ஒவ்வொருவரும் யாரோ ஒருவரின் ரசிகராக இருப்பார்கள். பிடிக்கும் என்பதையும் தாண்டி ஒரு ரோல் மாடலாக, குருவாக எண்ணி அவரது கருத்துகளை பின்பற்றலாம். சிலர் நேசிக்கவும் செய்வார்கள், இது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத நேசம். இத்தகைய நேசம் நம்மை நெறி படுத்துகிறது என்றால் நேசிப்பதில் தவறென்ன. என்றுமே ஒருவரை ஒருவர் சந்திக்க வாய்ப்பே இல்லையென்ற போதில் அவரை பற்றிய நினைவுகளை சுமந்து வாழ்வது என்பது சுகம். இதை எழுத்தில் சொல்வது மிக சிரமம், உணர வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் ஒரு தினத்தில் MJ வின் மீதான நேசம் எழுதப்படவேண்டும் என்பது எனது முடிவாகிவிட்டது, என்றாலும் அழுத்தும் பணிச்சுமை, அதனை தொடர்ந்த பிரச்னை,சிக்கல் என்று என்னை தனித்து செயல்படவிடாமல் முடக்கிப் போட்டுவிட்டது. எப்போதோ ஒருசில நேரங்கள் மட்டும் தனக்கு பிடித்தவர்களை நினைப்பவர்களுக்கு அவர்களை குறித்த தினங்கள் மட்டும் முக்கியமானதாக இருக்கும். ஆனால் பிடித்தவர்களின் நினைவுகளுக்குள் முப்பொழுதும் மூழ்கி கிடப்பவர்களுக்கு ஒவ்வொரு நொடியும் முக்கியம்தான். எனக்கும் அதுபோன்றே ஆகிவிட்டது, அவரது நினைவுதினம் முடிந்து சில நாட்கள் கழிந்தபின் கிடைத்த இந்த தனிமை, இதோ இப்போது என்னை எழுதவைத்துக் கொண்டிருக்கிறது.
ஜூன் 25 அன்று இந்த பதிவை எழுத நேரம் கிடைக்கவில்லை என்பதை விட நான் தனித்திருக்கவில்லை என்பதுதான் சரி. உறவுகள் நட்புகள் என்ற பெயரில் யார் யாரோ சூழ்ந்துக்கொண்டு அவர்கள் இயக்க இயங்கிக் கொண்டிருக்கிறேன் ஒரு இயந்திரமாக ! இவர்கள் எல்லோரும் எப்போதும் எதையோ பேசுகிறார்கள்... பேசியதற்கு மாறாக செயல்பட்டு அதுதான் இயல்பு, இயற்கை, கடவுள் என்று ஏதேதோ கூறி தங்கள் தவறுகளை தெய்வீகமாக்குகிறார்கள். இவர்களுக்கு மத்தியில் நேசத்தை கொண்டாடும் என் போன்ற ஆனந்தக் கூத்தாடிகளை பார்க்கும் போது உளருபவர்களாக தெரியலாம்...எனக்கென்னவோ நாங்கள் வாழ்க்கையை வாழ்வதாகவும்...மற்றவர்கள் வாழ்வதாக சொல்லிக்கொண்டு எப்பொழுதும் பிறரின் வாழ்க்கையை அலசி ஆராய்ந்துக் கொண்டே இருப்பதாகவும் தெரிகிறது !
பிற பதிவுகளுக்கும் இதற்கும் ஒரே ஒரு வித்தியாசம். மற்றவை பிறர் வாசிக்க இது நான் வாசிக்க...சுவாசிக்க ! வார்த்தை அலங்காரங்களோ மேதாவித்தனமோ சிறிதும் இன்றி ஆழ்மன உணர்வுகள் அப்படியே வெளிப்படும் ஒரு இடம் இது...கட்டுக்கடங்கா நேசம் கொண்ட மனது குழந்தையாய் துள்ளிகுதித்து எழும் உணர்வுகளை வார்த்தைகளாக்கிவிட்டே அமைதிக் கொள்கிறது . அப்படி என்ன ஒருவரின் மீது ஈடுபாடு என்று பலர் பல வருடங்களாக கேட்டுள்ளனர். இதே கேள்வியை எனக்குள்ளும் கேட்டிருக்கிறேன் பதில் என்னவோ வழக்கம் போல 'பிடிச்சிருக்கு அவ்வளவுதான்' என்பதாக இருந்துவிடுகிறது.

அடுத்தவர்களின் அந்தரங்கத்தில் நுழைந்தே பழக்கப்பட்டு போன இந்த மனித சமூகத்திற்கு புரிவதில்லை இது போன்ற நேசங்கள். இன்றைய நட்புகளின் நலம் விசாரிப்பதில் கூட ஏதோ ஒரு எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. சுயநலம் மட்டுமே பெரிதென்று வாழும் இந்த உலகில் உண்மையான நேசம் பெரிதாய் கண்டு கொள்ளப்படுவதில்லை. அவர்கள் சிரித்தால் நாம் சிரிக்கவேண்டும் அழுதால் அழவேண்டும்...இதற்கு மாறாக இருந்துவிட்டால் அந்த நிமிடமே நேசம் பொய்யென்று ஆகிவிடுகிறது.
