Monday, June 7

4:19 PM
34

முன் குறிப்பு:

இதுவரை எனது தாம்பத்தியம் தொடர் பதிவின் முந்தைய  பகுதிகளை படிக்காதவர்கள் ஒருமுறை அவற்றை படித்தபின் இந்த பதிவினை தொடருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  இந்த பதிவின் நோக்கமே அனைவரையும் சரியான விதத்தில் இந்த விஷயம் சென்று அடையவேண்டும் என்பதுதான். எழுதியவை அனைத்தும்  கேட்டும், பார்த்தும் அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட  ஒன்றும்தான். குறை இருப்பின் பொறுத்துக்கொண்டும்,  நிறை இருப்பின் தட்டி கொடுத்தும் என்னை ஊக்கபடுத்துமாறு வேண்டுகிறேன்.

ஒரு குடும்பத்தில் பிரச்சனை  என்று வரும்போது கணவன், மனைவி  இருவரது இயல்புகளையும், தவறுகளையும்  கொஞ்சம் ஆராய்ந்து பார்த்த பின்னரே அவர்களின் பிரச்னைக்கு தீர்வை சொல்லமுடியும்.  அதுமாதிரி தாம்பத்தியம் தொடர்பான இந்த பதிவில் பெண்ணின் சிறந்த குணநலன்கள் மற்றும் நிறை குறைகளை கொஞ்சமாக முன்னர் பார்த்தோம்.

இப்போது ஆணின் சிறப்புகளையும், நிறை, குறைகளையும் தொடர்ந்து பார்ப்போம் 

வெளியில் தெரியாத ஆண்மை:

பலரின் எண்ணத்தில் ஆண்கள் என்றாலே முரடர்கள், ஆண் ஆதிக்க மனப்பான்மை கொண்டு பெண்மையை மதிக்காதவர்கள் , பெண்களை சுயநலத்திற்காக பயன்படுத்தி கொள்பவர்கள், சிறு கோபம் என்றாலும் பெண்மையை இழிவு படுத்த தயங்காதவர்கள் , குடும்ப பொறுப்பு இல்லாதவர்கள் , கெட்ட பழக்கம் அனைத்தும் கொண்டவர்கள் என்று பல விதமான தவறான கண்ணோட்டத்தில் நினைத்தே, பார்த்தே  நமக்கு பழகிவிட்டது. உண்மையில் இது அவ்வளவு சரி அல்ல என்பதுதான் பொதுவான என் கருத்து.  ஆண், பெண் அனைவருமே குறைகளுக்கு குறைந்தவர்கள் இல்லை. 

பெண்ணே காரணம்:

இன்றைய கால கட்டத்தில் ஆண்களின் பல தவறுகளுக்கும் ஒரு விதத்தில் பெண்களே காரணமாக இருந்துவிடுகிறார்கள்.  ஆனால் எந்த ஆணும் இதை வெளியே  சொல்வது இல்லை அதனால் தான் பல பெண்களும் வெளி பார்வைக்கு  இன்னமும் நல்லவர்களாகவே இருந்துவருகிறார்கள்.  பெண்மையை மதிக்க தெரியாத எந்த ஆணும் தவறானவன்தான்  அதே போல் ஆண்மையை மதிக்க தெரியாத பெண்மையும் 
வீண்தான்!!  


பெண்களை விட :


ஆண்களிடமும் பொறுமை, சகிப்புத்தன்மை, விட்டு கொடுத்து போவது போன்ற குணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.  ஆனால் பெண்களை போல் மனதில் இருப்பதை எல்லாம் வெளியில் கொட்ட தெரியாதவர்கள். அன்பையும் அழுத்தமாக சொல்லதெரியாதவர்கள்.  அதனாலேயே மனைவியிடம் அதிக அன்பு இருந்தும் வெளிபடுத்தாமல் போய்விடுவதால் தான் பல பிரச்சனைகள் உருவாகின்றன.


