புதன், ஜூன் 9

8:10 PM
33

உளவாளி 


இந்திய நாட்டில் பிறந்ததிற்காக நாம் பெருமை படும் அதே நேரம் சில நிதர்சனங்களை பார்க்கும் போது வருத்தப்பட வேண்டி இருக்கிறது. அப்படி வருத்தப்படகூடிய ஒன்றை பற்றியது  தான் இந்த பதிவு.  நம் நாட்டை பாதுகாக்கவும்,  எதிரிகளின் செயல்களை பற்றி தெரிந்து கொள்வதற்காகவும்  உளவாளிகளை பயன் படுத்துவார்கள்.  இவர்கள் எதிரியின் இருப்பிடத்திலேயே வாழ்ந்து கொண்டு, அவர்களுக்கு தெரியாமல் அவர்களின் செயல்களை கண்காணித்து தகவல் சொல்லவேண்டும்.

ஆனால் இது ஒன்றும் சாதாரண வாழ்க்கை இல்லை உயிரை பணயம் வைத்து பல சவால்களை சமாளிக்க வேண்டும். இவர்கள்  தைரியம் , புத்தி சாதூரியம் , தன்னம்பிக்கை,   மனோதிடம்  , திறமை ஆகியவற்றை பெற்றவர்களாக இருக்கவேண்டும்.  அனைத்தையும் விட தாய் நாட்டின் மேல் வெறி கொண்ட பக்தி உடையவர்களாக இருக்க  வேண்டும்.

இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதன்தான் ரவீந்திர கௌசிக் என்பவர்,  2002 இல் பாகிஸ்தான் ஜெயிலில் நபி அகமது  என்ற பெயரில் இறந்து போனவர் இவர் தான்.   இந்தியாவுக்காக பாகிஸ்தானில் இருந்து உளவு பார்த்த ஒரு உளவாளி.  அவரின் வாழ்க்கை பல சிக்கல்கள், சவால்கள் நிறைந்த ஒரு திகில் வாழ்க்கை.  இவரது வாழ்க்கையை கிருஷ்ணாதர் என்ற ஒரு எழுத்தாளர் 'மிஷன் டு பாகிஸ்தான்' என்ற பெயரில் எழுதி வெளி இட்டார். ஆனால் நூலின் எந்த இடத்திலும் கௌசிக் பெயரை குறிப்பிட வில்லை. நீண்ட மௌனத்துக்கு பின் இப்போதுதான் அவரது பெயரை கூறியுள்ளார்.

இந்த உளவாளி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஸ்ரீகங்கா என்ற நகரில் பிறந்து வளர்ந்தவர்தான், நன்கு  படித்தவர். 1971 ம் ஆண்டில் இந்திய பாகிஸ்தான் போர் நடந்து கொண்டிருந்தபோது தேசபக்தியை வலியுறுத்தி கௌசிக் சில நாடகங்களை நடத்தினார். அவர் நடத்திய ஒரு நாடகம்தான் அவரது தலை எழுத்தையே மாற்றியது.  உயிரே போனாலும் தாய்நாட்டை காட்டி கொடுக்காத உளவாளி வேடம் ஒன்றிலும் நடித்து இருந்ததை பார்த்த ராணுவ  அதிகாரிகள் கௌசிக்கை அழைத்து பேசினார்கள். இதே போன்று உளவாளியாக நம் நாட்டிற்காக வேலை செய்ய முடியுமா என்று கேட்டனர். இயல்பிலேயே நாட்டுபற்று அதிகம் கொண்ட கௌசிக் உடனடியாக ஒத்து கொண்டார்.

பின்னர் டெல்லி, அபுதாபி, துபாய் என்று சுற்றி திரிந்தார். தனது பெயரையும் நபி அகமது என்று மாற்றி கொண்டு, ஒரு பாகிஸ்தான் பெண்ணையும்  மணந்து முழு பாகிஸ்தானியாக மாறினார். .  பிறகு பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்து இந்திய ராணுவத்திற்கு பல முக்கிய தகவல்களை தொடர்ந்து அனுப்பி கொண்டிருந்தார்.

பாகிஸ்தான் ராணுவத்தில் எல்லை பாதுகாப்பில் பணி புரிந்தாலும் அவரது கவனம் முழுவதும் நம் நாட்டின் மீதே இருந்து இருக்கிறது.  இந்த சூழ்நிலையில் இவரிடம்  இன்னொரு உளவாளியை பாகிஸ்தானை விட்டு பத்திரமாக அனுப்ப  வேண்டும் என்ற வேலையை இந்திய ராணுவம் கொடுத்தது.  அதன்படி தப்பிக்க வைக்கும் போது அந்த உளவாளி பாகிஸ்தான் ராணுவத்திடம் மாட்டிக்கொண்டார்.  அவர்களின் சித்திரவதையை தாங்க முடியாத அந்த உளவாளி கௌசிக்கை  பற்றியும்  சொல்லிவிட்டார். அவ்வளவுதான் இவரையும் பிடித்து பாகிஸ்தானில் உள்ள முல்தான் சிறையில் அடைத்துவிட்டார்கள்.


