புதன், ஆகஸ்ட் 11

11:24 AM
46

எனது இந்த கண்டனம் பதிவுலகில் மத உணர்வுகளை  கண்டபடி கூறுபோட்டு விளாசி தள்ளும் சிலருக்காக.... 

மதம் என்ற வார்த்தை வேண்டாம்...சமயம் என்றே சொல்லுங்க என்றே சிலர் கூறுவர்.
எனக்கு மதம் என்பதே சரியாக தோன்றுகிறது. கடவுள் இல்லை என்று சொல்பவர்களுக்கு நாத்திக மதமும், இருக்கிறது என்று வாதம் புரிபவர்களுக்கு ஆன்மீக மதமும் பிடித்து இருக்கிறது என்பதால் மதம் என்று சொல்வது ரொம்ப சரியே.

மதம் பிடித்த யானை எது சரி எது தவறு என்று உணராமல் தன் பாகனையே மிதித்து கொல்லும். அப்படியேதான் இந்த இரண்டு (நாத்தீகம், ஆன்மிகம் ) மதம்  பிடித்தவர்களும் இருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

உங்களின் கருத்துக்களை சரி என்று புரிய வைப்பதற்காக ஏன் மற்றவர்களின் நம்பிக்கையை குறை சொல்ல வேண்டும்....?? கடவுளை வைத்து மனிதனை பிரிக்காதீர்கள். அவரவர் நம்பிக்கை அவரவருக்கு.

அறியாமை

கடவுளை மறுத்தவர் என்ற உதாரணத்துக்கு எல்லோரும் கைகாட்டுவது தந்தை பெரியார் அவர்களை தான்.  அவரும் கடவுளின் பெயரால்  நடக்கும் மூடநம்பிக்கையை தான் அதிகம் சாடினார்... கடவுளையும் மூட நம்பிக்கையையும் ஒன்றாக போட்டு குழப்பி கொள்ளாதீர்கள்.

ஆதி காலத்தில் சுட்டெரிக்கும் சூரியனை பார்த்து மிரண்டவர்கள் அதை சக்தி , கடவுள் என்று வழிபட்டனர்.  நெருப்பை, மரத்தை, கல்லை என்று விருப்பம்போல் வணங்கினர். ஆனால் இன்றும் சில வழக்கங்கள் தொடர்ந்து கொண்டு இருப்பது தான் வேதனை.  (ரோட்டின் ஓரத்தில் இருக்கும் மைல்கல்லையும் வணங்கும் அளவில் தான் அறியாமை இருக்கிறது, பாதி புதைந்த அளவில் இருக்கும் ஒரு ஆட்டு கல்லில் கூட மஞ்சளையும் குங்குமத்தையும் வைத்து ஒரு மஞ்சள்  துணியை சுற்றி வைத்து இருப்பதையும் பார்த்து இருக்கிறேன்.)

எங்கள் ஊருக்கு பக்கத்தில் ஒதுக்கு புறமாய் இருக்கும் ஒரு கல் குவாரியில் இருக்கும் ஒரு வேப்பமரத்தில் ஒரு நாள் வெள்ளை நிறத்தில் திரவம் சுரந்து இருக்கிறது.  இதை கேள்வி பட்ட கொஞ்ச நேரத்தில் அந்த காட்டு பகுதி முழுக்க மக்கள் கூட்டம், அந்த மரத்தை மஞ்சள் , குங்குமத்தால் அலங்கரித்து ஒரே வேண்டுதல்கள் தான். 

என்னதான்  வேண்டும் இந்த மக்களுக்கு ....?? எதை தேடி அங்கே ஓடினார்கள் ....?? அங்கே போனதால் எதை அடைந்தார்கள்....?? ஒன்றுமே புரியவில்லை....??!!

