் போற புதிய கட்சிக்கு நான் ஆதரவு தரேன் ..!//

    @@@செல்வா கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதால் மொக்க பேரவை தலைவர் பதவி பறிக்க படுகிறது....

    ReplyDelete
  31. dheva...

    LK@

    //ஏன்னா நான் கெளசல்யாவுக்கு சொன்ன கமெண்டுக்கும் உங்க பதில் மேட்ச் ஆகலையே அதான் கேட்டேன்.....பாஸ்!//

    இங்கே என்ன நடக்கிறது...? நீங்க இரண்டு பெரும் ஏதோ தனி ரூட்டில போற மாதிரி இருக்கு.......

    ReplyDelete
  32. //"உரிமையாக கடிந்து கொள்ளவும்,
    தவறுகளை சுட்டி காட்டவும்,
    பொழுது போக்கிற்காக பேசாமல்
    கருத்துகளை பரிமாறி கொள்ள பேசுகிற,
    முகவரியும் முகமும் தேவை இல்லை
    'அகம் ஒன்றே அகமகிழ்ச்சி' என்று
    பிடிவாதம் பிடித்து நட்பை வளர்த்து
    கொண்டு இருக்கிற, உங்கள் அனைவரின்
    நட்பிற்கு ஈடாக வேறு ஒன்று
    இந்த உலகில் இருப்பதாக
    எனக்கு தெரியவில்லை..."//

    really nice,please ignore the previous comments, sorry for that

    ReplyDelete
  33. dheva...

    //I got ur point........! yes....that too correct.....! I aceept it.!//

    அப்பாடி...நீங்களே எழுதி நீங்களே அழிச்சீடீங்களா....குட். எனக்கு வேலை இல்லாம பண்ணிடீங்க.... :)))

    ReplyDelete
  34. sandhya...

    //இது சூப்பர்//

    சௌந்தர் 'note this point....'

    நன்றி தோழி ...

    ReplyDelete
  35. கோவை குமரன்...

    //அவங்க சொல்ல வந்ததை முன்பே யாராவது சொல்லி இருக்கலாம்..:))
    அதனாலே இருக்கலாம்னு நினைக்கிறேன்..//

    நீங்க தானா அது.....?!! உங்களைத்தான் எல்லோரும் தேடிட்டு இருக்கிறாங்க....

    ReplyDelete
  36. சௌந்தர்...

    //@@@செல்வா கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தியதால் மொக்க பேரவை தலைவர் பதவி பறிக்க படுகிறது....//

    சின்ன விசயத்துக்கு எல்லாம் பதவியை பிடுங்கிற இந்த ப மு க வில் இருப்பதை விட கௌரமாக வெளி ஏறுவது நல்லது...

    ப மு க வில் இருப்பவர்கள் இந்த நேரத்திலாவது யோசிங்க...

    ReplyDelete
  37. //நீங்க தானா அது.....?!! உங்களைத்தான் எல்லோரும் தேடிட்டு இருக்கிறாங்க....//

    ஓ.. இப்ப தான் உங்களுக்கு தெரியுமா..??
    அவங்களும் தேட ஆரம்பிச்சிட்டாங்களா....????????
    கஷ்டம் தான்..

    ReplyDelete
  38. நீங்கள் பதிவு எழுத வந்ததை பற்றி தெரிந்து கொண்டேன். நன்றாக இருந்தது

    - சௌம்யா

    ReplyDelete
  39. கோவை குமரன்...

    //really nice,please ignore the previous comments, sorry for that//

    நீங்க தவறா எதுவும் சொல்லவில்லையே ... :))

    ReplyDelete
  40. திவ்யாம்மா...

    சந்தோசம் தோழி...நன்றி

    ReplyDelete
  41. //நீங்க தவறா எதுவும் சொல்லவில்லையே ... :))//

    நீங்க சொன்னால் சரிதானுங்க..

    ReplyDelete
  42. நன்று தோழி.கேள்வி 10 திற்கு பதில் ரொம்ப பிடிச்சிருக்கு.நானும் சில நேரம் இப்படி நினைத்ததுண்டு.

