Friday, May 1

9:56 AM
24
2 1/2 வயது குழந்தை பருவத்தில் Tnpsc குரூப் ஒன் தேர்வுக்கான 1000 வினா விடைகளை ஒப்பித்து தொடங்கிய இவளது சுட்டித்தனம் கணினித் துறையில் 5 உலகச் சாதனைகளை செய்தும் இன்னும் திருப்தி அடையவில்லை... அடுத்து என்ன என்ன  என்று தேடி ஓடிக் கொண்டே இருக்கிறாள்... பல உயரங்களை வெகு சுலபமாக தொட்டு முன்னேறிக் கொண்டே செல்கிறாள். இவள் பெற்ற பரிசுப் பொருட்கள் , கேடயங்கள், கோப்பைகள், சான்றிதல்கள், வாழ்த்துரை இதழ்களால் வீடு நிரம்பிக் கிடக்கிறது. பிரபல தொலைக்காட்சி சேனல்கள், பத்திரிகை, தினசரிகளில் விசாலினியின் பேட்டி எடுத்து மகிழ்ந்தன...நானும் என் பங்கிற்கு 3 வருடத்திற்கு முன்பு ஒரு போஸ்ட் போட்டிருந்தேன். மூன்று வருடங்களாக பல்வேறு கணினி  தேர்வுகளை தொடர்ந்து எழுதி தேர்ச்சிப் பெற்று வரும் இவளது சாதனைகளை என்னால் முழுமையாக எழுதி முடியாது என்பதால் சிறு குறிப்பு மட்டும் இங்கே, தவிரவும் அடுத்த சிகரம் ஒன்றை நாளை(மே 2ஆம் தேதி) தொட இருக்கிறாள் அதற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கவே இந்த பதிவு.

சாதனைகள் சிறப்புகள்

BTech MTech BE மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்ததோடு மட்டுமல்லாமல் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், கணினி துறைத் தலைவர்கள் ஆகியோர்களுக்கும் வகுப்புகள் எடுத்திருக்கிறாள். இதுவரை மொத்தம் 25 இன்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களில் செமினார்கள், வகுப்புகள், கலந்துரையாடல்கள் என நடத்தி இருக்கிறாள். கணினி நிறுவனங்களுக்கும்  சிறப்பு அழைப்பாளராக சென்றிருக்கிறாள். இதுவரை 127 மேடைகளில் உரையாற்றி இருக்கிறாள்.

சென்னை மவுண்ட்ரோட்டில் இருக்கும் இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின்  தலைமை அலுவலகத்தின் நிர்வாக அதிகாரி திரு.ஆனந்தகுமார் அவர்களின் அழைப்பின் பெயரில் அங்கு பணிபுரியும் ஐடி துறைசார்ந்த(IT professionals) 17 பேருக்கு Cloud Computing and networking என்பதை பற்றி இரண்டு மணி நேரம் வகுப்பு எடுத்திருக்கிறாள். (இதை குறித்த முழு விவரங்கள் அவளது இணையதளத்தில் இருக்கிறது)

மேலும் பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள இந்தியன் ஓவர் சீஸ் வங்கியில் Prestigious customer என்று குறிப்பிட்டு இவளது  புகைப்படத்தை வைத்திருக்கிறார்கள். பொதுமக்கள் யாருக்கும் இல்லாத தனி சிறப்பு இது.

இதுவரை 8 சர்வ தேச கணினி மாநாடுகளில் தலைமை விருந்தினராக கலந்துக் கொண்டு (Keynote Address) உரையாற்றி இருக்கிறாள்.   அடுத்ததாக 9வது முறையாக நாளை அதாவது மே 2ஆம் தேதி சனிக்கிழமை அன்று டெல்லியில் நடைபெற இருக்கும் 'கூகுள் நிறுவனத்தின் சர்வதேச உச்சி மாநாட்டில்' சிறப்புரை ஆற்ற அழைக்கப் பட்டிருக்கிறாள். கணினி துறையில் Cloud Computing in Google Apps for Education என்ற தலைப்பில் காலை 10.30  - 11.30 ஒரு மணி நேரம் உரை ஆற்றுகிறாள். கூகுள் நிறுவனம் இச்சிறுமிக்காக  ஒதுக்கிய ஒருமணிநேர கால அளவு என்பது வெகு சிறப்பு வாய்ந்த ஒன்று.       

மேலும் இந்த உச்சி மாநாட்டில் ஜப்பான் சாகா பல்கலைக்கழக பேராசிரியர் ஆன்ட்ருமியர்காப் (Andrew Meyerhoff) மற்றும் பிட்ஸ்பிலானி (BITS Pilani) பல்கலைக்கழக கணினிதுறைத்தலைவர் Dr. ராகுல்பானர்ஜி ஆகியோரும் உரையாற்ற உள்ளனர்.

கூகுள் நிறுவனத்தின் சர்வதேச உச்சிமாநாட்டில் 14 வயது பள்ளிமாணவி சிறப்புரை ஆற்றுவது என்பது இதுவே முதல்முறை என்பது தமிழர்கள் நமக்கெல்லாம் பெருமை.

கணினி கல்வியில் இவ்வளவு சாதனைகள் புரிந்துக் கொண்டிருக்கும் விசாலினி IIPE லட்சுமி ராமன் மெட்ரிக் பள்ளியில் 9 வது வகுப்பில் படிக்கிறாள் என்பதை விட இருக்கிறாள் என்பது சரியாக  இருக்கும் தானே :-)  

நண்பர்கள் விசாலினிக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்பினால்,
மெயில் ஐடி - goldengirlvisalini@gmail.com 
மொபைல் எண் +91 94864 60561, +91 98414 77920

விசாலினியின் இணையத்தளம்
http://www.kvisalini.com
 
தமிழ்நாட்டின் திருநெல்வேலியை சேர்ந்த தமிழ்ப்பெண் விசாலினி மேலும் பல சாதனைகளை படைத்து தமிழர்களுக்கு மென்மேலும் பெருமை சேர்க்க வேண்டுமென வாழ்த்துகிறேன். 

பிரியங்களுடன் 
கௌசல்யா 
Tweet

24 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...