எல்லாம் புரிந்து இருந்தும் சிறுவயதில் இருந்து 'ஆண் பிள்ளை அழகூடாது' என்று பெரிதாக சொல்லியே வளர்க்க பட்டு வருவதால் அவர்களும் அன்பு, அழுகை போன்ற உணர்சிகளையும் மனதிற்குள்ளையே போட்டு அழுத்தி விடுகின்றனர்.  இந்த உணர்சிகள் ஆண், பெண் இருவருக்குமே பொதுவானவை.  வெளிபடுத்த  வேண்டிய  நேரத்தில்  வெளிபடுத்தாவிட்டால் மனதையும் சேர்த்து உடம்பிற்கும் அது கேடு பயக்கும்.


ஆண்களுக்கும்  உண்டு தாய்மை:


பெண்கள் ஆண்களை விட உயர்ந்தவர்கள்தான் தாய்மை என்ற மகாசக்தியை பெற்று இருப்பதால்  ! ஆனால் சாதாரண ஒரு பெண்ணையும் மகாசக்தியாக, தாயாக மாற்றுவது அந்த ஆண்மைதான் !!  ஒரு பெண் வயிற்றில் குழந்தையை சுமக்கும் அதே நேரம் அவளது கணவன் அந்த சுமையை தன் மனதில் சுமக்கிறான்.


மனைவி குழந்தை உண்டானதும் எல்லோரைவிடவும் சந்தோசத்தின் உச்சத்தை அடைவது அந்த கணவன்தான்......!  தனது ஆண்மை நிரூப்பிகபட்டதாக எண்ணி நெஞ்சை நிமிர்த்தி குதூகலம் அடைகிறான்......!  தன்னை கணவன் என்ற நிலையில் இருந்து தகப்பன் என்ற நிலையை அடைய கூடிய சந்தர்பத்தை கொடுத்த மனைவியை எண்ணி பெருமித படுகிறான்......!  அவனால் முடிந்தவரை அவளை சந்தோசமாக வைத்து கொள்ள முயலுவான்......!
பிடித்த பொருட்கள், பழங்கள், பூக்களை வாங்கி கொடுத்து அவளது மன தேவைகளை நிறைவேற்றி வைப்பதின் மூலம் அந்த மனைவிக்கு  அந்த கணவன் தந்தையாகிறான் !!
நிறைமாத வலியுடன் தவிக்கும் போது ஆதரவாக தன் தோளில் சாய்த்து ' நான் இருக்கிறேன் ' என்று சொல்லும்போதும், இதமாக கை, கால்களை பிடித்து விட்டு, சில நேரம் உணவு ஊட்டிவிடும்போதும் அந்த மனைவிக்கு அக்கணவன் ஒரு தாயுமானவன் !!
நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன் மனைவியுடன் இருந்து கண்ணின் மணிபோல் காத்து கொள்ளும் அவனில் தனது தாயையும், தகப்பனையும் ஒருசேர பார்க்கும் மனைவிக்கு தன் பிறந்த வீடு சில நேரம் மறந்துதான் போகிறது........!!


திருமண ஆன பெண்களை அவளது தாயே சில நேரம் வீட்டுக்காரனை பத்தி ஒரு வார்த்தை தப்பா சொல்ல விட மாட்டியே? விட்டு குடுக்காம பேசறியே? நேத்து வந்த அவன் பெரிசா போயிட்டானா ? அப்படின்னு சலிப்பா குறை சொல்வதை கேட்டிருக்கலாம். (அந்த பெண்கள் உண்மையில் கொடுத்துவைத்தவர்கள்!!)


சிலர் வேண்டுமானால் அவர்கள் வளர்ந்த சூழ்நிலையால் மாறுபடலாமே ஒழிய மனைவியை மனதில் சுமப்பவர்கள்தான் அதிகம்.


