புதன், ஜூன் 23

6:57 AM
23

கவிதை   
                                           
                                          இரண்டு பேரும் பிரிந்து 
                   
                                          இருக்கிறோம், வேலையின் நிமித்தம்!

                                          ஒப்பந்தப்படி, குறிப்பிட்ட 
                                     
                                          நேரத்தில் இருவரும் 

                                         ஒன்றாக நிலவை நோக்க!

                                         அவர் பார்க்கும் 
                            
                                         நிலவில் என் முகம்!

                                         நான் பார்க்கும் நிலவில்
                                         
                                         என்னவர் முகம்!

                                         இருவரையும் பார்த்த 

                                         நிலவு ஓடி மறைந்தது

                                         மேகத்தில், வெட்கமாம்!!

                                                     *******************




பி.கு

எப்படி தெரியும் என்று யோசிக்ககூடாது ...! கண்டிப்பாக தெரியும், மனதில் காதல் இருந்தால் !!


நிலவு வராத அமாவாசையில் என்ன செய்வீர்கள் என்றும்  கேட்ககூடாது ?!  ஒரு வேளை நீங்க கேட்டால்,  நட்சத்திரத்தை பார்த்து கொள்வோம் என்பேன்!  நிலவு என்றால் ஒரு முகம் தான் ஆனால் நட்சத்திரம் என்றால்...............புரியும் என்று நினைக்கிறேன் !!

Tweet

23 கருத்துகள்:

  1. அருமையான கவிதை தோழி..

    வாழ்த்துக்கள். மேலும் பல கவிதைகளை எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
  2. // இருவரையும் பார்த்த

    நிலவு ஓடி மறைந்தது

    மேகத்தில், வெட்கமாம்!!///

    கவிதை கவிதை

    பதிலளிநீக்கு
  3. நிலா அழகில் பிறந்த அருமையான கவிதை. :-)

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா3:45 PM, ஜூன் 23, 2010

    ஒ கௌசல்யா கவிதை ரொம்ப அருமையா இருக்குப்பா ...அதும் இந்த வரிகள் ரொம்பவே சூப்பர்

    அவர் பார்க்கும்
    நிலவில் என் முகம்!
    நான் பார்க்கும் நிலவில்
    என்னவர் முகம்!
    "எப்படி தெரியும் என்று யோசிக்ககூடாது ...! கண்டிப்பாக தெரியும், மனதில் காதல் இருந்தால் !! "

    சரியா சொன்னிங்க தோழி

    பதிலளிநீக்கு
  5. //எப்படி தெரியும் என்று யோசிக்ககூடாது ...! கண்டிப்பாக தெரியும், மனதில் காதல் இருந்தால் !!//

    True
    கவிதை

    பதிலளிநீக்கு
  6. LK...

    தொடர்ந்து எழுத சொன்னதுக்கு என்ன சொல்ல...:))

    பதிலளிநீக்கு
  7. sandhya...

    இது கவிதைக்காக எழுதப்பட்டது இல்லை தோழி! இது எங்களுக்குள் நிகழும் குழந்தைதனமான ஒன்றுதான்!! :)))

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் உறவே

    உங்கள் தளத்தினை https://www.valaiyakam.com இல் இணைக்கவும்..

    நன்றி

    வலையகம்.கொம்
    www.valaiyakam.com

    பதிலளிநீக்கு
  9. அவர் பார்க்கும்

    நிலவில் என் முகம்!

    நான் பார்க்கும் நிலவில்

    என்னவர் முகம்!

    கவிதை கவிதை........ படி

    பதிலளிநீக்கு
  10. வாழ்த்துக்கள் சகோதரி!

    //இருவரையும் பார்த்த


    நிலவு ஓடி மறைந்தது


    மேகத்தில், வெட்கமாம்!!//


    இதனைத் தான் சொல்வது உருவகம் என்று. இனிமையாகத் தமிழ் இலக்கியத்தோடு இணைத்துக் கவிதையைத் தந்துள்ளீர்கள். இன்னும் நிறையப் படைப்புக்களைப் பகிர்ந்து கொள்ள வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. தமிழ் மதுரம்...