அவர்களின் பக்தி பரவசத்தின் முன் விவரம் தெரிந்த  ஒருத்தர் " இது கடவுள் இல்லைங்க, மரத்தினுள் நடக்கும் சில வேதிவினை மாற்றத்தால் இந்த வெண்மை திரவம் சுரக்கிறது , இரண்டு, மூணு நாளில் வருவது நின்றுவிடும் " என்று சொல்கிறார் என்று வைத்து கொள்வோம், அவ்வளவு தான் அவர் உடம்பை பதம் பார்த்து விடுவார்கள். (இப்போது பால் வருவது நின்றுவிட்டது...ஆனால் அதை சொல்லி பணம் பார்த்தவர், இன்றும் பணம் பார்த்து கொண்டுதான் இருக்கிறார். )
    
இது மூடத்தனம், கடவுளின் பெயரால்  நடக்கும் இந்த அறியாமையை களைய தான் நாம் முற்படவேண்டுமே தவிர, கடவுளை பழிப்பது சரி இல்லை.  மதத்தை இழிவு  படுத்துவதை ஊக்குவிக்க கூடாது.

அனைத்து மதத்திலும் நம்பிக்கை , மூட நம்பிக்கை என்பது சரி விகிதத்தில் தான் இருக்கிறது.....இதில் மாற்று கருத்து இல்லை....  எனக்கு தெரிந்த ஒன்றை இங்கே சொல்லி இருக்கிறேன்...அவ்வளவே.
  
கடவுளை மறுப்பவர்கள், ஏன் மறுக்கிறோம் என்பதற்கு வலுவான காரணத்தை கூறி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் அதை விடுத்து தேவை அற்ற வீண் விவாதங்களை பேசி மத நம்பிக்கை உள்ளவர்களின் மன உணர்வை குத்தி கிளறி நெருப்பு மூட்டி அதில் குளிர்  காயாதீர்கள்...

கடவுளை முழு மனதுடன் விசுவாசத்துடன் தேடுபவர்களே கடவுளை உணருகிறார்கள்.  உங்களால் தேடி அடைய முடியவில்லை  என்பதற்காக அப்படி  ஒன்று இல்லை என்று ஆகிவிடுமா...?? ஒன்று நீங்கள் சரியாக தேடவில்லை அல்லது தேட முயற்சி எடுக்க வில்லை என்று தானே அர்த்தம்.......பழம் கைக்கு எட்டவில்லை  என்பதற்காக இந்த பழம் புளிக்கும் என்று குறை சொல்லி நழுவும் நரியை போல் இருக்காதீர்கள்.....

கடவுள் என்ன செய்வார்...??

அன்பை போதித்த புத்தரை வணங்குகிற இலங்கையில் தான் மனித உயிர்கள் ஈவு இரக்கம் இன்றி பந்தாடபடுகின்றன....என்பதற்காக புத்தரை பழிக்க முடியுமா? பிற உயிர்களிடத்தும் சகோதர  பாசம் காட்டுங்கள் என்று வலியுறித்திய முகமது நபி அவர்களை பின்பற்றுகிற பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தான் தீவிரவாதம் தலைவிரித்து ஆடுகிறது என்பதற்காக அவரை பழிக்க முடியுமா ?? பைபிளை படிக்கிறவர்கள் தான் ஈரானில் பிற மதத்தவர்களை கொன்று குவித்தார்கள்....நம்மையும் அடிமைபடுத்தி உயிர்களை கொன்று வதைத்தார்கள். அவர்களை இப்படி செய்ய சொல்லி ஏசுநாதர் எங்கே சொன்னார்....??

இப்படி மனித உருவில்  மிருகங்கள் செய்யும் கொடுமைகளுக்கு கடவுளை குறை சொல்வது எவ்வளவு மடத்தனமோ அந்த அளவு மடத்தனம் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களை பழிப்பதும்...

