திங்கள், டிசம்பர் 8

AM 9:12
15

ஒரு குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு நபருக்குமே  விதவிதமான தனிப்பட்ட பிரச்சனைகள் சிக்கல்கள் இருக்கின்றன. மூன்று பேரே வசிக்கும் சிறிய குடும்பமாக இருந்தாலுமே ஒருவரின் மன சிக்கல் மற்றொருவருக்கு தெரியாத அளவிற்கே இன்றைய சூழல் இருக்கிறது.. எந்த வயதினராக இருந்தாலும் கண்டுக்கொள்ளப் படாமல்  தனித்து விடப்படும் ஆணோ பெண்ணோ, தவறான வழியை நோக்கி எளிதாக ஈர்க்கப்பட்டு விடுகின்றனர். ஒரு முறை தவறியவர்கள் மீண்டெழுவது கடினம். சம்பந்தப்பட்ட நபர் தவறான பழக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பதே அவரின் வீட்டினருக்கு தெரிவதில்லை, நிலைமை முற்றியபின் ஐயோ இப்படி ஆகிபோச்சே என்று அரற்றுவதில் பயனென்ன?!!

குடும்ப உறுப்பினரின் நடவடிக்கையில் சிறு மாற்றம் தெரிந்தாலும் உடனே எச்சரிக்கை ஆவது எத்தகைய அவசியம் என்பதை ஒரு பெண்ணின் பரிதாப வாழ்க்கை எனக்கு புரியவைத்துவிட்டது. மாணவர்கள் மட்டுமல்ல குடும்பப் பெண்களிடமும் தாராளமாக இப்பழக்கம் இருக்கிறது என்பதும் அதனால் அவர்களின் குழந்தைகள் படும் துன்பங்கள் மிக கொடுமை என்பதையும் நேரில் கண்டு  அதிர்ந்தேன். அதை பிறருக்கு தெரிவித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த கட்டுரை.

அபாயகரமான ஒரு போதைப் பழக்கம் / inhalant addiction ..


சிறுப் பிரச்சனைகளில் இருந்து வெளிவருவதாக எண்ணிக் கொண்டு போதையில் விழுந்து தீரா துன்பத்திற்கு ஆளாகி விடுகிறார்கள்.   

விலை மலிவு, எளிதாக கிடைக்கக் கூடிய ஒரு போதைப் பொருள் தான்  Whitener அல்லது correction fluid எனப்படும் வெண்ணிற திரவம்

சில துளிகளை கர்ச்சீபில் தெளித்து பின் அதை முகர்ந்து பார்ப்பதன் மூலமும் பாட்டிலை திறந்து ஆழ்ந்து உள்ளிளுப்பதன் மூலமும் போதை ஏற்படுகிறது. எல்லா டிபார்ட்மென்ட் ஸ்டோரிலும் எளிதாக கிடைக்கக் கூடியது. சிறு குழந்தைகள் சென்றும் வாங்கலாம், ஒரு சில கடைக்காரருக்கே இது ஒரு போதை பொருள் என தெரிய வாய்ப்பில்லை. தவிரவும் பான் மசாலா, பெட்டிக் கடைகளிலும் தெரிந்தே இப்பொருள் விற்கப் படுகிறது.  

பொதுவாக தட்டச்சு எந்திரங்கள் பயன்பாட்டில் ள்ள அலுவலகங்கள் மற்றும் வேறு இடங்களிலும் வலம் வந்தது இந்த வெண்ணிற திரவம். கம்பியுட்டர், பிரிண்டர், ஸ்கேனர் என்று மாறிய பின் இந்த fluid whitener பயன்பாடு  பள்ளி மாணவர்களிடையே அறிமுகமாகியது. தவறான எழுத்துக்களை அழிக்க  இந்த திரவத்தை நோட்டு புத்தகத்தில் தடவ அப்போது அதில் இருந்து வரும் வாசனை  மீண்டும் மீண்டும் அதையே நுகர  தூண்டியுள்ளது. அப்படித்தான்  ஆரம்பித்தது இந்த  போதை பழக்கம்..

