பதிவுலகம் எனக்கு நிறைய நல்ல உறவுகளை
கொடுத்திருக்கிறது. சகோதர உறவு என்பதிலும் தன்முனைப்பு தலைத்தூக்கும் நட்புகள்
வந்த வேகத்தில் நின்றும் விடும். மனம் பார்த்து மலர்ந்த நட்பு ஒன்று தான்
தொடரும் நிலைக்கும் என்பதற்கு உதாரணமாகவும் சொல் செயல் எண்ணம் அனைத்திலும் சக மனிதர்களின் மீதான அக்கறை, அன்பும் கொண்ட
எனக்கு தெரிந்தவர் ஒருவர் உண்டு.
இருவருக்குமான சந்திப்பு எப்போது எப்படி
ஏற்பட்டது என்ற நினைவு கூட எனக்கு இல்லை, சாதாரணமான விசாரிப்பில் ஆரம்பித்து இருவரின் அலைவரிசை ஒன்றாக இருக்க நட்பு மேலும் இறுகியது. வெறும் பொழுது போக்கிற்கான ஒன்றாக இருக்காது எங்களின் பேச்சுக்கள். அவரிடமிருந்து ஏதாவது ஒரு செய்தி பேஸ்புக்
இன்பாக்சில் எனக்காக எப்போதும் காத்திருக்கும். அந்த செய்தி நிச்சயமாக அவரை பற்றியதாகவோ பரஸ்பர
நலம் விசாரிப்பாகவோ இருந்ததில்லை. உலகின்
ஏதோ ஒரு மூலையில் யாருக்கோ நடந்த பிரச்சனை, காஸா பற்றியதோ, மலாலாவின் பேச்சை
குறித்தோ, மாவோயிஸ்ட் பற்றியதோ, ஒபாமா, மோடி, பெண்ணியவாதிகள் ,பேஸ்புக் பிரபலங்கள் என்று யாரை பற்றியும் இருக்கலாம். மதம் சாதி
அரசியல் சினிமா இப்படி எல்லாவற்றையும் பற்றிய
வருத்தங்கள் கோபங்கள் கவலைகள் எல்லாம் தாங்கியவை அவை.
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை பற்றி நிறைய
எழுதுங்க என்று என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பார். பள்ளி, கல்லூரி மாணவர்களிடம்
இருக்கும் வித விதமான போதை பழக்கத்தை பற்றியும் நிறைய பேசுவோம். அப்படிப்பட்ட ஒரு
கட்டுரைதான் அடுத்ததாக எழுத இருக்கிறோம்.
சமூகத்திற்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற வேட்கை கொண்டவர்கள் செய்யும் சிறு செயலையும் நாம் கட்டாயம் ஊக்குவிக்கவேண்டும் அப்படிப்பட்ட ஒன்றை தான் நான் அவருக்கு செய்துக் கொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன். அதனால் தான் பசுமைவிடியல், நலம் என்ற இரண்டு பேஸ்புக் தளத்திலும் அவரை இணைத்துக் கொண்டேன். இதை மட்டும்தான் நான் செய்தேன், அதற்கு பின்னர் அவர் செய்து வருவது மிக பெரிய காரியங்கள்.
என்டோசல்பான் குறித்து ஒவ்வொரு நிமிடமும் பதறும்
ஒரே ஜீவன் இவர் ஒருவராகத்தான் இருக்கும். வெளிநாட்டில் தடை செய்யப்பட்ட பூச்சிக்
கொல்லிகள் நம் நாட்டில் தாராளமாக நடமாடுவதை பற்றி ஏன் ஏன் இப்படி என்று கேள்வி
எழுப்பிக் கொண்டே இருப்பார், என்ன பதில் சொல்வேன் நான். கேள்வி கேட்பதுடன் நிற்காமல் ஆங்கில தளங்களில்
வெளிவரும் விழிப்புணர்வு கட்டுரைகளை தமிழில் மொழி பெயர்த்து இரு பேஸ்புக்
பக்கங்களில் வெளியிடுவார். அதில் பல நமது தமிழ்
பத்திரிகைகளில், பிற சமூக தளங்களில் வெளிவராதவைகளாக இருக்கும். (பிறகு வேறு யாரோ ஒருவரின் பெயரில் வெளிவந்துவிடும்)
அழகாக மொழிபெயர்த்து எனக்கு மெயில் செய்துவிட்டு பிழைத் திருத்தம் செய்து
வெளியிடுங்க என்று குழந்தை மாதிரி சிரிப்பார். சீரியஸான கட்டுரையிலும் smily
போட்டு வைப்பார், கசப்பு மருந்தை சிரித்துக் கொண்டே கொடுப்பதை போல...குழந்தை உள்ளம் கொண்டவரா இவ்வளவு சிக்கலான விசயங்களை புட்டு புட்டு வைக்கிறார் என அடிக்கடி என்னை ஆச்சர்யபடவைப்பார்.