    ReplyDelete
  43. இந்த பதிவின் வாயிலாக உங்களை முழுமையாக அறிந்துகொண்டதில் மகிழ்ச்சி . கேள்விகள் சிலவற்றிற்கு வெளிப்படையான பதில்கள் ரசிக்க வைக்கிறது வாழ்த்துக்கள் . பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  44. கேள்விகளும் தந்த பதில்களும் மிகவும் சிந்தித்து கவனமாக் கையாண்டு இருக்கிறீர்கள். பாராடுக்கள் உங்கள் திறமைக்கும் முயற்சிக்கும். மேலும் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  45. asiya omar...

    //நானும் சில நேரம் இப்படி நினைத்ததுண்டு.//

    ஒன்றாக நினைத்திருகிறோம்....அதனால் ஸ்வீட் கொடுங்க தோழி....

    ReplyDelete
  46. பனித்துளி சங்கர்...

    //இந்த பதிவின் வாயிலாக உங்களை முழுமையாக அறிந்துகொண்டதில் மகிழ்ச்சி . கேள்விகள் சிலவற்றிற்கு வெளிப்படையான பதில்கள் ரசிக்க வைக்கிறது வாழ்த்துக்கள் .//

    நானும் மகிழ்ச்சி அடைகிறேன் நண்பரே...

    வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  47. நிலாமதி...

    //கேள்விகளும் தந்த பதில்களும் மிகவும் சிந்தித்து கவனமாக் கையாண்டு இருக்கிறீர்கள். பாராடுக்கள் உங்கள் திறமைக்கும் முயற்சிக்கும். //

    விரும்பி படித்ததுக்கு சந்தோஷ படுகிறேன் தோழி...உங்கள் பாராட்டுக்கு நன்றி தோழி..

    ReplyDelete
  48. அருமையான பதில்கள் கௌசல்யா.. ரொம்ப நல்லாருக்கு..

    ReplyDelete
  49. உங்களின் பதில் சரியாக..அளவாக இருக்கிறது... யோசிக்க வேண்டியவையும் இருகின்றன...

    நான் உங்களிடம் ஒரு உதவி கேட்டு இருக்கிறேன்..நீங்கள் பார்க்கவில்லை என நினைக்கிறேன்..பார்த்தால் உதவலாம்....

    (எனக்கு நீங்கள் போட்ட பின்னுட்டத்தில்)

    ReplyDelete
  50. மனம் ஒளிச்சு வைக்காத பதில்கள் கௌசி.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  51. மிகவும் அருமையான பதில்கள் தோழி..அதிலும் பதிவுலகத்திற்கு நீங்க சொன்ன விஷயம் பலே.....சரி கட்சி துடங்கியதும் ஒரு கடுதாசி போடுங்க தாயி நானும் வந்து செந்துக்கறேன்..

    ReplyDelete
  52. //நட்பை ஆதரிக்க வேண்டியதுதான்...(ஆனால் கண்ணை மூடிக்கொண்டு அல்ல )//

    கண்ணை மூடிக்கொண்டு வக்களிபோருக்கு ஒரு சவுக்கடி. (நான் நண்பர்களை மிரட்டி ஓட்டு போடா சொல்ற கேஸ்....)

    //"தேவையான நேரம் கொடுக்க படாத அங்கீகாரம், இருட்டு அறையில்.... மெழுகுவர்த்தி இருந்தும் ஏற்றி வைக்க படாமல் இருப்பதை போன்றது...."//

    சபாஷ். ஓட்டு போட்டேன். உங்க 10வது பதிலுக்காக மட்டும்.

    //தம்பி சௌந்தர் சொன்னதுக்காக பயந்து இந்த பதிவை எழுதவில்லை....அந்த கட்சியில் இருந்து என்னை நீக்கிவிட்டாலும் கவலையில்லை....புது கட்சி தொடங்கிவிடுவேன் என்று இதன் மூலம் சொல்லி கொள்கிறேன்...//

    ஹி ஹி ஹி... எங்க கட்சிக்கு எதிர்கட்சி...

