Wednesday, July 14

3:25 PM
43



   
இது எனது ஐம்பதாவது பதிவு.  

அதனால் வழக்கமான எழுது நடை  இருக்காது. (அப்படி எதிர்பார்த்து வந்தால் நான் பொறுப்பு அல்ல)  எல்லோரும் 100, 150, 200 என்று ஜெட் வேகத்தில் போகும்போது 50 கே இந்த அலட்டலா என்று நினைக்க கூடாது.  என்னை பொறுத்தவரை எண்ணிக்கையை விட சொல்லும் கருத்துகள் கூட இருக்க வேண்டும் என்பதே. (அப்ப நாங்கல்லாம் கருத்தே சொல்லலையா னு கோபபடாதீங்க, கிடைச்ச இந்த சந்தர்பத்தில சுய புராணம் கொஞ்சம் தூக்கலாதான் இருக்கும்... கண்டுகாதீங்க )


எனக்குள் இருக்கும் கொஞ்ச எழுத்து திறமையையும் கண்டு என்னை எழுத ஊக்கபடுத்திய என் அன்பான கணவருக்கு முதலில் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.  என் இந்த பதிவு வரை என்னை உற்சாக படுத்தி  கொண்டிருக்கும் என்னவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் உரித்தாகுக...
   
நான் நவம்பரில் எழுத தொடங்கினாலும் பதிவுகளை பிப்ரவரியில் இருந்துதான் தொடர்ந்து எழுதுகிறேன்.  இந்த ஆறுமாதமாக எனக்கு பலரும் தொடர்ந்து ஆதரவு கொடுத்திட்டு வருகிறீர்கள் அவங்களை எல்லாம்  இந்த இடத்தில் குறிப்பிடுவது எனது கடமை...

ஆதிரன்
எல் .கே
ஆசியா
ஜெய்லானி
ஆனந்தி
கே ஆர் பி செந்தில்
மங்குனி அமைச்சர்
விஜய்
பாலசுப்ரமணியன் tanjore
சுகந்தி
எஸ்
ராஜ் குமார்
காஞ்சி முரளி
பாலசுப்ரமணியன்
சக்தி தாஸ்
சுதந்திரா
பிரியமுடன் பிரபு
தேவா
nj மகேஷ்
சந்த்யா
ஸ்டார்ஜான்
S .மகாராஜன்
பனித்துளி சங்கர்
வாணி
சத்யா  ஸ்ரீதர்
mohammed mafas
நிலாமதி
abuanu
பிரியமுடன் வசந்த்
பாலா
உலவு.காம்
ராச ராச சோழன்
agrose agrose
குமார்
தெம்மாங்கு பாட்டு
தமிழ் பெஸ்ட்
கணேஷ்
chezhi - anbu
சௌந்தர்
யுக கோபிகா
சரண்
சசிகுமார்
தோழி
G3
melbkamal
செந்தில்
மனோ சாமிநாதன்
அப்பாவி தங்கமணி
அம்பிகா
தமிழ் குடும்பம்
தேவன்மாயம்
ஜோதி
ரமேஷ் கார்த்திகேயன்
சந்தோஷ் குமார்
சதீஷ் குமார் தங்கவேலு
S . குமார் 
 .
மிகுந்த மன நிறைவுடன் அனைவரையும் இங்கு நினைவு கூருவதில் சந்தோசம்  அடைகிறேன்.  இந்த உறவுகளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்ற பேராசை அதிகம் உண்டு.  என் எழுத்துகளையும் பொறுமையாக வாசித்து , என்னை தொடர்ந்து கொண்டிருக்கும் அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் கோடி.

முக்கியமாக நண்பர் ஆதிரன் (மகேந்திரன் ) அவர்களுக்கு நான் முதல் மரியாதையை செய்தே ஆக வேண்டும். முதன்முதலில் முகம் அறியா என்னையும் என் எழுத்துகளையும் ஊக்கபடுத்தி முதல் பின்னூட்டம் அளித்தது அவர்தான் . அவரது தமிழ் மிகவும் அருமையாக இலக்கண செறிவுடன் இருக்கும், அவர் என்னை பாராட்டியது எனக்கு பெரும்பேறுதான்.