பிரசவ  நேரத்திலும் மனைவி வயிற்று வலியால் துடிக்க, கணவன் மனவலியால் துடித்து கொண்டிருப்பான்.  ஆண் என்பதால் வெளியில் தெரியாமல் கண்ணீர் விட்டவர் பலர்......!! தன் மனைவி படும் வேதனையை காணும்போதுதான் தன்னை பெற தன் தாய் எவ்வாறு கஷ்டபட்டிருப்பாள் என்பதை உணர்ந்து மானசீகமாக தன் தாயை வணங்குகிறான்.  மனைவிக்காக அதுவரை வணங்காத தெய்வங்களை எல்லாம் மனதிற்குள் பூஜிக்க தொடங்கிவிடுவான். (அந்த நேரத்தில் உணர்ச்சி வேகத்தில் சில வேண்டுதல்களைகூட கடவுளிடம் வைத்து விடுவான்)


ஆப்பரேசன் அறைக்குள் போவதற்கு முன் தன் மனைவியின் கரம் பற்றி, 'ஒன்றும் ஆகாது போய்வா ' என்று தைரியம் சொல்லி அனுப்பி விட்டு தனக்குள் சிறுபிள்ளையாய் கலங்குகிறான்....!  அவள் உள்ளே கதறும் சத்தம் கேட்க்கும் போதெல்லாம் தவிக்கிறான்.......!   பிரசவம் முடிந்து குழந்தை பிறந்ததும் எந்த கணவனும் முதலில் தன் குழந்தையை பார்க்க ஓடுவது இல்லை!  தன் மனைவி எப்படி இருக்கிறாள் என்றுதான்  பரபரப்புடன் மனைவியிடம் ஓடுவான்.  பிறகு அருகில் சென்று களை  இழந்து இருக்கிற தன் மனைவியின் முகத்தை பார்த்து அவள் கரம் பற்றி மென்மையாக வருடி ,   ' ரொம்ப கஷ்டபட்டியாமா '  என்று ஆதரவாக கேட்கும்போது அந்த மனைவியின் வலி, வேதனை அனைத்தும் அந்த நொடியே  மறைந்து போய்விடுமே!  அவளும் பெருமிதத்துடன் ,    "பரவாயில்லைங்க, நம்ம குழந்தையை பாருங்க"  என்று குழந்தையை நோக்கி கைகாட்டுகிறாள்.  இருவரும் சேர்ந்து ஒன்றாக குழந்தையை பார்க்கும் இந்த அற்புத காட்சியை பலர் அனுபவித்திருப்பார்கள்.  அன்பும், பாசமும், தாய்மையும் பிரவாகம் எடுத்து ஓடும் இந்த இடத்தில் பெரிய  காவியங்கள் கூட தோற்றுவிடுமே......!!!


தன்னையே உரித்து  வைத்திருக்கும் குழந்தையை கொடுத்த உனக்கு நான் என்ன கைமாறு செய்ய போகிறேன் என்று மனைவியை எண்ணி பெரும் உவகை அடைகின்ற  அந்த கணவனால் எப்படி  பின்னாளில் தன் மனைவியை வெறுத்து சண்டை போட இயலும் ? யோசிக்கவேண்டிய தருணம் ??


 தாய்க்கு பின் தாரம்:


இந்த வார்த்தைக்கு பலரும் பல அர்த்தம் கொடுக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரை ஒவ்வொரு ஆணும் தன் மனைவி இடத்து தனது தாயை தேடுகிறான் என்பதே...!  தன் தாயால் தனக்கு கிடைத்த அன்பையும், பாசத்தையும், அரவணைப்பையும் தனது மனைவியிடமும் எதிர்பார்க்கிறான்...!! இந்த அன்பும், பாசமும் மறுதலிக்க படும்போதுதான் ஏமாற்றம் ஏற்படுகிறது , ஏமாற்றம் கருத்து வேறுபாட்டில் கொண்டு வந்து விட்டு விடுகிறது .


   " பெண்கள் யாரை மனதார காதலிக்கிறார்களோ,  அந்த ஆண்கள்,
           அந்த பெண்கள் எதிரில் பச்சை குழந்தைகளாகி விடுவர்! "
                                                                                                                        -தாகூர்.


இந்த வார்த்தைகள் கணவன், மனைவிக்கும் பொருந்தும்.  பழைய காலத்தில் இருந்து இன்று வரை சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்  , தலையணை மந்திரம் போட்டுவிட்டாள் என்று...?!  அது வேறு எந்த தவறான அர்த்தத்திலும் சொல்லப்படவில்லை என்பதுதான் என் புரிந்துகொள்ளுதல் !!   அன்பால் தன் கணவனை கட்டிபோட்டு வைத்து இருக்கிறாள் என்பதே அதன் உள்அர்த்தம்!!


