வியாழன், அக்டோபர் 4

10:38 AM
22

பசுமைவிடியல் அமைப்பை சேர்ந்த   அனைத்து நிர்வாகிகளின்  சந்திப்பு கடந்த ஞாயிறன்று காஞ்சிபுரத்தில் மிக இனிமையாக நடந்து முடிந்தது. இணையத்தின் மூலம் அறிமுகமாகி, ஒத்த கருத்தில் ஒன்றிணைந்து, அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி செயல்பட்டு கொண்டிருந்த நாங்கள் அன்றுதான் நேரில் முதல்முறையாக சந்தித்தோம்.  ஒரு கிராமத்தில் ஏதாவது ஒரு பெரிய மரத்தடியில் மண் வாசனையுடன் மீட்டிங் வைக்கலாம் என கேஆர்பி செந்தில் அவர்களிடம் கேட்டபோது, 'நன்றாக இருக்கும் ஆனா இப்போ இங்க மழை காலமாக இருக்கிறது, ஏதாவது ஹால்னா பெட்டெர்'னு சொன்னதால் ஹால் என முடிவு செய்தோம் 


மண்ணோட சம்பந்தப்பட்ட பசுமைவிடியலுக்கு ஹால்,பேனர்,மைக், ஸ்பீக்கர் இந்த மாதிரி எதுவும் தேவையில்லை என்பதே நிர்வாகிகள் எல்லோரின் விருப்பமாக இருந்தது.  மண்டபம், உணவு அரேஞ்ச்மென்ட் எல்லாம் காஞ்சிபுரம் தன்னார்வலர் திரு.அருள் செய்திருந்தார். 

கலந்து கொண்டவர்கள் 

சென்னையில் இருந்து திரு.செல்வகுமார், திரு கேஆர்பி.செந்தில், திரு சிவகுமார் மற்றும் பெங்களூருவில் இருந்து திரு.பிரபு கிருஷ்ணா, திரு.சூர்ய பிரகாஷ், திருநெல்வேலியில் இருந்து திரு.ஜோதிராஜ், திருமதி கௌசல்யா கலந்து கொண்டனர். மேலும் பசுமைவிடியலின் தன்னார்வலர்கள் காஞ்சிபல்லவன் கல்லூரிபேராசிரியர்திரு.சண்முகம்,திரு.அருள்,திரு.பூபாலன், திரு.ஜெய்சங்கர் திரு.மாதேஷ், திரு.செந்தில்,திரு.கணேஷ் ,   மற்றும் உறுப்பினர்கள் வந்திருந்தனர்.

காலையில் நிர்வாகிகளின் சந்திப்பு மிக இனிமையாக நகைச்சுவையுடன் சென்றது. பசுமைவிடியல் பற்றிய பேச்சுக்கு நடுவே கேஆர்பி அவரது சில அனுபவங்களை முக்கியமாக அவர் நடித்த குறும்படம் படப்பிடிப்பு சம்பவங்களை விவரித்தபோது சிரிப்பால் ஹால் அதிர்ந்தது. எந்தவித மேல்பூச்சும் இல்லாமல் பேசக்கூடிய வெகு சில மனிதரில் ஒருவருடன் உரையாடிய அந்த சில நிமிடங்கள் என்றும் என் நினைவில்...!  


உணவு இடைவேளைக்கு பிறகு தொடர்ந்த கலந்துரையாடலில் எல்லோரும் தங்கள் கருத்தை கூறியது  மிக இயல்பாக இருந்தது. ஒவ்வொருத்தர் பேச்சிலும் சமூகத்தை பற்றிய அக்கறை அதிகம் தெரிந்தது. சொல்லப்பட்ட யோசனைகள், ஆலோசனைகள் குறித்துக்கொண்டோம். வந்திருந்த உறுப்பினர் ஒருவர் "பள்ளி, கல்லூரிகளில் இருந்து நமது விழிப்புணர்வை தொடங்கவேண்டும், அவர்களிடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை பற்றி பேச ஒருநாளில் ஒரு பத்துநிமிட நேரம் செலவிட்டால் போதும், அவர்கள் தான் இதனை நன்கு புரிந்து கொண்டு செயல்படுவார்கள்" என்று சொன்னார். குறும்படம், சிலைட் ஷோ, பவர்பாயின்ட் ப்ரசன்டேசன் போன்றவை மூலமாக இன்னும் சரியாக மனதில் பதியவைத்துவிடலாம் என்பதால் அதனை தயாரிக்கும்,திரட்டும் வேலைகளில் விரைவில் இறங்க வேண்டும் என முடிவு செய்தோம். 

