பாப் இசை உலகின் மன்னன்' இந்த உலகம் இருக்கும் வரை இந்த பட்டம் இவர் ஒருவருக்குத்தான் பொருந்தும். இவர் இன்று நம்மிடையே இல்லை ஆனால் அவர் விட்டு சென்ற இசை, பாடல்கள், நடன முறைகள், நினைவுகள் கோடிக்கணக்கான இதயங்களில் என்றும் வாழும்.....!!
அவரது இசை நாடு, மொழி, மக்களை கடந்த உலக காவியம்.
சிறு வயது முதல் தீவிர ரசிகையான எனக்கு அவரது முதல் நினைவுநாளில் இந்த பதிவை எழுத கிடைத்த வாய்ப்பை பெரும்பேறாக எண்ணுகிறேன். இசையால் ஒருவருக்கு ஆறுதலை, அமைதியை கொடுக்கமுடியும் என்பதை உணர்ந்து அனுபவித்தவள்.
அவரது முதல் ஆல்பம் முதல் கடைசி ஆல்பம் வரை உள்ள அனைத்து பாடல்களும் அசத்தலானவை. தனது 11 வயதிலேயே மேடையேறி பாட தொடங்கிய மைக்கேல் தனது 50 வது வயதுவரை ஓய்வின்றி இசைக்காக தனது வாழ்க்கையை அர்பணித்தார்.
அவரின் வாழ்க்கை ஒரு மலர் படுக்கை அல்ல, முள் படுக்கை. முள்ளை அவர் வைத்து கொண்டு ரோஜா மலரை நமக்கு பரிசளித்தவர். தந்தையுடன் மனகசப்பு, பல முறையற்ற குற்றசாட்டுகள் , முதல் மனைவியுடன் விவாகரத்து, உடம்பை சோதனைசாலையாக மாற்றிய பல ஆப்பரேஷன்கள், இன்னும் எழுத்தில் வடிக்க முடியாத அளவு மோசமான குற்றசாட்டுகள், பல தேவை அற்ற பிரசாரங்கள்......??!! இதில் எவையெல்லாம் உண்மை என்பது அவருக்கும், கடவுளுக்கும் தான் தெரியும்.
ஒரு தொலைக்காட்சிக்கு அவர் கொடுத்த பேட்டியில், தனது நிலையை நன்றாக தெளிவு படுத்தினார். ஒரே வார்த்தையில் தன் மேல் உள்ள குற்றசாட்டுகளுக்கு பதில் உரைத்தார் , ' நான் ஒரு பாவமும் அறியேன் ' என்று கண்ணில் நீர் வழிய ஒரு மகா கலைஞன் சொன்னதை பார்த்தபோது என் கண்ணீரை கட்டுபடுத்த நானும் வழி அறியேன். புத்தரையும், ஏசுவையுமே குறை சொன்ன இந்த உலகம் இந்த சாதாரண மனிதனையா விட்டு வைக்க போகிறது? " உங்களில் ஒரு குற்றமும் செய்யாதவர்கள் யாரும் இருந்தால் அவர்களே முதல் கல்லை இவள் மேல் எறியுங்கள் " என்று ஒரு இடத்தில் ஏசுநாதர் கூறி இருப்பார். அது போல் ஒரு குறையும் இல்லாத மனிதராக நாம் இருந்தால் அவரை குறை சொல்லலாம் ஆனால் நாம்....???
சிறு வயதில் வெள்ளையர்களின் நிற பேத கொடுமைகளில் தொடங்கி அவர் இந்த உலகை விட்டு மறைந்த பின்னும் இன்னும் அவரை வைத்து தொடரும் அவலங்கள்....? மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை, ஆனால் பிரபலம் என்றால் எதுவுமே செய்திதான். இவரை பொறுத்தவரை அவரது ஒவ்வொரு அசைவும் உலகத்தாரால் விமர்சிக்கப்பட்டது. இந்த விமர்சனம் அவர் மறைந்த பின்னும் குறையவில்லை . ஒருவர் இறந்தபின் அவரது நிறைகளை மட்டுமே பேசபடுவதுதான் நாகரீகம். ஆனால் அவர் இறந்த பின் வந்த செய்திகள் அதனை விளம்பரத்திற்காக வெளி இட்டவர்களை அவரது ரசிகர்கள் மன்னிக்கவே மாட்டார்கள்.
