புதன், மார்ச் 17

5:34 PM       " எத்தனை சோதனைகள்
         என் காதல் மீது 
         மனதை கேட்டுபார் 
         உன் உயிர் சொல்லும் 
         நான் உன் மீது கொண்ட 
         காதலை, நம்பிக்கையை "

     "  மௌனமாய் இருக்க 
         மனதும் இடம் 
         கொடுக்கவில்லை, 
         விடை பெற பாதையும்
         தெரியவில்லை. 
         என்னை சித்திரவதை 
         செய்வதை விட, உன்
         கையால் கொன்றுவிடு  "

      "   நேரில் நீ வரும்போது பேச
          பல நினைத்து ஒத்திகை பார்த்து 
          காத்திருப்பேன்,  கடைசியில் ஒரு
          வார்த்தையும் பேசாமல் அந்த நாள் 
          முடிந்து போகும்!,  
          கேள்விகள் கேட்க மறந்து 
          பேசாமல் உன்னை அணைத்து கொண்டு 
          மெய் மறந்து மடியில் கிடப்பேன்!!  "

       "  என் மனதில்  இன்னும் மாறாமல் இருக்கிறது,   
                   நாம் சேர்ந்து வாழ்ந்த இனிய நாட்கள் !
          கொஞ்சி பேசி மகிழ்ந்த நேரங்கள்!
                   செல்லமாய் சண்டை போட்ட நிமிடங்கள்!
          கோபத்தில் கொட்டி தீர்த்த வார்த்தைகள்! 
                   மறுபடி சமாதானத்தில் ஒன்று கலந்த உணர்வுகள்!
          பேசிய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்ட தருணங்கள்! 
                    கண்களால் மட்டுமே பார்த்து கழிந்த பொழுதுகள்! 
          பிரிவின்போது தவித்த துடித்த நெஞ்சம்! 
                    எதுவுமே மாறவில்லை மறைவில்லை, 
          ஆனால் நீ மாறிவிட்டாய், மறைந்து விட்டாய்??. 

                                                                                                         இன்னும்   தொடரும்......  
Tweet

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

Related Posts Plugin for WordPress, Blogger...