சனி, ஏப்ரல் 10

கள்ளக்காதல் தவறில்லை இறுதி பாகம்

ழுத தூண்டிய பெண்கள்:

நான் இந்த தலைப்பை தேர்ந்துஎடுக்க இரண்டு பெண்கள் தான் காரணம், அவர்களின் தூண்டுதலின் பெயரில்தான் இதை எழுதவே தொடங்கினேன்.  அவர்கள் இருவரும் எனது சிறிய அளவு COUNSELLING மூலமாக தங்களது வாழ்வை திரும்ப மீட்டெடுத்தவர்கள்.  இப்போது இடையில் வந்த புது உறவை மறந்து சந்தோசமாக இருக்கிறார்கள். 

கவுன்செலிங்   :   

ஒருவேளை மனதளவில் சிறிது தடுமாற்றம் இருந்தாலோ ,  அல்லது கவுன்செல்லிங் தேவைப்படும் நிலையில் என் தோழிகள் இருந்தால் தயங்காமல் எனது இமெயிலில் தொடர்பு கொள்ளுங்கள்.   உங்களுக்காக காத்திருக்கிறேன்.   மேலும் உங்களது ஆலோசனைகளையும் வரவேற்கிறேன்.  

வெளிவரமுடியாத ஒரு நிலை: 

சிலரின் விசயத்தில் இந்த உறவில் இருந்து வெளியில் வர முடியாத ஒரு நிலை ஏற்படும்
எப்போது என்றால் அந்த ஆண் அல்லது பெண் ஒருவர்மீது ஒருவர் முறையான கணவன் மனைவி மாதிரி பாசமாகவும், அன்பாகவும், விட்டு கொடுத்து வாழ்ந்தும்,  ஒருவர் மற்றவருக்காக உயிரை விட கூட தயாராக இருப்பார்கள்.   இவர்கள் விசயத்தில் மாற்றம் என்பது உடனே வராது ஆனால் இரண்டு  குடும்பங்களின் சூழ்நிலைகாகவும், குழந்தைகளுக்காகவும்,  மனசாட்சிகாகவும் விடுபட நினைத்தால் கண்டிப்பாக முடியும் .

அதே நேரம் மனம், உடல் இரண்டும் சேர்ந்து மாறவேண்டும்.  இதற்கும் ஒரு நல்ல தீர்வை என்னால் கொடுக்கமுடியும்.  ஆனால் இதை விளக்கமாக பதிவில் எழுத இயலாது மெயில் மூலமாக கேட்பவர்களுக்கு சொல்லலாம் என்று இருக்கிறேன்.

பெண் ஒரு மாபெரும் சக்தி:

பெண் ஒரு சக்தி, அந்த சக்திஐ ஆக்கத்திற்கு பயன்படுத்த வேண்டுமே ஒழிய அழிவிற்கு பயன்படுதிவிடகூடாது.  இதை நான் சொல்லிதான் தெரியவேண்டும் என்பது இல்லை.  பலரும் ஒத்து கொண்ட உண்மை.  பெண்களின் திறமைக்கும், தைரியத்திற்கும், விடாமுயற்சிக்கும் எவ்வளவோ சாதிக்கமுடியும்.  

அதை விட்டுவிட்டு இந்த மாதிரி வேண்டாத உறவில் ஈடுபட்டு காலம் முழுவதும் குற்றஉணர்ச்சியுடன் வாழ்வதை விட,  கிடைத்த வாழ்க்கையை மேன்மை படுத்தி நம்மை மற்றவர்கள் பெருமையாக பார்க்கும்படி, புகழும்படி வாழ்ந்து முடிக்க வேண்டும்.   இந்த உறவை பாவம் என்று சொல்லும் அதே நேரத்தில்  இந்த பாவம் நம் பிள்ளைகளை போய் சேரும் என்பதை தாய்மை உள்ளம் படைத்த நாம் மறக்ககூடாது.


எச்சரிக்கை :

மேலும் சிலர் சொல்லலாம் , " எனக்கு எதை பற்றியும் கவலை இல்லை, என் சந்தோசம் தான் முக்கியம் என்று " ,  அந்த மாதிரி ஆட்களை ஒன்றும் செய்ய முடியாது,  ஆனால் ஒரு எச்சரிக்கை மட்டும் என்னால் கொடுக்கமுடியும்.  

