செவ்வாய், ஜூலை 13

6:34 AM
25


                          
                      
                         மற்றுமொரு தூங்காத இரவு
                      
                         உன்னால்.... நீயோ நித்திரையில்...!
                      
                         என்ன பிழை கண்டாய் என்னில்...?
                      
                         நீ எழுதும் எந்த வரியும், எனக்கு
                      
                         தோன்றுமே கவிதையாய்...,
                      
                         நீ எழுதும்போது என் பெயரும்
                      
                         கூட  அழகுதான் , வியந்திருக்கிறேன்
                      
                         பலமுறை....! உனக்கு அப்படி
                      
                         தோன்றாதது விந்தையே..?!
                      
                         ஒத்துகொள் இன்றே, நான்
                      
                         உன்னில் கொண்டிருக்கும் அன்பே
                      
                         பெரிதென்று...! மன்னித்து
                      
                        விட்டு விடுகிறேன் உன்னை...!!

                                                                                                       Tweet

25 கருத்துகள்:

 1. நல்ல கவிதை.. கண்டிப்பாக உங்கள் நண்பர் ஒத்துக் கொள்வார் உங்கள் அன்பே பெரிதென்று

  பதிலளிநீக்கு
 2. பெயரில்லா7:08 AM, ஜூலை 13, 2010

  nalla irukunga kousalya... kandippa unga friend ungalai purinjippar

  பதிலளிநீக்கு
 3. இதனை நாள் எப்படி பார்க்காமல் இருந்து விட்டேன் என இப்போது வருந்துகிறேன். இப்போதேனும் பார்த்தமைக்கு நன்றி கூறுகிறேன் கடவுளுக்கு...:)

  பதிலளிநீக்கு
 4. கவிதை அருமை. வாழ்த்துகள் தோழி

  பதிலளிநீக்கு
 5. நீ எழுதும்போது என் பெயரும்
  கூட அழகுதான்//


  நல்ல கவிதை.... நல்ல தோழி....

  பதிலளிநீக்கு
 6. //ஒத்துகொள் இன்றே, நான்

  உன்னில் கொண்டிருக்கும் அன்பே

  பெரிதென்று...! மன்னித்து

  விட்டு விடுகிறேன் உன்னை...!!//

  அழகு!!!!!!!!!!!!!!!!!1

  பதிலளிநீக்கு
 7. /// நீ எழுதும் எந்த வரியும், எனக்கு

  தோன்றுமே கவிதையாய்...

  நீ எழுதும்போது என் பெயரும்

  கூட அழகுதான் ,///

  good lines. I like that. nice poem.

  பதிலளிநீக்கு
 8. அன்பு என்ற ஒன்றைவிட இந்த உலகத்தில் எதுவும் பெரியது இல்லை விரைவில் புரிந்துகொள்வார்
  . கவிதை மிகவும் அருமை

  பதிலளிநீக்கு
 9. நீ எழுதும் எந்த வரியும், எனக்கு
  தோன்றுமே கவிதையாய்//

  இக் கவிதையில் சொக்க வைக்கும் வரிகள் இவை தான். உறங்காத இரவு உறக்கம் தொலைத்த தவிப்பின் வெளிப்பாடு.

  பதிலளிநீக்கு
 10. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்...இவ் வள்ளுவரின் வரியில் உள்ள கருத்துக்களைப் போல உங்கள் உள் மன அன்பின் வெளிப்பாடாய் கவிதை இக் உதித்துள்ளது. உறங்காத இரவு நிச்சயம் ஒரு நாள் உறக்கத்தை தரும் என்பதில் ஐயமில்லை.

  பதிலளிநீக்கு
 11. திவ்யாம்மா...

  உங்களின் முதல் வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 12. santhosh...

  //இதனை நாள் எப்படி பார்க்காமல் இருந்து விட்டேன் என இப்போது வருந்துகிறேன். இப்போதேனும் பார்த்தமைக்கு நன்றி கூறுகிறேன் கடவுளுக்கு...:)//

  முதல் வருகைக்கு நன்றி . தொடர்ந்து வாங்க..

  பதிலளிநீக்கு
 13. starjan(ஸ்டார்ஜன்)...

  நன்றிங்க

  பதிலளிநீக்கு
 14. கலாநேசன்...

  நன்றி.

  பனித்துளி சங்கர்...

  ஆமாம் அன்பை விட இந்த உலகில் பெரிதாய் வேறு இல்லை... நன்றி.

  vanathy...

  நன்றி தோழி.

  தமிழ் மதுரம்...

  நன்றி நண்பரே.

  பதிலளிநீக்கு
 15. பெயரில்லா11:34 AM, ஜூலை 14, 2010

  "ஒத்துகொள் இன்றே, நான்

  உன்னில் கொண்டிருக்கும் அன்பே
  பெரிதென்று...! மன்னித்து
  விட்டு விடுகிறேன் உன்னை.."

  இது தான் நட்புக்கு அடையாளம் ..நல்லா இருக்கு தோழி உங்க கவிதை

  பதிலளிநீக்கு
 16. நல்ல கவிதை..!

  வாழ்த்துகள் தோழி.

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...