சுமார் 18 ஆண்டுகள் அந்த சிறையில் தொடர் சித்திரவதைக்கு அவரை உட்படுத்தினார்கள் . அவர் உடலில் உயிர் மட்டும்தான் ஓடிக்கொண்டிருக்க வேண்டும் . இதைவிட பெரிய வருத்தம் என்னவென்றால் இந்தியா அவரைப்பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை.....??  கடைசி காலத்தில் தனது தாய்க்கு கௌசிக் எழுதி இருந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த ஒரு வரி தான் ( என்னை தலை குனிய வைத்தது )

" இந்த வேலையை நான் அமெரிக்காவுக்காக செய்திருந்தால்,  மூன்றே நாட்களில் வெளியே வந்திருப்பேன் " .  இப்படி மனம் நொந்து கடிதம் எழுதிய அடுத்த மூணு நாட்களில் கௌசிக் இறந்தே போனார்.

நாட்டுக்காக உண்மையாக உழைத்த ஒரு உளவாளியின் வாழ்க்கை இறுதியில் சிறையின் இருட்டு அறையில் முடிவுக்கு வந்து விட்டது.  இவரின் இந்த வாழ்க்கை அனுபவத்தை  அந்த எழுத்தாளர் எழுத வில்லை என்றால் நமக்கும் தெரிய வாய்ப்பு இல்லைதான்.  இன்றும்  இவரை மாதிரி எத்தனை பேர்,  எங்கே எல்லாம், எந்த நிலையில் எப்படி இருக்கிறார்களோ ???
                                                                                                           
Tweet

33 கருத்துகள்:

 1. மிக மிக வேதனை பட வைக்கும் விஷயம். கடிசியாக அவர் சொல்லி இருப்பது உண்மையே

  பதிலளிநீக்கு
 2. :-(

  என்னவென்று சொல்வதம்மா.......

  பதிலளிநீக்கு
 3. அடப்பாவிகளா....@ நெஞ்சு வலிக்கிறது!

  பதிலளிநீக்கு
 4. வேதனை!வேதனை!வேதனை!வேதனை!வேதனை!வேதனை!வேதனை!வேதனை!வேதனை!வேதனை!வேதனை!வேதனை!

  என்ன தேசமோ! இது என்ன தேசமோ!

  பதிலளிநீக்கு
 5. //////// " இந்த வேலையை நான் அமெரிக்காவுக்காக செய்திருந்தால், மூன்றே நாட்களில் வெளியே வந்திருப்பேன் "//////////


  அந்த வீரன் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை . நமது நாட்டிலே எவன் ஒருவன் தலை வணங்குகிறானோ அவன் மேல் ஏறி மிதிப்பதுதானே நாம் அவனுக்கு கொடுக்கும் மரியாதையாக இப்பொழுது இருக்கிறது
  .

  பதிலளிநீக்கு
 6. யூ ஏ ஈ லும் இந்தியருக்கு ஒரு பிரச்சனை என்றால் இந்தியா கவுன்சிலேட் ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடாது... அய்யோ பாவம் நீங்க, அப்பாவி !!.....அதான் இதைப்பத்தி கவலைப்படறீங்க.. ஒரு கஷ்டம் வந்தா உதவுவது தொண்டு நிறுவனங்கள்தான் மட்டும்தான் இங்கே ..!!

  //இந்த வேலையை நான் அமெரிக்காவுக்காக செய்திருந்தால், மூன்றே நாட்களில் வெளியே வந்திருப்பேன் " .//


  ஒரு தடவை சவூதி -ரியாதில் எட்டு அமேரிக்கன் பாம் பிளாஸ்டில் இறந்தபோது (1995 ன்னு நினைவு ) அடுத்த நாளே ஜனாதிபதி கிளிண்டன் அங்கே வந்துவிட்டார் ..ஆனா இந்தியா ? ? ? ? ? ? ? ? ? ? ? ?

  பதிலளிநீக்கு
 7. //
  ஒரு தடவை சவூதி -ரியாதில் எட்டு அமேரிக்கன் பாம் பிளாஸ்டில் இறந்தபோது (1995 ன்னு நினைவு ) அடுத்த நாளே ஜனாதிபதி கிளிண்டன் அங்கே வந்துவிட்டார் ..ஆனா இந்தியா ? //

  setthatu oru politician familya iruntha janathipathi varuvar

  பதிலளிநீக்கு
 8. இது மாதிரி எத்தனை எழுதப்படாத உண்மைகளோ!மனசு ரொம்ப பாரமானது உண்மை.