'கடவுள் பெயரால்' அல்லது 'அந்த பெயரை வைத்துகொண்டு வியாபாரம் செய்பவர்களை',  மனிதனை 'கடவுள்' என்று சொல்லி கொண்டு அலைபவர்களை அலட்சிய படுத்துங்கள், மூட நம்பிக்கையில் உழலுபவர்களை அவர்களுக்கு புரியும் படி எடுத்து சொல்லுங்கள்.  மனிதத்தை போதியுங்கள் ...சக மனிதர்களை அன்பால் வசபடுத்த பாருங்கள். மூட நம்பிக்கையை சுட்டி காட்டுகிறேன் என்று மனிதர்களின் நம்பிக்கையை எள்ளி நகையாடாதீர்கள். 

எத்தனை பெரியார்   வந்தாலும் உங்களை திருத்த முடியாது என்று வீராவேசமா வசனம் பேசின விவேக், வாஸ்து படி தன் வீட்டை மாற்றியமைத்தார் என்பது உங்களுக்கு தெரியுமா? எல்லாம் அறியாமையால் வரும் பயம் தான் காரணம்...கடவுள் மேல் இருக்கும் பக்தி இல்லை. 

நம்மை மீறிய ஒரு சக்தி நம்மை வழி நடத்து கிறது என்று எண்ணி பாருங்கள்..நமக்குள் ஒரு தைரியம் வரும்.....!  அச்சம் விலகும்...! வாழும் நாட்கள் அர்த்தமானதாக தோணும்....! அந்த சக்தி உங்களை  தீய வழியில் போக சொல்லி தூண்டாது.....! பிறருக்கு உதவக்கூடிய எண்ணத்தை கொடுக்கும்....! அந்த சக்தி  அன்பைத்தான் சொல்லும்.... !  அந்த சக்திக்கு என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள்....!! உங்கள் விருப்பம்.  

தவிரவும் கடவுளை தேடி எங்கேயும்  போக வேண்டாம்....உங்களுக்குள் தேடுங்கள்... கண்டடைவீர்கள்....பிற மனிதனிடம் நீங்கள் அன்பை பரிமாறும் போதே அந்த இடத்தில் கடவுள் நிற்பதை உணரமுடியும்...அதுதான் சிவன், இயேசு, அல்லா,புத்தர்......
கடவுள் இருக்கிறார் , இல்லை என்று வாதிடுவதை விட கண்முன் இருக்கும் மனிதனை அன்பால் அனைத்து  கொள்ளுங்கள்....உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்....அர்த்தமற்ற வீண் விவாதம் புரிந்து உங்களை நீங்களே தாழ்த்தி கொள்ளாதீர்கள்.....

கடைசியாக ஒன்று நம் அன்னை தெரேஸா அவர்கள் முதலில் இந்தியாவிற்கு கிறிஸ்துவத்தை எடுத்து  கூற  தான் வந்தார்கள்....ஆனால் உண்மையில் நடந்தது என்ன  ..?!!  அன்பை கையில் எடுத்தார்கள்....சக மனிதனை என்று சொல்வதை விட வாழ்வின் இறுதி நாட்களில் ஆதரவற்று தவித்து கொண்டு  இருந்தவர்களை தன் கரத்தால் அணைத்து அன்பால் உதவினார். நம்மிடையே வாழ்ந்த ஒரு தெய்வம்  அவர்கள்....! அந்த மக்களிடையே தான் தன் கடவுளை அவர் கண்டார்.....! அர்த்தத்துடன் வாழ்ந்து முடித்தார்....! 

ஆனால் நாம் வறட்டு விவாதம்  செய்து கொண்டு வீணாய் போய் கொண்டு இருக்கிறோம்.....உணர்வடையுங்கள் மக்களே...!!  
         
Tweet

46 கருத்துகள்:

 1. கடவுள் பெயரால்' அல்லது 'அந்த பெயரை வைத்துகொண்டு வியாபாரம் செய்பவர்களை', மனிதனை 'கடவுள்' என்று சொல்லி கொண்டு அலைபவர்களை அலட்சிய படுத்துங்கள்,//


  அனைத்தும் சரியாகவே இருக்கிறது....