எல்லோருக்கும் பேச பழக ஏதோ ஒரு காரணம் தேவையாக இருக்கிறது...தேவைகள் ஏதுமின்றி நேசம் கொள்ள யாருக்குமிங்கே நேரமுமில்லை...அவசர உலகில் அன்பும் அலட்சியமாகிவிட்டது.
ப்ரியம் எந்த கணமும் எதன் மீதும் யார் மீதும் வரலாம், ஆனால் சக மனிதன் மீது கொள்ளும் நேசம் கட்டாயம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுவிடும். அது எப்படி இது எப்படி என்று வினா எழுப்பியே வீணாய் போனவர்கள் நிறைந்த மண் இது. எப்போதோ சிறுவயதில் கேட்ட ஒரு குரல், இப்போதும் சோர்ந்து போகும் நேரமெல்லாம் தோள் சாய்த்து ஆறுதல் படுத்துகிறது, இதை உணர பெரிதாய் ஏதும் தேவையில்லை நேசம் நம்மில் நிறைந்திருந்தால் போதும்.
என் பிரியமானவனே...
என்னை சுற்றி மனிதர்கள் பலர் இருக்க நானோ உன்னை உன் இசையை உன் குரலை சுற்றிக் கொண்டிருக்கிறேன். இது பிடித்திருக்கிறது, மிக பிடித்திருக்கிறது !! அழகாய் அருமையாய் என்னை பார்த்துக் கொள்கிறது உன் இசை. புது செல்போன் ஒன்று எனக்கு வாங்கியதும் எனது மகன்கள் இருவரும் பாடல்களை நெட்டில் இருந்து download செய்து போட்டி போட்டு போனில் அப்லோட் செய்து முடித்தார்கள் ...அத்தனையும் உனது பாடல்கள் ! என் கணவரும் தன் பங்கிற்கு 'லிஸ்ட்ல அந்த 'You are not alone' சாங் விட்டுடாதிங்கடா' என அக்கறையாய் சொல்ல, எனக்கு பிடித்த உன்னை என் குடும்பமே கொண்டாடிய அத்தருணத்தில் வானம் என் வசப்பட்டிருந்தது !
அப்போது எனக்கு பத்து வயதிருக்கலாம்...காய்ச்சலின் தீவிரத்தில் படுக்கையில் இருந்த என் காதில் முதன்முறையாக ஒலிக்க தொடங்கியது ஒரு பாடல், அர்த்தம் சரியாக புரியாத நிலையில் அந்த குரலில் தெரிந்த ஏதோ ஒன்று எனக்குள் அன்பு,இரக்கம், கருணை என அத்தனையும் சேர்ந்த ஒரு உணர்வு கலவையாய் எனக்குள் ஊடுருவிய நிலையில் மெல்ல கண் மூடினேன்...அன்று மூடிய விழிகளுக்குள் ஆழ்ந்துவிட்ட அந்த குரல் இன்று வரை வெளிவரவே இல்லை ! இன்று வரை மானசீகமாய் சொல்லிக் கொண்டே இருக்கிறேன், 'யாரோ நீ...? உனக்கு என் நன்றிகள்' ! எனக்குள் இரக்கம், கருணை,நேசம் இருக்கிறதென்றால் உன்னால் மட்டும் தான் என சத்தியம் செய்வேன். அறியா வயதில் எனக்குள் நீ விதைத்த நல்லவைகள் இன்றும் என்னை வழிநடத்துகிறது...
Think about the generations and to say we want to make it a better
world for our children and our children's children. So that they know
it's a better world for them; and think if they can make it a better
place.
Heal the world
Make it a better place
For you and for me and the entire human race
There are people dying
If you care enough for the living
Make a better place for
You and for me.
If you want to know why
There's a love that cannot lie
Love is strong
It only cares for joyful giving.
If we try we shall see
In this bliss we cannot feel
Fear or dread
We stop existing and start living
Then it feels that always
Love's enough for us growing
Make a better world, make a better world.
உனக்கு மரணம் இத்தனை சீக்கிரம் வந்திருக்கக் கூடாது என அன்று நினைத்தேன்...கோவில் சிலையிலும் ஆபாசத்தை தேடும் மோசமான உலகம் இது...அடுத்தவரில் குற்றம் குறை கண்டுபிடித்தே தன்னை ஒரு புத்தனாக காட்டிக் கொள்ள துடிக்கும் மனிதர்கள் நடுவில் வாழ்ந்தால் உன் போன்றோரை சாவிற்கு அவர்களாகவே அழைத்து சென்றுவிடுவார்கள். உன்னை குறித்த ஒவ்வொரு செய்தியையும் விற்று காசாக்கிக் கொண்டிருக்கிறார்கள் நீ மரித்து நாலாண்டுகள் கழிந்த பின்னும்...