சொந்த புலம்பல்கள்

ஆரம்ப  காலத்தில் இடுகை, பின்னூட்டம் போன்ற தமிழ் வார்த்தைகள் கூட எனக்கு புரியாத அன்னியமாக தான் தோன்றியது. சென்னை வளர்ப்பு என்ன செய்வது...?! ( அப்ப சென்னையில் வளர்ந்த நாங்க நல்லா எழுதலையான்னு சண்டைக்கு வந்திடாதிங்க . நான் தமிழை கொஞ்சம் சரியா படிக்காம போயிட்டேன் அப்படின்னு வேணா மாத்திக்கிறேன் ) இந்த பதிவுலகத்தை  நினைக்கிறப்ப கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.....(ஒரு வார்த்தை யதார்த்தமா சொல்ல முடியலபா ..?!)

ஆனா நான் ரொம்ப நல்லவ ( நானேதான் ) இப்பவரை யாரும் என் எழுத்தை தவறாக சொல்லலையே...!! ( அப்படியே சொன்னாலும் கவலைபடுறதா இல்ல... ஹா ஹா )
ஒரு வருத்தம் என்னனா என் பதிவுகள் கொஞ்சம் சீரியஸா ( கொஞ்சம் இல்ல நிறைய - மனசாட்சி )  இருக்கிறதால, என்னையும் அப்படியே எண்ணி எல்லோரும் பார்க்கிறதுதான்  ரொம்ப பீலிங்கா இருக்கு.... இனியாவது நம்புங்க நான் ரொம்ப ஜாலியான ஆளுதான். 

இதை பத்தி ஏன் சொல்றேனா, நகைசுவையா எழுதுற பதிவர்கள் என் பதிவையும் படிக்கணும், சீரியஸா இருக்குனு வராம போய்விடகூடாது, வந்து கிண்டலாவது பண்ணிட்டு போங்க என்று இதன் மூலம் அன்பாக கேட்டு  கொள்கிறேன். ( அப்பத்தான் முடி கொட்ட கொட்ட யோசிச்சு, கை வலிக்க வலிக்க டைப் பண்ணதுக்கு கொஞ்சம் ஆறுதலாகவாவது  இருக்கும்...!!?. )

அதைவிட எல்லா பெண்களுக்கு உள்ளேயும்  நகைசுவை உணர்வு உண்டுதான், அமைகிற வாழ்க்கையை பொறுத்துதான் இந்த உணர்வு கூடும் , குறையும் அவ்வளவுதான் வித்தியாசம். ( ஐய்யோடா... இது தாம்பத்தியம் பதிவு இல்லை..... இது வேற.... வேற..... பேச்சை மாத்து.....  மனசாட்சி ...ம் .ம் )

முக்கியமான விஷயம்

எனக்கு பின்னூட்டம் போடுபவர்களுக்கு நான் சரியாக போட இயலாமல் போய் விடுகிறது. அதற்கு முதலில் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நேரம் இன்மை ஒரு காரணம் என்றாலும், சிஸ்டம் அடிக்கடி மக்கர் பண்றது என் பசங்க unlimited ஆ games download பண்ணிடுவாங்க , அதனால் வர்ற so called பிரச்சனைய சரி பண்ணவே வெறுத்து விடும் . மறுபடி அவங்க download பன்றதும் நான் சரி பண்றதுமா தொடர்கதையா போய்ட்டே இருக்கிறது ( இந்த தாம்பத்தியம் தொடர் எப்ப முடியும்...? மனசாட்சி... ஷ் இதெல்லாம் கேட்கபடாது..... சரியா )

அதனால வோட், கமெண்ட் உங்கள் பதிவுகளுக்கு நேரத்துக்கு வராததுக்கு மன்னிச்சி வுட்டுடுங்க.

சக பதிவர்கள்


எல்லோருமே எனக்கு முக்கியமானவர்கள் தான் என்றாலுமே குறிப்பிட்ட சிலரை இங்கே விமர்சித்தே ஆக வேண்டும் ( இதை விட்டா வேற சந்தர்ப்பம் கிடைக்காது )

1 .  ஆதிரன் -----      (முதல் follower  ஆனதே  போதும் என்று சரியாக வருவதே இல்லை.)
தொடர்ந்து வாங்க நண்பா...

2 .  கார்த்திக் (LK)----பதிவு  போட்ட அடுத்த நொடி நண்பர் ஆஜர்...? எனக்குன்னு இல்ல, பலரின் பதிவிலும் நண்பர் தான் முதலில். பல புது பதிவர்களையும் தனது தளத்தில் அறிமுக படுத்தும் நல்ல எண்ணம் கொண்டவர். ( கவிதைக்கு கவிதையில் பதில் எல்லாம் கொஞ்சம் ஓவர்தான் )

3 .  ஆசியா ----------  எனது அன்பான தோழி. இப்ப பக்கத்தில்தான் இருக்காங்க  (அட்ரஸ்
தெரிந்தால் போய் அவங்க சமையலை ஒரு கை பார்க்கலாம்...ம்...!!)