    ReplyDelete
  53. starjan (ஸ்டார்ஜன்)...

    நண்பருக்கு நன்றி.

    ReplyDelete
  54. ganesh...


    நன்றி சகோதரா...

    ReplyDelete
  55. ஹேமா...

    உங்கள் புரிதலுக்கு நன்றி தோழி.

    ReplyDelete
  56. Gayathri...

    //சரி கட்சி துடங்கியதும் ஒரு கடுதாசி போடுங்க தாயி நானும் வந்து செந்துக்கறேன்..//

    என் மேல் எவ்வளவு நம்பிக்கை தோழி....!? கண்டிப்பாக உங்களுக்கு முக்கிய பதவி உண்டுப்பா....!!

    சௌந்தர் எங்கே... note this also......

    ReplyDelete
  57. TERROR PANDIYAN(VAS)

    //கண்ணை மூடிக்கொண்டு வக்களிபோருக்கு ஒரு சவுக்கடி. (நான் நண்பர்களை மிரட்டி ஓட்டு போடா சொல்ற கேஸ்....)//

    ம்...ம்...இப்படியும் சில ஆட்கள் இருக்கிறார்கள் என்ன செய்வது ....?!! சொல்லி திருத்த முடியும் என்று எனக்கு தோணல....??!!

    //சபாஷ். ஓட்டு போட்டேன். உங்க 10வது பதிலுக்காக மட்டும். //

    ம்....ஓட்டு வாங்குவதற்காக எப்படி எல்லாம் பேச வேண்டி இருக்கிறது....

    //ஹி ஹி ஹி... எங்க கட்சிக்கு எதிர்கட்சி..//

    இது வேறயா..?!

    anyway thank u verymuch for ur first visit....

    ReplyDelete
  58. கௌஸ், அருமையா இருக்கு பதில்கள்.

    ReplyDelete
  59. //நட்புக்காக என்று மட்டும் பார்க்காமல் நல்ல பதிவுகள் எங்கே இருந்தாலும் அதை கவனித்து அவர்களையும் உங்கள் வாக்குகளாலும், பின்னூட்டத்தாலும் ஊக்கபடுத்துகள். பின்னூட்டம் எழுத நேரம் இல்லை என்றாலும் வாக்கையாவது அளித்து, அந்த பதிவு பலரை சென்று அடைய உதவுங்கள். //

    ReplyDelete
  60. அருமையா சொன்னீங்க. அதான் நீங்க சொன்னதை உங்களுக்கே கமெண்டா போட்டுட்டேன் :-))))))))

    ReplyDelete
  61. vanathy...

    நன்றி தோழி...பொறுமையாக படித்ததுக்கு.....

    ReplyDelete
  62. அமைதிசாரல்....

    //அருமையா சொன்னீங்க. அதான் நீங்க சொன்னதை உங்களுக்கே கமெண்டா போட்டுட்டேன் :-))))))))//

    ம்..ம்..இது உங்களுக்கு கொஞ்சம் ஓவரா தோணல....!!

    (பெண்களுக்கே உரியது இந்த நகைசுவை உணர்வு ....!!)

    மிகவும் ரசித்தேன். நன்றி

    ReplyDelete
  63. நல்லா எழுதி இருக்கீங்க கௌசல்யா..

    இந்த பதிவில் மிகவும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இதை சொல்லலாம்...

    //"உரிமையாக கடிந்து கொள்ளவும்,
    தவறுகளை சுட்டி காட்டவும்,
    பொழுது போக்கிற்காக பேசாமல்
    கருத்துகளை பரிமாறி கொள்ள பேசுகிற,
    முகவரியும் முகமும் தேவை இல்லை
    'அகம் ஒன்றே அகமகிழ்ச்சி' என்று
    பிடிவாதம் பிடித்து நட்பை வளர்த்து
    கொண்டு இருக்கிற, உங்கள் அனைவரின்
    நட்பிற்கு ஈடாக வேறு ஒன்று
    இந்த உலகில் இருப்பதாக
    எனக்கு தெரியவில்லை..."//

    சூப்பர்........