  பதிலளிநீக்கு
 9. @@ LK--//setthatu oru politician familya iruntha janathipathi varuvar //

  எல் கே நீங்களும் அப்பாவிதான்!! அதுவும் இந்தியாவுக்குள்ள நடந்தா மட்டும்தான் வருவார் அதுவும் பிரதமர் ஜனாதிபதி இல்ல..(( பதிலுக்கு நன்றி :-)) ))

  பதிலளிநீக்கு
 10. பெயரில்லா10:55 AM, ஜூன் 10, 2010

  இப்படி பல பஞ்சாபியர்கள் (பாக்-இந்திய எல்லைகளில் இருப்பதனால் இவர்கள் மிகவும் சுலபமாக பாக்கிஸ்தானுக்கு நுழைய முடியும் என்பதால் இவர்களை உபயோகிக்கின்றனர்) பாக். சிறையில் உள்ளனர். இவர்கள் தமது வேலைகளில் மாட்டிக் கொண்டால் இந்தியா கழட்டி விட்டுவிடும். சில வருடங்களுக்கு முன் சுமார் 25 வருடம் பாக்.சிறையில் இருந்த (உளவுக்காக கைது செய்யப்பட்டு) ஒருவர் தமக்கு “ரா” உதவி செய்யாததால் வழக்கு பதிவு செய்து நீதிமன்றம் பல லட்சம் உதவித்தொகை அரசாங்கம் வழங்கவேண்டும் என தீர்ப்பளித்தது.

  பதிலளிநீக்கு
 11. வருகைக்கு நன்றி இராமசாமி கண்ணன்

  பதிலளிநீக்கு
 12. உங்கள் ஆதங்கம் தான் எனக்கும்! நன்றி maharajan

  பதிலளிநீக்கு
 13. நன்றி பனித்துளி சங்கர், தேசத்திற்கு நீ என்ன செய்தாய் என்று அவரிடம் தேசம் கேட்டால், அவர் என்ன பதில் சொல்லி இருப்பார் ???

  பதிலளிநீக்கு
 14. வருகைக்கு மகிழ்கிறேன் ரோஸ்விக் :) இந்த பதிவு மட்டும் அல்லாமல் எனது மற்ற பதிவுகளையும் படித்து கமெண்ட்ஸ் கொடுத்ததுக்கு மிக்க நன்றி. ஐஸ்கிரீம் பற்றிய கமெண்ட் ரசித்தேன்!!

  பதிலளிநீக்கு
 15. நம்ம நாடு ஏன் இப்படி இருக்கு என்று வருத்த பட மட்டும்தான் முடிகிறது என்ன செய்வது சகோ. ஜெய்லானி ?

  பதிலளிநீக்கு
 16. காற்றோடும் , மண்ணோடும் மறைந்து போன துயரங்கள் பல... nanri asiya

  பதிலளிநீக்கு
 17. Anonymous நீங்க யாருனு தெரியல ஆனா எனக்கு தெரியாத ஒரு புது தகவலாக இருக்கிறது! ஆனா பாதிக்கப்பட்ட எல்லோரும் இந்த மாதிரி உதவித்தொகை பெற முயற்சி செய்வார்களா என்பது சந்தேகமே!! உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .

  பதிலளிநீக்கு
 18. கண்களில் நீர்த் துளிக்கிறது கவுசல்யா. வேதனையான சம்பவம்.

  பதிலளிநீக்கு
 19. பெயரில்லா1:45 PM, ஜூன் 10, 2010

  " இந்த வேலையை நான் அமெரிக்காவுக்காக செய்திருந்தால், மூன்றே நாட்களில் வெளியே வந்திருப்பேன் " . இப்படி மனம் நொந்து கடிதம் எழுதிய அடுத்த மூணு நாட்களில் கௌசிக் இறந்தே போனார்.

  சரியா சொன்னா .
  மனதுக்கு ரொம்ப கஷ்டம்மா இருக்கு படிச்ச பிறகு .
  இதுபோல் எவ்ளோ பேர் இருக்காங்களோ தெரியலே

  பதிலளிநீக்கு
 20. நம் தேசத்தை நினைக்கும் போது கண்ணில் நீர் துளி!! நன்றி ஸ்டார்ஜன்??

  பதிலளிநீக்கு
 21. எவ்வளவு கொடுமை அனுபவித்து இருப்பார்.நம் அரசியல்வாதிகளை அப்படி விடவேண்டும்..கொடுமையாய் உள்ளது..

  பதிலளிநீக்கு
 22. மனதை தொடும் வண்ணம் இருந்தது. மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம் தான்..
  :-((

  பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...