நவீன தொழில் நுட்பத்தில் வந்த கேமரா போன்,  இப்போது பெண்களை என்ன பாடுபடுத்தி கொண்டிருக்கிறது என்பதை நான் சொல்வதை விட மீடியாக்களை பார்த்தாலே தெரிந்து கொள்ளமுடியும்.  இனி சிம்கார்ட் அளவிற்கு மைக்ரோ ரெகார்டிங் சிப் வரபோகிரதாம்.   


செல்போனில் பேசுவதை  கூட ரொம்ப யோசித்து பேசவேண்டிய காலநிலையில் இருக்கிறோம்.   எல்லோருமே நல்லவர்கள்தான் பணத்தேவை, மற்றும் இதர தேவைகள்  இல்லாதவரை.  உங்களுக்கு தெரியாமலேயே உங்கள் ரகசியம் வெளியேறிவிடும்.  பிறகு பலநாள் திருடன் ஒருநாள் அகபடுவான் கதைதான்.    எதற்கு வம்பு உங்களை நீங்களே சந்தோஷ படுத்திக்கொள்ள  முடியும்,  அப்படி இருக்கும் போது மூன்றாம் நபர் எதற்கு?  

" பாதகம் ஏற்பட வாய்ப்பு இல்லை, இந்த உறவால் நான் திருப்தியாக இருக்கிறேன்" என்று சொல்பவர்களுக்கு வேண்டுமானால் கள்ளகாதல் தவறில்லை,  ஆனால் மற்றவர்களுக்கு?!




6 கருத்துகள்:

  1. this is very glad to know you write this article with the heading 'kalla kaathal'.

    thanks.

    பதிலளிநீக்கு
  2. தலைப்பை பார்த்ததும் உற்சாகப்பட்டு பின்னூட்டம் எழுதிவிட்டேன். இப்போ ஆறு பகுதியும் படிச்சிட்டேன். நிரம்பவும் உற்சாகம் ஆகிட்டேன். நல்ல பதிவு. இது தொடர்பா நான் நேரம் கிடைக்கிறப்போ எனது தளத்திலும் எழுதுகிறேன். கள்ளக்காதல் பற்றி நானும் என் நண்பன் ஒருவனும் சேர்ந்து எழுதிய கவிதை புத்தகத்தில் முன்னுரையாக எழுதியிருந்தேன்.

    சமூகத்தின் மிக முக்கியமான உளவியல் பிரச்சனை இது. சரியான கோணத்தில் நுழைந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  3. அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள்.நீங்கள் சொல்வது போல காதலில் நல்ல காதல் எது..கெட்ட காதல் எது..உயிர்விடக் கூடிய அளவுக்கு காதல் எனில் அவளை அல்லது அவனை எது அங்கு கொண்டு தள்ளுகிறது எனவும்
    யோசிக்கவேண்டும். அல்லவா.

    பதிலளிநீக்கு
  4. இந்தப் பதிவுத்தொகுப்பின் பிற பகுதிகளை இன்னும் வாசிக்கவில்லை. நேரம் கிடைக்கும்போது வாசிக்கிறேன்.ஆனால் முதலில் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும், நன்றிகளும்.சமுதாயத்தின் சமீபத்திய,பண்பாட்டு, சமூகநலச் சீர்கேட்டுக்கு காரணமான, பயங்கரமான அவலமும், மிகச்சிலரே விவாதிக்க தயாராயிருக்கும் ஒரு கருத்துமான கள்ளக்காதலைத் தவிர்க்க உங்களின் சேவை தமிழ் நாட்டுக்கு இத்தருணத்தில் மிகவும் தேவை! உங்கள் வலைப்பக்கத்தை அறிந்தமைக்காக மகிழ்ச்சி அடைகிறேன். இத்தகைய சமூகநலம் சம்பந்தமான பல பதிவுகளை எழுதுங்கள். வாழ்த்துக்கள் பல....
    பத்மஹரி,
    http://padmahari.wordpress.com