அவரை வைத்தும், அவரது பாடல்களை கொண்டும் சாதாரண பிளாட்பார கடையில் இருந்து ஆல்பம் வெளியிட்ட பெரிய நிறுவனங்கள் வரை எதிர்பார்க்க முடியாத அளவிற்கு லாபம் சம்பாதித்தன, இன்றும் சம்பாதித்து கொண்டுதான் இருக்கின்றன.
அவரது நினைவாக ஒரு மியுசியம் கட்ட போகிறார்களாம். ஆனால் அதற்கு அடிக்கல் நாட்டும் முன்னரே, அதனால் ஒரு வருடத்திற்கு வர கூடிய வருவாய் இத்தனை கோடி டாலர்கள் என்று கணக்கு போட்டு விட்டார்கள். என்ன உலகம்...??!!
முக்கியமான ஒன்று என்னவென்றால் யாரை நம்பி தனது உடம்பை ஒப்படைத்து மருத்துவம் பார்த்து கொண்டு இருந்தாரோ அவரே அவரது உயிரை பறிக்கும் காலனாக மாறியது.... ??
'make a little space, make a better place' என்று பாடிய அவருக்கு இந்த பூமியில் அப்படி ஒரு சிறந்த இடம் வாழ கிடைக்கவில்லை. அந்த உலகத்திலாவது அவர் விரும்பிய அந்த அமைதியான இடம் கிடைக்கட்டும்!!
ரசிகர்கள்
உணருவார்கள், அந்த
உயிரின் ஓசையை...!
இப்போதும் கேட்கிறது...
'இந்த அமைதியும்,
ஆனந்தமும்
கிடைக்கும் என்று முன்பே
தெரிந்து இருந்தால்
என்றோ மரித்திருப்பேன் !
வாழ்க என்பேன்...
இந்த இடம், நான் வர
துணை புரிந்தவர்களை !!'
ஒவ்வொரு பாடலுமே ஒரு காவியம்தான். அனைத்தையும் விரிவாக சொல்வதை விட ஒரு நாலு பாடல்களை இங்கு குறிப்பிடுகிறேன்.
Thiriller
1980 ம் ஆண்டில் இந்த பாடலை எடுக்க 50,000 டாலர்கள் செலவு ஆகியதாம். வசூலில் சாதனை படைத்த பாடல். பேய் படம் பார்த்து பயந்து வெளியில் வரும் தன் பெண் தோழியுடன் ரோட்டில் பாடி கதை சொல்லி கொண்டே வருவார், அப்படி ஒரு கல்லறையை கடந்து வரும்போது, அங்குள்ள கல்லறையை திறந்து கொண்டு சடலங்கள் எழுந்து வருவது போலவும், பின் மைக்கேலுடன் சேர்ந்து நடனம் ஆடுவது போல் காட்சி அமைக்க பட்டிருக்கும். இந்த காட்சி அமைப்பும், மிரட்டும் இசையும், இன்று பார்க்கும் போதும் திகிலாக இருக்கும்.
Beat it .
முதல் ராக் பாடல் இதுதான் என்று அறியப்பட்டது. இதில் இடம் பெற்ற அனைத்து கலைஞர்களும் கருப்பு இன அமெரிக்க மக்களும், தென் ஆப்பிரிக்க இனத்தவர்களும் தான். 'சண்டை வேண்டாம்' என்ற பொருளில் பாடல் அமைக்க பட்டிருக்கும். இந்த பாடல் மைக்கேலின் சிறந்த பாடல் மட்டும் இல்லை அகில உலகத்தின் சிறந்த பாடல் என்ற பெயரை பெற்றது.
Smooth criminal
ஒரு சூதாட்ட விடுதியில் நடப்பவற்றை வைத்து பாடல் எடுக்கப்பட்டு இருக்கும். அந்த விடுதியை சுற்றி நடனத்துடன் பாடல் மிக அற்புதமாக படமாக்க பட்டு இருக்கும். நடனம் ரொம்பவே வித்தியாசமாக இருக்கும்.
Heal the World
இந்த பாடலில் அதிர வைக்கும் இசையோ , அசத்தும் நடன அசைவுகளோ இல்லை. ஆனால் மனதை நெகிழ செய்யும் காட்சிகள், ஆழ்மனதை ஊடுருவும் வரிகள். உலகில் போர் வேண்டாம் , அமைதி நிலவ வேண்டும் என்பதை சிறு குழந்தைகளை வைத்து மிக அருமையாக படமாக்கப்பட்டு இருக்கும். ராணுவ வீரர்களின் கையில் குழந்தைகள் பூவை கொடுக்கும் காட்சியும், அதன்பின் அவர்கள் தங்கள் கையில் பிடித்திருக்கும் துப்பாக்கியை கீழே எறிவது போலவும் இடம்பெற்ற காட்சிகள் புல்லரிக்க வைக்கும்.