                                  (சிவகுமார் பேச அருகில்  KRP.செந்தில், சண்முகம் சார் )
திரு.சிவகுமார் , இயற்கையின் மேல் இவருக்கு இருக்கும் அக்கறை அன்று இவரது பேச்சில் முழுமையாக வெளிப்பட்டது. சாதனை மனிதர் திரு.யோகநாதன் அவர்களை பற்றியும் விரிவாக எடுத்து கூறினார். தனிநபராக பல ஏக்கர் நிலபரப்பில் ஒரு காட்டை உருவாக்கிய திரு.ஜாதவ் பயேங் பற்றியும் பேசப்பட்டது. 

சில நிகழ்வுகள், எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :-

பசுமைவிடியலின் மூன்றாவது திட்டமான கிராமம் தத்து எடுப்பது குறித்த யோசனைகள் பரிமாறப்பட்டன. அந்த கிராமத்தில் என்னவெல்லாம் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன என்பதை குறித்துப் பேசப்பட்டன.

                                                           (வெகு உற்சாகமாக...!!)

* கிராமத்தின் முக்கியஸ்தர்கள் முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியதின் அடிப்படையில் முதல் கிராமமாக காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த கீழம்பி முடிவு செய்யப்பட்டு அங்குள்ள  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பசுமைவிடியல் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பின்னர் மரம் நடுவது கிராமம் முழுமைக்குமாக விரிவு படுத்தப்பட இருக்கிறது. இன்னும் மூன்று நாட்களில் ஊர் குளத்தை சுற்றி கன்றுகள்  நடப்படுகிறது.   

                                         (ஒரே சமயத்தில் ஒன்றாக வரிசையாக நடப்பட்டது) 

* இரண்டாவதாக 'திடக் கழிவு மேலாண்மை திட்டம்' (குப்பைகள் மறுசுழற்சி) குறித்த யோசனை ஒன்று  முன்  வைக்கப்பட்டது. இதனை பல்வேறு கட்டமாக படிப்படியாக செயல்படுத்த என்ன முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பதை பற்றி நிர்வாகிகள் கலந்து முடிவு செய்தார்கள்.

* காஞ்சிபுரம் மாவட்டத்தின் பசுமைவிடியல் PROJECT EXECUTIVE வாக திரு.அருள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு திரு.கேஆர்பி.செந்தில் அவர்களால் முன் மொழியப்பட்டது. 
 
* அன்று மாலை காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சன்னதி அருகில் உள்ள வள்ளலார் சிறுவர் ஆதரவற்றோர் இல்லத்திற்கு பசுமைவிடியல் சார்பில் ஒரு சிறு தொகை வழங்கப்பட்டது.

முக்கிய துளிகள்

திரு.சிவகுமார் அவர்கள், வருடந்தோறும் சென்னையில் நடக்கும் யூத் பதிவர் சந்திப்புக்கு அடுத்த  முறை   'PROJECT EXECUTIVE' திரு.அருள் அவர்களை அழைத்து கௌரவிப்பதாக கூறியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

                                          (மரம் நடுபவர் அருள், அருகில் செல்வா அண்ணா )

திரு.அருளை பற்றி குறிப்பிட்டாக வேண்டும், பசுமைவிடியலில் இணைவதற்கு முன்பே ஊரில் பல பகுதிகளில் மரங்களை நட்டு, தினமும் தவறாமல் தண்ணீர் ஊற்றி பராமரித்து வருபவர். MBA படித்திருக்கும் இவர் கெவின் கேர் நிறுவனத்தில் தற்போது பணிபுரிந்து வருகிறார். மேலும் பல உறுப்பினர்களை பசுமைவிடியலில் இணைத்தும் வருகிறார்.

நட்ட மரக்கன்றுகளை பராமரிக்க தேவையான ஆட்களை பசுமைவிடியலின் ஆலோசனையின் படி திரு. அருள் ஏற்பாடு செய்து கவனித்துக் கொள்கிறார்.