  @@@lk மரம் நிழல் தருகிறது என்று வணகினால் சரி கடவுள் என்று சொல்லி பணம் பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்...

  பதிலளிநீக்கு
 2. // நாம் வறட்டு விவாதம் செய்து கொண்டு வீணாய் போய் கொண்டு இருக்கிறோம்.....உணர்வடையுங்கள் மக்களே...!! //

  UNMAITHAN...

  UNGAL KOPAMUM ATHANGAMUM SARIYEY.

  பதிலளிநீக்கு
 3. இரண்டு தரப்பினரையும் பற்றி சரியாக சொல்லி இருக்கிங்க.....

  பதிலளிநீக்கு
 4. அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலர்
  அன்பும் சிவமும் ஒன்றாவது யாரும் அறிகிலர்
  அன்பும் சிவமும் ஒன்றாய் அறிந்தபின்
  அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே....!


  கட்டுரையின் சாரம் இதுவே. விளங்கிக்கொண்டேன் தோழி வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. இந்தப் பதிவிற்கும் , மற்ற பதிவர்கள் எழுதுவற்கும் எந்த வித வித்யாசமும் இல்லை., எல்லா மதத்திலும் மூட நம்பிக்கைகள் உண்டு,. அனால் எல்லோரும் இந்துக்களை சீண்டுவதை மட்டுமே வேலையாக வைத்துள்ளனர். நீங்களும் அதற்க்கு விதிவிலக்கில்லை.

  வேப்பமரம் , மாரியம்மனின் வடிவமாக மக்களால் வழிபடப் படுவது. பால் வடிவது வேணுமானாலும் மூடனம்பிகயாக இருக்கலாம் , மற்றபாடி மரத்தை வழிபடுவது எனக்குத் தெரிந்து மூடநம்பிக்கை இல்லை. கண்டனம் என்று வரும்பொழுது எல்லா மதத்தில் இருப்பவற்றையும் சாடுங்கள். அப்படி மற்ற மதத்தில் இருக்கும் மூட பழக்கங்கள் தெரியாவிட்டால் பொதுவாக எழுதுங்கள் எந்த மதத்தையும் குறிப்பிடாமல் ...

  பதிலளிநீக்கு
 6. //'கடவுள் பெயரால்' அல்லது 'அந்த பெயரை வைத்துகொண்டு வியாபாரம் செய்பவர்களை', மனிதனை 'கடவுள்' என்று சொல்லி கொண்டு அலைபவர்களை அலட்சிய படுத்துங்கள்,//

  இது நல்லருக்கு அம்மனி...

  பதிலளிநீக்கு
 7. இது என்னமோ சௌந்தரோட "நானும் கடவுளும்" பதிவை யும் அதன் பின்னூட்டங்களையும் படித்து , வந்த கண்டனம் என்று நினைகிறேன்.

  பதிலளிநீக்கு
 8. சௌந்தர்...

  புரிதலுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 9. //அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலர்
  அன்பும் சிவமும் ஒன்றாவது யாரும் அறிகிலர்
  அன்பும் சிவமும் ஒன்றாய் அறிந்தபின்
  அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே....!//

  ' அன்பே யாவும் ' அறியாதவர்... ??!!

  புரிதலுக்கு நன்றி தேவா...
  .

  பதிலளிநீக்கு
 10. பெயரில்லா7:47 PM, ஆகஸ்ட் 11, 2010

  avaravar nambikkai avaravargalukku

  பதிலளிநீக்கு
 11. எனக்கு புரிந்த வரை அன்பே தெய்வம்னு
  நீங்க சொல்ற மாதிறி புரியுது...

  நல்லா இருக்குங்க.. வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 12. LK...