அந்த பாடலில் உள்ள சில வரிகள்
"Think about the generations and to say we want to make it a better world for our children and our children's children. So that they know
it's a better world for them; and think if they can make it a better
place."
"Make it a better place
For you and for me and the entire human race.
There are people dying
If you care enough for the living
Make a better place for You and for me"
அவரது நினைவுநாளில் நான் எழுதும் இந்த பதிவை அவருக்கு சமர்ப்பிக்கிறேன்.
i do not know much abt MJ as i never had interest on western music. so its a very informative post for me kouslaya
பதிலளிநீக்கு:)) for the post
சரித்திரம்...சில பக்கங்களை புரட்டி பதிவு போட்டு இருக்குறீர்கள்...வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்குஆழமான பார்வை MJ யாராலும் மறக்க முடியாத ஒப்பற்ற கலைஞன்..
பதிலளிநீக்குஅவருக்கு என் அஞ்சலியும் ..
அருமையான பதிவு. mj அனைத்து பாடல்கள் புடிக்கும். பகிர்வுக்கு நன்றி தோழி
பதிலளிநீக்குஉண்மை தான் நண்பா, அவர் நம்மிடம் இருந்து விலகினாலும் அவரின் நினைவுகள் இசை உலகில் இருக்கும் வரை நிலைக்கும் நண்பா உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குசாரிங்க முதலில் பேரை பார்க்காம போட்டுட்டேன். அப்புறம் தான் பார்த்தே நீங்கள் பென் என்று. முதன் முதலாக உங்கள் தளத்திற்கு வருகிறேன் அக்கா அதனால் தான் சிறிய குழப்பம். இனி நம் வருகை தொடரும்.
பதிலளிநீக்குதங்களுக்கு ஏதேனும் பிலாக்கர் டிப்ஸ் தேவைப்பட்டால்
www.vandhemadharam.blogspot.com வந்து பார்த்து கொள்ளவும்
நல்ல பதிவு எனக்கு எம்.ஜாக்சன் பத்தி அவ்ளோவா தெரியாது இப்போ தெரிஞ்சிட்டேன் நன்றி
பதிலளிநீக்குSomebody killed little Susie
பதிலளிநீக்குThe girl with the tune,
Who sings in the daytime at noon.
She was there screaming,
Beating her voice in her doom,
But nobody came to her soon.
A fall down the stairs,
Her dress torn,
Oh the blood in her hair.
A mystery so sullen in air.
She lie there so tenderly,
Fashioned so slenderly,
Lift her with care,
Oh the blood in her hair.
Everyone came to see
The girl that now is dead.
So blind stare the eyes in her head.
And suddenly a voice from the crowd said,
“This girl lived in vain.
Her face bear such agony, such strain.”
But only the man from next door
Knew Little Susie and oh he cried,
As he reached down,
To close Susie's eyes.
She lie there so tenderly,
Fashioned so slenderly,
Lift her with care,
Oh the blood in hair. It was all for God's sake,
For her singing the tune.
For someone to feel her despair,
To be damned to know hoping is dead and you're doomed,
Then to scream out.
And nobody's there.
She knew no one cared.
Father left home, poor mother died
Leaving Susie aloneGrandfather's soul too had flown.
No one to care,
Just to love her.
How much can one bear?
Rejecting the needs in her prayers.
Neglection can kill
Like a knife in your soul,
Oh it will.
But Susie fought so hard to live.
She lie there so tenderly,
Fashioned so slenderly,
Lift her with care,
So young and so fair.
---------- this greatest song of MJ makes me cry. good post kousalya. thanks.
Yes, he was a legend and a trend-setter!
பதிலளிநீக்குLK...
பதிலளிநீக்கு:))
ராச ராச சோழன்...
பதிலளிநீக்குகருத்திற்கு நன்றி
கே ஆர் பி செந்தில்...
பதிலளிநீக்குவருகைக்கும் அஞ்சலிக்கும் நன்றி
சௌந்தர்.. .
பதிலளிநீக்குநீங்களும் அவரின் ரசிகர் என்பதில் மகிழ்கிறேன்.
:))
சசிகுமார்...