அந்த பெண்ணிற்கு திருமணம் முடிந்து இரு குழந்தைகள் பிறந்த பிறகும் இப்பழக்கத்தை விடாமல் அதிகமாக நுகரத் தொடங்கினார். அதற்கு வசதியாக  சூழ்நிலைகளும் அமைந்தன. கணவர் இந்த பழக்கத்தை கண்டுப்பிடித்து கண்டிக்க ஆரம்பித்தார். சிறிது காலம் மறந்ததை போல இருந்துவிட்டு கணவர் வெளிநாடு சென்றதும் மீண்டும் ஆரம்பித்தாள். பாட்டில்களாக வாங்கி குவித்து இதுவரைக்கும் ஒரு லட்சத்திற்கும் மேல் செலவு செய்திருக்கிறாள் என்று அவளது தாய் சொன்னபோது என்னால் நம்பவே முடியவில்லை. குழந்தைகள் இருவரும் பாட்டி, தாத்தா வீட்டில் வளர்ந்து வருகிறார்கள். போதை மயக்கத்தில் இருக்கும்போது அருகில் வரும் குழந்தைகளை அடிப்பதும், கண்டபடி திட்டுவது, பொருட்களை அவர்கள் மீது வீசி எறிவதுமாக இருந்திருக்கிறாள், பயந்து போன இவளது தாய் பேரக்குழந்தைகளை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டார்கள்.

வசதிக்கு குறைவில்லாத வீடு, வேலைக்கு ஆட்கள், தனிமை எல்லாம் வாய்ப்பாக அமைய ஒரு நாளைக்கு நாலு, ஐந்து பாட்டில்கள் என காலியாயின. இவளது நடவடிக்கை மோசமாக செல்வதை புரிந்துக் கொண்ட கணவன் மாமியார் வீட்டிற்கு சென்று குழந்தைகளை மட்டும் பார்த்து விட்டு வெளிநாடு போய்விடுவானாம். ஆரம்பத்தில் இதில் என்ன இருக்கிறது என்ற இந்த பெண்ணின் ஆர்வம் இப்போது ஒரு மன நோயாளியாக்கி விட்டது. கணவனை, குழந்தைகளை பிரிந்தாள், ஆனால் தன்னால் தனது குடும்பமும் சிதறி போனது பிள்ளைகள் தவிப்பது என இவை  எதை பற்றியும் கவலையின்றி தனக்குள் சிரிக்கிறாள், பேசுகிறாள்...பேசிக்கொண்டே இருக்கிறாள் !!?

இவள் மட்டுமல்ல இவளை போல பலர் இன்று இந்த பழக்கத்திற்கு அடிமையாகி மீள முடியாமல் கிடக்கிறார்கள். நம் நாட்டில் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் மட்டும் இதற்கு அடிமையானோரின் எண்ணிக்கை 8000 சிறார்கள் என்கிறது ஒரு சர்வே. ஒவ்வொரு மாதமும் 30 சிறார்கள் போதை பொருள் மறுவாழ்வு மையத்திற்கு சிகிச்சைக்கென வருகிறார்கள். குடிசைப்பகுதி மற்றும் இளம் குற்றவாளிகள் மத்தியில் இப்பழக்கம் மிக வேகமாக பரவி வருகிறது.   

ஒரு 15ml bottle ரூபாய் 30/- க்கு கிடைக்கிறது. Whitener மட்டுமல்ல, நெயில் பாலிஷ் ரிமூவர் , ஷூ பாலிஷ் திரவம், பெயின்ட் தின்னர்  போன்றவற்றையும் முகர்ந்து மயக்க நிலைக்கு செல்கிறார்கள். இந்த பொருட்களில் உள்ள ரசாயனம் முகர்ந்த உடன் நேரடியாக மூளையை சென்றடைகிறது. இத்தகைய உடனடி போதை பல குற்றங்களை செய்யத் தூண்டுகிறது. காசு கேட்டு கொடுக்காத தந்தையை கத்தியால் குத்தியுள்ளான் சிறுவன் ஒருவன், காரணம் இந்த Whitener போதை. பல குற்றச்  சம்பவங்களின் பின்னணியில் இந்த Whitener பங்கு வகிக்கிறது.

தற்போதைய ஆய்வுகளின் படி மத்திய நடுத்தர குடும்பத்து பிள்ளைகளே இப் பழக்கத்திற்கு அதிகளவில் அடிமையாகின்றனர். ஆர்வகோளாரில் ஆரம்பிக்கும் பழக்கம் வாழ்க்கையின் அஸ்திபாரத்தையே ஆட்டம் காணச் செய்து விடுகிறது.