  ///அனைத்து மதத்திலும் நம்பிக்கை , மூட நம்பிக்கை என்பது சரி விகிதத்தில் தான் இருக்கிறது.....இதில் மாற்று கருத்து இல்லை.... எனக்கு தெரிந்த ஒன்றை இங்கே சொல்லி இருக்கிறேன்...அவ்வளவே.///

  நான் எழுதிய பதிவிலேயே உங்கள் கேள்விக்கு பதில் இருக்கிறதே.... உதாரணத்துக்கு ஒன்று என்றுதான் சொன்னேனே தவிர இந்து மதத்தை மட்டும் என்று குறிப்பிட்டு சொல்லவில்லை... முக்கியமாக நான் மதங்களை வேறு படுத்தி பார்க்கவில்லை...அதில் இருக்கும் மூட நம்பிக்கைகளை களையுங்கள் என்று தான் வலியுறுத்தி சொல்கிறேன்.

  வெளிப்படையான கருத்துக்கு மகிழ்கிறேன் கார்த்திக்.

  பதிலளிநீக்கு
 13. சசி குமார்...

  நன்றி சசி.

  பதிலளிநீக்கு
 14. அருண் பிரசாத்...

  நன்றி நண்பரே. :))

  பதிலளிநீக்கு
 15. Jey...

  //இது நல்லருக்கு அம்மனி...//

  புரிதலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 16. Jay...

  அப்படின்னு சொல்லமுடியாது...பல பதிவுகளையும் படித்து அதன் காரணமாய் ஏற்பட்ட ஒரு ஆதங்கம் தான். கருத்துகளை விவாதிக்காமல் அதை சொல்பவர்களை விமர்சரித்து விதண்டாவாதம் செய்வது எந்த விதத்தில் சரி ..? அவ்வாறு செய்யும் போது அங்கே நல்ல கருத்துகள் வெளி வராமல் போய்விடுகிறது.

  நன்றி நண்பரே....

  பதிலளிநீக்கு
 17. //கடவுளை தேடி எங்கேயும் போக வேண்டாம்....உங்களுக்குள் தேடுங்கள்... கண்டடைவீர்கள்....பிற மனிதனிடம் நீங்கள் அன்பை பரிமாறும் போதே அந்த இடத்தில் கடவுள் நிற்பதை உணரமுடியும்...அதுதான் சிவன், இயேசு, அல்லா,புத்தர்......
  கடவுள் இருக்கிறார் , இல்லை என்று வாதிடுவதை விட கண்முன் இருக்கும் மனிதனை அன்பால் அனைத்து கொள்ளுங்கள்....உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும்....அர்த்தமற்ற வீண் விவாதம் புரிந்து உங்களை நீங்களே தாழ்த்தி கொள்ளாதீர்கள்....//

  நல்ல பகிர்வு ,மதத்தின் மீதும்,.. இந்த சமுதாயத்தின்.. மீதும் நீங்கள் கொண்டிருக்கும் நியாயமான அக்கறை உங்களின் எழுத்தில் தெளிவாக தெரிவித்திருகிரீர்கள் ,வாழ்த்துக்கள் ,.. உங்களின் சமுதாய விழிப்புணர்ச்சி பரவட்டும் .....

  பதிலளிநீக்கு
 18. கௌசல்யா,

  படைத்தவனை விடுத்துப் படைப்பாளியைத் தாக்கும் பழக்கம் நீ....ண்ட வருடப் பழக்கம். உங்கள் கண்டனங்களோடு எனதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

  ஸ்ரீ....

  பதிலளிநீக்கு
 19. /////என்னதான் வேண்டும் இந்த மக்களுக்கு ....?? எதை தேடி அங்கே ஓடினார்கள் ....?? அங்கே போனதால் எதை அடைந்தார்கள்....?? ஒன்றுமே புரியவில்லை....??!!///////////


  இதற்கு விடை தேட அவர்கள் முயற்சித்திருந்தால் . எப்பொழுதோ மாறியிருப்பார்கள் ! சிந்திக்க தூண்டுகிறது பதிவு சிறப்பு .

