இந்த கோடை காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடாமல் இருக்கமாட்டோம். அப்படி ஐஸ்கிரீம் ஐ பார்க்கும் போது எல்லாம் என் college life இல் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வரும். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
college இல் final year exam நடந்து முடிந்ததும் எங்களுக்கு நாங்களே பார்ட்டி வச்சுக்கலாம் என்று முடிவு செய்து நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு restaurent போனோம். அங்கே பபே முறை என்பதால் மிகவும் உற்சாகமாக உள்ளே சென்று அமர்ந்தோம். பல வித உணவு வகைகள் சூடாக வரிசையாக வைக்கபட்டிருந்தன. ஆளுக்கு ஒரு plate எடுத்து கொண்டு அவரவருக்கு வேண்டிய உணவுகளை எடுத்து போட்டு கொண்டு அந்த இடத்தையே அதகளம் பண்ணி சாப்பிட்டு கொண்டிருந்தோம்.
1 மணி நேரம் கடந்தும் எங்கள் பார்ட்டி முடிந்தபாடில்லை. இடையில் தண்ணீர் குடித்தால் அதிகமாக சாப்பிட முடியாது அதனால் கடைசியில் தான் குடிக்கவேண்டும் என்று ஆரம்பதில்லேயே எங்களுக்குள் அக்ரீமென்ட் வேறு போட்டு கொண்டோம். எல்லாம் நன்றாகதான் போய்கொண்டிருந்தது. ஆனால் ஐஸ்கிரீம் உண்டு என்பதும், அதையும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்பதும் எனக்கு இறுதியாகத்தான் தெரிந்தது.
என்ன பன்றது சென்னையில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் இந்த மாதிரி வெளி இடங்களுக்கு போய் பழக்கம் இல்லை . 15 வருடத்திற்கு முன்னால நாம எந்த மாதிரி இருந்தோம் என்று தெரியாதா......? ஒ.கே ஒ.கே விசயத்திற்கு வருகிறேன்.
இந்த ஐஸ்கிரீம் விஷயம் ஆரம்பத்திலேயே எனக்கு தெரிந்து இருந்தால் சாப்பாடு பக்கமே போய் இருக்கமாட்டேன். அந்த அளவிற்கு நான் ஐஸ்கிரீம் பைத்தியம். கொட்டற மழையில் கூட கிலோ கணக்கில முழுங்குவேன். இப்போது வயிறு full , இருந்தாலும் plate நிறைய எல்லா flavourரிலும் எடுத்து கொண்டு வந்து அமர்ந்தேன். ஒரு ஸ்பூன் உள்ளே போனதுமே திகட்டிவிட்டது.
என்னடா பண்ண என்று ஒரே feeling . அதிரடியா செயலில் இறங்கினேன் . 10 நிமிடத்தில் காலியாகிவிட்டது. எப்படி தெரியுமா? மீல்ஸ் வரிசையில் மோர் மிளகாய் இருப்பதை பார்த்தேன், அப்புறம் என்ன? மிளகாய் ஒரு கடி, ஐஸ்கிரீம் ஒரு ஸ்பூன், plate காலி.
இதை கவனித்த என் தோழியர் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர், பின் சுதாரித்து எனக்கு ஒரே பாராட்டு மழைதான் பின் அவர்களும் என் methodஐ follow பண்ண தொடங்கிவிட்டனர். எங்கள் அராஜகத்தை பார்த்த waiters ஒரு அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தனர். வேறு என்ன செய்ய முடியும்...? நாங்கள் 10 பேரும் cute teens அல்லவா...!?
இப்போதும் ஏதாவது பார்ட்டியில் பபே என்றால் பழைய நினைவு வராமல் இருக்காது. சுமைகள், வலிகள், வேதனைகள் இல்லாத, அப்படி இருந்தாலும் எதை பற்றியும் கவலைபடாத, கல்லூரி வாழ்க்கை பருவம் இப்போது நினைத்தாலும் இனிக்க கூடிய ஒன்றுதான்.
பாவிகளா... இப்படியும் ஒரு கூட்டம் ஐஸ் க்ரீம் சாப்பிட்டிருக்கே... :-)))))
பதிலளிநீக்குரோஸ்விக் நன்றி இங்கும் வருகைதந்ததிர்க்கு!!
பதிலளிநீக்கு//கொட்டற மழையில் கூட கிலோ கணக்கில முழுங்குவேன்.//
பதிலளிநீக்கு:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))),
approximate ஆ எத்தனை கிலோ??
:))
கோவை குமரன்...
பதிலளிநீக்கு//approximate ஆ எத்தனை கிலோ??//
நீங்க வாங்கி கொடுப்பது என்றால் சொல்கிறேன்....அதிகம் இல்லை....ஒரு நூறு கிலோ மட்டும் இப்ப போதும்... காலி பண்ணிட்டு மறுபடி சொல்வேன் .... deal ஓ.கேதானே
:))
///நூறு கிலோ///
பதிலளிநீக்குtoooooo much...think about ur health madam..
we dont want to miss sweet kavithai நீங்க எழுதுறதை சொல்றேன்...:))
very maximum 2 per day allowed(doctor advise)
கோவை குமரன்...
பதிலளிநீக்குthank u for ur advice :)))