மன நிறைவு 

கிராம மக்களின் அனுமதி, ஒத்துழைப்பு, ஆர்வம், அக்கறை இல்லாமல் வெளியில் இருந்து மற்றவர்கள் யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்பதை அறிந்திருப்பதால்  அங்குள்ள பெரியவர்களை  அவ்வப்போது கலந்து பேசிக் கொண்டிருக்கிறோம். வெகு விரைவில் அங்கே அருகில் உள்ள வேறு ஒரு கிராமத்திலும் களப்பணிகளை தொடர இருக்கிறோம்.

நாங்கள் எதிர்பார்த்ததை விட சந்திப்பு, களப்பணிகள் சிறப்பாக இருந்தது.  மழை குறைந்த வரண்ட பகுதிகளில் மரம் நடுவதை அதிக அளவில் செயல்படுத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும். சந்தர்ப்பம் அமைந்தால் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் பசுமைவிடியல் திட்டங்களை செயல்படுத்த மிக ஆர்வமாக இருக்கிறோம். நன்றிகள்.


பிரியங்களுடன்                                     
கௌசல்யா
பசுமைவிடியல்

Tweet

22 கருத்துகள்:

  1. சிவகுமார் அவர்களைப் பற்றி அறியாத தகவல்கள்... அவருக்கும் மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்...

    சிறப்பான திட்டங்களை செய்து வரும் அனைவருக்கும் பாராட்டுக்கள்... நன்றிகள்...

    பதிலளிநீக்கு
  2. ஸலாம்

    நல்ல முயற்சி .. தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. மிக மிக மகிழ்ச்சி வாழ்த்துகள். அற்புத விஷயத்தை நண்பர்கள் செய்வது அறிந்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன். முடிந்த அளவு உதவிகள் செய்ய தயார்

    மீட்டிங் சென்னையாக இருந்தால் நானும் கூட வந்திருப்பேன் :(

    பதிலளிநீக்கு
  4. மகிழ்ச்சியளிக்கும் நிகழ்வுகள்...பசுமை விடியல் பரந்து விரியட்டும்!

    பதிலளிநீக்கு
  5. பயனுள்ள செயல்களுக்கு தங்களை ஒப்புவிக்கும் நல்ல உள்ளங்களுக்கு என் பாராட்டுகள் நானும் உங்களோடு இணைந்து செயல்பட நினைக்கிறேன் இதை பற்றிய விரிவான தகவல்களை என் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் தோழி ....உங்களோடு நானும் பயணிப்பதில் மகிழ்ச்சி எனக்கு saralafromkovai@gmail.com

    பதிலளிநீக்கு
  6. கல்லிடைகுறிச்சியை சேர்ந்த பேராசிரியர் விஸ்வனாதன் அவர்கள் ட்ரீ டிரஸ்ட்(Tree Trust) என்ற ஒரு தன்னார்வ அறக்கட்டளையை நடத்தி வருகிறார். கல்லிடை,அம்பை,ஆழ்வார்குறிச்சி பகுதிகளில் மரம் நட்டு வளர்பதை முக்கிய நோக்கமாக கொண்ட இயக்கம் அது. அவருடைய தொலைபேசி எண்னை வாங்கித் தர முயல்கிறேன். சிறு துளி பெரு வெள்ளமாய் மாறட்டும்!

    பதிலளிநீக்கு
  7. மிகவும் பாராட்டத்தக்க ஒரு செயற்பாடு பதிவர்கள் இது போன்ற செயற்பாடுகளில் ஆர்வமாக கலந்து கொள்வது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
    உங்கள் முயற்சிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
  8. உங்கள் அனைவரின் உற்சாகமும் ஆர்வமும், பாராட்டக்கு உரியது. இந்த முயற்சிக்ள், மேலும் பலரை இதில் ஈடு படுத்த தூண்டி, நல்ல பயன்கள் ஏற்பட வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. கௌசல்யா , வட்டம் பெரிதாகிக் கொண்டே போகிறது, மாவட்டம் ஆக வாழ்த்துக்கள் !!

    பதிலளிநீக்கு
  10. @@ திண்டுக்கல் தனபாலன் said...