4 .   ஆனந்தி --------  (மீரா ஜாஸ்மினை டிவியில் பாத்தாலும் கூட இவங்க ஞாபகம்தான் வருகிறது!)  இவங்க கமெண்டும் மீரா ஜாஸ்மின் மாதிரி அழகா ,  அடக்கமா, அளவா இருக்கும்...!!?

5 .   சித்ரா ------------  எந்த ப்ளாக் போனாலும் இவங்க முகம்தான் தெரியும்..! அப்படி
சூறாவளி போல் சுழன்று சுழன்று போறாங்க...! இவர்கள் இதன் மூலம் பதிவர்களை ஊக்கபடுத்துறாங்க... தொடரட்டும் அவர்களின் இந்த சமூக  சேவை...!!

6.  சந்த்யா ---------- தாய் மொழி தமிழ் இல்லைனாலும் தமிழை காதலிக்கும் அருமையான தோழி. என் எழுத்துகளை ரசித்து பின்னூட்டம் போடுவார்கள். அன்பிற்கு உரியவர்களில் மிக நெருங்கியவர்.  

7 .  வானதி -------  இவங்க எழுதுவதே கவிதை மாதிரிதான் இருக்கிறது ( இது தெரியாமல் எனக்கு கவிதை எழுத தெரியாதுபா என்று கவலை படுறாங்க ...என்ன சொல்ல ?)

8 . மனோ மேடம்-- எனக்கு முதலில் ராணி கிரீட விருதை அன்பாய் கொடுத்தார்கள். அவங்களுக்கு இங்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லிகிறேன்.  

9 . ஜெய்லானி------ இரண்டு விருதுகள் கொடுத்து என்னை வாழ்த்திய சகோதரனுக்கும் இங்கு நன்றி சொல்லி கொள்கிறேன். 

10 . சௌந்தர் ------- இவரது பதிவுகள் ரசிக்கும்படி  இருக்கும் பேருக்கு ஏற்றபடி...! ( எங்க வோட் போட போனாலும் அங்க முன்னாடியே இவரது வோட்தான் இருக்கும்..?! )

11 .  சசிகுமார் ---- இவரது பிளாக்கர் டிப்ஸ் எனக்கு ஆரம்ப நாட்களில் கை கொடுத்திருக்கிறது அதற்காக இவருக்கும் ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ். 

12 . தமிழ் மதுரம்-- நல்ல இனிமையான தமிழை படிக்கணும் என்றால் இவரது எழுத்தை வாசிக்கலாம். எனக்கு பிடித்த தளங்களில் ஒன்று.  

எனது follower இல்லாதவர்களில் குறிப்பிடத்தக்கவர் சூரியாகண்ணன் -- இவர் தளத்தில்  இருந்தும் சில விசயங்களை கற்று  இருக்கிறேன். என் மூத்த மகன் இவரது ரசிகன்.

அப்புறம் விக்னேஸ்வரி , கீதா, அமைதிசாரல், Menagasathia, Gayathri, யாதவன், .....இன்னும் சொல்லிட்டே போகலாம் . என்னை தொடராமல் தொடர்பவர்கள் இவர்களைப்போல் இன்னும் இருக்கிறார்கள்.... அவர்கள் எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை சொல்லி கொள்கிறேன் . 

வோட் அளித்து என் பதிவுகள் பலரையும் சென்று அடைய  துணை புரிபவர்களையும் பெயர் கூற விட பட்டவர்களையும் இங்கே நினைவு கூர்ந்து நன்றி சொல்லி கொள்கிறேன்.  


மீண்டும் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியும் வணக்கமும்....

(பி.கு)
அடைப்பு குறிக்குள் இருப்பது எல்லாம் ச்சும்மா....தான் .  யாருக்கும் பிடிக்கவில்லை என்றால் பாவம் போகட்டும் என்று விட்டுடுங்க.....!!

பதிவு கொஞ்சம் பெரிதாகிவிட்டது (இதை  தொடர் பதிவா போட்டு இருக்கலாமோ ....?! )


                                                                


  
Tweet

43 comments:

  1. @கௌசல்யா

    அரை சதத்திற்கு வாழ்த்துக்கள். விரைவில் சதம் அடியுங்கள். என்னை பற்றிய குறிப்பிற்கு :)))). நல்ல பகிர்வு தோழி

    ReplyDelete
  2. என்ன பதியும் ஒன்னு ரெண்டு வார்த்தை சொல்லி இருக்கலாம்....
    பரவா இல்ல விடுங்க நூறாவது பதிவுல பாத்துக்கலாம் .....