    உண்மையில் உங்கள் வார்த்தைகள் என்னை இன்னும் அதிகமாக கவிதை எழுத வைக்கும் என்று நினைக்கிறேன்!!

    நன்றி.

    பதிலளிநீக்கு
  12. சத்தியமா நான் எதுவம் யோசிக்கலா , கேட்கல , நீங்க லோவ் பண்ணுங்க ( தக்காளி நம்ம பிகர் முகம் மட்டும் பர்சுலே இருந்து டார்ச்சர் பண்ணுது )

    பதிலளிநீக்கு
  13. மங்குனி அமைச்சர்...

    சீரியஸ் பதிவு பக்கம் நீங்கள் வரகூடாது என்று ஏதும் தீர்மானமா ?

    வருகைக்கு நன்றி, வேறு என்ன சொல்ல ? :))

    பதிலளிநீக்கு
  14. என்னை பொறுத்தவரையில்..இது ஒரு அனுபவ கவிதையாகத்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறன்...(அவர் என்ற வார்த்தையை வைத்துதான் சொல்லுகிறேன்)

    நன்றாக இருந்தது...

    இந்த மாதிரியான கவிதைகள் எனக்கு எழுத வாய்ப்பு கிடைத்து இருந்திருந்தால்... நான் இந்த (L=ET0)மாதிரியான விசயங்களை எழுதியிருக்க மாட்டேன்...


    http://ganeshmoorthyj.blogspot.com/2010/04/l-eto.html

    பதிலளிநீக்கு
  15. ganesh...

    மிக்க நன்றி கணேஷ். இது அனுபவ கவிதை என்று கண்டு பிடித்ததுக்குகாக பாராட்டுகிறேன்.

    உங்களின் L =ETO நன்றாகத்தானே இருக்கிறது. ஐன்ஸ்டீன் ரசிகரின் பார்வை இப்படி இருப்பதில் ஆச்சரியம் இல்லை ஆனால் இன்றைய இளைஞரிடம் இந்த பக்குவம் உண்மையில் வரவேற்புக்கு உரியது!!

    முதல் வருகை தொடர என் வாழ்த்துகள். நன்றி

    பதிலளிநீக்கு
  16. ம்..கவிதை...கவிதை...கவிதை...

    பதிலளிநீக்கு
  17. அருமை அருமை அருமை..
    ரொம்ப பிடிச்சிருக்கு...!! :)

    பதிலளிநீக்கு
  18. ராச ராச சோழன்...

    கவிதையே தான்!

    நன்றிங்க

    பதிலளிநீக்கு
  19. Ananthi...

    எனக்கும் பிடிச்சிருக்கே உங்களை!

    nanri tholi.

    பதிலளிநீக்கு
  20. துணை முகம் இருக்க நிலவு தனியே வேண்டுமா?

    இதை பற்றி நான் ஒரு கவிதை எழுதி இருந்தேன், சில வருடங்களுக்கு முன்..... ஒரு கற்பனை காதலிக்கு.....
    அந்த நிலவில் கருமை எனும் குற்றம் உண்டு....... இவள் முகத்திலோ அதுவும் இல்லை....... அந்த நிலவு தேயும், வளரும்..... இவள் முகம் தேயாத திலகமிட்ட திங்கள்!

    நிசித்திரள் மேகமுன் ஒண்குழலாமதில்
    வசித்திடும் முழுநிலவுன் ஒளிவதனம்;
    அந்தநிலா தேய்ந்தழிந்து பின்வளரும் காண் – என்றும்
    தேயாத திலகமிட்ட திங்களடி நீ.
    ---
    Bhuvaneshwar (www.bhuvaneshwar.com)

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...