வெளிநாட்டில் வாழ்ந்தாலும் மூச்சிலும்
பேச்சிலும் நம் நாட்டின் மீதான அன்பும்
அக்கறையும் வெளிப்படும். இவருடன் பழகி நான்
தெரிந்துக் கொண்டதும் கற்றுக் கொண்டதும் நிறைய நிறைய. விழிப்புணர்வு கட்டுரையை
வெளியிட்டு பெரிதாக என்ன நடந்துவிடப் போகிறது என சோர்ந்துப் போகும் போதெல்லாம்
இவரது பேச்சு எனக்கு ஒரு டானிக். மரம் நடுவது என்பது நட்டவர்களுடன் நின்றுவிடும்
ஆனால் மரம் ஏன் நடவேண்டும் என்ற விழிப்புணர்வை அவர்களின் மனதில் விதைத்துவிட்டால் அது அவர்களின் சந்ததி வரை தெளிவை கொண்டுச் செல்லும் என்பதில் இருக்கும் நம்பிக்கைதான் அவரை எழுத
வைக்கிறது.
வீட்டுத்தோட்டம் போடுவதில் வெளிநாடுகளில் பல முறைகளை
பின்பற்றுகிறார்கள். அதை எளிய தமிழில் மொழி பெயர்த்து என்போன்ற தோட்ட விரும்பிகளை
உற்சாகப் படுத்திக் கொண்டிருக்கிறார்.. வீட்டுத்தோட்டம் குறித்து மெயில் மூலம்
கேட்கப்படும் சந்தேகங்கள், விளக்கங்களுக்கு உடனே பதில் அனுப்பி விடுவார். இத்தனை ஷேர்
போயாச்சு என்று இருவரும் ஒருவருக்கொருவர் சொல்லி சந்தோசபட்டுக் கொள்வோம்.
கைவினைப் பொருட்கள் செய்வதிலும் திறமையானவர்,
அதிலும் வீணாக தூக்கி எறியும் பல பொருட்கள் இவரது கைவண்ணத்தில் அழகாகும்...சுற்றுப் புற சூழலின் மீதான அக்கறையை மீள் பயன்பாடு மூலமாக தெரிவிப்பார். தான்
செய்த பொருட்களை நண்பர்களுக்கு அன்பளிப்பாக கொடுத்து மகிழ்வார். fish pand இல் மிதக்கும் மீன்கள் , ஜெஸ்சி பூனை எல்லாம்
இவரது அன்பு செல்வங்கள் ! அவரது நட்புகள் செல்லப் பெயர் வைத்துத்தான் இவரை
அழைப்பார்கள். அதிலும் நம்ம கவிதாயினி குழந்தைநிலா ஹேமா ‘மீனம்மா’ என்று அழைப்பது அழகோ அழகு !!
போனில் அடிக்கடி என்னை அழைத்து பேசுவார்...அவரது
எழுத்தைப் போலவே அவரது பேச்சும் அவ்ளோ இனிமை. சொற்களுக்கு வலிக்குமோ என்று தயங்கித்தயங்கி
உதிரும் வார்த்தைகளில், மழலைக் கொஞ்சும் பேச்சில் பலமுறை சொக்கிப் போய் கிடந்திருக்கிறேன்
நான். பெயரில் மட்டுமல்ல அழகிலும் குணத்திலும் பண்பிலும் உண்மையில் இவள் ஒரு
தேவதை. தேவதைக்கு தெரிந்தவள் என்பதில் எனக்கும் நிறைய பெருமை!! ஆம், எல்லோருக்கும் அருகிலும் ஒரு தேவதை இருக்கத்தான் செய்கிறது...அதை கண்டுணர்ந்தவர்களே வரங்களைப் பெறுகிறார்கள்
!!!
இவரை பற்றி இன்னைக்கு எழுத ஸ்பெஷல் காரணம் என்னனா
இன்னைக்குத்தான் அந்த அழகு தேவதையின் பிறந்தநாள் !
என் பிரிய தோழி Angelin க்கு என் அன்பான பிறந்த
நாள் வாழ்த்துகள் !!!!
Many more happy returns of the day .. Happy Birthday ANJU....
ReplyDeleteஅன்புத்தோழிக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.அருமையான பகிர்வுக்கு பாராட்டுக்கள் பல.
ReplyDeleteநட்பு சிறப்பு...
ReplyDeleteதோழிக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அஞ்சு.
ReplyDeleteThanks Friends :)
ReplyDeleteomg emba sisteremba sister,ethani muhangal intha devathaikul...vaalthukal
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ ஜாக்கி
ReplyDeleteவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி குட்டி தங்கை ஆச்சி :)
ReplyDeleteபிரியா ,அதிராவ் ,ஆசியா அண்ட் சகோ DD
எங்களின் வாழ்த்துகளையும் சேர்த்துவிடுங்கள்..
ReplyDeleteஎனது வாழ்த்துகளும்....
ReplyDeleteவாசித்து தோழியை வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றியும் , அன்பும் !!!
ReplyDeleteமிக்க நன்றி சகோ வெங்கட் நாகராஜ் மற்றும் கோவை ஆவி :)
ReplyDelete