    //சிவகுமார் அவர்களைப் பற்றி அறியாத தகவல்கள்... அவருக்கும் மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்... //

    இயற்கையின் மீதான அவரது ஆர்வத்தை அன்று தான் நானும் தெரிந்துகொண்டேன்.

    உங்களின் பாராட்டுக்கும், வாழ்த்துக்கள் மிக்க நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  11. @@ மை தீன்...

    வணக்கம்.

    மிக்க நன்றிகள்


    பதிலளிநீக்கு
  12. @@மோகன் குமார் said...

    // அற்புத விஷயத்தை நண்பர்கள் செய்வது அறிந்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன். முடிந்த அளவு உதவிகள் செய்ய தயார்//

    உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கு உத்வேகத்தை கொடுக்கிறது. அவசியம் பசுமைவிடியலின் பணியில் பங்கு கொள்ளுங்கள். இணைந்து செயல்படுவோம்.

    //மீட்டிங் சென்னையாக இருந்தால் நானும் கூட வந்திருப்பேன் :(//

    விரைவில் சென்னையில் மீட்டிங் + களப்பணிகள் நடக்க இருக்கிறது. இப்போ மகிழ்ச்சி தானே ?! :)

    நன்றிகள்

    பதிலளிநீக்கு
  13. @@ koodal bala said...

    //பசுமை விடியல் பரந்து விரியட்டும்!//

    நிச்சயமாக !!

    நன்றி பாலா.

    பதிலளிநீக்கு
  14. @@கோவை மு சரளா said...

    //பயனுள்ள செயல்களுக்கு தங்களை ஒப்புவிக்கும் நல்ல உள்ளங்களுக்கு என் பாராட்டுகள் நானும் உங்களோடு இணைந்து செயல்பட நினைக்கிறேன்//

    மகிழ்கிறேன் தோழி. மெயிலில் விவரங்கள் அனுப்புகிறேன்.

    நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  15. @@தக்குடு said...

    //கல்லிடைகுறிச்சியை சேர்ந்த பேராசிரியர் விஸ்வனாதன் அவர்கள் ட்ரீ டிரஸ்ட்(Tree Trust) என்ற ஒரு தன்னார்வ அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.//

    நம்ம திருநெல்வேலி மாவட்டம் !! சந்தோசமாக இருக்கிறது. முடிந்தால் அவர்களை தொடர்பு கொள்ள முயலுகிறேன். தொலைபேசி எண் கிடைத்தாலும் கொடுங்கள்.

    நீங்கள் சொல்வதை போல் சிறுதுளி பெருவெள்ளமாகட்டும்

    உங்களின் ஆர்வத்திற்கு மகிழ்வுடன் என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  16. @@சிட்டுக்குருவி...

    பதிவுலகத்தில் இன்னும் பலர் பல சீரிய செயல்கள் புரிந்து வருகிறார்கள் என்பது நமகெல்லாம் பெருமைதான்.

    எங்கிருந்தாலும் அவர்களை தொடர்பு கொள்வது சுலபம் அதுவும் ஒத்த அலைவரிசை கொண்டவர்கள் இணைந்தால் இது போன்றவை சாத்தியமாகிறது.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  17. @@Pattu Raj said...

    //மேலும் பலரை இதில் ஈடு படுத்த தூண்டி, நல்ல பயன்கள் ஏற்பட வாழ்த்துக்கள்.//

    இதுதான் முக்கியம். பலரும் ஈடுபட தூண்டவேண்டும்.பல கைகள் இணையவேண்டும்

    நன்றி.

    பதிலளிநீக்கு
  18. @@rufina rajkumar said...

    //கௌசல்யா , வட்டம் பெரிதாகிக் கொண்டே போகிறது, மாவட்டம் ஆக வாழ்த்துக்கள் !!//

    என்னக்கா வட்டம் மாவட்டம் னு அரசியவாதி போல...?! :) ஆனாலும் அழகா இருக்கு.

    உங்கள் வாழ்த்து என்கூட எப்போதும் இருக்கு அக்கா.

    நன்றிகள்

    பதிலளிநீக்கு
  19. சென்னையில் நடக்கும் மீட்டிங்க் மற்றும் களப்பயிற்சியை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்...

    பதிலளிநீக்கு
  20. சென்னையில் நடக்கும் மீட்டிங்க் மற்றும் களப்பயிற்சியை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்...

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...