பதிலளிநீக்குஉங்களுக்கு நான் எப்பவோ follower ஆகிவிட்டேன், உங்கள் பதிவில் பின்னூட்டமும் அளித்திருக்கிறேன். இருப்பினும் உங்களின் இப்போதைய வருகைக்கு மகிழ்கிறேன்.
உங்களின் பிளாக்கர் டிப்ஸ் பயனுள்ளது. வாழ்த்துக்கும் நன்றி
sandhya...
பதிலளிநீக்குஎன் மூலமா அவரை பற்றி தெரிந்து கொண்டதுக்கு மகிழ்கிறேன் தோழி. நன்றி
adhiran...
பதிலளிநீக்குஅவரது சில பாடல்கள் நம் மனதை உருக்குவதாக இருக்கும். i am also having the same feeling. thank u for the song.
Chitra..
பதிலளிநீக்குthank u friend
நல்ல தகவல் மேடம்! அட!! நீங்க நம்ப ஊருக்கார அக்காவா???...:)
பதிலளிநீக்குMJ பற்றி அருமையான இடுகை.
பதிலளிநீக்குதக்குடு பாண்டி...
பதிலளிநீக்குசகோதரரின் வருகைக்கு நன்றி
asiya omar...
பதிலளிநீக்குthanks tholi.
இவர் இன்று நம்மிடையே இல்லை ஆனால் அவர் விட்டு சென்ற இசை, பாடல்கள், நடன முறைகள், நினைவுகள் கோடிக்கணக்கான இதயங்களில் என்றும் வாழும்.....!!//
பதிலளிநீக்குநிஜம்.
பரந்து பட்ட ரீதியில் மைக்கல் ஜாக்ஸனை அலசியுள்ளீர்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மேலை நாட்டில் இவரின் பொப் இசையிற்குள் தம் மனதைப் பறி கொடுக்காதவர்கள் என்று எவரும் இல்லை.
பதிவு நினைவுகளை மீட்டிப் பார்க்கும் இறந்த பின்னும் இன்றும் மேற்குலக மக்களிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு கவிஞனின் வாழ்வியலைத் தாங்கிய மீட்டல். அருமை.
கௌஸ், மிகச் சிறந்த பாடகர் & அழகான நடன அசைவுகள். எனக்கு மிகவும் பிடிக்கும். ஜூன் 25 அன்று அவரின் தாயாரின் பேட்டி பார்த்தேன். ஏனோ கண்கள் கலங்கின.
பதிலளிநீக்குதோழி கௌசல்யா...
பதிலளிநீக்குஉங்களைப் போல ஒரு உண்மையான ரசிகை கண்டு MJ அவருடைய ஆன்மா மகிழும்.. :-))
எப்பவும் நாம் நினைத்துப் பார்க்க வேண்டிய நபர்களில் MJ ம் ஒருவர்...
பகிர்வுக்கு நன்றி.. !!
தமிழ் மதுரம்...
பதிலளிநீக்குஅவரை பற்றி வரும் ஒவ்வொரு செய்தியையும் கவனிப்பேன், ஏனோ அவர் ஒரு நல்ல மனிதர் என்பதை தவிர வேறு விதமாக ஒரு நாளும் என் மனம் எண்ணியது இல்லை. அவரது சம்பாத்தியத்தில் அதிக அளவை சமூக சேவைக்கு செலவிட்டு இருக்கிறார் என்பது பலருக்கும் சரியாக தெரிய வாய்ப்பு இல்லை.
சிறு வயதில் தனக்கு கிடைக்காத சிறு சிறு சந்தோசங்கள் மற்ற குழந்தைகளுக்கு கிடைக்கட்டும் என்று அவர் சிறுவர்களுக்காக ( சிறுவர்களுக்கு அனுமதி இலவசம்) உருவாக்கிய பூங்கா இன்றும் அவரின் குழந்தை மனதை காட்டும்.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
Vanathy...
பதிலளிநீக்குஇன்றும் அவரது பல பாடல்கள் என்னை கண் கலங்க வைக்கும். இருக்கும் காலத்தில் அன்பை கொடுக்க ஆள் இல்லை, இறந்த பின் என்ன சொல்லி என்ன?
நன்றி தோழி.
Ipo than unga blog a padichen rombha arumai.. Please see my updated awards post..ungala vida mudiyala..am impressed..
பதிலளிநீக்குGayathri...
பதிலளிநீக்குwarm welcome tholi. happy to see ur comments. thank u for giving me the award.
best wishes to u