  பதிலளிநீக்கு
 20. நல்ல பகிர்வு கௌசல்யா.. அருமையாக சொல்லியிருப்பதற்கு என்னுடைய பாராட்டுகள்.. சாதி மத உணர்வுகளை மதிக்காதவர்கள், பிறர் மனதை புண்படுத்துபவர்கள் அவர்களாக திருந்தினால்தான் உண்டு.. என்னதான் நாம் எடுத்து சொன்னாலும் புரியாது..

  பதிலளிநீக்கு
 21. பெயரில்லா6:11 AM, ஆகஸ்ட் 12, 2010

  கடவுள் என்ன செய்வார்...??

  அன்பை போதித்த புத்தரை வணங்குகிற இலங்கையில் தான் மனித உயிர்கள் ஈவு இரக்கம் இன்றி பந்தாடபடுகின்றன....என்பதற்காக புத்தரை பழிக்க முடியுமா? பிற உயிர்களிடத்தும் சகோதர பாசம் காட்டுங்கள் என்று வலியுறித்திய முகமது நபி அவர்களை பின்பற்றுகிற பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தான் தீவிரவாதம் தலைவிரித்து ஆடுகிறது என்பதற்காக அவரை பழிக்க முடியுமா ?? பைபிளை படிக்கிறவர்கள் தான் ஈரானில் பிற மதத்தவர்களை கொன்று குவித்தார்கள்....நம்மையும் அடிமைபடுத்தி உயிர்களை கொன்று வதைத்தார்கள். அவர்களை இப்படி செய்ய சொல்லி ஏசுநாதர் எங்கே சொன்னார்....?


  Ethuvuum seiya mudiyatha kadavul ethukku? erundhuum illamal erupathai veda. Illai endru solluvathu thappaga padavillai...

  பதிலளிநீக்கு
 22. 100% சரியான கருத்து.

  பதிலளிநீக்கு
 23. மிக மிகச்சரியாக சொல்லியிருக்கிறீகள். பலரின் மன உணர்வுகளும் இதுதான். ஆனால் சரியாக சொல்லத் தெரியாமல் போங்கடா நீங்களும் உங்க உருப்படாத விவாதமும்னு போய்கிட்டு இருக்கோம்

  பதிலளிநீக்கு
 24. திவ்யாம்மா...

  //avaravar nambikkai avaravargalukku//

  ஆமாம். அப்படியே தான்...

  பதிலளிநீக்கு
 25. கோவை குமரன்...

  //எனக்கு புரிந்த வரை அன்பே தெய்வம்னு
  நீங்க சொல்ற மாதிறி புரியுது...//

  புரிஞ்சா சரிதான். நன்றி.

  பதிலளிநீக்கு
 26. jothi...

  //வாழ்த்துக்கள் ,.. உங்களின் சமுதாய விழிப்புணர்ச்சி பரவட்டும் .....//

  உங்களின் புரிதலுக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே.

  பதிலளிநீக்கு
 27. ஸ்ரீ...

  //படைத்தவனை விடுத்துப் படைப்பாளியைத் தாக்கும் பழக்கம் நீ....ண்ட வருடப் பழக்கம். உங்கள் கண்டனங்களோடு எனதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.//

  என் மொத்த பதிவினை ஒரே வார்த்தையில் அழகாய் சொல்லிவிட்டீர்கள்....!!

  இனியாவது புரிந்து கொள்ளட்டும் , புரியாதவர்கள்....!!

  நன்றி. :))

  பதிலளிநீக்கு
 28. பனித்துளி சங்கர்...

  //இதற்கு விடை தேட அவர்கள் முயற்சித்திருந்தால் . எப்பொழுதோ மாறியிருப்பார்கள் ! //

  விடை தேட ஏன் முயலவில்லை....??

  இதற்கும் ஒரு பதில் இருக்கிறது.....

  " இச்சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டு விடகூடாது என்ற பயத்தின் காரணமாகவே அதன் ஆதிக்கத்தில் இருந்து விடுபடாமல் , வாழ்க்கைக்கு ஒவ்வாத பல மூட செயல்களை மனிதர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள் "

  :)

  பதிலளிநீக்கு
 29. Starjan(ஸ்டார்ஜன்)...