    பதிலளிநீக்கு
  5. தற்செயலாகத்தான் உங்கள் பதிவை படிக்கும் வாய்ப்பு கிட்டியது. இந்த பதிவு முழுவதையும் படித்தேன்.
    இந்த பதிவில் உங்கள் கருத்து ஆரம்பித்தில் ஒரு விதமாகவும், முடித்தது வேறு விதமாகவும் இருப்பதாக எனக்கு தோன்றுகிறது. இந்த உறவு சரியா, தவறா என்பது அவரவர் மனதை பொறுத்த விஷயம். உண்மையான தாம்பத்ய வாழ்வின் அருமையை, இனிமையை அவர்கள் தங்கள் வாழ்கை துணையிடம் உணர முடியாமல், இந்த உறவில் உணர்ந்தால், அவர்கள் எந்த உறவை விட்டு விலகுவது நல்லது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? பொதுவாக நம் சமுதாயத்தில் இந்த உறவு சட்டப்படி குற்றம்தான். இது எல்லோருக்கும் தெரிந்ததே. அப்படி இருக்கும்போது, இல்லற வாழ்கையில் தங்கள் வாழ்கை துணையுடன் சரியான உறவு நிலை இல்லாதவர்கள், இது போன்ற உறவுகளில் ஈடுபடுவதுற்கு முன்பே ஏன் அவர்கள் ஒரு மன நிலை மருத்துவரையோ, நீங்கள் குறிப்பிடிருப்பது போல் ஒரு சிறிய கவுன்சிலிங் அல்லது வீட்டு பெரியவர்களிடம் முறையாக சொல்லி தங்கள் உறவை சரி செய்து கொள்ளலாமே. எதற்காக இப்படி ஒரு உறவை நாட வேண்டும்? இந்த உறவும் இரண்டு மனங்கள் சம்மந்த பட்டதுதானே. இது போன்ற உறவுகளில் ஈடுபட நினைப்பவர்கள். இதனால் வரும் விளைவுகளை ஏற்றுக்கொள்ள தைரியமும், மனப்பக்குவமும் கொண்டவர்களாக இருக்க வேண்டும். வெறும் உடல் உறவுக்காகதான் இது போன்ற உறவு என்று நினைப்பவர்களுக்கு, வேறு வழிகள் இருக்கிறது. தவறு என்றாலும், சிலர் இந்த உறவில் ஒரு ஆறுதல் அடைந்து, நிறைவையும் பெற்று, மனதிற்கு மருந்தாக அமைந்த இந்த உறவை, விட்டு விலகும்போது ஏதோ மிகப் பெரிய தவறு செய்தது போல் எண்ணி குற்ற உணர்வு கொள்வது, மனதை குணமாக்கிய மருந்தை வேண்டாத விஷத்தை பருகியது போல் நினைப்பதை ஒப்புக்கொள்ளவே முடியவில்லை. என்னதான் இந்த உறவு கள்ளத்தனமானாலும், இந்த உறவின் மூலம் அவர்கள் அடைந்த மன நிறைவும், ஆறுதலும் உண்மைதானே! அப்பொழுது அதற்கு மதிப்பே இல்லையா? இதற்கு மதிப்பு இல்லாத பட்சத்தில், தவறு என்று தெரிந்தும் இதில் ஈடுபட்டு, பின் இந்த உறவை ஒரு குற்ற உணர்வாக உணரும் பட்சத்தில், அவர்கள் இப்படி ஒரு உறவை ஏற்படுத்தி கொள்ளாமல் பழைய வாழ்கையையே வாழ்ந்திருக்கலாம் என்று சொல்ல தோன்றுகிறது.

    தாமதமாக படிக்க நேர்ந்ததால், தாமதமான பின்னூட்டம். மன்னிக்கவும்!

    பதிலளிநீக்கு
  6. //அதை விட்டுவிட்டு இந்த மாதிரி வேண்டாத உறவில் ஈடுபட்டு காலம் முழுவதும் குற்றஉணர்ச்சியுடன் வாழ்வதை விட, கிடைத்த வாழ்க்கையை மேன்மை படுத்தி நம்மை மற்றவர்கள் பெருமையாக பார்க்கும்படி, புகழும்படி வாழ்ந்து முடிக்க வேண்டும். இந்த உறவை பாவம் என்று சொல்லும் அதே நேரத்தில் இந்த பாவம் நம் பிள்ளைகளை போய் சேரும் என்பதை தாய்மை உள்ளம் படைத்த நாம் மறக்ககூடாது.//

    அருமை....நச்சென்று உள்ளது...
    தகாத உறவினால் காலம் முழுவதும் குற்ற உணர்வில்தான் வாழ்ந்தாகவேண்டும்!!!அதற்க்குப் பதில் நம்மிடையே பிரச்சனைகளை பேசி,பரஸ்பர அன்புடனும் புரிதளுடனும் வாழமுடியும்!!!
    ரஷீத்



    பதிலளிநீக்கு

போலி உறவுகளின் ஈர்ப்பு...!? தாம்பத்தியம் - பாகம் 33

"இந்த ஆம்பளைங்க  ஏன்  இப்படி இருக்காங்க...????"  ரிங் ஆன செல்போனை ஆன் செய்து ஹலோ சொன்ன அடுத்த செகண்ட் இந்த கேள்வி காதை அறைந்தது? ஆ...