ஜூன் 25 அன்று மண்ணைவிட்டு நீங்கினாய் என் போன்ற ரசிகர்களை விட்டு அல்ல...உண்மையில் முன்பை விட இப்போதுதான் என்னை மிக நெருங்கி இருக்கிறாய். சுவாசமாய் உன் குரல் இருக்க வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன் அழகிய நினைவுகளுடன் நினைவாய் !
உனது பாடல்
உன் ஞாபகத்தை கூட்டி
விழிகளில் நீர் பெருக்கி
இமைகளை நனைத்து நனைத்து
வரைய வைக்கிறது
உன்னை ஒரு ஓவியமாய்...
* * *
உனது இசையலைகள்
மோதி மோதி
கரைத்துவிடுகின்றன
எனது சோகக்கரைகளை...
* * *
தேடி தேடி சேகரித்த
உன் புகைப்படங்கள்
உன் வார்த்தைகள்
உன் பாடல்கள்
உன் வெள்ளை சிரிப்பும்
அங்கும் இங்குமாய்
பதிந்திருக்கும் உன் தடங்கள்
இவை போதுமெனக்கு
இந்த ஜென்ம ஓட்டத்தை
முழுதாய்
நிறைவாய் ஓடி முடிக்க...
* * *
இன்றும் எனக்குள்
நீ இருக்கிறாய்...
உன் இசை இருக்கிறது...
நானும் இருக்கிறேன் !!
* * *
* 'People ask me how I make music. I tell them I just step into it. It's like stepping into a river and joining the flow. Every moment in the river has its song. So I stay in the moment and listen'
அழகிய நினைவுகளை சுவாசித்தேன்.... நன்றி... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குசுகமான நினைவுகளோடு ஒரு மலரும் நினைவுகள் ரசித்தேன்.
பதிலளிநீக்குஜாக்சன் துரையை எனக்கும் பிடிக்கும்.. கல்லூரி நாட்களில் இவர் பாடல்கள் எனக்கு உயிர்..
பதிலளிநீக்குAll I wanna say that they don't really care abt us.. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று..
அருமையான, உண்மையான படைப்பு. மிகவும் ரஸித்தேன்.
பதிலளிநீக்கு//இது எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத நேசம். இத்தகைய நேசம் நம்மை நெறி படுத்துகிறது என்றால் நேசிப்பதில் தவறென்ன. என்றுமே ஒருவரை ஒருவர் சந்திக்க வாய்ப்பே இல்லையென்ற போதில் அவரை பற்றிய நினைவுகளை சுமந்து வாழ்வது என்பது சுகம். இதை எழுத்தில் சொல்வது மிக சிரமம், உணர வேண்டும்.//
;))))) உண்மை தான். நன்கு உணர முடிகிறது. பாராட்டுக்கள்.
@@திண்டுக்கல் தனபாலன்...
பதிலளிநீக்குமிக்க நன்றிகள் தனபாலன் சார்.
@@ராஜி...
பதிலளிநீக்குநன்றி தோழி.
@@கோவை ஆவி said...
பதிலளிநீக்கு//All I wanna say that they don't really care abt us.//
அட்டகாசமான அந்த ட்ரம்ஸ் இசை, அந்த டான்ஸ், அந்த ஸ்டைல் ...!!! சான்சே இல்ல இனி அந்த மாதிரி ஒரு பாடல் !!
அவரின் ரசிகர் என்பதில் மகிழ்கிறேன். :)
நன்றி கோவை ஆவி
@@வை.கோபாலகிருஷ்ணன்...
பதிலளிநீக்குஉங்களின் அன்புக்கு மகிழ்கிறேன் ஐயா.
மிக்க நன்றிகள்.
அவரின் மறைவு உலகத்துக்கு பெரிய இழப்புதான் இல்லையா ?
பதிலளிநீக்குமைக்கேல் ஜாக்சன் த ரியல் ஹீரோ....!
அழகிய நினைவுகளை அழகாக தொகுத்திருக்கிறீர்கள்....
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
@@MANO நாஞ்சில் மனோ...
பதிலளிநீக்குஉண்மைதான்.
நன்றி மனோ.
சே.குமார்...
பதிலளிநீக்குநன்றிகள் குமார்.
ya.. Hats off to jackson and you. Online Learning Solutions
பதிலளிநீக்குமைக்கேல் ஜாக்சன் த ரியல் ஹீரோ....!
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஇன்று வலைச்சரத்தில் உங்களுடைய வலைப்பூ அறிமுகம் செய்துள்ளார்கள் வாழ்த்துக்கள் சென்று பார்க்கவும்http://blogintamil.blogspot.com/2013/09/1.html?showComment=1379384881277#c1156036493630622032
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்பின் கௌசல்யா - வலைச்சர அறிமுகம் மூலமாக வந்து ந்படித்து மகிழ்ந்து இரசித்தேன்.அருமையான பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிலளிநீக்கு