  //சாதி மத உணர்வுகளை மதிக்காதவர்கள், பிறர் மனதை புண்படுத்துபவர்கள் அவர்களாக திருந்தினால்தான் உண்டு.. //


  திருந்த கூடாது என்ற பிடிவாததில் இருப்பவர்களை திருத்துவதுதான் சிரமம் எல்லோரையும் இல்லை...

  சிலர் சொன்னால் எடுத்து கொள்வார்கள்...

  மற்றவர்கள் தூங்குபவர்களை போல நடிப்பவர்கள், எழுப்புவது என்பது.....??!!


  உங்களின் புரிதலுக்கு நன்றி நண்பரே...

  பதிலளிநீக்கு
 30. Anonymous...

  //Ethuvuum seiya mudiyatha kadavul ethukku? //

  அப்புறம் அவரை கத்தி எடுத்து சண்டை போட சொல்கிறீர்களா...?? சதைகள் கொண்ட இந்த பிண்டத்துக்கும், பரம்பொருளுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களிடம் எதை சொல்லியும் புரிய வைக்க முடியாது.

  நான் சொல்கிற கடவுள் என்பவர் மாயவித்தைகாரர் இல்லை...அது தெரியாத மிக நல்லவர். அவ்வளவே.

  பெயரை சொல்லி கூட உங்களை வெளிபடுத்த முடியாத அளவிற்கே உங்களின் ஞானம் இருக்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே.


  வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 31. DrPKandaswamyPhD...

  சார், உங்களின் வருகைக்கும் புரிதலுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 32. இபியன்...


  வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 33. kavisiva...

  //பலரின் மன உணர்வுகளும் இதுதான். ஆனால் சரியாக சொல்லத் தெரியாமல் போங்கடா நீங்களும் உங்க உருப்படாத விவாதமும்னு போய்கிட்டு இருக்கோம்//

  அப்படி ஒரேடியாக ஒதுங்கி போகாமல் தெரிந்த வரை சொல்லவேண்டும் நண்பரே, அப்போதுதான் நல்ல கருத்துகளை வெளி உலகம் தெரிந்து உணரமுடியும்... இல்லையென்றால் தவறான விவாதங்களே 'சரி' என்று ஆகிவிடக்கூடிய ஆபத்தும் இருக்கிறது.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

  பதிலளிநீக்கு
 34. கடவுள் ஏன் கல்லானான் -
  மனம் கல்லாய் போன மனிதர்களாலே

  பதிலளிநீக்கு
 35. அப்படியே செய்யுறோம் யுவர் ஆனர்!

  பதிலளிநீக்கு
 36. mooda nambikkaiyai chadalam. aanal irai nambikkaiyaalarkalai nokadikkadeer endru arumaiyaka solliyirukkireerkal.vaazhthukal-meerapriyan

  பதிலளிநீக்கு
 37. எது மூட நம்பிக்கை, எது நல்ல நம்பிக்கை என்று எதாவது லிஸ்ட் போட்டு வச்சிருக்கிங்களா?

  பதிலளிநீக்கு
 38. ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள் முட நம்பிக்கையை ஒழிக்கனும்ன்னு சொல்றதே ஒரு மூடநம்பிக்கை தான். அறிவியல் நேற்று எது சரி என்று சொன்னதை இன்று மறுத்து கூறுகிறது. நமக்கு தெரியாததை, தெரியாது என்று மனம் ஏற்பது இல்லை.நமது அறிவுக்கு எது வரை புரியுமோ அது தான் சரி.அதை வைத்து கொண்டு சொல்வது சரியற்றது. அறிவுக்கு புலப்படாத எண்ணற்றவை பிரபஞ்சத்தில் உண்டு. தெரியாததை தெரியாது என்று பார்த்தால் தெரிந்துக்கொள்ளும் துஉரம் தொலைவில் இல்லை.... நன்றி.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...