    நிறைய எழுதுங்கள்...

    ReplyDelete
  64. நல்லா இருக்கு சுய பேட்டி.

    you grow fast kousalya. it is very plesure. keep grow. try some facebook too. if you intrest.

    how are days?

    regards.

    ReplyDelete
  65. http://asiyaomar.blogspot.com/2010/08/blog-post_8967.html
    விருது பெற்றுக்கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.

    ReplyDelete
  66. @kousalya
    //(பெண்களுக்கே உரியது இந்த நகைசுவை உணர்வு ....!!)//

    என்ன ஒரு பெண்னியவாதம்...நான் இதை வண்மையாக கண்டிக்கிரேன்.. அப்படியென்ட்ரல் ஆண்கலுக்கு நகைச்சுவை உணர்வு இல்லையா?? ஆண் பதிவர்கலே பொங்கி எழுங்கல். நாலை பதிவுலகம் ஸ்ட்ரைக்....

    (வாசகர்கள் ஒரு நாள் நிம்மதியா இருக்கட்டும்)

    ReplyDelete
  67. R.Gopi...


    உங்களின் புரிதலுக்கு மிகவும் நன்றி....

    ReplyDelete
  68. adhiran...

    //you grow fast kousalya. it is very plesure. keep grow. try some facebook too. if you intrest. //

    உங்களின் வருகைக்கு நன்றி மகேந்திரன்....என் வளர்ச்சிக்கு தூண்டுகோலாய் இருந்தது உங்களின் கருத்துக்களே...உங்களின் வாழ்த்துக்கு மகிழ்கிறேன்...

    :))

    ReplyDelete
  69. TERROR PANDIYAN(VAS)...

    //என்ன ஒரு பெண்னியவாதம்...நான் இதை வண்மையாக கண்டிக்கிரேன்.. அப்படியென்ட்ரல் ஆண்கலுக்கு நகைச்சுவை உணர்வு இல்லையா?? ஆண் பதிவர்கலே பொங்கி எழுங்கல். நாலை பதிவுலகம் ஸ்ட்ரைக்.... //

    என்னை பெண்ணியவாதி என்று நீங்கள் ஒருவர் சொன்னால் ஒருவரும் நம்ப மாட்டார்கள் நண்பரே....என்னை பதிவுலகம் நன்கு அறியும்.....என்னதான் சவுண்ட் விட்டாலும் கதைக்கு ஆகாது..... பின்னூட்டத்தையும் தொடர்கிற உங்களுக்கு என் வாழ்த்துக்கள் நண்பரே...

    :)))

    ReplyDelete
  70. வில்சன்...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.....

    ReplyDelete
  71. @Kousalya
    //என்னை பெண்ணியவாதி என்று நீங்கள் ஒருவர் சொன்னால் ஒருவரும் நம்ப மாட்டார்கள் நண்பரே....என்னை பதிவுலகம் நன்கு அறியும்.....என்னதான் சவுண்ட் விட்டாலும் கதைக்கு ஆகாது..... பின்னூட்டத்தையும் தொடர்கிற உங்களுக்கு என் வாழ்த்துக்கள் நண்பரே...//

    அட... என்ன மேடம் நீங்க இத போய் seriousa எடுத்துடிங்க.. நாங்க எல்லாம் டம்மி பீஸ் சும்மா இப்படி கலாய்போம்.... தவறு இருந்தால் மன்னிக்க :-)

    ReplyDelete
  72. TERRAR PANDIYAN (VAS)

    hello friend cooooool....
    nan seriousa edukkalaiye....summathan nanun sonnen....o.k :))

    we are friends o.k

    //பின்னூட்டத்தையும் தொடர்கிற உங்களுக்கு என் வாழ்த்துக்கள் நண்பரே...//

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...