கேரள மாநில காவல்துறை நீதிமன்றத்தில் சமர்பித்த ஒரு அறிக்கையில் சொல்கிறது இந்த whitner முகர்தல் பழக்கம் நாளடைவில் குடிபழக்கத்திற்கு அடிமையாக்கிவிடும் என்று.


13முதல் 17 வயது மாணவர்கள் மத்தியில் இந்த Inhalant போதை பழக்கம் தடுக்க இயலாதபடி வேகமாக பரவிவருவதால் இதற்கெதிராக ஒரு பெட்டிஷன் நார்கொடிக்ஸ் மையத்தில் அளிக்கப்பட்டு உள்ளதாம் .இதைப்பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்குகள் மக்கள் மத்தியில் பரவ வேண்டும் .

பதின்ம வயது எதையாவது செய்து தனித் தன்மையை நிலைநாட்ட வைக்க முற்படும் வயது. அந்த வயதில் புதிய அனுபவங்களை மனம் நாடும். எல்லைகளையும் தடைகளையும் உடைக்க சொல்லும் பருவம். அதை கவனமுடன் கையாள வேண்டும். குறிப்பாக பெற்றோர் பிள்ளைகள் மத்தியில் அன்பாகவும், அனுசரணையுடனும்  நடந்துக் கொள்ளவேண்டும். பெற்றோர் தங்கள் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதை உற்று கவனிக்க வேண்டும். இந்த Inhalant போதை பழக்க விஷயத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் தெருவோர பிள்ளைகள் இருவரும் அடிமையாகி உள்ளனர்

இதன் தீமைகள்

* இந்த வெண்ணிற விஷம் எழுத்துப் பிழைகளை  மட்டும் அழிப்பதில்லை !மனித மூளையின் ஞாபக சக்தியையும் அழிக்க வல்லது .

* மனநிலை பாதிப்பு ஏற்படும்.  இதயம், நுரையீரல்,மூளை,கிட்னி, ஈரல் போன்றவை பாதிக்கப்படும்.

* இந்த காரத் தன்மையுள்ள டொலூவீன்  மற்றும் trichloroethane,  நுகர்வுக்கு பின் எட்டு மணி நேரத்துக்கு போதைத் தன்மை உண்டாகும். இதிலுள்ள ஹைட்ரோ கார்பன்கள் இரத்தத்தில் உடனடியாக கலந்து மத்திய நரம்பு மண்டலத்தை அடைகின்றன. 

தனக்குள்ளே சிரிக்கும் செயல் ஒரு வித ஹாலுசினேஷன் நிலை, அதாவது  தன்னிலை மறப்பது . இந்த போதை பழக்கத்தின் விளைவுகளில் இதுவும் ஒன்று .

* தூக்கமின்மை, பேச்சு குளறுதல், தடுமாற்றம், ஞாபக மறதி ,மங்கலான பார்வை, தலைவலி, சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பது, முன்னுக்கு பின் முரணாக நடப்பது.

* இதய துடிப்பு சீராக இல்லாதவர்களுக்கு உடனடி மரணம் ஏற்பட அதிக வாய்பிருக்கிறது.

* தற்கொலை செய்துக் கொள்பவர்களில் 40 சதவீதத்தினர் இப்பழக்கம் மேற் கொண்டவர்கள் ஆவர். காரணம் தெரியாத பல தற்கொலைக்கு இது ஒரு காரணமாக இருக்கலாம்.

எவ்வாறு கண்டுபிடிக்கலாம்

அவர்களின் கர்ச்சீப்பில் வெண்ணிற/வேறு நிற கரை இருக்கிறதா, வாசனை வருகிறதா என கவனிக்கலாம். 

பிள்ளைகளின் ஆடைகளில் எண்ணெய், பெயிண்ட் கரை இருப்பதன் மூலமாக, வாய் பகுதியை சுற்றி புள்ளிகள் கொப்பளங்கள் ஏற்பட்டிருந்தால்,  கடுமையான ஜலதோஷம் மற்றும் சுவாசத்தில் கெமிக்கல் வாசனை தெரிவதன் மூலமாகவும் கண்டு உணரலாம்.
இதற்கென்று எந்த ஒரு தனிப்பட்ட மருத்துவமும் இல்லை என்பது இதன் சோகம்.