இப்படி அன்புக்கு கட்டுப்பட்டவர்கள் தான் இந்த அப்பாவி ஆண்கள்! இந்த அன்புதான் அவனுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது ! தைரியத்தை கொடுக்கிறது! கவலையில் துவண்டாலும் ஆறுதலை கொடுக்கிறது !  முரடான மனதையும் மென்மையாக மாற்றுகிறது !  கோபம் என்ற தணலையும் அணைக்ககூடிய நீராக இருக்கிறது ! மனைவி செலுத்தும் அந்த அன்பிற்காக தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் கொடுக்கவும் தயங்கமாட்டான் !!!


பின் குறிப்பு :  


ஆண்களின் நிறைகள் என்று பார்த்தால் இன்னும் சொல்லலாம், ஆனால் " ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் "      என்பதால் இது போதும் !!


அவர்களின் குறைகள் என்ன என்பதை அடுத்த பதிவில் பகிர்கிறேன்.  காத்திருங்கள்!!
                                                       *******************


                                  
Tweet

34 comments:

 1. பாராட்ட வார்த்தைகள் இல்லை. உங்கள் கணவர் மிகக் கொடுத்துவைத்தவர். உங்களை மனைவியாக அடைய

  ReplyDelete
 2. " பெண்கள் யாரை மனதார காதலிக்கிறார்களோ, அந்த ஆண்கள்,
  அந்த பெண்கள் எதிரில் பச்சை குழந்தைகளாகி விடுவர்! "
  தாகூரின் வார்த்தை எவ்வளவு எதார்த்தமானது.
  நீங்கள் பகிர்ந்தது அனைத்தும் அப்படியே கண் முன் தோன்றியது.அத்தனையும் உண்மை.

  ReplyDelete
 3. அன்பான கணவனை அடைந்த மனைவியர் அனைவருமே கொடுத்து வைத்தவர்கள்தான். பாராட்டுக்கு மகிழ்கிறேன் LK

  ReplyDelete
 4. asiya omar உங்களை நினைத்தேன் வந்துவிட்டீர்கள் தோழி! மிக்க நன்றி !!

  ReplyDelete
 5. பதில் என்ன சொல்துன்னே புரியல...கண்ணாடியை பார்த்த உணர்வு....

  ReplyDelete
 6. சகோ.ஜெய்லானி உங்கள் உணர்வுக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 7. மிக அருமையாக சொல்லிருக்கிங்க...அத்தனையும் உண்மை.....

  ReplyDelete
 8. இன்று தான் உங்கள் தளம் காண்கிறேன் போலும் அருமையாக் எழுதி யுள்ளீர்கள். நல்ல்தொருபுரிந்துணர்வு வாழ்த்துக்கள்.
  மேலும் பல பதிவுகள் போடணும். நன்றி

  ReplyDelete
 9. அழகாய் - அருமையாய் - அன்பாய் - விஷயங்கள் சொல்லி இருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!

  ReplyDelete
 10. menegasathia ஆம் உண்மைதான் தோழி . நன்றி

  ReplyDelete
 11. நிலாமதி உங்கள் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள்

  ReplyDelete
 12. chitra நன்றி தோழி

  ReplyDelete
 13. சரியாய் சொல்லி இருக்கீங்க உணமையிலேயே உங்கள் கணவர் கொடுத்து வைத்தவர் தான்
  சும்மாவா சொன்னார் கண்ணதாசன்
  மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் அப்படின்னு

  ReplyDelete
 14. S.Maharajan வாங்க நேற்றே எதிர் பார்த்தேன். எல்லா மனைவியரும், எல்லா கணவர்களும் கொடுத்து வைத்தவர்களாக இருக்க வேண்டும் என்ற எங்களின் பேராசைதான், இந்த பதிவை நான் எழுத காரணம் . நன்றி தோழரே

  ReplyDelete
 15. /// இன்றைய கால கட்டத்தில் ஆண்களின் பல தவறுகளுக்கும் ஒரு விதத்தில் பெண்களே காரணமாக இருந்துவிடுகிறார்கள். ஆனால் எந்த ஆணும் இதை வெளியே சொல்வது இல்லை அதனால் தான் பல பெண்களும் வெளி பார்வைக்கு இன்னமும் நல்லவர்களாகவே இருந்துவருகிறார்கள். பெண்மையை மதிக்க தெரியாத எந்த ஆணும் தவறானவன்தான் அதே போல் ஆண்மையை மதிக்க தெரியாத பெண்மையும்
  வீண்தான்!! ///

  சரியா சொன்னிங்க!
  உங்களுக்கு ஒரு ராயல்சல்யூட்...