    ReplyDelete
  3. ஏலேய் தெம்மாங்கு...! இங்க ஓடியாவேன்.!!! ஒம்பேரக் கூடப் போட்டுருக்காகலே!!

    ReplyDelete
  4. அரை சதத்திற்கு வாழ்த்துகள் நானும் இபோது தான் அரை சதம் அடித்தேன்... தொடர்ந்து எழுதுங்கள்.....

    ReplyDelete
  5. நன்றி சொன்னதுக்கு நன்றி. வாழ்த்துகள்....உங்கள் பயணம் தொடரட்டும்....

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் தோழி..அரை சதம் சாதாரனமான விஷயம் இல்ல எத்தனை யோசிச்சு கஷ்டப்பட்டு எழுதிருகேள்..கூடிய விரைவில் சதம் அடிக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. என் பெயரையும் போட்டிருக்கீங்க...நன்றிங்க...உங்களுக்கு வாழ்த்துக்கள்...தொடரட்டும் உங்க பயணம்...

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் தோழி....! பாத்தீங்களா என்னய விட்டுட்டீங்க...

    ReplyDelete
  9. கௌஸ், வாழ்த்துக்கள். நீங்கள் என்னை இப்படி ராகிங் பண்ணக் கூடாது. அப்பவும் சொல்றேன் இப்பவும் சொல்றேன் எனக்கு கவிதை ஏரியா ரொம்பவே வீக்.

    மேலும் நிறைய பதிவுகள் போட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்,உங்கள் பயணம் தொடரட்டும்....

    ReplyDelete
  11. அரை சதத்திற்கு வாழ்த்துக்கள் தோழி ...என் பெயர் உங்க லிஸ்டில் வருமென்று நான் நினைக்கவே இல்லா கௌசல்யா ரொம்ப சந்தோஷமா இருக்கு இன்னும் நிறையே பதிவு எழுத நான் வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் சிஸ்டர்...

    நமக்கும் 49 பதிவு ஆயிருச்சு.. நம்ம ஏரியாவுக்கும் கொஞ்சம வந்து பாத்திட்டு போறது...

    ReplyDelete
  13. Santhosh...

    இல்லையே. வாழ்த்துக்கு நன்றி .

    கண்டிப்பா நூறாவது பதிவில நிறைய சொல்லி விடுகிறேன்.

    ReplyDelete
  14. தெம்மாங்குபாட்டு...

    சந்தோசமா வருகை தந்ததுக்கு நன்றி...! :))

    ReplyDelete
  15. சௌந்தர்...

    வாழ்த்துக்கு நன்றி. பதிவுலகத்தை இன்று கலக்கிட்டு இருக்குரீங்க... வாழ்த்துகள்

    ReplyDelete
  16. Gayathri...

    வாழ்த்துக்கு நன்றி தோழி.

    ReplyDelete
  17. rasarasachozhan...

    நீங்களும் என் உறவுகளில் ஒருவர்தானே. வாழ்த்துக்கு நன்றி .

    ReplyDelete
  18. dheva...

    ப மு க ல முக்கியமான ஆள் ,

    உங்களை விடலையே .... 18 வது ஆள் நீங்கதான். நன்றி

    ReplyDelete
  19. vanathy...

    o .k, o .k cool தோழி, வாழ்த்துக்கு நன்றிபா.

    ReplyDelete
  20. kovai kumaran...

    வாழ்த்துக்கு நன்றி சதீஷ்.

    ReplyDelete
  21. sandhya...

    நீங்க என் தோழிதானே... அப்புறம் என்ன சந்தேகம்...? வாழ்த்துக்கு நன்றிபா

    ReplyDelete
  22. வெறும்பய...

    வருகைக்கு நன்றி. நான் பல முறை உங்க பதிவை ரசித்து படித்து இருக்கிறேன். இனி வந்தா கமெண்ட் பண்ணிட்டு தான் மறுவேலை சரியா? .

    ReplyDelete
  23. vaalthukkal kousalya

    ReplyDelete
  24. அரை சதத்திற்கு வாழ்த்துக்கள். விரைவில் சதம் அடியுங்கள்.

    ReplyDelete
  25. திவ்யாம்மா...

    நன்றி தோழி.

    ReplyDelete
  26. சே.குமார்...