ஒருவர் தவறான பழக்கத்தில் ஈடுபட காரணம் எதுவாக இருந்தாலும் வீட்டினரின் அன்பும் அக்கறையும் கவனிப்பும் இருந்தால் மட்டும்தான் சரி செய்யமுடியும். உங்கள் குழந்தை இப்பழக்கத்திற்கு ஆளாகி இருப்பது தெரியவந்தால் முதலில் அவசரப்படாமல் உங்கள் குழந்தையை அமைதியாக அணுகுங்கள். ஆத்திரப்பட்டு வார்த்தைகளை கொட்டுவதோ, அடிப்பதோ கூடவே கூடாது. அவ்வாறு நடந்துக் கொண்டால் அவர்களின் இதயத் துடிப்பு அதிகரித்து மேலும் சிக்கலாகிவிடக் கூடும், எச்சரிக்கை. ஒரு முறை நுகர்வது கூட மரணத்திற்கு இட்டுச் செல்லும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

போதைக்கு அடிமையாக வெவ்வேறு காரணங்கள் இருந்தாலும் போதை பொருளின் தன்மை ஒன்றே , அது தீயது அதை தேர்வு செய்த பாதையும் தவறே !!


என்ன செய்யப் போகிறோம் நாம் ??!! குறைந்தபட்சம் நம் வீட்டுப் பிள்ளைகளை மட்டும் கவனித்தால் கூட போதும் !!

News :http://www.mid-day.com/articles/whitener-sniffing-teens-caught-with-us-made-pistol/15088096
                              * * * * * 


பின் குறிப்பு


இந்த போதைப் பொருளைப்  பற்றி எழுதி இதுவரை தெரியாதவர்களுக்கு தெரியவைத்து விடுவோமோ என்ற தயக்கத்திலேயே கடந்த மூன்று வருடமாக எழுதாமல் இருந்தேன். ஆனால் வெகு தாராளமாக இன்று பள்ளி கல்லூரிகளில் நடமாடுகிறது என்பதை அறிந்த பின்பே இதன் தீமைகளை பற்றி எழுதாமல் இருக்கக் கூடாது என்ற முடிவிற்கு வந்தேன். தயவு செய்து இப்பதிவை படித்தவர்கள் பிறருக்கும் இப்பழக்கத்தை பற்றி பகிர்ந்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். நன்றி.

இக்கட்டுரையை எழுத உறுதுணையாக இருந்த தோழி Angelin க்கு என் நன்றிகள்.

கௌசல்யா...
Tweet

15 கருத்துகள்:

  1. ஒவ்வொரு பயனுள்ள பொருளின் பின்னாலும் இப்படி ஒரு கொடூரமான மறுபக்கம் இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது சகோதரி.

    பதிலளிநீக்கு

  2. உலகம் எங்கே போகிறது! நாம் எங்கே போகிறோம்! பதிவைப் படித்ததும் மனம் துடிக்கிறது! வருங்கால சந்ததியை நினைத்தால் வருத்தமே மிஞ்சுகிறது!

    பதிலளிநீக்கு
  3. நீங்க என்ன சொல்றீங்க ஆர்கானிக் சால்வண்ட்ஸ் டாலுவீனும், ட்ரைக்ளோரோ எத்திலீனும் "போதைப் பொருள்" என்றா??

    I find this funny!

    We have liters of Toluene and Trichloroethane in our lab! Never thought of those as a "narcotic" or "drug"! They are generally considered as "toxic". That's all!

    பதிலளிநீக்கு
  4. நானும் பல பதிவுகளில் ஓரிரு வரிகளில் எழுதலாம் என்று பலமுறை நினைத்ததுண்டு... ஆனால் வேண்டாவே வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டேன்...

    அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விழிப்புணர்வு பகிர்வு... பகிர்கிறேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
  5. @Varun...thanks for stopping by we appreciate your feedback..let me clear this first. Whitener exerts its effects through trichloroethane, a volatile solvent. Correction fluids are composed of an opacifying agent, a polymeric film former, a solvent and other miscellaneous ingredients. Organic solvents are psychoactive. They act upon the central nervous system

    பதிலளிநீக்கு
  6. The toluene and trichloro
    ethane help to intoxicate and apparently the addicts experience a kick for five to eight hours, depending on the intensity and quantity of the inhalation///
    ட்டு மணி நேரத்துக்கு போதைதன்மை உண்டாகுமாம்/ இருக்கும் என்று எழுதியிருக்கணும் :)

    பதிலளிநீக்கு
  7. The chemical toluene is what affects the sniffer as it has a hallucinatory effect on the sniffer. நிறைய லிங்க்ஸ் படிச்சி தான் விவரம் சேகரித்தேன் அறிவியல் மற்றும் இரசாயனங்கள் பற்றி எளிய முறையில் விளக்கம் தரது நல்லது ரொம்ப ஆழமா போனா யாருக்கும் புரியாதுன்னு சுருக்கினேன்

    பதிலளிநீக்கு
  8. இதோ அந்த லின்க்க்ஸ் http://www.facenfacts.com/NewsDetails/20091/children-of-a-lesser-god...-on-kolkatas-streets.htm

    http://www.bangaloremirror.com/bangalore/others/School-kids-getting-high-on-whitener-sniffing/articleshow/27691379.cms
    http://economydecoded.com/2013/10/abuse-substances.html

    பதிலளிநீக்கு
  9. http://daily.bhaskar.com/news/MP-BHO-rampant-drug-addiction-whitener-sniffers-not-easily-detected-3014542.html

    http://www.inhalants.org/guidelines.htm
    http://www.childlineindia.org.in/children-affected-by-substance-abuse.htm

    http://timesofindia.indiatimes.com/city/indore/Partial-ban-on-whitener-sale-over-addiction-fears/articleshow/23207436.cms

    i was totally shattered after reading the effect of this whitener on kids
    .

    பதிலளிநீக்கு
  10. http://daily.bhaskar.com/news/MP-BHO-rampant-drug-addiction-whitener-sniffers-not-easily-detected-3014542.html

    http://www.inhalants.org/guidelines.htm
    http://www.childlineindia.org.in/children-affected-by-substance-abuse.htm

    http://timesofindia.indiatimes.com/city/indore/Partial-ban-on-whitener-sale-over-addiction-fears/articleshow/23207436.cms

    i was totally shattered after reading the effect of this whitener on kids
    .

    பதிலளிநீக்கு
  11. நாங்க இன்னும் ஒரு பதிவும் எழுதுவோம் உங்களுக்கு டைம் இருந்தா சிஷா பற்றிய தகவல் இருந்தா கொடுங்க ,வருண் , இப்போது புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. Angelin: I do understand that it affects CNS and gives a "high" when kids inhale that "whitener solvents". I am just surprised kids wants to get "high" like this.

    These days people use Toluene instead of benzene in the labs because benzene causes cancer! So, I am used to thinking that "benzene is a bad guy" but "toluene is not such a bad guy"!

    And these problems seem like exist mainly in India and with Indian kids.

    ஒரு சில பெண்களுக்கு சாம்பல் சாப்பிடுகிற அடிக்சன் இருக்கும்னும் சொல்லுவாங்க. அதுபோல் இதுவும் போல! :) Well,

    பதிலளிநீக்கு
  13. தில்லியிலும் இது பரவலாக இருக்கும் ஒரு பிரச்சனை. பல பேப்பர் பொறுக்கும் சிறுவர்கள் இப்பழக்கத்திற்கு அடிமையாக இருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  14. அக்கா,
    இந்த வேதிப் பொருட்களை நாங்கள் எங்கள் ஆய்வகத்தில் லிட்டர் லிட்டராக பயன்படுத்தி உள்ளோம். டொலுவீன், ட்ரைக்லோரோ எத்திலீன் ஆகியவை வாடை அடிப்பவை. அது எங்களுக்கே பிடிக்காது. இதில் போதை வேறு இருக்கா?
    நகப் பூச்சு அழிப்பானில் உள்ளது எதில் ஆல்கஹால் (குடிக்கும் சாராயம் தான்!!!) மற்றும் அசிடோன்.
    எதில் தான் போதை காண்பதுன்னு விவஸ்தை இல்லையா மக்களுக்கு?????
    On a serious note Toluene, like most aromatic compounds, is a Carcinogen. It causes cancer.
    Bhuvanesh

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...