  ReplyDelete
 16. எவ்ளோ பெரிய பதிவு ??? எப்படி மேடம் ஒரே நேரத்துல இவ்ளோ யோசிகிரிங்க ?

  அருமையான பதிவு மேடம்
  ஆகா , இனி குறைகளை வேற சொல்லபோரிகளா ?

  ReplyDelete
 17. ஆண்களின் நிறைகள் என்று பார்த்தால் இன்னும் சொல்லலாம், ஆனால் " ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் " என்பதால் இது போதும் !!
  ////////////

  அட நிறைய சொல்லுங்அ
  எப்பவாவதுதான் சொல்லுறாங்க

  ReplyDelete
 18. " பெண்கள் யாரை மனதார காதலிக்கிறார்களோ, அந்த ஆண்கள்,
  அந்த பெண்கள் எதிரில் பச்சை குழந்தைகளாகி விடுவர்! "
  -தாகூர்.

  என்னைக் கவர்ந்தவாசகம்....அருமை நன்றி....!

  ReplyDelete
 19. வாங்க சரவணன் வருகைக்கு நன்றி

  ReplyDelete
 20. அமைச்சருக்கு வந்தனம் . நிறைகளை சொன்னபோது கருத்து சொன்ன மாதிரி குறைகளுக்கும் சொல்லணும். நன்றி நண்பரே.

  ReplyDelete
 21. நீங்கள் சொன்னதுக்காக அடுத்த பதிவில் நிறைகள் கொஞ்சம் தொடரும். சரிதானே? வருகைக்கு நன்றி பிரபு

  ReplyDelete
 22. வருகைக்கு நன்றி ராமகிருஷ்ணன்

  ReplyDelete
 23. //பார்வைக்கு இன்னமும் நல்லவர்களாகவே இருந்துவருகிறார்கள். பெண்மையை மதிக்க தெரியாத எந்த ஆணும் தவறானவன்தான் அதே போல் ஆண்மையை மதிக்க தெரியாத பெண்மையும்
  வீண்தான்//

  இதுவும் சரிதான்.

  ReplyDelete
 24. http://blogintamil.blogspot.com/2010/06/blog-post_11.html

  :-)

  ReplyDelete
 25. வலைச்சரத்திலிருந்து படிக்கிறேன். தாம்பத்தியம் தொடர் அருமை.

  ReplyDelete
 26. அன்பின் கௌசல்யா

  ஆண்களின் குண நலன்கள் - நன்று நன்று -அடுத்த பாகம் என வேறு பயமுறுத்தல் - குறைகளைப் பற்றி

  நல்வாழ்த்துகள் கௌசல்யா
  நட்புடன் சீனா

  ReplyDelete
 27. இங்கே வந்ததுக்கும் நண்பர் ரோஸ்விக் நன்றி! உங்களின் தொடர் வருகைக்கு பெருமிதம் கொள்கிறேன்!!

  ReplyDelete
 28. வலைசரத்தில் என்னை அறிமுகபடுத்தியதுக்கு மிக்க நன்றி chitra

  ReplyDelete
 29. சின்ன அம்மிணி உங்களின் முதல் வருகைக்கு மகிழ்கிறேன். nanri

  ReplyDelete
 30. cheena (சீனா) வருகைக்கு நன்றி. நீங்கள் பயப்படும் அளவில் கண்டிப்பாக இருக்காது

  ReplyDelete
 31. அருமையான பதிவு. அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள். தொடருங்கள்.

  ReplyDelete
 32. அருமை ...அருமை ..அருமை ..

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...