    வாழ்த்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  27. முதல்ல உங்க 50 -வது பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. தோழி..!!
    உங்க நகைச்சுவை side சூப்பர் கௌசல்யா.. :D :D

    நம்ம தாமிரபரணி தண்ணீர் பண்ற வேலைங்க அது.. :-))

    அனைவரின் பெயரையும் நீங்க குறிப்பிட்டு எழுதி இருந்தது, அருமைங்க..

    //ஆனந்தி -------- (மீரா ஜாஸ்மினை டிவியில் பாத்தாலும் கூட இவங்க ஞாபகம்தான் வருகிறது!) இவங்க கமெண்டும் மீரா ஜாஸ்மின் மாதிரி அழகா , அடக்கமா, அளவா இருக்கும்...!!?//

    அப்போ, அடிக்கடி உங்களுக்கு என் ஞாபகம் வருதுன்னு சொல்லுங்க..

    ரொம்ப ரொம்ப சந்தோசம் தோழி.
    மனதை தொடுவதாய் உங்கள் கருத்து இருக்குங்க.. நன்றிகள் பல.. :-)))

    நீங்க மென்மேலும் வளர, வாழ்த்துக்கள்.. :-))

    ReplyDelete
  28. வாழ்த்துக்கள்... கௌசல்யா..

    ReplyDelete
  29. உங்களுக்கு வாழ்த்துக்கள்..இன்னும் நிறையா எழுதுங்கள்....

    ReplyDelete
  30. Ananthi...

    //நம்ம தாமிரபரணி தண்ணீர் பண்ற வேலைங்க அது.. //

    தோழி ஆனந்தியா இவ்ளோ பெரிய கமெண்ட் கொடுத்தது?! நம்ப முடியவில்லை :)) வாழ்த்துக்கு நன்றி தோழி.

    ReplyDelete
  31. தோழி...

    வாழ்த்துக்கு நன்றி தோழி.

    ReplyDelete
  32. சீக்கிரமே 200 தொட வாழ்த்துக்கள்
    எப்படி லேட்டா வந்தாலும் லேடஸ்ட வருவோமுல்ல

    ReplyDelete
  33. ஐம்பதாவது பதிவிற்கு வாழ்த்துக்கள் அக்கா, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  34. ganesh...

    வாழ்த்துக்கு நன்றி கணேஷ்.

    ReplyDelete
  35. S.Maharajan...

    லேட் ஆனாலும் பரவாயில்லை. ஆனா வந்துடுங்க நண்பரே. நன்றி

    ReplyDelete
  36. சசிகுமார்...

    வாழ்த்துக்கு நன்றி சசி.

    ReplyDelete
  37. I came today.

    asusual late. sorry kosalya. it is my work. it sucks.

    this is one of the very intresting post. welldone. you have done some humourous verses too. I enjoyed. thanks. I write you soon.

    ReplyDelete
  38. எனக்கு பின்னூட்டம் போடுபவர்களுக்கு நான் சரியாக போட இயலாமல் போய் விடுகிறது. அதற்கு முதலில் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். நேரம் இன்மை ஒரு காரணம் என்றாலும், சிஸ்டம் அடிக்கடி மக்கர் பண்றது என் பசங்க unlimited ஆ games download பண்ணிடுவாங்க , அதனால் வர்ற so called பிரச்சனைய சரி பண்ணவே வெறுத்து விடும் . மறுபடி அவங்க download பன்றதும் நான் சரி பண்றதுமா தொடர்கதையா போய்ட்டே இருக்கிறது //

    இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை:))


    வணக்கம், வந்தனம்! கொஞ்சம் பிசி. இப்போ வந்திட்டேன்.
    நாமெல்லாம் உங்க வீட்டுக் கடைக் குட்டி அக்கா..:))
    உங்களின் ஆதரவிற்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள் தோழி.

    ‘எழுதிச் செல்லும் விதியின் கை
    எழுதி எழுதி மேற் செல்லும்
    அழுத கண்ணீர் ஆறெல்லாம் அதில் ஓர்
    எழுத்தை அழித்திடுமா?

    ஆகவே சித்திரமும் கைப் பழக்கம் செந்தமிழும் நாப் பழக்கம் என்பது போல தொடர்ந்தும் எழுதுங்கள்.
    நீங்கள் மேலும் மேலும் வளர்ச்சியடைந்து, எழுத்துலகில் பிரகாசிப்பீர்கள் எனும் நம்பிக்கை இருக்கிறது.

    வாழ்த்துக்கள் சகோதரி!
    தொடரட்டும் உங்கள் பயணம்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...